விதையிலிருந்து விருட்சமாகும் இயற்கை கவிதை
பூமிதாயின் மடி மீது
புதைந்து சிதைந்து மண் மீது கலந்து
விதையாக உருப்பெற்று
வீறிட்டு எழுந்து நின்ற விருட்சமே!
செங்கதிரவனின் உதிரத்தை குடித்து,
பூமிதாயின் அமுதத்தை எடுத்து,
பச்சை பட்டாடையில் ஒளித்து
ஜொலித்து படர்ந்து நின்ற செடியே!
இயற்கையின் இலவசத்தை
இயன்றவரை எடுத்து,
ஏரி குளங்களெல்லாம் முழைத்து,
எழில் கொஞ்சும் பூவை பிரசவித்தாயே!
மங்கையின் மனதை கவர்ந்து
மயக்கும் மலராக பரவி விரிந்து
காதலனின் கையில் தவழ்ந்து,
அன்புக்கு பரிசாய் அமைந்தாயே!
திருடி ஒவ்வொன்றாய் அடுக்கி
திரட்டி தேனை உருவாக்கி,
சேர்த்து வைத்த செல்வத்தையே
வண்டதனை பருக விட்டாயே!
ஒரு நாள் மலர்ந்தும்
மறுநாள் மடிந்தும்,
காயாகி, கனியாகி, பலன் கொடுக்க,
முடியுமென நிரூபித்து நின்றாயே!
செடி கவிதை | Sedi Kavithai


environment Kavithai in tamil, Iyarkai kavithai in Tamil, Nature Kavithai, tamil kavithai, Vayal Kavithai in Tamil, இயற்கை கவிதை, இயற்கை வயல் கவிதைகள், செடி கவிதை, தமிழ்கவிதை, தாவர கவிதை, நெல்வயல் கவிதை, பச்சை பசேல் கவிதை, பச்சை வயல் கவிதை, வயல் பற்றிய கவிதை, வயல்காட்சி கவிதை, வயல்வெளி கவிதை

