கணவனை இழந்த பெண்ணின் மனவலி featured image

கணவனை இழந்த பெண்ணின் மனவலி|Sad Kavithai in Tamil

இருளும் வந்ததென் இளமை கொன்றது.
நிலவும் வந்ததெனூடே அவர் நினைவும் வந்தது
பஞ்சு மெத்தையும் முள்ளாய் போனது
படுத்துறங்க முடியாமல் பெண்மையும் பரிதவித்து நின்றது.
என்றும் பரிதவித்து நின்றது.

விரலுக்குள் விரல் கோர்த்த நொடிகள் வந்தது,
விடியல் வரை அவரோடு கலந்ததென் நெஞ்சில் வந்தது
பகலெல்லாம் பார்க்கும் இடத்தில் காட்சி தந்தது
பெண்ணவளை உருகுலைய வைத்தது
என்றும் உருகுலைய வைத்து.

விடியல் ஒன்றும் விசித்திரமாய் சென்றது
இரவு கூட சித்திரவதையை தந்தது
பார்க்கும் முகத்தில் உன் உரு தேடி களைத்தது
பாரில் தனிமையில் பைத்தியம் பிடித்தது
எனக்கோ பைத்தியம் பிடித்து …

சின்ன சின்ன நினைவுகள் எனை உரசி சென்றன.
வண்ண வண்ண நிகழ்வுகள் வசமிழக்க வைத்தன.
முத்து முத்து சிரிப்பு என் உயிரை குடித்தன.
பத்து வருடமாகியும் உன் நியாபகங்கள்
எனை சிதைத்து செல்கின்றன.

Subscribe to Gnana Selvam Kavithaigal
cropped circle image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!