✝️ முன்னுரை
கல்வாரி மலை… மனித குல வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் நிகழ்ந்த இடம் ✝️.இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவங்களை தாங்கி, சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்தார்.அவர் அனுபவித்த வலி, அவமானம் மற்றும் துன்பம் —அனைத்தும் மனிதனை மீட்கும் அன்பின் வெளிப்பாடே. இந்த சிலுவை தியாகம் கவிதை தமிழ், அந்த தருணங்களை மிக ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் வெளிப்படுத்துகிறது. இந்த Christian Kavithai Tamil, நம்பிக்கை, தியாகம் மற்றும் மீட்சியின் உண்மையை உணர்த்துகிறது.
✝️ கல்வாரி கவிதை தமிழ்
கல்வாரி மலை மேலே
கயவர்களின் நடுவினிலே
கன்னி மகன் துடிதுடித்தார் …
கசப்பான காடி நீரை
துணியில் தொய்த்து அவருக்களித்தான்
நாற்றம் கொண்ட அந்நீரை
தாகத்துக்கு அவன் கொடுத்தான் …
முள்முடியின் வலியேற்று
முனங்கலுடன் அவர் தாங்க
இரக்கமற்ற முரடனவன்
சாட்டையாலே கலங்கடித்தான்…
பாரம் தாங்கா சிலுவை மேலே
பரமன் மகன் தொங்கி கொண்டும்
பாவிகளுக்காய் ஜெபித்து நின்றெம்மை
பரகதியில் சேர்த்து கொண்டார்…
இரக்கமற்ற யூதனொருவன்
ஈட்டியாலே விலா துளைத்து
இரும்பு மனதை காட்டி நின்று
ஈரகுலையை நடுங்க வைத்தான்.
எல்லாம் முடிந்ததென தெரிந்தும்
இயன்றவரை அனைத்தையும் தாங்கியும்
இதயத்தில் வலிதனை
ஏந்தி நின்றும்
இறைமகன் உயிர்த்தெழுந்தார்…
சாப இருள் பூமி மீது
இருளவனை படரவிட
பூமி தாயும் ஒரு நொடியே
தன்னிலை மறந்து போக…
மானிட மகன் மரித்து விட்டார்
மனிதகுல இட்சகரும்
மனிதனிலே தலை சாய்த்து கொண்டார்
சாவை வெற்றி கொள்ள
சரித்திரத்தில் நின்றார்.
கயவன் கூடாரம் கலகலக்க
அதிகார வர்க்கம் திமிரெடுக்க…
சாதித்ததாய் யூத இனம் மகிழ்ச்சி கொள்ள…
மரிமகனோ உயிர் துறந்தார்…
மனித குலத்தை காக்க வந்த
மானிட மகன் உலகோரின்
சூழ்ச்சிக்கு பலியாகி போனார்.
மண்ணில் மலராக உதிர்ந்து போனார்…
அவர் காயங்களை ஆராதனை செய்வோம்
பரமனை பலி கொண்ட நம்
பாவத்தை விட்டொழிப்போம்…
இன்றே விட்டொழிப்போம்…
🔍 கவிதையின் அர்த்தம்
இந்த கல்வாரி கவிதை தமிழ், இயேசுவின் சிலுவை தியாகத்தின் ஒவ்வொரு தருணத்தையும் உயிரோட்டமாக காட்டுகிறது.
இந்த கவிதையில்:
- உடல் வலி மற்றும் அவமானம் 😔
- மனிதனுக்காக செய்த தியாகம் ✝️
- இறுதியில் உயிர்த்தெழுந்த நம்பிக்கை 🌅
மிக ஆழமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த Christian Kavithai Tamil, மனித குலத்தை காப்பதற்காக ஒரு மாமனிதன் செய்த தியாகத்தை நினைவூட்டுகிறது.
கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026
✝️ முன்னுரை கல்வாரி மலை… மனித குல வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் நிகழ்ந்த இடம் ✝️.இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவங்களை…
சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026
✝️ முன்னுரை இயேசுவின் சிலுவை தியாகம்… மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அன்பின் அடையாளம் ✝️.அவர் பாவமற்றவராக இருந்தும்,உலகின்…
இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026
🙏 முன்னுரை இறைவன்… மனித வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் 🙏வலி, துன்பம், ஏக்கம் — எல்லாவற்றிலும் நாம் தேடும் ஒரே…
சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026
✝️ முன்னுரை சிலுவை… ஒருகாலத்தில் அவமானத்தின் சின்னமாக இருந்தது.ஆனால் இன்று அது புனிதத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் வணங்கப்படுகிறது ✝️.ஒரு…
கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (6) மனித நேயம் படைக்க வந்த வேந்தன். யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்மனித நேயம் காக்க…
கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (5) குடிலில் பிறந்த தேவனே இதய குடிலில் மலர்வாயோ மடியில் தவழ்ந்த மரிமகனே மனதுள் குடி வருவாயோ!……
கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (4) பிறந்தார் பிறந்தார் மாட்டு தொழுவத்தில் மரி மகன் பிறந்தார் மானிடர் வாழ்வில் ஒளியேற்ற மண்ணில் வந்து…
கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (3) காரிருள் நடுவே பேரொளி உதித்தது மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது…
கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai-2 விடியல் தந்த தேவனுக்காய் விருப்பத்தோடு மாறிடுவேன் மடியில் தவழ்ந்த மாதவனுக்காய் மனசை புதுசா மாத்திடுவேன் … உயிரை…
கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா? பேசும் கவிதையினை படைப்பாரா ? வீசும் காற்றின் வாசம் போல, நேசம்…