வணக்கம் வாசகர்களே!
டாக்டர் படிப்பு முடிந்து ஊருக்கு வரும் பல்லவி. அவள் தோளோடு தோள் உரிசி வரும் அந்த இளைஞன் யார்?
பல்லவியின் தோளை ஒட்டிக் கொண்டு இறங்கிய அந்த ஸ்மாட்டான இளைஞனை கண்டதும் சங்கிலியின் மனது பொடிய ஆரம்பித்தது. ஏன் என்று அவனுக்கு கூட தெரியவில்லை. உயிர் வலி எடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் காட்டி கொள்ளாமல் சிரித்து கொண்டே அவன் நிற்க,
பொறுக்க முடியாமல் ரவிதான் கொட்டிவிட்டான்.
“என்னடா?… கூட ஒரு கொரிலா குரங்கையும் கூட்டிட்டு வாரா. யாராயிருக்கும்.”
ரவியின் அதே கேள்விக்கு சங்கிலி பதில் சொல்லும் முன் சரியாக பல்லவி பாண்டியிடம் சொன்னாள்.
“இவர் பெயர் விக்னேஷ் மாமா. என்னோட படிச்ச டாக்டர். இவருக்கும் அடுத்த ஒரு வருடம் நம்ம ஊர்ல்ல தான் டிரைனிங் போட்டிருக்கு. இவரை போல இன்னும் கொஞ்ச பேர் வருவாங்க. இவருக்கு நம்ம கிராமத்தை பார்க்க ஆசை.அதை விட உங்களை பார்க்க வேண்டும் என்றும் தான். அதனால முன்கூட்டியே என்கூடவே வந்துட்டாரு.”
என்றதும் பாண்டிக்கு வந்தவன் கை கொடுக்க, பாண்டியும் புன்னகையோடு கை குலுக்கி கொண்டார்.
ஆறடிக்கும் குறையாமல் இருந்தான் வந்தவன். மாநிறம் என்றாலும் கம்பீரத்தில் போலீஸ்காரன் தோற்றுவிடும் உடல் கட்டு. செக்க சிவந்த தேகம். அதில் அவன் அணிந்திருந்த கூலிங்கிளாஸ் அவனை திரைபட ஹீரோவாக முன்னிருத்த சங்கிலிக்கு அவனை அறியாமல் பொறாமை மேலோங்க தான் செய்தது.
கூடவே மனது “சூப்பரான ஜோடி” என சொல்லும் போதே உதடு முணுமுணுத்து விட,
ரவி சட்டென திரும்பி அவனை முறைத்தான்.
“ஏண்டா முறைக்குறா? நான் உண்மையை தானே சொல்லுறேன். சான்ஸே இல்ல. மாப்பிள்ளை சார் பல்லவிக்கு ரொம்ப பொருத்தமா தான் இருக்காரு. இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா அம்சமா தான் இருக்கும்.”
என்றதும் வெகுண்டெழுந்த ரவி
“இருக்கும்.இருக்கும். நீ மட்டும் உதவலனா இவன் பக்கத்துல கூட பல்லவியால நின்னிருக்க முடியாது. அந்த வாய்ப்பை அவளுக்கு கொடுத்ததே நீ தானேடா. உன்னால இந்த அளவு நின்னு வேடிக்கை பார்க்க முடியுதுடா. ஆனா என்னால முடியல. கிளம்புவோம்மா.”
என்றதும் ஒரு முறை கூட பல்லவியை திரும்பி பார்க்க, இதற்கு மேல் தாங்காது என்பது போல ரவி அவன் கையை இழுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அதே சமயம்,
விக்கியை தன் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்த பல்லவி. விக்கி பக்கம் திரும்ப,
“இது தான் உன் பேமிலியா பல்லவி?”
என விக்கி முந்தி கொள்ள, அடுத்து பல்லவி அவர்கள் எல்லாரையும் விக்கிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அறிமுகப்படலம் முடிந்ததும்.
“எங்கம்மா போகணும். நேரா ஹாஸ்பிட்டல் போயிடலாமா? இல்ல நீங்க தங்கிக்க பாத்திருக்கிற வாடகை வீட்டுக்கு போயிடலாமா?”
“இல்ல மாமா. இப்போ அங்கெல்லாம் போக வேணாம். நேரா நம்ம வீட்டுக்கு போலாம். எனக்கு ஊர்ல்ல பழகின எல்லாரையும் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு. கூடவே செழியனையும் ஐஸ்வரியாவையும் பார்த்து பேச மனசு ஏங்குது மாமா. ரவிட்ட சண்டை போட ஆசையாயிருக்கு.”
“நம்ம வீட்டுக்கு தம்பி எப்படிம்மா?”
விக்கியின் நடை உடை எல்லாம் பார்த்து தயங்கியவாறே கேட்க…
“அவர் நம்ம வீட்டை, நம்ம குடும்பத்தை பார்க்க வேண்டி தான் இரண்டு நாளுக்கு முன்னால என் கூடவே தொத்திட்டு வந்திருக்காரு. கூட கூட்டிட்டு போகல அழுதிடுவாரு.”
என்றதும் விக்கி அவளை அடிக்க கை ஓங்க, லாவகமாக விலகியவள்.
“அவரும் வரட்டும் மாமா. வந்து பார்க்கட்டும். தங்கிக்க வேணா நைட் வாடகை வீட்டுக்கு போயிட்டு வரட்டும்.”
என்றதும் பாண்டியும் சம்மதிக்க…
வண்டிக்குள் எல்லாரும் ஏறிக் கொண்டனர். வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்தவுடன்.
“அத்தையோட மீன் குழம்பை ருசிக்க வேண்டி தான் ஒடி வந்திருக்கேன்.எப்படி அத்தை.”
என்றதும் கமலம் முகம் எல்லாம் பூரிப்போடு,
“வாடி ராசாத்தி வகை வகையா சமைச்சி போடுறேன்.”
“ஏய் விக்கி. நீ ஒரு முறை என் அத்தை சமையலை சாப்பிட்டானு வை இந்த ஊரை விட்டே போக மாட்டா. அப்படியே அடிமையாகிடுவா.”
“ரியலி!…”
“உண்மைடா.வேணா ஒரு முறை சாப்பிட்டு பாரு.”
“எப்போதும் மீன் கிடைக்குமா?”
“கிடைக்குமே. எங்க ஊர்ல்ல சங்கிலினு ஒருத்தன் உண்டு. பணம் கொடுத்தா போதும். அடுத்த நொடி வீட்டுக்கு முன்னால மீனோட நிப்பான். இல்ல அத்தை.”
என்றதும் பாண்டியின் முகம் சட்டென வாடிப் போக… கமலமோ…
“ஆமா!…ஆமா!…காசு கொடுத்தா உடனே கொண்டு வந்திடுவான்.”
என சிரிக்க, பாண்டி அவளை பார்த்து முறைத்தார். சங்கிலியை பல்லவி இப்படி அறிமுகப்படுத்தி இருக்க வேண்டாம் என்று தான் தோன்றியது.என்றாலும் எதுவும் பேச முடியாமல் வாய்மூடி கொண்டார்.
“அப்படினா தினமும் கேட்டா கொண்டு வந்து தருவாரா?”
விக்கி வியந்து போய் கேட்க,
“தினமும் என்ன ஒரு நாள் இரண்டு நேரம் கேட்டா கூட கொண்டு வருவான். அவனுக்கு பணம் கொடுத்தா போதும்.”
“அப்படினா அவன் கேட்கிறதுக்கு அதிகமாகவே கொடுத்திடலாம் பல்லவி. தினமும் நாம தங்கி இருக்கிற இடத்துக்கு மீன் கொண்டு வர சொல்லிடு. ஒரு வருஷம் பைஸியா சாப்பிடலாம்”.
“கண்டிப்பா. பார்த்தா நானே சொல்றேன்.இல்லணா மாமா காணுற இடத்துல சொல்லிக்குவாங்க. என்ன மாமா.”
என்றதும் அவசரமாக தலையாட்டிய பாண்டி.
“ஆமாம்மா. நானே சொல்லிடுறேன்.நீ பேச வேணாம்.”
இந்த தோரணையில் இவள் அவனிடம் பேசிவிட கூடாது என்றே அவசரமாக பாண்டிச் சொல்ல…
“நான் பேசல. நீங்களே சொல்லிடுங்க. எங்களுக்கு மீன் கிடைச்சா சந்தோஷம். பையன் காஞ்சி போய் கிடக்குறான்.”
சொல்லி விட்டு பல்லவி சிரிக்க… அவன் அவளை அடிக்க கை ஓங்க… பாண்டியோ மெல்ல திரும்பி வெளிவுலகை ரசிக்க ஆரம்பித்தார். பல்லவி முன்பு போல் இல்லை என்பது பார்த்தவுடனே தெரிந்து விட்டது. அப்போது இவள் வாய் திறந்து பேசுவதே ஆபூர்வம். ஒரு வார்த்தை பேசி விட மாட்டாளா? சின்னதாய் சிரித்து விட மாட்டாளா? என பாண்டி நிறைய நாள் நினைத்திருக்கிறார்.ஆனால் இன்றோ இவள் ஊரை விட்டு கிளம்பும் வரை சங்கிலியை பார்த்து விட கூடாது. சங்கிலியின் மனது நோக பேசிவிட கூடாது என வேண்ட ஆரம்பித்திருந்தார்.
வண்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தும் இருவரின் பேச்சும் அரட்டையும் நின்றபாடில்லை. ஏதேதோ பேசிக் கொண்டும் சிரித்து கொண்டுமே இருந்தனர். அதிலும் கிராமத்துக்குள் நுழைந்தது விக்கி இடங்களை எல்லாம் ரசித்து பார்க்க ஆரம்பித்து விட, இந்த கிராமத்துக்கு முதல் நாள் வந்த போது பாண்டி ஒவ்வொரு இடத்தையும் விளக்கி சொன்னது போல இப்போது பல்லவி விக்கிக்கு விளக்கி கொண்டிருந்தாள்.
வீடு வந்து இருவரும் இறங்கியதுமே எல்லா கண்களும் அவர்களிலே இருந்தது. முன்னால் நலம் விசாரித்தாலும் பின்னால் ஒருவர் காதை மற்றவர் கடிக்க தான் செய்தனர்.விசயம் கண நேரத்தில் ஊர் முழுவதும் பரவியது.
அது சரியாக தண்டபாணியின் காதில் வந்த போது முகம் சுழிக்க தான் செய்தார்.
“பார்த்தியாடா.பொம்பளை புத்தியை காட்டிட்டால. அவளுக்கு இம்புட்டு உதவுனவன் மேல் வராத காதல் நாலே வருஷத்துல படிக்க போன இடத்துல முளைச்சிடுச்சாம். இவளுங்க எப்பவும் மனசை பாக்குறதில்ல சங்கிலி.வெள்ளை தோலையும் நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுறவனையும் தான் பாப்பாளுங்க. போய் பழகுவாளுங்க.”
“விடுங்க அண்ணே. ஜோடிப் பொருத்தம் சூப்பரா தானே இருக்கு.”
“அப்படினா நீயும் பாத்தியா?”
“ம்…ம்…”
“உன் முன்னால அவனோட வெட்கமே இல்லாமலா வந்து நின்னா?”
“அவா வரலண்ணே.நான் தான் போய் பார்த்தேன்.”
“நீ அவளை போய் பாத்தியா?”
“ம்…பார்க்க தோணுச்சு.அதான் ரயில்வே ஸ்டேஷன் போனேன். அங்க தான் ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தேன்.”
“செருப்பை கழற்றி நாலு அறை விட்டு நான் கேட்டதுக்கு மாமனை விட்டு நல்லவா வேஷம் போட்டால. இப்ப இவனை புடிச்சிட்டு வந்திருக்கா. இதை உன் மாமன் சொல்லி தான் கூட்டிட்டு வந்தியாணு கேட்க வேண்டியது தானேடா.”
“எதுக்கு முதலாளி. ஏன் நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க. அவா சரியான ஆளா தான் தேர்ந்தெடுத்திருக்கா. அவளோட அறிவுக்கும், அழகுக்கும், குணத்துக்கும் அந்த ஆள் ரொம்ப பொருத்தமா தான் தெரியுறான். நான் யார் மாமா. என்னை போய் அவனோட ஒப்பிட முடியுமா?.”
“முடியாதுடா முடியாது. உன் பக்கத்துல அவனால நிற்க கூட முடியாது. ஏன் ஏணி வச்சா கூட அவன் உன்னை எட்டி பிடிக்க முடியாது.”
“என்ன முதலாளி இப்படி எல்லாம் பேசுறீங்க.”
“பின்ன என்னடா. தனிமரமா கலங்கி நின்னாளே அப்போ எல்லாம் இந்த பகட்டு தோல் வரலியேடா. இந்த கருங்காக்கா தான் போய் முன்னால நின்னு அவளுக்காக எல்லாமே செய்தது. கூடவே அவளோட பெயருக்கு பின்னால M.B.B.S என்கிற எழுத்தை கொடுத்ததே நீ தானேடா.அப்போ இந்த ஹீரோ வரலியேடா.இந்த சீரோ தான் தன்னுடைய ஆசை, கனவு, லட்சியம் எல்லாத்தையும் அழிச்சி மொத்தமா கொடுத்தான்.”
“அதுக்கு பலனா உன்னையே தானா கேட்க முடியும். விடுங்க முதலாளி. நானே அவளை விட்டுட்டேன் நீங்க என்ன இன்னும் அதையே புடிச்சிட்டு தொங்குறீங்க.”
“தாங்க முடியலடா.அந்த புள்ளைக்காக நீ என்னவெல்லாம் விட்டு கொடுத்திருக்கா. அந்த புள்ளை உன்னை குப்பை போல தூரமா போட்டுச்சேடா. அதை நினைச்சா தான் மனசு கொதிக்குது. நீ ஏண்டா இப்படி இருக்கா.”
“அடிச்சி அடிச்சி அடி பழகி போயிடுச்சி முதலாளி. நானே என் மனசை தேத்திகிட்டேன். நம்ம தகுதி சைக்கிள் கடையோட முடிஞ்சி போச்சு. இதுக்க மேல பார்வையை மேய விடுறது தப்புணு புரிஞ்சிகிட்டேன் முதலாளி. அதான் விலகிட்டேன். நம்ம வேலையை பார்ப்போம் முதலாளி.”
என்றவாறு சங்கிலி எழுந்து கொள்ள,
அதே நேரம்,
முன்வாசல் வழியாய் உள்ளே வந்த ரவி.
“வாடா டவுனுக்கு போயிட்டு வரலாம்.”
“டவுனுக்கா? இப்பவா?”
“ம்…ம்…”
“டவுணுக்கு இப்போ என்ன அவசரம்.”
“வீட்டுல இருக்கவே வெறுப்பா இருக்குடா.அந்த கொரிலா கொரங்கோட அவா நடத்துற அட்டூழியமிருக்கே தாங்க முடியல. நம்மளால எல்லாம் வாயை வச்சிட்டு சும்மா இருக்க முடியாது. அதான் வெளியில வந்துட்டேன்.”
“………….”
“அதுலயும் கூச்சமே இல்லாம என் அம்மா வேற எனட்ட வந்து, அந்த கொரில்லா குரங்குக்கு மீன் வேணுமாம். சங்கிலிட்ட கொண்டு வர சொல்லுணு சொன்னதும் அப்படியே கழுத்தை நெறிச்சிடுவோமானு தோணுச்சு.”
“…………..”
“இனி அவன் உங்க வீட்டு பக்கம் வர மாட்டான். இந்த இரண்டு மெட்ராஸ் குரங்கும் கிளம்புற வரை அவனை கூப்பிடாதணு கட்டன் டைட்டா சொல்லிட்டு வந்துட்டேன். நீ இங்க இருந்தா தேடி வந்தாலும் வருவாங்க. வா நாம அதுக்குள்ள கிளம்பிடலாம்.”
என்றதும்,
“பல்லவியும் கேட்டாளா?”
என்றவனை கேள்வியோடு நோக்கிய ரவி.
“அந்த குரங்கு சொல்லாம மெட்ராஸ் குரங்குக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்.அது சொல்லி தான் அம்மா குதிச்சிருக்கும்.”
என்றதும் ஒரு நொடி யோசிக்காமல் ஒடி போய் தூண்டிலை எடுக்க, .
“என்னடா செய்றா?…”
“ஊர்ல்ல வந்து முதன்முறையா கேட்டிருக்கா. நான் கேட்டா கொடுப்பேணு தானே கேட்டிருக்கா.கொடுக்காம போனா சரியாகாது. வா.மீன் பிடிச்சி தரேன்.கொண்டு போ…”
“கொன்னிடுவேன்.அவளுக்கு இதுக்க மேலயும் சேவை செய்தியணா…”
“இந்த ஒரு முறையும்டா…”
“வெட்டிப் போட்டிடுவேண்டா…”
“பிளீஸ்டா…”
“என்னால ஒத்துக்க முடியாது.அவளுங்க மீன் சாப்பிட வேணாம். நான் கிளம்புறேன்ப்பா. இதுக்க மேல உன் கூட இருந்தா என்னை எப்படியாவது சம்மதிக்க வச்சி அந்த மானம் கெட்ட வேலையை செய்ய வச்சிடுவா. உன்னை போல பெரிய மனசெல்லாம் எனக்கில்லப்பா.அந்த நன்றிகெட்டதுக்கு இதுக்க மேல உன் கையிலயிருந்து எதையும் நான் வாங்கிட்டு போய் கொடுக்க மாட்டேன். அவா ஆசையா ஒரு பொருளை பார்த்தாலே வாங்கி கொண்டு போய் நீட்டுவால அப்பவே சொன்னேன். கேட்டியா? பாவம்டானு சொன்னால….அதான் அந்த பாவபட்டவா தண்ணி காட்டிட்டு போயிட்டா. இதுக்கு மேல நீ இறங்கி போனா நீ எல்லாம் மனுஷனே இல்ல.”
“நான் மனுஷனா இல்லாம போறேன். ஆனா அந்த புள்ளைக்கு செய்யாம எல்லாம் என்னால இருக்க முடியாது. இப்ப நீ வர போறியா இல்லயா?”
“வேணாம்டா சங்கிலி. இந்த பாசத்துக்கு அவா தகுதியானவளே இல்லை. அப்போ உன் அன்பை உதாசீனப்படுத்துனா.அதை கூட மன்னிப்பேன். அப்போ அவளோட மனநிலையே வேற.அதனால அப்படி பேசிட்டாணு விட்டுட்டேன். இப்போ கூட தனியா வந்திருந்தா இந்த அளவு கொதிச்சி போயிருக்க மாட்டேன். நாலே வருஷத்துல எவனையோ ஒருத்தனை பிடிச்சி தொங்கிட்டு வந்திருக்கா பாரு. அப்பவே அவா மேல கொலைகாண்டுல இருக்கேன். இதுக்க மேலயும் நீ என் முன்னால அவளுக்காக பேசாத. எனக்கு புடிக்கல. பிளீஸ் விட்டுடு.”
“முடியாதுடா. முடியாது. அவா ஆசைப்பட்டு கேட்டா அதை கொடுக்காம என்னால இருக்க முடியாது.”
“நான் ஒரு கூறு கெட்டவன். இதை போய் உனட்ட வந்து சொல்லுவேனா? எதுவும் பேசாம டவுணுக்கு இழுத்துட்டு போயிருக்கணும். உனட்ட வந்து உழறுனேன் பாரு என்னை சொல்லணும்.”
“சொல்லிக்கலாம். சொல்லிக்கலாம். முதல்ல கிளம்பு.”
“வரேண்டா வரேன். உனக்காக வரேன். ஆனா நீ கொண்டு கொடுக்கும் போது ஏதாவது கேலி பேசினாணு வை. செவிழ்ழயே ஒண்ணு கொடுப்பேன்.”
“அது அப்படி பேசாதுடா…”
“நீ பழைய பல்லவினு நினைச்சிட்டு பேசுறா. இப்போ உருமாறி வந்திருக்கிறது சங்கிலி நேசிச்ச பல்லவி இல்லடா. பேரும் புகழும் சேர்த்து கொண்ட டாக்டர் பல்லவி. அதுல கூட ஒருத்தனை கூட்டிட்டு வந்து வெட்கமே இல்லாம கூத்தடிக்கிறா பாரு. பார்க்கிறப்ப எனக்கு ஆகுது பாரு ஒரு காண்டு…அதை என்னால சொல்ல முடியல. அப்படினா அதை நேர்ல்ல நீ பார்த்தா. தாங்க மாட்டாடா. வேணாம்டா சங்கிலி. பிச்சையை கூட பாத்திரம் அறிஞ்சி தான் போடணும். ஏன் தெரியுமா? மனுஷ பிறவிங்க பச்சோந்தி போல நிறம் மாறிடுறதால தான். இவளும் மாறிட்டாடா.விட்டுடுடா.”
“சரி.முடிச்சிட்டியா? கிளம்புவோமா?…”
சங்கிலி ரெடியாக, .
“என்னடா நீ. நான் இவ்வளவு சொல்றேன். கேட்காம கிளம்புறா?”
“அப்புறம் நான் என்ன செய்யணும்ணு நினைக்கிறா?. அவளை திட்டி தீர்க்கணும்ணா. இல்ல வெறுத்து ஒதுக்க வேணும்ணா. என்னால முடியாது. அவா என்னை வெறுத்தது போல பேசுவா. நடந்துப்பா. காரணம் அவா என்னை விரும்பல. நான் தான் அவளை விரும்புனேன். என்னால வெறுக்க முடியாதுடா. அவா நேசிக்காட்டா கூட என்னால அந்த புள்ளையை வெறுக்க முடியாது.”
“திருந்த மாட்டாடா. நீ திருந்த மாட்டா. உன்னை பேசி திருத்திடலாம்ணு நான் தம் கட்டி பேசினேன் பாரு.என்னை சொல்லணும். இப்போ என்ன அவளுக்காக மீன் பிடிக்க போகணும். அவ்வளவு தானே கிளம்பு.”
“இது!…இதுதாண்டா என் ரவி.”
சங்கிலி சிரிக்க,அடுத்த பத்தாவது நிமிடம் குளக்கரையில் இருந்தனர். இங்கு கடல் மீன் எல்லாம் அதிகம் வருவது இல்லை. எப்பவாவது டவுணுக்கு போனால் தான் கடல் மீன் கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் ஐஸ் மீன் தான் கிடைக்கும். அதனாலே சங்கிலியின் மீனுக்கு இங்கு கிராக்கி அதிகம் தான்.
அவன் கொண்டு சூண்டையை போட்டவுடனே ஆட்கள் எல்லாம் சூழத் தொடங்கி விடுவர்.
“நல்ல பெரிய மீனா எனக்கும் ஒண்ணு கொடுத்திடு சங்கிலி…”
என வரிசை கட்டி நின்று விட, பிடித்ததில் நல்ல மீனாய் பல்லவிக்கு எடுத்து வைத்து விட்டு மீதியை கேட்டவர்களுக்கு கொடுத்தான்.
அதன் பின் மூன்று மீனையும் எடுத்து கொண்டு ரவியோடு பாண்டியின் வீட்டை நோக்கி நடந்தான். ரவி எவ்வளவோ சொன்னான்.
“நான் கொண்டு போறேண்டா நீ வர வேணாம்.”
என்று, ஆனால் மீனை கொடுக்கும் போது பல்லவியின் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் என்றே அவன் சொல்ல சொல்ல கேட்காமல் வந்தான்.
ஆனால் வந்த பிறகு ஏன் வந்தேன் என அவன் நினைக்கும் அளவு தான் அவள் செயல் இருந்தது.. மீனோடு அவன் வந்திருப்பது தெரிந்ததும் சந்தோஷத்தோடு ஒடி வந்தாள் தான். ஆனால் கையோடு விக்கியை இழுத்து கொண்டு வந்தது மட்டுமல்லாது இவன் கையில் இருந்த மீனை வாங்கி,
“பாத்தியா பிரஸா மீன் கிடைச்சிருச்சி. சொன்னது போல சங்கிலி கொண்டு வந்துட்டான் பாத்தியா?.”
என்றதும் துடிக்கும் மீனை பார்த்து விக்கி ஆச்சரியப்பட்டு துள்ள, அவர்கள் அடித்த லூட்டியில் சங்கிலியின் முகமே வாடிப்போனது. அதிலும் நான்கு வருடத்திற்கு பிறகு அவள் முன் போய் நிற்கிறான். மருந்துக்கு கூட அவன் புறம் திரும்பாதது வலியையும் வேதனையும் கொடுக்க குப்பென வந்த கண்ணீரை யாரும் பார்க்காமல் துடைத்தவன் மலர்ந்த முகத்தோடு சிரித்துக் கொண்டு நடித்ததை பார்க்க பார்க்க ரவிக்கு ஆத்திரமாக வந்தது.
கோபத்தில் கொஞ்சம் சத்தமாகவே,
“இதுக்கு தான் வர வேண்டாம்ணு சொல்லுறது.”
என்றவன் அடுத்த நொடியே அவன் கையை தரதரவென பிடித்து இழுத்து செல்ல…
அதுவரை அவனுடன் கூத்தடித்த பல்லவி சட்டென நிறுத்தி கொண்டு திரும்பி அவனை பார்த்தாள். சங்கிலி கவிழ்ந்த தலை நிமிராமல் ரவியோடு செல்வதை பார்த்து கொண்டே அப்படியே நிற்க…
“என்னாச்சு பல்லவி. எதுக்கு ரவி கோபமா பேசிட்டு போறான்.”
என்றதற்கு பதில் பல்லவியிடமிருந்து வரவில்லை, கமலம் தான்.
“அவன் எப்பவும் இப்படி தான். சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுவான். நீங்க போங்க தம்பி. அரை மணி நேரத்துல நான் குழம்பை மணக்க மணக்க வச்சிட்டு கூப்பிடுறேன்.”
என்றதும் பல்லவியோடு உள்ளே வந்தான் விக்கி. கமலம் சொன்னது போல அரை மணி நேரத்தில் சமையலை முடித்து அனைவரையும் அழைக்க, ரவியை தவிர மற்றெல்லாரும் கூடி விட்டார்கள். அதிலும் செழியன் அவர்கள் இருவரோடும் நன்றாக கலந்து விட்டான். நக்கல் அடிப்பது என்றாலும் சரி, விசயங்களை பகிர்ந்து கொள்வது என்றாலும் சரி, வந்த நேரத்தில் இருந்தே அவர்களோடவே இருந்தான்.
ஐஸ்வரியா, பல்லவி தனியாய் இருக்கும் நேரம் அருகில் போனாலும் விக்கி இருந்தால் அவள் ஒதுங்கி கொள்வாள். காரணம் ஐஸ்வரியா இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். எந்த ஆடவனை கண்டாலும் முகம் கொடுத்து பேச கூடாது என்பது கமலம் அவளுக்கு சொன்ன அறிவுரை. அதனால் பள்ளியிலும் பெரிதாக எந்த ஆண்மகனிடமும் வழிந்து கொண்டு நிற்பது இல்லை. அதுவே வீட்டிலும் விக்கியிடமிருந்து ஒதுங்கி இருக்க வைத்தது.
ஆனாலும் நகைசுவையில் கலந்து கொண்டு சிரிப்பதோடு ஒதுங்கி கொள்வாள். அதிலும் கமலம் அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்கு இவளை அனுப்பாமல் இருந்தாள் என்பதே உண்மை.
மீன் குழம்பை விக்கி மட்டுமல்ல பல்லவியும் விரும்பி தான் உண்டாள். உண்ண உண்ண சங்கிலியோட பேச்சு வந்தது. முதலில் தொடங்கியது பாண்டி தான். சங்கிலியின் நல்ல குணம் சிலவற்றை எடுத்து சொன்ன அவர் மனதால் நெகிழ்ந்து போய் நிற்க,
கமலமோ…
“இப்ப அவனை பற்றிய பேச்சு எதற்கு?”
என உடனே தடங்கல் போட,பேச்சு வேறுபக்கம் தாவியது.
ஆனாலும் பாண்டியின் கண்கள் அவளை மோய்க்க தான் செய்தது. காரணம் பல்லவி சங்கிலி மேல் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை மாற்றியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் தான் பேச ஆரம்பித்தார்.
அதில் முதல் நாள் அவள் இந்த ஊருக்கு வந்து இறங்கிய அன்று உணவு வாங்கி கொடுத்தது. படிக்க சென்ற போது புக் வாங்கி கொடுத்தது, என எல்லாம் சொன்னவர் கடைசியில் டாக்டருக்கு படிக்க அவன் உதவியதை மட்டும் சொல்லாமல் பேச்சை நிறுத்திக் கொண்டார். காரணம் சங்கிலி இந்த விசயம் எந்த காலத்துக்கும் அவளுக்கு தெரிய கூடாது என சொல்லியிருப்பதால் அதை விட்டு விட்டு மீதி சிலவற்றை சொல்லவும் அவள் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க கண்டதும் நொந்து தான் போனார்
அவள் உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் பாசமழை பொழிய வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. ஆனால் மட்டம் தட்டி பேசிவிட கூடாதே என்ற எண்ணத்தில் தான் சொன்னார்.. ஆனால் அவர் அவ்வளவு சொல்லியும் இவள் அதை பொருட்படுத்தாதவள் போல வேறு விசயத்திற்கு தாவி விட, எதற்கு சொன்னோம் என்று தான் இருந்தது அவனுக்கு.
ஆனாலும் சாப்பிட்டு விட்டு கை கழுவியவுடனே கமலம் அவரை பிடித்து கொண்டாள்.
“எந்த இடத்துல யாரை பற்றி பேசுறீங்க?.”
“இல்லடி.அவன் அம்புட்டு செஞ்சிருக்கான்.”
தாளமாட்டாமல் பாண்டி சொல்ல…
“என்ன?… சங்கிலி மேல சிம்பதி உருவாக்கி அவளை அவன் பக்கம் திருப்பலாம்னு பாக்குறீங்களா?”
“ஐயோ!…அப்படியெல்லாம் இல்லடி?. சங்கிலி போய் நம்ம பல்லவிக்கா. அது நடக்கவே கூடாது.”
பாண்டி அவசரமாக சொல்ல…
“அப்போ வாயை பொத்திட்டு சும்மா இருங்க. இதுக்க மேல அந்த சங்கிலி பையன் பற்றிய பேச்சே உங்களுக்கு வர கூடாது. விக்கி நல்ல புள்ளையா இருக்கான். பேமிலி கூட மெட்ராஸ்ல்ல பெரிய பேமிலியா இருக்கு. அவளோட படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற பையனா இருக்கான். அதுல வேற நம்ம பல்லவிக்கு புடிச்ச புள்ளையா இருக்கான். ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் கூட சூப்பரா இருக்கு. அவளே அவளோட வாழ்க்கையை நல்லவிதமா அமைச்ச முடிவு பண்ணிட்டா. இந்த நேரம் நீங்க போய் ஏதாவது பேசி கெடுத்தீங்க. அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.”
“இல்ல கமலம். நான் ஏன் அப்படி செய்ய போறேன். பல்லவிக்கு விக்கியை புடிச்சிருக்குணா மனபூர்வமா அவங்களை நானே சேர்த்து வச்சிடுவேன். அதுல எந்த சந்தேகமும் இல்ல. அவங்க ரெண்டு பேரும் சேருகிறது தான் சரியும் கூட. ஆனா அதுக்காக ஏறிவந்த படியை மிதிக்க கூடாதுல கமலம். சங்கிலியால தான் பல்லவி இந்த இடத்துல இருக்கா. அவளுக்கு அது தெரியாது. ஆனா உனக்கு தெரியுமில்ல. அவனை போய் இவா மதிப்பில்லாம பேசிடகூடாதுல.” .
“பேசிட்டா என்ன கெட்டு போகுது. அந்த புள்ளை மனசுல உண்மையை சொல்ல போறேனு எதையாவது விதைச்சி வச்சிடாதுங்க. அப்புறம் அவா படிச்ச படிப்புக்கே அர்த்தம் இல்லாம போயிடும். அதுல வேற பல்லவி இளகிய சுவாபம் உள்ள புள்ளை. மனசு இளகி அவன் பக்கம் திரும்புச்சினா அப்புறம் எதுவும் பண்ண முடியாது.”
“அவளோட வாழ்க்கையை நாமளே அழிச்சது போல ஆகிடும் சொல்லிட்டேன். இதுக்க மேல சங்கிலி பெயரையே நீங்க உச்சரிக்க கூடாது. நன்றி, விசுவாசம்ணா அதை நீங்க தனியா வெளியில வச்சிடுங்க. அவா முன்னால கொண்டு வந்திடாதுங்க.”
கமலம் அப்படி சொன்னதும் அதுவும் சரிதான் என்பது போல தான் பாண்டியும் யோசித்தார்.
ஆனால் இது அத்தனையும் மறைவில் இருந்து கேட்டு கொண்டிருந்த விக்கியின் மூளை வேறுவிதமாக யோசிக்க ஆரம்பித்தது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel