Jesus Kavithai-2
விடியல் தந்த தேவனுக்காய்
விருப்பத்தோடு மாறிடுவேன்
மடியில் தவழ்ந்த மாதவனுக்காய்
மனசை புதுசா மாத்திடுவேன் …
உயிரை கொடுத்த நாதனுக்கு
உலகம் முழுதும் பணி செய்வேன்
உத்தமர் அவர் வழி நடந்து
உமக்காய் என்றும் பெருமை செய்வேன் …
பட்டபாடு போதவில்லை
பாரத்தை அவர் பாதம் வைக்கிறேன்
அவரை விடவா பெரும்பாடு பட்டுவிட்டோமென
என்னை நானே கேட்கிறேன்…
உள்ள கறையை அவரோட
இரத்தத்தால நனைக்கிறேன்
உண்மை அன்பை என்றும்
எல்லார் மேலும் விதைக்கிறேன்…
பார் முழுதும் அவர்
புகழை பரப்பிடுவேன்
பாசத்தாலே என்றும்
எல்லோரையும் நிரப்பிடுவேன்…
விடியல் தந்த தேவனுக்காய்
விருப்பத்தோடு மாறிடுவேன்
மடியில் தவழ்ந்த மாதவனுக்காய்
மனசை புதுசா மாத்திடுவேன்…


Christmas kavithai in Tamil, Christmas kavithaigal, God Kavithai, god kavithai in tamil, jesus kavithai, jesus kavithai in tamil, Jesus Kavithai tamil, Jesus Kavithaigal in tamil. Jesus birth Kavithai in Tamil, kavithai about jesus in tamil, kiristhu pirapu kavithai, Kiristhu prappu Kavithai in Tamil, tamil kavithai, இயேசு கிறிஸ்து பிறப்பு கவிதை, இயேசு பற்றிய கவிதை, இயேசுவின் அன்பு கவிதை, ஒளிவிழா கவிதைகள், கிறிஸ்து பிறப்பு கவிதை, கிறிஸ்து பிறப்பு கவிதைகள், கிறிஸ்மஸ் கவிதை தமிழில், பாலன் பிறப்பு கவிதை, விடியல் தந்த கிறிஸ்து பிறப்பு கவிதை

