வணக்கம் வாசகர்களே!
முகுந்தன் வீட்டிற்குள் நுழையும் ஒவியா?
மருமகளாக நுழைந்தாளா? அல்லது மணமாக போவதை சொல்ல நுழைந்தாளா?
தன்னை பார்த்து முதல் முறை கண்ணடித்து சிரித்த முகுந்தனை பார்த்ததுமே சட்டென சிவந்து போனாள் ஓவியா. முகத்தில் நொடி பொழுதில் குங்குமத்தை கொண்டு வந்து யாரோ கொட்டிய பொலிவு ஏற்பட்டு சட்டென மறைய, விழி உயர்த்தி சைகை செய்தவனை பார்த்ததும் அடிவயிறே கலங்கியது. சட்டென திரும்பி மகேந்திரனை தான் பார்த்தது ஓவியாவின் கண்கள்.
நல்ல வேளை அவன் வீட்டின் அழகிலே தன்னை தொலைத்தவனாக நின்றிருந்தான்.
“சார் வெயிட் பண்ணுறாரு மேடம். வாங்க…”
என முன்னால் எதுவும் செய்யாதவன் போல முகுந்தன் சென்று விட, இப்போது ஓவியாவின் நிலையோ ரொம்ப மோசமாக இருந்தது.
“ஏன்?… ஏன் இவர் இப்படி சொல்லிட்டு போனார்.”
குழப்பத்தோடு போனாலும் அவளையும் மீறி வலது காலை எடுத்து வைத்தே உள்ளே சென்றாள். உள் நுழைந்ததும் முன்னால் வந்து நின்றவன் கண்களால் அவள் பாதத்தை காட்ட, அப்போது தான் அதை கவனித்தாள் ஓவியா.
ஒரு நொடி அவனையும் அந்த காலையும் மாறி மாறி பார்த்து நிற்க, திலகா தான் அவள் கையை பிடித்து இழுத்தவாறு உள்ளே வந்தாள். உள் வந்தவர்களை நீல வேணி தான் வரவேற்றாள். இது யார் என்று தெரியாமலே வரவேற்றாள்.
“வருங்கால அத்தை. பொட்டுணு காலுல விழுந்திடு.”
நெருங்கி நின்று சொன்ன முகுந்தனை முறைத்தவள்,
“திலகா… நீ கொஞ்சம் இந்த பக்கம் வறியா ?”
என இடம் மாற்றி கொள்ள, உதட்டுக்குள் சிரித்து கொண்டான் முகுந்தன்.
மகன் இதுவரை யாரையும் வீட்டிற்கு அழைத்து வந்தது இல்லை என்பதால் நீலவேணி அன்போடே வரவேற்றாள். மகேந்திரனை அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை என மகன் அறிமுகப்படுத்தி வைத்ததால் அவளுக்கு சந்தேகமே வரவில்லை.
அவர்களை அறிமுகம் செய்து வைத்த கையோடு முகுந்தன் உள் அறைக்கு சென்று விட, இப்போது தான் ஒவியாவுக்கு நிம்மதியே வந்தது. வீட்டை கண்களால் அளந்தவாறு அப்படியே இருந்தாள். எதுவும் பேசவில்லை. மகேந்திரன் தான் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான்.
“என்னடி… வீடு செமையா இருக்குதுல…”
திலகா மென்குரலில் கேட்டாள்,
“ம்…ம்…”
என்ற ஊமை மொழியில் இவள் முடித்து கொள்ள,
“இங்க எல்லாம் வாழ வர கூடிய பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவா தான் இல்ல.”
என்றவளை சட்டென திரும்பி முறைத்தவள்.
“ம்… இல்ல.”
என்றாள் பட்டென்று,
“என்னடி பட்டுணு இல்லனு சொல்லிட்டா.”
என்றவனிடம் அடிகுரலில்,
“பங்களா பரந்து விரிந்து கிடந்தா அவங்க மனசும் அப்படி இருக்கும்னு நினைச்சிடாத…”
என்றாள் ஒற்றை கண்ணை நீலவேணி மேல் வைத்து கொண்டு,
“அப்படியா?”
என வியப்பு மேலிட கேட்டவளிடம்,
“ம்… இந்த உபசரிப்புக்குள்ள என்ன வில்லதனம் இருக்குமோனு எனக்கு பயமா இருக்கு.”
என்றாள் நிஜமாகவே பயம் கலந்த விழியை காட்டியவாறு,
“ஏய்… என்னடி? அந்த அம்மா எவ்வளவு தன்மையா பேசுறாங்க. நீ என்ன இப்படி பேசுறா?.”
“தன்மையா தான் பேசுவாங்க. இன்று இங்க தங்க போறோம்னு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ண போறாங்களோ. இது வேற நம்மளை கூட்டிட்டு வந்து இவங்க கிட்ட விட்டுட்டு எங்க போய் துலைஞ்சோ. மனசு திக்கு திக்குணு அடிக்குது.”
“யாரை தேடுறா முகுந்தன் சாரையா?”
“அந்த சாரை தான். செய்றது அம்புட்டையும் அது செய்துட்டு நம்மளை நொடி பொழுதும் பதட்டத்துலயே வச்சிருக்கும்.”
பல்லை கடித்து கொண்டு சொன்னவளை பார்த்து சிரித்த திலகா…
“என்ன இருந்தாலும் உங்க இரண்டு பேரோட மோதல் சூப்பர்டி.”
என்றதும் அவளை திரும்பி முறைத்த நேரம்,
“நீங்க போய் பிரஸாகிட்டு வாங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”
சொன்னவள் வேலைக்காரி பக்கம் திரும்பி,
“பாரி… நீ மாப்பிள்ளை சாருக்கு மேல் மாடி அறையையும், பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் முகுந்தன் சொன்ன அறையையும் காட்டிடு.”
“ஆக, போகிறதுக்கு முன்னால தாயோட காதை கடிச்சிட்டு போனது இதை சொல்ல தானோ…”
ஓவியா எண்ணும் போதே,
“என்னடி. முகுந்த் சார் பொறுப்பா சொல்லிட்டு தான் கிளம்பி போயிருக்காரு போல… அதுலயும் உனக்கு தனி அறையே கொடுத்திருக்காரு.”
“எனக்கு… இல்ல… உனக்கும் சேர்த்து தான்…”
“நடக்கிறதை பார்த்தா இது எல்லாம் எனக்கு போல தோணலயே…”
“உனக்கு எப்போ சரியா தோணியிருக்கு. இப்போ தோண… கிளம்பு, முதல்ல குளிச்சி டிரஸ் மாற்றுவோம்.”
என பிடித்து இழுத்து கொண்டு நகர்ந்த போது,
“என்னடா… இதுதான் பொண்ணா?”
காதுமடல் அருகில் பாட்டியின் குரல் கேட்க, சட்டென திரும்பியவன் கண்சிமிட்டி நின்ற பாட்டியை பார்த்து அசடு வழிந்தவாறு, ஆமாம் என்பது போல தலையசைத்தான். பேரனின் வழிந்து நின்ற முகத்தை வருடியவள்,
“நினைச்சேன். உள்ளால அவ்வளவு பவ்யமா கூட்டிட்டு வந்த போதே நினைச்சேன். ஆமா கூடவே ஒரு தடியன் நிக்குறானே. அவன் யாரு?”
“அவளை கட்டிக்க போற மாப்பிள்ளை.”
“என்னடா குழப்புறா?”
“இப்ப இது தான். நாளைக்கு மாறலாம்.”
“மாறலாமா?”
“பொறுத்து இருந்து பாரு பாட்டி. எல்லாத்தையும் உடனே தெரிஞ்சிகிட்டா சுவாரஸியம் இருக்காது. போ… போய் உன் பேரனோட பொண்டாட்டியை பாரு. அப்புறம் பார்க்கல பழைய படி கூட்டிட்டு வாணு அடம்பிடிக்க கூடாது.”
சொன்னவன் சிரித்து கொண்டு நகர, திலகாவின் வண்டியை பிடித்து உருட்டி கொண்டு போன ஓவியாவை கண்கள் இடுங்க பார்த்தாள் காந்தாரி.
அதே நேரம் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த மகேந்திரன்.
“இது கூட நல்லா தான் இருக்கு. இப்படி ஒரு சொகுசு அறையில ஒரு நாள் இரவு. குளிச்சி முடிஞ்சி ரெடியா இருப்போம். எப்படியும் ஓவியா ரெடியாகி இங்க தான் வருவா?”
என இரவெல்லாம் காவல் இருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் அவள் வராமல் போக, வெளியில் எட்டிப் பார்த்தான். வீடே நிசப்தமாக இருந்தது.
“இந்த முகுந்தன் நம்மை ஏமாற்றிவிட்டானா?”
எண்ணும் போதே கோபம் வர, ஓவியாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு நடந்தான்.
அதே நேரம்,
அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது சக்கரவர்த்தியின் கார். அதிலிருந்து அசதியாக இறங்கிய சக்கரவர்த்தி டோரை பூட்டி விட்டு வீட்டை நோக்கி நடக்க, அவர் செல்குரல் கொடுத்தது. எடுத்து காதுக்கு கொடுத்த சக்கரவர்த்தி,
“வேணாம். இப்ப சொல்ல வேணாம். எல்லாம் முடிஞ்சி சொல்லிக்கலாம். நீ தீனதயாளன்ட்ட பேசு.”
என மலர்ந்த முகத்தோடு செல்லை அணைத்து பாக்கெட்டில் திணித்தவர் கண்கள் ஹாலில் நைட் லேம் வெளிச்சத்தில் யாரோ நகர்ந்து போவது போல் தெரிய, யோசனையோடு மேல் மாடிக்கு வந்தார். வந்தவர் அப்படி யாரும் இல்லாதிருப்பதை கண்டு குழம்பி போய் நின்றவர் நாலாபுறமும் பார்வையை மேய விட்டவாறே நிசப்தமாய் இந்த மேல் மாடியை பார்வையால் மேய்ந்தவாறே கீழே இறங்கினார்.
அதே நேரம்,
புரண்டு கொண்டே படுத்திருந்தாள் ஓவியா. பஞ்சு மெத்தையும் ஏஸி காற்றும் இருந்துமே அவளால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
எந்த பக்கம் இருந்து பிரச்சினை வரும் என்ற பயத்தோடே நொடிகளை கடத்துபவளுக்கு எப்படி தூக்கம் வரும். சக்கரவர்த்தி மட்டும் தன்னை அவர் வீட்டில் பார்த்தால் போதும் பூகம்பம் வெடிப்பது நிச்சயம். ஆனால் அது எந்த பக்கம் வெடிக்கும் என்பது மட்டும் பரம ரசிகசியமாக இருக்கும். அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளும் போது நிச்சயம் தன் குடும்பம் சிதைந்து போவது நிச்சயம் என்பது அவளுக்கு தெரியும்.
அப்படியான சூழலில் கொண்டு இருத்தி விட்டு நிம்மதியாக தூங்கு என்றால் அவளாலும் எப்படி தூங்க முடியும். தூக்கம் பொட்டு அளவு கூட வரவில்லை. எப்போது காலை பிறக்கும். கதிரவன் கண் விழிப்பான். இந்த மகேந்திரனை அழைத்து கொண்டு கிளம்பலாம் என்றே இருந்தது அவளுக்கு.
ஆனால் அவளின் அவசரத்திற்கு கதிரவன் கண் திறக்க மறுக்க, மெல்ல எழுந்து அந்த அறைக்கு வெளியே வந்தாள். அவள் அறைக்கு இரண்டு அறை தள்ளி மகேந்திரனின் அறை. மறுபக்கம் ஒரு அறை தள்ளி முகுந்தன் அறை. இரண்டு பக்கமும் போக தோன்றவில்லை. ஒரு பக்கமாய் நீங்கி இருந்த மொட்டை மாடி ஏறும் படிக்கட்டின் அருகில் வந்தாள். அதன் பக்கத்து சுவர் முழுதும் கண்ணாடியால் அலங்கரித்திருக்க, அதன் வழியே சாலையில் இரவு ஒளியில் செல்லும் வாகனங்களை பார்த்தவாறு நின்று கொண்டாள்.
இரவு முழுதும் அதிலே தான் நின்றாள். விடியல் பூமியை ஆட்கொள்ள ரெடியான போது, மெல்லமாய் அறைக்கு சென்றாள். திலகா கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
“ஏய்… எழும்பிட்டியா?”
“ம்… ஆமா நீ எங்க போனா?…”
“தூக்கம் வரல. அதான் வெளியில போனேன். சரி. திலகா நாம சீக்கிரம் கிளம்பணும். நீ ரெடியாகு. நான் மகேந்திரன்ட்ட சொல்லிட்டு வந்திடுறேன்.”
“ம்…”
என்றவள் அவள் உதவியோடு பாத்ரூமுக்குள் நுழைய, ஒவியா வெளியே வந்தாள். இருள் இன்னும் முழுமையாக விலகவில்லை. வீட்டில் யாரும் எழும்பிய சுவடும் தெரியவில்லை. அவர்கள் எழும்பும் முன் கிளம்பி விட வேண்டும் என தீர்மானித்தவள் அடிகளை கொஞ்சம் வேகமாக எடுத்து வைத்த நேரம்,
ஒரு கரம் நீண்டு வந்து அவள் கரத்தை பற்றி இழுக்க, திடீர் இழுப்பில் தன்னை இழந்தவள் ஒரு சுற்று சுற்றி, அப்படியே போய் எதன் மேலோ மோதி கொள்ள, மோதிய வேகத்தில் மொத்தமாய் குலுங்கியவள், அந்த குலுக்கலிலும் விழி விரித்து நிமிர்ந்து பார்க்க, குறும்பு சிரிப்போடு முகுந்தனின் முகம் அவள் கண்ணுக்கு தெரிந்தது.
பயத்தில் வெளிறி உறைந்து போய் விட்டாள் ஓவியா. சட்டென கண்கள் பரபரப்பில் நாலாபுறமும் தான் விரிந்தது. யாரும் தங்களை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த பின் தான் அவன் அணைப்பிலே தான்… தான் இன்னும் இருப்பதை உணர்ந்தவள்,
அவனில் இருந்து தன்னை பிரித்தெடுக்க போராடினாள். அவளை போராட விட்டு குறும்பு சிரிப்போடு ரசித்தவன்,
“வீண் முயற்சிம்மா. நான் நினைக்காம உன்னால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது. எதுக்கு இந்த போராட்டம். உன் புருஷன் உதட்டுல… வேணாம் வேணாம்… கன்னத்துல அழுத்தமா ஒண்ணு கொடு. நானே விடுவிச்சிடுறேன்.”
குறும்பு மின்ன கண்களை சுருக்கி அவன் கேட்ட விதத்தில் ஒரு கணம் நடுங்கி போனவள்,
“விளையாடாம விடுங்க சார். மகேந்திரன் பார்த்திட போறாரு. அப்புறம் பிரச்சினை ஆகிடும்.”
என்றாள் பதட்டத்தோடு,
“ஆகட்டும்மா. அதுக்காக தானே வம்படியா ரெண்டு பேரையும் என் வீட்டுக்கு தூக்கிட்டு வந்திருக்கேன். அந்த மகேந்திரன் வரட்டும். நீ எனக்கு சொந்தமானவாணு தெரிஞ்சிக்கட்டும். பொறுக்க முடியாம குய்யோ… முய்யோணு கத்தட்டும். அப்படியாவது நீ அவனுக்கு இல்லணு தெரிஞ்சிக்கட்டும்.”
அதே குறும்போடு அவன் சொல்ல,
“என்ன… எல்லா முடிவையும் நீங்களே எடுத்திடுவீங்களா? யாரை கட்டணும்? யாரை கட்ட கூடாதுணு நான் முடிவு எடுக்கணும்.”
என்றாள் கோபம் சற்றும் குறையாமல்.
“எடு. அதுக்கு தானே டையிம் கொடுத்திருக்கேன். இல்லனா என்னை விட்டு கிளம்பி போறேணு மனசாட்சியே இல்லாம முன்னால வந்து நின்றாயே அப்பவே தூக்கிட்டு போய் தாலியை கட்டியிருக்க மாட்டேனா?.”
புருவ நெளிவோடு சொன்னவனை அனல் கக்கும் பார்வை பார்த்தவள்,
“ஆமா நீங்க கட்டுறது வரை நான் கழுத்தை நீட்டிட்டு நிற்பேன். கனவுல கூட நினைக்காதுங்க. இந்த ஜென்மத்துல என் கழுத்துல உங்களால தாலி கட்ட முடியாது. நான் மகேந்திரனை தான் நேசிக்கிறேன். அவரை தான் கட்டிப்பேன்.”
“நீ… நீ… மகேந்திரனை நேசிக்கிறா? அவனை தான் கட்டிப்பா.”
“ஆமா…”
“நிச்சயமாக…”
“நிச்சயமாக…”
“என் தலைமேல் ஆணையாக…”
“விளையாடாதுங்க சார். என் மனசுல நீங்க இல்ல. சும்மா சுத்தி சுத்தி வராம உங்க அப்பா பாக்குற பொண்ணு கழுத்துல தாலி கட்டுங்க. நான் முன்னால வந்து நின்று அர்ச்சனை தூவி ஆசீர்வதிக்கிறேன்.”
“ஒ!… மேடம் அந்த அளவு ஸ்டாங்கா இருக்கிறீங்களா? என் கல்யாணத்துக்கு வந்து நீங்க அர்ச்சனை தூவுவீங்க. உங்க மனசுல நான் இல்ல. சரி. அப்படினா அன்று அந்த வண்டிக்குள்ள உருகி குழைஞ்சி என் மேல விழுற அளவு நெருங்கி வந்தியே… அது ஏன்னு சொல்லு. நான் அமைதியா போயிடுறேன்.”
“நான்… நான்… எங்க வந்தேன். தலை சுத்துனது போல இருந்துச்சு. அதான் அப்படி…”
“ஒ… மேடத்துக்கு என் காதல் மொழியை கேட்டதும் வாந்தியும் தலைசுற்றலுமா வந்துச்சு. அதுக்கு நான் அப்படி எந்த வேலையும் செய்யலியே. அதுக்குள்ள எப்படி வாந்தி மயக்கம்…”
என்றதும் துடித்து நிமிர்ந்தவள் அவனை சுட்டெறிக்கும் பார்வை பார்க்க…
“அப்படியே செய்தாலும் மூணு மாசமாவது ஆகணுமேம்மா. உடனே எல்லாம் வாய்ப்பே இல்லையே. “
என்றவனை பலம் கொண்ட மட்டம் அடித்தவள்.
“அந்த மகேந்திரன் மோசம்னு சொல்லிட்டு நீங்க உங்க தரத்தை இழக்காதுங்க. மனசுல ஒரு உயர்ந்த இடத்துல வச்சிருக்கேன். கீழ் இறங்கி அருவருக்க வச்சிக்காதுங்க.”
“இது என்னடா வம்பா போச்சு. நான் என்ன அடுத்த பொண்ணுட்டயா பேசுறேன். கட்டிக்க போறவளுட்ட பேசுறதுல என்ன தப்பு.”
“கட்டிக்க போறீங்களா? கனவு காணாதுங்க. அது இந்த ஜென்மத்துல நடக்காது.”
“நடக்குதா இல்லயாணு பாரு…”
“நல்லா பாருங்க. நான் இங்கு இருந்தா தானே இப்படி எல்லாம் பேசிட்டு நெருங்கி வருவீங்க. நான் உடனே ஊருக்கு கிளம்புறேன்.”
“அது கூட உன்னால முடியாது பேபி. நான் நினைக்காம இந்த வீட்டுல இருந்து மட்டுமில்ல என் கைக்குள்ள இருந்தும் உன்னால வெளியில வர முடியாது.”
என்ற போது தான் இப்போதும் அவன் கைக்குள் இருப்பது உறுத்த,
“விடுங்க… முகுந்த்…
நான் கிளம்பணும். மகேந்திரன் எனக்காக காத்திருப்பாரு.”
“கிளம்பணுமா? கிளம்பும்மா. கிளம்பு.”
சொன்னவன் கையை எடுக்க, அவள் மூச்சை விட்டவாறு அவனில் இருந்து விலகி, அவனை பார்த்தவாறே மெல்ல திரும்ப, அவள் கரம் பற்றி இழுத்தவன், மெல்லமாய் அணைத்து அவள் இதழில் இதழ் பதிக்க… அவள் விழியோ அவன் வன்மத்தில் பட்டாம்பூச்சாய் பறந்தது. ஒரு நொடி சிறை பிடித்தவன் மெல்ல அவனிலிருந்து அவளை நகர விட்டு,
“அந்த இருட்டு அறை நியாபகங்களோடு இதையும் மனசுல ஒரு ஒரமா வச்சிக்க… அடுத்தடுத்து நான் கொடுக்க போற இன்ப அதிர்ச்சியை சேமிச்சு வைக்க இடம் வேணும்ல…”
என்று குறும்போடு சிரித்து கண்ணடிக்க, அவனின் தாக்குதலில் தன்னை இழந்தவள் அப்படியே உறைந்து போய் நிற்க, முகுந்தன் கண்சிமிட்டி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். எத்தனை நொடி என்று தெரியவில்லை. அப்படியே அந்த இடத்திலே உறைந்து போய் நின்றவள்,
“இனி… மகேந்திரன் அறைக்கா? வேணாம்?…”
என மறுபடியும் சிலை போல உறைந்து போய் தன் அறைக்கு வர, மரத்து போன மாமிசம் போல் வரும் தோழியை வினோதமாக பார்த்தாள் திலகா.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel