Maruthuvar thinam featured image

மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam

நேரம் காலம் பார்க்காம,
ஓய்வு உறக்கமில்லாம,
உழைச்சி எங்களோட
உயிர் காத்தோனே!

அன்பு நேசம் பாராட்டி
பண்பு பாசம் ஊட்டி
பழகி எங்கள் கஷ்டங்களில்
தோள் கொடுத்து நின்றோனே!

தஞ்சம் என்று வந்தோரை
தன்னலமின்றி காத்து
சேவையாற்றி மண்ணில்
மகனாய் சிறந்தோனே!

தன்னலம் மொத்தமாய் களைந்து
பிறர்நலம் ஒன்றையே வாழ்வாக்கி
குடும்ப விளக்கு பலவும்
அணையாமல் காத்து நின்றோனே!

கொரோனாவுக்கு எதிரான போரில்
உயிரையும் பணயம் வைத்து
உலகோர் உயிருக்காய்
உன்னத பணி செய்தாயே!

நின் பணி சிறக்க,
நின் சேவை செழிக்க,
நின் புகழ் ஓங்க…
இறைவனை வேண்டி நிற்கிறோம்…

Subscribe to Gnana Selvam Kavithaigal
cropped circle image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!