பிறந்த நாள் கவிதை
என் வாழ்வில் வந்த தேவதையே
என் தாய்மையின் தாரகையே…
நின் பிஞ்சு பாதம் பரிசித்த நொடி
என் நெஞ்ச கூடு எரிந்ததடி…
உன் மலர்ந்த இதழ் விரியையிலே
என் மனமும் அன்று குளிர்ந்ததடி…
நீ பிறந்த நொடி
என் வாழ்வே நிறைந்தடி…
உன் வரவு என்னில்
புது உணர்வை விதைத்ததடி…
நீ என் வாழ்வின் பொக்கிஷம்
உன் பிறப்பு இல்லையெனில்
ஏது என் வாழ்வில் உல்லாசம்…
நீ மலர்ந்தால் மலர்ந்து…
நீ துடித்தால் துடித்து…
நீ கரைந்தால் உன்னில் நான் கலந்து நின்ற நொடிகள் தான்
என் வாழ்வில் ஏராளம்…
உன் மலர் முகத்தில் மண்டியிட்டேன்
உன் கலங்கி விழிக்குள் கால் பாதித்தேன்.
என் செல்லமே
உன் வளர்ச்சியை
என் வளமாக்கி…
உன் தளர்ச்சியை
என் தோல்வியாக்கி …
உன்னில் நானாகி வாழ்ந்த நாளெல்லாம்…
என்னில் என்னை உணர வைத்தாய்…
வலி கூட உன் மகிழ்வென்றால்
தலை தாழ்த்தி ஏற்று
என்னையே நிற்க வைத்தாய்…
இன்று உன்னை விட என் மனம்
அகமகிழ்கிறது….
நீ சீரும் சிறப்புமாய்…
வளர்ச்சியும் வளமுமாய் வாழ…
என் மனம் துடித்து வேண்டுகிறது.
பிறந்து விட்டோம் என்றில்லாமல் …
பிறப்பின் சரித்திரத்தை,
இப்புவியில் பதித்து செல்ல…
உன்னை பெற்ற தாய்மையின் பூரிப்பில்
மனதார வாழ்த்துகிறேன்.
பல ஆண்டு இம்மண்ணில் வாழ்ந்து
பல நூறு பேர் புகழ.
பண்போடு வாழ
மனதார வாழ்த்துகிறேன்.
என் இதய கூட்டில்
என்றும் உயிர் வாழும் உன்னை
உளமார வாழ்த்துகிறேன்.
இன்று போல் என்றும்
இம்மகிழ்வு நிலைத்திருக்க,
இறைவனை பிராத்திக்கிறேன்.
இன்றும் உன் அன்பிற்காய்
உருக்குலைந்து தவிக்கிறேன்


birthday kavithai for baby, Birthday kavithai tamil, birthday kavithaigal, kavithai piranthanal valthu, Piranthanal Kavithai tamil, piranthanal valthukkal, piranthanal valthukkal Kavithai in tamil, special birthday wishes in tamil, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், குழந்தை பிறந்த நாள், குழந்தை பிறந்த நாள் கவிதை, பிறந்த நாள் கவிதை, பிறந்தநாள் கவிதை in tamil, பிறந்தநாள் கவிதை தமிழ், பெண் குழந்தை பிறந்தநாள் வாழ்த்துக்கள், மகள் பிறந்த நாள் கவிதை

