வணக்கம் வாசகர்களே!
சங்கிலியை அவமானப்படுத்தும் பல்லவிக்கு பாடம் கற்பிக்கும் ரவி? சங்கிலி தனக்காக செய்த அனைத்தையும் தெரிந்து கொள்ளும் பல்லவி.
இரவு வெகு நேரமாகியும் பல்லவிக்கு தூக்கம் வர வில்லை. ரவி பேசிய பேச்சே திரும்ப திரும்ப நினைவலையில் வந்து கொண்டே இருந்தது. திரும்பி திரும்பி படுத்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் புரண்டு கொண்டிருக்க பிடிக்காமல் வெளியே வந்தாள். இரவு வெளிச்சத்தில் நிலவு மகளின் ஊர்வலத்தை ரசித்தவாறே நின்றான்.
இரவில் தனிமை தாக்கும் போது இப்படி அடிக்கடி வந்து நிற்பாள். பால் முகம் காட்டும் அந்த அழகு மயிலின் நடனத்தில் தன்னை தொலைத்து அது மேகங்களுக்குள் நந்தவனம் புரியும் அழகை ரசித்து கொண்டே தன் வலி மறந்து போவாள். அப்படியே அன்றும் வந்து நின்றாள். ஆனால் ஏனோ இன்று அந்த நிலவு மகள் கூட அவள் மூடை சரி செய்யவில்லை. கடைசியில் பாதி தூக்கத்தில் எழுந்து வந்த விக்கியால் தான் அவள் நார்மர் ஆனாள்.
ஏதேதோ பேசி பேசி அவளை சரி கட்டி அறைக்கு தூங்க அனுப்பியவன் நேரே தன் அறைக்கு வந்தான். சத்யா இன்னும் தூங்காமல் புத்தகம் வாசித்து கொண்டே இருந்தான்.
விக்கியை கண்டதும்.
“தண்ணீ குடிக்க போறேணு போனா? அரை மணி நேரம் கழிச்சி வரா. ஒரு கப் தண்ணி குடிக்க இவ்வளவு நேரமா?”
“இல்லடா பல்லவி ஏதோ மூட்அவுட்டுல இருந்தா. அவளை சரி பண்ண கொஞ்சம் நேரமாச்சு.”
“மாலையில் நடந்த விசயத்தை போட்டு குழப்புறாளா இருக்கும்.”
” அப்படி என்ன நடந்துச்சு..”.
“எல்லாம் அந்த மீன்காரனால தான் …”
“மீன்காரனா ? அவன் என்ன பண்ணுனான்.”
“அவன் எதுவும் பண்ணல. ஒருத்தன் கொஞ்சம் ஏமாளியா கிடைச்சா நம்ம பொண்ணுங்க விடுவாங்களா? அவன் வேற புது டிரஸ் போட்டுட்டு லூக்கா பந்தாவா வந்து மீனை கொடுக்க., மீன்காரன் தானேனு நினைச்சிட்டு இவளுங்க இவங்க வேலையை காட்ட பல்லவி கடுப்பாகிட்டா..”.
“பல்லவி ஏன் கடுப்பானா?.”
“என்ன இருந்தாலும் அந்த மீன்காரன் இவளோட ஊர் இல்லியா. ஊரில்ல போய் எதுவும் சொல்லி வைப்பான். இப்படி நடக்காதுங்கணு சொல்லி பார்த்தா இவளுங்க அடங்கல. அதான் எகிறிட்டா…”
“அது நம்ம இடத்தை போல இல்ல சத்யா. அவளோட ஊர் சின்ன கிராமமா? .எல்லாரும் உறவுகாரங்க போல தான் பழகுவாங்க . அதுலயும் இந்த மீன்காரன் சின்ன வயசுலயிருந்தே அவங்க வீட்டுக்கு மீன் கொண்டு வருகிறதுல பழக்கமாம். இவளுக்கு நிறைய உதவி வேற செஞ்சிருக்கான் போல… இவளோட மாமா அத்தை பேசுனதை கேட்டேன்.”
“………………….”.
“அதான் எப்படியும் பாசம் இருக்கும் தானே… இவங்களுக்கு அவன் கூட என்ன விளையாட்டு. போச்சா நல்ல மீன் சாப்பாடு போச்சா…”
என்று இரவு சத்யாவிடம் புலம்பியவனி. மறுநாள் எழுந்தவுடனே பல்லவியிடம் கேட்க…
“விடு விக்கி. மீன் இல்லாம சாப்பிட முடியாதா?. நான் உனக்காக தான் அவன் கொண்டு வரவே அனுமதிச்சேன். இல்லணா அவனை இங்க வரவே விட்டிருக்க மாட்டேன். என்ன இருந்தாலும் அவன் என் ஊர்காரன் . கேலி பண்ணுறதுக்கும் ஒரு வரைமுறை வேணாமா? வருகிறவன். எனக்காக வரான். என்னை பற்றி என்ன நினைப்பான்.”
“நினைக்கிறது. என்ன நினைப்பான். அவங்க பண்ணுன கூத்துக்கு உன்னை என்ன நினைப்பான்.”
” அதான் ரவி சொல்லிட்டானே. அவங்களையும் என்னையும் ஒரே தராசுல வச்சி நிறுத்தி.”
சொல்லும் போதே அழுகை எட்டி பார்க்க,
” அவனை நான் வேணும்ணு அசிங்கப்படுத்திட்டேனாம். இவனை அசிங்கப்படுத்தி எனக்கு என்ன கிடைக்க போகுது. எனக்கு வேற வேலையே இல்லையா? தப்பு தான் தப்பே தான். எப்பவும் அழுக்கு டிரஸோட வரானே. நாலு நல்ல டிரஸா எடுத்து கொடுப்போனு கொடுத்தது என் தப்பு தான். அதுக்கு பிச்சையா போடுறானு கேட்கிறான்.”
“அவன் சரியான கஞ்சன் – 5 ரூபாய் செலவு பண்ண ஐயாயிரம் முறை யோசிப்பான். அவனை பற்றி எனக்கு நல்லா தெரியும். நாம எப்படி எடுத்து சொன்னாலும் அவனை அவன் மாத்திக்க மாட்டான். அதான் டிரஸ் எடுத்து கொடுத்தேன். அதுக்கு இந்த ரவி என்னவெல்லாம் பேசிட்டான். “
“விடு. ரவி தானே சொன்னான். சங்கிலி எதுவும் சொல்லலியே.”
அவளை சமாதானப்படுத்த விக்கி சொல்ல,
” அவன் எதுவும் சொல்லாமலா இவன் சொல்லுவான். எல்லாம் அவனோட ஆட்டமா தான் இருக்கும். அவன் அங்க ஆடுனதை இவன் எனட்ட ஆடுறான் அவ்வளவு தான்.”
“விடுடா. அவனுங்களை பற்றி நினைச்சிட்டு… ஆமா இன்று முதல் முதலாகி ஒரு ஆப்ரேஷன் பண்ணுனியே என்னாச்சு . கை எதுவும் நடுங்கலியே”
விக்கி பேச்சை வேறு பக்கம் திசை திரும்ப . அவள் எண்ணம் போல அவன் நேசித்த பக்கம் கொண்டு செல்ல பல்லவியும் மிக சரியாக அதில் பொருந்தி நின்றாள்.
சுத்தமாக சங்கிலி பக்கமிருந்து அவள் மொத்த கவனமும் தொழில் பக்கம் சென்று விட, பக்கம் பக்கமாக பேச தொடங்கினாள். அதிலும் மாலையில் விக்கியின் அம்மா மகனை பார்க்க வர… சங்கிலி என்ற பெயரே மறந்து போகும் அளவு அவள் கவனம் வேறு பக்கம் திருப்பியது.
இப்படியே ஒரு வாரம் சென்றிருக்கும். அன்று வெள்ளிகிழமை என்பதால் பல்லவிக்கும் அவள் தோழி சிலருக்கும் அன்று விடுமுறை. விக்கி அவன் தோழர் சில தோழிகளுக்கு ஞாயிறு விடுமுறை. வாரத்தில் இந்த இரண்டு நாளும் பல்லவியும் விக்கியும் பிரிந்து தான் இருப்பர். அப்படி பிரிந்து போய் பல்லவி வெளிப்புறம் தன் துணியை எடுத்து கொண்டிருந்த நேரம். …
ஹாலிஸ்பெல் குரல் கேட்ட.து மதியம் என்பதால் உடன் தங்கியிருந்த தோழிகள் அனைவருமே தூங்கி கொண்டிருந்தனர்.. அதனால் பின்புறமிருந்து வாசலுக்கு இவள் வருவதற்குள்ளே காலிங்பெல் மறுபடியும் மூன்று முறை அடித்து ஓய்ந்தது.
கொண்டு வந்த துணியை சோபாவில் போட்டவாறு வாசலுக்கு வந்து கதவை திறந்தாள்.
வெளியில் சங்கிலி நின்று கொண்டிருந்தான். அவனை அந்த நேரத்தில் கண்ட பல்லவிக்கு கோபம் குபுகுபுவென ஏறியது. சுற்றி பார்த்தாள் ரவி இல்லை.
அவள் சுற்றி பார்வையை வீசியவுடனே சங்கிலி…
“அவன் வரல…”
என்றதும்.
” நீங்க எதுக்கு வந்தீங்க. அவன் திட்டி தீர்த்தது போதாது. மறுபடியும் நம்ம பங்குக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசி தீர்த்திடலாம்னு வந்தீங்களா?”
” ஐயோ பல்லவி. இல்ல. மீனை கொடுத்திட்டு போகலாம்ணு “.
“எதுக்கு?. நான் தான் இனி மீன் கொண்டு வர வேணாம்ணு சொன்னேனே.”
“அது கோபத்துல…”
சங்கிலி இருக்க…
“எதுக்கு கோபம்.? நான் எதுக்கு கோபப்படணும். நான் கோபப்பட யாரு. இல்ல சார். எனக்கு எந்த கோபமும் இல்லை. தயவு செய்து மீனை கொண்டு கிளம்புங்க.”
“ஏன் பல்லவி இப்படி பேசுறா?”
“அப்புறம் எப்படி பேசணும். வேணாம்ணா விட்டுட வேண்டியது தானே. எதுக்கு வந்து முன்னால நிக்குறீங்க. நீங்க எனக்காக எல்லாம் வரவும் வேணாம். அவளுங்க முன்னால அவமானப்படவும் வேணாம். பேசாம போயிடுங்க.”
” நான் அப்படி சொன்னேனா?”
” நீங்க சொன்னா என்ன? அவன் சொன்னா என்ன? எல்லாரும் கூட்டு களவாணிகள் தானே..”.
“இல்ல புள்ள. என்னை அவமானப்படுத்துனதை பார்த்திட்டு தாங்க முடியாம கத்திட்டான்.”
“என்ன?… என்ன அவமானப்படுத்திட்டாங்க. நிஜத்தை தானே சொன்னாங்க. மீன்காரனை மீன்காரன்னு சொல்லாம அப்புறம் கலெக்டர்ணா சொல்லுவாங்க. “
“……………..”
“ஒரு நாள் கரி துணியில காக்கா போல வந்து நின்னுட்டு, மறுநாள் வெள்ளையும் சொள்ளையுமா வந்து நின்னா இப்படி கிண்டல் பண்ண தான் செய்வாங்க.”
“அதை நீ தானே புள்ள வாங்கி கொடுத்தா…”
“வாங்கி கொடுத்தா இப்படி வந்து வழிஞ்சிட்டு தான் நிப்பீங்களோ?”
“வழிஞ்சிட்டு வந்து நின்னேனா?”
“இல்லயா பின்ன?”
” ………………”
” ஒரு கெத்து வேணாம். மீசை இருந்தா மட்டும் போதாது. ஆயிரம் பொண்ணுங்க சுற்றி நின்றாலும் அவங்க எல்லாருக்கும் நடுவுல தலைநிமிர்ந்து நிற்க வேணாம். அதை விட்டுட்டு பொம்பளை புள்ள போல நாணி கோணி தலை குனிஞ்சி நின்னா இப்படி வச்சி செய்யதான் செய்வாங்க.”
“அப்படினா அந்த புள்ளைங்க செய்தது தப்பில்லனா சொல்லுறா?”
“அது தப்போ ?, சரியோ?… நீங்க சரியில்லணு சொல்லுறேன்.”
“அப்படினா ரவி சொன்னது தான் உண்மை அப்படி தானே.”
சங்கிலி வார்த்தை பிசிறடிக்க நெஞ்சம் கலங்கி சொன்னதும் சட்டென வார்த்தையை விட்டு நிமிர்ந்து அவனை பார்த்தவள்.
அவன் கண்ணை நேருக்கு நேர் சந்தித்தவாறு…
“ஆமா. நீங்க… நீங்க தான் தப்பு. உங்க பிகைவ்வியர் தான் தப்பு.”
என சொல்ல… கடுகடுத்த முகத்தோடு அவள் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை கேட்டதும் மொத்தமாக அடிப்பட்டவன்… கண்ணீர் மல்க அவளை பார்த்து.
“தெரியுது புள்ள. உனக்கு ஆரம்பத்துல இருந்தே என்னை புடிக்காது. விட்டு போவேணு நினைச்சா. நான் வெட்கமே இல்லாம வந்து வந்து விழுறேன் பாரு. எனக்கு இது தேவைதான். ஊர்ல்ல என் முன்னால ஒருத்தன் நின்னு பேசுவானா? உன் தோழிகள் ஆச்சே எதுவும் பேசி உன் மனசு கஷ்டப்பட்டிட கூடாதேனு பார்த்தா. நீ என்னை இப்படி அசிங்கமா பேசிட்டியே…”
“அப்புறம் தலையில தூக்கி வச்சி கொண்டாடுவேணா நினைச்சீங்க. ஊர்ல்ல என்ன பிஸ்தா?. வக்குக்கு செத்தவன்ட்ட எல்லாம் வீரத்தை காட்டுறதுல என்ன பெருமை இருக்கு. உன்னை எதிர்த்து நிக்குறது எவனா இருந்தா என்ன?… இல்ல… எவளா இருந்தா என்ன? உன் வீரத்தை காட்டி அடக்கியிருக்கணுமா இல்லையா? அதை விட்டுட்டு அந்த ரவிட்ட போய் புலம்பிட்டிருக்கா. நீ… நீ சங்கிலி இல்ல… நீ சங்கிலியே இல்ல. உனக்கு புடிக்கலியா? அது யார் செய்தாலும் நேரே அந்த ஆளுட்ட எதிர்த்துட்டு நிக்குறவன் தான் சங்கிலி”.
“நீ அவளுங்களுட்ட எதிர்த்திட்டு நின்னியா? இல்ல அவளுங்க கன்னத்துல ஒண்ணு வச்சி… என் அனுமதி இல்லாம என்னை தொடாதுங்கணு கத்துனியா? இல்ல தானே. கோழை போல தொடை நடுங்கி நின்னுட்டு இப்ப பேச்சை பாரு. பேசாம கிளம்பிடு. மறுபடியும் என்னை திட்ட வைக்காத…”
“கையில ஒத்த துட்டு இல்ல. எல்லாத்தையும் இப்ப தான் பேங்க்ல்ல போட்டுட்டு வந்தேன்”.
அதான் எனக்கு தெரியுமேப்பா. உனக்கு இரண்டு ஆசை. ஒண்ணு சொந்தமா நிலம் வாங்கி வீடு வைக்கணும். இரண்டாவது நம்ம ஊருக்கு ஒரு மினிபஸ் வாங்கி ஓட்டணும். அதுக்காக தானே குருவி சேக்கிறது போல சேர்கிறா?…நல்ல விசயம் தானேப்பா. இப்போ என் கால்ல விழுந்ததுக்கும் நீ பணம் சேர்க்கிறதுக்கும் என்ன சம்மந்தம்.”
“எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு தவறுதலா தீ காயம் பட்டுடுச்சி. வலி பொறுக்க முடியாம துடிக்கிறா . பெரிய மனசு பண்ணி எனக்கு மருந்து கொடுங்க. இன்றைக்கே ஏதாவது வேலை செய்து கொடுத்து உங்க கடனை அடைச்சிடுறேன்.”
“அது உன்னோட பிரண்ட் ஆகிட்டாங்க… அவங்களை போய் நான் எப்படி?”
“இந்த சவ்வுடாலு எல்லா எனட்ட வேணாம். என் பிரண்ட்ஸ் சேர்ந்து வெட்ட வந்தாங்கணா கழுத்தை கொண்டு அவங்க முன்னால நீட்டி வெட்டுங்கணு சொல்லுவியா? மாட்டா தானே… உனக்கு வீரம் இல்லனா வாயை பொத்திட்டு போ. அதுக்கு என்னை காரணம் சொல்லாத…”
பல்லவி கோபத்தின் உச்சத்தில் கொதித்து கொண்டு நிற்க…
“இப்ப என்ன? அவளுங்க செவிழ்ல்ல ஒண்ணு வைக்கணும் அவ்வளவு தானே. இனிமேல் வரட்டும். இந்த சங்கிலி யார்னு காட்டுறேன். இந்தா. இப்போ மீனை பிடி…”
அவனை சட்டென ஏறிட்டு முறைத்தவள்.
“இப்போ இந்த மீன் ஒண்ணும் தான் எனக்கு குறை. பேசாம எடுத்துட்டு கிளம்பிடு.”
“அதான் சொல்லிட்டேனே. இனிமேல் எது நடந்தாலும் கெத்தா சங்கிலி போல ஃபேஸ் பண்ணுறேன். இந்த மீனை வாங்கிக்க… ஒரு வாரமா மீன் இல்லாம நல்லா சாப்பிட்டிருக்கவே மாட்டா…”
“இப்ப சாப்பாடு ஒண்ணு தான் குறை.. நீ ஏண்டா இப்படி இருக்கா.? உன்னை அசிங்கப்படுத்துன இடத்துக்கு மறுபடியும் வந்து நிக்குறா?… சொல்றேன்ல்ல கிளம்பு. இதுக்க மேல இங்க வராத…”
“அது இல்ல… புள்ள…”
“கிளம்புணு சொல்லுறேன். உன் காதுல விழல… உனக்கு ஊர்ல்ல வேற வேலையே இல்லையா?… ஆமா அப்போ ஏதோ கோட்டையை புடிக்க போறேன், கொடியை நாட்ட போறேணு சொல்லிட்டு திரிஞ்சா. நாலு வருஷம் ஆன பிறகும் எதையும் கட்டுனது போல தெரியல. எல்லாம் வாய் சவுடால் தான் இல்ல…”
” ………………..”
“நானும் மூணு மாடி வீடு கட்டி ஊருக்குள்ள மூணு பஸ் எல்லாம் விட்டிருப்பாணு நினைச்சேன். கஞ்சதனமா காசு சேர்த்து வச்சியே. அதுல ஒண்ணு கூடவா நிறைவேற்ற காசு சேரல…”
{அது… வந்து… பல்லவி…”
“என்ன மனுஷன்ய்யா நீ. இருபத்து ஐந்து வருஷமா சேர்க்கிறேனு கொட்டம் அடிச்சிட்டு திரிஞ்சா. இப்ப என்னாச்சு. போச்சா. உன் வீராப்பே இம்புட்டு தானா? நீ எல்லாம் பேச தான் லாயக்கு. உன்னால ஒரு தூணை கூட போட முடியாது. மாமா தான் அப்ப எல்லாம் பெரிசா சொல்வாரு. அதுல அத்தை வேற உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தாங்க. ஆனா எனக்குல தெரியும். உன்னால எதுவும் புடுங்க முடியாதுணு .”
என்றதும் நச்சென கோபம் சங்கிலியின் மண்டையை தாக்க…
“வார்த்தையை விடாத புள்ள… அப்புறம் நானும் எதுவும் பேசிடுவேன்.”
“பேசு. என்னை பேசினா. உன்னால பேச கூட முடியுதா? சொல்லுற எதையும் செய்ய முடியல… பேசுனா மட்டும் கோபம் வருது… இப்படியே வாய் சவுடாலை மட்டும் கட்டியா பிடிச்சிக்க….”
“ஒவரா போறா புள்ள…”
“அப்படி தான் போவேன். பல்லவன் ஒரு மினிபஸ் தானே விட்டிருக்கான். நான் மூணு பஸ்ஸாவது ஊருக்கு கொண்டு வருவேணு சொன்னா?.. என்னாச்சு. பாட்டி கடையில ஒடுதே விளையாட்டு பொம்மை பஸ்… ஒருவேளை அதை தான் சொன்னியோ….”
பல்லவி நக்கலாக கேட்க… தலை குனிந்தவன் வலியை ரொம்ப கஷ்டப்பட்டு அடக்க….
“மூணு பஸ் வேணாம். உன்னால ஒரு பஸ் விட முடிஞ்சிருக்கா? ரோசம் மட்டும் அப்படியே இருக்கு. நாலு வருஷத்துக்கு முன்னால இருந்தது போல அப்படியே இருக்கா. அதே கரிபிடிச்ச துணி… சைக்கிள் கம்பி. ஒரு சின்ன விசயத்தையாவது மாத்தியிருக்கிறியா?…”
“…………..”.
“இதுல சொன்னா கோபம் மட்டும் வருது. துணி எடுத்து கொடுத்தா வீராப்பா பேச மட்டும் வாய் வருது. நீ எல்லாம் மாறவே போறது இல்ல. கடைசி வரை இப்படியே தான் இருக்க போறா?…. இதுல கோபத்துல குதிக்கிறதுல எந்த குறையும் இல்ல. அந்த ரவியிட்ட போய் சொல்லு. பல்லவி இப்படி எல்லாம் பேசி அசிங்கப்படுத்தி அனுப்பிட்டானு சொல்லு. அவன் என்ன சாதிச்சிட்டான். அவனும் உன் கூட தானே சுத்திட்டிருக்கான். இரண்டுக்கும் ரோசத்துக்கு மட்டும் குறைவில்ல. எடுத்து சாடிட்டு வந்திடுறது. உங்க இரண்டு பேரோட ரோசத்தையும் முதல்ல செயல்ல காட்டுங்க.”
.”……………”
” அப்ப சொல்லுறேன். அதை விட்டுட்டு குளத்துல மீன் பிடிக்கிறது. கரி துணியில காலத்தை கழிக்கிறதுணு இருக்கிறதுனா… இப்படியே திரும்பி பாக்காம ஒடிடு. இனி உன்னை நான் பார்க்க விரும்பல…”
சொல்லியவாறு மீனை கூட வாங்காமல் பல்லவி உள் சென்று விட/ பட்ட அவமானத்தில் உள்ளம் உருகி சிலையாக நின்றான் சங்கிலி. பல்லவி இவ்வளவு மோசமாக பேசுவாள் என அவன் கனவில் கூட நினைக்கவில்லை.. ஆனால் பேசிவிட்டாள். ரொம்ப… ரொம்ப… மோசமாக பேசிவிட்டாள். தாங்க முடியவில்லை சங்கிலியால். ஆனால் உன்னால் தான் என் ஆசை, கனவு, லட்சியம், எல்லாம் சிதைந்து போனது என சொல்லவும் அவன் வாய் தயாராயில்லை.
பல்லவி தங்கியிருந்த வீட்டில் இருந்து நடைபிணமாக தான் கடைக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் ஒரு மூலையில் உடைந்து உட்கார்ந்து விட்டான். தண்டபாணி எவ்வளவு கேட்டும் அவன் வாய் திறக்கவே இல்லை. ஏன் ஜெகன் கூட ரொம்ப வற்புறுத்தி கேட்டும் அவன் சொல்லவே இல்லை.
அன்று முழுதும் எந்த வேலையும் செய்யவும் இல்லை. யாரிடமும் பேசவுமில்லை. ஏன் சாப்பிட கூட கிளம்பி போகவில்லை. ரவி வெளியூருக்கு லோடு கொண்டு சென்றிருந்ததால் அவனும் தேடி கொண்டு இங்கு வரவில்லை. கொஞ்ச நேரம் சுற்றி சுற்றி கடைக்குள் நின்றவன். தண்டபாணியின் வாடிய முகத்தை பார்த்ததும் கிளம்பி வெளியே போனான்.
எங்கு போக என்றும் தெரியவில்லை. நேரே குளக்கரைக்கு வந்தான். அங்கேயே பல மணி நேரம் அப்படியே இருந்தான். வாழ்வில் இப்படி ஒரு வலியை அவன் என்றுமே அனுபவித்தது இல்லை. நரகவலியாக இருந்தது. அந்த வலியினூடே இந்த ஊருக்கு பல்லவி வந்த நாள் முதல் மன கண்ணில் விரிய ஆரம்பித்தது.. அவள் வருவதற்கு முன்வரை இறுகியே இருந்த மனது அவள் ஒருத்திக்காக மட்டும் ஏன் இளகியது.
“ஏன் மாறினேன்?. உலகத்தையே வெறுத்த என்னுடைய மனது அவளை மட்டும் ஏன் நேசிக்க ஆரம்பித்தது.. முதல் பார்வையிலே அவள் மேல் மட்டும் என் கனத்த இதயத்தில் இருந்து இரக்கம் பிறந்தது. அவளுக்காக மட்டும் அதுவரை கடைபிடித்த எல்லா கட்டுகளையும் துறந்தேன். கன்னத்தில் அறைந்து என் நிலையை புரிய வைத்தும் மறுபடியும் அவள் வலிக்கு மட்டும் ஏன் ஒடி போய் விழுந்தேன். அதனால் தானே இன்று அற்பனாக நினைத்து பேசிவிட்டாள். அவளால் எப்படி பேச முடிந்தது. அதுவும் என்னை பேச… அதுவும் இவ்வளவு தரம் தாழ்ந்து பேச அவளால் எப்படி முடிந்தது.”
“அவள் சொல்வதும் உண்மை தானே. நான் என்ன சாதித்திருக்கிறேன். அதே கரிபடிந்த வாழ்வுக்குள் கிடந்து விட்டு அவள் நேசம் கிடைத்து விடும் என நான் ஓடியதும் தவறு தானே. உண்மையில் நீ மீன் கொடுக்கவா போனாய். அது வழியாக அவளை தினமும் பார்க்கலாம் என்று தானே போனாய். உண்மையை சொல். அதற்காக தானே போனாய். அது தவறு. அதை உனக்கு சுட்டி காட்ட தான் கடவுள் அவள் வழியால் தண்டித்து விட்டான்.”
“போதும். இனி காலத்துக்கும் அவன் புறம் செல்ல கூடாது. அவள் பெரிய டாக்டர். அவள் அருகில் நிற்க முடியுமா? நாம வலிய போய் போய் நின்னா…. அவளுக்கு அசிங்கமாக தானே இருக்கும். எனக்கு தெரிஞ்சவர் டாக்டர் என்று சொன்னா பெருமையா இருக்கும். வக்கீல் என்றால் கூட பெருமையாக தான் இருக்கும். ஆனா சைக்கிள் கடையில் கரிபடிஞ்ச வேலைணு சொல்ல உறுத்தலா தானே இருக்கும்.”
“இது தெரியாம அவளுக்கு நல்லது செய்றதா நினைச்சிட்டு போய் நின்னு நின்னு அசிங்கப்பட வச்சி தான் அவளை இப்படி எல்லாம பேச… நானே வச்சிருக்கேன்.”
“இதுக்க மேல அவள் நிழல் பக்கம் கூட நாம ஒதுங்க கூடாது.”
என சங்கிலியின் மனது சபதம் எடுத்து கொண்டு தான் அங்கிருந்து கிளம்பி சென்றது.
ஒரு வாரம் இப்படியே போனது. ஒரு வாரத்திற்கு பின் தான் ரவி மும்பையில் லோடை இறக்கி விட்டு அங்கு உள்ள லோடோடு வந்து சேர்ந்திருந்தான். என்றும் போல் வந்தவுடனே சங்கிலியை பார்க்க தான் கிளம்பினான்.
கடைக்குள் சென்றதுமே ஜெகன் எல்லாம் சொல்லிவிட குழப்பத்தோடு தான் அவனை தேடி போனான். காரணம் ஜெகன் சொல்வது போல் இருக்கும் ஆள் அவன் இல்லை. அப்படியும் இவ்வளவு உடைந்து போயிருக்கானா எதுவோ நடந்திருக்கு…
என்பதை உணர்ந்தவன் சங்கிலியை தேடி அலைந்தான். கடைசியில் அவனை பந்தடிகளத்தில் கண்டுபிடித்தான்.
ஆரம்பத்தில் எவ்வளவோ மறுத்தும் ரவி விடுவதாக இல்லை. ஒரு மணி நேரமாய் சங்கிலி எதுவும் பேசாமல் தான் இருந்தான். அதன் பிறகு அவன் நச்சரிப்பு தாங்காமல் எல்லாவற்றையும் உழறி கொட்டி விட…
அவன் கொட்டிய வார்த்தையை மனதில் ஏற்ற ஏற்ற ரவியின் உள்ளம் நெருப்பாய் கொதித்தது. அதிலும் சங்கிலி நா தழுதழுக்க சொன்னதும் அவனின் வலி உணர்த்தவன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று விட …
அதன் பிறகு சங்கிலி சொன்ன எதுவுமே அவன் காதில் ஏறவில்லை. சங்கிலியை பிடித்து வண்டியில் உட்கார வைத்து கொண்டு வண்டியை நேரே பல்லவியின் இருப்பிடத்திற்கு ஒட விட்டான். அது அவனை போலவே வீறு கொண்ட புலி போல உறுமிக் கொண்டு சீறிப் பாய்ந்தது.
அத்தியாயம்தொடரும்…
Best Romantic Novel