வணக்கம் வாசகர்களே!
இருட்டு பகுதியில் முன்பின் தெரியாத ஒரு இளைஞனோடு அதிலும் நெருங்கி அமர்ந்தவாறு, அடுத்து நடந்தது என்ன?
கட்டுடல் காளையவன் கைவளைக்குள் கொடி முல்லை போல் சுருண்டிருந்த தன்னை ஒருமுறை நடுக்கத்தோடு பார்த்தாள் பெண்ணவள். காற்று கூட போக முடியாத அளவு அவனில் நெருக்கி பிடித்திருந்தான். அவன் மேனியின் வாசம் அவள் நாசியை தீண்டியிருந்தது. அவன் கை வளைக்குள் அவள் உடலே ஆடிக் கொண்டு இருந்தது. அவள் முகத்தையோ அவன் மார்பு பொதிந்திருந்தது. கொஞ்சம் கூட நகர்த்த முடியாத அளவு இறுக்கி பிடித்திருந்தது அவனின் இரும்பு போன்ற கரம். பயம் கலந்து அவனை பார்த்தாள்.
அவன் பார்வை அவளில் இல்லை. எதையோ செய்ய முயல்வது போல் அவன் செயல் இருக்க, நடுங்கி போனவளாய், தன்னை மீட்டெடுக்க போராடினாள்.
ஆனால் ஒரு இஞ்ச் கூட அவனில் இருந்து நகர்த்த முடியவில்லை. அப்படி இருந்தது அவனின் இரும்பு பிடி. பயத்தில் அவள் உடல் வெலவெலத்து போனது. கண்கள் இரண்டும் வெளிறி போய்விட்டது. இப்படி ஒரு செயலை எதிர்பாராததால் உண்டான அதிர்வோடு அவனில் இருந்து தன்னை மீட்டெடுக்க தன் வலிமை கொண்ட மட்டும் போராடினாள். ஆனால் அந்த பித்தனின் பிடி இன்னுமே இறுகி கொள்ள, கூடவே அவன் தன்னை எங்கோ அவசரமாக நகர்த்தி கொண்டு போவது போல உணர்ந்தாள். இதயம் தாறுமாறாக அடிக்க தொடங்கியது.
அவள் திமிரி அவனில் இருந்து வெளிவர துடித்த நேரம், அதை சற்றும் பொருள்படுத்தாதவன் போல, மொத்தமாய் அவளை பொதிந்தவாறு அவளை நகர்த்தி கொண்டு,அந்த மேஜையின் அடியில் போய் அவசரமாக பதுங்கி கொண்டான் அந்த வளர்ந்த மனிதன், ஒன்றும் புரியாமல் அவள் அவனிலிருந்து இப்போதும் தன்னை மீட்டெடுப்பதற்கு போராடினாள்.
அவன் கை வளைக்குள் இருந்த தன் உடலை நெளித்து வளைத்து அவன் பிடியில் இருந்து உருவி எடுக்க அவள் முயன்ற போது,
அந்த அறையே நடுநடுங்க தொடங்கியதை உணர்ந்தாள் அவள். ஒரு நொடி நிலமை முழுவதுமாக அவளுள் உறைக்கும் முன் அந்த கட்டிடம் படபடவென இடிந்து விழுந்து அவர்கள் பதுங்கியிருந்த மேஜையை மூடிக் கொண்டது மண் புழுதி.
அவள் இதயமே ஒரு நொடி நின்று போனது. நடந்து விட்டிருந்த விபரீதம் உறைக்க பயத்தில் வெலவெலத்து போனவள் அவளையும் மீறி இப்போது அவனுள் அவளாகவே மொத்தமாக புதைய தொடங்கினாள். தன்னை நெருக்கியவனை இந்த நொடி அவளுமே நெருக்கி பிடித்து கொண்டாள். பொல பொலவென ஏதோ இடிந்து விழுவது போன்ற சத்தம். காதுகளை பயத்தில் இறுக மூடிக் கொண்டாள்.
நில சரிவு. எப்படி நடந்தது. யோசிக்கும் முன் எல்லாமே நடந்து முடிந்து விட்டிருந்தது. இரண்டு தினமாய் விடாமல் பெய்த மழை கொடுத்த வரபிரசாதமாய் இருக்க வேண்டும். மலை மீது இதுவரை இயற்கைக்கு ஈடு கொடுத்து படு கவர்ச்சியாய் காண்போரை கவர்ந்திழுத்து கொண்டிருந்த அந்த கட்டிடம் மொத்தமாய் இடிந்து, அவர்கள் இருந்த இடத்தை சுற்றி மண்குவியலால் மூடிவிட்டது. சட்டென ஒரு கும்மிருட்டு. பக்கத்தில் எதுவுமே கண்ணுக்கு புலப்படாத கும்மிருட்டு. பயத்தில் அவள் மனது எகிறி கொண்டிருந்தது. உதடுகள் அவளையும் மீறி தந்தியடிக்க தொடங்கியது. உடம்பு தூக்கி தூக்கி போட்டது. அது அவனாலும் உணர முடிந்தது. அவனுமே அந்த நொடி பயத்தின் விழிம்பில் தான் இருந்தான். அந்த இருட்டில் அவர்கள் நெருக்கம் கூட இருவருக்கும் உறைக்க முடியாத அளவு இருவருள்ளும் பயம் மட்டுமே விரவி நின்றது. அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாத ஒரு உறைந்த நிலை.
பிழைப்போமா? இதிலிருந்து காப்பாற்றப்படுவோமா? என கேள்விகள் கூட அவர்களுக்குள் எழவில்லை. ஆனால் மனதின் அடியில் ஒரு மயான அமைதி இருவருள்ளும் பீதியை கிளப்பி விட்டிருந்தது.
சட்டென ஏதோ பெயர்ந்து விழுந்தது போல ஒரு சத்தம். திடுக்கிட்டு போனாள் பெண்ணவள். பயத்தில் அவன் சட்டையை தான் இறுக்கி பிடித்திழுத்து கொண்டாள். அவள் கண்களோ திறக்க பயந்து இறுக மூடி அவன் மார்பிலே முடங்கி கொண்டது.
அவர்கள் இருந்த இடம் நகர்வது போல ஒரு பிரமை ஏற்பட இப்போது மொத்தமாக அவனுள் அவளே தன்னை ஒளித்து கொண்டு நடுநடுங்க ஆரம்பித்து விட்டாள். அந்த நடுக்கம் அவனுள்ளும் அதிர்வை கொடுத்தது. ஆனாலும் அதை உணரும் நிலையில் அவனும் இல்லை. பயம். இருவருக்குள்ளும் பயம். இதய துடிப்பு ஒருவர் மற்றவர்களுக்கு கேட்கும் அளவு பயம்.
அதிலும் இடை இடையே கேட்ட சத்தங்கள் அவர்கள் ஈரகுலையையே நடுங்க வைத்து கொண்டிருந்தன. நல்ல வேளை அவர்கள் இருந்த இடம் அசைந்ததே தவிர அது எப்போதும் நகரவேவில்லை. அந்த சின்ன இடத்தில் சிறிது கூட இடைவெளி இன்றி இருவரும் மலக்க மலக்க விழித்தவாறு அமர்ந்திருந்தனர். சுற்றிலும் கும்மிருட்டு. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாத அளவு கும்மிருட்டு. அந்த கும்மிருட்டில் எதுவும் செய்ய முடியாமல் உறைந்து போய் தான் இருந்தனர் இருவரும்.
அதே நேரம் அருகில் எதுவோ நகர, இறுகி இருந்த அவன் கையை மறுபடியும் இறுக பற்றி பிடித்து கொண்டாள் ஓவியா.
நாலு பக்கமும் மண் நிறைந்து புழுதி பறந்து மூச்சு முட்டத் தொடங்கியது. இருவராலும் கண்களை திறக்க கூட முடியவில்லை. அப்படியே அந்த மேஜையின் அடியிலே சுருண்டு கொண்டனர். எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து அங்கேயே இருந்தார்களோ தெரியவில்லை.
கொஞ்சமாக அவள் மனம் நடந்தவற்றை ஜீரணித்து நார்மலாகும் போது தான், அடுத்த ஆடவனுடன் நெருங்கி இருப்பது அவளுக்குமே உறுத்த ஆரம்பித்தது. நிமிர்ந்து பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. கொஞ்சமாக நகர்ந்து அமர முயன்றாள். முடியவில்லை. அவன் மூச்சு காற்று முகத்தில் மோதி நின்றதை வைத்தே தான் அவனுள் எவ்வளவு நெருங்கி நிற்கிறோம் என உணர்ந்து கொண்டாள்.
லேசாக வெட்கம் வந்தது. கூடவே பயமும் வந்தது. மெல்ல அவனில் இருந்து தன்னை பிரித்தெடுக்க முயன்றாள். மெல்லமாய் தன் உடலை வளைத்து பார்த்தாள். முடியவில்லை. அவன் இரும்பு பிடி அந்த அளவு அவளை நெருக்கி பிடித்திருந்தது.
அவன் தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என்பதை கணிக்க முடியவில்லை. சுற்றி இருக்கும் சூழலை அனுமானிக்க முடியவில்லை. ஆனால் படபடத்த விழியோடு நாலாபுறமும் அவள் பார்வை பரபரப்போடு திருப்பியது. இதயம் அதிவேகமாக துடித்தது. கூச்சமும் பயமும் அவளை தவிக்க செய்தது. அவளின் உடல் அசைவை உணர்ந்தவன்,
காற்றுக்கும் கேட்காத குரலில், அவள் காதுமடல் அருகில் குனிந்து,
“ஆடாத. இப்போ எப்படியான சூழல்ல இருக்கோம்னு தெரியல. ஒரு நிமிஷம் அப்படியே இரு. நான் செல்லை எடுத்து டார்ச்சை ஆண் பண்ணுறேன்.”
அவனின் மெல்லிய குரல் அவள் செவிப்பறையை தீண்டியதும் சிவந்து போனவள், அவன் மூச்சு காற்று சுவாசத்தில் நெளிந்தவாறு,
அட இவனுக்கு இம்புட்டு மென்மையா பேச தெரியுமா?
ஒரு நொடி தான் யோசித்தாள். மறுநொடி, அதே மென்குரலில்,
“ம்….”
என்றவள். அடுத்து பேசாமல் அமைதியாக,
அவன், அவளை இறுக்கி பிடித்திருந்த தன் வலது கரத்தை எடுத்து பாக்கெட்டினுள் மெல்ல நகர விட்டான். அதனுள் இருந்த செல்லை எடுத்து அதை ஆண் செய்து ஒளியை பாய்ச்ச… அந்த சிறு வெளிச்சத்தில் ஓவியாவிற்கு அவனின் நெருங்கி நின்ற முகம் தான் தெரிந்தது,
அவ்வளவு நெருக்கத்தில் அவனை கண்டதும், பெண்மையின் நாணமும் தவிப்புமாய் தன்னை நகர்த்த பார்க்க, அவனுமே அவளை தான் பார்த்தான். அவனின் ஊடுருவும் பார்வையில் நெளிந்தவள் மனமோ…
இப்போ… எதுக்கு இந்த பார்வை. கொஞ்சம் நகர விட்டால் தான் என்ன?
எண்ணியவாறே அவளை நெருக்கி பிடித்திருந்த அவன் கரத்தை பார்த்தாள், இப்போது அவன் பார்வையும் அந்த இடத்திற்கே போனது.
அவனும் சட்டென தன் கையை தளர்த்தி மெல்லமாய் அவள் நகர விட்டவாறு விழியை வேறெங்கோ மோத விட்டான். அந்த சிறு வெளிச்சத்தில் வெட்கத்தோடு விலகி அமர்ந்தாலும், அவன் மூச்சு காற்று படும் அளவு தான் அவளால் விலக முடிந்தது. அவ்வளவு தான் அந்த மேஜையின் அடியில் இடம் இருந்தது.
அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவ்வளவு நெருக்கத்தில் இருவராலும் நார்மலாக இருக்க முடியவில்லை. சிலிர்ப்பும் தவிப்புமாக அவள் பார்க்க, எதுவென்று சொல்ல முடியாத ஒரு முக பாவனையில் அவன் பார்த்தான்.
அவன் முகத்தில் எதையும் அவளால் படிக்க முடியவில்லை. ஆனால் அந்த காந்த கண்கள் அவள் விழியிலே கூர்தீட்டி நிற்க கண்டதும் அவளையும் மீறி உடல் ஒரு கணம் சிலிர்த்து மூக்கு விடைத்தது. மெல்ல தலை தாழ்த்தி கொண்டாள். ஆனாலும் அவன் பார்வை அவளிலிருந்து அகலாதிருக்க கண்டதும் மெல்லமாய் கீழ் பார்வை மறுபடியும் பார்க்க, இப்போதும் அந்த விழி அவளிலே இருந்தது. சட்டென ஒரு விதமான படபடப்பு. அந்த படபடப்பு அதிகரிக்க அதிகரிக்க பயத்தோடு நாலாபுறமும் பார்வையை மோத விட்டாள்.
அந்த மெல்லிய வெளிச்சத்தில் பெரிதாக எதுவும் அவளுக்கு தெரியவில்லை. அவள் கண்ணுக்கு தெரிந்ததே அவளை நெருங்கி நின்ற அவன் உருவம் மட்டும் தான். அதுவே அவஸ்தையை கொடுத்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாது.
அந்த நெருக்கத்தில் இருவரின் உணர்ச்சியை இருவரும் தெரிந்து கொள்ளாத முடியாத அளவு மெல்லிய இருள் போர்த்தி நின்றாலும் அவளின் பார்வை தன்னில் படுவதையும் அவனின் பார்வை தன்னில் படுவதையும் ஒரு அவஸ்தையோடு தான் அனுபவித்து நின்றனர் இருவரும்.
நேரம் போக போக… அவளுள் பயம் மூண்டெழுந்தது. ஆரம்பத்தில் கட்டி கொண்ட போது தோன்றாத ஏதேதோ உணர்வுகள் அவனை விலகி நிற்கும் இந்நேரம் அவளை ஆட்டி படைக்க தொடங்கியது. அவனிலிருந்து நீங்கி விட்டாள். ஆனால் பயத்திலிருந்து நீங்க முடியவில்லை. நாலாபுறமும் பயத்தோடே பார்வையை செலுத்தினாள்.
எங்கெங்கோ அலைந்த பார்வை கடைசியில் அவன் பக்கம் வர, இப்போதும் அவளையே குறுகுறுவென்று பார்த்து கொண்டிருந்தான் முகுந்தன்.
அந்த காந்த கண்கள் அவளை என்னவோ செய்தது. சொல்ல முடியாத ஏதேதோ உணர்வுகள் நொடி பொழுதில் உற்பத்தியாகி அவள் மனதை அலக்கழித்தது. படபடப்பில் அவள் இமை அசைவோ நொடியில் மில்லியன் முறை என்றானது. தயங்கியவாறே அவனை கீழ் பார்வை பார்த்தாள்.
கண்ணை பாரு. காந்த கண்கள்.
ஒரு நொடி தான் பார்த்தாள். அதன் பின் பார்க்க முடியவில்லை. அந்த கண் அப்படி என்ன சொல்கிறது என்பதை அவளால் படிக்க முடியவில்லை. கூடவே அவன் உதட்டு நெளிவில் ஏதோ ஒரு விசித்திர புன்னகை இருப்பது போல் தெரிந்தது. பயம் கலந்து அவனை பார்த்தாள்.
இவன் ஏன் இப்படி பாக்குறான்.
என்று மட்டும் தான் யோசிக்க முடிந்தது. சட்டென தன்னை பார்த்தாள். அவசரமாக தன் ஆடைகளை சரி செய்ய அவள் முனைந்த போது, ஒரு கோபமான பார்வையை அவள் மீது வீசி கொண்டு, சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
தன் மனதை படித்திருப்பானோ…
யோசித்தவள்,
ஐயோ கடவுளே இப்படி வந்து மாட்டிகிட்டேனே. இவன் எப்படிப்பட்டவனோ? கடவுளே என்னையும் என் பெண்மையையும் காப்பாற்றி விடு. கண்மூடி வேண்டினாள். பார்த்த நொடியில் இருந்து தப்பானவனாக தெரிந்தவனுடன் தனிமை அவளுக்கு கொடுமையாக இருந்தது. இதுல இருந்து எப்படி தப்பிப்பது. இப்போதும் பரபரப்போடு அவள் கண்கள் நாலா பக்கமும் தான் ஒடியது. பார்வை சென்ற இடம் எல்லாம். மண்குவியலாய் நிறைந்து கிடக்க,
கலவரத்தோடு பார்த்தாள்.
இதுல இருந்து எப்படி தப்பிக்கிறது.
அவள் உடலசைவை வினோதமாக பார்த்த முகுந்தன்.
“என்ன?”
என்பது போல் பார்வையால் கேட்டான். அவன் விழியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தடுமாறியவள்,
“ம்கூம்…”
என இருபுறமும் தலையசைத்தாள்.
முகுந்தன் ஒரு நிமிடம் முழுதாய் அவளை பார்த்தான்.
பின் எதுவும் பேசாமல் திரும்பி கொண்டான். கொஞ்ச நேரம் தான் அப்படியும் இருக்க முடிந்தது.நேரம் ஆக ஆக இருவருக்குமே மூச்சு முட்ட ஆரம்பித்தது. இப்படியே இதற்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என உணர்ந்த போது அந்த மேஜையை விட்டு ஏதாவது ஒரு பக்கம் நகர முடியுமா என ஆராய வேண்டி இருந்தது. நாலு பக்கமும் பொதிந்தது போல் மண் குவியல்கள். அதை எப்படி நகர்த்துவது என போராட தொடங்க, அவனின் அந்த சின்ன நெளிவு அவளை சங்கடப்படுத்தியது. அவளின் முக மாற்றத்தை பார்த்தவன்,
ஒரு நொடி அவளுள் பார்வையை செலுத்தி விட்டு
ஆடாம இருக்க முடியாதா?
என அதட்ட, பயத்தில் தன் மான் விழியை அங்குமிங்கும் செலுத்தினாளே தவிர, வேறு எதுவும் பேசவில்லை. அவள் விழியை ஒரு நொடி நேருக்கு நேர் பார்த்தவன் பயத்தில் வெளிறி போயிருந்த அவள் முகத்தில் என்ன படித்தானோ எதுவும் பேசாமல் திரும்பி கொண்டான். கையில் இருந்த வெளிச்சத்தை சுற்றி இருந்த மண் குவியலில் செலுத்தி நான்கு பக்கமும் கைகளை தடவி ஆராய தொடங்கினான். எந்த பக்க மண் குவியலை நகர்த்தி கொண்டு முன்னேறுவது என அவனுக்குமே தெரியவில்லை. அந்த இருளில் எந்த தீர்மானமும் எடுக்க முடியாமல் தடுமாறினான். அந்த ஒளி மண்குவியலில் பட்டு ஓவியாவின் முகத்தில் எதிரொலிக்க, சட்டென அவன் பார்வை அவனை அறியாமலே அவளில் சென்றது.
செல்லின் டார்ச் வெளிச்சம் மூடிய மண் குவியலில் பட்டு அவள் முகத்தில் எதிரொலித்த போது அந்த முகம் தங்கமாய் மின்னியது. அந்த முகத்தில் அவனுக்குமே என்ன தெரிந்ததோ…சென்ற அவன் பார்வையை திருப்ப முடியாதவன் போல அவனுமே அவளில் குத்திய தன் கூர்விழியை நீக்கவில்லை. ஊடுருவி பார்த்து நின்ற பார்வையால் சிலிர்த்தவள் உடலே ஆட ஆரம்பித்து விட்டது.
பெண்ணவளின் நெருக்கம் அவனுக்கு இப்போது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். கூடவே அந்த ஒளியில் ஜொலித்து நின்ற அவளின் முக அழகின் வதனத்தில் தன்னை பறி கொடுத்திருக்க வேண்டும். ஒரு நொடி விழி அகலாமல் பார்த்தான். அடுத்த ஆடவனுடன் இவ்வளவு நெருக்கத்தில் அதுவும் போன் வெளிச்சத்தில் தன்னை ஊடுருவி பார்க்கும் அவனின் ஒளி பார்வையில் நார்மலாக இருக்க முடியாமல் அவளும் வெட்கத்தில் நெளிய தொடங்கினாள்.
அவளின் உடல் அசைவில் தான் அசைய, உணர்வு வந்தவன் போல ஒரு முறை அவளை ஆழமாக பார்த்து விட்டு மறுபடியும் திரும்பி கொண்டான்.
அதன் பின் தான் ஓவியாவுக்கு மூச்சே வந்தது. கையால் தடவி, ஏதாவது பக்கத்தை தள்ளி அப்புறப்படுத்த முடியுமா என பார்த்தவன், அதற்கான சாத்திய கூறு இருப்பதற்கான வழி தெரியாத போது,
“இங்க என்ன படமா காட்டுறாங்க. இப்படி பார்த்துட்டு இருக்கா. இதுல இருந்து தப்பிக்க வழி இருக்காணு பாரு. இல்ல மூச்சு முட்டியே சாக வேண்டியது தான்.”
என படபடக்க,
அவன் அதட்டலில் திடுக்கிட்டவள் தன் மான்விழியை பயத்தோடு அங்குமிங்கும் மோத விட்டவாறு திரும்பி நாலாபக்கமும் சுற்றி பார்க்க தொடங்கினாள். கூடவே மனது அவனை திட்டி தீர்த்தது.
முசுடு… முசுடு… இதுக்கு பாசமா? அன்பா? அமைதியா? பேசவே தெரியாதா? இப்படி மாட்டிட்டு இருக்கும் போதாவது தன்மையா பேச முடியாதா?
மனதுக்குள் அங்கலாய்த்தாலும் வெளியில் எதுவும் சொல்லாமல், உடலை மெல்லமாய் திருப்பி பார்வையை மண் குவியலில் செலுத்திய நேரம்,
“சுத்தம்…”
என சத்தமாக சொன்னவன், தன் மீது மோதி நின்ற அவளை பார்த்தவாறே,
“வேணாம். நீ அப்படியே இரு. நான் பாத்துகிறேன்.”
என அவன் உடலை வளைத்த போது அவளும் வளைந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். அப்படி வளைத்தவள் பிடிமானம் இல்லாமல் விழ போக, சட்டென அவன் கழுத்தை இரு கையாலும் கட்டி கொண்டாள்.
அவளின் திடீர் அணைப்பில் அதிர்ந்தவன்
இது என்னடா சோதனை என சட்டென திரும்பி அவளை முறைத்தவாறு பார்க்க…
“நான் வேணும்ணு பண்ணல…”
அவள் படபடவென தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“ உன்னை அப்படியே விட்டுட்டு வந்திருக்கணும் இழுத்துட்டு வந்தேன்ல. எனக்கு இது தேவை தான்.”
என தன்னை கட்டுபடுத்த முடியாத அவஸ்தையில் அவன் முனங்க, அவனை பரிதாபமாக பார்த்தவள்,
“யாரு கூட்டிட்டு வர சொன்னா? விட்டுட்டு வந்திருந்தா இந்த அவஸ்தை எனக்கும் இல்ல தானே.”
குழந்தை போல முகத்தை வைத்து கொண்டு
முணுமுணுத்தவளை ஒரு மாதிரி பார்த்தவன்,
“என்ன முனங்கல்”,
அதட்டலாக கேட்க.
“ஒண்ணுமில்ல…”
என கீழ் பார்வையோடு அவள் மெல்லமாய் அமைதியாக, அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்.
“விட்டுட்டு வந்தேன். இப்போ போய் சேர்ந்திருப்பா.”
என்றதும், கண்களை பெரிதாக விரித்தவள்,
“ஐயோ…”
என உதட்டையும் குவிக்க,
அவளின் அப்பாவி முகமும், குவிந்த உதட்டையும் பார்த்தவன் தன்னில் எதுவோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து அவசரம் அவசரமாக தன் பார்வையை திரும்பி கொள்ள, புரியாமல் அவனை வினோதமாக பார்த்தாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel