வணக்கம் வாசகர்களே!
ஒரு நாள் பயணம். அதில் முகுந்த் ஓவியா காதல் மலர்ந்ததா? அல்லது திலகா நளன் காதல் மலர்ந்ததா?
மறுநாள் காலையிலே முகுந்தன் வண்டி ஓவியாவின் தங்கும் அறைக்கு முன்னால் வந்து நின்றது.
“ இதோ… ரெடியாகிட்டோம்.”
வெளியில் வந்து சொன்ன ஓவியா. அவசரமாக உள் நுழைந்து,
“திலகா அவங்க வந்துட்டாங்க. போலாமா?”
என கேட்க, அவளை கேள்வி குறியோடு பார்த்தவள்,
“நிஜமா மீட்டிங் தானே.”
என்றாள் நம்ப முடியா பார்வையோடு, நேற்று போல் எதுவும் நளனுடன் அனுப்ப பிளான் செய்கிறாளோ என்ற படபடப்பு அவளிடம் அதிகமாக இருந்தது.
“ஆமாடி. வெளியில வந்து பாரு முகுந்த் சாரும் வந்திருக்காங்க.”
“கூடவே நளனும் இருக்கான் தானே.”
“அவர் இல்லாம எப்படி? அவரும் வரணும் தானே.”
“ஒவியா விளையாடாத. அவன் பாவம் அவன் மனசுல ஆசையை வளர்க்காத… உண்மையை சொல்லு கம்பெனி மீட்டிங் தானே.”
அழுத்தி கேட்டவளிடம் ஒரு நொடி தடுமாறியவள்,
“பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன்.”
என்ற போது வெளியில் இருந்து ஹாரன் ஒலி கேட்க,
“ஏய்… கேள்வியா கேட்காம, கிளம்பு,”
என அவசரமாக கட்டிலில் கிடந்த அவள் பர்ஸையும் போனையும் எடுத்து அவள் கையில் கொடுத்தவள், அவள் அனுமதி கேட்காமலே வீல் செயரை தள்ளிக் கொண்டு வெளியே போக முயல, திலகாவுக்கு தான் குழப்பம் தீரும் முன்பே கிளம்புவது போலானது.
வண்டியில் ஓவியா ஏற்றி அமர வைத்ததுமே அவள் கண்கள் முன்னால் இருந்த நளன் மீதே படிந்தது. அவனோ நல்ல பிள்ளை போல இவள் புறம் திரும்பாமலே அமர்ந்து கொண்டான். ஒரு நொடி அவனை ஆழமாக பார்த்தவள்,
“ரொம்ப தான்.”
என உள்ளுக்குள் சலித்து கொண்டே நீங்கி அமர, இன்று ஓவியாவும் ஏறிக் கொண்டாள். அவளும் ஏறிய பின் தான் திலகா மனசு நார்மல் ஆனது.
வண்டி நேரே ஒரு பிரமாண்டமான ஹோட்டலின் முன் போய் நின்றது. ஹோட்டலின் முகப்பு பகுதியே அனைவரின் விழியையும் விரிய வைத்தது.
“இங்கேயாடி மீட்டிங்…”
ஒவியாவின் காது மடல் அருகில் குனிந்து கேட்டாள் திலகா.
“நானும் எதிர்பார்க்கலடி.”
என்றாள் வியந்து போன விழியை அப்புறப்படுத்தாமல், இருவரின் மருண்ட விழியையும் ஒரு நொடி நிதானமாக பார்த்து விட்டு,
“உள்ளால போலாம்.”
என்ற முகுந்தின் வார்த்தைக்கு கட்டு பட்டு அவன் பின்னே நடந்தனர் இருவரும்.
“டேய்… எப்படியாவது பேசி மேரேஜ்க்கு சம்மதம் வாங்கிடு. உனக்காக இதுக்க மேல எல்லாம் அலைய முடியாது.”
மென் குரலில் சொன்ன முகுந்தனை நன்றியோடு பார்த்தவன். “ஒ.கே…டா” என பார்வையால் சொல்ல,
இப்போது அவனோ நான்கு பேர் அமர்ந்து சாப்பிடும் மேஜை மீது வந்து நின்றான்.
சட்டென திரும்பிய நளன்.
திலகாவை அலேக்காக தூக்கி செயரில் அமர்த்த , திலகா தான் நடுங்கி போனாள்.
“என்னடி…”
அவளின் நடுக்கத்தை உணர்ந்து அவனே மென் குரலில் கேட்க,
“உன்னை யாரு தூக்க சொன்னா?”
அவளும் யாரும் கேட்க முடியாதவாறு வாய்க்குள் வைத்து தான் கேட்டாள்.
“யார் சொல்லணும்.”
என்றான் விழியை அசைத்து சிரித்தவாறு,
“நான் சொல்லணும்.”
என்றாள் சற்று கடுப்போடு . அவளை ஒரு நொடி ஏற இறங்க பார்த்தவன்,
“சரி. சொல்லு. வேணா மறுபடியும் தூக்கி வீல் செயர்ல்ல அமர வச்சிடவா?”
என குரல் உயர்த்தி குறும்போடு கேட்டு விட, திலகா மற்ற இருவரையும் பார்த்து மலக்க மலக்க விழித்தாள். அவள் கோபத்தை சட்டை செய்யாதவன் போல மறுபடியும் அவளை தூக்க போக, பார்வையால் அடக்கியவள், ஒவியா பக்கம் திரும்பி முறைத்தாள்.
“ஏய்… நான் என்னடி பண்ணுவேன். உரிமையுள்ளவர் ஒடி வந்து தூக்கும் போது நான் எப்படி இடையில வர முடியும்.”
சிரிப்பை உதட்டில் மறைத்து கொண்டு சொன்னவளை அனல் கக்கும் பார்வை பார்த்தவள், ஓவியாவின் மலர்ந்து நின்ற உதட்டு சிரிப்பை வைத்தே, இங்கு எதுவோ நடக்க போகிறது என்பதை யூகித்து கொண்டாள். அவள் யூகம் சரி தான் என்பது போல,
முகுந்தன் அவர்கள் இருவரையும் தனிமையில் விட்டு விட்டு ஓவியாவை அழைத்து கொண்டு மாயமாய் மறைந்து போனான். சிறிது நேர அமைதி. இருவருக்குமே சலிப்பை தந்தது.
முகுந்தனும் ஓவியாவும் போன திசையையே விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் திலகா. நளனோ கன்னத்தில் கை கொடுத்து அவளையே ரசித்துக் கொண்டு புன்முறுவலோடு இருந்தான். படபடப்பில் அவள் விழி அங்குமிங்கும் ஒடுவதை பார்க்க பார்க்க அவனுள் எதுவோ செய்தது.
“இப்படியே பார்த்துட்டிருந்தா எப்படி? கொஞ்சம் எங்களையும் பார்க்கலாம் இல்ல…”
கனிந்துருகும் மென் குரலில் நளனின் குரல் வரவுமே திலகாவின் இதயம் வேகம் வேகமாய் துடிக்க தொடங்கியது. அவனை இதே குரலில் எதிர்கொள்ள தயக்கமாக இருந்தது. இது அவளுக்கான குரல். அவளிடம் மட்டும் அவன் பேச துணியும் குரல். ஆக, இப்போ இவன் என் உணர்வோடு விளையாட போறான். திரும்பாத திலகா. திரும்பிடாத. இவன் மாய கள்ளன். இவன் பார்வையாலும் கனிந்துருகும் மொழியாலும் உன்னை தன்வசம் இழக்க செய்து விடுவான்.
மனதுக்குள் உறுதியேற்றவள், பார்வையை திருப்பாமலே அப்படியே இருந்தாள். ஆனால் அவள் செவியோ அவன் பக்கமே இருந்தது.
“திரும்பி என்னை பாருடி. இது நமக்கான நேரம். மனசு விட்டு பேச கடவுளா கொடுத்த நேரம். அவங்க வரும் போது வரட்டும். நீ எனக்கு பதில் சொல்லு. பிளீஸ்டி…”
அவனின் கஸ்தி குரலில் தடுமாறியவள்,
படபடப்போடு மெல்லமாய் திரும்ப,
ஆவலோடு அவளை பார்த்தவனின் விழியை சந்திக்க முடியாமல் தலைகுனிந்தவள்,
“என்ன பதில் சொல்லணும்.”
என்றாள் வெளிவரா குரலில்… நேற்றிலிருந்தே இவள் இப்படி ஆகி விட்டாள். அதனால் தான் ஓவியாவிடம் அத்தனை முறை கேட்டாள். ஆனாலும் அந்த பக்கி இவனிடம் மாட்டி விட்டு விட்டு சென்று விட்டது. பயத்தோடு தன்னை பார்த்தவளை சந்தப்படுத்தும் குரலில்…
“அம்மா… எப்போ மேரேஜ் வச்சிக்கலாம்ணு கேட்கிறாங்க. நான் என்ன சொல்லட்டும்.”
அவள் கரத்தை இரண்டையும் எட்டிப் பிடித்து தன் கரத்தினுள் பொதிந்து வைத்து கொண்டு அவன் உருக்கமாய் பேச ஆரம்பித்த அதே நேரம்,
“உட்காரு ஓவியா?”
என்ற முகுந்தனின் குரல் கேட்டு தயக்கமாக அந்த சோபாவில் அமர்ந்தாள் ஓவியா. என்னவோ மனதுக்குள் நடுக்கமாக இருந்தது. திலகாவுக்காக வந்தாலும், முகுந்தனுடன் இப்படி ஒரு தனிமை கிடைக்கும் என அவள் எதிர் பார்க்கவே இல்லை. சுற்றி நாலாபுறமும் பார்வையை செலுத்தினாள். என்னவோ எல்லாரும் தன்னையே பார்ப்பது போல உணர்ந்தாள். தனியா வந்திருக்க கூடாதோ.
அவள் மனது அவளை குடைய ஆரம்பித்த போது,
“என்ன சாப்பிடுறீங்க…”
என தயக்கம் சிறிதுமின்றி நேர் கொண்ட பார்வையோடு கேட்டான் முகுந்தன். ஆனால் அவளால் தான் அப்படி ஒரு பார்வையை அவன் மேல் செலுத்த முடியவில்லை.
“எதுனாலும் ஒ.கே சார்…”
என்றதும் முன்னால் வந்து நின்ற பணியாளரிடம் ஆடரை கொடுத்து விட்டு அவள் பக்கம் திரும்பினான். எதுவோ பேச முனைவது போல் தான் இருந்தான். ஆனால் அவளை தன் முன்னால் அவ்வளவு அருகாமையில் பார்த்தவனது வாய்க்குள் இருந்து ஏனோ வார்த்தை வெளி வர மறுத்தது.
அதே நேரம், ஆடர் செய்த உணவு வர,
அவளுக்கான உணவை அவள் பக்கம் நீக்கியவன் மெளனமாக அவளையே பார்த்தான். அந்த பார்வையில் அப்படி என்ன காந்த சக்தி இருக்கிறது. தன்னை மொத்தமாய் சுருட்டி எடுக்கிறதே.
எண்ணியவள் அவன் முன் நார்மலாக இருக்க முடியாமல் அவஸ்தையாய் நெளிந்தாள்.
“அடியே திலகா. சீக்கிரம் சம்மதம் சொல்லி நளன் மனசை குளிர வச்சி அவனையும் கூட்டிட்டு வந்து என்னை இந்த அவஸ்தையில இருந்து காப்பாற்றுடி.”
என மனதுக்குள் வேண்டிக் கொண்டவள், அவனிடம் போக துடித்த தன் விழியை ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி அங்கும் இங்கும் மோத விட்டாள்.
அவளின் படபடக்கும் விழியை கண் அசையாமல் அப்படியே பார்த்து கொண்டிருந்தவன்,
“சாப்பிடலியா மேடம்.”
“நான் மேடம்…”
என மனதுக்குள் மருகினாலும் அவன் குரலில் சுறுசுறுப்பானவள் போல, அவசரம் அவசரமாக தன் உணவை தன் பக்கம் நெருக்கியவள் நிமிர்ந்து கூட பார்க்காமல் உண்ண ஆரம்பித்தாள். அப்போது மட்டுமல்ல திலகாவை அழைத்து கொண்டு நளன் அவர்கள் அருகில் வரும் வரை அப்படியே தான் இருந்தாள்.
முகுந்தனுக்குள்ளும் அதிகமான குழப்பமும் தெளிவின்மையும் இருந்ததால் அவனும் எதுவும் பேசவில்லை. அவளை விழுங்கி விடும் பார்வை பார்த்தவாறே உண்டு முடித்தான்.
அருகில் நளனையும் திலகாவையும் பார்த்த பிறகே மூச்சே வந்தது. மெல்ல நிமிர்ந்து திலகாவை பார்த்தாள். முகம் அஷ்ட கோணலாகி இருந்தது . திரும்பி நளனை பார்த்தாள். அந்த முகம் இவளை விட இருளை பூசிக் கொண்டிருந்தது. சந்திப்பு சரியாக அமையவில்லை என்பதை அவர்களின் முக பாவமே சொல்லி விட,
“வந்தவங்களுட்ட பேசி நாங்க ஆடர் வாங்கிட்டோம். அப்போ கிளம்பலாமா?”
என்றவன் எழுந்து கொள்ள, அவசரமாக ஓவியாவும் எழுந்து கைகழுவி விட்டு வந்தாள். அவள் வரும் வரை அப்படியே நின்றவர்கள் பின் எதுவும் பேசாமல் அவன் பின்னால் நடந்தனர். ஓவியா திலகா முகத்தை திரும்பி திரும்பி பார்த்தவாறு தான் நடந்தாள். ஏதாவது சொல்லி விட மாட்டாளா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அவளோ திரும்பி ஒரு முறை கூட அவளை பார்க்கவில்லை. இறுக்கத்தோடே இருந்தாள். அவளுள் அப்படி ஒரு கோபம். எப்படி கோர்த்து விட்டு விட்டு போய் விட்டாள். இவளிடம் பேசவே கூடாது என்று தான் அப்படியே இருந்தாள்.
“என்னாச்சு…”
நளனிடம் தான் பார்வையால் கேட்டாள்.
“அவளுக்கு நான் வேணாமாம்.”
மென்குரலில் சொன்ன நளனை பாவமாக அவள் பார்க்க, தன்னை தள்ளி கொண்டே பின்னால் கிசுகிசுத்த இருவரையும் திரும்பி முறைத்தாள் திலகா. சட்டென வாயை மூடிக் கொண்ட இருவரும் அதன் பின் பேசவே இல்லை.
முகுந்தன் நேரே அவர்களை வீட்டிற்கு அழைத்து போகவில்லை. கோவில், பீச் என எங்கெங்கோ சுற்ற விட்டு தான் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
நளனிடம் கோபத்தை காட்டுவது போல் முகுந்தனிடம் காட்ட முடியாதல்லவா? அதனால் திலகா அமைதியாக இருந்தாள். ஆனால் சூழல் அவளை இறுக்கமாக இருக்க விடவில்லை. அவர்களின் சந்தோஷ நொடிகளில் கலந்து கொண்டே ஆக வேண்டும் போல் சூழலை உருவாக்கினான் முகுந்தன்.
இரவு இருட்ட இருட்ட தான் வீடு வந்து சேர்ந்தனர். வீடு வந்து சேர்ந்த இருவர் உதட்டிலும் புன்முறுவல் இருந்தது. இந்த நாள் வாழ்க்கை தமக்கு இந்த இயற்கை தந்த அற்புத நாளாக தான் இருவர் மனதும் நினைத்து கொண்டது. அதிலும் பீச்சில் மழையில் நனைந்த நொடியே ஓவியாவின் மனதில் நிறைந்து இருந்தது. மழையில் நனைந்து விட கூடாது என்று அவன் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு ஒடியது. ஓடிய ஒட்டத்திலே மொத்தமாக இருவரும் நனைந்து ஒரு ஓலை குடிசையில் அவனுடன் ஒதுங்கியது.
ஒதுங்கிய நொடியில் இருந்த அவன் பார்வை தன்னில் நிலைத்தது என ஒவ்வொரு நொடி நினைவலையில் வந்து வந்து அவளை சிலிர்க்க செய்தது. அந்த சிலிர்ப்பு முகத்தில் மென்சிரிப்பை படரவிட, திலகா ஓவியாவை ஒரு மார்க்கமாகவே பார்த்தாள்.
“மொத்தமா சாரை உன் வலையில விழ வச்சிட்டா போல,”
மென் குரலில் தான் அவள் கேட்டாள். அந்த ஒற்றை வார்த்தையில் அவளுள் கண்ணி வெடி ஒன்று வெடித்த அதிர்வில் நிமிர்ந்து அவளை பார்த்தாள் ஒவியா.
“ம்… நானும் பார்த்தேன். அவரோட பார்வையையும் பார்த்தேன். உன்னோட பார்வையையும் பார்த்தேன். கேட்டா எங்களுக்காக இந்த பயணம்ணு சொல்லுவீங்க. ஆனா பார்த்தா எனக்கு அப்படி தெரியல.”
மென்சிரிப்போடு சொன்னவளை அறைந்து சாத்தியவள்,
“ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லிடாத. எங்களுக்குள்ள அப்படி எதுவுமே இல்லை.”
“இல்லாதவங்க தான். ஒவ்வொரு இடத்துல நெருங்கும் போதும் தன்னை மறந்து உருகி போய் நின்னீங்களாக்கும்.”
அவள் சொல்லும் போதே இருவரும் நெருங்கி நின்ற நொடிகள் எல்லாம் நினைவலையில் வந்து சிரிப்பை ஏற்படுத்த,
“ஆங்… அது… தெரியாம நடந்த ஆக்ஸிடென்ட். அதுக்கு தப்பான அர்த்தம் பூசாத . நாளைக்கு ஆபீஸ் வந்து பாரு. நான் சொன்னது எவ்வளவு உண்மைணு உனக்கு தெரியும்.”
சொன்னவள் உதடோ அவளையும் மீறி,
“ஆமா… அந்த இருட்டுல அணைத்து நொடிகளை கடத்துன பிறகே மரகட்டை மறுநாள் நீ யார் என்பது போல கிளம்பி போச்சு. இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணிட்டாலும்,”
மனதுக்குள் சொல்வதாக ஒவியா வாய்விட்டே முனங்கி கொண்டு நழுவி ஓட, அவளை புன்சிரிப்போடு பார்த்தவள்,
“இல்ல… முகுந்த் சார் மனசுல நீ இருக்கா…”
எண்ணி கொண்டவள் மனதில் இருவருக்குமான அந்த நெகிழ்வான நொடிகள் மனதில் வந்தது.
அதே நேரம் உள் நோக்கி நகர்ந்த ஓவியாவின் மனமோ…
“செய்தது அத்தனையும் சத்தமில்லாம செய்து நம்ம உணர்வோட விளையாடிட்டு, கடைசியில உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்கிறது போல போறது…”
சலித்தவள் அப்படியே கட்டிலில் விழுந்தாள்.
அவள் சொன்னது அனைத்தும் உண்மை என்பது போலவே, மறுநாள் முகுந்தன் நடந்து கொண்டான்.
கண்களால் ஜாடை செய்து முகுந்தனின் செயலை காண்பித்த ஓவியா…
“இதையா… உருகி நின்னார்ணு சொன்னா?”
சொல்லி முடிக்கவில்லை. ஓவியாவிடமே அதட்டல் போட்டபடி நெருங்கி வந்தான் முகுந்தன்.
“இன்றைக்கான சரக்கு இன்னும் டெலிவரி ஆகலணு போன் வந்திருக்கு. நீங்க என்ன தான் பண்ணுறீங்க.”
“ஆமா… நேற்று வேலை செய்ய விடாம கூட்டிட்டு போயிட்டு இன்று தாம் தூம்ணு குதிக்கிறது.”
மனதுக்குள் அவனை சாட்டையால் அடித்தாலும் வெளியில் சொல்ல முடியாதல்லவா?
“இதோ… இதோ இப்போ செக் பண்ணுறேன்.”
சொன்னவள் திலகாவின் வண்டியை தள்ளியவாறு உள் செல்ல,
தன் தலையில் அடித்தவன் கண்ணுக்குள்ளோ மருண்ட விழியோடு பார்த்த அவளின் முகமே நின்றது.
அதே நேரம்,
பார்ட்டி ஒன்றில் இருந்த சக்கரவர்த்தி முன் இருந்த அசோகன்.
“எல்லாம் சரியா வரும் தானேடா.”
“வராம… வேணா பாரு. நாம போட்ட போடுல. இந்நேரம் அந்த பொண்ணுக்கு போன் போயிருக்கும். இந்த பொண்ணும் இன்றைக்கே பெட்டி படுக்கையை தூக்கிட்டு கிளம்பிடுவா? நாம நம்ம வாழ்க்கையில எம்புட்டு பார்த்திருப்போம். இது எல்லாம் சில்லி மேட்டரு.”
எகத்தாளமாய் சொன்னவரை இயலாமையோடு பார்த்தவன், பயப்படும் முக பாவத்தோடு,
“மேட்டர் என்னவோ சில்லி தான். ஆனா முகுந்தனுக்கு தெரிஞ்சிது. அப்புறம் பிரச்சினை வேற மாதிரி போயிடும்.”
“அது தெரிஞ்சி தானே. நானே நேர்ல்ல போய் பேசுனேன். நான் அம்புட்டு பயமுறுத்தியும் விசயத்தை மகன் வரை கொண்டு போவாங்கனா நினைச்சா. அந்த அளவு எல்லாம் அந்த வக்கத்த குடும்பத்துக்கு தைரியம் வராது.”
“ வராம இருக்கணும். நீயும் கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டா. அந்த பொம்பளை வாய் விட்டு அழுதிடுச்சி. நாம வந்ததை உன் மகனுட்ட சொல்லிடுமோனு பக்கு பக்குணு தான் இருக்கு. உன் மகள் விசயத்துல நான் மூக்கை நுழைஞ்சேனு அந்த ஆட்கூட்டத்துல அப்படி பேசி போட்டான் உன் மகன். இப்போ இது தெரிஞ்சிது.”
பழயதை மனதில் ஓடவிட்ட அசோகன் நடுக்கத்தோடு சொல்ல,
“இது சக்கரவர்த்தியோட பிளான். சொதப்பாது. சொதப்ப நான் விட மாட்டேன்.”
சொன்னவர் ஒரே மடக்காக அந்த பீர் பாட்டிலை ஒன்றோடு ஊற்ற, இப்போது சக்கரவர்த்தியின் கண்களோ கோவை பழம் போல சிவந்தது.
அதே நேரம் சரியாக
ஒவியாவின் போன் அலறியது. ஒவியா குளித்து கொண்டிருந்ததால், போனை எடுத்து காதுக்கு கொடுத்தாள் திலகா.
எதிர் முனையில் எழிலரசியின் குரல்,
“சொல்லுங்கம்மா… நான் திலகா…”
திலகாவின் குரல் கேட்டதுமே எழிலரசிக்கு கொஞ்சம் மூச்சு வந்தது. மனதில் இரண்டு நாளாய் போட்டு வைத்திருந்த திட்டத்தை அப்படியே கோர்வையாக்கி பேச தொடங்க,
“ என்னம்மா சொல்லுறீங்க?.”
புரியாமல் கேட்டவளிடம்.
“நல்ல வரன் ஒன்று நம்ம ஓவியாவுக்கு வந்திருக்கும்மா. அவா ஒரு முறை ஊருக்கு வந்துட்டு போனாணா நல்லா இருக்கும். குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். நம்ம வசதிக்கும் வாய்ப்புக்கும் ஒத்து வர கூடிய குடும்பம். மாப்பிள்ளை கூட ஒரு கம்பெனியில தான் வேலை பாக்குறாரு. கல்யாணத்துக்கு பிறகு அவர் கம்பெனியிலே வேலைக்கும் சேர்ந்திடலாம்ணு சொல்லுறாரு. அவ்வளவு பெரிய கம்பெனியில வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்குணு சொன்னா போதும் எம்.டி உடனே வேலை கொடுத்திடுவாருனு சொல்றார். இப்படி ஒரு வரன் யாருக்கு அமையும். நாங்க இதை சொன்னா உன் பிரண்ட் சம்மதிக்க மாட்டா. நீ தான் ஏதாவது ஒரு பொய்யை சொல்லி அவளை அனுப்பி வைக்கணும்.”
என்றதும் ஒவியா குடும்பம் சொல்வது உண்மை என நம்பி அவளும் ஓவியாவிடம் பேசினாள்.
“அப்பாவுக்கு சுகமில்லையாம் ஓவியா. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம். அப்பா போன் பண்ணுனாங்க.”
என்றவள் சட்டென நாக்கை கடித்து, பின் தெளிவாகி
“சாரி அம்மா போன் பண்ணுனாங்க.”
என்றதும் ஒடி வந்து அவள் கைகளை தாங்கியவள்.
“என்னடி சொல்லுறா? அப்பாவுக்கு என்னடியாச்சு. பழைய படியா? எதுவும் பிரச்சினை இல்லை தானே.”
படபடப்போடு கேட்டவளிடம்,
“நீ பதறுற அளவு எதுவுமில்ல. ஆனாலும் நீ ஊருக்கு போய் ஒன்றிரண்டு நாள் கூட இருந்து அவங்களை பாத்துட்டு வருகிறது நல்லது. நீ கிளம்பு.”
“இப்பவேவா? முகுந்தன் சார்ட்ட பெர்மிஷன் வாங்க வேணாமா?”
“கேளு. உடனே கேளு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு.”
“எப்படிடீ இப்ப தான் போட்ட விதை முளைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த நேரம் பொறுப்பில்லாம எப்படி கிளம்பி போறது. சார் என்ன நினைப்பாரு.”
“நீ என்ன நிறைய நாளா நிக்க போறா? ஒன்றிரண்டு நாள் தானே சமாளிச்சிக்கலாம்.”
“வேலையை எல்லார் கூடவும் சேர்ந்து சமாளிச்சுக்குவா சரி. உனக்கான தேவையை நான் இல்லாம எப்படி பூர்த்தி செய்வா?”
“பாத்துகலாம்டி.”
“நான் நளனுட்ட சொல்லட்டுமா?”
“அவன்ட்டயா வேணாம்மா. அதுக்கு நான் தனியா இருந்தே கஷ்டப்படுவேன்.”
“ஏண்டி அப்படி சொல்லுறா?”
“பேசி பேசியே சாகடிச்சிடுவான்.”
“பாவம்டி அவர். நீ அவரை பரிசீலனை பண்ணலாம்.”
“அவரை…”
“ஆமா… அவரை விட வேற யார் உன்னை நல்லா பாத்துப்பா.”
“தப்பு கணக்கு போடாத…”
“தப்பு கணக்கா? அவர் உனக்கு மேச்சான ஆள் தாண்டி. அவர் பொறுப்புல விட்டுட்டு போறதுணா நான் எந்த பயமும் இல்லாம போவேன்.”
“அதுக்காக என்னை அதுட்ட மாட்டி விட்டுட்டு போயிடாதடி. அப்புறம் திரும்பி வரும் போது குடம் குடமா அழப் போறேன்.”
“அழப்போறியா? அணைக்கப் போறியாணு அப்புறம் பாத்துக்கலாம்.”
என்றதும் அன்று நளன் வீட்டிற்கு போய் விட்டு வந்து அணைத்தது நினைவுக்கு வர சட்டென அவள் முகம் சிவந்தது. அதை பார்த்தவள்,
“நல்லா யோசி. நளன் உனக்கு பெஸ்ட் சாயிஸ் தான்.”
அவளை ஒரு குழப்பு குழப்பி விட்டு முகுந்தன் அறைக்கு வர, நளனும் அங்கே தான் இருந்தான். விபரம் சொன்னவள் கிளம்பட்டுமா? என அனுமதி கேட்க, முகுந்தனுக்கு என்னவோ ஒரு மாதிரி இருந்தது. ஆனாலும் தந்தைக்கு உடல்நலம் இல்லை என்ற போது போக கூடாது என்று சொல்ல முடியாதே. அதற்காகவே தன் மனதுடிப்பை மறைத்தவனாக,
“தனியாவா போறீங்க. துணைக்கு நானும் வரட்டுமா? அப்பாவுக்கு வேற உடம்புக்கு முடியலணு சொல்லுறீங்க. கூட இருந்தா உதவியா இருக்கும்ல.”
என தன்னை மீறி கேட்டு விட, கூட இருந்த இருவர் கண்களும் ஒரே நேரம் அவன் மேல் தான் படிந்தது.
“என்ன நான் இப்படி பேசிட்டேன்.” முகுந்தன் தனக்குள் நொந்து கொண்டவனாய்…
“இல்லடா. அப்பாவுக்கு முடியலல… அதான்.”
அவன் தன் மனதை மறைத்து அப்படியே இழுக்க, அவன் விழிக்குள் தன் விழியை ஒடவிட்டவாறு ஓவியா அந்த விழி ஏதாவது பேசுகின்றனவா என பார்த்தவாறு, அப்படி எதுவும் பேசாமல் அந்த விழி தாழ்ந்த போது,
“ இவர் மனசுல என்ன ஒடுதுணும் தெரியல. ஏன் அப்படி கேட்டார்ணும் புரியல…” யோசித்தவள், வந்து பாத்துக்கிறேன்.
என்னவோ திலகா சொன்னது போல் இவனில் மாற்றம் வந்திருக்குமோ என்ற குறுகுறுப்பை சட்டென அடக்கியவள்.
“இல்ல சார். நான் தனியா போயிடுவேன்.
அப்பாவுக்கு இது அடிக்கடி வருகிறது தான். என்ன இதுவரை நான் அவங்க கூட இருப்பேன். எல்லாத்தையும் பாத்துப்பேன். இப்போ தனியா இருக்காங்களா? அதான் பயந்து போய் போன் பண்ணியிருக்காங்க. நானே பாத்துக்குறேன். எனக்கு ஒரு மூணு நாள் பெர்மிஷன் கொடுங்க போதும்”
என்றதும் அடுத்து ஒற்றை வார்த்தை பேசாமல் அனுமதி கொடுத்தான். ஆனால் அன்று முழுதுமே தன்னை தானே நொந்து கொண்டு.
“எப்படி பேசி விட்டேன். என்னை என்ன நினைத்திருப்பாள்.”
இப்படியான எண்ணங்களிலே நொடிகளை கடத்தினான். மாலை வீடு வந்து சேர்ந்த போதே நேற்று மழையில் நனைந்ததால் உண்டான உடல் மாற்றம் உடலை வருத்தியது. சோர்வோடு உள் நுழைந்த மகன் அருகில் வந்த நீலவேணி,
“என்னப்பா… ஏன் ஒரு மாதிரி இருக்கிறா?”
என விசாரிக்க, அந்த நேரம் அவனுக்கு விடாமல் தும்மல் வந்தது.
அவசரமாக அவன் நெற்றி கழுத்து கை என தொட்டு பார்த்தவள்,
“டேய்… உடம்பு கொதிக்குதுடா.”
“ஒண்ணுமில்லம்மா மாத்திரை போட்டா சரியாகிடும்.”
என மேல் நோக்கி நடந்து விட, நீலவேணி சுக்கு கசாயமும் மாத்திரையும் எடுத்து கொண்டு மகன் அறைக்கு வந்தாள்.
போட்டிருந்த உடையை கூட மாற்றாமல் மெத்தையில் சுருண்டிருந்தான். அவனை எழும்பி மாத்திரை கொடுத்தவள் சுடுநீரையும் பருக செய்து அவனை படுக்க வைத்து விட்டு கீழே வந்தாள். மனது கொதித்தது.
இன்றாவது மகனிடம் பேசிவிட நினைத்திருந்தவளுக்கு மகனின் இந்த நிலைக்கு பிறகு பேச விடாமல் செய்தது.
“இந்த மனுஷர் வேற இன்று பேசுறேன். நாளைக்கு பேசுறேன்னு இழுத்தடிச்சிட்டே இருக்காரு. அவருக்கு எல்லாம் குடும்பம் எதுக்கு? பொண்டாட்டி புள்ளைங்க எதுக்கு? பிஸ்னஸையே கட்டிட்டு அழ வேண்டியது தானே.”
மனதுக்குள் திட்டி தீர்த்தவள் கிச்சனுக்குள் வந்த நேரம் சக்கரவர்த்தியிடம் இருந்து போன் வந்தது. ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த நேரம் அவரும் சரியாக அடித்து விட, தன் ஆதங்கம் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தாள் நீலவேணி.
“ஏய்… கொஞ்சம் மூச்சு விட்டு நிறுத்தி நிறுத்தி பேசுடி. இல்ல ஹார்ட் அட்டாக் வந்து பொட்டுணு போயிடுவா?”
“அப்படி போய் சேரட்டும்ணு தானே என்னை பாடா படுத்துறீங்க. பெத்த மகனுட்ட பேச உங்களுக்கு என்ன தயக்கம். அவனுக்கென்ன இப்பவா பதினெட்டு வயசு ஆகுது. ஒரு குழந்தையோட அப்பா ஆகிற வயசுல அவனை நான் பாத்துக்க வேண்டி இருக்கு. இன்று சீக்கிரமா வாறீங்க. அவனுட்ட என் அண்ணன் பொண்ணு பற்றி பேசுறீங்க.”
சொல்லி விட்டு ரிசீவரை அறைந்து சாத்தி விட,
“இவா வேற தொண தொணத்துட்டு,”
எரிச்சல் உற்றாலும் என்னவோ மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது இந்த நேரம் சரியாக இருக்கும் என்றே தோன்றியது. அந்த பெண்ணை மகன் வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்திய கையோடு அவன் கையில் வேறு ஒரு பெண்ணை பிடித்து கொடுத்து விட்டால் எல்லாம் சுபமாகி விடும் என யோசித்தவர். அன்றே மகனிடம் பேசி விட எண்ணி மும்பையில் இருந்து கிளம்பினார்.
அதே நேரம் ஹை பீவரில் உடம்பு தூக்கி தூக்கி போட பெட்ஷீட்டால் கழுத்து வரை மூடிக் கொண்டான் முகுந்தன். குளிர் அடங்குவேனா என்றது. தன்னை கட்டுபடுத்த முடியாமல் அவள் உடலும் மனமும் சோர்ந்த போது சட்டென அவனுள் அந்த நியாபகம் வந்தது.
இடிபாடுகளுக்கு நடுவில் குளிரில் ஓவியாவின் இடுப்பை வளைத்து பிடித்து கொண்டு அவள் மடியில் முகம் புதைத்து அரற்றியது நினைவுக்கு வர,
இப்பவும் பக்கத்துல இருந்து அவ்வளவு கரிசனையா பார்க்க மாட்டாளா? ஒரு நொடி தான் எண்ணியது மனது, அடுத்த நொடி, அவள் இங்கு வந்த நாளிலிருந்து தன்னை பார்க்கும் பார்வைக்கான அர்த்தம் இப்போது புரிந்தது போல் இருந்தது.
அப்படி கரிசனையோடு பார்த்து காப்பாற்றியவளுக்கு தான் ஒரு நன்றி கூட சொல்லவில்லையே. அதனால் தான் அப்படி பார்த்தாளோ… இல்லயே அந்த பார்வை எதையோ என்னிடம் வேண்டுவது போல் அல்லவா இருந்தது.
யோசித்தவன் கண்ணுக்குள் அவளின் ஏங்கி நின்ற பார்வையே நின்றது.
அதே நேரம் ரயில் பொட்டியில் தலைசாய்த்து கண்மூடி இருந்தாள் ஓவியா. மனசு என்னவோ றெக்கை கட்டி பறப்பது போல் தோன்றியது. திலகா சொன்னது போல முகுந்தனில் அவளுக்கும் மாற்றம் தெரிந்தது. அந்த மாற்றமே பேதை பெண்ணுக்குள் ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்த இரண்டு மூன்று நாளாய் நடந்து முடிந்த நிகழ்வை ஒட்டி பார்த்தவாறு சிரித்து கொண்டிருந்தாள்.
பேதை பெண்ணுக்கு தெரியவில்லை.
இன்றோடு தன் அத்தனை கனவுகளையும் அவன் தந்தையே அடித்து மூடி மண்ணில் புதைக்க போகிறார் என்று,
நாளைய உண்மை தெரியாமல், அவனின் மாற்றத்தில் குளிர்ந்து போய் அவளும், அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்து அவனுமாக இருவரின் அடுத்த சந்திப்புக்காக காத்திருக்க தொடங்கினர். ஆனால் அடுத்த சந்திப்பில் தங்கள் மனமே நினைத்து பார்க்க முடியா மாற்றத்தை சந்திக்க போகிறது என தெரியாமல் மிக மிக உற்சாகத்தோடு கேரளா வந்து இறங்கினாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
ஆனால் தன் பின்னால் நடக்கும் எந்த வேலையும் தெரியாமல் மாத்திரை கொடுத்த மயக்கத்தில் நல்ல நித்திரையில் இருந்தான் முகுந்தன். சரியான மருந்து உள் சென்றிருக்க வேண்டும். உடல் எல்லாம் வியர்வையில் குளிக்க காய்ச்சல் காணாமல் போய் இருந்தது.
உடலை மெல்லமாய் ஆட்டிப் பார்த்தான் உடல் வலியும் குறைந்திருந்தது.
மெல்ல எழுந்து அமர்ந்தவன் மனதில்,
அவளும் தான் நம்மளோட நனைந்தாள். அப்படினா அவளுக்கும் காய்ச்சல் வந்திருக்குமோ…
கேட்டா என்ன?
மனசு சொன்னதும் கை ர செல்லை எடுக்க, அறிவோ…
வேணாம். அன்று கூட வரவாணு கேட்டப்பவே ஒரு மாதிரி பார்த்தா. இப்போ வீடு போய் சேர்ந்திப்பாளோ என்னவோ இப்போ உடல் நலம் பற்றி விசாரிச்சா என்ன நினைப்பா?
எண்ணியவன் செல்லை கீழே வைத்த நேரம்,
ஓவியா செல்லையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் எதையும் கிளிக் செய்யவில்லை. வெறுமனே திரையை வெறித்திருந்தாள்.
ஒருவேளை அவள் மனதும் அவன் போனுக்காய் தவமிருக்கிறதோ?
அதே எரிச்சலில் தான் அங்கு அவளும் இருந்தாள். மூன்று நாளில் திரும்பி வந்து விடுவேன் என சொல்லி கொண்டு ஊருக்கு வந்தவளுக்கு ஊருக்கு வந்து முழுசாய் நான்கு நாள் முடிந்தும் கிளம்ப முடியவில்லை. அதற்கு காரணம் தந்தையின் உடல்நிலை இல்லை. இவள் வரும் போதே அவள் நினைத்து வந்தது போல் தந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்டாள். கட்டில்லயே கிடந்தாலும் பெரிதாக பாதித்தது போல் தெரியவில்லை.
என்றாலும் தாய் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லியே அவளை போக விடாமல் தடுத்தாள். நான்கு நாள் முடிந்து ஐந்தாம் நாள் தொடங்கியதுமே ஓவியாவின் கோபம் எல்லையை தாண்டியது.
“என்னம்மா நீ. விளையாடவா செய்யுறீங்க?. அங்க முகுந்தன் சார். என்னை நம்பி அவ்வளவு பெரிய தொகையை முதலீடா போட்டிருக்காரு. வளர்ந்து வருகிற நேரம் கூப்பிட்டு கழுத்தறுக்குறீங்க. இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்சினை.”
என்றவளின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறே,
“எங்களுக்கு என்ன பிரச்சினை. அம்மா அப்பாவோட கூட ஒரு வாரம் இருந்துட்டு போணு சொல்லுறது தப்பா?”
என்றாள் தடுமாற்றமாய்…
“என்ன இன்னும் ஒரு வாரமா? வாய்ப்பே இல்ல. என்னம்மா பழையதை மறந்eதுட்டியா என்ன? இந்த வேலை கிடைக்கிறதுக்கு முன்னால அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுனீங்க. இப்ப பணம் வந்ததும் காலை கீழ ஊன்றாம ஆடுறீங்க. அப்படி தானே. ரொம்ப பண்ணாதம்மா. நான் இன்றே கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க.”
என்று கோபத்தோடு சொன்ன மகளை பார்த்து சாந்தமாக…
“கூட ஒரு வாரம் கண்ணு.”
என கெஞ்ச,
“இப்போ நீங்க டிக்கெட் புக் பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ணிட்டு கிளம்பட்டுமா?”
என்றாள் சற்றே குரல் உயர்த்தி,
மகளின் பிடிவாதம் ஆத்திரத்தை தர,
“என்ன சம்பாதிக்கிறேன் என்கிற திமிரா?”
என்றாள் தாய் சற்று சூடாக, அவளை அனல் கக்கும் பார்வை பார்த்தவள்,
“அப்படியே வச்சிக்கோங்க. நான் போகணும்.”
என்றாள் பிடிவாதமாக,
“வேணாம். நீ போக வேணாம்.”
என்ற தாயை முறைத்து பார்த்தவள், தாயின் அழுத்தமான பேச்சை கேட்டதும்,
“போக வேணாம்ணா. இன்று போக வேணாமா? இனிமேல் போக வேணாமா?”
என்றாள் சற்று கோபத்தோடு, மகளின் கோபத்தில் அடிபட்டவள்,
“இனிமேல் தான் போக வேணாம்.”
என்றாள் தாழ்ந்த குரலில்…
“என்னம்மா விளையாடுறியா? போகாம எப்படி சாப்பிடுறதாம்.”
என்ற மகளை இளக்காரமாக பார்த்தவள்,
“அதை நாங்க பாத்துக்கிறோம். நீ மெட்ராஸ் போக வேணாம். இங்க ஏதாவது வேலை பாரு போதும்.”
அவ்வளவு தீர்க்கமாக சொன்ன தாயை கூர்ந்து பார்த்த ஒவியா?
“இங்க வேலை பாக்குறதா? என்னம்மா தெரிஞ்சி தான் பேசுறியா?”
என புரியாமல் கேட்க,
“எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறேன். பொட்ட புள்ளையை கண்காணா தேசத்துக்கு அனுப்பிட்டு நிம்மதியா இருக்க முடியல. அதான் இந்த முடிவு.”
என்றவளை புருவ முடிச்சோடு பார்த்தவள்,
“ஏழு மாசமா இருந்தியேம்மா…”
என கேட்க.
“இருந்தேன் தான். ஆனா என் ஈரகுலை வெடிச்சது எனக்கு தான் தெரியும். போக வேணாம்ணு சொல்றேன்ல உள்ளால போ. என்ன செய்யணுமோ அதை நாங்க செய்றோம்.”
என அறை பக்கம் கை காட்ட,
“ஆமா இத்தனை நாள் அந்த நாங்க எங்க போனீங்க. மெட்ராஸ் போகலணு சொன்னவளை அடிச்சி விரட்டாத குறையா அனுப்பி வச்சது நீங்க தானே. இப்ப என்ன?”
“தெரியாம அனுப்பி வச்சிட்டோம் தாயீ. இப்ப முடியல. என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கலாம்னு ஆசையா இருக்கு. அதனால இனி நீ தூர இடங்களுக்கு எல்லாம் போக வேணாம். பக்கத்துலயே வேலை ரெடியாகி இருக்கு. மாசம் நீ வாங்குற சம்பளம் தான். அந்த பணம் பக்கத்துலயே கிடைக்கும் போது அவ்வளவு தூரமா ஏன் போகணும்.”
என்றதும் வெறி ஆனவள்,
“கல்யாணமா?”
என அனல் கக்கும் பார்வையை தாயின் மேல் வீசியவள் தாயின் அலைந்தாடும் விழியை பார்த்தவாறு,
“ஆமா பக்கத்துல இவ்வளவு பெரிய தொகையை தர கூடிய இளிச்சவாயன் யாரு?”
என்றாள் சீற்றத்தோடு,
“யாரு. மாப்பிள்ளை தான்.”
என்றாள் எழில் அரசி கூலாக…
“மாப்பிள்ளையா?”
என்றாள் அதிர்ந்து,
“மாப்பிள்ளைணா? மாப்பிள்ளை இல்லை. அவரோட ஆபீஸ்ல .”
“பொண்ணுக்கு வேலை எடுத்து கொடுத்து கட்டிக்கிற மாப்பிள்ளையா? அவரை எங்க இருந்து புடிச்சா.”
“நான் எங்கடி புடிச்சேன். அவங்களா தான் விரும்பி வந்து உங்க பொண்ணை கொடுங்கணு கேட்டாங்க.”
“கேட்டதும் நீ ஓக்கே சொல்லிட்டா.”
“அப்புறம் இப்படி ஒரு வரன் எல்லாருக்கும் அமையுமா? நாம செய்த புண்ணியம் தான் வீடு தேடி வந்திருக்கு.”
“வந்திருக்கு சரி. நான் போயிட்டா ஊவாவுக்கு என்ன பண்ணுவீங்க.”
“அதுக்கு மாப்பிள்ளை பாதி சம்பளத்தை தரேன்னு சொல்லி இருக்காரே.”
“அட… இது வேறயா? அவர் என்ன என் குடும்பத்துக்கு பிச்சை போடுறாரா?”
“தப்பா பேசாதடி அந்த புள்ளையை . இந்த காலத்துல எந்த பசங்களாவது இப்படி இருப்பாங்களா? மாமியார் குடும்பமும் வாடிட கூடாதுணு பாதி சம்பளத்தையே தர முடிவு பண்ணியிருக்காரு. அவரை போல ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்.”
“அதான் என்னை கொடுத்து வச்சிக்கலாம்ணு முடிவு பண்ணிட்டியா? இந்தா பாரும்மா. நீ என்ன முடிவுனாலும் எடுத்துக்க. ஆனா இப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு நிறைய ஆசை லட்சியம் இருக்கு. அது எல்லாம் நிறைவேறுகிறதுக்கு முன்னால குடும்ப வாழ்க்கைக்குள்ள போக முடியாது. பேசி பேசி மாத்திடலாம்னு தப்பு கணக்கு போடாத. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.”
என்றவளை கோபமாக முறைத்தவள்,
“அப்படினா நீ இதையும் கேட்டுக்க. இதுக்க மேல நீ மெட்ராஸ்க்கு போக கூடாது. இங்க எங்களோட தான் இருக்கணும்.”
என்றாள் அதிகாரமாக,
“அது எப்படி முடியும். அவர் என்னை நம்பி பல கோடி ரூபாய் இன்வெஸ்மென்ட் பண்ணியிருக்காரு. அப்படி எல்லாம் அம்போணு விட்டுட்டு வர முடியாது.”
“ கம்பெனியை விட்டுட்டு வர முடியாதுணு சொல்லுறியா? கம்பெனியை நடத்துறவரை விட்டுட்டு வர முடியாதுணு சொல்லுறியா?”
என்றதும் அதிர்ந்து போய்
“அம்மா…”
என கத்தி விட,
“கத்தாதடி. போக வேணாம்ணு சொன்னா விட வேண்டியது தானே. போவேணு அடம்பிடிக்கிறா?”
“அதுக்காக இப்படியா பேசுவா?”
“இப்படி இல்ல. இதுக்க மேலயும் பேசுவேன். பேசாம நாங்க சொல்லுறதை கேட்டு அந்த பையனை கட்டிக்க ரெடியாகு. கூடவே அந்த வேலைக்கு போ. போதும்.”
சொல்லி விட்டு எழிலரசி கிச்சனுக்குள் போக, ஒவியா பாவமாக தந்தையை பார்த்தாள். அவர் எதுவும் பேச என்னிடம் இல்லை என்பது போல பேசாமல் நகர்ந்து விட, பின்னாலேயே தங்கைகளும் நழுவினர். ஓவியாவுக்கு என்ன செய்ய என புரியவில்லை. மெட்ராஸில் இருந்து கிளம்பி வரும் போது இப்படி ஒரு வலையில் மாட்ட வைப்பார்கள் என தெரிந்தால் அவள் வந்திருக்கவே மாட்டாள்.
அவளால் எப்படி முடியும். முகுந்தன் இருந்த இடத்தை இன்னொருவனுக்கு கொடுக்க, அவன் தனக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்க போறது இல்லை என்று தெரியும் தான். அதற்காக இவளால் அவன் இடத்தை நிச்சயமாக வேறு ஒருவனுக்கு கொடுக்க முடியாது. இதை எப்படி சொல்லி புரிய வைப்பாள்.
சோர்ந்து தளர்ந்து போய் கட்டிலில் விழுந்த அதே நேரம், முகுந்தன் அறையில் நளன் மற்றும் திலகாவோடு பேசிக் கொண்டிருந்தான் முகுந்தன். பேசி கொண்டிருந்தான் என்பதை விட ஆத்திரத்தில் சாடிக் கொண்டிருந்தான் என்பதே சரியாக இருக்கும். ஒவியா போய் மூன்றே நாளில் திரும்பி விடுவேன் என்று சொல்லி சென்றவள் வாரம் ஒன்று ஆகியும் திரும்பி வராத கோபத்தில் திலகாவிடம் சாடி கொண்டிருந்தான் முகுந்தன்.
கம்பெனியில் இப்போது ஓவியாவின் தேவை அதிகம் என தெரிந்ததால் அவன் கோபத்திற்கு மறுமொழி கொடுக்காமல் அமைதியாக இருந்தாள் திலகா. அவளுக்கு தெரியும். ஓவியா இனி மேல் இங்கு வர போவது இல்லை என்று. எழிலரசி எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விட்டிருந்தாள். ஆனாலும் அந்த உண்மையை இவரிடம் சொல்ல திலகாவுக்கு பயமாக இருந்தது. மூன்று நாள் பிந்தியதற்கே இவர் இந்த குதி குதிக்கிறார். இந்த நேரம் வரவே மாட்டாள் என சொன்னால்… அவளை விட்டு விட்டு என்னை வாங்கு வாங்கு என வாங்கி விடுவார். அதனால் பேசாமல் இருப்பதே சிறப்பு.
என அமைதியாக நின்றவளை கோபத்தோடு முறைத்தவன்.
“இப்ப என்ன தாங்க உங்க பிரண்ட் சொல்லுறாங்க. இன்னும் எத்தனை நாள் லீவு எடுக்கிறதா உத்தேசம். கிளம்பி போகிற வரை கம்பெனியில அக்கறை உள்ளவங்க போல அப்படி பேசுனாங்க. இப்ப என்ன எல்லா அக்கறையையும் திருடிட்டா போயிட்டாங்க.”
முகுந்தன் வெடித்து விட, நளன் பாவமாக திலகாவை பார்த்தான். அவள் அழுகைக்கு மாற தயாராய் இருப்பதை உணர்ந்து,
“டேய்…”
என கெஞ்சுதலோடு அழைக்க,
“அப்புறம் என்னடா? வேலையில ஒரு சின்சியர் வேணாமா? லீவு எடுத்தா இப்படி ஒரேயடியாவா போவாங்க. இதுக்கு மொத்தமா போறேனு சொல்லிட்டு கிளம்பி இருக்க வேண்டியது தானே.”
ஆத்திரத்தில் தான் அவன் அப்படி சொன்னான். ஆனால் அது தான் உண்மை என திலகா திக்கி திணறி சொன்ன போது ஆடி போய் விட்டான்.
“அவா உங்களுட்ட சொல்லலியே தவிர மொத்தமா போயிட்டானு தான் எனக்கு தெரியுது சார்.
என்றதும் புரியாமல் விழி முடிச்சோடு அவளை பார்க்க, அவன் விழியை பார்க்காமல் சற்றே தலையை தாழ்த்தியவாறு,
அவா இதுக்க மேல இங்க திரும்பி வர மாட்டாணு நினைக்கிறேன் சார். நீங்க அவள் இடத்துக்கு வேற ஆளை பார்க்கிறது தான் சரினு தோணுது.
என்றதும் அவள் மேல் அனல் கக்கும் பார்வையை வீசியவன்.
என்னங்க சொல்லுறீங்க.
என வெடிக்க, அவன் கேட்ட தோனியிலும் உடல் மொழியிலும் பயந்து போன திலகா,
“ம்… அப்பாவுக்கு முடியாம தான் அவளை ஊருக்கு அழைச்சாங்க. ஆனா போன இடத்துல அவளை ஒரு குடும்பம் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. வந்தவங்களுக்கு பொண்ணை புடிச்சிப் போச்சாம். அதான் அவளோட பேரன்ஸ் மேரேஜை முடிச்சிடலாம்ணு முடிவு பண்ணியிருக்காங்க.”
“மேரேஜா?”
நிஜமாகவே அதிர்ந்து போய் செயரில் இருந்தே எழுந்து விட்டான். அவனின் அதிர்வை பார்த்த நளன் குழப்பத்தோடே அவனை ஏற இறங்க பார்த்தவாறு அவன் இந்த அளவு அதிர்ச்சியாகும் காரணம் புரியாமல் குழப்பத்தோடே திலகா பக்கம் திரும்பி,
“அப்படினா இந்த விசயம் உனக்கு முன்பே தெரியுமா திலகா?”
என்றான். ஆனால் அவள் வார்த்தையில் நொந்து போனவன் என்னவோ முகுந்தன் தான்.
“தெரியும். எனக்கும் அவங்க அம்மா சொன்னது நியாயமா தெரிஞ்சிது. அதான் நானும் உண்மையை சொல்லல.”
என்றதும் சட்டென சூடான முகுந்தன்,
“என்னங்க நியாயமா தெரிஞ்சி, அவங்களுட்ட உண்மையை சொல்லாம மறைச்சி அனுப்புனதா?”
வெடித்து கொண்டு தான் கேட்டான் முகுந்தன். ஆனால் அவனின் கோபத்தை பார்த்து இருவருமே அரண்டு தான் போனார்கள். ஆனாலும் வாய் மூடி திலகாவால் இருக்க முடியவில்லை.
“எதுக்கு சார் இப்போ இவ்வளவு கோபப்படுறீங்க. அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைச்சிருக்கு. அதை அமைச்சிக்க அனுப்பி வைக்கிறது தப்பா?”
என்றாள் வெடுக்கென்று,
“தப்பு தாங்க. தப்பே தான். அவங்க மனசுல என்ன இருக்குணு தெரியாம அனுப்பி வச்சது தப்பு தான்.”
“அவளோட மனசுல என்ன இருக்குணு எனக்கு தெரியாதா?”
“தெரியாதுங்க. தெரிஞ்சிருந்தா அனுப்பி வச்சிருக்க மாட்டீங்க. கடைசியில நீங்க போய் அவளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சிட்டீங்களே.”
சாடி கொண்டு எழுந்தவன் அதன் பின் அவர்கள் முன் நிற்கவில்லை. நளனுக்கும் புரியவில்லை. திலகாவுக்கும் புரியவில்லை.ஏன் இவன் இவ்வளவு கோபப்படுகிறான் என்று. ஏன்? அவனுக்குமே புரியவில்லை. ஆனால் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கையில் கிடைப்பதை எல்லாம் அடித்து நொறுக்கும் அளவு ஆத்திரம் வந்தது. கட்டுபடுத்த முடியாமல் வண்டியை எடுத்து கொண்டு முழு வேகத்தில் அங்கிருந்து பறந்தான்.
அதே நேரம், வேறு ஒரு கார் அந்த காம்பவுண்ட்டுக்குள் நுழைந்தது. அதிலிருந்து சக்கரவர்த்தியும் அசோகனும் இறங்கினார்கள். நேரே மகன் அறைக்கு வந்தவர்கள் அவன் இல்லாதிருக்க கண்டதும் உள்ளே சென்று ஆளுக்கொரு செயரில் அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினர். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல. முழுதாய் மூன்றுமணி நேரம் பேசி முடித்து சிறு புன்னகையோடு அங்கிருந்து கிளம்பினர். வழியில் எதிர்ப்பட்டு நளன் வர,
“முகுந்தன் எங்கப்பா…”
சக்கரவர்த்தி தான் கேட்டார்.
“ஒரு கிளைன்ட்டை பார்க்க போயிருக்காங்க சார்.”
என்று பொய் தான் சொன்னான்.
“கிளைன்ட்டை பார்க்க போயிருக்கானா? நீ போகல.”
நம்பாதவர் போல புருவ முடிச்சோடு அவர் கேட்க, ஒரு நொடி தடுமாறி தான் போனான். ஆனாலும் உண்மையை சொல்லாமல்,
“வர வேண்டாம்ணு சொல்லிட்டு போனாங்க.”
“சரி. நீ கொஞ்சம் அவன் எங்க இருக்கான்னு பார்த்து சாயங்காலம் 6 மணிக்குள்ள வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுப்பா.”
“ஆறு மணிக்கா?
என்றவன் சற்று நிறுத்தி.
“என்ன விசயம் சார்…”
என கேட்க, முகம் எல்லாம் சிரிப்போடு,
“எல்லாம் நல்ல விசயம் தான். உன் பிரண்ட்டுக்கு பொண்ணு பாக்க ரெடி பண்ணியிருக்கேன். சொன்னா வரமாட்டான். நீ ஏதாவது ஒரு பொய்யை சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு வந்திடு. மற்றதை நான் பாத்துக்கிறேன்.. பொண்ணு என் பிரண்ட் கதிரவேலோட பொண்ணு தான். நேற்று தான் அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா. எல்லாம் நானும் அவனும் பேசி முடிச்சிட்டோம். ஒரு முறை இவனை பொண்ணுட்ட பேச வச்சிட்டா அப்புறம் எல்லாம் சுபமா முடிஞ்சிடும். அதனால நீ எப்படியாவது அவனை கூட்டிட்டு வந்திடு.’
என்றதும் நளன் முகத்திலும் பூரிப்பு.
பாஸ்க்கு திருமணமா?
கண்டிப்பாப்பா. கண்டிப்பா கூட்டிட்டு வாரேன்.
அப்படி அவன் குதூகலமாய் சொல்ல ஒரே காரணம் அவனுக்கு நண்பனை பற்றி தெரிந்தது தான். நிச்சயம் அவன் உண்மையை சொன்னால் வரமாட்டான் என்பது அவனுக்கு தெரியும். அதனாலே என்ன காரணம் சொல்லி அழைத்து செல்லலாம் என யோசிக்க தொடங்கினான்.
ஆனால் மாலை வரை எந்த காரணமும் கிடைக்காமல் தான் நண்பனை தேடி அலைந்தான். ஆனால் போகும் இடம் எல்லாம் அவன் இல்லாதிருப்பதை கண்டதும் கலக்கமுற்றான்.
பல முறை போன் அடித்தான். அவன் எடுக்கவே இல்லை.
“இவனுக்கு என்னாச்சு?”
குழம்பியவன் மனதில் மூன்று மணி நேரத்திற்கு முன் முகுந்தன் அறையில் முகுந்தன் நடந்து கொண்ட வினோதமான செய்கையில் நிலைப் பெற்றது.
“ஆமா ஓவியா வேலையை விட்டு நின்னா இவன் ஏன் இவ்வளவு கோபப்படுறான். திலகாளுட்ட அப்படி பேசுறான். கொஞ்சம் விட்டா அவா அழுதிருப்பா. இந்த அளவு மூடு கெட என்ன காரணம்.”
ஒவியா போனதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அதுதான் காரணமா? வேறு ஏதாவது பிரச்சினையா?
யோசிக்க யோசிக்க, நளனுக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆனால் நண்பனின் இன்றைய செயல் வினோதமாக தான் இருந்தது. ஒவியா போனது கம்பெனிக்கு ஒரு சின்ன இழப்பு தான். ஆனால் சரிபடுத்த முடியாத இழப்பு இல்லை. அவள் இல்லை என்றால் இன்னொருத்தி. அதற்கு எதற்கு இவன் ஆத்திரப்பட வேண்டும்,
ஒருவேளை அவளை நம்பி கம்பெனியை கொடுத்தேனே விட்டு விட்டு போய் விட்டாளே என்று ஆத்திரப்படுகிறானா? இல்லை தன்னிடம் பொய் சொல்லி விட்டு கிளம்பியதால் ஆத்திரப்படுகிறானா?
குழப்பம். ஒரே குழப்பமாக இருந்தது. தன் குழப்பத்தை தீர்த்து கொள்ள அவன் வேண்டும். ஆனால் இவன் எங்கு தொலைந்து போனான்.
யோசித்தவாறே அலுவலகத்துக்குள் நுழைந்தான். நேரே முகுந்தன் அறைக்கு தான் வந்தான். ஒருவேளை வந்திருப்பானோ என்ற சந்தேகத்தில் தான் வந்தான். வெறிச்சோடி தான் கிடந்தது. அடுத்து திலகா அறைக்குள் தான் நுழைந்தான். திலகா பிஸியாக இருந்தாள். ஓவியா இல்லாதது அவளை இரட்டிப்பு வேலை பார்க்க வைத்தது. அதுவே அவளை நிமிர விடாமல் செய்ய, திரையை வெறித்தவாறே,
“சொல்லு…”
என்றாள்.
“முகுந்தன் எங்க போனான்னு தெரியுமா?”
என்றதும் சட்டென நிமிர்ந்தவள் அவன் கண்ணை பார்த்து பொங்கும் சிரிப்போடு,
“இந்த கேள்வியை நாங்க உங்களுட்ட கேட்க வேண்டியது சார். என்ன நீங்க எனட்ட கேட்கிறீங்க.”
என்றாள். யோசனையோடு நின்றவன்.
“எங்க போனான்னு தெரியல. பல வருஷ பழக்கம் எனக்கு அவனுட்ட. ஆனா இப்படி மாயமா மறைஞ்சி நான் பார்த்தது இல்லை. எங்கெல்லாமோ தேடிட்டேன். ஆனா எங்கேயும் இல்ல.”
“என்னாச்சு உங்க பிரண்ட்டுக்கு,”
“தெரியல…”
“ஒருவேளை ஓவியா வேலையை இடைநிறுத்தம் செய்தது பிடிக்கலியோ…”
“இருக்கலாம். ஆனாலும் அவங்களும் அப்படி செய்திருக்க கூடாது.”
“எப்படி செய்திருக்க கூடாது.”
“இவங்க தானே அவனை உசுப்பேத்தி இத்தனை பிராடெக்டை அறிமுகப்படுத்துனது. இப்போ அம்போணு எல்லாத்தையும் போட்டுட்டு போனா எப்படி?”
“என்னங்க பேசுறீங்க. ஊர்ல்ல அவளோட பேரன்ஸ் அவளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை பார்த்து வச்சிருக்காங்க. உங்க கம்பெனி வளர்ச்சிக்காக அவளோட எதிர்காலத்தை அழிக்க முடியுமா?”
“அழிக்க சொல்லல. கட்டிட்டும் வேலை பார்க்கலாம் தானே.”
“எப்படி? அவர் அங்கேயும். இவள் இங்கேயுமா?”
“அப்படி யாரும் பார்க்கலியா?”
“பார்க்கிறாங்க தான். வாய்ப்பு இல்லனா பார்த்து தான் ஆகணும். ஆனா வாய்ப்பு இருக்கும் போது அவங்க ஏங்க பிரியணும்.”
“வாய்ப்பு இருக்கா?…”
“ஆமா. மாப்பிள்ளை வேலை பார்க்கிற கம்பெனியிலே இவளுக்கும் வேலை பார்த்திருக்காரு. இரண்டு பேரும் ஒரே ஆபீஸ்லணா கஷ்டம் இல்ல தானே.”
“சரிதான். ஆனாலும் அவங்களை நம்பி பல கோடி ரூபாய் இன்வெஸ்மென்ட் பண்ணுனவனையும் நினைக்கணும் இல்லயா?”
“நினைக்கணும் தான். ஆனா சூழல் மாறி போன பிறகு அவளால என்ன செய்ய முடியும். ஆமா அவா இல்லனா என்ன? அவள் இடத்துல அடுத்த ஆளை போட வேண்டியது தானே? அதுக்காக எதுக்கு இவ்வளவு வாதாடுறீங்க. ஏன் இதுக்கு முன்னால யாரும் இந்த ஆபீஸ்ல இருந்து மாறி போகலயா? இல்ல அந்த இடத்துல நீங்க வேற ஆளை போடலயா? எதுக்கு இப்ப இந்த கோபம். ஓவியா போல பல திறமையான பொண்ணுங்க இருக்காங்க. உங்க பிரண்ட் தான் ஆட்களை தேர்வு செய்கிறதுல கெட்டிகாரர் ஆச்சே. அப்புறம் எதுக்கு இந்த வீண் பிடிவாதம்.”
“நானும் அதை தான் யோசிச்சேன். மச்சான் இதுவரை இப்படி ரியாக்ட் பண்ணுனது இல்ல. ஏன் இந்த சின்ன விசயத்துக்கு இப்படி ரியாக்ட் பண்ணுறானு தான் தெரியல… சரி. நம்ம ஓவியா வாழ்க்கையில நல்லது நடந்தா சந்தோஷம் தான்.”
“நடக்கும். நிச்சயம் நடக்கும். அதுவும் கூடிய சீக்கிரத்துல நடக்கும்.”
“அப்படினா தேதி எல்லாம் குறிச்சாச்சா…”
“இன்னும் இல்ல. ஆனா பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டு போயாச்சு. தேதி முடிவாகல. ஆனா ஒரு மாசத்துக்குள்ள இருக்கும்ணு சொல்றாங்க.”
“யாரு? ஓவியாவா சொன்னாங்க.”
“அவா எங்க? போனதுல இருந்து என்கிட்ட பேசவே இல்ல. போன் அடிச்சா கூட புது பொண்ணு பிஸியா இருக்காங்க. அவங்க அம்மா தான் சொன்னாங்க. எப்படியோ என் தோழி வாழ்வோட அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துட்டா.”
“என்னமோ நல்லது நடந்தா சரி. ஆனா நம்ம ஆபீஸ்ல இது மேரேஜ் வாரம் போல…”
புரியாதவள் போல முழிக்க…
“இங்க வேலை செய்ற ஒவ்வொருத்தருக்கா திருமணம் முடிவாகுது.”
“நம்ம ஆபீஸ்லயா? அப்படி யாருக்கு முடிவாகி இருக்கு.”
“என் பிரண்ட் முகுந்தனுக்கு முடிவாக போகுது.”
“சாருக்கும் மேரேஜா?”
“ம்… இன்று பொண்ணு பார்க்க போறாங்க. அவங்க அப்பா தான் சொன்னாரு.”
“அப்படினா சார் அது சம்மந்தமா எங்காவது தான் போயிருப்பாங்க. நீ தான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு பேசுறா?”
“சரிம்மா. நான் பேசுறதாவே இருக்கட்டும். அப்போ அவன் எங்க? அதை சொல்லு முதல்ல. போன் அடிச்சா ஏன் எடுக்கல அவன். அவங்க அப்பா அடிச்சும் எடுக்கல. அதனால தான் அவர் பொண்ணு பார்க்க போற விசயத்தையே அவனை பார்த்து எனட்ட சொல்ல சொல்லுறாரு. இந்த அளவு எல்லாருட்ட இருந்தும் தூரமா எதுக்கு போகணும்.”
“அதை நீங்க தான் கண்டுபிடிக்கணும்.”
“கண்டுபிடிக்கிறேன். இவன் ஏன் இப்படி இருக்காணு நான் கண்டுபிடிக்கிறேன்.” என்றவன் சட்டென குழைந்தவாறு,
“ஆமா… நம்ம கல்யாணம் எப்போது?”
என கண்ணடித்து சிரிக்க,
“வீட்டுல ஒ.கே சொன்னீங்கணா . அடுத்த முகூர்த்தத்துலயே உங்க அம்மா பொண்ணை ரெடிப் பண்ணிடுவாங்க. உங்க பிரண்ட்டுக்கு என்ன அதுக்கு முன்னாலயே உங்க வீட்டுல கெட்டிமேள சத்தம் ஒலிக்க செய்யலாம். எப்படி? இன்றே போய் பொண்ணு பார்க்க சொல்லுறீங்களா?”
அவளும் கண் சிமிட்டி சிரித்து கொண்டே சொல்ல, மொத்தமாய் முகம் சுருங்கியவன்,
“உனக்கு என்னதாண்டி பிரச்சினை. அதான் என் வீட்டுல கூட ஏத்துகிட்டாங்கலியா? அப்புறம் எதுக்கு இந்த பிடிவாதம்.”
“பிடிவாதம் பிடிக்கிறேனு தெரியுதுல. விட்டுட்டு போக வேண்டியது தானே. எதுக்கு என்னையே தொங்கிட்டு நிக்குறீங்க.”
“ம்… பச்சையாவே சொல்லுறேன்.”
என்றவன் மென்குரலுக்கு மாறி,
“முடியலடி. என்னை ஏத்துக்கையேன்.”
“ஐயே… இது என்ன இப்படி இறங்கிட்டீங்க. முதல்ல உங்க பாஸை போய் தேடுங்க சார். அப்புறம் பொண்ணு பார்க்க போகிற நேரம் வரை இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணியிருக்கிறதே தெரியாம எங்காவது இருந்திடப் போறாரு.”
என பேச்சை மாற்ற, ஒரு நொடி அவளை ஆழமாக பார்த்தவன்.
“எத்தனை நாள் இப்படியே என்னை அலைய வைக்கிறானு நானும் பாக்குறேன். இப்போ போறேன். பாஸ் எங்க போனாருணு பார்க்க வேண்டி இருக்கு. மாலையில அவரை கூட்டிட்டு பொண்ணு பார்க்க போக வேண்டியிருக்கு. நான் கிளம்புறேன்.”
என எழுந்தவன்,
“ஆமா…உனக்கு ஏதாவது செய்ய வேணும்ணா சொல்லு. செய்துட்டு கிளம்புறேன்.”
“இல்ல. நான் என்னை பாத்துக்கிறேன். நீங்க சாயுங்காலமா வந்து கூட்டிட்டு போய் வீட்டுல மட்டும் இறக்கி விட்டு விடுங்க. போதும்.”
“ம்… சரி. ஆமா? நீ சாப்பிட்டியா?”
“ம்… சாப்பிட்டேன்.”
“மதியானத்துக்கு…”
கொண்டு வந்துட்டேன்.
“அப்படினா நான் கிளம்புறேன். அவனை தேடி கண்டுபிடிக்கணும். மாலையில சரியா வந்து கூட்டிட்டு போறேன். இடையில என் தேவை வந்துச்சினா என் செல்லுக்கு கூப்பிடு.”
“ம்…” என்றதும் நிறைவோடு வெளியேறியவன் கண்ணில், கண்ணாடி அறைக்குள் தலையை தொங்கப் போட்டவாறு இருந்த முகுந்தன் தான் விழுந்தான். முகுந்தனை கண்டதும் சட்டென அவன் முகம் ஒளி வீசியது. ஆனால் கண்ணாடி கூண்டினுள் இருந்த முகுந்தன் முகமோ இருள் பரவியிருக்க கண்டு குழப்பமாக அவன் அறையை நோக்கி நடந்தான்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel