வணக்கம் வாசகர்களே!
மலை சரிவில் மாட்டி கொண்டு இடிபாடுகளின் நடுவில் இருந்த ஓவியாவுக்கு நடந்தது என்ன?
மலை சரிவில் ஓவியாவுக்கு நடந்தது என்ன?
ஓவியாவை மொத்தமாக நசுக்கி விட வந்த காங்கிரீட் துண்டை பார்த்து பதறி போய் ஒடி வந்த முகுந்தன் அது அவள் தலையில் விழுந்து விடாமல் தடுக்க போய் அது அவன் தோள்பட்டையை பதம் பார்த்து விட்டு தரையில் போய் விழ, துடித்து போனான் முகுந்தன். உயிர் வலி எடுத்தது. அவன் அடக்க பார்த்தும் முடியாமல் வலி அழுகையாக வெளிப்பட்டு விட,
பதறி துடித்து எழுந்து ஒடி அவன் அருகில் வந்தவள் கண நேரத்தில் பதற்றத்தோடு அவனை பிடித்து தூக்க முயல, வலியில் துவண்டு போய் விட்டான் முகுந்த். அவனை அக்கோலத்தில் கண்ட பெண்ணவளின் கண்களுமே கலங்கி விட்டது.
“என்ன காரியம் பண்ணிட்டீங்க. ஏன்… ஏன் இப்படி செஞ்சீங்க. ஐயோ ரத்தம்.”
பதறி துடித்த பெண்ணவளிடம் தன் வலியை காட்ட மனமில்லாமல் அவனும் அடக்க தான் பார்த்தான். ஆனால் பட்ட வேகத்தில் எலும்பு இரண்டு முறிந்து விட கையே உடலில் இருந்து துண்டித்தது போல உயிர் வலி எடுத்தது.
ஆ…
வாய் விட்டே அவன் கதற, பெண்ணவளால் என்ன செய்ய என்று கூட தெரியவில்லை. இதுவரை திமிர்தனத்தின் உச்சமாய் தெரிந்தவன் இப்போது பச்சை குழந்தை போல் அழ, செய்வதறியாது திகைத்து நின்றாள்.
அதே நேரம்.
அஷ்மோரா ஹோட்டல் இருந்த இடத்தை வந்து அடைந்திருந்தது நளன் டீம். ஒரு பொதி உருண்டை மண்ணுக்குள் பாதி புதைந்து பாதி வெளியில் துருத்தி கொண்டு நிற்பது போல தெரிந்தது அந்த கட்டிடம். அதன் நாலாபக்கமும் இருந்து மலை நீர் பெருக்கெடுத்து பாய, அந்த நீரோடையை கடந்து செல்ல பெரும்பாடுபட வேண்டியதாகி போனது.
கயிற்றை கட்டி ஒருவாறு மீட்பு படை அதன் முகப்பு பகுதிக்கு வந்திருந்த நேரம், முன் சுவர் மழைநீரால் இடிந்து விழுந்தது. நல்ல வேளை அது மறுபுறம் வழியே நீரோடைக்குள் விழ நளனுடன் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
மெல்ல இடிந்து விழுந்த சுவற்றையே பாதையாக்கி மெல்ல மெல்ல நளனின் டீம் உள்ளே நகர்ந்தது. மொத்த பாதையையும் அடைத்து சுவர் அவர்களை முன்னேற விடாமல் செய்ய, மீட்பு படையினரோடு சேர்ந்து நளனும் இடிபாடுகளை அப்புறப்படுத்த தொடங்கினான்.
அதே நேரம்,
“ஏய்… என்ன பண்ணுறா? அதை உன்னால அப்புறப்படுத்த முடியாது. எதுக்கு வீணா மல்லுகட்டிட்டு நிக்குறா?”
தூண் ஒன்றை பிடித்து இழுத்து எப்படியும் அதை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் ஓவியா அதன் ஒருப்பக்கத்தில் நீண்டு நின்ற கம்பியை பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுப்பதை பார்த்து முகுந்த் வலியிலும் கத்த,
“இதை அப்புறப்படுத்திட்டா உங்களுக்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும். சார். அதான் முயற்சி பண்ணுறேன்.”
மறுபடியும் முயற்சியை கைவிடாமலே அவள் சொல்ல…
“ நீ இப்போ இதை இழுத்திடுவா. வீண் முயற்சி. இதை நகர்த்தவே முடியாது. பேசாம வந்து இதுல உட்காரு. எதையோ செய்ய போய் மறுபடியும் ஆபத்துல மாட்டிக்காத.”
மறுபடியும் அவன் வலியில் கத்தினாலும் இவளின் சிறுபிள்ளை புத்தியில் எதாவது ஆபத்தில் மாட்டி கொண்டு விட கூடாதே என்ற அக்கறையில் பேச,
நீங்க இருக்க சார். இந்த கம்பியை மட்டும் கொஞ்சம் நீக்கிட்டேனா… காலையில் உங்க அறைக்கு கொண்டு வந்த ஏதாவது சாப்பிட கிடைக்கும்.
ம்…ம்… கிடைக்கும். கிடைக்கும். இந்த இடிபாடுக்குள்ள சிதைஞ்சி சின்னாபின்னமாயிருக்கும். உன் அதி புதிசாலிதனத்தை காட்டாம பேசாம வந்து உட்காரு.
இல்ல சார்…
சும்மா இருணா இருக்க மாட்டியா? உன்னால ஒரு பக்க கையே போச்சு. மறுபடியும் எதையாவது இடிச்சி தலையில போட்டு ஒரேயடியா அனுப்பி வச்சிடாத.
அவனின் கர்ச்சனைக்கு பயந்து மறுபடியும் அவன் அருகில் வந்து பயத்தோடு அமர்ந்தவளாக அவனை பரிதாபமாக பார்க்க,
பெரிய ஜான்சிராணிணு நினைப்பு,
முனங்கியவனை கீழ் பார்வை பார்த்தவள் மறுபடியும் தலையை தாழ்த்தி கொண்டு உட்கார்ந்து விட, முகுந்த் வலியில் முனங்க ஆரம்பித்தான். அவன் தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது.
ஐயோ… ரத்தம்… ரத்தம்…

மறுபடியும் அவள் எழுந்து ஒடி வர, அவளை விரல் உயர்த்தி எச்சரித்தவன் தன் சட்டையை மெல்ல கழற்றி அந்த காயத்திற்கு கட்டிட்டான். அவன் கட்டிட கட்டிட ரத்தம் வடிந்து கொண்டே இருக்க, பெண்ணவளால் பதறாமல் இருக்க முடியவில்லை. அவளை கண்களால் அடக்கியவாறு ரத்தம் வெளியேறாமல் அணை கட்டியவன் ரொம்பவே சோர்ந்து போய் சுவரில் சாய்ந்து அமர்ந்தான்.
நேரம் ஆக ஆக முகுந்த்துக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. இன்னும் சற்று நேரத்தில் தான் சுயநினைவை இழக்கப் போகிறோம் என்பது உறுத்த பெண்ணவளை இயலாமையோடு பார்த்தவன். அப்படியே தன்னை மொத்தமாக இழந்து கீழே சரிந்து அவள் தோள்பட்டையில் மூச்சிறையானான்.
பதறி துடித்து அவனை தாங்கி கொண்டவள்.
ஐயோ… கண்ணை மூடாதுங்க சார். எனக்கு பயமா இருக்கு சார்… பிளீஸ்சார்…
என கதிகலங்கிய,
அதே நேரம்,
விடாத மழையில் நனைந்து கொண்டே அந்த கட்டிடத்தில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது நளனின் டீம். மீட்பு பணியில் தொய்வு ஏற்பட காரணமே இந்த விடாத மழை தான். கூடவே வழியில் இவர்கள் மீட்டெடுக்கும் மனிதர்களை ரொம்ப தொலைவு கொண்டு போய் சேர்க்க வேண்டி இருந்ததால் நளனால் முகுந்த் இருக்கும் பக்கம் கூட வர முடியவில்லை. அந்த கட்டிடத்தின் முகப்பில் இருந்து நளனுக்கு அவ்வளவு இடையூறு. அந்த கட்டிட இடிபாடுகளை அகற்றி முன்னேறுவது அவ்வளவு கடினமாக இருந்தது. இந்த இடிபாடுகளின் நடுவில் அவனை எங்கு போய் தேடுவது. நளன் தலையை பிய்த்து கொண்டிருந்த நேரம் ஒரு தீனமான குரல் அவன் செவியை வந்தடைய சட்டென திரும்பி பார்த்தான். இடிந்த தூணுக்கு அடியில் இரண்டு கால்கள் தெரிந்தது.
சரவணன்.
பின்னால பாருங்க… என நளனின் கத்தல் குரல் கேட்டு சரணவன் திரும்பி பார்த்த இடத்தில் ஒரு பெண் குற்றுயிரும் கொலை உயிருமாக இருக்க கண்டதும் மொத்த மீட்பு படை குழுக்களும் அந்த தூணின் பக்கம் சூழ்ந்து கொள்ள, அந்த தூணை அப்புறப்படுத்தி விட்டு அந்த பெண்ணை தூக்கி வந்த போது தான் நளன் அந்த பெண்ணையே பார்த்தான்.
பார்த்த நொடி அவன் கண்கள் அதிர்வோடு கலங்கி விட்டன.
ஆனால் அதற்கு மேல் உணர்வை அவனால் காட்ட முடியவில்லை. முகுந்த். அவன் என்ன நிலமையில் இருக்கிறானோ என்ற எண்ணமே மனதில் பேயாட்டத்தை விதைக்க, தூக்கி சென்ற திலகாவை ஒரு நொடி திரும்பி பார்த்து விட்டு முன்னோக்கி நகர்ந்தான். அன்றும் அவனால் முகுந்த் இருந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
நான்காம் நாள் காலை. மீட்பு படை வீரர்கள் மும்முரமாகி விட்டார்கள். ஆனால் நளன் சேர்ந்து போயிருந்தான். காரணம் அதன் பிறகு அந்த கட்டிடத்தில் ஒரு உயிர் கூட அவனுக்கு உயிரோடு கிடைக்கவில்லை. தன் தோழன் உயிரோடு கிடைப்பான் என்ற நம்பிக்கையே சுத்தமாக அவனுக்கு போய் விட்டது. என்றாலும் இடிபாடுகள் நடுவில் அவனை பார்த்து விட மாட்டோமா என பரபரத்தான்.
அதே நேரம் இன்டர்காம் அவனை அழைக்க, போலீஸ்காரர் ஒருவர் அவன் கையில் கொடுத்தார்.
உங்க பாஸ்…
என்றதும் அவசரமாக அதை வாங்கியவன்.
“சொல்லுங்க சார்.”
“நளன். அந்த ஹோட்டலில் இருந்து கால் ஒடிந்து ஒரு பொண்ணை தூக்கிட்டு வந்தீங்களே, அந்த பொண்ணுக்கு நினைவு திரும்பிச்சி. அது உனட்ட ஒண்ணு பேசணும்னு சொல்லு.”
“எனட்டயா?”
நம்ப முடியாமல் தான் கேட்டான்.
“ஆமாப்பா. அந்த பொண்ணு அந்த ஹோட்டல்ல மூணு வருஷமா வேலை பாக்குதாம். அதுக்கு அந்த இடம் பற்றி முழுசா தெரியுது. ஆனா கூட்டிட்டு போய் உங்களுக்கு உதவ முடியாத நிலையில இருக்கு. காலு இரண்டும் மொத்தமா சிதைஞ்சி போயிருக்கு. அதான் போனுல உங்களுக்கு வழிகாட்ட விரும்புது.”
என்றதும் முகம் மலர்ந்தவன்.
“கொடுங்க சார்…”
என உற்சாகமாக சொல்ல, போன் திலகா கைக்கு மாறியது.
“சார்… நீங்க என்னை மீட்டெடுத்த இடம் உங்களுக்கு நியாபகம் இருக்கா…”
“ஆமா…”
“அதுல இருந்து இடது பக்கம் ஒரு இருபது இருபத்தைந்து அடி எடுத்து வைங்க. நிச்சயம் அது பக்கத்துல தான் ஓவியா இருப்பா.”
“ஓவியாவா ? அது யாரு? இப்போ அவளை தேட தான் போன் அடிச்சியா?”
சக்கரவர்த்தி கொதித்து போய் கேட்க,
“அவசரப்படாதுங்க சார். நீங்க உங்க மகனை காப்பாற்றணும்ணா ஓவியா இருக்கிற பக்கம் தான் போகணும். இந்த அசம்பாவிதம் நடக்கிறதுக்கு இரண்டு நிமிஷத்துக்கு முன்னால தான் ஓவியா உங்க மகனுக்கு டிபன் எடுத்துட்டு அவர் அறைக்கு போனா. ஒருவேளை அவா வராண்டாவுல மாட்டியிருக்கலாம். இல்ல உங்க மகன் தங்கி இருந்த அறையில மாட்டி இருக்கலாம். எங்க இருந்தாலும் அவளோட பக்கத்துல தான் உங்க மகனும் இருக்கணும்.”
என்றதும் சக்கரவர்த்தி சட்டென திலகா கையில் இருந்த போனை வாங்கி,
“கேட்டுச்சா நளன். இடது பக்கமா ஒரு இருபது அடி தூரத்துல சீக்கிரம் சீக்கிரம்…”
என அவசரப்படுத்த,
“என் தோழியையும் எனக்கு மீட்டு கொடுத்திடுங்க சார். பிளீஸ் சார்…
கண்ணீர் மல்க கை கூப்பி நின்றவளை ஒரு நொடி அமைதியாக பார்த்த சக்கரவர்த்தி மறுபடியும் செல்லை காதில் வைத்தவாறு நகர்ந்த அதே நேரம்,
முகுந்தை தன் மடியில் தூக்கி போட்டு கொண்டு தன் உடலை கிழித்து போராடி எடுத்து வந்த நீர் பாட்டிலில் கொஞ்சமாய் இருந்த நீரை அவன் முகத்தில் அறைந்தாள் ஓவியா. முகத்தில் ஜில்லென்று பட்ட நீரில் முகுந்த் நெற்றிகள் சுருக்கம் கண்டது. இப்போது தான் ஓவியாவுக்கு போன உசுரே வந்தது. அவனை தாங்கி பிடித்து மீதி இருந்த நீரை அவனுக்கு கொடுத்த போது தான் அவள் தோள்பட்டையில் இருந்து செந்நீர் உருண்டோடி வருவதை அவனுமே பார்த்தான். ஆனாலும் பேச முடியவில்லை. அவள் அவள் வலியை பெரிதுபடுத்துவது போல் கூட தெரியவில்லை. இவனை எழும்பி உற்கார வைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒட்டி கொண்டிருந்த மண்களை அப்புறப்படுத்தியவாறே போராடி சம்பாதித்து வந்த ஆரஞ்ச் பழத்தையும் நைந்து போயிருந்த ஆப்பிள் பழத்தையும் சுத்தப்படுத்தி அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
கலங்கிய கண்களோடு துடித்த உதடுகளோடு தன்னை காப்பாற்ற போராடி தவிக்கும் பெண்ணவளை உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்தவன் சட்டென கண்களை மூடி உதட்டை திறக்க, இப்போது ஓவியாவின் கரத்தில் இருந்த அந்த அழுக்கேறிய ஆப்பிள் பழம் அவன் வாய்க்குள் சென்றது.
அதே நேரம் நளன் திலகா சொன்ன பக்கமாக முன்னேறி வந்து கொண்டிருந்தான். திலகா வழி காட்டிய பின் ஒரு இடத்தில் கூட அவன் சோர்ந்து போகவில்லை. மிக மிக வேகமாக முன்னோக்கி வந்தான். என்றால் ஒரு மனிதன் கூட அதன் பிறகு உயிரோடு மீட்கப்படாதது அவளுள் கலவரத்தை உண்டு பண்ணியது.
சரவணன் இந்த தூணை அப்புறப்படுத்திட்டா . முகுந்த் இருக்கிற இடம் வந்திடும்ணு நினைக்கிறேன். என்றவுடனே கூட்டம் அந்த தூணை சூழ்ந்து கொள்ள, அந்த தூண் அப்புறப்படுத்த பின் அதை தாண்டி சிதைந்து போயிருந்த கதவை பலம் கொண்ட மட்டும் திறக்க முயன்றான். அது ஒரு பெரும் போராட்டத்திற்கு பின் மெல்ல திறந்து கொண்டது.
அதே நேரம் சரியாக தூரமாய் சுவரில் சாய்த்து தலையை ஒரு பக்கமாய் தொங்க போட்டவாறு இருந்த முகுந்தன் நளன் கண்களில் விழுந்தான். பூரிப்பும் அழுகையுமாக அருகில் ஒடி வந்த போது தான் தெரிந்தது.
ஒரு பெண்ணின் தோளில் மேல் சாய்ந்து முகுந்தன் தூங்கி கொண்டிருப்பது. அந்த பெண்ணும் தூங்குவது போல் கண் மூடி தான் இருந்தாள். ஆரம்பத்தில் இருவரும் தூங்குகிறார்கள் என்று தான் நினைத்தான். ஆனால் அருகில் சென்று அவர்களை அசைத்த போது தான் இருவருமே அடிசாய்ந்து கீழே விழ கண்டது துடித்துப் போனான் நளன்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



