National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை
தேசிய கொடி வானில் வசந்தமாய் பறக்குது அழகு கொடி,வாசனை மலர்களை தூவும் அன்பு கொடி… வேற்றுமை மனிதர்கள் கலந்த நாட்டில்,ஒற்றுமை சொல்லி மகிழும் கொடி… மண்ணில் வளத்தை சுட்டும் கொடி,கண்ணில் கனவை சுமக்கும் கொடி… அவமானத்தை துடைத்தெறிந்த கொடி,சமாதானத்தை நம்மில் விதைத்த கொடி… மதங்கள் பல மண்டி கிடப்பினும்,மனிதர்கள் நாமென உணர்த்தும் கொடி… மங்கள ஒசை முழங்கி,மக்களாட்சிக்கு வழிகோலிய கொடி… கொடி காத்த குமரன் பிடித்த கொடி,குருதி சிந்தி வாங்கி தந்த கொடி… காந்தி மகான் கரத்தில் […]