வணக்கம் வாசகர்களே!
உயிரை பணயம் வைத்து நளன் திலகாவை காப்பாற்றி கொண்டு வருகிறான். இப்பவாவது அவன் காதலை ஏற்று கொள்வாளா திலகா?
இப்பவாவது அவன் காதலை ஏற்று கொள்வாளா திலகா?
வண்டியை குடோன் முன் நிறுத்திய நளன் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த கட்டிடத்தை பார்த்ததும் பதட்டத்தோடு உள்ளே ஒட எத்தனித்த போது, கூடி இருந்த கூட்டம் அவனை நெருக்கி பிடித்தது.
“என்னை விடுங்க. என் திலகா உள்ளால இருக்கா?”
பலம் கொண்ட மட்டும் அனைவரையும் தள்ளி விட்டு தீயினுள் ஒட துடித்த அவனை கூட்டம் விடவில்லை. அவனும் பெரும் முயற்சி செய்தான்.
“இல்ல நளன் சார். இதுக்கு மேல நீங்க உள்ளால போனா உங்க உசுருக்கு தான் ஆபத்து. பிளீஸ்…”
வாட்ச்மேன் வடிவேலு. அவனை கெஞ்ச…
“என் உசுரே உள்ளால தாண்டா இருக்கு.” என அவனை எம்பி தள்ளி விட்டு அந்த கட்டிடத்தினுள் புகுந்தான் நளன். அவர்களை மீறி தீயினுள் சாடிய பின் ஒருவரும் அவனை தொடர்ந்து வரவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் இன்னும் வந்து சேரவில்லை. ஊர்மக்கள், வழி போக்கர் என ஆள் ஆளுக்கு தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்தனர்.
தீயில் குளித்தவாறு உள் நுழைந்த நளன் பைத்தியம் பிடித்தவன் போல.
“திலகா… திலகா…”
என குரல் கொடுக்க, அவனுக்கு மறுமொழி கிடைக்கவே இல்லை. முன்னோக்கி நகர்ந்தான். விளை பொருட்கள் எல்லாம் வீறிட்டு எரிந்து கொண்டிருந்தன. நளனின் முடி எல்லாம் தீ சுவாலையில் கருக தொடங்கின. முகம் எல்லாம் தீ சுவாலையிலே பொசுங்க ஆரம்பித்தது. என்றாலும் உள்ளே ஒடினான்.
“திலகா… நீ… நீ… எங்க இருக்கிறா?”
அலறினான் நளன். ஆனாலும் அவனுக்கு மறுமொழி கிடைக்கவில்லை.
“குரல் கொடுடி. பிளீஸ்டி எங்க இருக்கா… திலகா…
ஏய்… திலகா…”
அவன் அடி குரலே வெளிவரும் அளவு அவன் கத்த, இப்போது, ஒரு மூலையில் இருந்து அந்த தீனமான குரல் கேட்டது.
“வராதுங்க நளன். போயிடுங்க. பிளீஸ் போயிடுங்க. நான்… நான் டிரஸ் இல்லாம இருக்கேன். பிளீஸ்… போயிடுங்க.”
என்ற குரலை கேட்ட பின், ஏனோ நிம்மதி வர, குரல் வந்த பக்கம் ஓடினான். அவ்வளவு எளிதாக அவனால் ஒட முடியவில்லை. ஆனாலும் அவன் பின் வாங்கவில்லை. தீ குளியலில் குளித்து கொண்டு தான் அவளை நோக்கி ஓடினான்.
“வராதுங்க நளன். போயிடுங்க… பிளீஸ்…”
அவளும் அடிகுரல் வெளிவரும் அளவு கத்தினாள். தன் மார்பை இரு கையாலும் பொதிந்தவாறு கண் நிறைய நீரோடு,
“ஏய்… பயப்படாத. நான் இருக்கிற வரை உனக்கு எதுவும் ஆகாது. நான் பக்கத்துல வந்துட்டேன். பயப்படாத .”
நளன் உடம்பில் பட்ட தீ காயங்களின் வலியையும் பொருட்ப்படுத்தாமல் முன்னோக்கி நகர்ந்தான்.
“வேணாம் நளன். இந்த பாவிக்காக உங்க உசுரை பணயம் வைக்காதுங்க. நீங்க போயிடுங்க. உங்களுக்கு எதுவும் ஆக கூடாது. பிளீஸ் திரும்பி போயிடுங்க.”
திலகாவின் காட்டுகத்தல் எதுவும் அவனை முடக்கவில்லை. தீ சுவாலையும் அவன் முன்னேற்றத்தை தடுக்கவில்லை. முன்னால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ சுவாலைக்குள் குதித்து திலகாவை நெருங்கினான் நளன். ஒரு நொடி தான் அவன் கண்கள் அவளில் படிந்தன. அடுத்த நொடி திரும்பியவன் தன் கோட்டை கழற்றி அவளை நோக்கி எறிய, இப்போது நளனின் கோட்டுக்குள் இருந்தாள் திலகா. அவளால் நகர முடியவில்லை. உள்ளே உருட்டி வந்த வண்டியில் இருந்து தீ சுவாலைக்கு பயந்து கீழ் இறங்கி நகர்ந்து தவழ்ந்து ஓடியவளுக்கு அது எங்கு இருக்கிறது என்று கூட தெரியவில்லை.
நளன் அருகில் வந்தான்.
அவளை வெறி கொண்ட மட்டும் கழுத்து கன்னம் நெற்றி என முத்தமிட்டான். தன் பொக்கிஷம் உயிரோடு கிடைத்து விட்ட மகிழ்வு அவனில் இருந்தது. திலகா அவனிடம் தன் முகத்தை கொடுத்து விட்டு கண்மூடி உணர்வை அடக்கினாளே தவிர அவனை விலக்கவில்லை. ஆவேசத்தோடு முத்தத்தை கொடுத்தவன் அவள் முகத்தை இரு கையாலும் தாங்கி கொண்ட போது அவன் கைக்குள் மலர்ந்த முகமாக விழி நிறைய நீரோடு அவனை பார்த்தாள்.
உணர்ச்சி மிகுதியில் அவளை கட்டி அணைத்து கொண்டான். திலகா அவன் கோட்டை பிடித்து தன் மார்பை பொதிந்தவாறு அவனை கண்ணில் நீரோடு தலை உயர்த்தி பார்த்தாள். உடல் முழுதும் தீ காயங்கள். ஆனாலும் மலர்ந்து நின்ற அவன் முகத்தை பார்த்ததும் நெஞ்சம் விம்மி, கண்ணில் நீர் சுரந்தது. ஒரு நொடி ஒரு நொடி அதன் பின் அவன் தாமதிக்கவில்லை. அவளை அலேக்காக தூக்கினான். அவளை தன் மார்புக்குள் பொதிந்து கொண்டே தீ குளியலுக்குள் குதிக்க ஆரம்பித்தான்.
அதே நேரம் முகுந்தனின் வண்டி அந்த குடோனின் முன் வந்து நின்றது. கூடவே தீயணைப்பு வண்டியும் வந்தது. முகுந்தனின் அவசரத்திற்கு ஈடு கொடுத்து பணியாளர்களும் செயல்பட தொடங்க, ஓவியா உணர்வின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தாள். இதயம் தாறுமாறாய் அடிக்க தொடங்கியது. பீதியோடு தீ சுவாலையை பார்த்தாள். திலகாவின் முகம் மின்னல் வெட்டுவது போல அவள் நினைவில் வந்து போயின. முகம் முழுதும் கண்ணீர் சிதறல்கள். மனம் பதட்டத்தின் உச்சத்திற்கு சென்ற நேரம், அந்த தீ சுவாலைக்கு நடுவில் இருந்து திலகாவை தன்னுள் ஏந்திக் கொண்டு நளன் வருவது தெரிந்தது. ஆரவாரமும் ஆனந்தமுமாய் ஒடி அவர்கள் அருகில் வந்தாள்.
பாதுகாப்பாய் தன்னவளை கரையேற்றி விட்டேன் என நினைத்தானோ என்னவோ… திலகாவை ஓவியா கையில் ஒப்படைத்தவாறே மயங்கி சரிந்தான்.
இருவரையும் அள்ளி எடுத்து தன் வண்டிக்குள் திணித்து கொண்டு முகுந்தனின் வண்டி ஹாஸ்பிட்டலை நோக்கி பறந்தது.
மூன்று மணி நேரம் அனைவரையும் பதற வைத்து விட்டே கண் திறந்தான் நளன். நளனுக்கு நினைவு திரும்பி விட்டது என அறிந்த பிறகே திலகாவுக்கு உசுரே வந்தது. தன் மேல் பாய்ந்த அத்தனை தீகங்குகளுக்கும் தன் உடம்பை கொடுத்து விட்டு இவள் மேல் எந்த காயமும் படாமல் கொண்டு வந்து சேர்த்தவன் அல்லவா அவளோட நளன். அவன் கண்திறந்து விட்டான் என்ற செய்தி வரும் வரை விடாமல் அழுதாள். தலையில் அடித்து கொண்டு அழுதாள். வாழ்வில் இந்த அளவு அவள் என்றுமே பயப்பட்டது இல்லை. இந்த அளவு அழுததும் இல்லை. தனக்கானவனுக்காக அழுதாள். அவன் தனக்கு வேண்டும் என்று அழுதாள். ஒவியாவால் அவள் அழுகையை நிப்பாட்டவே முடியவில்லை.
உன் எந்த ஆறுதலும் என்னை சாந்தப்படுத்தாது என்பது போல் இடைவெளி இன்றி அழுதாள்.
நளனின் தாயும் தங்கையும் கூட விசயம் அறிந்து வந்திருந்தனர். மனதுக்கு ஆறாத காயம் இருந்தாலும் இருவரும் திலகாவையே ஆறுதல்ப்படுத்தினர். அவர்கள் அன்பை பார்த்து ஓவியா கண்ணே நிறைந்து போனது.
எப்படி ஒரு குடும்பம் தன் தோழிக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்வு ஒன்று போதாத திலகா நளனின் காதலை புரிய… இனி அவள் வாழ்வு சிறப்பு பெற்று விடும் என்று அந்த நொடியே நம்பிக்கை வந்தது.
நளன் கண் திறந்ததும் முகுந்தன் அனைவரையும் கிளம்ப சொன்னான். திலகா மறுத்து விட்டாள். தான் அவரோடவே இருப்பதாக சொல்லி கொண்டு அங்கேயே தங்கி விட்டாள். முகுந்தன் வற்புறுத்தி தான் ஓவியாவை ஆபீஸ்க்கு அனுப்பி வைத்தான். தோழிக்கு இந்த சமயம் உதவ முடியவில்லையே என நினைத்தாலும் முகுந்தன் இல்லாத நேரம் ஆபீஸில் ஒருவர் இருக்க வேண்டும் என்றே அவன் பேச்சை கேட்டு அலுவலகம் வந்தாள்.
உள் நுழையும் போதே,
அவள் கரத்தில் இருந்த செல் குரல் கொடுத்தது. திரையை பார்த்ததுமே தன் தாய் என தெரிய,
சொல்லுங்கம்மா…
என்றாள் சோர்ந்த குரலில்…
நீ கிளம்பியாச்சா? இப்போ எங்க வந்துட்டிருக்கா? அப்பாவை ரயில்வே ஸ்டேஷன் வர சொல்லட்டுமா?
எழிலரசி அடுக்கடுக்காய் கேள்வி கேட்க,
அம்மா… நான் இன்னும் கிளம்பல…
ஒ… அப்படியா? எத்தனை மணிக்கு கிளம்புறா?
இல்லம்மா. இப்போ ஊருக்கு வர முடியாது. திலகாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அவள் சரியானதும் வந்திடுறேன்.
திலகாவுக்கு என்னாச்சு?
பதறி போய் கேட்ட தாயிடம் நடந்தவற்றை சொல்லி, கோசலை அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டாள். ஆனால் எழிலரசி மகளை நினைத்து பயப்படுவதை உணர்ந்து,
எனக்கு எதுவுமில்லமா? நான் நல்லாயிருக்கேன்.
இல்லடி… இல்ல… நீ… நீ… அங்க இருந்தா உன் உசுருக்கே ஆபத்து. பேசாம இண்ணைக்கே கிளம்பி எங்ககிட்ட வந்துடிடீ .
பதட்டத்தோடு சொன்ன தாயின் வார்த்தையில் எரிச்சலுற்றவள்,
என்னம்மா உழறுறா? எனக்கு என்ன ஆபத்து இங்க வந்திட போகுது. நீ வீணா பயப்படாத . எனக்கு எதுவுமாகாது. நீ போனை வை நான் அப்புறம் பேசுறேன்.
என்றவள் சற்று கோபத்தோடே போனை ஆப் செய்து விட்டு அந்த அலுவலகப்படியில் அவசரமாக ஏறினாள். உள் வந்தவள் நேரே தன் அறையை நோக்கி நகர்ந்த போது, ரொம்பவே நடுங்கி போய், ஒரு மூலையில் முடங்கி இருந்த சுந்தரி விழ,
புருவ முடிச்சோடு நெருங்கி வந்தவளை கண்ட சுந்தரி, எழுந்து ஒடி வந்து அவளை கட்டி பிடித்து கதறிவிட்டாள்.
கட்டிப்பிடித்து கதறியவள் சொன்ன வாய்மொழி கேட்டு அதிர்ந்து உறைந்து போய் நின்று விட்டாள் ஒவியா.
என் உசுருக்கு விரிச்ச வலையா?
இவள் என்ன சொல்கிறாள். என் உசுரை எடுக்க இங்கு யார் திட்டம் போடுகிறார்கள்?
சும்மா தெரிஞ்சது போல சொல்லாத சுந்தரி. என் உசுரை எடுக்கிற அளவு நான் என்ன பண்ணிட்டேன். இது ஒரு விபத்து. பயத்துல எதுவும் உழறாத…
நான் உழறுறேனா?… என் நடுக்கத்தை பார்த்துமா இப்படி சொல்லுறா? திலகாவை அனுப்பி வச்ச கையோட இப்படி நடுங்கி போய் உட்கார்ந்தவா தான் இன்னும் எழும்ப முடியல. அதுல அவா தீசுவாலையில மாட்டிட்டானு தெரிஞ்சதும் உசுரே போயிடுச்சு. இந்த வாணிக்கு அப்படி நீங்க என்ன தீங்கு செய்தீங்க. அவா ஏன் உங்க மேல கொலைவெறியில இருக்கா.
இப்போதும் நடுக்கத்தோடு தான் கேட்டாள் சுந்தரி. அவளின் நடுக்கமும், பரபரப்பும் இவள் சொல்லும் விசயம் பொய் இல்லை என்று சொல்ல,
ஒரு நொடி நிதானித்தவள்,
இப்போ அந்த வாணி எங்க?
இம்புட்டு பாவத்தை பண்ணிட்டு தைரியமா இந்த ஆபீஸ்க்குள்ளே இருக்க முடியுமா? அவளோட திட்டம் ஒர்க்கவுட் ஆகி குடோன் தீ பிடிச்சி எரிஞ்சிடுச்சினு செய்தி வந்ததும் பேக்கை எடுத்துட்டு பரபரப்பா யாரோடோ பேசியவாறே கிளம்பி போனா?
எங்க போயிருப்பாணு உனக்கு ஏதாவது யோசனை இருக்கா?….
எங்க போயிருப்பா. இவளோட கூட்டு சேர்ந்த கூட்டு களவாணியை பார்க்க போயிருப்பா.
கூட்டுகளவாணியா? அது யாரு?
யாருக்கு தெரியும். ஆனா இவள் எதையும் பண்ணல. வேற யாரையோ வச்சி தான் இந்த விபத்தை உண்டாக்கியிருக்கா.
ம்… விபத்து குடோன்ல்ல நடந்திருக்கு. அப்படினா வாட்ச்மேன் வடிவேலு சம்மந்தப்பட்டிருப்பாரா சுந்தரி.
தெரியல. ஆனா குடோன்ல்ல வேலை பாக்குற யாரோ ஒருத்தரோட தயவுல தான் இவா இதை செய்திருக்கணும்ணு மனசு சொல்லுது.
சரி. அதை நான் பார்க்கிறேன். நீ இதை எனட்ட சொன்னது போல வேற யாருட்டயும் சொல்லாத. நார்மலா இரு. வாணியை நான் பாத்துக்கிறேன்.
சொன்னவள் தன் அறையில் வந்து சாய்ந்து அமர்ந்தாள். மூச்சு விடவே இப்போது தான் நேரம் கிடைத்தது போல் மூச்சை இழுத்து வெளி விட்டாள். மனசு கொஞ்சம் நார்மல் ஆனாலும் சுந்தரியின் வார்த்தை உள்ளுக்குள் இருந்து அவளை குடைய ஆரம்பித்தது.
யாரு?… என் உயிர் மேல ஆசைப்படுறது யாரு? சுந்தரி உண்மையை தான் சொல்கிறாளா? இல்லை காதால் கேட்ட எதையோ ஒன்றை வைத்து இந்த விபத்துக்கு முடிச்சி போட்டு பேசுகிறாளா?
என்ற எண்ணம் அவளுள் முழைக்கும் போதே…
சர்ரென்று ஒரு எண்ணம் அவள் உடலையே உலுக்கி நிமிர்ந்து அமர வைத்தது.
நீ… நீ அங்க இருந்தா உன் உசுருக்கு ஆபத்துடி. பேசாம அம்மாட்டயே வந்திடு.
தாயின் பயம் கலந்த குரல் மறுபடியும் மறுபடியும் வந்து செவியில் அறைந்தது.
அப்படினா அம்மாவுக்கு எதுவோ தெரிஞ்சிருக்கு.
என்ற எண்ணம் வந்ததும் உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாவது போல அவசரமாக செல்லை எடுத்து தாயின் எண்ணை அழுத்தி காதுக்கு கொடுத்தாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel