வணக்கம் வாசகர்களே!
சக்கரவர்த்தியின் சுயரூபம் தெரியாமல் வாழ்க்கையை அந்த அலுவலகத்தில் தொடர்ந்த ஓவியா. நிஜம் முகம் தெரியும் சூழல் ஏற்பட்டதா? தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போங்க.
சக்கரவர்த்தியின் சுயரூபம் தெரியாமல் வாழ்க்கையை அந்த அலுவலகத்தில் தொடர்ந்த ஓவியா. நிஜம் முகம் தெரியும் சூழல் ஏற்பட்டதா? தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போங்க.
ஓவியாவை அனல் கக்கும் பார்வை பார்த்த சக்கரவர்த்தி, சுந்தரம் பக்கம் திரும்பி,
இது நம்மை விட்டு போகாத தலைவலியா இருக்குடா. அகிம்சை வழியில அப்புறப்படுத்திடலாம்ணு நானும் எவ்வளவு கீழ் இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பார்த்துட்டேன். ஆனா இது ஒட்டுண்ணி போல அவனையே ஒட்டிட்டு இருக்கு. இதுக்கு சரியான மருந்து அடிக்கலனா என்னோட கெளரவம் நாசமா போயிடும். இந்த நேரம் சிங்கப்பூருக்கு வேற அவசரமா போக வேண்டி இருக்கு. கூடவே தீனதயாளனையும் சமாதானப்படுத்த வேண்டி இருக்கு. இரண்டு பேரும் சேர்ந்து தான் கிளம்புறோம். ஒரு வாரத்துல திரும்பி வந்திடுவேன். நான் வந்து இறங்கியதும் முதல் நியூஸா இந்த தொல்லையை கிளியர் பண்ணிட்டேன் என்ற செய்தி தான் சொல்லணும்.
கண்டிப்பாய்யா. மனசை போட்டு குழப்பாம கிளம்புங்க. அந்த பொண்ணை உருத் தெரியாம அழிச்சிடுறேன்.
என்றதும் அவளை வெறித்து பார்த்த சக்கரவர்த்தி.
எவனோடவாவது சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும்ணு நினைச்சேன். நல்லவிதமா தானே மாப்பிள்ளை பார்த்து செற் பண்ணுனேன். என்ன மாப்பிள்ளை ஒருத்தியோட திருப்தி அடைகிற ஆள் இல்ல. அதை தவிர வேற என்ன குறை இருக்கு அந்த மாப்பிள்ளைக்கு. நிச்சயம் முடிஞ்சும் இங்கு வந்து சுத்துறா? கடைசியா அற்ப ஆயுசுல போகணும்னு விதி இருக்கும் போது யார் என்ன பண்ண முடியும். நானும் எவ்வளவோ நல்லவனா இருக்கணும்ணு தான் பாக்குறேன். விட மாட்டேங்குறாங்களேப்பா… சொன்னவர் எகத்தாளமாக வாய் விட்டு சிரிக்க…
தன் உயிர் மேல் ஒரு கும்பல் விலை வைத்திருக்கிறது என தெரியாமல் சுந்தரியிடம் வெட்கத்தோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் ஒவியா.
மாப்பிள்ளை போட்டோவை காட்டுனா நாங்களும் பார்ப்போம்ல. நிச்சயத்துக்கு கூப்பிட்டா செலவு வந்திடும்ணு அப்பாவுக்கு வியாதினு சொல்லிட்டு கிளம்பிட்டா. இப்போ உன் ஆளையாவது காட்டலாம்ல.
சுந்தரியும் கேட்க,
ம்… டியரஸ்ட் பிரண்ட். எனட்டயே காட்ட மாட்டாங்களாம் மேடம். மேரேஜ்க்கு போய் பார்த்து தெரிஞ்சிக்கணுமாம். அப்புறம் உங்களுட்ட எப்படி?
அப்படியா ஓவியா…
என்ற சுந்தரியிடம் என்ன மறுமொழி சொல்லுவது என தெரியாமல் நெளிந்தவள்.
இல்லக்கா. அவா விளையாடுறா?
சமாளிக்க முயல,
அப்போ ஆளை காட்டு…
என்றாள் சுந்தரி விடாமல்,
அப்படி சொல்லுங்கக்கா…
என திலகா எடுத்து கொடுக்க,
அடிவாங்காத எனட்ட இருந்து,
அவள் கை ஓங்கினாள்.
திசை திருப்புறாக்கா விடாதுங்க.
இவளும் மல்லுகட்டி வர,
இப்போ நீ மாப்பிள்ளை போட்டோவை காட்டாம உள்ளால விடுறதா இல்லை.
என சுந்தரி இடைமறித்து நின்றாள். அவளின் பின்னால் நின்ற தரணி ஓடி வந்து கையில் இருந்த செல்லை புடுங்கியவாறு,
இதுக்கு ஏன் கெஞ்சிட்டிருக்கீங்க. மேடத்தோட செல்லை திறந்தா படமா கொட்ட போகுது. அதுல ஆளுக்கு பிடிச்சதா ஒண்ணை எடுத்து கண்ணுக்குள்ள நிரப்பிடுங்க. சரி தானே மேடம்.
என செல்லை ஆண் செய்து விட, ஓவியாவின் மூச்சே நின்று விட்டது. எப்படியும் அதில் ஒரு படமும் இல்லாமல் தான் திரும்ப தர போகிறார்கள். ஆனாலும் ஒரு படமும் இல்லை என்று வாரி எடுக்க போகிறார்கள். நல்ல வேளை தப்பித்தேன். நேற்று முகுந்தன் சார் படத்தை டெலிட் பண்ணிட்டேன். அதுவரை பிழைச்சேன். இப்போ இந்த மூணு பிசாசுகளையும் எப்படி சமாளிக்கிறது. இதோட நிற்க போறது இல்ல. இங்க வேலை பாக்குற எல்லாரும் கேட்டாங்க. முதல்ல அந்த மகேந்திரன்ட்ட ஒரு போட்டோ அனுப்ப சொல்லணும்.
எண்ணி முடிக்க வில்லை. அதற்குள் உள் வரை சென்றும் எந்த புகைபடமும் இல்லாமல் கேள்விகுறியோடு நிமிர்ந்து பார்த்த மூவரும்.
என்ன இது?
என அதிர்வோடு கேட்க, அவர்களின் விரிந்த விழியை பார்த்தவள் குழப்பமாகி,
என்ன?
என தயக்கத்தோடு கேட்க,
நிச்சயம் வரை முடிச்சிட்டு வந்திருக்கா உன் ஆளோட போட்டோ ஒண்ணு கூட இல்ல.
அது… அது… வந்து…
அவள் மொத்தமாய் தடுமாற,
அது வந்து போயி. எதுக்கு மேடம் தயங்குறீங்க. எங்களுட்ட சொன்னது போல பட்டுணு சொல்லிட வேண்டியது தானே.
பின்னால் இருந்து நளன் குரல் கேட்க, நான்கு பேரும் ஒரே நேரம் திரும்பினார்கள்.
பிடிச்சவரோட போட்டோவை அவங்க ஹார்ட்டுல தான் வச்சிருப்பாங்களாம். போன்ல எல்லாம் வச்சிக்க மாட்டாங்களாம். இல்ல மேடம்…
அவன் இழுவையாக நிறுத்த.
அட கடவுளே! இவரும் இந்த கூட்டத்துல சேர்ந்தாச்சா. இதுக்க மேல நின்னா சரியாகாது.
எண்ணியவள்,
எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்.
என ஒடப் பார்க்க, அவள் கரம் பற்றி தடுத்த சுந்தரி,
எங்க போறா? அவ்வளவு சீக்கிரமா விட்டு விடுவேணா நினைச்சா. மச்சானுக்கு போன் பண்ணி உடனே போட்டோ அனுப்ப சொல்லு.
என கையை விடாமல் நின்று விட,
திலகா காப்பாத்துடி .
என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஓவியா சொல்ல, திலகாவின் பின்புறம் நின்ற நளன் செவியில் இது விழுந்ததும்,
நான் காப்பாத்துறேன்.
என முன்னால் வந்தவன்,
மேடம். சின்ன முதலாளி உங்களை உடனே பார்க்கணும்னு சொல்லுறாங்க. கொஞ்சம் வறீங்களா?
என அழைத்ததும் அங்கிருந்து நகர்ந்தால் போதும் என அவசரமாக நளனுடன் முகுந்தன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
உள் நுழைந்த வரை இருந்த தெம்பும் தைரியமும் அவனை பார்த்த அடுத்த நொடியே விடை பெற,
புலிக்கு பயந்து சிங்கத்துட்ட வந்து மாட்டிகிட்டேனே…
மனதுக்குள் முணுமுணுத்து கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்க்காமலே.
சொல்லுங்க சார்…
என்றாள் மென்குரலில்,
இல்ல… வந்துட்டீங்களானு பார்க்க வரச் சொன்னேன்.
என்றதும் அடக்கப்பட்ட கோபத்தோடு நிமிர்ந்தவள், சிறிது நேரத்திலே தன்னை நார்மலாக்கி கொண்டு,
முக்கியமான வேலைக்காக ஒரு ஸ்டாப்ஸ்க்க வீடு வரை தேடி வந்து முதலாளியே கூப்பிட்டதும் இல்லாம, கையோட அவர் கார்லயே அழைச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் எப்படி சார் வராம இருக்க முடியும்.
என்றவளை கிண்டலோடு பார்த்தவன்.
மேடத்துக்கு இங்கு வந்ததுல பயங்கர கோபம் போல தெரியுது.
என்றான் அவள் முகத்தில் பார்வையை ஓடவிட்டவாறு,
கோபப்படாம. இப்போ எதுக்கு சார் இங்கு கூட்டிட்டு வந்தீங்க.
அதான் உன் வீட்டுல வச்சே சொன்னேன்ல.
சொன்னீங்க. இப்போ நான் அதை கேட்கல. உண்மையை கேட்கிறேன்.
அப்போ அது பொய்யா? அப்படி ஒரு ரூல்ஸ்ல நீங்க சைன் பண்ணலியா?
இருபது இருபத்தைந்து பேப்பஸை நீட்டி சைன் பண்ண சொன்னீங்க. பண்ணுனேன்.
பண்ணுனீங்கல. அப்போ படிச்சி பாத்திருக்கணும். படிச்சி பார்க்காதது உங்க தப்பு. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.
தப்பு தான் சார். தப்பு தான். படிச்சி பாத்து போட்டிருக்கணும். சரி. அந்த தப்புக்கு இப்போ சார் என்ன தண்டனை கொடுக்க போறீங்க.
உச்சபட்ச கோபத்தில் பல்லை கடித்தவாறே அவள் பேச,
அதுவும் தான் உன் வீட்டுல வைத்து பேசிட்டோமே.
என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு, அவன் சிரிப்பை பார்த்து கடுப்பானவள்,
எது? புது ஸ்டாப்ஸ்க்கு பயிற்சி கொடுக்கிறதா?
ஆமா…
சரி. அவ்வளவு தானே. யாருணு சொல்லுங்க. சொல்லி கொடுத்துட்டு கிளம்புறேன்.
நில்லும்மா. இன்று தானே ஆபீஸ் வந்திருக்கேன். நல்ல ஒரு ஆளா தேர்ந்தெடுத்து சொல்றேன். சொல்லி கொடுத்துட்டு கிளம்பு.
என்றதும் வெடுக்கென்று திரும்பியவள், நளனை ஒரு பார்வை பார்த்து கொண்டே சட்டென வெளியேற, சூடாக வெளியேறிய அவளின் பின் முதுகை பயத்தோடு பார்த்த நளன் திரும்பி, தோழனை பார்த்தவாறே செயரை இழுத்து போட்டு அமர்ந்தான்.
என்னடா. பட்டாசு போல பட்டு பட்டுணு வெடிச்சிட்டு போறாங்க. பார்த்தா நீ சொல்லுறது போல கொஞ்சம் கூட தெரியலியேடா. தொடக்கத்திலும் உன்கிட்ட எப்படி முட்டிகிட்டு நின்னாங்களோ அப்படியே தான் இருக்காங்க. இதுல என்ன மாற்றத்தை பார்த்து அவங்க உன்னை விரும்புறாங்கணு சொல்லுறா?
உனக்கு அந்த நாள் எல்லாம் நியாபகம் இருக்குதா நளன்.
அந்த நாட்களை எப்படிடா மறக்க முடியும். உங்க மோதல்ல தானே எங்க காதல் உருவாச்சு.
நான் மறந்துட்டேன்டா. அந்த மலை சரிவுக்கு முன்னால அவளுடன் மோதுன மோதல் ஒவ்வொன்றிலும் என் உள்ளத்துக்குள்ள நான் அடைந்த சந்தோஷத்தை நான் மறந்துட்டேன்டா. அதன் பிறகு அந்த இடிபாடுகளுக்குள்ள நாங்க இரண்டு பேரும் வாழ்ந்த இருட்டு நொடிகளை நான் மறந்துட்டேன்டா. அந்த நேரம் என் மனது அனுபவித்த நிம்மதியும் சந்தோஷத்தையும் நான் மறந்துட்டேன்டா. என்னை சுயநினைவு வந்த அடுத்த இரண்டு மணி நேரத்திலே அப்பா மெட்ராஸ்க்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. வந்த என் வாழ்வு ஹாஸ்பிட்டல்ல ஒரு மாதம் போச்சு. வெளி வந்து பார்த்தா ஒரு மாதத்துல பல பல பிரச்சினைகள். அன்று கேரளாவுல தீனதயாளன் சார் வழியா நமக்கு கிடைக்க இருந்த கொட்டேஷனை மிஸ் பண்ணுனதால கம்பெனிக்குள்ள பல பல பிரச்சினைகள். பல பேருக்கு வேலை கொடுக்க முடியாம அப்பா திணறிட்டிருந்தாங்க.

அந்த சூழல்ல அதை தவிர வேற எது பக்கமும் என் மனசால போக முடியல. இடை இடையே அவள் நியாபகம் வந்துச்சு. இல்லணு பொய் சொல்லல. ஆனா அவா நம்முடைய எந்த வெகுமதியும் வாங்காம, என் பக்கம் வர கூட விரும்பாம தள்ளி போக நினைச்சதால பெரிசா என்னால என் மனசை காட்ட முடியல. அப்புறமா அவா வந்த போது கூட எனட்ட எல்லா இடத்துலயும் முட்டி கிட்டே தான் நின்னா. அதனால் என்னால் அவளோட உணர்வை புரிஞ்சி பேச முடியல. முதல் முதல் ஓவியா என் மனசுல இருக்காணு என்னை உணர வச்சது என் பாட்டி தான். அவங்க கேட்ட கேள்வி தான். ஓவியா மேல எனக்கிருந்த ஒரு ஈர்ப்பை எனக்கு சொல்லுச்சு. அப்புறமா தான் அவளை பார்க்க ஆரம்பிச்சேன். அந்த இடங்களில் எல்லாம் அவளுக்குள்ளும் எனகிட்ட சொல்ல எதுவோ இருக்கிறது போல தான் தோணுச்சு. அதை முழுசா நான் உணருகிறதுக்கு முன்னால அவா கிளம்பி போயிட்டா.
அவா போன நொடியில இருந்து என் மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும் மச்சான். எப்போ வருவானு மனசு ஏங்குச்சு. வந்ததும் பேசணும்னு ஆசையா காத்திருந்தா திலகா இப்படி சொல்லுறா? அந்த நொடி எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? தூக்கி போட்டு எல்லாத்தையும் உடைச்சிடுவோமாணு இருந்துச்சு. ஆனா உங்க முன்னால காட்ட முடியாம தான் கிளம்பி போனேன். அப்புறம் எனக்குள்ள ஒரு வலி வந்துச்சு பாரேன். அது சொல்லிச்சு. அவா இல்லாம நீ இல்லணு. அதான் நீ சொன்னதுக்கு அப்புறமும் கேட்காம கிளம்பி போனேன்.
போன இடத்துல எப்போ என் டாலர் அவளோட அறையில சாமி படத்துக்கு முன்னால பாத்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவா இல்லாம திரும்பி போகப் போறதே இல்லணு. நான் பல நாளா தொலைச்சிட்டதா நினைச்சிட்டிருந்த டாலரும். அன்று நான் அவள் காயம்பட்ட இடத்துல கட்டி விட்ட என் கிழிந்த சட்டையும் இன்னும் பத்திரமா வச்சிருக்கானா. அவா மனசுல இன்னும் நான் இருக்கேன்னு தானே அர்த்தம்.
என்னவோடா எனக்கு அவங்களை பார்த்தா பெரிய மாற்றமா தெரியல. உன் வாழ்வுல அவங்க வந்தா எனக்கும் ரொம்ப ஹேப்பி தான். ஆனா அப்படி இல்லாத பட்சத்துல நீ இப்படி நடந்துக்குறது ஓவரா தோணுது. அவங்களுக்கு என்னவோ உன் செயல் எரிச்சலை தருகிறது போல தான் எனக்கு தெரியுது. இங்க அவங்க விருப்பமே இல்லாம தான் தங்கிட்டு இருக்கிறது போல தான் நினைக்க தோணுது.
ம்.. தோணும். அவளோட செயல்ல அப்படி தான் தெரியுது. நீ… நீ அவளோட கண்ணை பாரு. நான் சொல்லுறது நிஜம்னு உனக்கு தெரியும். வேணா உனக்கு அதை நான் இன்றே நிரூபிக்கிறேன்.
நீ நிரூபிக்கிறியா? டேய்… நிரூபிக்கிறேன்னு எதையாவது செய்து செருப்படி வாங்கிடாதடா?
செருப்படியா? நானா? பொறுத்திருந்து பாரு. அவளோட மனசு முழுசும் நான் தான் இருக்கேன்னு உனக்கு இன்றே நிரூபிக்கிறேன்.
சொன்னவன் செல்லை எடுத்து எண்ணை அழுத்த எதிர் முனை உயிர் பெற்றது,
சங்கீதா. ஆபீஸ்க்கு வந்துட்டு போறியா?
சுவர்டா…
என்றதும் போனை சிரிப்போடு வைத்தவன் நிமிர்ந்து நளனை பார்க்க,
இப்போ அவளை எதுக்கு இங்க வர சொல்லுறா?
வரட்டும். அப்போ ஓவியாவை பாரு. செலஸ்ல அப்படியே உருகி போய் நிற்ப்பா.
செலஸ்லயா ?… அவங்களா? ஒவரா கற்பனை பண்ணுறாடா?…
கற்பனையா? நிஜமா? இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு தெரிஞ்சிடும். அப்படி அவளோட மனசுல நான் இருக்கேன்னு நிரூபிச்சிட்டா… அப்புறம் அவா நிச்சயமான பொண்ணு, அவளுட்ட போய் இப்படி எல்லாம் பேசுறது தப்புனு எல்லாம் வசனம் பேச கூடாது. எனக்காக நீ நிற்கணும். ஒ.கேயா?
என்னமோ சொல்லுறா? ஆனா எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அவங்களை பார்த்தா நீ சொல்லுறது போல துளி கூட தெரியல.
ம்… கொஞ்சம் பொறுடா. சங்கீதா என் அறைக்குள்ள நுழையுற நொடியில இருந்து அவளை பாரு. சந்திரமுகியா மாறி நிற்கிற ஓவியாவை அப்போ நீ பார்ப்பா. அப்ப தெரியும் உன் நண்பன் சொல்லுறது உண்மைனு .
ம்… பார்க்கிறேன். இப்போ சைட்டை பார்க்க கிளம்பலாமா?
இல்ல. இப்போ என்னை பார்க்க சங்கீதா வரப் போறா? நான் சூப்பரா மேக்கப் பண்ணனும்.
முகுந்தன் கிண்டலோடு எழுந்து கொள்ள, நளன் எழுந்து வெளியே வந்தான். வந்தவன் கண்ணுக்கு தூரமாய் நின்று யாரோடோ போனில் பேசிக்கொண்டிருந்த ஒவியா விழுந்தாள். அவளை நோக்கி நடந்தவன்
இவங்க யார்ட்ட பேசுறாங்க. யோசிக்கும் முன் அருகில் நெருங்கி விட, ஓவியாவின் பேச்சு அவன் காதில் தெளிவாக விழுந்தது.
அனுப்புவீங்களா? மாட்டீங்களா?
கொஞ்சம் குரல் உயர்த்தி அவள் சொல்ல நளன் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் நிறுத்தினான்.
என் பிரண்ட்ஸ் எல்லாம் பார்க்கணும்ணு கேட்கிறாங்க. ஒரு போட்டோ போதும். வேற எதுவும் அனுப்ப வேணாம்.
என ஓவியா பேச கேட்டதும்.
ஒ… மகேந்திரன்ட்ட பேசுறாங்களா?
எண்ணியவன் மனதிலோ ஒருமுறை முகுந்தன் வந்து போக,
நீ தப்பா ஜட்ஜ் பண்ணிட்டாடா. இவங்க பேசுறதை பார்த்தா உன்னோட ஜட்ஜ்மென்ட் தப்புனு தான் தோணுது. எண்ணியவன் அங்கிருந்து நகர்ந்த போது குட்டி பாவாடை இடுப்பு தெரிய குட்டி மேலாடையோடு உள்ளே முகம் எல்லாம் சிரிப்போடு நுழைந்தாள் சங்கீதா.
இவனை கண்டதும், ஒடி அவன் அருகில் வந்தவன்.
உன் தோஸ்த் எங்கே?
என கண்களால் கேட்க,
உள்ளால…
என்றான் அவனும் கண்ணசைவில், அவன் கன்னத்தில் செல்ல அடி வைத்தவள் துள்ளலோடு உள்ளே நுழைய நளன் கண்கள் அவசரமாக ஒவியா பக்கம் திரும்பின. அதே நேரம் உள் அறையில் இருந்து முகுந்தனும் வெளியே பார்த்து கொண்டே தான் இருந்தான்.
மகேந்திரனுடன் போனில் பேசிக் கொண்டே திரும்பியவள் கண்களில் சங்கீதா துள்ளலோடு உள் நுழையும் காட்சியும் விழுந்தது. ஒரு நொடி அவள் மருண்ட விழி விரிய தான் செய்தது. அடுத்த நொடி அது என்னை துளி கூட பாதிக்கவில்லை என்பது போது திரும்பி கொண்டது. கூடவே போனில் சுவாரஸியமாக பேச ஆரம்பித்து விட்டது. நளன் தோழனை பார்த்தான். அவன் முகம் சுருங்கி போய் இருந்தது.
நளனுக்கு ஆச்சரியமாக இருந்தது. முகுந்தனுடன் கழிந்த ஆறுவருடமாக சுற்றுகிறான். எத்தனையோ பெண்கள் அவனிடம் நெருங்கி வந்ததும் தெரியும். அவர்களை இவன் சட்டை செய்யாமல் விலகி வந்ததையும் பார்த்திருக்கிறான். வீட்டில் பெண் பார்த்தும் இவன் பிடி கொடுக்காமல் நழுவி இருக்கிறான். அப்படி பார்த்தவனை ஒரு பெண்ணுக்காக உருகி நிற்கும் நிலையில் பார்த்த போது நிஜமாகவே அவனால் நம்ப முடியவில்லை.
இவர்களில் எது அவனை இப்படி உருக வைக்கிறது. திரும்பி ஒவியாவை பார்த்தான். இப்போதும் அந்த பெண் போனை கீழே வைக்கவில்லை.
மனது கனத்தது. காதலே இல்லாத பெண்ணிடம் நண்பன் காதலை தேடுவது புரிந்தது. முகுந்தன் சொன்னது எல்லாம் மாயை என முடிவே செய்து விட்டான். இதற்கு மேல் நண்பன் முன் போய் நின்று அவனை சங்கடப்படுத்த வேண்டாம் என திரும்பிய போது,
முகுந்தன் அவனை அழைத்தான்.
நாம வெளியில போறோம். மிஸ். ஓவியாவையும் கிளம்ப சொல்லுங்க.
என்றதும் குழப்பமாக தோழனை பார்த்தான்.
ஓவியாவா? அவங்க எதுக்கு?
ஒரு பிஸ்னஸ் மீற்றிங். கூடவே அவங்க இருந்தா நல்லா இருக்கும். திலகாவையும் கூப்பிடு.
சொன்னவன் உள் சென்று விட, நளன் யோசனையோடு தான் ஒவியா அறைக்கு போனான். போனவன் கண்ணுக்கு ஒவியா ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது.
மேடம்…
என்றதும் சட்டென திரும்பிவள் கண்கள் கலங்கி இருப்பதை கண்டதும், பதறி போய்…
என்னாச்சு மேடம் என கேட்க,
அவசரமாக முகத்தை துடைத்தவள்,
ஒண்ணுமில்ல…
என சமாளிக்க முயல,
ஒண்ணுமில்லயா? ஒண்ணுமில்லாத விசயத்துக்கா அழுறீங்க.
நான் எங்க அழுதேன். கண்ணுல தூசி விழுந்திடுச்சி. மறுபடியும் அவள் தன்னை மறைக்க போராட, அதற்கு மேல் பேசுவது நாகரீகம் இல்லை என உணர்ந்தவன் வந்த விசயத்தை சொல்லி விட்டு நகர்ந்தான். ஆனாலும் மனதின் அடியில் அவனுக்கு குறுகுறுப்பு. அதனால் நேரே திலகா அறைக்கு தான் வந்தான்.
வந்தவன் அதே யோசனையோடவே அப்படியே அமர்ந்து விட, கணினியில் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தவள் மெல்ல நிமிர்ந்து பார்க்க, இப்போதும் அவன் அப்படியே இருந்தான்.
என்ன?… உனக்கு வேலை இல்லயா? நொடிக்கு ஒரு முறை உள்ளால வந்து முன்னால உட்கார்ந்துட்டு என் உசுரை எடுக்குறா?
அவன் எழுந்து செல்ல அவள் என்றும் கையில் எடுக்கும் யுக்தியை இன்றும் கையில் எடுக்க, இப்போதும் நளன் எதுவோ யோசனையில் இருப்பவன் போலவே இருந்தான். எதுவும் மறுமொழி சொல்லவில்லை.
இவனுக்கு என்னாச்சு… இப்படி அமைதியா இருக்க கூடிய ஆள் இல்லையே.
யோசிக்கும் போதே அவளை நிமிர்ந்து பார்த்த நளன்.
ஓவியாவுக்கு எதுவும் பிரச்சினையா திலகா.
என்றான் சம்மந்தமே இல்லாமல்,
அவனை ஊடுருவி பார்த்தவள்.
இல்லயே… அவளுக்கு என்ன பிரச்சினை. நல்லா தான் இருந்தான். நீ ஏன் அப்படி கேட்கிறா?
இல்ல. ஒரு சின்ன சந்தேகம் அதான் கேட்டேன்.
உனக்கு வேற வேலையே இல்லயா? ஆமா இப்போ எதுக்கு அவளை பற்றி பேசுறா?
ஒரு மீட்டிங் அட்டன் பண்ண ஓவியா மேடத்தை கூப்பிட சொன்னார் பாஸ். கூப்பிடலாம்னு உள்ளால போனேன். அவங்க அழுதுட்டு இருந்த மாதிரி தெரிஞ்சிது.
அழுதுட்டிருந்தாளா? அதுக்கு வாய்ப்பே இல்லை. அவா எதுக்கு அழணும்.
அதுதான் தெரியல. அவங்களுக்கு பார்த்துட்டிருந்த மாப்பிள்ளை கூட தான் அதுக்கு 5 நிமிஷத்துக்கு முன்னால வரை பேசிட்டிருந்தாங்க. அவர் எதுவும் சொல்லி இருப்பாரோ.
அவர் என்ன சொல்ல போறார். நேற்று கூட அவங்க பேசுனாங்க. நல்லா தானே பேசுனாங்க.
தெரியல. ஆனா மாப்பிள்ளை சார்ட்ட பேசிட்டிருந்தது தெரியும். இப்போ அழுததும் தெரியும். நீ என்னணு பார்ப்பாணு தான் உன்னை தேடி வந்தேன். நீ என்ன என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்கா.
உன்னை கேள்வி கேட்காம… ஓவியாவுக்கு எந்த பிரச்சினையும் இல்ல. அதையும் மீறி அழுறானா? நீங்க ரெண்டு பேரும் தான் அவளை எதாவது செய்திருக்கணும். சொல்லுங்க என்ன செஞ்சீங்க.
ஐயோடா. உன் பிரண்ட் அழுறாளேனு அனுதாபத்துல வந்து சொன்னா கடைசியில என் பக்கமே பிரச்சினையை திருப்புறியா? நாங்க உன் பிரண்ட்டை எதுவும் செய்யல.
நீ செய்யாம இருந்திருக்கலாம். உன் பிரண்ட் ஏதாவது சொல்லி இருப்பாரு. இல்ல செஞ்சிருப்பாரு. அவளை அழ வைக்கிறதுல ஆனந்தப்படுற முதல் ஆள்ளாச்சே. அப்படி என்ன செஞ்சாரு.
நீ என்ன உன் பிரண்ட் தும்முனாலும் இருமினாலும் அவன் தான் காரணம் போல பேசுறா? அவன் ஒரு வார்த்தை உன் பிரண்டுட்ட பேசல. அதை விட அவன் அறையை விட்டு இன்று அவன் வெளியே வரல. அவனோட பள்ளி தோழி சங்கீதா வந்திருக்கிறதால அவங்களுட்ட பேசிட்டிருக்கான்.
என்றதும் ஒரு நொடி அமைதியானவள், தன் செல்லை எடுத்து ஓவியாவுக்கு தொடர்பு கொள்ள அது சுவிச் ஆப் என்று வந்தது.
யோசனையோடே செல்லை வைத்தவள்,
இப்ப எதுக்கு அவளை வெளியில கூப்பிடுறீங்க. அவா இப்போ புது ஸ்டாப்ஸ்க்கு சொல்லி கொடுக்க தானே வந்திருக்கா. இதுக்கு மேல புது புராஜெக்ட்ல அவளை ஏன் இன்வால்வாக்குறீங்க.
அதை கூட முகுந்தட்ட தான் கேட்கணும்.
ஏன் உங்க பிரண்ட் இப்படி எல்லாம் பண்ணுறாரு. நானும் பார்க்கிறேன். முதல் நாள் அவளை பார்த்த நொடியில இருந்தே அவளுட்ட ஏறுக்கு மாறா தான் பேசுறாரு. எப்பவுமே அவள் மேல குறையை கண்டுபிடிச்சி இன்சல் பண்ணிட்டே தான் இருக்காங்க. ஏன்? அப்படி அவள் மேல என்ன வன்மம்.
என்ன நீ இப்பமும் அவன் அப்படியே இருக்கிறது போல பேசுறா? இப்ப எல்லாம் அவன் அப்படி இல்ல தெரியுமா?
அதான் தெரியுதே. நிச்சயமாகி இன்னும் இரண்டு மாசத்துல கல்யாணத்துக்கு ரெடியாகி இருந்த அவளை ஒரு பிரயோஜனமும் இல்லாத காரணத்தை சொல்லி திரும்ப கூட்டி வந்து கொடுமைபடுத்துறது. அவா சந்தோஷமா இருக்கிறது மட்டும் உங்க பிரண்ட்டுக்கு ஏன் பிடிக்காம போகுது. அவர் தூக்கி பிடிச்சி வாக்குவாதம் செய்து கூட்டிட்டு வந்த காரணம் எல்லாம் ஒரு காரணமா? மேரேஜ் லைப்புக்குள்ள சந்தோஷமா போயிட கூடாதுணு தானே உப்புக்கு சப்பில்லாத ஒரு காரணத்தை காட்டி அவளை திரும்ப கூட்டிட்டு வந்து கொடுமைப்படுத்துறாரு உங்க பிரண்ட்.
ஏய்… அப்படி எல்லாம் இல்ல. அவன் அப்படிப்பட்ட ஆளே இல்லை.
தெரியும் சார். நீங்க விட்டு கொடுப்பீங்களா? என்ன இருந்தாலும் ஒரு குட்டையில ஊர்ன மட்டைகள் ஆயிற்றே. பொண்ணோட மனசை புரிஞ்சி நடந்துக்குற ஜென்மமா நீங்க. உங்களுக்கு நீங்க நினைக்கிறது நடக்கணும். நாங்க அதனால என்ன ஆனா உங்களுக்கென்ன?
இப்ப எதுக்கு என்னையும் இதுல இழுக்குறா?
நான் என்ன செய்தேன்.
என்ன செய்யல. எனக்கு பிடிக்குதா? பிடிக்கலியாணு தெரியாம உங்க இஷ்டத்துக்கெல்லாம் என்னை இழுக்கலியா? என் மனசு என்ன பாடுபடும்ணு பார்க்காம என் முன்னால ஏதேதோ செய்யலியா? அது போல தான் உங்க பிரண்டும். வருங்கால கணவரோட ஊர் சுற்ற வேண்டிய நேரம் அவளோட மன ஆசையை புரிஞ்சிக்காம இங்க கூட்டி வந்து கொடுமைப்படுத்துறாரு. நேற்று கூட மாப்பிள்ளை சாரோட ஒவியா அந்த சண்டை தான் போட்டா. அவர் இரண்டு பேரும் சேர்ந்து போய் பத்திரிகை டிசைன் எல்லாம் பார்க்க விரும்புறதா சொல்லுறாரு. இவளால எங்க போக முடியுது. ஒருவேளை இது விசயமா கூட பேச்சு வந்திருக்கலாம். அதுல கோபமாகி கூட மாப்பிள்ளை சார் போனை வச்சிருக்கலாம். அந்த வேதனையில் கூட அவா அழுதிருக்கலாம்.
ஒத்துக்குறியா? இப்போ ஒத்துக்கிறியா? அவங்க அழுதது எங்களால இல்ல. அவளோட வருங்கால கணவரால….
ம்… அதுக்கு காரணம் யாரு? உங்க சின்ன முதலாளி தானே. இப்ப எதுக்கு அவளை கிராமத்துக்கு தேடி போய் இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. அவளுட்ட சொன்னது போல புது ஸ்டாப்ஸ்க்கு பயிற்சி கொடுக்கணு எனட்ட சொல்லிடாதீங்க. அது அவா இல்லாம முடியும்னு எனக்கு தெரியும். உண்மையை சொல்லுங்க. இவ்வளவு அவசரமா கேரளாவுக்கு தேடி போய் பிடிச்சி இழுத்துட்டு எதுக்கு வந்திருக்கீங்க.
அடி ஆத்தி. இப்போ இவளுட்ட மாட்டிடுவேன் போல தெரியுதே. உண்மையை சொன்னேன் இவா என்னை உண்டு இல்லனு பண்ணிடுவா. பேசாம கிளம்பிடுவோம்.
என எண்ணியவன் வராத போனை கையில் எடுத்து கொண்டு,
இதோ… இதோ… வந்திடுறேன்டா.
என அவசரமாக வெளியேற
தப்பிச்சிட்டதா நினைப்பாக்கும். எப்ப இருந்தாலும் மறுபடியும் உள்ளால வந்து தானே ஆகணும். அப்போ வச்சிக்கிறேன்.
என புசுபுசுவென மூச்சு விட்டு முடிக்கவில்லை. மறுபடியும் உள்ளே வந்தவன்.
அவளை தயக்கத்தோடு பார்க்க,
இவ்வளவு சீக்கிரமாவா?
என சிரிக்க, நளனோ…
முகுந்த் வெளியில போக ரெடியாகிட்டான். நீயும்…
அவன் இழுவையாக நிறுத்த, ஒரு நொடி அவனை பார்த்தவள்,
இப்படி மரம் போல நின்னா எப்படி வருகிறது. வண்டியை எடுங்க…
என்றதும் அவசரமாக பின்னால் போனவன் சுவரில் சாய்ந்து நின்ற தள்ளுவண்டியை உருட்டி அவள் அருகில் கொண்டு வந்து நிறுத்த, அவன் முகத்தில் படர்ந்த தன் பார்வையை அகற்றாமலே, அவனுக்கு கை கொடுக்க, அவனும் தூக்கி அவளை அதில் அமர வைத்தான்.
முதல் முறை தனக்கான உரிமையை அவன் வற்புத்தல் இல்லாமல் தனக்கு அவளே தருவதை உணராதவன் அவள் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என உருட்டிக் கொண்டு வெளியேறினான்.
வெளி வந்தவர்களை எதிர் கொண்டு வந்த ஓவியாவை பார்த்த திலகாவின் நெற்றி சுருங்கியது.
என்ன இவா இப்படி இருக்குறா? கண்ணு சிவந்து வீங்கி இருக்கு. அப்படினா நளன் சொன்னது உண்மையா?
யோசிக்கும் போதே அவள் அருகில் வந்தவள்,
பிளீஸ் திலகா. நான் வரல. நீ முகுந்த் சார்ட்ட பேசேன்.
என்றாள் மென்குரலில்,
ஏன்? எதற்கு? எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவள் முகத்தை ஆழமாக பார்த்தாள். தோழி தன்னுள் எதையும் படித்து விட கூடாது என அவளும் முகத்தை மலர வைக்க தான் பார்க்கிறாள் ஆனால் முடியவில்லை.
ஆனாலும் மழுப்பலாக,
என்னணு தெரியல. தலை பயங்கரமா வலிக்குது. அதான்.
என்றாள் மறுபடியும்.
அவளை ஏற இறங்க பார்த்தவள் நளனை பார்க்க,
முடியாது திலகா. ஒவியா மேடம் கண்டிப்பா வரணும் என்கிறது சின்ன முதலாளியோட உத்தரவு.
பேசி பார்க்கலாமே நளன். அதுதான் நான் வரேனே.
பேசி பார்த்தாச்சு. நான் மட்டுமல்ல. அவங்களும். என்னு தெரியல. வந்தே ஆகணும்ணு சொல்லிட்டார்.
என்றதும் திலகா திரும்பி தோழியை பார்க்க, அவள் முகத்தில் இந்த பயணத்தில் கலந்து கொள்ள துளி கூட இஷ்டம் இல்லை என்பது தெரிந்தது.
என்ன நளன் எல்லாரும் ரெடியா?
ரெடி சார்…
அப்போ கிளம்பலாம்.
என்றவன் சங்கீதாவின் கையை அழுந்த பிடித்தவாறு முன்னோக்கி நடக்க, அவனை பின் தொடர்ந்து நடந்தனர் மூவரும். ஏனோ ஓவியாவின் விழியில் விழிநீர் முட்டிக் கொண்டு நின்றது.
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel



