வணக்கம் வாசகர்களே!
முருகன் எதற்காக அந்த வயல்வெளி நிறைந்த பகுதிக்கு வருகிறான்? அவன் தேடும் அந்த பெண் யார்? மைனா என்கிறானே அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்மந்தம்.
அவன் தேடும் அந்த பெண் யார்?
நடையை எடுத்து போட்டு சாலையில் பயணித்துக் கொண்டிருந்த முருகன் அன்று போல் அந்த ஒத்தையடி பாதையில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். ஆனால் அன்று போல் இன்று பல இடங்களை பார்க்கவில்லை. ரொம்ப நல்ல பழக்கப்பட்ட இடம் போல நேராக நடந்தான்.
அது ஒரு கிராமம். வயல்வெளிகளும் தோப்புகளும் மலை அடிவாரமும்… இயற்கை மொத்த அழகையும் விலைக்கு பெற்றிருந்தது போல கண்ணுக்கு அழகு கொடுத்து நின்றது அக்கிராமம்.
விவசாயம் தான் பிரதான தொழிலாக இருக்க வேண்டும். தெருவில் பல இடங்களில் கதிர்களை கட்டிக்கொண்டு களத்தில் வைத்திருந்தார்கள் சில இடங்களில் மெஷின் வைத்து வைகோலை தனியாகவும் நெற்களை தனியாகவும் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச தூரம் சென்ற முருகன் நின்று திரும்பினான். அங்கு பலபேர் மூட்டை மூட்டையாக நெல்லை சாக்கில் கட்டி யாரோ ஒருவரின் வீட்டுக்கு எடுத்து சென்று கொண்டிருந்தார்கள்.
அதிவேகமாக சென்ற முருகன் நின்று திரும்பி அந்த மூட்டை கொண்டு சென்ற ஆட்களுடன் தன்னையும் சேர்த்துக் கொண்டு அவர்கள் பின்னே சென்றான். கூட்டத்தோடு கூட்டமாக அவன் உள் செல்ல அங்குள்ள யாரும் அவரை சந்தேகப்படவே இல்லை,
முருகன் காம்பவுண்ட் உள் சென்று விட்டாலும் அவ்வளவு ஈசியாக அந்த வீட்டிற்குள் செல்ல முடியாது போலும்.
வாசலின் உள் செல்ல அவ்வளவு கெடுபிடி இருந்தது. அது ஒரு பண்ணையார் வீடு. செல்வ செழிப்பில் இருந்தது அந்த கட்டிடம். வேலை ஆட்களின் ஆரவாரமே வீட்டை சுற்றி இருந்தாலும் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
வேலை முடிந்ததும் காசை தூக்கி எறிவார்கள் இவர்கள் பொறுக்கி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களை பொறுத்தவரை வெளியில் எறும்பு கூட்டம் போல் அவர்களுக்காக வேலை செய்பவர்கள் அடிமைகள். அவர்கள் நிழல் கூட தன் வீட்டில் விழக்கூடாது என நினைப்பார்கள்.
அதை மீறி இவர்கள் செய்யும் அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் எதிராக இரத்தம் சூடேறி யாராவது மல்லுக்கட்டு நின்றால் அவர்களை அடக்க என ஒரு 50 தடியர்களை காவலுக்கு நிறுத்தி இருக்கிறான் வீட்டின் உரிமையாளர்.
ஒவ்வொரு காவலாளியும் கன்னங்கரேல் என்று கருப்பாக இருந்தார்கள். உடல் முழுவதும் எண்ணெய் பூசி அவன் முரட்டு உடம்பை இன்னும் கம்பீரமாக தெரிய செய்திருந்தான். அத்தனை பேரும் எறும்பு போல சுறுசுறுப்பாக அந்த வீட்டை சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தனர். அவர்களை மீறி ஒரு ஈ, காக்கா கூட உள்ளே போக முடியாது. அத்தகைய வீட்டிற்குள் செல்ல வேண்டி தான் முருகன் கூட்டத்தோடு கூட்டமாக அங்கே நுழைந்தான். அதுவும் வெறியோடு…
வெளியில் மக்களின் சலசலப்போடு இருந்தாலும் அந்த வீட்டுக்குள் ஆழ்ந்த அமைதி இருந்தது.
ஆனால் இத்தகைய எந்த கட்டுப்பாடும் முருகனை பயப்படுத்தவோ, நிதானிக்கவோ செய்யவில்லை காம்பவுண்டுக்குள் சென்ற அடுத்த நொடியே…
வீறுகொண்ட புலி போல உள்ளே சென்றான்.
அவன் சென்ற தோரணையும் அவன் கண்கள் கக்கி சென்ற வலியையும் பார்த்த காவலாளிகள் ஒரு கணம் திகைத்துப் போயினர். அதன்பின் சுதாகரித்து கொண்டு அவனை அடிக்க செல்ல, ஒவ்வொருவரையும் பந்தாடினான் முருகன். இந்த சின்ன உடலுக்குள் இத்தனை சக்தி இருக்கும் என தெரியாத அடியாட்கள் சாதாரணமாய் வந்து வாங்கி கட்டிக்கொண்டு குப்புற கீழே விழ , அடுத்து வந்த அடியாட்கள் கம்போடும், கத்தியோடும் அவனை எதிர்கொள்ள… கத்தியையே தன் கையால் வெறிகொண்டு உடைத்து எறிந்தவன் முன் கம்பெல்லாம் எம்மாத்திரம்.

மனிதர்களை எல்லாம் ஒவ்வொரு சுவருக்குமாக வீசி எறிந்தான். டெய்லி பத்து முட்டையும் ஒரு லிட்டர் பாலையும் குடித்து வாட்டசாட்டமாய் இருந்த மொத்த அடியாட்களும் மண்ணில் சரணடைய, வீறு கொண்ட முருகன் உள் அறையை நோக்கி ஓடினான்.
ஒவ்வொரு அறையாக பைத்தியக்காரன் போல் பார்த்தவன், எந்த அறையிலும் தான் தேடி வந்ததை காணாது கோபம் முற்றி வானை பார்த்து அலறினான். அவன் அலறல் வீட்டு சுவரில் பட்டு எதிரொலிக்க கட்டிடமே அதிர்வை கண்டது. தன் கையையே சுவரில் பலமாக இடித்தான். வீட்டுனுள் இருந்த மொத்த பொருளையும் கோபம் தீர கலைத்து எறிந்தான். பொருட்களை உடைத்து போட்டான். மேஜைகளை கவிழ்த்து போட்டு மின்சார விளக்குகளை அடித்து நொறுக்கினான்.
மனிதர்களை எல்லாம் ஒவ்வொரு சுவருக்குமாக வீசி எறிந்தான். டெய்லி பத்து முட்டையும் ஒரு லிட்டர் பாலையும் குடித்து வாட்டசாட்டமாய் இருந்த மொத்த அடியாட்களும் மண்ணில் சரணடைய, வீறு கொண்ட முருகன் உள் அறையை நோக்கி ஓடினான்.
ஒவ்வொரு அறையாக பைத்தியக்காரன் போல் பார்த்தவன், எந்த அறையிலும் தான் தேடி வந்ததை காணாது கோபம் முற்றி வானை பார்த்து அலறினான். அவன் அலறல் வீட்டு சுவரில் பட்டு எதிரொலிக்க கட்டிடமே அதிர்வை கண்டது. தன் கையையே சுவரில் பலமாக இடித்தான். வீட்டுனுள் இருந்த மொத்த பொருளையும் கோபம் தீர கலைத்து எறிந்தான். பொருட்களை உடைத்து போட்டான். மேஜைகளை கவிழ்த்து போட்டு மின்சார விளக்குகளை அடித்து நொறுக்கினான்.
அப்படியும் அவன் ஆத்திரம் திராமல் பைத்தியம் போல் வெளியில் ஓடி வர,
இங்கு வேலை செய்தவர்கள் பயத்தில் வேறு வேறு திசையில் ஓடினர்.
ஒரு நொடி அப்படியே நின்று பார்த்தவன் சிதறி ஓடிய அடிமை கூட்டத்தை எதுவும் செய்யாமல் அதே வெறித்த பார்வையோடு அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
அங்கிருந்து கிளம்பியவன் நேரே ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த குளக்கரையின் பக்கத்தில் வந்தான். அக்குளத்தில் ஒரு பக்கம் இருந்த படித்துறையில் வந்து அமர்ந்தான். ஒவ்வொரு இடமாக கண்ணீர் வடிய பார்த்தான். பழைய நினைவுகள் நெஞ்சில் ஓடியது போல குதூகலமாய் சிரித்தான். சிறிது நேரத்திலேயே அவன் பக்கத்தில் இருந்த குடிசை வீட்டை பார்த்தான். மெதுவாக எழும்பி அதன் அருகில் வந்தான். வாசலை திறந்தான். அவனுக்கு சொந்தமானது போல உள்ளே சென்றவன் கவிழ்த்து வைத்திருந்த பானை மேல் அமர்ந்தான். வீட்டை சுத்தி சுத்தி பார்த்தான்.
அது ஒரு சின்ன ஓலை குடிசை தான். ஆனால் ஒரு அறை, ஒரு கிச்சன், ஒரு ஹால் என தென்னை ஓலையால் வீடு அமைக்கப்பட்டு இருந்தாலும் அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓலைகள் எல்லாம் காய்ந்து போன நிலையில் இருந்தாலும் கட்டிய அழகும் வடிவமைத்த முறையும் மிக நேர்த்தியாக இருந்தது. இயற்கையின் எழில் கொஞ்சும் இடத்தில் மிக அழகாக இருந்தது அந்த குடிசை வீடு.
பல நாள் வீட்டில் யாரும் இல்லாதது போல் சில இடங்களில் ஓலையை கரையான் சாப்பிட்டு இருந்தது. நடுக்கம்பு மட்டும் லேசாக நகர்ந்திருந்தது. வலையான் கூடுகட்டி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது. அதை தவிர்த்து பார்த்தால் யாரோ அங்கு பல நாள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பண்ட பாத்திரங்கள்,பானை சட்டிகள், சாக்கு மூட்டைகள் எல்லாம் இருந்தது. ஆணுக்கான சில துணிகளும், பெண்களுக்கான துணியும் ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்படி என்றால் ஒரு குடும்பம் அதுவும் இளம் ஜோடி ஒன்று வசித்திருப்பது போல் இருந்தது.
உள்ளே சுற்றி சுற்றி பார்த்த முருகன் எதையோ நினைத்து முகத்தில் அறைந்து கொண்டு அழுதான். சில இடங்களில் போய் நின்று மலக்க மலக்க விழித்தான். சில பொருட்களை கையில் எடுத்து பார்த்து கலங்கினான். சில நேரம் பொறுக்க முடியாமல் அலறிக்கொண்டு ஓடினான்.
பின் வெளியே வந்தவன் அந்த குடிசையின் முன் இருந்த பாறையில் அமர்ந்தான். எதையோ பார்த்தவன் முகம் கொடூரமாய் மாறியது. முன்னால் இருந்த சட்டி, பானை எல்லாம் அடித்து நொறுக்கினான். அதன் பின் மறுபடியும் அப்பாறையில் அமர்ந்து கொண்டு கலங்கும் கண்ணோடு…
“மாமா வந்துட்டேன். நீ எங்கடி போனா…”
என முனங்கையிலே அவன் கண்கள் கலங்கின.
“மாமாவுக்கு பசிக்குதுல ஆத்துல போய் மீன் பிடிச்சு கொண்டு வரட்டுமா? ஆக்கி போடுறியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு. மாமாவோட வயிற்றை பாரு ஒட்டி போயிருக்கு.”
என தன் வயிற்றில் தடவியவாறு அருகில் யாரோ நிற்பது போல பேசிக்கொண்டே இருந்தான். இடையிடையே சிரித்தும் கொண்டான். சிலநேரம் அணைத்தும் கொண்டான். சில நேரம் ஏங்கியும் நின்றான், சில நேரம் தாங்கியும் கொண்டான்.
சில நேரங்களில் பேசிக்கொண்டே இருந்து ஓடி, போக்கு காட்டவும் செய்தான். சில நேரம் கண்களை பொத்திக்கொண்டு எண்ணவும் செய்தான். வித்தியாசமாக எதையெதையோ செய்தவன், வாசலை திறந்து உள்ளே சென்றான். உள்ளே சென்று எதையோ கூர்ந்து கூர்ந்து பார்த்தவன் சிறிது நேரத்தில் அங்கிருந்து ஓடினான். வெளியில் வந்தவன் தோட்டத்திலிருந்து ஒரு பூவை பறித்துக் கொண்டு மறுபடியும் உள்ளே ஓடினான்.
ஒருவரின் தலையில் சூடுவது போல அவன் செயல் இருந்தது. ஆனால் பூ அவன் கால் மாட்டில் விழுந்தது.
“என்னடா மாமா எவ்வளவு ஆசையா வெச்சு விட்டேன். இப்படியா கீழ போடுறது.”
எனக் கோபித்தும் கொண்டான்.
அப்புறம் கையில் எடுத்தவன் மறுபடியும் சூடிக்கொண்டு,
“சூப்பரா இருக்கு…”
என நெட்டி முறித்தான். பின் யாரையோ அழைத்து வருவது போல வெளிவந்து நடனமாட ஆரம்பித்தான்.
“உயிரும் நீ பெண்ணே! என் உலகம் நீ! காதல் நீ! உயிரே! என் களஞ்சியமும் நீ! வாழும் நாளெல்லாம் உன் நினைவலையில் வாழத் துடிக்கும் ஒரு ஜீவன் நான்! தாழும் போது கூட உன் மலர் மடியில் தலை சாய்க்க ஏங்கும் மலர் கொடி நான்.”
பாடிக்கொண்டே ஆடுவதும் சிரிப்பதுமாக இருந்த முருகனின் சிரிப்பு சத்தம் அடங்குவதற்கு முன் அவனை சுத்தி வளைத்தது ஒரு கூட்டம். நிச்சயம் அவன் இதுவரை புரட்டி எடுத்த வீட்டிலிருந்து தான் வந்திருப்பார்கள் என தோன்றியது.
ஆனால் வந்த ஆபத்து தெரியாமல் அவன் யாருக்கோ சாப்பாடு ஊட்டுவது போல வெறும் கையை நீட்டிக் கொண்டு எதையோ பேசி கொண்டு இருந்தான்.
“என்னடா எங்களை கண்டதும் பயந்துட்டு பைத்தியம் மாதிரியா நடிக்கிறியா?”
என ஒருவன் ஓடிவந்து அவன் கன்னத்தை குத்த, ஒரு செக்கென்ட் முருகனின் கண்கள் திரும்பி, தீயை கக்க, பின் திரும்பி பழையபடி சிரித்துக் கொண்டு உணவு ஊட்ட… வந்தவன் திகைத்து கொண்டு பின் வாங்கினான்.
அடுத்தவனோ இது தெரியாமல் …
“ஒரு பத்து ஆளை சாய்ச்சுட்டா நீ பெரிய வீரனா ? உன்னை அடிச்சு இழுத்துட்டு போய் என் முதலாளி முன்னால போடல. நான் வரதன் இல்லடா.”
எனத் தொடையை அடித்துக் கொண்டு முன்னால் வந்தான். ஆனால் முருகனோ வேறொரு உலகில் வேறு யாருடனோ சஞ்சரித்திருப்பது போல குதூகலத்தில் சஞ்சரித்திருக்க,
வந்த ஆசாமி அவனை மிதித்து தள்ள,
மிதித்த அவர் காலையே பிடித்து சுற்றி எறிந்து ஆக்ரோஷமாய் கத்தினான் முருகன். அந்த நொடி அவன் முகத்தில் தெரிந்த மாற்றம் அவன் குரலில் தெரிந்த கொடூரம் எல்லாம் வந்தவர்களை திகில் உறைய செய்ய,
“என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க. வாங்கடா… வாங்க. உங்க ஒவ்வொருத்தனையும் கூறு போட தான் வந்தேன். வாங்கடா… வாங்க .
என அவன் கொக்கரிக்க அவன் சொல்லும், செயலும், உடல் மொழியும் அனைவரையும் கலவரப்படுத்த, இரண்டு அடி பின்வாங்கி நின்றனர். முரட்டு குதிரை ஒன்று சிலிர்த்து நின்றது போல இருந்தது அவன் தோற்றம். ஒரு பந்தை எப்படி எட்டி உதைப்போமோ அதே மாதிரி முருகனின் காலில் பந்தாக அனைவரும் உருள, ஒரு கட்டத்திற்கு மேல வந்த ஒருவரால் கூட எழுந்து அங்கே நிற்க வே முடியவில்லை.
இதுவரை வெறிகொண்டு பந்தாடிக் கொண்டிருந்த முருகன் அதே வெறியோடும் அதே சீற்றத்தோடும், அதில் அடிபட்டு மண்ணில் வலியோடு புரண்டு கொண்டிருந்த ஒருவனின் அருகில் வந்து, கீழே கிடந்தவரை தூக்கி பிடித்து நிற்க வைத்து அடி அடி என அடித்தான்.
அவன் தேடியதில் இவனும் ஒருவன் போல… இதுவரை அடித்த அடி எம்மாத்திரம் என்று சொல்லும் அளவு அவனுக்கு தர்மா அடி விழுந்தது. ஒவ்வொரு எலும்பையும் முறித்தான். கால்களை மிதித்து ஒடித்து அடிசாய்த்தான். வாயைப் பிளந்து இரு தாடையையும் பிரிக்க பார்த்தான். அந்த கோரமான நிகழ்ச்சியை பார்க்க சகிக்காமல் பக்கத்தில் அடிவாங்கி உருண்டு கொண்டிருந்தவன் கூட தன் உடலை உருட்டியே வேறு பக்கம் சென்று பதுங்கிக் கொண்டான்.
பயத்தோடு வெலவெலத்து கொண்டு முருகனின் கையில் இருந்த அடியாள் அவனை கையெடுத்து கும்பிட, சட்டென அவனை கீழே போட்டவன்.
அப்புறம் கையை தலைக்கு பின் கட்டிக்கொண்டு வான்நோக்கி முகத்தை உயர்த்தி கண் மூடி அப்படியே அமர்ந்து விட்டான். பத்து நிமிடம் எந்த அரவமும் இல்லாமல் குத்துகால் போட்டு அமர்த்தவன், சிறிது நேரத்திலேயே ஆவேசமாகி கடைசியாக நொறுக்கி போட்ட அடியாளின் நெஞ்சில் மிதித்துக் கொண்டு,
உச்சபட்ச கோபத்தோடும் வெறியோடும் .
“என் மைனா எங்கடா ???? என் மைனா எங்க?” என்றான். பற்களை நரநரவென கடித்துக்கொண்டு,
அந்தப் பெயரை கேட்டதும் அடியாளின் கண்கள் பயத்தில் விரிய,
“சொல்லுங்கடா என் மைனா எங்க? அவளை என் கண்ணுல காட்டுற வரை உங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன்.”
அவன் கர்ச்சனையும், ஆவேசமும் கோபம் கொண்ட கருப்பண்ண சாமி கம்போடும் வேலோடும் சூரத்தாண்டவம் ஆடுவது போல் இருந்தது.
அத்தியாயம் தொடரும்…
Tamil Thriller Novel



