Vayal Veli Kavithai featured image

வயல் வெளி கவிதை | Vayal Veli Kavithai

தென்றலின் அணைப்பில் மெய் மறந்து
தலையசைத்து விளையாடுது நெற்கதிர் – அதை
அலுக்காமல் குலுக்காமல் இங்கு
அணைத்து ஆடுது சூரியகதிர்!

பச்சை கம்பளத்தில் நிலமகளை
போர்த்தி அனைத்தது புல்வெளி – இங்கு
இச்சையோடு பார்க்க தூண்டும்
இதய குடிலாய்லாய் வயல் வெளி!

புல் மணியின் தலைசுமையில்
நெல்மணிகள் நாட்டியமாட அதை
கண்மணிகள் காவியமாக்கி
கவிதை வரியாய் நெஞ்சில் பாட!…

நில மகளின் மடி மீது புகுந்து
விளையாடுது மண்புழு -அங்கு
பயிர்மகளின் வளர்ச்சிக்கு
பங்கு கொடுக்கிற உழவனாகிறது.

தாயின் மடி மீது குழைந்து
தாவியோட துடிக்குது நீர் துவாலை – அதை
வேர் இனங்கள் வளைத்து
உயிர் துடிக்குது நெல்மாலை…

இயற்கை எழில் கொஞ்சும்
இச்சோலை – மனித வாழ்வில்
செயற்கை எத்தனைவரினும்
எழில் பெறுமே பூஞ்சோலை…

Subscribe to Gnana Selvam Kavithaigal
Subscribe to Gnana Selvam Kavithaigal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!