A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil

இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா?

பேசும் கவிதையினை படைப்பாரா ?

வீசும் காற்றின் வாசம் போல,

நேசம் கொண்ட என்னுள் பிறப்பாரா?

பனி பொழியும் மார்கழி இரவில்

தனியொரு மாட்டு குடியில் தனிலே

தவித்த தாய் மரி மடியில்

வந்துதித்த தேவன் என்னில் மலர்வாரா?

வைக்கோல் மெத்தையில் கண்ணமர்ந்து

இடையர் பலருக்கு காட்சி தந்து

புன்னகை மாறா புது பூவாய் ஜொலித்து நின்று

பூரிக்க செய்த மலரே என்னுள் மணவீச வருவாயோ?

நள்ளிரவு சுமந்து வந்த விடியல் நீ

நாட்டிற்கு கிடைத்ததொரு புதையல் நீ

எந்தன் வாழ்வின் கதிரொளியாய்

ஒளி வீச என்னுள் பிறப்பாயோ?

இயேசு தேவன் என்னில் இன்று பிறப்பாரே

பேசும் கவிதையினை படைப்பாரே

வீசும் காற்றின் வாசம் போல

நேசம் கொண்ட என்னுள் பிறப்பாரே!…

download 1 removebg preview
cropped circle image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!