கடலின் அழகை வர்ணிக்கும் தமிழ் கவிதை
கடல் அலைகள் கலங்குகிறதே
யாரை தேடி அலைகிறதோ…
கண்டுபிடிக்க முடியாமல் தான்
கரை தேடி வருகிறதா?
கடல் மடியில் தூங்க தான்
நிலவு மகள் வருகிறதோ…
நிலவு மகளை அணைக்க தான்
கதிரவனை துரத்தியதா?
வானவெளியில் ஆயிரம் ஒளி சிதறங்கள்
கொட்டி தருவதால் தான் சூரியனை அணைக்கிறதோ…
சூரியனை அணைப்பதால் தான்
இருள் வந்து துடிக்கிறதா?
உன்னால் தான்
பகலும் இரவும் பிறந்தனவோ…
பகலும் இரவும் பிறந்ததால் தான்
பூவுலகம் சுழன்றனவா?
முத்தும் பவளமும் மூழ்கியதால் தான்
இத்தனை ஜொலிப்பு பெற்றனவோ…
அத்தனை அழகையும் மொத்தமாய்
கடல் அன்னை தான் கொடுத்தனவா?
கொட்டி கிடக்கும் வளங்களையெல்லாம்
குத்தகைக்கு பெற்றாயோ…
குத்தகைக்கு எடுத்து தான்
வளங்களை திருடி கொண்டாயா?
கடல் மடியில் ஆயிரம் புதையல்கள்
கொட்டி கிடப்பதால் அன்னையானாயோ…
கொட்டி கொடுத்து தான் அத்தனை
உள்ளத்தையும் அள்ளி கொண்டாயோ?
Kadal Annai Kavithai



