வணக்கம் வாசகர்களே!
ஆபத்து தெரியாமல் குடோனை நோக்கி செல்லும் திலகா… காப்பாற்றி கரை சேர்த்தானா நளன்?
தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போங்க…
ஆபத்து தெரியாமல் குடோனை நோக்கி செல்லும் திலகா…
திலகாவை வண்டியில் ஏற்றி விட்டு விட்டு தன் அறைக்கு நுழைய போனவளை திலகாவின் அறையில் இருந்த செல்போன் அலறும் ஒலி தடுத்து நிறுத்த, தன் அறைக்குள் நுழையாமல் திலகா அறைக்கு வந்தாள் சுந்தரி.
ஐயோ… திலகா போனை வச்சிட்டு போயிட்டாளே?
எண்ணியவள் ஒடி வந்து அதை எடுத்து காதுக்கு கொடுக்க, எதிர் முனையில் நளன் இருந்தான்.
சொல்லுங்க சார். நான் சுந்தரி பேசுறேன். திலகா மேடம் இங்கு இல்ல. அவங்க குடோன்னுக்கு போயிருக்காங்க.
என்றதும் மறுமுனை நிசப்தமாக, ஒருமுறை போன் திரையை பார்த்தவள், அதை மறுபடியும் வைத்து விட்டு வெளியேறிய போது, தூரமாய் வேணி நிற்பது தெரிந்தது. அவளிடம் போய் திலகா கிளம்பி இருப்பதை சொல்லி விடுவோம் என நகர்ந்தவள் அவள் அருகில் வந்த போது தான் அவளின் பேச்சு குரல் செவிபறையை அறைந்தது. சட்டென முன் வைத்த அடியோடு அவள் கால்கள் நின்று விட, பயத்தில் அவள் விழிகள் விரிந்து பின் இதயம் தாறுமாறாக அடிக்க தொடங்கியது.
திலகா…
என அவள் மனம் ஒலமிட்ட போது அவள் மூச்சு அடைத்தது. வேணியை கொலை வெறியோடு பார்த்தாள்.
அவா இங்க இருந்து கிளம்பிட்டா. இன்னும் அரை மணி நேரத்துல குடோனை ரீச்சாகிடுவா. நீங்க அங்க ரெடி தானே. இதுக்கு மேல அந்த ஓவியாவை இந்த ஆபீஸ்ல பார்க்க கூடாது. இன்றோடு அவள் கதை முடியணும்.
சத்தம் குறைவாக அவள் பேசினாலும் அவள் வார்த்தையில் வீரியமும் வன்மமும் தெரிய,
அடி பாதகத்தி. எவ்வளவு கொடுமையான மனசு உனக்கு. உன்னை நம்பி திலகாவை வேறு போக சொல்லி விட்டேனே.
ஈரகுலை நடுங்க நின்றவள், மண்டைக்குள் எதுவோ உறைக்க அவசரமாக திலகா அறைக்கு ஒடி வந்தாள். அதில் பதிவாகியிருந்த நளன் எண்ணுக்கு அடித்தவள்,
சார்… ஒரு எமர்ஜென்ஸி . எனக்கு என்ன பண்ணணு தெரியல. திலகா ஆபத்து இருக்கா. உடனே குடோனுக்கு போங்க. அவளோட உசுருக்கு ஆபத்து…
என்றதும் புரியாமல் ஒரு நொடி விழித்தவன்,
நீ… நீ… என்ன சொல்லுறா?
திலகாவை நான் தான் குடோனுக்கு அனுப்புனேன். ஐயோ… இப்போ பேச நேரமில்ல. நீங்க உடனே குடோனுக்கு போங்க. இல்ல திலகாவை குடோனுக்கு போகாம தடுக்க பாருங்க. பிளீஸ்…
பதட்டத்தோடு சொல்பவளிடம் வேறு பேசத் தோன்றாமல் இலக்கு தெரியாமல் போன பயணத்தை நிறுத்தி, வெளிவுலகை பார்த்தான். குடோன் இருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் அதுவும் ஆறு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தான். சுந்தரியின் பதட்டத்தை விட அதிகமாக மனசு பதற ஆரம்பித்தது.
யாரை அழைப்பது? எப்படி என் திலகாவை காப்பாற்றுவது பேதலித்த மனது விடை தராமல் குழப்ப செல்லில் ஒவ்வொரு நம்பராக தேட ஆரம்பித்தான். கூடவே அவன் வாகனம் ராக்கெட் வேகத்தில் குடோனை நோக்கி விரைந்தது. முதல் ஆளாக முகுந்தனுக்கு தான் அடித்தான். ஓவியாவுடன் தனிமையில் வந்திருந்ததால் அவன் போனை சைலென்டில் போட்டிருந்தான்.
அடுத்து… அடுத்து…
என அவன் ஒவ்வொரு எண்ணாக பதட்டத்தின் உச்சத்தில் அடிக்க தொடங்கிய அதே நேரம்,
தன் முன் எமன் வந்து மண்டியிட்டு நிற்பது தெரியாமல் குடோனை நோக்கி போய் கொண்டிருந்தாள் திலகா. பின் சீட்டில் தலை சாய்த்து கண்மூடி இருந்தாலும் அந்த கண்ணுக்குள்ளும் கலங்கிய கண்ணோடு இருந்த நளனே இருந்தான். ஒவ்வொரு முறை அவனை காயப்படுத்தும் போதும் இவள் காயப்பட்டு இப்படி உடைந்து போய் தான் இருப்பாள். ஆனால் இன்று ஏனோ மனதில் மயான அமைதி. அது விதி அடுத்து எழுதி வைத்திருக்கும் விளையாட்டால் உருவான அமைதியோ… தெரியவில்லை. இன்னும் பத்து நிமிட பயணமே இருந்தது. அந்த குடோனை அடைய…
அதே நேரம்,
குடோன் வாசலுக்கு வந்த ராஜேந்திரன்.
எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டா தானே.
ஆமா பாஸ். நீங்க சொன்னது போல பக்காவா ரெடி பண்ணிட்டேன். ஒயர் இரண்டையும் சாக்கு மூட்டை மேல போட்டுட்டேன். ஒவியா வந்து அந்த அறையை திறந்ததும், பத்த வச்சிட்டு நான் பின்வாசல் வழியா வெளியேறி கதவை பூட்டிட்டு கிளம்பிடுவேன்.
உள்ளால ஓவியா போனதும் வாட்ச்மேன் வந்து கதவை சாத்திக்குவான். உள்ளால வந்த ஓவியாவால முன்பக்கம் வழியாகவும் வெளியேற முடியாது. பின்பக்கம் வழியாகவும் வெளியேற முடியாது. குடோன்ல தீ பிடிச்சிருக்கு என்கிறது வெளியில தெரியவே டைம் எடுக்கும். அதுக்குள்ள அந்த பொண்ணு மேல தீ பரவியிருக்கும். எப்படியும் தீயணைப்பு படைக்கு போன் பண்ணி தீயை அணைக்கிறதுக்குள்ள இங்க எல்லாமே முடிஞ்சிருக்கும்.
சூப்பர் காளி. இதுல எந்த தப்பும் நடந்திட கூடாது. முதலாளி திரும்பி வரும் போது அவர் கேட்ட நல்ல நியூஸை நான் சொல்லணும். இதால அவருக்கு மட்டும் சந்தோஷம் இல்ல. எனக்கும் சந்தோஷம். வந்த முதல் நாளே என் வேலையில மூக்கை நுழைச்சிட்டா. எப்போ சந்தர்ப்பம் கிடைக்கும்ணு காத்திருந்தேன். ஆனா இவ்வளவு சீக்கிரத்துல அவளோட அழிவு என் கையால நிகழும்ணு நினைக்கல. எனிவே நான் கிளம்புறேன். எல்லாம் முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு.
ஓ.கே பாஸ்…
என்ற காளி உள்நோக்கி நடக்க ராஜேந்திரன் முகம் முழுதும் வக்கிரகத்தோடு வெளிவாசலை நோக்கி நடந்தான்.
அதே நேரம், நளனின் வாகனம் குடோனை நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்தது. கண்ணு மண்ணு தெரியாமல் வந்த அந்த வாகனம், பல வாகனத்தின் மேல் மோத போய் மயிற் இழையில் தப்பி வந்து கொண்டிருந்தது.
பத்தாவது முறையாக முகுந்தனுக்கு அழைத்தான். இப்போதும் எதிர்முனை உயிர்பெறாமல் இருக்க, கடுப்பின் உச்சத்தில் காளியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டான். அதுவும் எடுக்கப்படாமல் இருக்க, செல்லை தூக்கி எறிந்தவன் காரை வேகமாக செலுத்த ஆரம்பித்தான்.
அதே நேரம்,
முகுந்தனோடு இருந்த ஓவியா வெளியில் இருந்த தன் பார்வையை திருப்பி, முகுந்தனை ஒர கண்ணால் பார்த்தாள். இப்போதும் அவன் முகம் இறுக்கத்தில் தான் இருந்தது. ஆனாலும் குழப்பத்தில் இருக்கும் ஒருவனை போல நெற்றி சுருங்கி அந்த நெற்றியை ஒற்றை கையால் நீவியவாறு மறுகையால் வண்டியை ஒட்டியவாறு அமர்ந்திருந்தான் முகுந்தன். அவனை வினோதமாக தான் பார்த்தாள். இதுவரை அவனை இப்படியொரு முகத்தோற்றத்தில் பார்த்ததே இல்லை. குழப்பத்தின் உச்சத்தில் இருப்பவன் போலவே இருந்தான்.
என்னவாக இருக்கும். எதுக்கு இப்படி இருக்கிறார்.
என குழப்பத்தோடு நொடியை கடத்தியவள் கவனம் சட்டென வெளிப்புறம் நோக்கி சென்றது. கண்களை ஒடிக் கொண்டிருந்த பூமி தாயின் மேல் செலுத்தினாள்.
மலைமுகடுகளில் மழை மேகங்கள் தவழ்ந்து வந்து அந்த மலை பெண்ணை முத்தமிட்டு மோகம் கொள்ள வைத்த அழகை பார்த்து சிரித்தவள், சிலுசிலு தென்றல் காற்றை முகத்தில் மோத விட்டவாறு இருந்த போது அவள் காதில்,
எனட்ட உனக்கு எதுவும் பேசணுமா ஓவியா.
என்ற குரல் கேட்க. ஒரு நொடி சிலிர்த்தவள் பின் திரும்பி அவனை பார்த்தாள்.இறுக்கத்தை சற்றும் தளர்த்தாமல் இப்போதும் அப்படியே இருந்தது அவன் முகம். தன் செவி கேட்டது நிஜமா என ஒரு கணம் சந்தேகமே வந்து விட்டது.
குழப்பத்தோடு மறுபடியும் அவன் கண்ணை பார்த்தவளை ஒரு நொடி திரும்பி பார்த்தவன்,
நான் கேட்டது காதுல விழலயா? இல்ல இவனுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்னு இருக்கிறியா?
என்றான் சற்று கோபத்தோடு,
ஐயோ… சார். ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. திடீர்ணு கேட்டதும் என்ன பேசணு தெரியாம அமைதியா இருந்தேன்.
சரி. இப்போ சொல்லு. உனக்கு என்கிட்ட ஏதாவது பேச வேண்டி இருக்கா…
பேச வேண்டியா? இல்ல சார். நான் பேச என்ன இருக்கு.
எதுவுமில்லயா? எனட்ட பேச உனக்கு எதுவுமே இல்லயா?
என்றவனை புரியாமல் பார்த்தவள், அவன் கேள்விக்கான நிஜ உருவம் புரியாமல்,
இல்ல சார்… ஏன் கேட்கிறீங்க.
என்றாள் அப்பாவிதனமாக,
அடுத்த நொடியே அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டவள் பயந்து விட்டாள்.
என்னாச்சு சார்…
நடுங்கும் குரலில் தான் கேட்டாள்.
சட்டென அவள் பக்கம் திரும்பியவன்,
தன் கோபத்தில் சிவந்த விழியை அவள் பார்வைக்குள் செலுத்தி,
எதுவுமே பேச வேணாமா?
என்றதும் புரியாமல் அவனை பார்த்தவள்,
என்ன?… ஏ… என்ன… பேசணும்.
என்றதும், கடும் கோபத்தோடு திரும்பி ஸ்டியரிங்கில் ஓங்கி அறைந்து தன் ஆத்திரத்தை அடக்க அவன் பார்க்க, அவனின் செயல் புரியாமல் அவனை வினோதமாக பார்த்த ஓவியா.
நான்… நான் இப்போ என்ன சொல்லிட்டேனு ஆத்திரப்படுறீங்க. அப்படி நான் என்ன பேசணும்னு எதிர்பார்க்குறீங்க. சொன்னா தானே தெரியும்.
என்றாள் அப்பாவிதனமாய்…
நான் சொல்லி தான் உனக்கு தெரியணுமா? உனக்குணு எனட்ட பேச எதுவுமே இல்லையா?
என்றான் வெறுத்து போனவனாய்,
புரியல சார். எதுக்கு இப்படி பேசுறீங்க.
புரியல…
ம்கூம்…
புரியாது. புரிஞ்சிருந்தா. இப்படி சொல்லாம கொள்ளாம கிராமத்துக்கு போய் நிச்சயம் வரை முடிச்சிட்டு வந்திருப்பியா?
நீ.. நீங்க…
ஏய்… நிஜமா உனக்கு புரியல.
ம்கூம்…
என மறுப்பாய் அவள் தலையாட்ட,
உன்னை கிராமத்துல இருந்து வம்படியா கூட்டிட்டு வந்து ஒரு வாரமா உன்னை சுத்தி சுத்தியே ஏன் கிடைக்கிறேனு உனக்கு புரியல…
இல்ல சார்…
சங்கீதாவை வர வச்சி உன் முன்னால அப்படி ஒரு கோமாளி வேஷம் ஏன் போடுறேனு கூட உனக்கு புரியலயா?.
அவங்க… அவங்க… ஏன்?
மறுபடியும் அவள் தடுமாற, அவள் மேல் அனல் கக்கும் பார்வையை விசியவன்,
இல்லாத வேலையை தூக்கிட்டு உன்னை தனியா கூட்டிட்டு வந்து ஏன் இப்படி புலம்பிட்டிருக்கேணு கூடவா தெரியல…
என்றான் கடைசியில் இயலாமையோடு,
இ…. இல்ல சார். உங்களுக்கு என்னாச்சு. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.
ஒவியா அவனின் நிலை பார்த்து பயந்து மொத்தமாய் தடுமாறி, அவனை பயத்தோடு பார்த்து கேட்க, இப்போது அவன் கண்கள் பேசிய மொழி லேசாக புரிய ஆரம்பித்தது. காதலில் உருகி நின்ற அவன் கண்ணை நம்ப முடியாமல் பாத்தவள், இது கனவா? நிஜமா? என ஒரு நொடி சிந்தித்த நேரம், அவன் மொத்தமாய் உடைந்து போனவனாய் அவளை பார்த்தான். அவன் கண்களில் நீர் கட்டியிருந்தது. அதை பார்த்தவள் கண்ணிலும் நீர் கோர்த்து கொள்ள,அவனின் வேதனையில் துடித்த உதட்டை பார்க்க சகிக்காமல் கண்களை இறுக மூடி திறந்தாள். அவளை ஒரு நொடி மெளனமாக பார்த்தவன்,
ஏய்… நிஜமா உனக்கு புரியலியா? இல்ல புரியாதது போல நடிக்கிறியா? இதுக்க மேல கொல்லாதடி. போதும். இந்த வலியை என்னால தாங்க முடியல
என்றான் அழுது விடும் குரலில்,
முகுந்த்…
முதல் முறை அவன் பெயர் தன் வாயில் இவ்வளவு உரிமையோடு வந்ததும் நாக்கை கடித்தவளை, ஏக்கமா பார்த்தவன்.
ஏண்டி… ஏண்டி… உன்னை நான் பார்த்தேன். எந்த பொண்ணுட்டயும் முட்டிட்டு நிற்காம ஒதுங்கி போகிற நான்… நான்… உனட்ட மட்டும் ஏண்டி முட்டிட்டு நின்னேன். உனட்ட மட்டும் மல்லுகட்டி நிக்குறது எனக்கு ஏண்டி புடிச்சிருந்தது? தெரியல. தெரியலடி. எனக்கு அப்போ தெரியல.
என்றவனை வியப்போடு நம்ப முடியாமல் உணர்ச்சி பொங்க ஏறிட்டவள் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்க.
அப்ப தெரியல. ஆனா இப்போ தெரியுது. அப்பவே என் மனசு உனட்ட மண்டியிட்டிருக்கு. ஆமா அந்த நொடி என் அனுமதி இல்லாம என் மனசு உன் கிட்ட வந்திருச்சி. அது அப்போ புரியல. ஆனா இப்போ புரியுது. உன்னை புடிச்சிருந்தது நிஜம். என் மனசு உன்னை நோக்கி நகர்ந்தது நிஜம். அது ஏனு தெரியல. அப்போ தெரியல. அதான் உணர்வை காட்ட முடியல. மண்டை முழுதும் பிரஸர். கூடவே பிஸ்னஸ் பற்றிய சிந்தனை. இது என் உணர்வை மொத்தமா மழுங்கடிச்சி வைத்திருந்தது.
என்றதும் கதறி விட துடித்த மனதை பெரும்பாடுபட்டு அடக்கியவள், துடிக்கும் உதட்டோடு கண்ணில் ஒளியோடு அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். ஒவியா உணர்வின் எல்லையில் இருந்தாள். தன் காது கேட்டது நிஜமா? கற்பனையா? என்ற குழப்பத்தில் இருந்தாள். ஆனால் நிஜம் என்பது போல முகுந்தன் பல மாதமாக மனதில் இறுக்கி வைத்திருந்தவற்றை எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கினான்.
முதல் சந்திப்பிலே என்னை திரும்பி பார்க்க வைத்த முதல் பெண் நீ தான். பிஸ்னஸ் தவிர நான் பேசின முதல் பெண்ணும் நீ தான். சங்கீதாவை தவிர வேற எந்த பெண்ணுட்டயும் நான் அதிகம் பேச மாட்டேன். அதை உடைத்து என் வாழ்க்கைக்குள்ள பார்க்கும் நேரம் எல்லாம் நீ வந்து முட்டிகிட்டு நின்ன அழகு எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு.

உன்னோட வெகுளிதனமான பேச்சு. தப்பு பண்ணிட்டு நீ முழிக்கிற அந்த முழி. சாரி சொல்லும் போது உன் உதடு குவிகிற அழகு எல்லாமே என்னை எதுவோ செய்துச்சு. அதான் திரும்ப திரும்ப நான் உனட்டயே வந்து மல்லு கட்டி நின்னேன். நீயும் பயத்துலயே வந்து தப்பு தப்பா செய்து என் கவனத்தை ஈர்த்தா? பொதுவா இப்படி தப்பு செய்தா எனக்கு கோபம் தான் வரும். உனட்ட எனக்கு ஈர்ப்பு தான் வந்துச்சு.
அதனால தான் அந்த மேனேஜர்ட்ட என் அறைக்கு நீயே எல்லாம் கொண்டு வரணும்ணு சொன்னேன். ஆனா அப்போ என் மனசுல நீ இல்ல. இல்லவே இல்ல. அப்படியும் ஏண்டி உன் உசுரையும் காப்பாத்தணும்ணு எனக்கு தோணுச்சு. என் மேல அடிப்பட்டாலும் பரவாயில்ல, உன் மேல சின்ன அடி கூட பட்டுட கூடாதுனு ஏண்டி உன்னை என் மார்போடு பொதிஞ்சேன். கூடவே தவிச்சேன்.
தெரியல. ஏனு தெரியலடி. ஆனா உனக்கு எதுவும் ஆகிட கூடாதுணு துடிச்சேன். அது நிஜம். நீ எனக்காக துடிச்சது போல நானும் துடிச்சேன். ஏன் துடிச்சேன் எதுக்கு துடிச்சேன். எனக்கு தெரியல. ஆனா அப்பவும் மனசுல காதல் இல்ல… அதன் பிறகும் நீ கண் முழிச்சிட்டியானு தான் எனக்கு நினைவு திரும்பிய அடுத்த நொடியே கேட்டேன். ஏன் கேட்டேன். தெரியல. ஆனா கேட்டேன். நீ நல்லா இருக்கிறா என என் கண்ணால பார்த்த பிறகு தான் மனசு சமாதானம் ஆச்சு. ஆனா அது ஏன்ணு இன்று வரை எனக்கு தெரியல,
உனக்கு வேலை போயிடுச்சேனு என் மனசு பதறுச்சு. சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்டப்படுவியேனு துடிதுடிச்சிது. உன்னை ரொம்ப நல்லா வச்சிக்கணும்ணு தோணுச்சு. நீ என் பக்கத்துலயே இருக்கணும் நினைச்சேன். ஆனா இது எல்லாம் ஏன் நமக்கு தோணுதுணு அப்போ தெரியல. தெரியவே இல்ல. ஒவ்வொரு நாளும் உன் நியாபகம் வந்துச்சு. நீ எப்படி இருக்கிறியோ என்ற தவிப்பு வந்துச்சு. என்னோட அழைப்பை ஏற்று வரலியேணு கோபம் வந்துச்சு. கூடவே தேடி வந்து ஒண்ணு வச்சி கூட்டிட்டு வந்து பக்கத்துல வச்சிடுவோம்ணு நினைப்பு வந்துச்சு.
ஆனா ஏன் வந்துச்சினு தெரியல.
உன்னை என் ஆபீஸ்ல பார்த்த போது அவ்வளவு சந்தோஷம் இருந்துச்சு. நீ பக்கத்துல வந்ததுக்கு அப்புறம் தான் நிம்மதி வந்துச்சு. கூடவே நிறைவும் வந்துச்சு. ஆனா ஏன் வந்துச்சுணு தெரியல…
அதோட எல்லாமே முடிஞ்சி போச்சு. இதுக்க மேல எதுவும் இல்லணு தான் நினைச்சேன். நீ நல்லா இருக்கணும். அதுக்கு என் பக்கத்துல இருக்கணும். உனக்கு தேவையான எல்லாம் நான் செய்யணும். அந்த நொடி அவ்வளவு தான் தோணுச்சு. அதை தான் செய்தேன். அதோட போதும்ணு ஒரு நிறைவு வந்துச்சு. அந்த நிறைவுக்கு காரணம் இதுக்க மேல நீ என்னை விட்டு போக மாட்டா என்கிறதால வந்திருக்கலாம். வந்துச்சு. அதனால தான் என் கவனம் கம்பெனி பக்கம் போச்சு.
ஆனா எப்போ… எப்போ… என்னை விட்டுட்டு மொத்தமா போக முடிவெடுத்தியோ… அப்போ… அப்போ… தான் தெரிஞ்சிது. உன்னை என்னால விட முடியாத இடத்துல கொண்டு உன்னை அமர வச்சிருக்கேன்னு. நீ இல்லாம என்னால தனியா வாழ முடியாது என்கிறதே இடத்துல போய் நீ உட்கார்ந்திருக்காணு. உன்னை பிரிஞ்ச பிறகு தான் இதை எல்லாம் உணரவே ஆரம்பிச்சேன்.
அதான் நளன் சொல்ல சொல்ல கேட்காம, கேரளா வந்தேன். நீ மேரேஜ்க்கு ரெடியானதும் உன் மனசுல நான் இல்லயோணு சந்தேகத்துல தான் அங்கே வந்தேன். ஆத்திரத்தோட தான் வந்தேன். வந்த என்னை நீ ஆரம்பத்துல குழப்புனாலும் கட்டிக்க போறவனோட போட்டோ கூட இல்லாத உன் போனுல என் போட்டோவை பார்த்த போது என் சந்தேகம் சரினு தோண ஆரம்பிச்சி.
கூடவே உன் அறையில என் டாலரை பார்த்த போது உன் மனசுலயும் நான் இருக்கேணு தெரிஞ்சிக்கிட்டேன். அதை உன் வாயால சொல்ல வைக்க தான் ஒரு வாரமா போராடுறேன். ஆனா நீ கல்லு போல இருக்கா… கூடவே கிளம்பி போக ரெடியா இருக்கா? அதான் மனம் திறந்து பேசிடணும்னு இங்க கூட்டிட்டு வந்தேன். இப்போ சொல்லிட்டேன்.
என்றவன் சட்டென வண்டியை நிறுத்தி பின் ஓரம் கட்டி விட்டு அவள் புறம் திரும்ப, நம்ப முடியா அதிர்வில் உறைந்து போய் இருந்தாள் ஓவியா. உறைந்து போய் இருந்தவளை விழி அகலாமல் பார்த்தவன்,
அவள் சிலிர்த்து போயிருந்த இருகையையும் எடுத்து தன் கைக்குள் வைக்க, பெண்ணவளின் நிலையோ எக்கு தப்பாக இருந்தது. அதிலும் அவள் விழிக்குள் தன் விழி கதிரை பாய்ச்சிய போது ஓவியா நிலையோ உறை நிலைக்கே போய்விட்டது.
இப்போ சொல்லு. உன் மனம் திறந்து சொல்லு. நான் உன் மனசுல இருக்கேனா? இல்லையா? சொல்லுடி.
என்றதும்,
என்னடா. பட்டுணு கேட்டுட்டா. இப்போ நான் என்ன சொல்லுவேன். எப்படி சொல்லுவேன். நீ நெருங்கி வந்தாலே என் நாக்கு மேல் அண்டத்தோட ஒட்டிக்கும். இப்படி நெருங்கி என் விரலை உன் விரலுக்குள் வச்சிட்டு உன் விழியால என்னை நங்கூரம் பாய்ச்சி உட்கார வச்சிட்டு கேட்டா, நான் எப்படிடா பேச முடியும்.
தந்தியடித்த உதட்டோடு. வார்த்தையற்ற நிலையில் அவள் இருக்க,
இனியும் மெளனமாகவா இருக்க போறா? வேணாம்டி. ரொம்ப கொடுமையா இருக்கு. நான் இப்படி எல்லாம் இருந்தே இல்ல தெரியுமா? மொத்தமா என்னை நீ திருடிட்டா. உன்னை தவிர இந்த நொடி எனக்கு வேற சிந்தனையே வர மாட்டேங்குது. நான் பொறுத்திருந்தா நீ என்னை விட்டுட்டு போயிடுவியோனு பயமா இருக்கு. அதனால தான் வேற நிறைய பிராப்ளம் பிஸ்னஸ் பக்கம் இருந்தாலும் உன்னை விட்டு நகராம இருக்கேன். புரிஞ்சிக்கடீ. பிளீஸ்…
நீயாடா… நீயாடா இப்படி எல்லாம் பேசுறது. ஆறு மாசமா ஆறு மாசமா…இப்படி எல்லாம் பேச மாட்டியாணு எம்புட்டு ஏங்குனேன். இப்ப வந்து சொல்லுறியேடா. நான் என்ன பண்ணுவேன். எப்படி ஏத்துப்பேன். இன்னும் ஒரு மாசத்துல இன்னொருவனோட திருமணம் நிச்சயமாகி இருக்கும் இந்நேரம் நான் எப்படி பேச முடியும். என் மனசு முழுசும் நீ தான் இருக்காணு எப்படி சொல்ல முடியும். பட்டாம்பூச்சி போல இந்த நொடி வரை உன்னோட வாழ்ந்த எண்ணங்கள் தான் பசுமையா பறந்துட்டிருக்குனு எப்படி வாய் திறந்து சொல்ல முடியும்.
ஓவியாவின் உள்ளம் தன் காதலை கொடுக்க முடியாமல் தவித்த போது,
சட்டென அவளை பிடித்து தன்னோடு அணைத்தவன்
நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனு தெரியுது. அந்த இருட்டு அறையில நீ என்னை கவனிச்சிட்டதுக்கு அப்புறமும் நான் உன்னை உணராம போனது தப்பு தான். அதுக்காக இப்போ வேணா மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதை மனசுல வச்சிட்டு என் மனசு நோக பேசிடாத. நான் தாங்கிக்க மாட்டேன். இப்போ தான் நீ எந்த அளவு என் உள்ளத்துக்குள்ள புகுந்திருக்காணு என்னால புரிஞ்சிக்க முடியுது. நிச்சயம் எனக்கு தெரியும். உன் மனசுலயும் அந்த தாட் இருக்குதுணு . மனசு திறந்து பேசு. மீதி எல்லாம் நான் பாத்துக்கிறேன்.
உணர்ச்சியின் மொத்த வடிவமாய் அவன் நிற்க, உடைந்து விடும் நிலையில் இவள் இருக்க,
சரியாக அந்த போன் கால் அவளுக்கு வந்தது. ஒரு நொடி நிஜ உலகம் உணர்ந்தவள் அவனில் இருந்த விழியை அகற்றி, சட்டென அவனுக்குள் இருந்து விலகியவள் மெல்லமாய் திரும்பி பேக்கில் இருந்த போனை எடுத்து அதன் சத்தத்தை நிறுத்தி காதுக்கு கொடுத்த நொடியில் இருந்து,
ஒவியாவின் விழி பெரிதாக விரிய தொடங்கியது. பிறகு வந்த நொடிகள் எல்லாம் அதிர்ச்சியில் முகம் வெளிறி கண்கள் இரண்டும் குளம் கட்டி விட, புரியாமல் அவளை பார்த்தான் முகுந்தன்.
என்னாச்சு… ஏன்?… ஏன்?… உன் முகம் இப்படி மாறுது.
முகுந்தன் கத்திய கத்தல் அவள் செவி பறையை அடையும் முன் மயங்கி சரிந்தாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel



