வணக்கம் வாசகர்களே!
ஓவியாவின் வீட்டிற்குள் அதிரடியாய் நுழையும் முகுந்தன். அவளின் திருமணம் தடைபடுமா?
“அது எப்படி தம்பி. நிச்சயமான பொண்ணை கூட்டிட்டு போறது. அது சரியாகாது தம்பி. எதுனாலும் நீங்க போணுல பேசி கேட்டு தெரிஞ்சிடுங்க.”
“என்னங்க நீங்க. இப்படி சொல்லுறீங்க. நான் ரொம்ப பழக்கமான பேமிலி ஆகிடுச்சி. சொல்ல வேணாம்ணு தான் இவ்வளவு நேரம் பார்த்தேன். ஆனா நீங்க சொன்னதே சொல்லுறீங்க. வேற வழி இல்ல. சின்ன முதலாளி சொல்லி விட்டதை அப்படியே சொல்லிடுறேன்.
என்றதும் அதிர்ந்து திரும்பிய நளன்,
“உனக்கு நீயே என்னடா சொல்லி விட்டா.”
தனக்குள்ளே கேட்டவாறு குழப்பமாக அவனை பார்க்க,
அவனை ஒரு நொடி பார்த்தவன்,
“சொல்லுடா நளன். உனக்கும் தான் தெரியுமே. எனக்கு சொல்ல கஷ்டமா இருக்கு. நீயே சொல்லிடு. அதுக்க பிறகு இவங்க என்ன முடிவு எடுத்தாலும் எடுக்கட்டும்.”
“என்னடா சொல்ல…”
மனதுக்குள் சொன்னவன் அவர்கள் நாலு பேரையும் பார்த்து திருதிருவென முழிக்க…
“அதாண்டா பாஸ் சொன்னாங்களே. அந்த அக்ரிமென்ட் பற்றி…”
“ஒ!… அக்ரிமென்டை பற்றியா?”
இளித்து கொண்டு சொன்னவன்,
“என்ன பிற்றைடா வச்சிருக்கா. சொல்லி தொலையேன். எதுக்கு இடையில என் உசுரை எடுக்குறா?”
என நினைத்து கொள்ள, அவன் பதட்டத்தை பார்த்த முகுந்தன் எதுவும் உழறிவிட கூடாது என்றே,
“அவனும் சொல்ல தயங்குறானு நினைக்கிறேன். எனக்கும் தயக்கமா தான் இருக்கு. ஆனாலும் நீங்க இவ்வளவு கட்டன் ரைட்டா பேசும் போது நானும் பேசாம இருக்க முடியாதுல.”
“எதுக்கு இப்போ இப்படி சவ்வு போல இழுக்குறாரு. அப்படி என்ன அக்ரிமென்ட்.”
அவளும் குழப்பத்தோடு அமைதியாக அவனை பார்க்க,
“மேடம் கம்பெனியில ஜாயின் பண்ணும் போது ஒரு பத்திரத்துல சைன் வாங்குவாங்க. வேலையில ஜாயின் பண்ணுற எல்லார்ட்டயும் வாங்குவாங்க. வேலையை விட்டு இடைநீக்கம் செய்ய விரும்புனா கம்பெனிக்கு மூன்று மாதத்துக்கு முன்னால தெரியப்படுத்தி இருக்கணும். கூடவே அடுத்த ஆள் அப்பாயின்மென்ட் பண்ணி அவங்க அந்த விசயத்தை கத்துக்கிற வரை கூட இருக்கணும். அப்படி செய்யும் பட்சத்துல வேலையை விட்டு நீங்குறதுல எந்த பிரச்சினையும் இல்ல. அதுவே சொல்லாம கொள்ளாம நின்னாலோ அடுத்த ஸ்டாப்ஸ்க்க கையில முழு பொறுப்பும் கொடுக்கிறதுக்கு முன்னால கிளம்புனாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். என எழுதி மேடம் சைன் பண்ணிட்டு தான் வேலையிலயே ஜாயின் பண்ணியிருப்பாங்க. சரி தானே மேடம்.”
என ஓவியா பக்கம் திரும்பி கேட்க,
“எதையோ செய்றாரு. எதுக்குணு தெரிஞ்சா பேச வசதியா இருக்கும். இப்படி வாலும் புரியாம தலையும் புரியாம பேசுனா என்ன பதில் சொல்லுறது.”
என தனக்குள்ளே பேசியவள். “எதற்கும் தலையாட்டி வைப்போம்.” என நினைக்கும் போதே அவள் தலையாடியது. மகளின் தலையசைவை பார்த்ததும் நம்ப முடியாமல் இருவரும் ஒரு சேர மகளிடம்,
“ நிஜமாம்மா…”
என கேட்க,
முகுந்தனை ஒரு நொடி பார்த்தவள், பின் தாய் முகம் பார்த்து.
“ஆமாம்மா. அப்படி ஒரு ரூல்ஸ் எல்லா கம்பெனியிலும் உண்டு. நீங்க உண்மையை சொல்லி அழைச்சிருந்தா நான் அது பற்றி சொல்லிருப்பேன். நீங்க பொய்யா ஒரு காரணம் சொல்லி கூப்பிட்டாதால என்னால கம்பெனி ரூல்ஸை பாலோ பண்ண முடியல. சார் சொல்லுறது போல நானும் கம்பெனியில சேரும் போது சைன் பண்ணி கொடுத்தேன். மகளின் பதிலால் பயந்து போன அவள் தந்தை.
“அப்படினா போலீஸ் கேஸ் கொடுப்பீங்களா?”
என அப்பாவிதனமாய் கேட்க, நமட்டு சிரிப்போடு நளன் முகுந்தனை பார்த்தான். அவன் உள்ள கிடக்கையை அறிந்ததும் காலை மிதித்து அவன் சிரிப்பை அடக்கிய முகுந்தன்.
“சின்ன முதலாளி நல்லவர் தான். அவர் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறது வரை. அதுவே அவர் பேச்சை மதிக்காம நடந்தா அப்புறம் விளைவை நீங்க தான் ஏத்துக்கணும்.”
அடுத்த குண்டை முகுந்தன் சர்வ சாதாரணமாய் வீச,
முகுந்தனின் பேச்சில் குடும்பமே அரண்டு போய் நின்றது. இவன் எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறான் என தெரியாமல் குழம்பி போய் நளனும், ஓவியாவும் மாறி மாறி பார்த்து கொண்டனர்.
“பெரிய முதலாளி, அப்படி எதுவும் செய்யாத. வேணும்ணா ஒரு முறை கூட்டிட்டு வந்து புது ஸ்டாப்ஸ்க்கு பயிற்சி கொடுத்துட்டு கிளம்ப சொல்லு. அதுங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் போது நாம குறுக்க நிற்க கூடாதுணு சொன்னதால மட்டும் தான் சின்னவரு எங்களை அனுப்பி வச்சிருக்காங்க. நீங்க ரொம்ப யோசிக்காம அனுப்பி வச்சா மேடம் அவங்க வேலையை இன்னொரு ஸ்டாப்ஸ்க்கு சொல்லி கொடுத்துட்டு கிளம்பி வந்திடுவாங்க. இல்ல சட்டப்படி போனா உங்களுக்கு தான் பிரச்சினை பாத்துக்கோங்க.”
முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு பேசிய முகுந்தனை பார்த்து இரண்டு பேருமே குழம்பி போயினர். எழிலரசி தான் கணவரை உள் அழைத்து சென்றாள். பத்து நிமிடம் எடுத்து கொண்டு இருவரும் வெளியே வந்தனர்.
முகுந்தன் ஆர்வமாக தான் அவர்களை பார்த்தான். ஓவியாவுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. கூடவே நம்பிக்கை இன்மையும் இருந்தது. அவள் மன்றாடி கேட்டும் விடாதவர்கள் இப்போது விட்டு விடுவார்களா என்ன?
ஆனால் வெளி வந்தவர்கள் இப்படி ஒரு குண்டை தூக்கி போடுவார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் மட்டுமா? முகுந்தன் கூட நினைக்கவில்லை.
“ஒரு முறை நாங்களே பெரிய முதலாளிட்ட பேசிடுறோப்பா. நீ… போன் போட்டு கொடு.”
“அப்பாட்டயா?
அதிர்ந்து போய் நின்றவனை பொங்கும் சிரிப்போடு பார்த்த நளனை கொலைவெறியோடு பார்த்தவன் கண்ணால் எதோ பேச,
“டேய்… வேணாம்டா. நீ அதிகமா போறா?”
என்றவனின் பார்வையை அடக்கியவன், முன்னால் நின்றவர்களிடம் இளித்து கொண்டே பேச்சை வளர்க்க, அடுத்த ரெண்டு நிமிடத்திலே, முகுந்தனின் கட்டளையை செயல்படுத்தியவன்,
திரும்பி பார்த்த முகுந்தனிடம்,
“டண் …”என்றதும்,
“பெரிய முதலாளிட்ட தானே. பேசிட்டா போச்சு…”
என நளன் பக்கம் திரும்ப, இவன் பார்வையின் அர்த்தம் புரிந்து அவனும் அவசரமாக சில நம்பரை அழுத்தி காதுக்கு கொடுத்தான்.
“பெரியய்யா. நீங்க சொன்னா தானே ஓவியாவோட பேரன்ஸ் நம்புவாங்களாம். நீங்களே பேசுங்க.”
சொன்னவன் போனை எழிலரசி முன் நீட்ட, எழிலரசி கணவரை பார்த்தார். மனைவியின் அர்த்தம் புரிந்த அரிசந்திரன் நளன் கையில் இருந்து போனை வாங்கி காதுக்கு கொடுக்க,
“அந்த தம்பி சொன்னது போல ஒரு வாரத்துக்கு உன் பொண்ணை மெட்ராஸ்க்கு அனுப்பி வையா… ஆக வேண்டிய அத்தனை வேலையும் முடிச்சதும் அவனே திரும்ப அனுப்பி வச்சிடுவான்? என்ன நான் சொல்லுறது.”
“ஐயா சொன்னா சரிதாங்க. நான் உடனே அனுப்பி வைக்கிறேன். நீங்க சொன்னது போல அவளுக்கு எதுவும் ஆகாம பத்திரமா ஒரு வாரத்துல திருப்பி அனுப்பிச்சிடுங்க.”
“அனுப்புறேனு தம்பி சொல்லிட்டான்ல்ல. அவன் சொன்னா செய்வான். நீ மறுக்காம அனுப்பு.”
என வைத்து விட, இதுவரை இருந்த குழப்பம் நீங்கி அரிசந்திரன் மனைவியை நிறைவோடு பார்த்தார்.
கணவரின் முகத்தை பார்த்தே தீர்மானித்தவள்,
“நீங்க கூட்டிட்டு போங்க தம்பி. ஆனா அதிக நாள் எடுத்துக்க கூடாது. அதிகபட்சமா ஒரு வாரம். அதுக்குள்ள அவளுக்கான வேலையை முடிச்சிட்டு என் மகளை பத்திரமா எனக்கு திருப்பி அனுப்பிடுங்க.”
சொல்லும் போதே தாயின் கண்ணில் கண்ணீர் கட்டிக் கொள்ள,
புரியாமல் தாயை பார்த்தாள் ஓவியா. ஆனால் அதற்கு மேல் அவளை முகுந்தன் சிந்திக்கவிடவில்லை.
குழப்பம் மனம் முழுவதும் இருந்தாலும் திருமண சடங்கு என அந்த மாப்பிள்ளை முன் நிறுத்தி புழுங்கி புழுங்கி நிற்கும் நிலைக்கு கொஞ்ச நாள் விடிவு கிடைக்கட்டும் என்றே அவனுடன் கிளம்ப ரெடியானாள். மனம் முழுவதும் விடுதலை கிடைத்த உணர்வு.
சந்தோஷ முகத்தோடு வெளிவந்த அவளை பார்க்க எழிலரசிக்கு தான் உறுத்தலாக இருந்தது. பயத்தில் அனுப்ப சம்மதித்து விட்டோம். நாம் செய்கிறது சரியா என்ற தவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் வெளி காட்டி கொள்ளவில்லை.
வந்த காரில் தான் மூன்று பேரும் மெட்ராஸ் நோக்கி பயணமானார்கள். டிரைவர் வண்டியை எடுக்க, நளன் டிரைவர் சீற்றின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். முகுந்தன் பின்னால் ஏறி கொள்ள, அவன் அருகில் அமர தயக்கப்பட்டு வெளியில் தயங்கியவாறு நின்றாள் ஓவியா. அவளை ஒரு நொடி ஆழமாக பார்த்தவன்.
“எவனோடோ நெருங்கி நின்று நிச்சயம் பண்ண தயக்கம் வரல. என் பக்கத்துல இருக்க மேடத்துக்கு தயக்கமா இருக்குதோ.”
அவன் பார்வையால் தான் கேட்டான். வாய் திறந்து பேச தோன்றவில்லை. அந்த அளவு கோபம் அவள் மேல். அவன் முறைப்பை பார்த்தவள் பயத்தோடு வந்து வண்டியில் ஏறி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். ஆனாலும் அவனை நெருங்கி அமரவில்லை. மறுபுறமாய் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அவர்கள் இருவருக்குமான இடைவெளியை கண்களால் அளந்தவன் எதுவும் பேசாமல் முன்னோக்கி திரும்ப, அதே நேரம்,
வண்டி வேகம் எடுத்தது. அவனுக்கும் அவளுக்குமான கொஞ்சமான இடைவெளி. பெண்ணவளுக்கோ உள்ளங்கையே வியர்த்து விட்டது.
“என்ன இவருட்ட நெருங்கினா மட்டும் ஏன் என் உள்ளமே நடுங்குது. மனசு எல்லாம் தந்தியடிக்குது. படபடப்பா வருது. அந்த மாப்பிள்ளை பக்கத்துல நின்ன போது கூட எதுவுமே இப்படி செய்யலியே. இவரோட அருகாமை மட்டும் எனக்கு ஏன் புதுபுது உணர்வை தருது.”
அவனை தயக்கமாக பார்த்தாள். அவன் திரும்பி கூட பார்க்கவில்லை. இறுக்கமாகவே இருந்தான். இவள் பார்ப்பது தெரிந்தும் கண்டு கொள்ளாதவன் போல இருந்தான்.
“மர கட்டை. கல்லு போல இருக்கிறதை பாரு. அப்பவும் அப்படி தான். இப்பவும் அப்படி தான். இவன் எல்லாம் மாறப் போறதே இல்லை. இவனை போய் ஆசையா பாக்குறோமே…”
சட்டென திரும்பி கொண்டாள். “இந்த மூஞ்சியை காட்ட தான் வீடு தேடி வந்து கூட்டிட்டு வந்தாரா? முசடு… முசடு… நானும் தேடி வந்ததும் என்னவெல்லாமோ ஒரு நொடி நினைச்சிட்டேன். இவராவது என்னை தேடி வருகிறதாவது. ஏதாவது என்னால வேலை ஆக வேண்டியிருக்கும். அதான் கிளம்பி வந்திருக்காரு. வேற ஒண்ணுமில்ல. ஒவியா மனசை அலைபாய விடாத. அவர் முதலாளி. அவர் உன் முதலாளி மட்டும் தான். அப்போ போல இப்பவும் மனசுக்குள்ள கற்பனையை வளர்த்துட்டு அவஸ்தைப்படாத. அவர் உன்னோட முதலாளி. அவ்வளவு தான். வேற எதுவும் இல்ல.”
மனதுக்குள் தனக்கு தானே சொல்லி கொண்டவள், அதன் பின் வைராக்கியம் கொண்டே அவன் புறம் திரும்பவில்லை. அவள் முகத்தை வெட்டி கொண்டு திருப்பி கொண்டதை ஒரக்கண்ணால பார்த்தவன்,
ஒரு புளித்த சிரிப்பை உதிர்த்து விட்டு அவனும் திரும்பி கொண்டான்.
நளனுக்கு தான் இப்போது தவிப்பாக இருந்தது. இவன் எதற்கு இப்போது ஓவியாவை அழைத்து கொண்டு மெட்ராஸ்க்கு வருகிறான். அடுத்தவனுக்கு சொந்தமாக ரெடியாகி விட்ட அவளிடம் எதை எதிர்பார்த்து இந்த முடிவை எடுத்தான். இதனால் ஓவியா வாழ்வில் பிரச்சினை வருமா? அந்த பிரச்சினையால் இப்போது நூல் இழையளவு திலகாவோடு இருக்கும் நேசம் முறியடிக்கப்படுமா? அல்லது பெண் பார்க்க போகாமல் பெரிய முதலாளியை கோபப்படுத்தி விட்டான். அவர் வழி ஏதாவது பிரச்சினை முளைக்குமா?
என்றெல்லாம் நளனின் மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது. ஆனால் தந்தைக்கு பெருத்த அவமானத்தை தேடி தந்து விட்டோம் என தெரியாமல் எப்படியோ தன் காதலை காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதியில் பின் சீற்றில் கண்ணமர்ந்திருந்த முகுந்தனுக்கு தெரியாது. தன் காதலுக்கு வில்லனாய் வர போவது ஓவியா குடும்பமோ… அவளை கரம்பிடிக்க ரெடியாகி இருக்கும் மாப்பிள்ளை குடும்பமோ இல்லை என்பது. இவர்களை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்ற திருப்தியில் தான் அவளை அழைத்து கொண்டு கிளம்புகிறான்.
அவனுக்கு இப்போது தெரிய வேண்டியதே ஓவியா மனதில் தான் இருக்கிறோமா என்று தான். அவனுக்கு நிச்சயமாக தெரியும். அவள் மனதில் தான் தான் இருக்கிறோம் என்று. இல்லையேல் எங்கோ தொலைந்ததாக நினைத்த டாலரை அவள் ஏன் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அன்று அவள் நெற்றியில் இருந்த வழிந்த குருதியை நிப்பாட்ட அவன் கட்டிவிட்ட அவனின் கிளிந்த சட்டையை தூரமாய் வீசாமல் எதற்காக இன்றும் பாதுகாப்பாய் வைக்க வேண்டும்.
இந்த இரண்டு விசயமும் அவனை குழப்பியது என்றாலும் அதிகம் குழப்பியது மாப்பிள்ளையின் புகைபடம் ஒன்று கூட அவள் செல்லில் இல்லாதது தான். அவனுக்கு நிச்சயமாக தெரிந்து விட்டது. ஒவியா விரும்பி இந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று. அவள் மனதில் ஒளிந்திருக்கும் காதலை வெளிக் கொண்டு வர வேண்டி தான் அவளை அழைத்து கொண்டு கிளம்பியிருந்தான்.
ஆனால்,
இன்று வரை அவசரம் அவசரமாக நடக்கும் எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தந்தை தான் என்பது பாவம் அவனுக்கு தெரியவில்லை. ஹாஸ்பிட்டலில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது அவன் வலியில் இவள் பெயரை உச்சரித்த போதே சக்கரவர்த்தி உஜாராகி விட்டார் என்பதும் அவனுக்கு தெரியாமல் போனது. இருவரையும் ஒரே நேரம் கீழே கொண்டு வந்ததும், மதியழகன் இருவரையும் ஒரே இடத்தில் மீட்டதையும் சொன்ன போது ஒரு சிறு விதை மனதில் விழுந்து விட்டது. அது அவர் மண்டையை அன்றே குடைய ஆரம்பித்து விட்டது. ஆனாலும் மகனின் உயிர் மேல் உள்ள ஆசையில் எதுவும் செய்யாமல் அப்படியே இருந்தார்.
ஆனால் எப்போது இவன் கண் விழித்து இவளை பற்றி விசாரித்தானோ அப்போதே அவர் மனது குடைய ஆரம்பித்து விட்டது. அதனால் தான் முகுந்தனுக்கே தெரியாமல் அவசரம் அவசரமாக அவன் பூரணமாக குணமாகும் முன் மெட்ராஸ்க்கு கொண்டு சென்று விட்டார்.
அதோடு இந்த பிரச்சினை முடிந்து விட்டதாக தான் நினைத்தார். அந்த நம்பிக்கையில் தான் வெளிநாட்டிற்கும் பயணமானார். ஆனால் திரும்பி வந்த போது அந்த பெண்ணே தன் அலுவலகத்தில் இருக்க கண்டதும், மகன் அவளுக்கு அதிக இம்பார்டென்ட் கொடுத்ததும் அவரை யோசிக்க வைத்து விட்டது. மகனுக்கு வலிக்காமல் அந்த பூவை அவனிடமிருந்து புடுங்க தான் இது அத்தனையும் செய்தார். கூடவே இவனிடமும் அனுமதி கேட்காமல் தன் நண்பனும் தொழில் பார்ட்னருமான தீனதயாளன் மகளை பேசியும் முடித்தார். இந்த விசயத்தில் நீலவேணிக்கு கூட ஆத்திரம் தான்.
தன் அண்ணன் மகளை இந்த வீட்டிற்கு மருமகளாக கொண்டு வர வேண்டும் என்று சில வருடமாகவே போராடியவளுக்கு கணவரின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை தான் தந்தது. ஆனாலும் சக்கரவர்த்தி ஒரு முடிவை எடுத்த பின் அதை மாற்றும் துணிவு இதுவரை அந்த வீட்டில் யாருக்கும் வந்தது இல்லை.
இதில் விதிவிலக்கே முகுந்தன் ஒருவன் தான். அதனால் தான் அவனிடம் அவர் என்றும் நேரடியாய் மோதியது இல்லை. இதுவரை அவர் ஆட்டும் பொம்மையாக தான் அவனை வைத்துள்ளார். ஆனால் ஆட்டுபவர் அவர் என்பது அவனுக்கு தெரியாமல் காய்நகர்த்தி காரியம் சாதித்து விடுவார். அந்த வரிசையில் தான் இந்த பெண் பார்க்கும் படலத்துக்கும் ஏற்பாடு செய்தார். முதலிலே சொல்லி செய்தால் அவன் பிளான் செய்து ஒதுங்கி விடுவான் என்று தான் அவசர கதியில் ரெடியாக்கினார்.
அப்படி சைலென்டாக எல்லாம் செய்து காரியத்தை நிறைவேற்றி கொள்ளலாம் என கனவு கண்டவருக்கு பெண் பார்க்க செல்லாமல் மகன் முதல் அடியை கொடுத்து விட, வீட்டு ஹாலில் கொலை வெறியோடு நின்றிருந்தார். ஆத்திரம், வெறி, எல்லாம் அவருள் பொங்கி பொங்கி வந்தது. அதுவும் தீனதயாளன் முன் தலைகுனிய வைத்து விட்டானே என்ற கோபம் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது.
அங்குமிங்கும் அவஸ்தையாய் நடந்து கொண்டிருந்தவனை பார்த்து நீலவேணி பயத்திலே ஒதுங்கி கொண்டாள். காந்தாரியோ மகனிடம் நெருங்கி வந்து வாய் கொடுத்து புண்ணாகி போய் மெளனமாக ஒரு மூலையில் நின்றார். பிரபா பேச நினைக்கவே இல்லை. தம்பி செய்த செயலால் தந்தை எவ்வளவு காயப்பட்டிருப்பார் என தெரிந்ததால் ஒதுங்கி கொண்டாள். ஆனால் ரங்கராஜனால் அப்படி இருக்க முடியவில்லை.
“இப்போ என்ன நடந்து போச்சுனு இப்படி இருக்கிறா . வர முடியாத இடத்துல போய் மாட்டியிருப்பான். இல்ல நளனுட்ட நீ சொல்லிட்டு வந்த விசயம் இன்னும் அவன் காது வரை போயிருக்காது.”
பேரனை காப்பாற்ற அவர் சொன்ன வார்த்தையில் டென்ஷனான சக்கரவர்த்தி,
“சும்மா இருங்கப்பா. அவனுக்கு வக்காளத்து வாங்கி எனட்ட வாங்கி கட்டிக்காதுங்க. அவன் மேல செம கோபத்துல இருக்கேன். நளன் சொல்லல என்றே வையுங்க. நான் இத்தனை முறை போன் அடிக்கிறேன் இல்ல. உங்க பேரனால போனை அட்டன் பண்ணி பேச முடியாதா? தான் எங்க இருக்கேன்னு சொல்ல முடியாதா?”
கோபத்தில் சாடிய மகன் அருகில் வந்தவர்,
“இந்த கோபம். இந்த கோபம் தாண்டா. உன்னையும் அவனையும் பிரிக்கிறது. எதுக்கெடுத்தாலும் அவனுட்ட எரிஞ்சி விழுந்து தான் அவன் குடும்பத்தோட ஒட்டுதல் இல்லாம இருக்கிறான். இனியாவது உன்னை கொஞ்சம் மாத்திக்கடா. இப்ப என்ன இன்று தானே போக முடியல. இன்னொரு நாள் போயிக்கலாம்டா.”
“சும்மா பேசாதுங்கப்பா. தயாளன் என்னை பற்றி என்ன நினைப்பான். இனி அவன் முகத்துல எப்படி விழிப்பேன்.”
“என்னடா பேசுறா? நாம என்ன அவன் பொண்ணை வேணாம்ணா சொல்றோம். இல்ல இந்த கல்யாணம் நடக்காதுனா சொல்றோம். பொண்ணு பார்க்க இன்று வர முடியலணு சொல்ல போறோம். இதுக்கு ஏண்டா இந்த குதி குதிக்கிறா?”
“விசயம் தெரியாம பேசாதுங்கப்பா. இன்று நாம பொண்ணு பார்க்க போகல. அவன் பொண்ணை நிச்சயம் பண்ண போறோம்.”
“என்னடா சொல்லுறா?”
ரங்கராஜன் மட்டுமல்ல குடும்பமே அதிர்ந்தது. கட்டிகார முடிவு என ஒருவருக்கும் சொல்லாமல் பெண் பார்க்க என்று அழைத்து சென்று நிச்சயமும் செய்து விட்டு வந்து விட வேண்டும் என்பது தானே அவர் திட்டம். இப்படி செய்து அவனை மாட்ட வைத்து விட்டால் இந்த திருமண வலையில் இருந்து அவனால் பின்வாங்க முடியாது. காரணம் தீனதயாளன் சாதாரண ஆள் இல்லை. அவனை பகைப்பது எவ்வளவு பெரிய எதிர்வினையை உண்டு பண்ணும் என அவனுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு வேண்டியாவது அமைதியாவான் என்று தான் நினைத்து சைலென்டாக எல்லா வேலையும் செய்தான். ஆனால் மகன் தன் முதல் திட்டத்தையே அடித்து ஆடி தன்னை நிலைகுலைய வைப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“உங்க பேரன் அப்படி சொன்னா வர மாட்டானு தான் பொண்ணு பார்க்க போறதா சொன்னேன்.”
என்றவனை கோபமாக முறைத்த ரங்கராஜன்,
“நீ உண்மையை சொல்லியிருக்கணும். அப்படி சொல்லி இருந்தா என் பேரன் எப்படியாவது வந்திருப்பான். நீ பொண்ணு பார்க்கணு சொன்னதும் அவங்க எல்லாரும் பார்த்துட்டு வரட்டும்ணு வராம இருந்திருப்பான். அவன் கூட உன் அம்மாட்ட கூடிய சீக்கிரத்துல உங்க ஆசையை நிறைவேற்றுறேன்னு சொல்லி இருக்கான்ல்ல. நிச்சயம் ஏதாவது வேலையில தான் மாட்டி இருப்பான்.”
“என்ன இருந்தாலும் இப்படி என் மூக்கை அறுத்திருக்க கூடாதுப்பா…”
சொன்னவர் ஆத்திரத்தோடு வந்து சோபாவில் இருக்க, அவர் அருகில் வந்து அமர்ந்த வரதராஜன்.
“இனி நல்ல நாள் இல்லையா என்ன? இல்ல தீனதயாளன் அவன் பொண்ண கொடுக்க மாட்டேன்னு சொல்ல போறானா ? எதுக்கு இப்போ டென்ஷன் ஆகிறா . தீனதயாளன்ட்ட நான் பேசுறேன். இன்னொரு நாள் இந்த பங்ஷனை வச்சிக்கலாம்.”
சொன்ன ரங்கராஜன் செல்லோட இடது பக்கம் போக, கடுகடுத்த முகத்தோடு வெளியே வந்த சக்கரவர்த்தி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சிறிது நேரம் பால் கனியில் நின்று வெளிவுலகை முறைத்தவன் எதையோ தீர்மானித்தவன் போல், தன் செல்லை எடுத்து சில எண்களை அழுத்தி,
“சுந்தரம்… முகுந்தன் எங்க இருக்கான்னு பாரு. அந்த பொண்ணோட இருந்தா அவளோட கதையை முடிச்சிடு. இனியும் தாமதிக்க வேணாம்.”
சொன்னவர் முகத்தில் அப்படி ஒரு வில்லன்தனம் அப்பட்டமாய் தெரிய, ஒரு வில்லதனமான சிரிப்பை உதிர்த்தவாறு ஒரு பக்கத்தில் தீனதயாளனோடு பேசிக் கொண்டிருந்த ரங்கராஜனை பார்த்தார் சக்கரவர்த்தி.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel

