தேசிய கொடி
வானில் வசந்தமாய் பறக்குது அழகு கொடி,
வாசனை மலர்களை தூவும் அன்பு கொடி…
வேற்றுமை மனிதர்கள் கலந்த நாட்டில்,
ஒற்றுமை சொல்லி மகிழும் கொடி…
மண்ணில் வளத்தை சுட்டும் கொடி,
கண்ணில் கனவை சுமக்கும் கொடி…
அவமானத்தை துடைத்தெறிந்த கொடி,
சமாதானத்தை நம்மில் விதைத்த கொடி…
மதங்கள் பல மண்டி கிடப்பினும்,
மனிதர்கள் நாமென உணர்த்தும் கொடி…
மங்கள ஒசை முழங்கி,
மக்களாட்சிக்கு வழிகோலிய கொடி…
கொடி காத்த குமரன் பிடித்த கொடி,
குருதி சிந்தி வாங்கி தந்த கொடி…
காந்தி மகான் கரத்தில் பூத்த கொடி,
காவியமாய் அகிம்சையை விதைத்த கொடி…
வெள்ளைகாரனை விரட்டியடித்த கொடி.
கொள்ளைகாரனை நாட்டை விட்டு துரத்திய கொடி…
இந்திய தாயை உலகே புகழ,
இமயத்தின் உயரத்தில் நின்ற கொடி…
விந்திய மலையின் வாசத்தை,
உலகுக்கே சொன்ன கொடி…
நாட்டின் பசுமையை வளர்ச்சியை,
பறை சாற்றிய அன்பு கொடி…
காட்டின் வளத்தின் அழகினை,
கடல் தாண்டியும் சொன்ன கொடி…
இளமையின் குருதி குடித்து,
முதுமையின் அகிம்சை பொறித்து…
இறப்புகள் பல கொடுத்து,
சிறப்புகள் பல பெற்று…
போராடி பெற்ற கொடி அது!
வானில் அழகாய் பறக்கட்டும்.
இன்றும்…
என்றும்..
National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை



