வணக்கம் வாசகர்களே!
காதலியின் பிரிவு காதலை உணர வைக்க முகுந்தன் அடுத்து என்ன செய்தான். நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட காதலியை எப்படி கரம் பிடிக்க போகிறான். தெரிஞ்சிக்க கதைக்குள்ள போங்க.
நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட காதலியை எப்படி கரம் பிடிக்க போகிறான்.
“ஏய்… மச்சான். நீ வந்துட்டியா?”
என கேட்டவாறு தான் உள்ளே நுழைந்தான் நளன். இவனை கண்டதும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பழையபடியே தலையை குனிந்தவாறே அமர்ந்து கொண்டான் முகுந்தன். அவன் நிலை பார்த்து, அவன் அருகில் நெருங்கிய நளன் அவன் முன் குத்துகால் போட்டு அமர்ந்தவாறு,
“என்னடா ஆச்சு. ஏன்டா இப்படி இருக்குறா?”
என தாழ்ந்திருந்த தலையை உயர்த்தி கேட்க, ஒரு நொடி அவன் கண்ணை பார்த்தவன்,
“ஒண்ணுமில்ல. நான் நல்லா தான் இருக்கேன்.”
என்றான் குரல் உடைந்தவனாய்…
“ஏன்டா எனட்ட பொய் சொல்லுறா? நீ எப்படி இருப்பாணு எனக்கு தெரியாதா? என்னமோ இருக்கு. ஆனா நீ எனட்ட சொல்லாம மறைக்கிறா?”
“மறைக்க என்ன இருக்கு. நான் தான் தப்பு தப்பா நினைச்சி தப்பு தப்பா முடிவெடுத்துட்டேன் போல இருக்கு…”
“மாவு மில்லை சொல்லுறியா?”
“எல்லாத்தையும் தான் சொல்றேன்.”
“ஒவியா போனதை நினைச்சா இம்புட்டு கோபமா இருக்கா… அவளோட இடத்துல அவளோட திறமையான ஆளா போட்டு விடலாம்டா.”
என்றவனை விழி நிறைய வலியோடு நோக்கியவன்,
“கம்பெனியில அவள் இடத்தை வேற ஆள் போட்டு நிரப்பிடுவா. என் மனசுல…”
என நிறுத்த, அதிர்ந்து போய் பார்த்தவன் விழியை சந்திக்க முடியாமல் தலை குனிந்தவன்,
“முடியலடா. அவா எப்படிடா என்னை விட்டுட்டு போலாம்.”
“ஏய்… என்னடா சொல்லுறா?”
“இல்லடா. தெரியாம கேட்கிறேன். அவா எப்படி என்னை விட்டுட்டு போலாம்.”
என்றான் மொத்தமாய் உடைந்து போனவனாய்,
“கொஞ்சம் கொஞ்சமா மனசுல வந்து உட்கார்ந்துட்டு ஏதேதோ செய்து மனசு முழுசும் ஆக்கிரமிச்சிட்டு இப்போ அம்போணு விட்டுட்டு போனா நான் என்னடா பண்ணுவேன்.”
என்றவனை பாவமாக பார்த்தவன்.
“நீ … நீ… ஓவியாவை விரும்புனியா?”
என மொத்தமாய் அதிர்ந்து போய் கேட்க,
மனம் விட்டு போனவன் போல், எங்கெங்கோ பார்வையை செலுத்தியவாறு,
“தெரியலடா. அவா கூட இருக்கிற வரை தெரியல. ஆனா இப்போ தெரியுது. மனசு முழுசும் அவா தான் இருந்திருக்காணு தெரியுது. என்னால அவளை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுக்க முடியாதுணு தெரியுது. காலம் முழுசும் அவா என் கூடவே இருக்கணும்ணு தோணுது. சத்தியமா தோணுதுடா.”
“ஏய்…இந்த அளவு அவங்க உன் மனசுல இருந்திருக்காங்க. அதை நீ ஏன்டா இதுவரை எனட்ட சொல்லல.”
“எனக்கே தெரியலடா. எனக்கு அவா எவ்வளவு முக்கியம்னு அவா என்னை விட்டு பிரிஞ்ச பிறகு தான் தெரியுது. கொஞ்ச நாளா ஒரு தேடல். அந்த தேடல் பல வேளை வெறுமையை உணர வச்சிது. மனசு அலைபாஞ்சுது. எப்பவும் மாவு மில்லுலயே இருக்கணும்னு தோணுச்சு. கூடவே ஒவியா என்கிட்ட பேசிட்டே இருக்கணும்னு மனசு ஏங்குச்சு. ஆனா அதுக்கு பெயர் காதல்னு அப்ப தெரியல. ஆனா இப்போ தெரியுது. அவா எப்பவும் என் கூடவே இருக்கணும். அவள் நிழலுலயே நான் காலம் முழுசும் இருக்கணும்னு இப்ப தோணுது.”
சொன்னவன் குரல் உடைந்து அழ தயாராக,
அவனை சமாதானப்படுத்த நினைத்தவன்,
“சரி… அதை நீ அவங்களுட்ட சொன்னியா?”
“எனக்கே இப்ப தானேடா தோணுது.”
“காதலை சொல்லல. ஒ.கே. மனசு வெறுமையா இருக்குது. உங்க கூட இருந்தா நிறைவா இருக்கு என்கிறதை அவங்களுட்ட சொன்னியா?”
“இல்லியேடா…”
“சொல்லாம எப்படி அவங்க புரிஞ்சிக்க போறாங்க.”
“புரிய வாய்ப்பு இல்ல தான். ஆனா அவா எப்படி என்னை விட்டுட்டு போலாம். விட முடியாதுடா. அவளை விட முடியாது. நாம இப்பவே கேரளாவுக்கு கிளம்புறோம்.”
என முகுந்தன் எழுந்தே விட, புரியாமல் விழித்தவன்,
“கேரளாவுக்கு எதுக்குடா?”
“அவளுட்ட பேசணும்.”
“ஒவியாட்டயா?”
“ஆமா… அவளுட்ட தான். அவா எப்படி என்கிட்ட கேட்காம அந்த முடிவு எடுக்கலாம். அவளோட முகத்தை பார்த்து நான் கேட்கணும்.”
“கேளுடா. போய் கேளு. செருப்பால அடிப்பா. ஒரு வருஷமா பக்கத்துல வச்சிட்டு, மனசை சொல்லாம பிஸ்னஸ் பிஸ்னஸ்ணு ஒடிட்டு, இப்போ அடுத்தவனுக்கு நிச்சயமான பின்னால கூப்பாடு போடுறா.”
சலித்து கொண்டவன் அவனை கடுப்போடு பார்க்க,
“நான் இருக்கும் போது அவன் எப்படிடா நிச்சயம் பண்ண முடியும். இவா எப்படியா சம்மதம் கொடுக்க முடியும். எனக்கு கேட்கணும். அவளுட்ட நாலு கேள்வி நாக்கை புடுங்குறது போல கேட்கணும்.”
“நல்லா கேட்டா போ. இப்படி போய் முன்னால நின்னா அவா தான் நாலு கேள்வி கேட்பா. முதல்ல வீட்டுக்கு போ. நல்லா தூங்கி எழும்பி குளிச்சிட்டு பிரஸா வா . நாம கேரளா போலாம்.”
“அதுக்கெல்லாம் நேரம் இல்லடா. நாம இப்பவே கிளம்புவோம்.”
என அவன் கரம் பற்றி இழுக்க,
“சொன்னா கேளுடா. இது தப்பு. அவங்க நிச்சயமான பொண்ணு. இதுக்க மேல அவங்க முன்னால போய் இப்படி எல்லாம் பேசுறது தப்பு.”
“எதுடா தப்பு. அந்த ஆண்டவன் எனக்கு கொடுத்த மாணிக்கத்தை அவன் திருடப்பாக்குறது தப்பு இல்லயா? இப்போ நீ வர போறியா இல்லயா? வரலணா சொல்லிடு நான் தனியா போய்க்கிறேன்.”
என நடக்க தொடங்க,
“முகுந்த் சொன்னா கேளுடா. அவங்க மனசுல இப்போ நீ இல்லடா. நிச்சயம் ஆகிடுச்சினா. அவங்க நிச்சயமான மாப்பிள்ளையை தான் நினைச்சிட்டிருப்பாங்க. இப்போ நீ இப்படி போய் கேட்கிறது தப்பாகிடும்.”
“என்னடா தப்பு. கண்ணை உருட்டி உருட்டி பார்த்து சைட் அடிச்சிட்டு, இப்போ கண்டவனுக்கு கழுத்தை நீட்ட ரெடியாகிட்டா, நான் விட்டுடணுமா? விடமாட்டேன். ஆந்தை கண்ணை உருட்டி உருட்டி பார்த்தால அது ஏன் பார்த்தாணு தெரியணும். நீ கேரளாவுக்கு வரப்போறியா இல்லயா?”
“ஏய் இருடா. நீ… நீ… இப்போ என்ன சொல்ல வரா?”
“ம்… அவள் மனசுலயும் நான் இருக்கேன்னு சொல்ல வரேன்.”
“இல்லடா. அதுக்கு வாய்ப்பே இல்லை. இப்படி ஒரு எண்ணத்துல தான் கேரளா கிளம்புறியா? இதோட நிறுத்திடு. நிச்சயமா சொல்றேன் அப்படி ஒரு எண்ணம் அவங்க மனசுல இருந்தா நிச்சயத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டாங்க. நீ தான் ஏதோ தப்பா புரிஞ்சிருக்கா.”
“நானு. நானு தப்பா புரிஞ்சேன். சொல்லுடா. சொல்லு. வாய் இருக்குணு என்னமோ சொல்லு. ஆனா அவளோட பார்வையில எதுவோ இருந்துச்சுடா? அப்படி இல்லனா அந்த பார்வை என்னை ஏன் இம்சைப்படுத்தணும். என்னை எத்தனையோ பொண்ணுங்க பார்க்க தான் செய்றாங்க. நானும் அவங்களை பார்க்க தான் செய்திருக்கேன். இவளோட பார்வை போல யாரோட பார்வையும் என் அடி மனசு வரை போய் மோதுனது இல்லையே. அது ஏன்?”
“இப்ப என்னடா சொல்ல வரா?”
“குழப்பம் எதுக்கு? நேரடியா அவளுட்டயே போய் கேட்டு விடுவோம்.”
“அது நல்லா இருக்காதுடா. அவங்க நிச்சயமான பொண்ணு.”
“நிச்சயம் தானே ஆகியிருக்கு. கட்டிக்கலயே… நீ கிளம்பு. நாம போயிட்டு வந்திடலாம்.”
“இப்பவேவா?”
“ஆமாடா. நேரம் பிந்த பிந்த பைத்தியம் பிடிச்சிடுமோணு பயமா இருக்கு.”
“டேய் அப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னார்டா. இன்று பொண்ணு பார்க்க போகிற பங்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம். உன்னை பார்த்து உனட்ட சொல்ல தான் இங்கு வந்தாங்க. நீ இல்லாததால எனட்ட உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க.”
“இப்போ பொண்ணு பாக்குறது தான் ரொம்ப முக்கியம். நீ கிளம்புறியா இல்லையா?”
என வெடுக்கென வெளியேற,
இதற்கு மேல் தடுக்க முடியாது என தெரிந்தவன். சுந்தரியிடம் திலகாவுக்கு வீடு போக உதவ செய்ய சொல்லி விட்டு இவனுடன் கிளம்பினான்.
அவசரப்பட்டு கேரளா வந்து விட்டார்கள். ஆனால் எப்படி ஓவியாவை சந்திப்பது. திக்கு தெரியாமல் ஹோட்டல் ஒன்றில் அடைப்பட்டே கிடந்தனர் இருவரும் பல மணி நேரம். முப்பத்திரண்டாவது முறையாக ஓவியா செல்லுக்கு தொடர்பு கொண்டான். ஆனால் அது மரணித்து போயே கிடந்தது. திலகா மேல் கொண்ட கோபத்தால் அவள் செல்லை மரணிக்க செய்து மூலையில் தூக்கி எறிந்தது பாவம் முகுந்தனுக்கு தெரியாதல்லவா? அவன் ஆத்திரத்தோடு வெறி கொண்டவன் போல் விடாமல் அடிக்க, நளனுக்கு தான் அவனை பார்க்க பாவமாக இருந்தது. நேற்று முன்தினம் வரை முகுந்தன் இப்படி ஒரு பொண்ணுக்காக உடைந்து நிற்பான் என யாராவது சொல்லி இருந்தால் சிரித்திருப்பான். ஆனால் இன்று கண்முன் நிற்கிறானே.
புரிந்து கொள்ள முடியாமல் அவனை பார்த்தான். இதுவரை காதலிக்காமல் ஈர்ப்பு மட்டுமே இருந்த ஒரு பெண்ணின் பிரிவு இந்த அளவுபடுத்துமா என்று தான் யோசிக்க வைத்தது. முகுந்தனை வலியோடு பார்த்தான். இப்போதும் அவன் முயற்சித்து கொண்டே இருந்தான். எதிர்முனை உயிர் பெற வில்லை போலும்.
புல் சீட்
ஆத்திரத்தை புஷ்டி கொண்டு சுவரில் இடித்து தீர்த்தவன். கையில் இருந்த செல்லை சுவரில் மோத விட்டிருந்தான். அவன் செய்கையால் கலவரம் கொண்டவன் ஒடி அருகில் போய்…
“நீ இப்போ செல்லை உடைக்கிறதால எல்லாம் மாறிடுமாடா? கொஞ்ச நேரம் அமைதியா இருடா.”
“எப்படிடா அமைதியா இருக்க முடியும். நான் வேணாம்ணு தான் போயிட்டா. அந்த செல்லையாவது உயிரோட வச்சிருக்கலாம்ல.”
“அவங்களுக்கு என்ன மனவருத்தமோ…”
“என்ன விடவா அவளுக்கு மன வருத்தம். பாவி. பாவி. மனசுல இருந்ததை அப்பவே சொல்லி இருந்தா இப்போ இந்த இடத்துல வந்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காதுல. குழந்தை போல பார்த்தா. மயங்கிட கூடாதுணு சாப்பிட கிடைச்ச எல்லாத்தையும் எனக்கு கொடுத்தா. மடியில போட்டு தூங்க வச்சா. என் காயத்துக்கு கட்டுப்போட்டு என்ன கண் உறங்காம பாத்துக்கிட்டா. நான் தான் மனசு மரத்து போய் அதை உணராம இருந்தேனா இவா சொல்லி புரிய வச்சிருக்க வேண்டியது தானே. அதை செய்யாம இப்படி அப்போணு விட்டுட்டு போயிட்டாளே?”
“ரிலாக்ஸ்டா. நிஜமா அவங்க மனசுல நீ இருந்தா ஆரம்பத்துல சொல்லாட்டாலும் இப்ப சொல்லி இருப்பாங்கடா. அதுலயும் நீ இப்படி நெருங்கி போன பிறகு மறைச்சிருக்கவே மாட்டாங்க. நான் என்னவோ நீ தான் தப்பா புரிஞ்சிட்டு பேசுறியோணு நினைக்கிறேன். முதல்ல நாம அவங்களை சந்திக்க பார்ப்போம்.”
“அதுக்கு தான் வழி இல்லாம பண்ணிட்டாளேடா. இப்போ நான் எப்படி அவளை சந்திப்பேன்.”
நெற்றியில் கை வைத்தவாறு அங்குமிங்கும் நடந்தவன்.
“கிளம்புடா. போலாம்.”
“எங்க?”
“ஒவியா வீட்டுக்கு தான்.”
“அங்க அவளோட குடும்பமே இருக்கும்.”
“இருந்துட்டு போகட்டும். நாம கேட்க வந்ததை கேட்டுட்டு கிளம்புவோம்.”
“எப்படிடா…”
“நமக்கு வேற வழி இல்லடா.”
“சரி. நீ சொல்லுறது போலவே நேர்ல்ல வீட்டுக்கு போய் கேட்கிறதாவே வச்சிக்க. குடும்பத்துக்கு முன்னால உண்மையை சொல்லுவாங்கணு நினைச்சியா?”
“சொல்லாட்டா என்ன? அவளோட கண்ணு சொல்லும்.”
“ஆமா பக்கத்துல இருக்கும் போது சொல்லாத கண்ணு தூரமா போன பின்னால சொல்லுதாக்கும்.”
“அதான் அப்போ புரியல. இப்போ புரியுதுணு சொல்லுறேனேடா.”
“சரிடா. போலாம். அப்படி போய் கேட்டும் அவங்க மனசுல அப்படி எந்த எண்ணமும் இல்லணு தெரிஞ்சா நீ பேசாம என் கூட கிளம்பிடணும்.”
“நிச்சயமா? அவளோட மனசுல நான் இல்லனா அடுத்து ஒரு நொடி அவா முன்னால நிற்க மாட்டேன். போதுமா? இப்ப கிளம்புறியா?”
என்றதும் அவசரமாக புறப்பட்டவன் அவனுடன் கிளம்பி போனான்.
முக்கால் மணி நேரப் பயணம். டிரைவரிடம் அட்ரஸை கொடுத்து விட அவர் வழி கேட்டு கேட்டே கொண்டு சேர்த்தார். வீடு வந்து சேர்ந்தவர்கள். வண்டி சத்தம் கேட்டும் யாரும் வெளிவராமல் போக,
“ஓவியா…”
என குரல் கொடுத்தனர். அப்போதும் சத்தம் வராமல் போக,
நளன் தான் வீட்டில் பூட்டு தொங்குவதை சுட்டி காட்டினான்.
ஆத்திரத்தோடு மண்ணில் காலை உதைத்தவன்.
“எங்கடா போய் தொலைஞ்சாங்க.”
“பக்கத்துல தான் போயிருப்பாங்க.”
“இப்ப என்னடா பண்ணுறது.”
“காத்திருக்க வேண்டியது தான்.”
காத்திருப்பு என்பதே முகுந்தன் வாழ்வில் இல்லாத ஒன்று. யாருக்காகவும் அவன் இதுவரை காத்திருந்தது இல்லை. இவனுக்காக காத்திருந்தவர்கள் தான் இங்கு அதிகம். இப்போது பார் ஒரு பெண்ணுக்காக இவன் காத்திருக்கிறான். அதுவும் தன் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணுக்காக இவன் காத்திருக்கிறான். நேரம் போனது. அவன் பொறுமையும் போனது. டென்ஸனாக தொடங்கினான். “ஒருவேளை இன்று தான் திருமணமோ!” பக்கென்று இருந்தது. இருக்காது. இருந்திருந்தால் வீட்டை அலங்கரித்திருப்பார்களே.
“ஐயோ… எங்கடி போனா? என்னை இப்படி தவிக்க விட்டுட்டு ஏண்டி கண்ணாம்மூச்சு ஆடுறா?”
கண்மூடி அவன் உணர்வை அடக்கிய நேரம், ஆட்டோ ஒன்று வந்து அந்த வீட்டின் முன் நின்றது. சட்டென கண் திறந்தவன் கண்கள் அந்த ஆட்டோவுக்குள் பாய, அதில் ஓவியாவின் முகம் தட்டுபடாததால் சோர்ந்து போனான்.
தங்கள் வீட்டின் முன் இரண்டு வாலிபர்கள் நிற்க கண்டதும் குழப்பத்தோடு இறங்கிய எழிலும் அரிசந்திரனும் புருவ முடிச்சிகளோடு தான் அவர்களை நெருங்கினர்.
“யார்ப்பா நீங்க?”
“ஒவியாவை பார்க்கணும்.”
“அவா இங்க இல்லப்பா. முகூர்த்த பட்டு எடுக்க மாப்பிள்ளையோட டவுனுக்கு போயிருக்கா.”
என்றதும் தலையை கொண்டு ஏதாவது சுவரில் அடித்து விடலாமா என்றிருந்தது முகுந்தனுக்கு. இதை கேட்டும் ஆத்திரப்படாமல் நிற்கிறானே என்று பயத்தோடு தான் அவனை பார்த்தான் நளன்.
“எப்போ வருவாங்க.”
“இதோ வருகிற நேரம் தான். கடையில இருந்து கிளம்பிட்டதா சின்னவா போன் பண்ணுனா?”
“நல்லது. அவங்க வருகிறது வரை இந்த திண்ணையில வெயிட் பண்ணலாமா?”
“வெயிட் பண்ணுறீங்களா? ஆமா நீங்க யார்னு சொல்லலியே…”
என்றதும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தவாறு, பார்வையால் எதையோ பறிமாறி கொள்ள,
“சொல்லுங்க தம்பி. நீங்க யாரு? ஓவியாவை உங்களுக்கு எப்படி தெரியும்.”
“நாங்க மெட்ராஸ்ல அவங்க கூட வேலை பார்த்தவங்க.”
சட்டென முகுந்தன் தான் சொன்னான். வேலை பார்ப்பவர்கள் என சொன்னதும் நளன் அதிர்வோடு திரும்பி தான் அவனை பார்த்தான். அவனை கண்களால் அடக்கியவன்.
“அவங்களுக்கு மேரேஜ்னு சொன்னாங்க. அதான் அவங்களை பார்த்துட்டு கம்பெனி பற்றி அவங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச சில டீற்றியல்ஸை கேட்டு தெரிஞ்சிட்டு போலாம்ணு வந்தோம்.”
“அப்படியா தம்பி. நல்லது. உள்ளால வாங்க.”
என வரவேற்ற ஓவியாவின் பெற்றோர் அவர்களுக்கு குடிக்க நீராகாரமும் கொடுத்தனர். வாங்கி குடித்த முகுந்தன் கண்களால் வீட்டை அளந்தவாறு அமர்ந்திருந்தான். நளன் தான் அவர்கள் இருவரிடமும் பேச்சு கொடுத்து கொண்டே இருந்தான்.
“அளந்து பேசுடா. வாய் இருக்குணு பேசி மாட்டி விட்டுடாத.”
என காதருகே கிசுகிசுத்தான் முகுந்தன்.
“தம்பி என்ன பேசுது…”
அரிசந்திரன் தான் கேட்டான்.
“தம்பி என்ன பேசும். சின்னதா இருந்தாலும் வீடு சூப்பரா இருக்குணு பேசுது.”
என்றான் நளன் சிரித்து கொண்டு,
“அதுவா தம்பி. இது வாடகை வீடு தம்பி. எங்களுக்கும் சொந்த வீடு வசதி எல்லாம் இருந்துச்சு. அரிசந்திரன் பழமைக்கு மாற, சலிப்பாக எழுந்து வெளியே வந்தான். நேரம் ஆக ஆக மனசு பரபரத்தது. வேறு எங்காவது போய் இருக்கிறாள் என்று சொன்னால் கூட அமைதியாக இந்த மனம் இருந்திருக்குமோ என்னவோ. ஆனால் எவனோடவோ முகூர்த்த பட்டு புடவை எடுக்க சென்றிருக்கிறாள் என்றதும் உள்ளம் கசப்பு தட்ட ஆத்திரமும் கோபமும் வெளிப்பட்டது. ஆனால் காட்ட முடியாதே.
நிலைகதவில் சாய்ந்து நின்றவாறு முற்றத்தை வெறித்தான். அழகழகான ரோஜா செடிகள் பூத்து குலுங்கின. ஒவ்வொரு பூவையும் பார்த்தான். சட்டென ஓவியா முகம் தெரிய, கண்களை கசக்கி விட்டு கொண்டான். பின் தலையை அடித்தவன் தனக்கு தானே சிரித்து கொண்டு நிமிர்ந்த போது ஆட்டோவில் வந்து இறங்கினாள் ஓவியா. பட்டு சாரியில் ஓவியமாக தான் தெரிந்தாள். அதிலும் அந்த மெல்லிய அலங்காரம் அவளை தேவதையாக தான் காட்டியது. அவள் மேல் வைத்த பார்வையை திருப்ப முடியாமல் அவளிலே புதைந்து போய் நின்றிருந்தான் முகுந்தன்.
“தன்னவள் இத்தனை அழகா?”
இன்று தானே காதல் கண் கொண்டு பார்க்கிறான். காட்டன் புடவையில் அலங்காரம் இல்லாமல் வந்திருந்தாலும் அழகாய் தான் தெரிந்திருப்பாள்.
ஆட்டோவுக்கு பணம் கொடுத்து விட்டு திரும்பியவள் கண்ணில் நிலை கதவில் சாய்ந்து நின்ற முகுந்தன் விழ,
என மனதுக்குள் திட்டி கொண்டே படி ஏறினாள். முன்னால் நிற்கும் முகுந்தன் உருவம் தன் கற்பனை என நினைத்து தான் முறைத்து கொண்டு வந்தாள். அருகில் வந்தும் உரு அழியவில்லை. என்றாலும் கண்களை கசக்கி பார்த்தாள். இப்போதும் அதே முறைப்போடு நின்றிருந்தான். சந்தேகத்தில் மெல்ல தொட்டு பார்த்தாள். உணர முடிந்தது.
“அவனா? அவனே தானா? என்னை தேடி அவனே வந்து விட்டானா?”
நினைவே ஒரு பக்கம் இனித்தாலும் மறுபக்கம் இனி வந்து எதுக்கு? அதான் எல்லாம் முடிவாகிடுச்சே. எண்ணும் போதே அவள் விழி நிறைந்தது. அவள் கண்களில் கண்ணீரை கண்டதும்,
“ஏய்… ஓவியா. எதுக்கு இப்போ அழுறா?”
பதறியவன் கண்ணை பார்த்தவள்,
“சாரி… சாரி… சார்.”
என்றாள் உடைந்த குரலில்,
“எதுக்கு சாரி?”
என்றதும் தான் தாமதம். குடும்பம் ஒடி அவர்கள் அருகில் வந்து விட, அவர்களையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், தொண்டை குழிக்குள் வந்த வார்த்தையை மென்று விழுங்கியவாறு,
“தொழில்ல உதவுவேணு நம்பிக்கையை கொடுத்துட்டு இப்படி பிரிஞ்சி வந்ததுக்கு,”
என்றதும் முகுந்தன் முகம் சட்டென வாடியது. அவனும் இந்த ஒரு நொடியில் என்னவெல்லாம் நினைத்து விட்டான் அல்லவா? அப்படி இருக்க இவள் என்ன இப்படி சொல்கிறாள். அப்படி என்றால் அதற்கு தான் சாரியா? மற்றபடி எதுவும் இல்லையா?
என்று தான் இருந்தது முகுந்தனுக்கு, ஆனாலும் எல்லார் முன்பும் கேட்க தோன்றவில்லை.
உள்ளால வாங்க சார்…
வரவேற்றவள் அவனை அமர வைத்து விட்டு,
“ அம்மா சாருக்கு என்ன கொடுத்தீங்க.”
என விசாரித்து விட்டு,
“அப்பா. சார் சாப்பிட்டு விட்டு தான் கிளம்புவாங்க. நீங்க ரெடிப் பண்ணுங்க,”
என்றதும் அவசரமாக மறுத்த முகுந்தன்.
“இல்ல ஓவியா. அவ்வளவு நேரம் எல்லாம் இருக்க முடியாது. வீட்டுக்கு கிளம்பி ஆகணும்.”
“ஆமாங்க. இவன் பேமிலி இவனை தேடிட்டே இருக்கும். சொல்லிட்டு வரல. அதுல வேற இன்று அவனுக்கு பொண்ணு பார்க்க போறதுக்கு ரெடியா இருப்பாங்க. இவன் அதை கேன்சல் பண்ணிட்டு தான் இங்க கிளம்பி வந்தான்.”
சொல்லியவாறு முகுந்தனை பார்க்க முகுந்தன் கண்கள் அனல் பறந்தது. அப்போது தான் தான் சொல்ல கூடாததை சொல்லி விட்டது உறுத்த, மெல்ல தலையை திருப்பி ஓவியாவை பார்த்தான்.
“அட… என்ன இது? இவங்க முகம் ஏன் வாடுது. அப்படினா மச்சான் சொன்னது உண்மையா?”
யோசித்தவன் சுற்றி நாலாபுறமும் பார்க்க, இப்போது ஓவியா குடும்பம் மலர்ந்து நின்றது.
“உனட்ட எதுவோ கேட்கணுமாம். உன் முதலாளி அனுப்பி வச்சிருக்காங்க. தம்பி முதலாளிக்காக தான் பொண்ணு பார்க்கிற பங்ஷனையே தள்ளி வச்சிட்டு வந்திருக்கு.”
சூழ்நிலை புரியாமல் அவள் தந்தையும் சொல்ல…
“என்ன விசயம் சார்…”
என்றதும் ஒரு நொடி தடுமாறியவன், அது கம்பெனி விசயம் தான் என்றான் தோராயமாக…
“கம்பெனி விசயம் தான் தம்பி. என்னணு கேட்டா என் பொண்ணு உங்களுக்கு தேவையான விபரத்தை சொல்லிடுவா?”
“அது… அது சார்…” என்றவன் ஏதோ ஐடியா வந்தது போல…
“ நாம இப்போ சமீபமா சில இடங்களுக்கு மாவு சப்ளே பண்ணுனோம்ல. அந்த டீற்றியல். கூடவே கடைசியா நீங்க புதுசா சிலர்ட்ட ஸ்டாக் அனுப்ப பேசிட்டிருந்தீங்களே அவங்களை பற்றிய விபரம். அதுல எத்தனை பேர் நம்ம பிராடெக்டை வாங்க ரெடியா இருந்தாங்க என்ற விபரம், அது கூடவே வேணாம்ணு ஒதுங்குன ஆட்கள் பற்றிய விபரம், இதன் பிறகு யார் யாரை தொடர்பு கொள்ளணும் என்கிற விபரம் எல்லாம் பாஸ் தெரிஞ்சிட்டு வர சொன்னாங்க.”
“பாஸா!”
அவள் குழப்பமாக பார்க்க…
“ஆமாங்க. நாங்க உங்க கூட வேலை பாக்குற சாதாரண ஸ்டாப்ஸ் தானே. முதலாளி சொன்னதுனால தானே இங்க வந்திருக்கோம்.”
“ஒ!… விசயம் அப்படி போகுதா? அப்படினா நீங்க சாதாரண வேலைகாரனா அறிமுகமாகி தான் உள்ளால வந்தீங்களா? அதான் அம்மா அப்பா விரட்டி அடிக்காம உட்கார வச்சி பேசிட்டாங்களா?”
ஒரு நொடி சூழலை புரிந்து கொண்டவள்.
“சொல்லுறேன் சார்… எல்லாம் சொல்றேன்.”
என ஒவ்வொன்றாக சொல்ல தொடங்க, அவன் கவனமாக குறிப்பெடுப்பது போல் கேட்கத் தொடங்கினான். இவர்கள் கம்பெனி விசயத்தில் மும்முரமான பின் தான் அவள் குடும்பம் அவர்களை விட்டு விலகியது.
இருவரும் ஆபீஸ் விசயத்தில் மும்முரமாக,
“போதும்டா. அவங்க போயிட்டாங்க. பேச வந்ததை பேசு. அப்பா தேடிட்டே இருப்பாங்க…”
பழையபடி நளன் வாய் விட,
“ என்ன விசயம் சார். சொல்லுங்க. உங்களுக்கு பொண்ணு பார்க்க போகணும்ல. எங்களுட்ட இருந்து நேரம் கடத்துனா அப்புறம் பொண்ணு கோவிச்சிக்கும்.”
ஒரு இறுக்கத்தோடு சொல்ல, நளனை பார்த்து முறைத்தவன்.
“கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியாடா?”
என கடிந்து கொள்ள,
“அவர் மேல ஏன் சார் சாடுறீங்க. அவர் உங்க மேல உள்ள அக்கறையில சொல்றாரு. விடுங்க. இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்.”
என்றதும் அவள் உள்ளத்தில் சீற்றம் இருப்பதை உணர்ந்தவன் மெளனமாக…
“அதான் கேட்கிறாங்களேடா. கேட்க வந்ததை கேட்க வேண்டியது தானே.”
என்றதும் மறுபடியும் முறைத்தவன்.
“எனக்கு கேட்க தெரியும். நீ கொஞ்சம் வாயை மூடு.”
என்றதும் கிச்சனுக்குள் இருந்து வெளிப்பட்ட எழில் இவர்களை கடந்து செல்ல வர,
பேச்சை மாற்றியவர்கள். அவர் கடந்து சென்றதும்,
“இப்படியே யோசிச்சிட்டிருந்தா அப்புறம் கேட்க வந்ததை கேட்க முடியாம போயிடும். யாராவது வந்து பக்கத்துல உட்கார்ந்திடுவாங்க. பாத்துக்க…”
என்றதும் நளன் கூற்றில் இருந்த உண்மை உறுத்த,
“ம்… கேட்கிறேன்.”
என்றவன் ரெடியாக ஒவியா ஏதோ எதிர்பார்ப்போடு அவன் கண்களை பார்த்தாள். அவள் கண்களை கூர்ந்து பார்த்தவன்.
“எனட்ட உண்மையை மட்டும் தான் பேசணும்.”
“உண்மையா? அப்படினா இதுவரை பொய்யா பேசிட்டிருந்தேன்.”
“என்னங்க நீங்க. அவனை பேச விடுங்க.”
“சரி சொல்லுங்க.”
“அது… நீங்க… நீங்க… நிஜமா விரும்பி தான் இந்த கல்யாணத்தை ஏத்துகிட்டீங்களா?”
“ம்… ஆமா?…”
“நிஜமா?…”
“இது என்ன கேள்வி. விரும்பாமலா முகூர்த்த பட்டு எடுக்கிற வரை போயிருக்கும்.”
என்றதுமே மொத்தமாய் உடைந்து விட்டான் முகுந்தன். என் விருப்பம் இல்லாமல் என்னை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று சொல்வாள் என்று தான் நினைத்தான். ஆனால் அவன் எண்ணத்துக்கு நேர் மாறாய் பேச கண்டதும் விதிர்விதிர்த்து போனான். அதற்கு மேல் பேச வார்த்தை வரவில்லை.
“அப்படினா இந்த கல்யாணத்துல உங்களுக்கு சம்மதம் தான் இல்ல…”
முந்தி கொண்டு நளன் தான் கேட்டான்.
“இது என்ன பைத்தியகாரதனமான கேள்வி. சம்மதம் இல்லாமலா இதுவரை வந்திருக்கு. இன்னும் ஒரு மாசத்துல மேரேஜ் வைக்க முடிவாகியிருக்கு.”
என்றதுமே தளர்ந்து விட்டான் முகுந்தன். அவன் முகவாட்டத்தையும் உள்ளம் பொடி பொடி ஆகி இருப்பதையும் உணர்ந்தவன்.
“போதுமாடா. இப்ப உன் சந்தேகம் தீர்ந்துச்சா. நான் தான் சொன்னேனே. பொண்ணோட சம்மதம் இல்லாம எப்படி பேரன்ஸா இருந்தாலும் மேரேஜ் பண்ணி வைப்பாங்கணு. கேட்டுகிட்டா தானே. இப்ப உன் சந்தேகம் தீர்த்திடுச்சில. அப்போ கிளம்புவோமா?”
என கேட்க. அடிப்பட்ட முகத்தோடு திரும்பி அவளை பார்த்தவன்,
“இல்ல. அப்பாவுக்கு முடியலனு பார்க்க வருகிறதா ஊருக்கு வந்துட்டு உன் வீட்டோட வற்புறுத்தல் காரணமா மேரேஜ்க்கு ரெடியாகிட்டியோணு தப்பா நினைச்சிட்டேன். உனக்கு பிடிக்காத எதுவும் உன் வாழ்க்கையில நடக்க கூடாதுணு தான் கிளம்பி வந்தேன். சாரி. உன் விருப்பத்தோடு தான் இது எல்லாம் நடக்குதுனா ஒ.கே. நான் கிளம்புறேன்.”
தளர்ந்து போய் எழும்ப,
“அவ்வளவு தானா?”
என்றாள் தழுதழுத்த குரலில்…
“வேற என்ன செய்ய முடியும். வேணும்ணா மாப்பிள்ளை போட்டோவை காட்டுங்க பார்த்துட்டு கிளம்புறோம்.”
நளன் தான் கேட்டான்.
சட்டென மாப்பிள்ளை போட்டோ கேட்டதும் தடுமாறியவள்.
“அவர் போட்டோ. அவர் போட்டோ எனட்ட இல்ல.”
“போட்டோ கையில இல்லனா என்ன? முகூர்த்த புடவை எடுக்க வரை போயிருக்கீங்க. போன்ல அனுப்பாமலா இருந்திருப்பாரு. விதம்விதமா சேவ் பண்ணி வச்சிருப்பீங்களே.”
என அவளிடம் அனுமதி கேட்காமலே அவள் போனை எடுத்து நோண்ட, சட்டென அதை வாங்கி பறித்தவள்.
“இல்ல. போணுலயும் அவர் படம் இல்ல.”
“என்ன போணுலயும் இல்லையா? அது எப்படி கட்டிக்க போறவர் போட்டோ இல்லாம எப்படி?”
“எப்படினா இங்க இருக்கும் போது இங்க எதுக்குணு வச்சிக்கல.”
அவள் இதயத்தை சுட்டி காட்ட,
“ஹார்ட் டச்சிங் லைன் அப்பா…”
நளனும் கண்மூடி அனுபவித்து சொல்ல, அவன் பக்கம் திரும்பி முறைத்தவன், ஒரு நொடி அவள் கண்ணையே பார்த்து இருந்து விட்டு,
“சாப்பிட்டுட்டே கிளம்புறோம்.”
என்றான் அவள் கண்ணில் நின்ற தன் பார்வையை விலக்காமலே,
“ஒட்…”
நளன் தான் அதிர்ந்து கேட்டான்.
“நான் ஒவியா வீட்டுல சாப்பிட்டுட்டு கிளம்புறதுல உனக்கு பிரச்சினையா?”
என்றதும் நாலு பக்கமும் தலையாட்டியவன் கடைசியில் இல்லை என சொல்ல,
“கொஞ்சம் சாப்பாடு ரெடி பண்ண சொல்லுறீங்களா மேடம்?”
என ஒவியாவை பார்க்க, அவனின் உள்ள கிடக்கையை உணர முடியாமல் குழப்பத்தோடு கிச்சனை நோக்கி நடந்தாள் ஓவியா. உள் நுழையும் வரை அப்படியே இருந்தவன் சட்டென அவள் போனை எடுக்க,
நளனுக்கும் எதுவும் புரியவில்லை. அவசரம் அவசரமாக நோண்டியவன். எங்கெங்கோ போய் எது எதுவெல்லாமோ தேடி கடைசியில் கண்டானா என்று கூட தெரியாத முக பாவத்தில் செல்லை இருந்த இடத்தில் வைத்த போது ஒவியா வெளியே வந்தாள்.
“உன் வீட்டை சுத்தி பார்க்கலாமா ஒவியா?”
“என்ன சார் உங்க வீடு போல இது என்ன பங்களாவா? சுத்தி பார்க்க…”
“வாழுற வீடு பங்களாவா இருந்தா என்ன? குடிசையா இருந்தா என்ன?”
என்றவனை புருவம் சுருக்கி பார்த்தவள்,
“சரி வாங்க…”
என இருந்த இரண்டு அறையையும் மேலே மாடியையும் கூட்டி சென்று காட்டினாள். மாடியில் போனவன் அவளிலிருந்து பிரிந்து ஒரு ஒரமாய் இருந்த லவ் பேட்ஸ் பக்கத்தில் வந்தான். ஒற்றை விரலை உள்ளே விட்டு அது கொத்த, அதை பார்த்து ரசித்தான். பின்புறம் இருந்த மீன் தொட்டியும் ரசித்தான். அவள் அறைக்கு வந்து அவள் உபயோகப்படுத்தும் பொருள்களை பார்த்தாள். கூடவே சாமிபடத்தின் முன் இருந்த டாலரும் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் அதை கையில் எடுக்கும் போதே ஓவியாவின் நெஞ்சம் திக்திக்கென்று அடிக்க தொடங்கியது. ஆனால் எதுவும் கேட்காமல் இருந்த இடத்திலே வைத்து விட, இப்போது தான் மூச்சே சீரானது.
எல்லாம் பார்த்து விட்டு கீழ் இறங்கும் போது சாப்பாடு ரெடியாக இருந்தது. தரையில் கால் மடக்கி உட்கார்ந்தே சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்து ஹாலில் சோபாவில் வந்து இருந்தவன்.
“அம்மா… உங்களுட்ட பெரிய முதலாளி பேசச் சொன்னாங்க.”
என்றான் இதுவரை நடந்த உரையாடலுக்கு சம்மந்தமே இல்லாமல்,
“பெரிய முதலாளியா?”
“ஆமாம்மா. ரொம்ப பிளீஸ் பண்ணி கேட்க சொன்னாரு.”
என்றதும் எழில் குழப்பமாக அன்பரசனை பார்க்க,
“பெரிசா எதுவும் இல்லம்மா. ஓவியா மேடத்துக்கு மேரேஜ்க்கு இன்னும் ஒரு மாசம் இருக்குதுலியாம்மா அதுக்குள்ள ஒரு முறை ஒரே ஒரு முறை அவங்க மெட்ராஸ் வந்துட்டு போக நீங்க சம்மதிக்கணும்னு கேட்டாங்கம்மா.”
என்றதும் அதிர்ந்து விழித்தது ஓவியாவும் நளனும் தான்.
“என்ன இவன் எதுக்கு இப்போ ஓவியாவை மெட்ராஸ்க்கு கூப்பிடுறான்.”
குழப்பத்தின் மொத்த உருவாய் இருந்தவன் பக்கம் திரும்பியவன்.
“பேசாம வாயை மூடிட்டு இரு…”
என கண்ணால் அவனை அடக்க, நளன் உதடு அவனை அறியாமல் சட்டென மூடிக்கொண்டது.
“என்னவோ பெரிசா திட்டம் போட்டுட்டான்.”
என்பது மட்டும் தெளிவாக அவனுக்கு தெரிந்தது. ஆனா ஓவியாவுக்கு அதுவும் தெரியவில்லை.
“இப்ப எதுக்கு இவர் என்னை அங்க கூட்டிட்டு போக நினைக்கிறாரு. இவர் அந்த பொண்ணை கூட்டிட்டு அலையுறதை பாத்து நான் வயிறு எரியவா?”
என உள்ளுக்குள் வெடித்த நேரம்,
கூலாக முகுந்தன் ஓவியா அம்மாவிடம் இருந்த பார்வையை அவளை நோக்கி திருப்பினான்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



