அத்தியாயம் – 1

        கோபத்தின் உச்சத்தில் நின்றவனாக தன் காப்பி கொட்டி விட்ட சட்டையை கழற்றி முன்னால் பயத்தோடு நடுநடுங்கி கொண்டு நின்ற பணிப்பெண் ஓவியா முகத்தில் விட்டெறிந்தான் முகுந்தன்.

         அவனை ஒரு நொடி ஏற இறங்க பார்த்தாலும் சட்டையை அணியாத அவன் கட்டுடலை கண்டதும் கன்னி பெண் ஒவியா ஒரு நொடி திரும்பி கொண்டாள். காரணம் இல்லாமலே அவள் கன்னி தேகம் சிவந்து போனது. ஆனாலும் விடுவேனா என்பது போல முகுந்தன் காட்டு கத்தல் கத்த…

          “நான் வேணும்ணு பண்ணல சார். தெரியாம…”

அவள் இழுத்து கொண்டே கீழ் பார்வை பார்க்க…

         அவன் வாழிப்பான  முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததை பார்த்து  நிஜமாகவே பயந்து தான் போனாள் பெண்ணவள். ஒரு கணம் அதிர்ந்து விழித்தவள் முகத்தில் பய ரேகையை காட்ட நொடி பொழுதில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றவன்…

          “கண்ணை என்ன புடலிலியா வச்சிருக்கா. எப்பவும் வந்து மோதிட்டு நிக்குறா?  நேற்றும் அப்படி தான் ஒரு டீசன்ஸி இல்லாம வராண்டாவுல ஒடி வந்து மோதுறா? பனை மரம் போல வளர்ந்து தானே இருக்குறா? மண்டையில புத்தியில்ல… தங்கி செல்ல வர கூடிய வாடிக்கையாளரை எப்படி கவனிச்சிக்கணும்ணு உனக்கு உங்க மேனேஜர் கத்து கொடுக்கலியா? அந்த கோமாளியை முதல்ல கூப்பிடுங்க. காலையிலேயே இரிட்டேட் பண்ணிட்டிருக்கிறது.”

           என வெடித்து கொண்டு அந்த அறையின் ஒரு மூலையில் அமைதியாக இருந்த டெலிபோனை நோக்கி அவன் நகர்ந்த போது,

            எப்படியும் கம்பிளைன் பண்ண தான் போறான். என்பதை ஒரு நொடி உணர்ந்த ஓவியா… கையில் இருந்த காப்பி கோப்பை நிரம்பிய ட்ரேயை சட்டென டீபாயில் வைத்து விட்டு, அந்த கட்டிலை சுற்றி ஒடி போய் அவன் முன் கை கூப்பி கண்ணீர் மல்க நின்றாள்.

           வேணாம் என்று சொல்ல கூட அவளுக்கு வார்த்தை எழவில்லை. அந்த அளவு அவனில் பயம் அவளுக்கு. நேற்றும் அப்படி தான். பணிக்கு வர வேண்டிய நேரம் கழிந்து விட்டதால் அந்த ஹோட்டல் மேனேஜரின் கண்ணில் தட்டுப்பட்டு வசை மொழி வாங்கி விட கூடாதே என்று தான் தன் தோழியோடு தலை தெறிக்க ஓடி வந்தாள். அவள் கெட்ட நேரம் கோட் சூட் அணிந்து எங்கோ வெளியில் செல்ல கிளம்பிய இந்த காட்டானின் மேல் மோதி விட்டாள்.

          என்னவோ லாரியையே கொண்டு இவன் மேல் மோதியது போல…

          வானுக்கும் பூமிக்கும் குதித்தவன் கடைசியில் மேனேஜரிடம் வகை தொகை இல்லாமல் திட்டு வாங்க வைத்த  பின்பே அமைதியானான்.

         அப்பவே அந்த சோடாபுட்டி.

         “இது தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ். இதுக்க மேல உன் மேல கம்பிளென்ட் வந்துச்சு. அப்புறம் வேலையை விட்டு தூக்கிடுவேன்.”

         என சொல்லி எச்சரித்து தான் அனுப்பினான்.

        இப்போ மட்டும் இந்த சண்டாளன் குற்றபத்திரிகை வாசித்தா அந்த சிடுமூஞ்சி கழுத்தை பிடிச்சி வெளியில தள்ளிடும். இதுக்கு இந்த ஊசி போன மூஞ்சிட்ட தடாலடியா விழுந்திடலாம்.

         என்று தான் தன் மானம் அவமானத்தை பார்க்காமல் கைகூப்பி விட்டாள். இவ்வளவு நேரம் காட்டு கத்து கத்தினாலும் அந்த பெண் முகத்தில் கண்ணீரை கண்டதும் முகுந்தன் சுருதி இறங்க தொடங்கியது. ஒரு முறை அவளை நின்று நிதானமாக பார்த்தான்.

         ஒளியிழந்த கண் என்றாலும் ஏனோ அது அவள் முகத்திற்கு அவ்வளவு அழகு சேர்த்து நின்றது. படபடவென நொடி பொழுது மூடிய அந்த இமை அசைவில் ஒரு நொடி அசைந்தவன் சிவந்து போன அவள் கீழ் அதரங்களில் நங்கூரம் பாய்ச்சிய போது என்னவோ அவனையும் மீறி அவன் மேனி சிலிர்த்தது. சட்டென திரும்பி கொண்டவன் குரலை கொஞ்சமாய் தளர்த்தி,

          “வேற டிரஸ் கொண்டு வரல. ஏதாவது உடனே ரெடிப்பண்ண முடியுமா?”

            என்றான் கோபம் குறைந்தாலும் கணீர் குரலில். அந்த குரல் கூட அவளை நடுங்க தான் வைத்தது. மெல்ல தலையை தூக்கி அவன் பின் முதுகை முறைத்தவள் நடு நடுங்கும் குரலில்,

          “இல்ல சார். மலையில இருந்து கீழ் இறங்கினா தான் கடை இருக்கு.”

         என்றதும் மறுபடியும் கோபம் ஜிவ்வென்று ஏற,

         “அப்போ நான் எப்படி பார்ட்டிக்கு போறது. அங்க தொழில் பார்ட்னஸ் எல்லாரும் வந்திருப்பாங்க.”

          என மறுபடியும் சூடாக ஆரம்பிக்க…

 இதற்கு மேல் அவனை பேச விட்டால் தாங்காது என உணர்ந்தவள்.

         “வேற ஒரு வழி இருக்கு. அதுக்கு நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணனும்.”

          என திக்கி திணறி சொல்ல…

அவளை முறைத்து பார்த்தவன்.

          “உன்னை போல அஞ்சிக்கும் பத்துக்கும் வேலை பாக்குறேனா நினைச்சா. என்னுடைய ஒரு மணி நேரம் எவ்வளவு மதிப்பானதுணு உனக்கு தெரியுமா? வெயிட் பண்ண சொல்லுற மூஞ்சியை பாரு.”

          அவன் அதட்டிய அதட்டலில் குலுங்கி போய் நின்ற நொடி அவன் செல் குரல் கொடுத்து நிற்க…

          ஆத்திரத்தோடு அதை எடுத்தவன் போனில் தன் தோழனும் பி.ஏ வுமான நளன் அழைக்க கண்டதும், அவசரமாக எடுத்து காதுக்கு கொடுக்க, எதிர்முனை என்ன சொன்னதோ…

           “ஆமாடா ஆமா. நான் இங்க இந்த ஹோட்டல்ல உள்ள ஒரு பட்டிகாட்டு பொண்ணோட கண்ணாமூச்சி ஆடிட்டிருக்கேன். நீயும் வறியா சேர்ந்து விளையாடலாம்.”

            என வெடிக்க, மெல்ல திரும்பி தலையை சொறிந்தவாறே,

            “பாவம். விசயமே தெரியாம எதிர்முனையில் இருப்பவர் நொந்து போயிருப்பான். இந்த டென்ஸன் பார்ட்டியோட எல்லாம் எப்படி தான் இருக்காங்களோப்பா.”

            என தனக்குள் எதிர்முனை ஆளுக்காக வருத்தப்பட்டாள். இன்று தான் தான் மாட்டி கொண்டிருக்கிறோம் என தெரியாமல்.

          ஆரம்பத்தில் காச் மூச் என கத்தியவன் கடைசியில் நார்மலாகி,

           “இப்ப எங்க வருகிறது. நீயே தீனதயாளன்ட்ட பேசுடா. நான் ஒரு அரை மணி நேரத்துல கிளம்பி வரேன். நாம சூஸ் பண்ணுன கொட்டேஷன் படி பேச ஆரம்பி. நான் இடையில வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.”

          என்றவாறு செல்லை வைக்க, அவனையே இதுவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்து நின்ற பெண்ணவளோ அவனின் திரும்பிய விழியை பார்த்து பயந்து வெளிறி போய் தலைகுனிய,

            “நீ இன்னும் கிளம்பலியா? என்ன என்னை அந்த பார்ட்டியில கலந்துக்க விட கூடாது என்கிற முடிவுல இருக்கிறியா? சவன்ற்றி குரோஸ் பிஸ்னஸ். சொதப்புச்சு வந்து உன்னை சாகடிச்சிடுவேன். சீக்கிரமா போய் என் டிரஸை ரெடி பண்ணு.”

            என அவன் கத்த,

விட்டால் போதும் என வெளியே ஓடி வந்தவளை இடை மறித்த திலகா.

          “என்னடி ஒரு கப் காப்பி கொண்டு கொடுத்துட்டு வர இவ்வளவு நேரமா ?”

          என கேட்க,

          “மனுஷன்ட்ட அனுப்பி இருக்கணும். ராட்சசன்ட்ட அனுப்புனா இது என்ன இன்னமும் ஆகும். இப்ப தப்பிச்சி வந்ததே தம்பிரான் புண்ணியம்.”

          என்றவளை விழி விரிய பார்த்தவள்,

          “இன்றுமா?”

என வியப்போடு கேட்க, பாவமான முகத்தை வைத்து ஆமாம் என்பது போல தலையாட்டினாள் ஒவியா .

             “இன்று என்ன?”

என வியப்பு மேலிட கேட்டவளை சங்கடமாக பார்த்தவள்.

            “காப்பியை கொண்டு போய் சட்டையில கவிழ்த்திட்டேன்.”

            என்றவாறு படபடப்பாக இமைகளை அதிவேகமாக அடித்து கொண்டே அவள் குழந்தை விழிகளை பயம் கலந்து காட்ட, சட்டென சிரிப்பு வந்தது திலகாவுக்கு. பொங்கி வந்த சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கியவாறு,

            “சட்டையிலா?”

என வியப்பு மேலிட கேட்டவளிடம் நெருங்கி வந்தவள். மென்குரலுக்கு மாறி ஏதோ ரகசியம் சொல்பவள் போல,

            “வெளியில யாராவது பயந்து நடுங்கி போய் நிக்குறாங்களானு பார்க்காம சதாம் உசேன் போல வீறிட்டு வந்தா நான் என்ன செய்ய முடியும். நான் அப்பவே மேனேஜர் சிடுமூஞ்சிட்ட சொன்னேன். அந்த அறைக்கு என்னை அனுப்பாதுங்கணு. கேட்டுச்சா. அந்த சிடுமூஞ்சிட்ட அனுப்புனா நான் என்ன பண்ண? பயந்து சாகிறேன். பயத்தோட உள்ளால அது என்ன நிலையில இருக்கோணு தெரிஞ்சிக்க காதை மெல்லமா கதவு பக்கம் கொண்டு தான் போனேன்.  அந்த நெடுமரம் கதவை திறந்துட்டு பட்டுணு வெளியில வந்திருச்சி. அப்படி அது சொல்லாம கொள்ளாம வெளியில வந்து காப்பியாபிஷேகம் வாங்கிட்டு என்னை காட்டு கத்து கத்துது.”

           என்ற தோழியின் குழந்தை பேச்சை கேட்டவள் வாய்விட்டு சிரிக்க…

           “சிரிக்காதடி. அது எப்படி எல்லாம் திட்டுச்சு தெரியுமா?”

 என அழுகைக்கு அவள் மாற,

           “நீயும் ஏண்டி எப்பவும் அவர்கிட்டயே போய் மோதிட்டு நிக்குறா?”

           “ம்…வேண்டுதல். நேற்று காலையில வீட்டை விட்டு கிளம்பும் போதே அந்த கோபாலு சொன்னான். நியாபகம் இருக்கா. இந்த நாள் இனிய நாளா அமையட்டும்ணு. அப்பவே நினைச்சேன். இந்த நாள் விளங்குன மாதிரிதாணு. நடந்திடுச்சில்ல. இனிமேல் இப்படி ஒரு நாளே வாழ்க்கையில வந்திட கூடாதுணு நினைக்கிற அளவு அந்த சிடுமூஞ்சிட்ட வந்து மாட்டிகிட்டேன். நேற்று மட்டுமா? இன்றும் தான். அந்த சனியன் என்னை விடுறது போல இல்ல… இன்றும் தொடருது.”

           “ஆனாலும் உங்க ரெண்டு பேரோட மோதல் சூப்பர்டி. ஆமா மோதலுக்கு பின் காதல்ணு சொல்லுவாங்களே. ஒருவேளை அதுக்காக தான் மோதுறீங்களோ?”

             “ஆமா இந்த மூஞ்சியை காதலிச்சிட்டாலும். பாவம்ப்பா இவனை கட்டிக்க போறவா? ஒரு போன் வந்துச்சு பாரு. நமட்ட மட்டும் தான் இப்படி பேசுவானு பாத்தா. பேசுற எல்லானுட்டயும் வாள் வாள்ணு கத்துது.”

              “ஒருவேளை வீட்டுல பொண்டாட்டிட்ட சண்டை பிடிச்சிட்டு வந்திருக்குமோ. அந்த கோபத்தை கொண்டு உனட்ட தீர்க்குதோ.”

              “ம்… அதை அந்த கடவுள்ட்ட தான் கேட்கணும். ஆனா அந்த பொண்ணு பாவம்ப்பா. இவனுட்ட மாட்டிட்டு என்ன பாடு பட்டிட்டிருக்கோ. சரி. நான் கிளம்புறேன்ப்பா. இதுக்க மேல பேசிட்டிருந்தேன். அந்த டென்ஸன் பார்ட்டி இங்க வந்து சாமியாடிடும்.”

             சொன்னவள் அங்கிருந்து சலவை செய்யும் அறைக்கு அவசரமாக ஒட, போகும் அவளை பார்த்து சிரித்து கொண்டு நின்றாள் திலகா. .வந்த வேகத்திலே கையில் இருந்த சட்டையை வாஷிங்மிஷினில் சலவைக்கு

 போட்டு ஆண் செய்து விட்டு காத்திருந்தவள் மனமோ நடந்து முடிந்த நிகழ்வுக்கு தாவ, திடீர் என்ற ஒரு எண்ணம் அவளுள் சிலிர்படைய செய்வது போல… முகம் சிவந்தவள் மென்சிரிப்பை முகத்தில் படரவிட்டவாறு,

         “கோபகாரன் தான்.  ஆனா கொஞ்சம் நல்லவன் தான். என்ன தான் கோபத்துல கத்துனாலும் கண்ணீரை பார்த்தா இரங்கிடுறான். ஆனா பாவம் இவன் பொண்டாட்டி. இவன் மலையேறும்  போதெல்லாம் குடம் குடமா அழணும். இல்ல இந்த பிசாசை சரிகட்ட முடியாது.”

            என நினைக்கும் போதே சிரிப்பு வர, வாய்விட்டு சிரித்தவள் அவனை ஒரு முறை நினைவலையில் ஒட விட்டவாறே சட்டையை எடுத்து டிரையரில் போட்டு உலர்த்தி அயன் செய்தே எடுத்து கொண்டு அவன் அறைக்கு போனாள். உள் நுழைந்த போது வாசல் பக்கம் முதுகை காட்டி கொண்டு லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டே இருந்தான் முகுந்தன்.

          தன் இருமலை வெளிப்படுத்தியே தன் வரவை தெரியப்படுத்தி கொண்டு அவள் பவ்யமாக நிற்க… ஆபீஸில் வேலைகள் செய்ய ஆடரை அனுப்பி விட்டு கொண்டிருந்தவன் சட்டென நிறுத்தி கொண்டு திரும்ப,

          மெல்லிய குரலில்…

        “ சட்டை ரெடியாகிடுச்சி சார்.”

என்றவள் மறுபடியும் தலையை தாழ்த்தி கொள்ள, அவளை முறைத்து பார்த்தவாறே சட்டையை வாங்கி அணிய தொடங்கினான் முகுந்தன்.

          “சார்… காப்பி.”

என்றதும் அவளை முறைத்தவன்.

          “இனியாவது குடிக்க கொண்டுவா . சட்டைக்கு அபிஷேகம் பண்ண கொண்டு வராத.”

          என்றவனை பயம் கலந்த பார்த்தவள் துடித்த உதடோடு

           “சாரி… சார்.”

என நகர போக,

           “காலையில டையிம் தாண்டிடுச்சி. சாப்பிட ஏதாவது கொண்டு வா. கூடவே சில பழங்கள்.”  

           என்றதும், நிமிர்ந்து அவனை பார்த்தவாறே,

           “ஓ.கே சார்.”

           என நகர்ந்தவள் அடுத்த பத்து நிமிடத்திலே அவன் கேட்டபடி எல்லாம் கொண்டு வந்து டீபாயில் பரத்த…

            அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன் சிந்தனையை எதுவோ உறுத்த, சட்டென அவளை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்தவன் அவளையும் தன்னோடு இழுத்து கொண்டு கட்டிலை நோக்கி நகர முயல, அவனின் இறுகிய பிடியில் மொத்தமாய் அதிர்ந்து போய் தன்னை மீட்டெடுக்க முடியாமல் போராடினாள் ஓவியா. ஒரு இஞ்ச் ஒரு இஞ்ச்…அவனிலிருந்து மீள முடியாமல் அவன் இழுப்புக்கு அவளையும் மீறி அவள் உடலும் ஆடத்தொடங்கியது.

            என்றாலும் பயத்தில் அவளின் உடல் நடுங்க விறுவிறுத்து போய் அவனை கலக்கத்தோடு பார்த்தாள் பெண்ணவள்.

                            அத்தியாயம் தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!