வணக்கம் வாசகர்களே!
ஓவியாவை பேச வைக்க முகுந்தன் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா? வாங்க பதிவுக்குள்ளால போலாம்
ஓவியாவை பேச வைக்க முகுந்தன் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா?
வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓவியா ஒடி போய் கட்டிலில் படுத்து விட்டாள். பின்னால் வந்த திலகாவை கூட அவள் உள் அழைத்து வரவில்லை. நளன் தான் உள் அறை வரை அவளை கொண்டு வந்து விட்டு விட்டு சென்றான்.
உள் வந்தவள் விடைபெற்ற நளனை கூட பார்க்கவில்லை. கட்டிலில் பொத்தென விழுந்து கிடந்த தோழியை தான் பார்த்தாள். பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. இப்போதும் அவள் கோபம் எல்லாம் முகுந்த் மேலேயே இருந்தது.
எதற்கு இந்த விளையாட்டு. ஏன் இவளை அவர் இந்த அளவு பாடுபடுத்துகிறார். பொய் சொல்லி விட்டு போனதற்கு இப்படி எல்லாம் செய்வாரா?
என்று அவளால் குறைபட தான் முடிந்தது. அவனின் உள்ளத்தில் மறைந்திருக்கும் நிஜ உணர்வு அவளுக்கு தெரியாமல் போனது.
இன்று அப்படி எந்த முக்கியமான மீட்டிங்கும் இல்லை. அவர் சங்கீதாவோடு கூத்தடித்ததை பார்க்கவா எங்கள் இருவரையும் கூட்டி சென்றார். வெட்கமே இல்லாமல் அவளும் அவரில் இழைந்தோடி நின்றதை பார்த்து ரசிக்க நாங்கள் இருவரும் எதற்கு?
என்று தான் கடுப்பானாள். அதனால் அவளின் கோபம் முகுந்த் மேலே இருந்தது. கூடவே பல இடங்களில் நளனுக்கும் அர்ச்சனை விழுந்தது.
உடம்புக்கு முடியலனு சொன்னவளை இப்படி வம்படியா கூட்டிட்டு வந்து என்ன நிரூபிக்க பாக்குறாரு உங்க பிரண்ட் என கேட்கவும் செய்தாள். அதற்கு நளனாலும் பதில் சொல்ல முடியவில்லை. எதற்கு இவன் இப்படி எல்லாம் செய்கிறான் என அவனுக்குமே கோபம் தான். ஆனாலும் நண்பனை விட்டு கொடுக்க முடியவில்லை. எனவே திலகாவின் பேச்சுக்கு மறுமொழி கொடுக்காமலே நழுவினான். அது கூட திலகாவுக்கு ஆத்திரத்தை தான் கொடுத்தது.
பல நேரம் தன் சோர்வை காட்டாமல் ஓவியா சிரித்து சமாளித்த போதும் அவளின் கஷ்டம் திலகாவுக்கு புரியாமல் இல்லை. புரிந்தது. ஆனால் அவள் உடல்நிலை தான் சரியில்லை என நினைத்தாள். அவளின் உள்ளம்படும் வேதனை புரியவில்லை. அதனால் தான் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கூடவே நின்றாள்.
ஓவியாவின் மனது மட்டும் தெரிந்திருந்தால் இன்று அங்கு நடக்கும் விசயமே வேறு மாதிரி இருந்திருக்கும். இன்றே இருவர் மனமும் திறக்கப்பட்டிருக்கும். ஆனால் ஓவியாவின் மெளனமே யாருடைய கேள்விக்கும் விடை கொடுக்காமல் போக ஊமையாய் உள்ளுக்குள் அழுதவள் இப்போதும் கட்டிலில் அழுது கொண்டே கிடந்தாள்.
வலியை வார்த்தையாக்க முடியவில்லை. ஒரு தலை காதலுக்கு அர்த்தம் கொடுக்க முடியுமா? இல்லை உணர்வே இல்லாத மனிதருடன் மூன்று இரவையும் பகலையும் கழித்து விட்டு காதலுக்கு விலை பேச முடியுமா? முடியாது அல்லவா?எல்லாம் கை மீறி போய் விட்டது.
தான் அடுத்தவனுக்கு சொந்தமாக முடிவாகி விட்டது. இதற்கு மேல் உணர்வை காட்டி எல்லாரையும் சங்கடப்படுத்துவதால் என்ன பலன் கிடைத்து விட போகிறது என அவளும், மனத்தை வெளிப்படுத்தாத அவளிடம் அதுவும் வேறு ஒருவனுக்கு நிச்சயமான அவளிடம் எப்படி நேரடியாக போய் காதலை கேட்பது என அவனும் இரு பாதையில் யோசிக்க வலியும் வேதனையுமே பரிசாக கிடைத்தது.
ஒவியா திலகாவிடம் மனம் திறந்திருந்தாலோ அல்லது முகுந்தனிடம் மனம் திறந்திருந்தாலோ கூட போதும். ஆனால் அவள் திறந்து பேச தயாராய் இருந்த போது முகுந்தன் மனம் பூட்டப்பட்டிருந்தது. இன்று திறக்கப்பட்ட இதயமாய் அவன் இருப்பது தெரியாமல் ஒவியா தன் இதயத்தை இறுக பூட்டி கொண்டிருக்கிறாள். இந்த கண்ணாமூச்சு ஆட்டத்தில் இருவரின் வாழ்வு இணைக்கப்படுமா? அல்லது பிரிக்கப்படுமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மறுநாள் காலை எழுந்தவுடனே
ஒவியா தன் மனதை இன்னுமே இறுக்கி கொண்டு தான் அலுவலகம் புறப்பட்டாள்.
போன உடனே முகுந்தனிடம் பேசி விட வேண்டும். தான் ஊருக்கு கிளம்ப வேண்டும் என சொல்லி விட வேண்டும். இதற்கு மேல் இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிக்க முடியாது. இதற்கு நாம் கிளம்பி விடுவதே சரியாக இருக்கும் என்றெல்லாம் நினைத்து கொண்டு தான் கிளம்பினாள். ஆனால் வழி எல்லாம் ஒரு அவஸ்தை. அப்படியும் இங்கிருந்து தப்பித்து அங்கு போய் மகேந்திரன் என்ற புலியிடம் மாட்டிக் கொள்ள வேண்டுமே. என நினைக்கையிலேயே கண்கள் இரண்டும் கலங்கின.
அவன் படுத்துற பாடு பெரிதென்றாலும் அதை விட முகுந்தன் கொடுக்கும் அவஸ்தை அவளுக்கு தாங்க முடியாததாய் இருந்தது. இதற்கு கிளம்பி விடுவது தான் சரி என முடிவெடுத்து தான் அலுவலகம் வந்தாள்.
அதே நேரம்
முகுந்தனோடு வாக்குவாதத்தில் இருந்தான் நளன். நேற்றே கேட்டு விட தான் நினைத்தான். ஆனால் உடன் சங்கீதா இருந்ததால் பெரிதாக பேச முடியாமல் வீட்டிற்கு போய் விட்டான். ஆனால் இரவு நிம்மதியாக அவனால் தூங்க முடியவில்லை. இன்று முகுந்தன் செய்தது கொஞ்சம் அதிகபடி என அவனுக்குமே தோன்றியது. திலகா கேள்வி நியாயமானது என்றும் நினைத்து கொண்டான். அந்த நொடி விட்டு கொடுக்க முடியாமல் அமைதியானாலும் இப்போது விடும் நிலையில் அவன் இல்லை. அதனால் கேட்டு விட்டான்.
முகுந்தன் வாய் விட்டு சிரித்தான்.
சிரிக்காதடா. நான் பயங்கர கோபத்துல இருக்கேன். நான் அப்போ இருந்தே உனட்ட சொல்லிட்டு இருக்கேன். அவங்க மனசுல அப்படி எந்த எண்ணமும் இல்லணு. நீ தான் ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இந்த அளவு கீழ் இறங்கி போறா? வெளியில கணவன் மனைவி இவ்வளவு நெருங்கி இருந்தாலே திட்டுவா. நேற்று உனக்கு என்னடா ஆச்சு.
கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேனோ?
கொஞ்சம் எங்க… ரொம்ப… ரொம்ப ஓவரா போனா?
பின்ன என்னடா. சங்கீதா மட்டுமல்ல. வேற எந்த பொண்ணோட நான் பேசினாலும் ஒவியா முகம் மாறுகிறதை நான் நிறைய இடத்துல நோட் பண்ணியிருக்கேன். ஆனா இப்போ என்னடானா சங்கீதா எனக்கு ஊட்டி விடுறா? இவா பல்லை காட்டிட்டு நிக்குறா? கடுப்பாகாது. கடுப்பாச்சி. அதான் அப்படி எல்லாம் செய்தேன். வெறுப்பாவாணு பார்த்தா கல்லு போல இருக்குறா?
அதுதான் என்னவெல்லாமோ செய்ய வச்சிது. இப்போ மனசுக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு.
பாவம்டா அவங்க. முடியலணு சொன்ன பிறகும் நீ விட்டியாடா?
விட்டிருப்பேன். ஆனா நான் எவளை தொட்டாலும் எனக்கு எதுவுமில்லணு நின்னா பாரு அதை என்னால மன்னிக்க முடியல. மனசுக்குள்ள அம்புட்டு வலியையும் அடக்கிட்டு நார்மலா அவளால நடிக்க முடியும்ணா அதை வெளி கொண்டு வர நானும் எந்த எல்லைக்கும் போகணும்ல. அதான் கொஞ்சம் விளையாடுனேன். அதான் இப்போ மாட்டிகிட்டால.
மாட்டிகிட்டாளா?
மேடம். தோழியை கூட கூட்டிட்டு போகாம வீட்டுக்குள்ள விறுவிறுணு போனதை பார்க்கலியா?
டேய். அது உடம்பு சரியில்லாம போனது.
நீ அப்படியா நினைக்கிறா? என் மனசுக்கு அப்படி தோணல. மேடம் நார்மலா இருக்க பெரும் முயற்சி செய்து முடியாம ஒடுனதா தான் நான் நினைக்கிறேன்.
டேய் முகுந்த். தப்பா யோசிக்கிறா?
தப்பாவா? நானா? இல்லை. அடிச்சி சொல்றேன் ஓவியா மனசுல நான் இருக்கேன். கூடிய சீக்கிரத்துல அவளே வாய் திறந்து எனட்ட சொல்ல வைக்கிறேன். போதுமா?
என்றவன் காரை திருப்பி கொண்டு அசுர வேகத்தில் அலுவலகம் விரைய அதன் பின் அந்த பேச்சுக்கு முற்று புள்ளி விழுந்தது. அலுவலகம் வந்தவர்களுக்கு ஆயிரதெட்டு வேலை இருந்தது. நிறைய பைல்ஸை முடித்து அனுப்ப வேண்டி இருந்தது. அதனால் நளன் பேக்கின் செக்ஷனுக்குள் நுழைந்து கொள்ள முகுந்தன் தன் அறையில் பைல்ஸோடு அமர்ந்து விட்டான்.
பத்து நிமிடம் வேலையில் அமைதியாய் இருந்தவன் மனது ஒரு குரல் கேட்டதும் அதிகமாய் துடிக்க தொடங்கியது.
என்ன ? நாம கூப்பிடாமலே வந்திருக்கா? என்ன விசயமா இருக்கும்.
எண்ணியவன் மனதில் நேற்றைய ஓவியாவின் முகம் வந்து போக,
ம்… பார்ப்போம். நேற்றைய என்னோட அதிரடியில எவ்வளவு மாற்றம் தெரியுதுணு .
எண்ணியவன் குரல் கேட்டும் நிமிராமல் வேலையில் மும்முரமாக இருப்பது போல் நடிக்க,
எரிச்சல் உற்றவள், கொஞ்ச நேர அமைதிக்கு பின்,
கொஞ்சம் பேசணும்.
என்றாள்.
பேசுங்க…
என்றவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஒவியாவுக்கு எரிச்சல் முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் காட்ட முடியவில்லை. சிறிது நேரம் அவளை அல்லாட விட்ட பின்னரே,
சொல்லுங்க ஓவியா.
என்றான் மறுபடியும். இப்போதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
எப்போ சார் புது ஸ்டாப்ஸ் எடுப்பீங்க. எனக்கு சொல்லி கொடுத்துட்டு கிளம்பணும்.
என்றாள் தயக்கமாக…
ஒ… அந்த அளவு ஆகிடுச்சா…
மனதுக்குள் கர்வியவன்,
என்ன மேடத்துக்கு அவசரமோ…
என கிண்டல் தொனியில் கேட்க, அதற்கெல்லாம் அசர மாட்டேன் என்பது போல,
ஆமா சார் அவசரம் தான். வீட்டுல எப்போ கிளம்பி வராணு கேட்கிறாங்க.
என்றாள் அவளும் அதே தோனியில்,
ஒ… நேற்று நான் கொடுத்த சூட்டோட உஷ்ணம் போல, இருக்கட்டும். இருக்கட்டும் என மனதில் நினைத்து கொண்டவன்,
என்ன மேடத்துக்கு கட்டிக்க போறவனை பார்க்க அவ்வளவு அவசரமா?
என்றதும் சட்டென ஏறிட்டு பார்த்தவள் அவன் விழிகளில் தன் விழியை செலுத்த, நிஜமாகவே தடுமாறி தான் போனான் முகுந்தன். அவனின் தடுமாற்றத்தை கண்ணுக்குள் நிரப்பியவாறே,
கல்யாண வேலை நிறைய இருக்கு சார். எப்போ கிளம்பி வராணு வீட்டுல கேட்கிறாங்க.
என்றாள் கோபத்தை பெரும்பாடுபட்டு அடக்கி கொண்டு,
ஆக… அவனை கட்டிக்க நீ ரெடியாகிட்டா.
என்றதும் புரியாமல் விழித்தவள்,
இது என்ன கேள்வி. நிச்சயம் முடிஞ்சிருக்குணா ரெடியாகிட்டதா தானே அர்த்தம்.
ஆக… அவனை கட்டிக்க உனக்கு முழு சம்மதம்.
ஏன் சம்மதம் இல்லணு சொன்னா கல்யாணத்தை நிறுத்திட போறீங்களா? இப்போ எதுக்கு சம்மந்தம் சம்மந்தம் இல்லாம கேள்வியா கேட்கிறீங்க. முதல்ல என்னை வீட்டுக்கு அனுப்பி வைக்கிற வழியை பாருங்க. நான் வந்து ஒரு வாரம் ஆக போகுது. வீட்டுல விடாம போன் அடிச்சி தொந்தரவு பண்ணுறாங்க. நீங்க எப்போ தான் ஆளை தேர்வு செய்வீங்க.
கடுகடுப்போடு சொன்னவளை ஆழமாக பார்த்தவன் சிறிது நேரத்திற்கு பின் மேஜை மீதிருந்த பெல்லை தட்ட நளன் உள்ளே வந்தான்.
அவனை பார்த்து முகுந்தன்,
மேடத்துக்கு அந்த வழுக்கை தலையனை பார்க்க ஆசை வந்திடுச்சி போல… கிளம்ப பிடிவாதம் புடிக்கிறாங்க. என்ன நளன் இன்டர்வியூக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்களா?
என்றான் கிண்டலோடு,
வழுக்கை தலையனா?
என முணுமுணுத்தவள் அவனை முறைக்க, புன்சிரிப்போடு தலையை திருப்பியவன் நளனை பார்க்க,
நீ எங்கடா சொன்னா? நான் ரெடி பண்ண?
மனதுக்குள் சொன்னவன் அவனை குழப்பமாக பார்த்து,
அது… அது…
என தடுமாற,
சுத்தம். அதுவே ரெடி பண்ணலியா? என்னை எப்போ தான் ஊருக்கு அனுப்புற எண்ணத்துல இருக்கீங்க.
என்றாள் சற்று கோபத்தோடு,
அனுப்பிடலாம். அனுப்பிடலாம். இன்று மட்டும் என்னோட ஒரு கிளைன்டை பார்க்க வாருங்க. அது ஒ.கே ஆகி அக்ரிமென்ட்ல சையின் போட்ட மறுநொடி உங்களை அனுப்பி வச்சிடுறேன்.
என்னது… புது கிளைன்டா.
சட்டென நேற்றைய நினைவு வந்து போக, அவள் முக மாறுதலை பார்த்ததும்,
நேற்று போல அலக்கழிக்க மாட்டேன். இன்று நம்பி வரலாம்.
என்றதும் ஒரு நொடி நிதானமாக யோசித்தவள்,
அக்கிரிமென்ட்டுல சைன் பண்ணுனதும் விட்டு விடுவீங்களா?
மறுபடியும் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.
நீ கிளம்ப ரெடியா இருந்தா நிச்சயம் நான் அனுப்பி வச்சிடுவேன்.
என்றதும் அரைகுறை மனதோடு சம்மதம் சொன்னவள் அடுத்த நொடியே ரெடியாகவும் இருந்தாள். அவளுக்கு இந்த அவஸ்தையில் இருந்து விடிவு கிடைத்தால் போதும் என்றிருந்தது. ஆனால் முகுந்தன் வெளி வந்து அவளை மட்டும் அழைத்ததும், திரும்பி பார்த்தாள் யாரும் இல்லை.
நாம… நாம மட்டுமா சார் போறோம்.
என்றாள் இமையை படபடவென அடித்தவாறு,
ஆமா… ஏன் கேட்கிறீங்க…
என தெரியாதவன் போல கேட்டவன் அவளை ஆழ்ந்து பார்க்க,
இல்ல… நளன்… திலகா…
என அவள் இழுவையாக நிறுத்த
அவங்களுக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு.
என்றதும்,
அடி ஆத்தி. இவரோட தனியாவா போக போறோம். சுத்தம். இன்று விளங்குனமாதிரி தான்.
எண்ணியதுமே அவள் இமைகள் படபடக்க, அவளை கூர்ந்து பார்த்தவன்,
என்ன? என் கூட வருகிறதுல பயமா?
என்றதும்,
ஆமா? என படபடவென தலையசைத்தவள் அவன் விழிக்குள் தன் பார்வையை கலரவிட்ட பின், இல்லை என மறுப்பாய் தலையசைத்தாள்.
வண்டியில் வந்து ஏறு.
என ஒருமைக்கு அவன் தாவ, அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் தயக்கத்தோடு வண்டியில் வந்து ஏறினாள்.
பின் டோரை திறக்க போனவளிடம்,
முன்டோரை திறந்து வழிவிட்டவாறு,
இங்க வந்து ஏறு,
என கட்டளையிட, அவனை பயத்தோடு பார்த்தவள்,
நானா?
என இயலாமையோடு கேட்டாள்.
உன்னை தான். நீ மட்டும் தானே இங்க இருக்கிறா? வா… வந்து முன்னால ஏறு.
இல்ல சார். நான் பின்னாலயே இருக்கேன்.
என்ன?… எது சொன்னாலும் கேட்க கூடாது என்கிற முடிவுல இருக்கிறியா?
ஐயோ சார்… அப்படியெல்லாம் இல்லை.

என்றவள் ஒரு நொடி அவன் விழியை பார்த்து விட்டு கோபத்தில் சிவந்திருந்த அவன் முகத்திற்கான காரணம் தெரியாமல் தயங்கியவாறே முன்பகுதியில் வந்து ஏறி அமர்ந்தாள். அமர்ந்தவளை ஒரு நொடி பார்த்தவன், பின் எதுவும் பேசாமல் வந்து டிரைவர் சீற்றில் அமர்ந்து ஸ்டாட் செய்தான். வண்டி மெல்ல நகர்ந்து பின் வேகம் எடுத்தது. ஆனால் வண்டி நகரத் தொடங்கிய பின் அவன் ஒற்றை வார்த்தை பேசவில்லை. இறுக்கத்தோடே இருந்தான்.
பெண்ணவளும் அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறே தான் இருந்தாள். முகத்தில் சிறு சிரிப்பு இல்லை. மருந்துக்கு கூட அவன் வாய் திறக்கபடவில்லை. கொஞ்ச நேரம் அவனையே ஒர கண்ணால் பார்த்தவாறு இருந்தவள் பின் திரும்பி வெளிவுலகை வெறிக்க தொடங்கினாள்.
அதே நேரம் முகுந்த் அறையில் கைகள் இரண்டும் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தான் நளன். என்னவோ முகுந்தன் செய்வது சரியில்லை என்பது மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவன் பேச போற விசயம் கேட்டு நிச்சயம் ஒரு பூகம்பம் தன் வாழ்விலும் நடக்கும் என்பது யாரும் சொல்லாமல் அவனுக்கே தெரிந்தது.
அதற்குள் தன் மனம் கவர்ந்தவளிடம் பேசி தெளிவுப்படுத்தி விட வேண்டும் என்று மனசு உந்தி தள்ள, கண்ணாடி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். ஆபீஸே சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. ஆனால் இவன் மனம் மட்டும் தான் குழம்பி கொண்டிருந்தது. சொல்ல சொல்ல கேட்காமல் முகுந்தன் ஓவியாவோடு கிளம்பிய நொடியே அவனுள் இந்த குழப்பம் வந்து விட்டது. கூடவே பயமும் வந்தது. அவன் செய்ய கூடிய கோமாளி தனத்தால் தன் காதலில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் தான் அவனை குழம்ப வைத்திருந்தது.
அந்த குழப்பத்தோடே திலகா அறைக்கு வந்தான். கள்ள முழி முழித்து கொண்டு முன்னால் நின்றவனை யோசனையோடு பார்த்தாள் திலகா.
என்னாச்சு. ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு.
என்றதும் முகத்தை ஒரு முறை கையால் துடைத்து தன்னை நார்மலாக்கும் முயற்சியில் ஈடுபட,
எதுக்கு இப்போ பதட்டம். என்ன நடந்துச்சு.
என்றவளை தயக்கத்தோடு ஏறிட்டவன்.
முகுந்தன் ஓவியாவை அழைச்சிட்டு வெளியில போயிருக்கான்.
தெரியும். அதுக்கென்ன?
அது இல்ல… நேற்று போல…
நேற்று போல…
இல்ல உன் பிரண்ட் அப்செட்…
அது எல்லாம் ஆக மாட்டா. ரொம்ப ரொம்ப தெளிவா தான் போயிருக்கா. திரும்பி வந்ததும் ஊருக்கு கிளம்பிடுவா?
அதுக்கில்ல திலகா…
உனக்கு என்னாச்சு. எதுக்கு நீயும் குழம்பி என்னையும் குழப்புறா? அவங்க பிரச்சினையை அவங்க சமாளிச்சிப்பாங்க. உன் பிரச்சினை ஏதாவது இருந்தா போய் பாரு.
என் பிரச்சினை. ஆமா அதை தீர்க்க தான் உன்னை தேடி வந்தேன்.
நான் என்ன பண்ணணும்.
நீ எதுவும் பண்ண வேணாம். எல்லாம் அம்மா பாத்துப்பாங்க. நீ சம்மதம் மட்டும் சொல்லு.
எதுக்கு சம்மதம்…
நம்ம கல்யாணத்துக்கு…
விளையாடுறியா?
இல்லடி. அம்மா தான் பேச சொன்னாங்க. ஒரு நல்ல நாள் பார்த்து உன் அம்மாட்ட வந்து பேசட்டுமாணு கேட்க சொன்னாங்க.
என்ன நினைச்சிட்டு இப்படி பேசுறா? நான் உன்னை கட்டிப்பேணு கனவுல கூட நினைக்காத. அதுக்கு இந்த ஜென்மத்துல வாய்ப்பே இல்லை.
என்னடி விளையாடுறியா? எப்படியோ இருந்த மனசை இளக வச்சி குளிர வச்சி ஒரு தினுசாய் ரொம்ப கஷ்டப்பட்டு மாற்றி கொண்டு வந்தா மறுபடியும் பழையபடி பேசுறா?
மாற்றி கொண்டு வந்தியா? நான் மாறிட்டேனு நினைக்கிறது உன் முட்டாள்தனம். அப்ப சொன்னது தான் இப்பவும். எப்பவும்.
திலகா நீ நிஜமா தான் சொல்லுறியா?
ம்… என்னால என்னை மாத்திக்க முடியாது…
பிளீஸ் திலகா அப்படி பேசாத…
பேசல. நீயும் இனி இது பற்றி பேசாத…
எப்படி டீ பேசாம இருக்க முடியும். நான் காதலிச்சிருக்கேன்டி.
அது இந்த திலகாவை இல்லை. இரண்டு காலோட அழகு சுந்தரியா இருந்த திலகாவை. அந்த திலகா தான் மலை சரிவுல செத்து போயிட்டாளே. அப்படியும் அவளை தேடி அலைஞ்சா எப்படி? இனி அவா உங்களுக்கு கிடைக்க மாட்டா. தயவு செய்து மனசை மாத்திட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோங்க. இந்த நிலமையில என் மனசு மாறவே செய்யாது.
கால் இல்லனா என்னடி. உன் மனசு போதுடி.
அறிவு இருக்கா நளன் உங்களுக்கு. இரண்டு கால் இல்லாதவளை காலம் முழுக்க சுமக்க எதுக்கு ஆசைப்படுறீங்க. நான் உங்களுக்கு வேணாம். ஒரு நாள்… ஒரு நாள் சந்தோஷமா ஜாலியா உங்களோட வெளிவர முடியுமா? போகிற இடத்துக்கு என்னோடு உங்களால கம்பீரமா நடக்க முடியுமா? வாழ தான் கல்யாணம் பண்ணிக்கிறோம். என் சுமையை உங்க தலையில சுமத்த இல்ல. என் கனவு கலைஞ்சி போச்சு நளன். என் கற்பனை உடைஞ்சி போச்சு. இப்படி உருகுலைஞ்சி கிடக்கிற எனட்ட இருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
ஏண்டி இப்படி எல்லாம் பேசுறா? உன் மனசுலயும் வசந்தம் வீசும்டி. உன் மன குகையில இருந்து வெளியில வா. நாம சேர்ந்து சந்தோஷமா வாழலாம்.
அதுக்கு வாய்ப்பில்லை நளன். நீங்க போலாம். இது போல தான் இனியும் பேசுறதுனா என் முன்னால வராதுங்க.
என்னடியாச்சு உனக்கு. இரண்டு நாள் முன்னால வரை ஓ.கே.வா தானே இருந்தா? இப்போ என்னாச்சி.
எனக்கு என்ன? நான் நல்லா தான் இருக்கேன். இரண்டு நாள் முன்னால இருந்தது போல தான் இப்பவும் இருக்கிறேன். ஆனா நீங்க தான் நான் சிரிச்சி பேசினதும் தப்பா புரிஞ்சிட்டீங்க. என் தகுதி எனக்கு தெரியும். உங்க தகுதியும் எனக்கு தெரியும். நீங்க கிளம்பலாம்…
திலகா…
பிளீஸ் நளன். என்னை கஷ்டப்படுத்தாதுங்க. போயிடுங்க… பிளீஸ்…
கண்ணீர் மல்க கை கூப்பியதும்
தளர்ந்து போய் திரும்பி நடந்தான். அவன் பின் முதுகை வெறித்த திலகாவின் கண்கள் நீரை கன்னத்தில் வடிய விட்டவாறு,
சாரி நளன். நீயும் டாக்டரும் பேசுனதை நான் கேட்டுட்டேன். சாரி. வெரி வெரி சாரி. உனக்கு வாரிசை கொடுக்க முடியாதுணு டாக்டர் சொன்னதுக்கு அப்புறமும் நீ வேணா மனம் உவந்து என்னை ஏத்துக்க ரெடியா இருக்கலாம். ஆனா என்னால முடியாது. நான் காதலிச்சவனோட எதிர்காலத்தை என்னால அழிக்க முடியாது. நீ சந்தோஷமா இருக்கணும். பிள்ளை குட்டிகளோட சந்தோஷமா வாழணும். அதை நான் பார்க்கணும்.
நினைத்தவள் உதடு அவளை அறியாமல் துடிக்கத் தொடங்கியது.
மூன்று நாளில் திலகாவின் செயலில் தெரிந்த மாற்றத்திற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தோடு வெளி வந்தவன் நேரே வாசலுக்கு வந்து முன்னால் பார்க்கிங்கில் நிப்பாட்டி இருந்த காரை எடுத்து கொண்டு இலக்கு இல்லா பயணமாக ஒட்ட தொடங்கினான்.
நளனை வேதனைப்படுத்தி விட்டு அந்த வலியை பொறுக்க முடியாமல் குலுங்கி அழுத திலகாவின் கவனத்தை வெளியில் இருந்து வந்த குரல் கலைத்தது. அவசரம் அவசரமாக கண்ணீரை துடைத்தவள்,
வெளியில் இருந்து உள் நுழைந்த சுந்தரியை கண்டதும்,
சொல்லுங்க மேடம்…
என அவளை ஆர்வமாக பார்க்க,
ஓவியாவை தேடுனேன். காணல. ஒருவேளை இங்கு வந்திருப்பாளோணு பார்க்க வந்தேன்.
அவளை எதுக்கு தேடுறீங்க.
வேணி மேடம் தான் கேட்டாங்க. குடகுமலை குடோன்ல்ல ஸ்டாக் கிளியர் பண்ண அவங்களை அனுப்ப சொன்னாங்க.
ஒ… அப்படியா? அவா இங்க இல்ல. முகுந்த் சாரோட ஒரு கிளைன்ட்டை பார்க்க போயிருக்கா. வர எப்படியும் நேரமாகும். அப்படியே வந்தாலும் உடனே ஊருக்கு போக தான் ரெடியாவா? நானே போறேன். வண்டிக்கு ரெடி பண்ணுங்க.
ஓ.கே. திலகா.
என சுந்தரி விடை பெற, திலகா தன்னை நோக்கி வரும் ஆபத்து தெரியாமல் குடோனுக்கு கிளம்ப ரெடியானாள்
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel



