அத்தியாயம்-2

          தன் ஆடிட்டர் அறையில் கம்பீரமாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த முரளிதரனை தன் அறையில் கம்ப்யூட்டர் திரையில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் மேனகா.

        “என்னடா நீ!  இப்படி மொத்தமாக உன்மேல விழ வச்சிட்டா. இந்த 25 வயசுல யார் மேலும் பதியாத என்னோட கண்ணு உன் மேல அப்படியே பதிஞ்சு போய் கிடக்குது. யாரையும் பார்த்து சலனப்படாத மனசு உன்னை பார்த்தா  மட்டும் சலனப்பட்டு கிடக்குது.”

         நெற்றியை தடவியவாறு தலையை சிலிர்த்தவள்,

         “என் வேலையையே மறந்து போகிற அளவு சிலையா ஒரு இடத்தில் உட்கார வச்சிட்டா. என்னையே மறந்து போறேன். எனக்கே ஏணு தெரியல.”

        “எப்படி உன் நினைவுல புதைஞ்சி போறேன்னு எனக்கே தெரியல. ஆனா எனக்குள்ள என்னமோ செய்யுது. உன்னை மட்டுமே பாத்துட்டு இருக்கணும்னு தோணுது. என்னோட மட்டும் தான் நீ பேசிட்டு இருக்கணும்னு தோணுது. எப்படி?…நேற்று வரை இல்லாத ஒரு ஃபீலிங்ஸ் எங்கே இருந்து வந்துச்சுன்னு தெரியல. எனக்கு எதுவும் புரியல.”

         “ஆனா நல்லாயிருக்கு. ரொம்ப நல்லாயிருக்கு. இந்த உணர்வு  கொடுக்கிற சுமை சுகமாக தான் இருக்குது.”

          எண்ணியவள்,

          அவன் அருகில் இருந்த கேமராவை மட்டும் தன் பக்கம் திருப்பி, அவன் உருவை மட்டும் பெரிதாக்கி, அவன் பேச்சின் அழகையும் அவன் வேலை பார்க்கும் நளினத்தையும் அவன் அறியாமலே ரசிக்க தொடங்கினாள்.

           இது எதுவும் தெரியாமல் தன் பணியில் மும்முரமாக இருந்தவன் அருகில் வந்து அமர்ந்த வினோத்.

          “இந்தாங்க பாஸ். சந்திரா டீ… ரெடி.”

 என அவன் புறம் கப்பை நீட்ட,

           புன்னகையோட அதை வாங்கியவன் பணியில் மும்முரமாக,

           “என்ன பாஸ் உங்க எனர்ஜியோட சீக்ரெட் சந்திரா டீ தானே?”

           அவன் கண்ணடித்து கேட்க,

           “ஏன்  நீயும் கொஞ்சம் குடிச்சு பாரேன். உனக்கும் என்னோட எனர்ஜி வருதாணு பார்ப்போம்.”

           அவனும் நக்கலாக சொன்னான்.

           “அப்படி எங்களுக்கெல்லாம் வந்திடக்கூடாதுணு தானே சந்திரா அக்கா எந்த டீயை கொடுத்தாலும் சரியா ஒரு கப்பை கொடுக்குது. கூட இருந்தா…துடுப்பெல்லாம் குடிச்சுக்கிட்டு உங்க லெவல் வந்துவிடுமோணு  அது கூட சரியா அளவு எடுத்துக் கொடுக்குது.”

           “என்னடா நீ. தேவைணா ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவங்க ரெண்டு கப்பா கொடுப்பாங்க. வேணா நாளைக்கு நானே சொல்லிடுறேன்.”

           “வேணாம் பாஸ். அப்புறம் என் மூளைக்கு ஓய்வே கொடுக்காம அந்த டீ கஷ்டப்படுத்திடும். நாம அப்பப்ப ஓய்வா இருக்கிறது போல மூளைக்கும் ஓய்வு கொடுத்து தூங்க வைக்கிறது தான் துடுப்புக்கு சரி. பாஸ் போல மாற நினைச்சா அப்புறம் கண்டிராவியாகி போயிடும்.”

         வினோத் சொல்லியவாறு சிரிக்க…

         “எதையுமே உனக்கு தோதா எடுத்துக்கடா.”

         “அப்புறம் உங்களை போல எல்லாம் என் மூளைக்கு வேலை கொடுக்க முடியாது பாஸ். அப்படியே கொடுத்தாலும் உங்கள் லெவலுக்கு அது வேலையும் செய்யாது. வேணா  டீக்கே அடிமையாகி சந்திரா அக்கா, காலையே சுத்தி சுத்தி வருகிறதா  ஆகிடும்.”

           “டேய்…தப்புடா சந்திராவை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். சந்திரா  எனக்கு எனக்கே மட்டும் தான்.”

            முரளி டீயை தூக்கி காட்டியவாறே இதை புன்னகையோடு நளினம் கலந்து சொன்னதும் முதன்முறையாக அவன் பேசுவது என்ன என  அறிய துடித்த மனதை அடக்க தெரியாமல் மேனகா வாலியூமை கூட்ட,

           “டேய்…தப்புடா. சந்திராவை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். சந்திரா எனக்கே எனக்கு மட்டும்தான்.”

          என்ற முரளியின் நக்கல் வார்த்தை அவள் செவிப்பறையில் சரியாக விழ, டீயை பற்றி தான் பேசுகிறார்கள். என தெரியாமல் திடுக்கிட்டு செயரில் இருந்து எழுந்தாள் மேனகா.

          அதன்பின் அவனை ரசிக்க கூட அவளுக்கு தோன்றவில்லை. தன் அறையில் அவள் அங்கும் இங்கும் அல்லாடி கொண்டிருந்த நேரம்,

          வினோத்தின் தலையை பிடித்து  தட்டினான்  முரளி.

         “வம்பு வழக்குறதே உன் வேலையா போச்சு பாரு. கணக்கை சரி பண்ணிட்டேன். இனி, டேலி பண்ணி பாரு. சரியா வரும்.”

          என அவன் புறம் லேப்டாப்பை திருப்பியவன். மெதுவாக எழுந்து வந்து தன் முகத்தை கழுவி டவ்வலால் துடைத்த போது,

          “சும்மா சொல்லக்கூடாது பாஸ். ஏன் பெரிய பெரிய வி.ஐ.பிங்க எல்லாம் ஓடி வந்து அவங்க கணக்கை உங்ககிட்ட கொட்டுறாங்கணு இப்ப தான் தெரியுது. பழைய ஆடிட்டரை வேலையையே விட்டு தூக்க வச்ச இந்த கணக்கை நீங்க ஒரு நாளுலயே  சரி பண்ணிட்டீங்களே… உண்மைதான் சந்திரா டீ என்னமோ தான் செய்யுது.”

         ஊமை சிரிப்பை சிரித்தவன்.

        “மேடத்துக்கு அனுப்பிடலாமா பாஸ்.”

         “அவங்க இதுக்காக தான் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க.  அதனால அவங்க மெயிலுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடு.”

         ‘சரிங்க பாஸ்.’

         என்ற அவன் அடுத்த நிமிடமே மேனகா மெயிலுக்கு அனுப்ப…

         அதை பார்த்தவள் உண்மையிலே வியந்தாள்.

         “அப்பா இவ்வளவு புகழ்ந்து பேச தகுதியான ஆள் தான் இவர்.”

          என தோன்றியது.  உண்மையில் பல மாதமாக சுழன்று கொண்டு சிக்கலில் கிடந்த கணக்கு ஒரே நாளில் சரிப்படுத்துவது என்றால்  சும்மாவா?

          மேனகா மனதில் முரளி ஒரு உயர்ந்த இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

         அதே நேரம்…

        “இன்று வேலை முடிஞ்சிடுச்சி. இனி நேரா ஆபீஸ் போய் விடுவோமா?”

         முரளி கேட்க…

        “இல்ல பாஸ் இன்று முக்கியமான ஒரு வேலை நமக்கு இருக்கு. ஞாபகம் இருக்குதா. அரசு உயர் நிலைப் பள்ளியில் நடக்கக் கூடிய விழாவுல வந்து கலந்துக்கிறேணு  வாக்கு கொடுத்திருங்கீங்க.

ஞாபகம் தானே…”

        “அப்படிப்பட்ட நிகழ்ச்சியை நான் எப்போ  மறந்திருக்கிறேன். நல்லா ஞாபகம் இருக்கு. ஆமா பங்ஷன் தொடங்குறது மாலை 5 மணிக்கு தானே.”

        “ஆமா பாஸ்…”

        “சரி. நேரா ஆபிஸ்க்கு போய் வரதராசனை பார்த்து அவர் கணக்கை கொடுத்துவிட்டு அப்படியே கிளம்புனா சரியா இருக்கும்.”

        முரளியும் யோசித்தவாறே சொல்ல,

        “கிளம்புறது சரி. ஸ்பீச் கொடுக்கிறதா சொன்னீங்க. ஆனா பிரிப்பேர் ஆனது போலவே தெரியலையே.”

       “எதுக்கு பிரிப்பேர் ஆகணும்…”

       “என்ன பாஸ் இப்படி சொல்றீங்க. பேசணும்னா பிரிப்பேர் பண்ண வேண்டாமா?”

         “நான் என்ன கட்சி கூட்டத்துக்கா பேச போறேன். ஸ்கூல் பங்ஷனுக்கு தானே போறேன். பேச்சு ஒண்ணும் என் தொழில் இல்ல. நோட்ஸ் எடுத்துட்டு போய் பிச்சி உதற… நான் என் வாழ்க்கையை அவங்களுக்கு சொல்ல போறேன். அதை கேட்டாவது ஒரு மாணவன் வாழ்க்கையில் உயர்ந்தா அதுவே எனக்கு சந்தோசம் தான்.”

          “நானும் இது போல ஒரு அரசு பள்ளியில் தான் படிச்சேன். ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கே வந்தேன். இதை என்னை போல இருக்கிற மாணவர்களுக்கு சொல்லணும்னு நினைச்சேன். அதான் பேச ஒத்துக்கிட்டேன். இதுக்கெல்லாம் போய் நோட்ஸ் எடுக்கணுமா?”

         “சாரி பாஸ். உங்க வாழ்க்கையையா  சொல்ல போறீங்க.”

          வினோத் ஆச்சரியமாக கேட்க,

          “சின்ன வயசுல நான் படிச்ச ஸ்கூல்ல…  நாராயணசாமி வாத்தியார்ணு ஒருத்தர்  வேலை பார்த்தாங்க.  அப்பவே  அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். பல வருஷத்துக்கு அப்புறம் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில நடந்த பங்ஷன்ல தான் அவரை சந்திச்சேன். நான் அங்க பேச போனதால தான்  மறுபடியும் அவரை பார்க்க முடிஞ்சிது. அந்த ஸ்கூலுக்கு சிறப்பு பேச்சாளராக அவரும் வந்திருந்தாங்க. அங்க வச்சு தான் என் பேச்சைக் கேட்டாரு.  இதை நீ என் ஸ்கூல் மாணவர்களுக்கும் கொண்டு வந்து சேர்க்கணும்ணு ரொம்ப வற்புறுத்தி அழைச்சாரு.”

          அதிலேயும்,

         “நான் வேலை பார்க்கிற கவர்மெண்ட் ஸ்கூல்லயும் உன்னை போல நிறைய முரளீதரன் இருக்காங்க. ரொம்ப புவர்பேமிலியிலயிருந்து வந்த பசங்க தான் அங்க ஏராளம். அவங்க முன்னாலே உன் சுயசரிதையை  சொன்னா அவர்களுக்கு மோட்டிவேஷனா இருக்கும்.”

            அப்படி சொன்னதால என்னால மறுக்க முடியல. அதுலயும்  நம்ம லெவல் மாணவர்களுணு தெரிஞ்சதுக்கு அப்புறம் கீழே இறங்கி வரமாட்டேணு சொல்ல முடியுமா?அதான் ஒத்துக்கிட்டேன்.

           ‘நானும் ஆவலா இருக்கேன் பாஸ். எனக்கும் இப்ப உள்ள முரளிதரனை தான் தெரியும், சிறுவனான  முரளிதரனையும் இளைஞரான முரளிதரனையும் பார்க்க ஆசையா இருக்கு.”

          “கேட்க ஆசைப்படாத . அது அவ்வளவு நல்லா இருக்காது. நான் கடந்து வந்த பாதை அவ்வளவு கல்லும் முள்ளுமான பாதை. அதை கேட்டா வலிக்க தான் செய்யும். ஆனா அதிலிருந்து இந்த அளவு வளர்ந்த என்னை பார்த்தா ஒரு தாயோட மனநிலை தான் தெரியும்.”

          “ஒரு தாய் பல மாதமா வெவ்வேறு வலிகளையும், கஷ்டங்களையும், துன்பங்களையும் சுமந்து தான் ஒரு சிசுவை மலர வைக்கிறாள். அது வயிற்றுக்குள் இருக்கிறது வரை தான் அவளுக்கு வலி. வெளியில் அவள் கண் முன்னால உலாவ ஆரம்பிச்சிட்டா  இதுவரை பட்ட வலி எல்லாம் மறந்து போயிடும். எனக்கும் அப்படித்தான் வினோத். பட்ட வலி எல்லாம் இப்ப மறந்து போச்சு. அதைதான் சொல்ல போறேன்.”

          “சரி நேரமாகுது. கிளம்பு.”

 என முரளி எழுந்து கொள்ள…

          “அப்படின்னா பாஸ் இப்ப இருக்கிறது போல முன்னால வாழலியா. ரொம்ப வலியான வாழ்வா வாழ்ந்தாங்க.”

          வினோத்தின் உள்ளம் அதை அறியத் துடிக்க,

          எழுந்து சென்ற முரளியின் பின் முதுகையையே பார்த்தான்.

          “பார்த்தது போதும் கிளம்புடா.”

என்றவாறு முரளி அவசரமாக வெளியேறியிருக்க, முன்னால் இருந்த லேப்டாப்பை மூடி எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறியவன் முன் வந்து நின்றாள் மேனகா.

          சட்டென  முன்னால் வந்து  நின்ற மேனகாவை பார்த்ததும்… திணறியவன்,

          “சொ…சொல்லுங்க மேடம்.”

          “கிளம்பிட்டீங்களா?”

          “ஆமா மேடம். கணக்கு எல்லாம் பாஸ் சரி பண்ணிட்டாங்க. நானும் உடனே உங்களுக்கு மெயில் பண்ணிட்டேனே. நீங்க பார்க்கலியா?”

         “அது எல்லாம் பார்த்தோம். ஆனால் ஒரு சந்தேகம்.”

         “அதுல என்ன சந்தேகம். பாஸ் பக்காவா தானே ரெடி பண்ணியிருந்தாங்க.”

          வினோத் சொல்லியவாறு குழப்பமாக அவளை ஏறிட்டு பார்க்க,

         அவள் தெளிந்தவனாய்…

         “சந்தேகம் கணக்குல இல்ல…”

         “ அதுதானே பார்த்தேன். எங்க பாஸ் டேலி பண்ணுன கணக்குல தப்பு வர சான்ஸே இல்லயே.”

          என்றவனை கீழ் பார்வை பார்க்க,

திடுக்கிடலோடு அடங்கி ஒடுக்கமாய் நின்றவன்.

           சொல்லுங்க மேடம். சந்தேகம் எது மேல?

என பவ்யமாய் கேட்க, அவனை ஒரு நொடி பார்த்தவள், அவனிடமிருந்து திருப்பி எங்கோ முறைத்தவாறு.

          “உங்க பாஸ் மேல.”

என்றாள்.

          “பாஸ் மேலயா?”

அதிர்வோடு கேட்டவன் அவளை நிமிர்ந்து பார்த்து நம்ப முடியாதவன் போல நோக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் கணீர் குரலில்,

          “ஆமா ?… சந்திராணா யாரு .”

 என்றாள் வெடுக்கென்று,

            அவள் வாயிலிருந்து ‘சந்திரா’ என்ற பெயரை கேட்டதும்

            வாய் விட்டு சிரித்தவன்,

            “அவங்களை பற்றி நீங்க ஏன் கேட்கிறீங்க?”

என்றான் சந்தேக முடிச்சிகளோடு,

             “அது… சந்திராவை நான் யாருக்கும் விட்டு தரமாட்டேணு உங்க பாஸ் பேசிட்டிருந்தாங்களே. அதான் அந்த அளவு உங்க பாஸ் மனசுல இடம் பிடிச்ச சந்திரா யார்னு தெரிஞ்சிக்கலாம்ணு கேட்டேன்.”

            அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தை பார்த்தவன்.

            “அவங்க பாஸ் வீட்டுல வேலை பாக்குறவங்க.”

            “ஒட்… வேலைகாரியா?”

மொத்தமாய் அதிர்ந்து தான் கேட்டாள்.

             “ஆமா மேடம். ஆனா பாஸ் முன்னால மட்டும் வேலைகாரினு சொல்லிடாதுங்க. பாஸ்க்கு கோபம் வந்திடும். கூட பிறக்காட்டாலும் இன்று வரை அவங்களை தன் சொந்த அக்கா மாதிரி தான் பாக்குறாரு.”

            “அக்காவா?”

இப்போது இருண்டிருந்த மேனகா முகம் ஒளி பெற, அவள் முகத்தில் அடங்காத சிரிப்பு வெளிப்பட்டது.

            வீட்டுல வேலை செய்ற பொண்ணா?

 மறுபடியும் சிரிப்போடு அவள் முனங்க, அவளை வினோதமாக பார்த்தான் வினோத். முகம் எல்லாம் மகிழ்வோடு திரும்பி நடந்தவளை அதிர்வோடு பார்த்து நின்றவன் மனதில் சட்டென அந்த எண்ணம் தோன்றியது.

           “ஆமா நாம தனியறையில பேசுனது இவங்களுக்கு எப்படி தெரியும்?”

            வந்த எண்ணத்தை மனதுக்குள் புதைத்து விட்டு வெளியேறினான் வினோத்.

         முரளியின் கார் அதிவேகமாக கிராமத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருந்தது. பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்து முரளிதரன் தன் வாழ்வின் இறந்த காலத்தை மனதில்  ஓட விட்டு பார்த்துக் கொண்டே கண்மூடி இருந்தான்.

          எப்படியான வாழ்வு அது. அதிலிருந்து எப்படி இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தேன். பிரமிப்பாக இருந்தது. மனிதனாக கூட இந்த சமுதாயம் ஏற்று கொள்ளாத அந்த கூட்டத்தில் இருந்து இந்த அளவு உயர்ந்து விட்டேனா? நினைப்பே இனிமையாக இருந்தது. இன்று ஊரே மதிக்க தக்க நிலையில் மிளிர்ந்து நிற்கிறேன். அன்று தூர போ என விரட்டிய இந்த சமுதாயம் இன்று தேடி வந்து அழைக்கிறது. அதற்கு இவன் பின்னால் இருக்கும் CA என்ற இரண்டெழுத்தால் தான் கிடைத்தது.

          இந்த இரண்டு எழுத்துக்காக அவன் பட்ட அவமானங்கள் எத்தனை… எத்தனை… பட்ட அடிகள் எத்தனை… எத்தனை… வலிக்கிறது என  முடங்கியிருந்தால்  இன்று அதே வலியான வாழ்வுக்குள் தான் முடங்கி இருக்க வேண்டும். முரளீதரன் என்ற பெயர் அந்த படிப்பறிவே இல்லாத கூட்டத்துக்குள் முடங்கி போயிருக்கும்.

          எண்ணும் போதே,

          முரளியின் மனதுள் இறந்த காலம்  நிழலாடியது. ஏழைகள் மனதில் குறிக்கோள் வந்துவிட்டால் அதை அடைய அவன் தன் வாழ்வில் எதை எல்லாம் இழக்க வேண்டி வருகிறது.

         எத்தனை அசிங்கங்களையும் அவலட்சணமான வார்த்தைகளையும் கேட்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமா? தூக்கத்தை  கூட துறந்தாக வேண்டும். ஏக்கத்தை கூட அடக்கியாக வேண்டும். உள்ளம் வலியில் உழன்றாலும் ஊமையாய் நடித்தாக வேண்டும். சாதாரண மாணவனுக்கு தெரிந்தது தனக்கு தெரியாத போதும், தன்னை அத்தனை மாணவர்கள் முன் சில மாணவர்கள் நகையாடப்படும் போதும் தன் சுய கௌரவத்தை கொன்றாக வேண்டும்.

        பசி மறந்து… தூக்கம் மறந்து… குறிக்கோள் ஒன்றையே  கட்டியாக பிடித்திருந்தால் மட்டுமே தான் நினைக்கும் நிலையை அடைய முடியும். அப்படி எல்லாம் இழந்து தான் இன்று நான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன். இன்றைய மாணவர்கள் அவ்வளவு முயற்சியை எடுப்பார்களா?

         எடுக்க வேண்டும். எடுக்கத் தூண்டும் பதிவை நாம் அவர்கள் மேல் விதைத்தாக வேண்டும். அந்த விதை கூடிய சீக்கிரத்தில் செடியாக… பின் மரமாக… பின் காயாக… பின் கனியாக வேண்டும். அதற்கு என் பேச்சு மறுபடியும் உரமாக வேண்டும்.

          என எண்ணிக்கொண்டு தன் பேச்சுக்கு அவன் வரி வடிவம் தேடிய போது அவனை சுமந்து வந்த வண்டி அந்த பள்ளியின் முன் வந்து நின்றது.

          கண் திறந்தவன் பார்வையில் அவனை வரவேற்க வந்த பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் அனைவரும்  தான் தெரிந்தனர். அதனுடே  அவன் பள்ளி  பருவ வாழ்வு அவனுள் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

          வண்டியை விட்டு இறங்கிய அவனை மாலையோடு வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல பள்ளி சாரணர் இயக்கத்தினர் அணிதிரண்டு நின்றனர், யூனிபார்ம் அணிந்து வந்து வரிசை மாறாமல் சல்யூட் அடித்து மரியாதை செய்து அவனை அழைத்து சென்ற விதம் அவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த ராஜ நடை நடந்து வந்து மேடையில் ஏறி அமர்ந்தான்.

         பங்ஷன் ஆரம்பமாக மேடையின் முன்னால் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் வரிசை மாறாமல் வந்து அமர்ந்து கொண்டனர்.

         பின்னால் குழந்தைகளின் பெற்றோர் அவர்கள் உறவினர்கள் என அந்த கிரவுண்ட் முழுவதுமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி இருந்தது. பல பல கலை நிகழ்ச்சி வரவேற்பு நிகழ்ச்சி எல்லாம் முடிந்து முரளி வந்து மைக்கை பிடிக்கும் நேரமும் வந்தது.

         மைக்கை பிடித்தவன் நெகிழ்ச்சியோடு முன்னால் இருந்த மாணவர்களை பார்த்தான். தலைமை ஆசிரியர் அவனிடம் சொன்னது போல் தான் இருந்தார்கள்.

        அனைவரையும் பார்த்து சிரித்தவன்.

        “எல்லோரும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல…”

         என பேச்சை தொடங்க கூட்டம் “ஆம் “என்பது போல கோரஸ்ப் பாட,

         “கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க எல்லாரும் என்னை வரவேற்று மேடைக்கு அழைத்து வரும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சி.”

           “ஏன் தெரியுமா????”

என முரளிதரன் ஒரு நொடி நிறுத்த,

            முன்னால் இருந்த மாணவர்கள் திரு திருணு முழித்தனர்.

             “உங்களுல யாரையாவது இதுபோல கூட்டி வந்தா உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அந்த அளவு சந்தோஷமா இருந்துச்சி எனக்கும். ஏன்ணா நானும் பல வருஷத்துக்கு முன்னால் உங்க வயசுல இருக்கிறப்ப உங்களைப்போல இருந்தவன் தான்.”

           “ உங்களை போல என்கிறதை விட அதற்கும் கீழான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் நான். என் பெற்றோருக்கு நான் நான்காவது பிள்ளை. என் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மூன்று பேர் என் பாட்டியோடும், நாங்கள் நாலு பேர் எங்க அம்மா அப்பாவோடும் வளர்ந்தோம்.”

           “பல வருஷமாக நமக்கு இன்னும் இரண்டு அக்காவும் ஒரு அண்ணனும் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. என்னுடன் வாழும் மூன்று பேர் தான் எனக்கு உடன் பிறந்தது என நினைத்துக் கொண்டுதான் வாழ்ந்தோம். சொந்த ஊர் என எதுவும் கிடையாது. ஊர் ஊராக சுற்றுவோம். நைட்டான போது எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்திலேயே டென்ட் அடித்து கூடாரம் போல் அமைத்து அதில்  தூங்குவோம்.

          “வாத்து வளர்த்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் தான் என் குடும்பம் பசியாறியது. நீங்க கூட பார்த்துப்பீங்க. நீங்க போகிற வழியில் சில மனிதர்கள் அதிகமா செம்மறி ஆடுகளை ஓட்டிக்கிட்டோ… அல்லது கோழிக்குஞ்சு விரட்டிக்கிட்டோ… இல்ல என் அப்பா அம்மாவை போல வாத்து கூட்டம் பின்னாலே போவாங்க. பார்த்திருக்கீங்களா?”

           “பார்த்திருக்கோம்.”

           “பார்த்திருக்கீங்களா?” அவங்களை பார்க்கிறப்ப உங்களுக்கு என்ன தோணுதோ என்னவோ எனக்கு என் பழைய வாழ்வு தம் நியாபகம் வரும். தலையில் துளி கூட எண்ணெய் இல்லாமல் கொட்டுற மழைனாலும் அதுல நனைஞ்சிக்கிட்டு, அடிக்கிற வெயில்னாலும் அதை தாங்கிகிட்டு, சரியான வேளையில் உணவு கூட இல்லாமல் வாய்க்கா வரப்புல கிடைக்கிற நீரோடை தண்ணிய பருகிட்டு, எதுக்கு வாழ்கிறோம்ணு கூட தெரியாத ஒரு வாழ்வு வாழ்ந்திட்டிருந்த  என்னுடைய இளமைக் காலம் தான் எனக்கு ஞாபகம் வரும்.”

          ஒவ்வொரு இடங்களுக்கா நாங்க அலையும் போதும் ஒவ்வொரு விதமான மனிதர்களையும் பார்ப்போம். அந்த மனிதர்கள் வாழுற வாழ்க்கை  முறையை நான் உன்னிப்பா  பார்ப்பேன். அவங்க அலங்காரமான உடையை பார்ப்பேன். அவங்க நடையை பார்ப்பேன். ஏன் அவங்க ஸ்டைலை கூட பார்ப்பேன்.

          ஏன் நம்மளால மட்டும் அப்படி வாழ முடியலணு எனக்குள்ளே ஒரு தாக்கம்.

          அந்த தாக்கம் ஏக்கமா மாறுச்சி. அந்த ஏக்கம் ஆசையா உருவெடுத்துச்சி. அந்த ஆசை எனக்குள்ளே வேரூன்றி என்னை என் கூட்டத்தில் இருந்து மாறி வாழ சொல்லிட்டே இருந்துச்சு. அங்க சந்தோஷமா வாழுற பலதரப்பட்ட மக்களோடு நாமளும் வாழணும்னு சொல்லிட்டே இருந்துச்சு.

          அப்ப எனக்கு ஒன்பது வயசு. முதன்முறையா எங்க கிராமத்துக்கு எங்களை கூட்டிட்டு போறாங்க எங்களை பெத்தவங்க. அங்க போனப்ப தான் எனக்கு ஒரு பாட்டி இரண்டு சகோதரிங்க ஒரு சகோதரன் இருக்கிறதே தெரியும்.

            அது ஒரு ஓலை குடிசை. வீட்டுக்குள்ளே போகணும்னாலும் வருகிறதுனாலும் குனிஞ்சி தான் போகணும். அதுவும் நம்மளோட மட்டத்துல பாதி குனியணும். அவ்வளவு குறுகலான வாசல். உள்ளால கொஞ்சமா இடம். கண்டிப்பா அதுக்குள்ள நாலு பேர் எல்லாம் படுக்க முடியாது. அண்ணனும் பாட்டியும் வெளியில படுத்துக்கிட்டு அக்கா ரெண்டு பேரும் மட்டும் உள்ளால படுப்பாங்கணு தோணுச்சு.

           நாங்க போன அன்று எல்லாரும் நிலா முற்றத்துல தான் படுத்தோம். முதன்முதலா பார்த்ததாலோ என்னவோ என் அக்கா ரெண்டு பேருக்கும் என் மேல பாசம். அவங்க சாப்பாட்டை கூட எனக்கு கொடுத்துட்டு பட்டினி இருந்தாங்க. ஆனாலும் சிரிச்சிட்டே தான் இருப்பாங்க. ஏன் எங்களுக்கு மட்டும் இந்த நிலைணு தோணுச்சி. அக்கா ரெண்டு பேரும் துணி கம்பெனிக்கு போறதாவும் அண்ணனும் பாட்டியும் எங்களைப் போல வாத்து மேய்கிறதாவும் சொன்னாங்க.

           என்ன வேலைக்கு போனாலும்  அவங்களும் நிறைவான வாழ்வும் வாழல. எங்க நிலையில் தான் இருந்தாங்க. ஊர்ல்ல நின்ற ஒரு வாரமும் பக்கத்து கிரவுண்டுல விளையாட போனேன். அங்க தான் இந்த வாழ்வுக்கான முதல் பிள்ளையார் சுழி விழுந்துச்சு,

          அங்க விளையாட வந்த நாராயணசாமியோட சிநேகம் ஏற்பட்டுச்சு. எல்லாரும் என்னை ஒதுக்குன நிலையில அவன் மட்டும் நெருங்கி வந்தான்.  அவன் பக்கத்துல உள்ள கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறதா சொன்னான். மதியம் வயிறு நிறைய சாதமும் போட்டு பெரிய முட்டை ஒண்ணும் கொடுப்பாங்கன்னு சொன்னான்.

           நான் மறுநாள் யாருக்கும் தெரியாம அங்க போனேன்.

           எனக்கு படிப்பை கொடுக்க யாரும் அங்க விரும்பல. ஆனால் சோறு போட்டாங்க. ஏன் போன அன்று  பாவம் பார்த்து இரண்டு முட்டை கூட கொடுத்தாங்க.

           “சாப்பிட்டு கிளம்புப்பா. உனக்கு வயசு கூடிப்போச்சி.  இதுக்கு மேல சேர்க்க முடியாதுணு விரட்டினாங்க. நான் விடல. மறுநாளும் போனேன். அன்றும் அப்படித்தான் கிளாஸ் ரூமுக்குள்ளால விடல. வராண்டால வச்சே சாப்பாடும் முட்டையும் கொடுத்து தான் அனுப்பினாங்க.

           மறுநாள் முட்டை போச்சு. சாதம் மட்டும் கிடைச்சது. அடுத்த நாள் சாதம் கூட இல்லை.

          இப்படியே கொடுத்துட்டிருந்தா  கிளம்ப மாட்டானேனு எல்லாத்தையும் தருகிறதையும் நிறுத்துனாங்க.

           “நான் விடல…திரும்பத் திரும்பப் போனேன். அப்ப தான் என் ஆசை புரிஞ்சிட்டாங்க. ஒண்ணாவது வகுப்புல கொண்டு இருத்துனாங்க. நான்காவது வகுப்பில இருக்க வேண்டிய நான் ஒண்ணாவது வகுப்புல இருந்தேன்.”

          அன்று மிக சந்தோஷத்தோட வீட்டுக்கு வந்தா, வீடு பலமான ஒரு அதிர்ச்சியை கொடுத்துச்சு. அதுதான் மறுபடியும் கிராமம் கிராமமா அழைத்துச் செல்ல போவதாக சொல்ல, என்னை அறியாம என் கண்ணு கலங்குச்சி.

          ஆனா போக கூடாதுன்னு தீர்மானிச்சேன். அவங்க கிளம்பும்போது ஒரு குழிக்குள் பதுங்கிட்டேன். எல்லா இடத்துலயும் தேடினாங்க. என்னை கண்டு பிடிக்க முடியல. பல மணி நேரம் காத்திருந்தாங்க. நான் போகல. அப்புறம் ஒரு வழியா என் அண்ணனை உடன் அழைச்சுட்டு அவங்க எல்லாரும் கிளம்பி போனாங்க.

         இங்க பாட்டியோட  இருந்து வாத்துக்களை பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன்.

         என்ற தைரியத்தில்,

         இதுவரை பாட்டியோட இருந்த என் சகோதரனை அழைச்சிட்டு போயிட்டாங்க.

         அப்புறம் என் பாட்டி, என் அக்காவை எல்லாம் எப்படியோ தாஜா பண்ணி என் பள்ளி வாழ்வு ஆரம்பமாச்சு. ஒரே வருடத்தில் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு பாடங்களையும் சேர்த்து படித்தேன்.

          ஒன்றாம் வகுப்பில் முதல் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் எடுத்த போது என் மனம் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்ன இவன் ஒன்றாம் வகுப்பில் ஒன்றாவதாக வந்ததை பெருமையாக  சொல்கிறானே என்று நினைக்கலாம்.

           படிப்பு வாசமே படாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்து யாரோட எந்த உதவியும் இன்றி என் முயற்சியிலே நான் பறித்த முதல் வெற்றி கனி. அடுத்து வந்த வருடம் எல்லாம் நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் என்னை நிரூபிச்சேன்.

          ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவது சவாலாக இருந்தாலும் நான் அதை செய்தேன். மிக மிக ஈடுபாட்டோடு செய்தேன். பத்தாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும்  நல்ல மதிப்பெண் எடுத்து நான் பாஸானேன்.

          அப்போது என் பள்ளி மாணவர்கள் சொல்லிதான் CA படிப்பு பற்றி தெரிந்து கொண்டேன். இது படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு. உலகில் மதிப்பாக வலம் வரலாம் என்பது போன்ற விஷயங்கள் தான் தெரியுமே தவிர. CA என்றால் சாட்டன்ட் அக்கவுண்ட் என்று கூட  எனக்கு தெரியாது.

          ஆனால் அதுதான் தன்னை உயர்த்தும் என நம்ப ஆரம்பித்தேன். என்னை உதறிய சமுதாயத்தில் தன்னை நிலை  நிறுத்த நான் படித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன்.  இதை என்தோழரிடம் சொன்னபோது கை கொட்டி சிரித்தார்கள். எண்ணி நகையாடினார்கள்.

          “அப்பனுக்கு வாழ்வு வந்தால் அத்த ராத்திரியில குடைபிடிப்பானு இவனை பார்த்து தான் சொல்லியிருப்பாங்கடா.”

            என்று கொக்கரித்தது ஒரு கூட்டம்.

             “உட்கார இடமில்லை. ஒண்டி குடித்தனம். இதுல CA ஆகப் போறான்பா.”

            என எகத்தாள பேச்சு ஏராளம். ஆனால் நான் எதையும் காதில் வாங்கவில்லை. ஒன்றாம் வகுப்பில் கால் வைத்த போதும், பத்தாம் வகுப்பு முடிந்து பதினொராவது வகுப்பிற்கு சென்ற போதும் இதே போல் நிறைய வார்த்தைகள் நான் கேட்டிருக்கிறேன்.

           ஊர்காரர்களின்   அவமானத்தை  சுமந்து இருக்கிறேன். ஆனால் இன்று ஜெயிக்கவில்லையா? +2 வில் அதிக மதிப்பெண் எடுக்கவில்லையா? இதை போல் ஜெயித்தே ஆக வேண்டும். என்ற வெறியில்  என் குடும்பத்தினரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் மெட்ராஸுக்கு பயணமானேன்.

           அங்குதான் அப்படிப்பு இருக்கிறது என சொன்னதால் எதையும் யோசிக்காமல் வந்து விட்டேன். ஆனால் பள்ளி படிப்பு போல அல்ல என உணரவே இரண்டு வருடமானது. CA படிப்பை எந்த அரசாங்கமும் ஃபிரீயாக  கொடுப்பது இல்லை என தெரியவே ஒரு மாதமானது.

         அதிலும் அது பற்றி விசாரித்தாலே என்னை மேலும் கீழும் பார்த்தனர். என் கோலமே அவர்களை அவ்வாறு பார்க்க வைத்தது. ஆனால் நான் சோர்ந்து போகவில்லை. தினம் இரவில் தூங்கிக் கொள்ளும் ஆலயத்திலே வற்புறுத்தி பணியை பெற்றுக் கொண்டேன். தூப்பதும் சுத்தம் செய்வதும் என வேலை செய்து, கிடைத்த  சொற்ப வருமானத்தில் வாழ தொடங்கினேன். மூன்று வேளை உண்ணக்கூட முடியாமல் இருந்த வருமானத்தில் நான் எப்படி CA ஆவது. அதிலும் கோவிலில் கிடைக்கும் புளியோதரையை  வைத்தே உடம்பை வளர்க்கும் எனக்கு CA ஆசை நியாயமா?

         தெரியவில்லை. காலம் கடந்தது. என் தேடல் அதிகமானது.  அப்போதுதான் கோவிலுக்கு வரும் ஒரு அர்ச்சகர் சொல்ல இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெரிய நூலகம் இருப்பதை தெரிந்து கொண்டேன். கோவில் பணி முடிந்ததும் நேரே அங்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். CA படிப்புக்கு சம்பந்தமான விஷயங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அது நான்கு வருட படிப்பு என்றும் உள்ளே போகவே தேர்வு எழுத வேண்டும். என்ற அடிப்படை கூட தெரிந்தது.

         அதன் பின் என் தேடல் அதிகமானது. அந்த நூலக புத்தகங்கள் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி தந்தது. அப்படியான ஒரு நாள் நான் மும்முரமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது CA படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் உள்ளே வந்தான். நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை பார்த்தவன்.  என் அருகில் வந்து எள்ளி நகையாடினான்.

          அவன் வார்த்தையும், அவன் கொடுத்த அவமானமும் என்னை சீண்ட, நானும் அவசரப்பட்டு,

           “நானும் CA ஆகியே திருவேணு கம்பீரமா சொன்னேன்.”

          என் கணீர் குரலில் அங்கு வாசித்து கொண்டிருந்த அனைவரும் என்னை திரும்பி பார்த்தார்கள். என்னை நகையாடியவன் நிறுத்தவில்லை. அவன் பேச்சு என் முகத்தை சுழிக்க வைக்க கண்கலங்கி விட்டது.

           அவன் அவன் இன்ஸ்டியூஷன் போய் பெரிய வாத்தியார்களுட்ட பாடத்தை கேட்டும் படித்தும் பாஸாகாம  அலையுறாங்க. இவன் என்னடானா லைப்ரறியிலே படிச்சி CA ஆக போறானாம்.

          சொல்லிவிட்டு அவன் சிரிக்க…

          எனக்கு அசிங்கமா போயிடுச்சி. இவன் பேச்ச கேட்டு அங்கு படிச்சிட்டு இருந்தவங்களும் சிரிக்க,

         ஒருவேளை அவங்க சொல்லுறது சரியோ? நம்மளால அவங்களை போல எல்லாம் பணம் கட்டி எப்படி படிக்க முடியும். முடியாதே…அப்படி என் மனம் சோர்ந்து போனாலும், லைப்ரறி போய் படிக்கிறது மட்டும் நான் விடவே இல்லை. அதை பார்த்த… என்னை அவமானப்படுத்திய அதே மாணவனே ஒரு நாள் அவன் படிக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனான்.

          ஆரம்பத்தில சார் கேட்ட கேள்விக்கு ஆர்வகோளாறுல பதில் சொல்லிட்டேன். அவர் ரொம்ப மனசு நோக பேசிட்டாரு .நீ எல்லாம் ஆடிட்டர் ஆகலனு எவன் அழுதான். மாடு மேய்க்கவோ ஆடு மேய்க்கவோ கிளம்பிட வேண்டியதுதானே. எதுக்கு இங்க வந்து என் உயிரை எடுக்குறீங்கணு அத்தனை பேரும் முன்னால் கத்துக்கிட்டாரு.

          எனக்கு அவமானமாய் போச்சு. இனிமே இந்த வாத்தியார் முன்னாலே வரக்கூடாதுன்னு தோணலை. இவர் பாடத்திலேயே சென்டம் எடுக்கணும்னு முடிவு பண்ணுனேன். எடுத்தும் காட்டுனேன். எந்த வாயால என்னை ஆடு மாடு மேய்க்க தான் லாயக்குனு சொன்னாரோ அதே வாயால முரளி போல ஆடிட்டர் ஆகணும் என்கிற வெறி இருக்கணும்ணு சொன்னாரு.

           அன்று எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்படித்தான் என் வாழ்வு CA க்குள் பயணமாச்சு. அந்த தேர்வு எழுதி நான் CA  முடிகிறதுக்குள்ள பல பல கஷ்டங்களை பட்டேன். அவமானங்களை சுமந்தேன். காசு இல்லாம இரவு பகலா உழைச்சேன்.

          தூங்காம இருந்து படிச்சு படிச்சு பல விஷயங்களை தெரிஞ்சுகிட்டேன். முதல் முறையா தேர்வு எழுதினப்பவே எந்த தோல்வியும் ஏற்படாம வெற்றி பெற்றேன். இன்று நல்ல வேலை. கை நிறைய சம்பளம். சமுதாயத்தில நல்ல ஒரு அந்தஸ்துல வாழுறேன்.

          அன்று வாத்து மேச்ச கூட்டத்துல இருந்து வந்தவனை தான் இன்று… எல்லோருக்கும் படிப்பை சொல்லி கொடுக்கிற ஆசிரியர்களே  மதிச்சி அழைச்சிட்டு வந்து உங்க முன்னால நிறுத்துறாங்கனா ?  அதுக்கு படிப்பு தான் காரணம். படிப்பு… இதை ஒண்ணை கட்டியா புடிச்சிடுங்க. நிச்சயம் அது உங்களை ஒரு உயர்ந்த இடத்துல கொண்டு போய் நிறுத்தும்.

         இப்ப என் கண்ணுக்கு முன்னால் இருக்கிற நீங்க எல்லாம் எனக்கு மாணவர்களா தெரியல? கலெக்டரா? IPS அதிகாரியா? டாக்டரா?  இஞ்சினியரா? தான் தெரியுறீங்க. பல பேர் முகத்தில் விளையாட்டு வீராங்கனை கூட  தெரியுது.

          நீங்கள் அப்படி ஒரு உயர்ந்த இடத்தில் அமரணும்னா தகுதியை வளர்த்துக்குங்க.  எதுவாக வேண்டுமென  நினைக்கிறாயோ?அதுவாகவே ஆவாய் என்ற அறிஞர் பெருமக்களின்  வைரவரியை நெஞ்சில் நிறுத்தி அப்பயணத்திற்காய் உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பயணம் எதிர்காலத்தில்  நல்ல முத்துக்களை இம்மண்ணில் விதைக்கும். அந்த நல்ல முத்துக்கள் எதிர்கால இந்தியாவை பேதமையற்ற இந்திய தேசத்தை உருவாக்கும்  என நம்பி அமர்கிறேன். நன்றி வணக்கம்.

          முரளி பேசிவிட்டு அமர்ந்ததும் கைதட்டும் ஒலியால் அரங்கமே அதிர்ந்தது.

          அவனுக்கும் நல்ல ஒரு கருத்தை கூறி அமர்ந்த சந்தோஷத்தில் கூட்டத்தினரை முகம் மலர பார்த்தவன் கண்களில் அவள் தெளிவாக விழுந்தாள்.

         ‘அவளே தான்…’ இங்குமா? இங்கு எப்படி? இவள் உண்மையில் என்னை பாலோ தான் செய்கிறாளா?

          டவுண்ல அடிக்கடி பார்ப்பது என்றால் கூட சரி. வேலை விஷயமாக, தான் புழங்கும் இடங்களில் அவளுக்கும் வேலை இருந்திருக்கும் என நினைக்கலாம். ஆனால் நகர்ப்புறத்தில் இருந்து இவ்ளோ தள்ளி வந்து அதுவும் தன் வேலைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பள்ளி பங்ஷனிலும்  வந்து தன் முன் நிற்கிறாள் என்றால்… இவள் ஒரு வேளை என்னை தான் ஃபாலோ பண்ணுகிறாளோ?

          முரளீதரனின் உள் மனம் பேசிக்கொண்டபோது அப் பெண்… தான்இதுவரை நின்ற கடைசி வரிசையில் இருந்து முன்னால் நகர்ந்து வந்தாள். அதுவும் முரளியையே  வைத்த கண் எடுக்காமல் பார்த்தவாறு,

          முரளி கூட்டத்தை பார்க்காமல் அவளையே பார்க்க, மனம் அதிவேகமாக துடிக்க தொடங்கியது.

          “என்னை நோக்கி எதற்கு வருகிறாள்?.”

          அவன் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்த போது, முன்னால் வந்த அந்த பெண் முன் ரோவில் இருந்த ஒரு ஆண் குழந்தையை தூக்கியவாறு அவனை ஆழ்ந்து பார்த்து அக்குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தாள்.

           சட்டென முரளியின் கை அவன் கன்னத்தை வருட, பொங்கும் சிரிப்போடு அவனைப் பார்த்தவள். சட்டென திரும்பி அக்குழந்தையோடு கூட்டத்தில் கலந்தாள்.

            முரளி மொத்தமாக குழம்பி நின்றான்.

                                          அத்தியாயம் தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!