Christmas Kavithai-6 featured imaged

கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil

மனித நேயம் படைக்க வந்த வேந்தன்.

யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்
மனித நேயம் காக்க வந்த செம்மீன்
பார்போற்றும் கன்னி வயிற்றுதித்த பாலன் – மனித
பாவகறை போக்க வந்த குணசீலன்…

சிங்கார தொட்டினிலே சீராட வேண்டியவன் – பசு
மாட்டு கொட்டையிலே கண்ணமர்ந்த தேவனவன்…
நாதியற்றோர் நலிந்தோரை தேற்றிடவே – நல்
நாயகன் யேசு பிறப்பெடுத்தார்…

துன்பமுற்றோர் துயர் துடைக்க முயன்றார் – வாழ்வில்
துயருற்றோர் மத்தியில் உழன்றார்…
நித்தம் மரியின் மடியில் வாழ்ந்தார் – என்றும்
ஏழையோடு ஏழையாக வளர்ந்தார்…

நித்தம் நித்தம் சொல்லி தந்தார் போதனை – அன்பு
மனித நேயம் படைக்க இங்கே வேதனை…
சத்தம் கேட்ட பக்கம் எல்லாம் திரும்பினார்.
சாதிவெறியை எல்லாம் மாற்றினார்…

பகைவரை அன்பு செய்ய சொல்லி – நல்ல
பண்பான அறிவுரை நல்கி
ஏற்றதாழ்வு பேதமையை நீக்கி – என்றும்
ஏழையோடு ஏழையாகி…

தாவீது வழி வந்த மைந்தன் – நல்
மனித குலம் காக்க வந்த வேந்தன்.
தாவீது வழி வந்த மைந்தன் – நல்

Subscribe to Gnana Selvam Kavithaigal
Subscribe to Gnana Selvam Kavithaigal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!