வணக்கம் வாசகர்களே!
வாணியின் சூழ்ச்சி தெரியாமல் தீ விபத்தில் மாட்டி கொண்ட திலகா. நளன் காப்பாற்ற வருவாரா?
வாணியின் சூழ்ச்சி தெரியாமல் தீ விபத்தில் மாட்டி கொண்ட திலகா.
திலகாவை வண்டியில் ஏற்றி விட்டு விட்டு,
உற்சாகத்தோடு தன் அறைக்குள் நுழைய சென்றவளின் செவியில் சுவருக்கு பின்னால் வாணி யாரோடோ பேசும் குரல் கேட்டது. அந்த குரலில் தெரிந்த அவசரமும் படபடப்பும் எதையோ இவளுக்கு சொல்ல, நின்று அந்த குரல் வந்த திசையில் செவியை பதித்து வைத்தவாறு அசையாமல் நின்றாள்.
“அவா இங்க இருந்து கிளம்பிட்டா. இன்னும் அரை மணி நேரத்துல குடோனை ரீச்சாகிடுவா. இதுக்கு மேல அந்த ஓவியாவை இந்த ஆபீஸ்ல நான் பார்க்க கூடாது. இன்றோடு அவளோட கதை முடியணும்.”
வாணியின் கொடூரமான வார்த்தை சுந்தரியின் செவிப்பறையை தீண்டியதுமே, அவள் உடலும் உள்ளமும் ஆடத் தொடங்கியது.
இந்த … இந்த பேச்சுக்கு அர்த்தம் என்ன? ஒவியாவின் உயிரை குடிக்க இவள் பிளான் பண்ணுறாளா? எதுக்கு? ஏன்? ஏன் இந்த கொலைவெறி.
எண்ணிய வேகத்திலே அந்த எண்ணமும் மனதில் உதித்தது,
ஐயோ குடோனுக்கு போனது ஒவியா இல்லயே. திலகா அல்லவா? கடவுளே இவர்கள் அப்படி என்ன வலை விரித்து வைத்திருக்கிறார்கள். கால் இல்லாத பெண் எப்படி அகப்பட போகிறாள். மனது பரபரத்தது. மூளை சிந்திக்கும் திறனை இழந்தது. அடுத்து என்ன செய்ய என்ற எண்ணம் கூட வர மறுத்தது. கூடவே அழையா விருந்தாளியாய் மயக்கம் வரும் போல இருந்தது.
மெல்ல சுவரை பிடித்து மெல்லமாய் நடையை போட்டவளோட உடலே ஆடியது. எவ்வளவு கொடூரமான திட்டம். இந்த வாணியின் திட்டம் தெரியாமல் நானே அவளுக்கு உதவி விட்டேனே. காப்பாற்ற வேண்டும். நான் எப்படியாவது திலகாவை காப்பாற்ற வேண்டும். காப்பாற்றியே ஆக வேண்டும்.”
“என்ன செய்யலாம்… என்ன செய்யலாம்…”
மண்டையை மாங்கு மாங்கென அடித்தவள் எதுவும் தோன்றாமல், அப்படியே உடைந்து போய் அமர்ந்தாள்.
‘அடி பாதகத்தி. எவ்வளவு கொடுமையான மனசு உனக்கு. உன்னை நம்பி திலகாவை வேறு போக சொல்லி விட்டேனே.’
ஈரகுலை நடுங்க இருந்தவள், மண்டைக்குள் எதுவோ உறைக்க, அவசரம் அவசரமாக தன் செல்லை எடுத்தாள். அதில் பதிவாகியிருந்த முகுந்தன் எண்ணுக்கு முதல் முதல் அடித்தாள். ஒவியாவோடு முகுந்தன் சென்றிருந்ததால் செல்லை சுவிட்ச் ஆப் செய்திருந்தான்.
ஐயோ சார். இந்த நேரமா செல்லை சுவிட்ச் ஆப் பண்ணணும். நான்… நான் இப்போ என்ன செய்வேன். சட்டென நளன் நியாபகம் வர, அவன் எண்ணுக்கு அடித்தவள்,
அவனும் இருந்த மனநிலையில் முதலில் எடுக்கவில்லை. பின் சீற்றத்தோடு எடுத்தான். எதிர்முனை குரலின் பதட்டத்தையும் படபடப்பையும் உணர்ந்து அமைதியானவன் செவி கேட்ட விசயத்தில் உள்ளம் சுருங்கி உணர்வு வடிந்து மனம் பேயாட்டம் போட்டது.
திலகா… திலகாவுக்கு என்னாச்சு.
உடைந்து போய் தான் கேட்டான். நடந்தவற்றை சுந்தரி சுருக்கமாக விவரிக்க, பதட்டத்தோடு வண்டியை குடோனை நோக்கி ஓடவிட்டான். மனதில் மரண பீதி குடிக் கொண்டிருந்தது.
பைத்தியகாரன் போல விடாமல் முகுந்தனுக்கு அடித்தான். அவன் செல் உயிர் பெறவே இல்லை. பயம். மனம் முழுதும் பயம். அந்த பயமே அவன் காரை அசுர வேகத்தில் ஓட விட்டது.
யாரை அழைப்பது? எப்படி என் திலகாவை காப்பாற்றுவது பேதலித்த மனது விடை தராமல் குழப்ப செல்லில் ஒவ்வொரு நம்பராக தேட ஆரம்பித்தான். கூடவே அவன் வாகனம் ராக்கெட் வேகத்தில் குடோனை நோக்கி விரைந்தது.
அடுத்து… அடுத்து…
என அவன் ஒவ்வொரு எண்ணாக பதட்டத்தின் உச்சத்தில் அடிக்க தொடங்கிய அதே நேரம்,
தன் முன் எமன் வந்து மண்டியிட்டு நிற்பது தெரியாமல் குடோனை நோக்கி போய் கொண்டிருந்தாள் திலகா. பின் சீட்டில் தலை சாய்த்து கண்மூடி இருந்தாலும் அந்த கண்ணுக்குள்ளும் கலங்கிய கண்ணோடு போன நளனே இருந்தான்.
எத்தனை காலம் அவனை அழ வைப்பது. பேசாமல் நாமும் ஓவியாவோடு ஊருக்கு போய் விட்டால் என்ன?
போய்….
எண்ணமே திகிலை ஏற்படுத்த,
சட்டென கண் திறந்தவள் கண்ணுக்கு குடோனின் முகப்பு பகுதி விழுந்தது. உள்ளே எமன் தனக்காக காத்திருப்பது தெரியாமல் டிரைவரின் உதவியோடு அந்த வாகனத்தில் இருந்து இறங்கினாள் திலகா.
அதே நேரம்,
குடோன் முன் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டதுமே உள்நோக்கி நடக்க தொடங்கிய ராஜேந்திரன் முகம் முழுதும் வக்கிரகத்தோடு பின்பக்கம் வந்து வெளிவாசலை அடைந்து பின்பகுதி கதவை தன் கையில் இருந்த பெரிய பூட்டால் பூட்டி விட்டு நடையை கட்டினான்.
இன்றோடு என் எனிமி ஒளிஞ்சா…
உரக்க அவன் உதடு கூவிக் கொண்டது.
அதே நேரம், நளனின் வாகனம் குடோனிலிருந்து 1 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தது. கண்ணு மண்ணு தெரியாமல் வந்த அந்த வாகனம், பல வாகனத்தின் மேல் மோத போய் மயிற் இழையில் தப்பி வந்து கொண்டிருந்தது.
பத்தாவது முறையாக முகுந்தனுக்கு அழைத்தான். இப்போதும் எதிர்முனை உயிர்பெறாமல் இருக்க, கடுப்பின் உச்சத்தில் காளியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டான். அதுவும் எடுக்கப்படாமல் இருக்க, செல்லை தூக்கி எறிந்தவன் காரை வேகமாக செலுத்த ஆரம்பித்தான்.
அதே நேரம்,
முகுந்தனோடு இருந்த ஓவியா வெளியில் இருந்த தன் பார்வையை திருப்பி, முகுந்தனை ஒர கண்ணால் பார்த்தாள். இப்போதும் அவன் முகம் இறுக்கத்தில் தான் இருந்தது. ஆனாலும் குழப்பத்தில் இருக்கும் ஒருவனை போல நெற்றி சுருங்கி அந்த நெற்றியை ஒற்றை கையால் நீவியவாறு மறுகையால் வண்டியை ஒட்டியவாறு அமர்ந்திருந்தான் முகுந்தன். அவனை வினோதமாக தான் பார்த்தாள். இதுவரை அவனை இப்படியொரு முகத்தோற்றத்தில் பார்த்ததே இல்லை. குழப்பத்தின் உச்சத்தில் இருப்பவன் போலவே இருந்தான்.
இவர் இப்போ என்னை எங்க கூட்டிட்டு போறார். யாரை பார்க்க போறோம்.
அவளுள் ஆயிரம் கேள்விகள் அடுக்கடுக்காய் முளைத்தாலும் ஒன்றை கூட கேட்கும் துணிவு அவளுக்கு வரவில்லை. காரணம் முகுந்தனின் இறுகி இருந்த முகம்.
என்னவாக இருக்கும். எதுக்கு இப்படி இருக்கிறார்.
என குழப்பம் வேறு நொடி பொழுது வந்து அவளை சங்கடப்படுத்தியது. மனது அலைபாய்வதை காட்டி கொள்ள விரும்பாமல் கண்களை ஒடிக் கொண்டிருந்த பூமி தாயின் மேல் செலுத்தினாள்.
மலைமுகடுகளில் மழை மேகங்கள் தவழ்ந்து வந்து அந்த மலை பெண்ணை முத்தமிட்டு மோகம் கொள்ள வைத்த அழகை பார்த்தவள் மனது லேசானது, சிலுசிலு தென்றல் காற்றை முகத்தில் மோத விட்டவாறு இயற்கையோடு அவள் ஒன்றி போய் இருந்த போது அவள் காதில்…
“எனட்ட உனக்கு எதுவும் பேசணுமா ஓவியா.”
என்ற குரல் கேட்க. ஒரு நொடி சிலிர்த்தவள் பின் திரும்பி அவனை பார்த்தாள்.இறுக்கத்தை சற்றும் தளர்த்தாமல் இப்போதும் அப்படியே இருந்தது அவன் முகம். தன் செவி கேட்டது நிஜமா என ஒரு கணம் சந்தேகமே வந்து விட்டது.
குழப்பத்தோடு மறுபடியும் அவன் கண்ணை பார்த்தவளை ஒரு நொடி திரும்பி பார்த்தவன்,
“நான் கேட்டது காதுல விழலயா? இல்ல இவனுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்னு இருக்கிறியா?”
என்றான் சற்று கோபத்தோடு,
“ஐயோ… சார். ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. திடீர்ணு கேட்டதும் என்ன பேசணு தெரியாம அமைதியா இருந்தேன்.”
“சரி. இப்போ சொல்லு. உனக்கு என்கிட்ட ஏதாவது பேச வேண்டி இருக்கா…”
“பேச வேண்டியா? இல்ல சார். நான் பேச என்ன இருக்கு.”
“எதுவுமில்லயா? எனட்ட பேச உனக்கு எதுவுமே இல்லயா?”
என்றவனை புரியாமல் பார்த்தவள், அவன் கேள்விக்கான நிஜ உருவம் புரியாமல்,
“இல்ல சார்… ஏன் கேட்கிறீங்க.”
என்றாள் அப்பாவிதனமாக,
அடுத்த நொடியே அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டவள் பயந்து விட்டாள்.
“என்னாச்சு சார்…”
நடுங்கும் குரலில் தான் கேட்டாள்.
சட்டென அவள் பக்கம் திரும்பியவன்,
தன் கோபத்தில் சிவந்த விழியை அவள் பார்வைக்குள் செலுத்தி,
“எதுவுமே பேச வேணாமா?”
என்றதும் புரியாமல் அவனை பார்த்தவள்,
“என்ன?… ஏ… என்ன… பேசணும்.”
என்றதும், கடும் கோபத்தோடு திரும்பி ஸ்டியரிங்கில் ஓங்கி அறைந்து தன் ஆத்திரத்தை அடக்க அவன் பார்க்க, அவனின் செயல் புரியாமல் அவனை வினோதமாக பார்த்த ஓவியா.
“நான்… நான் இப்போ என்ன சொல்லிட்டேனு ஆத்திரப்படுறீங்க. அப்படி நான் என்ன பேசணும்னு எதிர்பார்க்குறீங்க. சொன்னா தானே தெரியும்.”
என்றாள் அப்பாவிதனமாய்…
“நான் சொல்லி தான் உனக்கு தெரியணுமா? உனக்குணு எனட்ட பேச எதுவுமே இல்லையா?”
என்றான் வெறுத்து போனவனாய்,
“புரியல சார். எதுக்கு இப்படி பேசுறீங்க.”
“புரியல…”
“ம்கூம்…”
“புரியாது. புரிஞ்சிருந்தா. இப்படி சொல்லாம கொள்ளாம கிராமத்துக்கு போய் நிச்சயம் வரை முடிச்சிட்டு வந்திருப்பியா?”
“அது… நான்… நான்…நீ.. நீங்க…”
“ஏய்… நிஜமா உனக்கு புரியல.”
“ம்கூம்…”
என மறுப்பாய் அவள் தலையாட்ட,
“உன்னை கிராமத்துல இருந்து வம்படியா கூட்டிட்டு வந்து ஒரு வாரமா உன்னை சுத்தி சுத்தியே ஏன் கிடைக்கிறேனு உனக்கு புரியல…”
தன் பார்வை மொத்தத்தையும் அவள் பார்வைக்குள் மோத விட்டு கேட்க, அவன் வார்த்தையின் அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த பார்வையின் அர்த்தம் புரிய ஒருவித திடுக்கிடலோடு அவனை பார்த்தவள்…
“ இ…இல்ல சார்…”
என்றதும் சற்று கோபத்தோடு,
“ சங்கீதாவை வர வச்சி உன் முன்னால அப்படி ஒரு கோமாளி வேஷம் ஏன் போடுறேனு கூடவா உனக்கு தெரியாது.”
“அவங்க… அவங்க…”
என்றவள் சட்டென நிறுத்தி
“ஏன்?”
என தடுமாற, அவள் மேல் அனல் கக்கும் பார்வையை விசியவன்,
“இல்லாத வேலையை தூக்கிட்டு உன்னை தனியா கூட்டிட்டு வந்து ஏன் இப்படி புலம்பிட்டிருக்கேணு கூடவா தெரியல…”
என்றான் கடைசியில் இயலாமையோடு,
“இ…. இல்ல சார். உங்களுக்கு என்னாச்சு. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.”
என்றதும் தாங்க முடியாதவன் போல மொத்தமாய் திரும்பி, இதற்கு மேல் பேச பிடிக்காதவன் போல அவளையே பார்க்க, அவனின் காதலில் உருகி நின்ற
கண்ணை நம்ப முடியாமல் பார்த்தவள், இது கனவா? நிஜமா? என ஒரு நொடி சிந்தித்த நேரம், அவன் மொத்தமாய் உடைந்து போனவனாய் அவளை பார்த்தான். அவன் கண்களில் நீர் கட்டியிருந்தது. அதை பார்த்தவள் கண்ணிலும் நீர் கோர்த்து கொள்ள,அவனின் வேதனையில் துடித்த உதட்டை பார்க்க சகிக்காமல் கண்களை இறுக மூடி திறந்தாள். அவளை ஒரு நொடி மெளனமாக பார்த்தவன்,
“ ஏய்… நிஜமா உனக்கு புரியலியா? இல்ல புரியாதது போல நடிக்கிறியா? இதுக்க மேல கொல்லாதடி. போதும். இந்த வலியை என்னால தாங்க முடியல.”
என்றான் அழுது விடும் குரலில்,
“முகுந்த்…”
முதல் முறை அவன் பெயர் தன் வாயில் இவ்வளவு உரிமையோடு வந்ததும் நாக்கை கடித்தவளை, ஏக்கமா பார்த்தவன்.
“ஏண்டி… ஏண்டி… உன்னை நான் பார்த்தேன். எந்த பொண்ணுட்டயும் முட்டிட்டு நிற்காம ஒதுங்கி போகிற நான்… நான்… உனட்ட மட்டும் ஏண்டி முட்டிட்டு நின்னேன். உனட்ட மட்டும் மல்லுகட்டி நிக்குறது எனக்கு ஏண்டி புடிச்சிருந்தது? தெரியல. தெரியலடி. எனக்கு தெரியல. ஆனா புடிச்சிருந்தது. ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் வம்படியா உன்னையே என்னை கவனிக்க நியமிச்சேன்.”
என்றவனை வியப்போடு நம்ப முடியாமல் உணர்ச்சி பொங்க ஏறிட்டவள் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்க.
“ஆபத்து வர போகுது. இதுக்கு மேல ஒரு நொடி இதுல நின்னாலும் உயிருக்கு ஆபத்துணு தெரிஞ்சும், உன்னை ஏண்டி பிடிச்சி இழுத்தேன். நீ திமிர திமிர உன்னை காப்பாற்றியே ஆகணும்னு ஏண்டி துடிச்சேன். எனக்குள்ள நீ இருந்ததால தான். என் உயிரை விட உன் உயிரை காப்பாற்ற துடிச்சேனே. அது எதனாலணு நினைச்சா. நீ வேற ஆள் இல்லனு என் மனசு உணர்ந்ததால.”
“நான் உணர்வை இழந்து உன் தோளுல சாய்கிற வரை இடிபாடுக்குள்ள மாட்டிகிட்டோமேணு எந்த வருத்தமோ பயமோ ஏற்படல. என்னவோ உன்னோட இருப்பது அம்புட்டு புடிச்சிருந்துச்சு. நீ என்னை பாத்துக்கிட்ட விதம். எனக்காக உயிரை பணயம் வைத்து பழங்களை கொண்டு வந்த விதம் எல்லாமே உன்னை எனக்குள்ள கொண்டு போய் உட்கார வச்சிடுச்சி. ஆனா அது பெயர் காதல்னு தெரியல.”
“இத்தனை வருட வாழ்க்கையில அந்த இடிபாடுக்குள்ள உன்னோடு இருந்த மூணு நாளும் தான் நான் நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்த மாதிரி தோணுச்சு. அப்படி வாழ்வோட நிம்மதியையும் சந்தோஷத்தையும் காட்டிய உனக்கு நான் ஏதாவது செய்யணும்ணு நினைச்சி தான் விசிட்டிங் கார்டையும், அப்பாயின்மென்ட் ஆடரையும் அனுப்புனேன். அனுப்பும் வரை அப்படி தான் எனக்கு நானே சொல்லிகிட்டேன்.”
“ஆனா நீ வராம நாள் கடத்த கடத்த தான் என் மனசு உன் வரவை எவ்வளவு எதிர்பார்க்கிறதுணு புரிஞ்சிகிட்டேன். நீ வந்த அன்று என் மனசு அவ்வளவு சந்தோஷப்பட்டுச்சு. என்ன தி கிரேட் சக்கரவர்த்தியோட மகனால அதை வெளிப்படுத்த முடியல.”
“என் மூர்க்கதனமா? அல்லது பக்கத்துல கொண்டு வச்சிட்டேன். இனி பறந்து போக மாட்டா என்ற எண்ணமாணு தெரியல… என் வேலையில கவனம் செலுத்துனேன். இது வரை இப்படியான ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்துட்டிருந்தேன். ஆனா அப்போ அந்த தனிமை பிடிச்சிருந்துச்சு. உன்னை பார்த்த பிறகு அந்த தனிமை பிடிக்காம போச்சு. அப்போ கூட என் மனசு உன் அருகாமையை தேடுதுணு புரியல…”
“ஆனா எப்போ என்னை விட்டு போனியோ… அப்போ தான் என் மனசு என்னை ஒங்கி அறைஞ்சிது. நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லுச்சு. நீ இல்லாம வாழ முடியாதுணு சொல்லுச்சு. உனக்காக தான் என் மனசு ஏங்கு துணு புரியவச்சிது. உன் மடியில் தலைசாய்க்க என் தலை காவல் இருக்குணு புரிஞ்சிது.”
“அதான் உன்னை தேடி வந்தேன். உன்னை மறுபடியும் இங்க அழைச்சிட்டு வந்தேன். எனக்கு தெரியும். உன் மனசுல நான் இருக்கேனு தெரியும். அதை உன் வாயால கேட்க தான் மூணு நாளா சங்கீதாவோட நெருங்கி பழகிறது போல நடிச்சேன். அப்படியாவது ஒடி வந்து உன் காதலை தந்திடுவா என்று நினைச்சேன். ஆனா நீ என்னையே மிஞ்சிட்டா. இந்த திமிர்பிடிச்சவனையே உன் காலுல விழ வச்சிட்டா. நான் விழுந்துட்டேன். மொத்தமா விழுந்துட்டேன்.”
என்றதும் கதறி விட துடித்த மனதை பெரும்பாடுபட்டு அடக்கியவள், துடிக்கும் உதட்டோடு கண்ணில் ஒளியோடு அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். அவளை ஒருமுறை திரும்பி பார்த்தவன், வண்டியை நிறுத்தி பின் ஓரம் கட்டி விட்டு அவள் புறம் திரும்ப, நம்ப முடியா அதிர்வில் உறைந்து போய் இருந்த ஓவியா,உறைந்து போய் விழி அகலாமல் அவனை பார்த்தாள்.
அவளின் சிலிர்த்து போயிருந்த இருகையையும் எடுத்து தன் கைக்குள் வைத்தவன் அவளை காதலோடு பார்க்க, பெண்ணவளின் நிலையோ எக்கு தப்பாக இருந்தது. அதிலும் அவள் விழிக்குள் தன் விழி கதிரை பாய்ச்சிய போது ஓவியா நிலையோ உறை நிலைக்கே போய்விட்டது.
“இப்போ சொல்லு. உன் மனம் திறந்து சொல்லு. நான் உன் மனசுல இருக்கேனா? இல்லையா? சொல்லுடி. ஒரு முறை உன் வாயால சொல்லிடு.”
என்றதும்,
“என்னடா. பட்டுணு கேட்டுட்டா. இப்போ நான் என்ன சொல்லுவேன். எப்படி சொல்லுவேன். நீ நெருங்கி வந்தாலே என் நாக்கு மேல் அண்டத்தோட ஒட்டிக்கும். இப்படி நெருங்கி என் விரலை உன் விரலுக்குள் வச்சிட்டு உன் விழியால என்னை நங்கூரம் பாய்ச்சி உட்கார வச்சிட்டு கேட்டா, நான் எப்படிடா பேச முடியும்.”
தந்தியடித்த உதட்டோடு. வார்த்தையற்ற நிலையில் அவள் இருக்க,
“இனியும் மெளனமாகவா இருக்க போறா? வேணாம்டி. ரொம்ப கொடுமையா இருக்கு. நான் இப்படி எல்லாம் இருந்ததே இல்ல தெரியுமா? மொத்தமா என்னை நீ திருடிட்டா. உன்னை தவிர இந்த நொடி எனக்கு வேற சிந்தனையே வர மாட்டேங்குது. நான் பொறுத்திருந்தா நீ என்னை விட்டுட்டு போயிடுவியோனு பயமா இருக்கு. அதனால தான் வேற நிறைய பிராப்ளம் பிஸ்னஸ் பக்கம் இருந்தாலும் உன்னை விட்டு நகராம இருக்கேன். புரிஞ்சிக்கடீ. பிளீஸ்…”
“நீயாடா… நீயாடா இப்படி எல்லாம் பேசுறது. ஆறு மாசமா ஆறு மாசமா…இப்படி எல்லாம் பேச மாட்டியாணு எம்புட்டு ஏங்குனேன். இப்ப வந்து சொல்லுறியேடா. நான் என்ன பண்ணுவேன். எப்படி ஏத்துப்பேன். இன்னும் ஒரு மாசத்துல இன்னொருவனோட திருமணம் நிச்சயமாகி இருக்கும் இந்நேரம் நான் எப்படி பேச முடியும். என் மனசு முழுசும் நீ தான் இருக்காணு எப்படி சொல்ல முடியும். பட்டாம்பூச்சி போல இந்த நொடி வரை உன்னோட வாழ்ந்த எண்ணங்கள் தான் பசுமையா பறந்துட்டிருக்குனு எப்படி வாய் திறந்து சொல்ல முடியும்.”
ஓவியாவின் உள்ளம் தன் காதலை கொடுக்க முடியாமல் தவித்த போது,
சட்டென அவளை பிடித்து தன்னோடு அணைத்தவன்
“நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனு தெரியுது. அந்த இருட்டு அறையில நீ என்னை கவனிச்சிட்டதுக்கு அப்புறமும் நான் உன்னை உணராம போனது தப்பு தான். அதுக்காக இப்போ வேணா மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதை மனசுல வச்சிட்டு என் மனசு நோக பேசிடாத. நான் தாங்கிக்க மாட்டேன். இப்போ தான் நீ எந்த அளவு என் உள்ளத்துக்குள்ள புகுந்திருக்காணு என்னால புரிஞ்சிக்க முடியுது. நிச்சயம் எனக்கு தெரியும். உன் மனசுலயும் அந்த தாட் இருக்குதுணு. மனசு திறந்து பேசு. மீதி எல்லாம் நான் பாத்துக்கிறேன்.”
உணர்ச்சியின் மொத்த வடிவமாய் அவன் நிற்க, உடைந்து விடும் நிலையில் இவள் இருக்க,
சரியாக அந்த போன் கால் அவளுக்கு வந்தது. திரும்பி பேக்கை பார்த்தாள். இப்போதும் போன் விடாமல் அடித்து கொண்டிருந்தது. முகுந்தனையும் பேக்கையும் மாறி மாறி பார்த்தாள். முகுந்தன் தன் கைக்குள் இருந்த அவளின் கரத்தை மெல்ல விட்டான். அவனுக்குள் இருந்து விலகியவள் மெல்லமாய் திரும்பி பேக்கில் இருந்த போனை எடுத்து அதன் சத்தத்தை நிறுத்தி காதுக்கு கொடுத்த நொடியில் இருந்து,
ஒவியாவின் விழி பெரிதாக விரிய தொடங்கியது. பிறகு வந்த நொடிகள் எல்லாம் அதிர்ச்சியில் முகம் வெளிறி கண்கள் இரண்டும் குளம் கட்டி விட, புரியாமல் அவளை பார்த்தான் முகுந்தன்.
“என்னாச்சு… ஏன்?… ஏன்?… உன் முகம் இப்படி மாறுது.”
முகுந்தன் கத்திய கத்தல் அவள் செவி பறையை அடையும் முன் மயங்கி சரிந்தாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel