வணக்கம் வாசகர்களே!
தோழிகள் முன்பு சங்கிலியை அசிங்கப்படுத்தும் பல்லவி. பல்லவியின் செயலால் நொறுக்கி போன சங்கிலி.
பல மணி நேர போராட்டத்திற்கு பின் கண் திறந்தான். அந்த ஆக்ஸிடென்ட் ஆன இளைஞன். சுற்றி நின்ற டாக்டர்கள உள்பட ஊரே சந்தோஷப்பட்டது. அதிலும் உறவுகள் வந்து பல்லவியின் கையை கட்டி கொள்ள பல்லவி நெஞ்சுருகி போனாள்.
எல்லாரும் போய் அவள் தனிமையாய் நின்று கொண்டிருந்த போது அருகில் வந்த அவள் தோழிகள்.
” யாருடி… அவன்….”
என்றதும் சட்டென நிமிர்ந்து பார்த்த பல்லவி…
“யாரை கேட்கிறா…”
“ரத்தம் கொடுக்கணும் ஒருத்தனை பிடிச்சி இழுத்துட்டு வந்தியே?…”
“……………..”
“என்ன மனுஷன்டி அவன். பொது இடத்துக்கு வரும் போது டீசன்டா வரணும்ணு கூட தெரியாதா?…”
“…………….”
“இப்படி ஒரு அழுக்கான டிரஸ்ல வந்திருந்தான். அதுல வேற நீ போய் அவன் கையை பிடிச்சி இழுத்துட்டு வாரா?. உனக்கு அருவருப்பா இல்லையா?…”
புனிதா சட்டென கேட்க… பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தவள் அமைதியாக நிற்க…
“இந்த காலத்துல போய் இப்படி நாகரீகம் தெரியாதவங்க கூட இருப்பாங்களா? தொழில் அதுவா இருக்கட்டும். அதுக்காக வெளியில வரும் போது எப்படி வரணும்ணு தெரியாதா?… நர்ஸ் கூட பக்கத்துல போக கூச்சப்பட்டாங்க..”
“அப்படினா ரத்தம் வேணாம்ணு அனுப்பி வச்சிருக்க வேண்டியது தானே?.”
பல்லவி வாயிலிருந்து சூடான வார்த்தை வர…
“ஆள் எப்படியிருந்தா என்ன?… அவனால தான் இன்று ஒரு உயிரே புழைச்சிது.”
சத்யா முந்தி கொண்டு சொல்ல..
“இல்ல சத்தியா… ரத்தம் கொடுத்து நல்ல காரியம் தான் பண்ணியிருக்கான். ஆனா ரத்தம் எடுத்து டெஸ்ட் பண்ணுறது வரை இது நமக்கு பயன்படும்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. எப்படியும் குடிச்சிருப்பான். இல்ல போதை பொருள் போட்டிருப்பான். வேஸ்டா தான் டெஸ்ட் பண்ணுறோம்னு நினைச்சேன். பார்த்தா ஒண்ணா நம்பர் பொறுக்கி போல இருந்தானா அதான் அப்படி ஒரு எண்ணம். நல்லவேளையா இன்று எதுவும் போடல போல… அடிப்பட்டவனுக்கு ஆயுசு கெட்டி. அதான் இப்படியான ஆள்கூட எந்த போதையும் இல்லாம நமக்கு கிடைச்சிருக்கான்.”.
புனிதா சொல்லி கொண்டே போக… கூடி நின்றவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒன்றாய் பேச ,,,கூட்டத்தில் எதுவும் பேசாமல் வெளி வந்தவள். தன் செல்லை எடுத்து செழியனை அழைக்க ஒரு மணி நேரத்தில் வந்து சேர்ந்தான் செழியன்.
அவனுக்காகவே காத்து நின்றவள் போல வெளி வந்த பல்லவி அவன் வண்டியின் பின்னால ஏறிக் கொண்டு…
“கடை வீதிக்க போகணும் செழியா ..கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் .”
என்றதும் அவனும் மறுபதில் பேசாமல் வண்டியை விட அடுத்த அரை மணி நேரத்தில் கொட்டாரம் ஜங்ஷனுக்கு வந்தவன் ஒரு டெக்ஸ்டைல்ஸ் முன் வந்த போது வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி கடைக்குள் போனாள். அவளை தொடர்ந்து வந்த செழியனோ…
” துணி எடுக்க வா போறா…”
“ம்…ம்…”
“நான் இங்க வெயிட் பண்ணட்டும்மா?…”
” இல்ல நீயும் வா…”
“லேடீஸ்க்கு எல்லாம் துணி எடுக்க என்னை கூப்பிடுறா. நம்மளால முடியாது.”
“நீ எடுக்க வேணாம். கூட வா…”
என்றவாறு அவள் முன்னே செல்ல, செழியனும் அவள் பின்னால் வந்தான். நேரே பல்லவி மென்ஸ்வேர் வர,
“என்ன பல்லவி இங்க வரா ?”
“சட்டையும் பேன்ட்டும் தான் எடுக்கணும்.”
“யாருக்கு…”
“ஒரு கண்டிராவி பிடிச்சது என் இமேஜையே கெடுக்குது. அதுக்கு கொடுக்க தான்.”
“நீ யாரை சொல்லுறா? …”
“சொல்றேன் . முதல்ல உன் அளவுக்கு ஒரு பத்து சட்டையும், ஐந்து பேன்ட்டும் எடு.”
“இவ்வளவா ?…”
“இதுக்க மேல அழுக்கு டிரஸோட வந்து என் மானத்தை வாங்குச்சு. அப்புறம் தெரியும். மனுஷனால் இருக்க முடியல…”
“நீ யாரை சொல்லுறா?…”
“உன் அண்ணன் ஒரு வேண்டாததை கூட்டிட்டு சுத்துறானே. அவனை தான் சொல்றேன்”
” சங்கிலியையா சொல்லுறா?…”
“அந்த விளங்காதவனை தான் சொல்றேன்…”
“அவனுக்கா நீ டிரஸ் எடுத்து கொடுக்குறா?”
” தலை விதி. அப்புறம் என்னை என்ன பண்ண சொல்லுறா?. விக்கி வேற நான் சொல்ல சொல்ல கேட்காம அவனை நாங்க தங்கி இருக்கிற இடத்துக்கு தினமும் வர சொல்லிட்டான். அவன் வேற அதே கரிபடிஞ்ச டிரஸோ ட வந்து தொலைக்கிறான் .எந்த இடம்னு அவனுக்கில்ல …எங்கனாலும் அதே நிலையில் வந்திடுறான். கூட உள்ளவங்க கிண்டல் அடிச்சி சாகடிக்கிறாங்க…”
சொன்னவள் வரிசையாக சட்டையை எடுத்து போட போட பிடித்தமானவற்றை எடுத்து பேக் பண்ண சொல்லி பணத்தை கொடுத்து விட்டு அந்த கேரி பேக்கை செழியன் கையில் கொடுத்து.
“இதை அவனுட்ட கொண்டு கொடுத்திடு. இனி டவுணுக்கு வந்தாலே இந்த டிரஸை போட்டுட்டு தான் வரணம்ணு சொல்லு.”
“வெளியில எங்காவது அந்த கரி படிஞ்ச டிரஸ்ல்ல பாத்தேன். அந்த இடத்துலயே கிழிச்சி போட்டுடுவேணு சொல்லு.. மானத்தை வாங்காம ஒழுங்கா தலை சிவிட்டு வர சொல்லு. எப்பவும் ஒரு அழுக்கு டிரஸ்ஸோட பறட்டை தலையோடவும் சுத்தறது. ஏண்டா இவன் இப்படி இருக்கான் மாறவே மாட்டானா?”
“……………..”
“காலையில் இருந்து நைட் வரை சம்பாதிச்சி தானே தொலைக்கிறான். அப்புறமும் ஏன் இப்படி திரிகிறான். சம்பாதிச்சி கூட்டி வச்சி போகும் போது கொண்டு போகவா போறான். வாழும்போது நாலு பேரை போல டீசன்டா வாழ்ந்து தொலைச்சா தான் என்ன?… அப்ப சின்ன பையன். இப்பவும் மரமண்டைக்கு அது உறைக்கலனா… நமக்கு தான் தெரிஞ்சவன்னு சொல்லவே கேவலமா இருக்கு.”
“………………”
“நீ நேரா இதை கொண்டு போய் அவனுட்ட கொடு. பழைய துணியை அத்தனையும் மாத்திட்டு இதை போட சொல்லு. சம்பாதிச்சு சம்பாதிச்சி கூட்டி வைக்காம நாலு பேரை பார்த்து டீசன்டா நடக்க சொல்லு.”
என்றவள் அவன் கையில் மொத்த துணியையும் வைத்து விட்டு விறுவிறுவென வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஏறி கொண்டு,
“நீ கிளம்பு செழியா?”
என சொல்லியவாறே அவளும் கிளம்பி போனாள்.அங்கிருந்து நேரே சங்கிலியின் வீட்டிற்கு வந்தவன் ரவி கையில் மாட்ட ,செழியன்… பல்லவி சொன்ன அத்தனையும் சொல்லி விட்டு பார்சலை கொடுக்க… கடுப்பின் உச்சத்திற்கு சென்ற அவன் பல்லவி கொடுத்த துணியை வீசி வெளியில் எறிந்தான்.
“என்ன நினைச்சிட்டிருக்கா? அவா பிச்சையா போடுறா.? என்ன இவனோட கறி துணியில் அவனை பார்க்க கூச்சமா இருக்கா. இந்த கறி துணியால தான் அவா வெள்ளை கோட்டை மாட்டிட்டு கெத்தா திரியுறானு சொல்லு. அவன் மொத்த காசுலயும் வாழ்ந்துட்டு, கூட உள்ளவளுங்க சொல்லுறாங்கணு அவா இவனையா அசிங்கப்படுத்துறா?…”
“என்ன சொன்னா? என்ன சொன்னா.?.. போகும் போது கொண்டு போகவா கூட்டி வச்சிருக்காணா . அப்படி வச்சதை மொத்தமா எடுத்து டாக்டர் ஆகிட்டு அவனையா கேவலமா பேசுறா?… நாக்கு அழுகி போயிடும்.. இவன் அவளுக்காக என்னவெல்லாம் பண்ணியிருக்கான் தெரியுமா?”
சொல்லும் போதே ரவிக்கு வார்த்தை பிசுறடிக்க..
“ரவி… என்னடா உழறிட்டிருக்கா?… விடுடா…”
“நீ கிளம்பு செழியா…”
“இருடா…. பேசாம அவா கொடுத்த பொதியை தூக்கிட்டு போயிடு . போய் அவள் முகத்துல விட்டெறிஞ்சி இங்க யாரும் துணி வாங்க வக்கில்லாம இல்ல. நாங்க என்ன டிரஸை போடணும் என்ன டிரஸை போட கூடாதுணு எங்களுக்கு தெரியும். பொறுக்க முடியலனா மீன் சாப்பிடாம வாயை அடக்கிட்டு இருக்க சொல்லு.”
“அப்படி அடக்கினா நாங்க எதுக்கு அவா முன்னால போறோம். இல்லனா சும்மா இருக்கிற அவனை போன் பண்ணி கூப்பிடாம இருக்க சொல்லு. கூப்பிட்டு தேவைக்கு பயன் படுத்திட்டு என் நண்பனை அசிங்கபடுத்தவா செய்யுறா?.”
“எதுவும் எமர்ஜென்ஸியா இருக்கும்ணு பயந்து அடிச்சிட்டு ஓடுனான் பாரு அவனை சொல்லணும். இந்த நவ நாகரிக நங்கை எல்லாம் இப்படி தாண்டா பேசுவாளுங்க. இது தெரியாம அவளுங்க பின்னால போறது தப்புடாணு தலையால அடிச்சிகிட்டேன். கேட்டானா?… கேட்கலியே… கூப்பிட்டுட்டாளாம். போயாகணுமாம். போனால… உனக்கு… உனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். சரியா வச்சி செஞ்சிட்டால…”
ரவி உணர்வின் பிடியில் கத்தி கொண்டிருக்க, அது எதுவும் பாதிக்காதவன் போல எழுந்து வந்த சங்கிலி விசிறி எறியப்பட்ட டிரஸ் ஒவ்வொன்தையும் எடுக்க தொடங்கினான்.
அவன் எடுக்க எடுக்க ஆச்சரியத்தில் விழி விரிய பார்த்தவன் அவன் அருகில் வந்து
“என்னடா பண்ணுறா? “
” டிரஸ் அழுக்காகிடும்டா…”
” அதுக்கு?…”
“முதல் முறையா பல்லவி எனக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்து விட்டிருக்கா. அதை திரும்ப கொடுக்கிறது தப்பில்ல… அப்போ நான் வாங்கி கொடுத்தப்போது அவா தூக்கி ஐஸ்வரியாளுட்ட கொடுத்த போது எனக்கு எம்புட்டு வலிச்சிது. இப்ப நான் அதே தப்ப பண்ணலாமா?”
“டேய் டேய்… அன்று நீ காதலோட ஆசையோட கொடுத்தடா… ஆனா இன்று இவா வெறுப்போட உன்னை அசிங்கப்படுத்த கொடுத்து விட்டிருக்காடா …”
“எது எப்படியோ… இந்த டிரஸை எனக்காக பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி தானே வாங்கியிருப்பா… எனக்கு எல்லாம் யார்ட்டா இப்படி எடுத்து தருவா. பல்லவி தானே தாரா…”
“அதுக்கு? …”
“இருக்கட்டும்டா. பல்லவி நியாபகமா இது மட்டுமாவது என் கூட இருக்கட்டுமே “
கண்ணில் ஏக்கம், நெஞ்சில் ஆசையும், முகத்தில் சிரிப்புமாக அவன் கேட்க…
அதற்கு மேல் ரவியால் கூட எதுவும் பேச முடியாமல் போக, வாயை பிளந்து நின்றான். அதே நேரம் பல்லவி கொடுத்த சட்டை ஒவ்வொன்றையும் பிரித்து ஆசையாக பார்த்தான். திரும்ப திரும்ப பார்த்தான்.
அவன் முகத்தில் தெரிந்த பரவசமே பல்லவி மேல் சங்கிலிக்கு உள்ள உள்ளார்ந்த அன்பை காட்ட…
“ஒரு நாள் வருந்தி அழ தான் போறா?. ஆனா அதை என்னால தான் தாங்க முடியாது.”
ரவி மனதுள் சொல்லி கொண்டாலும் அவள் முகத்தில் கண்ட மலர்ச்சிக்கு பின் வாய் திறக்கவே இல்லை.
சங்கிலியோ… உடனே குளித்து பிரஸாகி பல்லவி கொடுத்த டிரஸை போட்டு பார்க்க தொடங்கினான். அது அத்தனையும் அவனுக்காகவே அளவெடுத்து தைத்தது போல அவ்வளவு சரியாக இருந்தது. ஒவ்வொரு டிரஸாக போட்டவன் வெளியில் வந்து ஜெகனிடமும் ரவியிடமும் காட்ட …. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்களே தவிர… எதுவும் பேசவில்லை.
இது நடந்து ஒரு வாரம் சென்றிருக்கும் பல்லவி கேம்பு முடிந்து ஹாஸ்பிட்டலுக்கு சென்று விட்டாள் அவர்கள் மறுபடியும் கிளம்பி டவுணுக்கு சென்று விட்டார்கள் என தெரிந்ததும். சங்கிலி காலையிலேயே மீன் பிடித்து நல்ல மீனில் என்றும் போல் மூன்றை எடுத்து பையில் போட்டு கொண்டு, பல்லவி வாங்கி கொடுத்த டிரஸை போட்டு கொண்டு மிக மிக சந்தோஷத்தோடு ரவியோடு என்றும் போல் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தான்.
கேம்பு முடிந்து வந்ததால் ஒரு நாள் லீவு கொடுத்திருக்க, அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். உள்ளே வந்தவன் ஹாலிஸ் பெல்லை அடிக்க… ஐந்து நிமிடத்திற்கு பின் கதவுத் திறக்கப்பட்டது.
சங்கிலி தன் டிரஸை ஒரு முறை சரிபார்த்து கொண்டு பல்லவி தான் வருவாள் என ஆசையோடும், ஏக்கத்தோடும் காத்திருந்த நேரம்… கதவை திறந்ததோ வேறு ஒரு பெண்.
பொசுக்கென்று சங்கிலியின் முகம் வாடி விட…
“மகாராணி வெளியில் வர மாட்டாங்க. எப்படியும் இந்த நேரம் வந்திருக்கிறது நீ தாணு தெரியும். ஆனாலும் வராளா பாரு. தலையில் இருக்கிற கிரீடம் இறங்கிடும்ல்ல…”
என்று ரவி குதிக்க… அவனை அடக்கியவன்
“விடுடா. இப்ப அவா வரலணா என்ன?. இந்த பொண்ணுட்ட கொடுத்துட்டு போவோம்.”
என முன் வந்து மீன் பொதியை நீட்ட… வந்தவளோ அவனை உச்சம் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்தாள்.
“நீ… நீங்க… அன்று… அன்று… ரத்தம்”
அவள் திணற…
” ஆமாங்க …..”
சங்கிலியும் நாணத்தோடு சிரிக்க…
“கறிபடிஞ்ச துணி…”
அவள் வார்த்தை வராமல் பிசிறடிக்க…
“அது ஏதோ அவசரமா கூப்பிட்டதும். வேலை செய்த கையோட எதுவும் பாக்காம…”
சங்கிலி முடிக்காமல் இடையில் நிறுத்த…
“அப்படினா நீங்க தான் சங்கிலியா?…”
“ஆமாங்க … “
“நீங்க கொண்டு வருகிற மீனை தான் நாங்க எல்லாம் புகழ்ந்து பேசி சாப்பிடுறோமா?”
” ஆமாங்க…”
“மீன்காரன்னு சொன்னது எப்படியோ நினைச்சேன். நீங்க என்னங்க இவ்வளவு எங்கா.?.. ஸ்மாட்டா இருக்கீங்க…”
என்றதும் சங்கிலி நெளிய…
“போய் உங்க பல்லவி மேடத்துட்ட சொல்லுங்க… சங்கிலியோட ஸ்மாட் பற்றி…”
ரவி கடுப்பாக சொல்லியவாறு அவனை இழுத்து கொண்டு கிளம்ப .சங்கிலியின் பார்வை பின்னாலே சென்றது. ஒரு முறை… ஒரு முறை வெளியில் வந்து பார்த்து விட மாட்டாளாணு. ஆனால் அவன் ஆசையை நிறைவேற்ற அவள் வரவே இல்லை. இப்படியே இரண்டு வாரம் போனது. இந்த இரண்டு வாரத்தில் அவள் ஒரு முறை அவள் வாங்கி கொடுத்த உடையில் தன்னை பார்த்து விட வேண்டும் என்றே சங்கிலி அவர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய பின் மீனோடு வந்தான். அப்படியும் ஒரு நாளும் பல்லவியை பார்க்க முடியவில்லை.
அன்று அவள் எடுத்து கொடுத்த கடைசி சட்டையை அணிந்து கொண்டு புறப்பட்டான்.மனசு சேர்ந்து போய் விட்டது. இன்று மட்டுமாவது அவள் தன் முன் வந்து விட வேண்டும் என மனதில் வேண்டி கொண்டாள். அன்று தான் பட்டு பாவாடை தாவணியை எடுத்து கொடுத்து விட்டு கட்டி கொண்டு வர மாட்டாளா என காவல் இருந்தது மன அலையில் வந்தது. அன்று எனக்குள்ள காதல் இருந்துச்சு. காத்து கிடந்தேன். அந்த புள்ளைக்கு தான் அது இல்லையே அசிங்கபடுத்துகிறேன் என எடுத்து கொடுத்து விட்டதை ஆசையாக காத்திருக்கும் என நான் எதிர்பார்ப்பது தப்பில்லையா? என தன்னையே சமாதானப்படுத்தி கொண்டே அன்றும் கிளம்பி சென்றான்.
உள்ளே செல்லும் போதே இன்று வாசல் திறந்தே இருந்தது. காலின்பெல்லை அழுத்தியவுடனே பத்து பேர் சேர்ந்து குதூகலத்தோடு வெளியே வந்தனர். அதில் வேறு… யார் அவன் கையில் இருந்து மீனை வாங்குவது என அவர்களுக்குள் போட்டா போட்டி…
முண்டி அடித்து கடைசியில் அவன் கையில் இருந்து மீனை வாங்கியது சுமதி தான். சுமதியின் கையில் மீன் சென்றதுமே மொத்த கூட்டமும் அவனை சுற்றி சூழ்ந்து கொள்ள, ஆளுக்கு ஒரு கேள்வியாக கேட்கத் தொடங்கினர். பெண்கள் கூட்டத்திற்குள் சங்கிலி திணறிக் கொண்டிருக்கும். போது கோவிலுக்கு போய் விட்டு ஆட்டோவில் வந்து இறங்கினர். புனிதாவும் பல்லவியும் கூட்டத்தை பார்த்ததுமே இருவருக்கும் புரிந்து விட்டது. நேற்றே இந்த சண்டை ஆரம்பித்து விட்டது.
எப்பவும் அவனை மட்டம் தட்டி பேசி வந்த பல்லவியின் தோழிகள் கூட்டம் இந்த ஆடை அலங்காரத்திற்கு பின் அவனோடு நட்பு கொள்ள போட்டா போட்டி போட தொடங்கியது.. நேற்று என் கையில மீனை தரும் போது சிரிச்சான் தெரியுமா? அவனுக்கு என்ன தான் பிடிக்கும் இப்படியான பேச்சு இப்போது கொஞ்ச நாளாவே அவள் ஹேங்கிற்குள் நடந்து கொண்டு தான் இருந்தது.
அதனால் தான் கூட்டத்திற்கு நடுவில் மாட்டி கொண்டு நின்ற சங்கிலியை கண்டதும் என்ன நடந்திருக்கும் என புரிந்து விட இருவரும் சிரித்து கொண்டே அவர்கள் அருகில் வர…
இருவரையும் கண்ட சங்கிலி…
திணறி கொண்டு வெளியேற முயல… பல்லவியை பார்த்து கொண்டே ரவியோடு நடந்தவனை சட்டென . பிடித்து இழுத்த புனிதா… தன் கையில் இருந்த திருநீரை எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட,
சங்கிலி திருதிருவெள முழித்தான். புனிதாவோ ஸ்மாட் போன் இப்ப தான் ரெம்ப ஸ்மாட்டா இருக்கார். என சொல்லி கொண்டு அவன் கன்னத்தில் அடிக்க சங்கிலி கதி கலங்கி தான் போனான்.
ஆனாலும், பல்லவி மேல் வைத்த பார்வையை திருப்பாமல் அவளிலே நிற்க… அவளோ எதுவும் நடவாவது. போல உள்ளே சென்று விட…
கலங்கி நின்ற அவனை ரவி தான் இழுத்து கொண்டு வந்தான். ஆனா வீடு வந்து சேரவில்லை பல்லவியிடமிருந்து அழைப்பு வந்தது.
“சங்கிலிட்ட போணை கொடு…”
“எதுக்கு?… உன் பிரண்டு பண்ணுனது போதாதா, நீ வேற திட்டணுமா? பொண்ணுங்களா. அதுங்க பேய்களா? ஒரு பையனுட்ட எப்படி நடந்துக்கணும்ணு கூட தெரியாதா? இப்படியா மேல வந்து விழுறது. இதுல வேற டாக்டர்களாம். விளங்கிடும்.”
ரவி பொரிந்து தள்ள…
” போணை சங்கிலிட்ட கொடுணு சொன்னேன்…”
“எது சொல்லுறதா இருந்தாலும், எனட்ட சொல்லு. இனி அவன் மீன் கொண்டு அங்க வர மாட்டான் .நாகரீகம் தெரியாதவங்க எல்லாம் நாகரீக மங்கையாம். நல்ல பையனையும் எப்படி ஆக்கிட்டா.நீயும் இதுகளோட சேர்ந்து…
“எப்படி ஆகிட்டேன்.'”
“ம்… கண்ட கண்டவன் கூட கூத்தடிச்சிட்டு”
ரவி வெறுப்பில் வார்த்தையை உமிழ …
“வார்த்தையை அளந்து பேசு ரவி. அவங்க ஜாலிக்கு என்னமோ. பண்ணுனா. அதுக்கு என்ன அசிங்கமா பேசாத…”
“அப்புறம் அவன் தான் உன்னை விட்டு நீங்கிட்டான்ல்ல. அப்புறமும் எதுக்கு வர வச்சி வச்சி அசிங்கப்படுத்துறேன்.”
“அப்புறம். ஒரு நாளும் இல்லாம போண் பண்ணி இருக்கானேணு பதறி அடிச்சிட்டு செய்துட்டிருந்த வேலையை பாதியில் போட்டுட்டு ஓடி வந்தவனை கஞ்சிக்கு செத்தவன்னு நினைச்சிட்டு டிரஸ் எடுத்து பிச்சை போடுறா…”
“அப்படினு அவன் உனட்ட சொன்னானா?”
“அவன் எதுக்கு சொல்லணும் எனக்கு தெரியாதா?.”
“நல்லா தெரிஞ்சிகிட்டா. தெரிஞ்ச வரை உன்னோட வச்சிக்க. ஆமா அப்படி தான் டிரஸ் எடுத்து கொடுத்தேன். ரெம்ப ரோசகாரணா போடாம விட்டு எறிய வேண்டியது தானே. அதை விட்டுட்டு என் டிரஸை போட்டுட்டு உன்னை பேச விட்டு வேடிக்கையா பாக்குறான்.”
“அவன் சொல்லி பேசல நீ பண்ணுறதை பார்த்து பொறுக்க முடியாம நான் தான் பேசுறேன்”
“டீசன்டா வந்தா நான் எதுக்கு டிரஸ் எடுத்து கொடுக்கிறேன். எனக்கென்ன வேண்டுதலா வேணாம். அவன் இனி இங்க மீன் கொண்டு வர வேணாம். என்னால யாரும் அவமானப் பட வேணாம். நானும் யாருக்காகவும் டிரஸ் எடுத்து கொடுக்க வேணாம். அதை சொல்ல தான் போண் பண்ணுனேன். சொல்லிடு.”
என்றவாறு பல்லவி போணை வைத்து விட போணை யே பார்த்தவாறு நின்ற ரவியிடம்.
“ஏண்டா…ஏன் அப்படி பேசுனா. அந்த புள்ளை என்ன சொல்லுச்சு…”
“ம்… உனக்கு நல்லதை தான் சொல்லுச்சு. இனி அந்த திமிர் பிடிச்ச கூட்டத்துக்கு நீ மீன் கொண்டு போக வேணாமாம்.”
ரவி கோபத்தின் உச்சத்தில் சொல்ல…
“என்னது?…”
சங்கிலி அதிர்வோடு கேட்க…
“விட்டு தள்ளுடா. அவளுங்க வாங்காட்டா நமக்கு என்ன மீன் விக்காமலா போக போகுது. எல்லாம் விற்க தான் போகுது. டவுணுக்கு கொண்டு போறது நமக்கு தான் அலைச்சல்”
ரவி தன் ஆதங்கத்தை சொல்லி கொண்டு போக சங்கிலியின் முகம் சுருங்க தொடங்கியது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel