வணக்கம் வாசகர்களே!
வேலை தேடி அலையும் ஒவியா?
வீட்டில் மொத்தமாக முடங்கும் திலகா? பட்டாம்பூச்சாய் இதுவரை பறந்து வந்த இருவரின் வாழ்வில் இனி நடக்க போவது என்ன?
தன் முன் விசிட்டிங் கார்டை நீட்டி கொண்டு நின்ற சரசு அக்காவை கண்டதும் பதட்டத்தோடு எழுந்து நின்றாள் ஒவியா. .
அவளின் படபடக்கும் மான் விழியையும், காரணமில்லாமல் துடிக்கும் உதட்டையும் ஒரு நொடி புன்னகையோடு பார்த்தவள் உதட்டில் மர்ம சிரிப்பை விதைத்தவாறு,
“இந்தா பிடி…”
என அவள் கைபிடித்து அந்த கார்ட்டை வைக்க,
புரியாமல் அந்த கார்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தாள் ஓவியா. அவளின் குழப்பமான பார்வையை பார்த்த சரசு, தன் கண்ணால் கார்ட்டின் மேல் சைகை செய்ய இப்போது ஒவியாவின் விழி கார்டில் பதிந்திருந்தது.
“முகுந்தன்.”
என்ற பெயரை கண்டதும் குழப்பமாக ஏறிட்டாள். ஒரு முறை அந்த பெயரை அவள் உதடு உச்சரித்த போதே,
“ உன்னோட மலையில இருந்து ஒரு தம்பியை காப்பாத்தி கூட்டிட்டு வந்தாங்களே, அந்த தம்பியோட B.A கொடுத்தாரு. உனட்ட கொடுக்க சொன்னாரு. அவங்க கிளம்பி போகிறதுக்கு முன்னால தான் கொடுத்தாரு. ஆனா நான் மறந்துட்டேன். வேலை முடிஞ்சி இன்று காலையில வீட்டுக்கு போன பிறகு தான் நியாபகம் வந்துச்சு. அதான் டியூட்டிக்கு உள்ளால நுழைஞ்சதும் முதல் வேலையா உனட்ட கொண்டு சேர்த்துட்டு தான் வேற வேலையே பார்க்கணும்னு உள்ளால வந்துட்டேன். இப்போ கொடுத்துட்டேன். அப்போ நான் கிளம்புறேன்.”
அவள் கிளம்பி போய் விட்டாள். ஆனால் அவள் ஏற்படுத்தி விட்டு சென்ற அதிர்வு ஒரு மணி நேரம் கழிந்த பிறகும் அவளில் இருந்து மறையவில்லை. ஓவியாவின் பார்வை அந்த கார்டின் மேல் பொறிக்கப்பட்டிருந்த முகுந்தன் என்ற பெயரை விட்டு அகலவில்லை. முகுந்தன். இதுதான் அவரோட பெயரா? என்று எண்ணுகையிலே உள்ளம் சில்லிட்டது. ஆழ்ந்து பார்த்தாள். உதடு பூட்டி கிடந்தாலும் அதன் பிறகு உள்ளம் ஏனோ இந்த நொடி வரை அந்த பெயரை ஜெபித்து கொண்டு தான் இருந்தது. ஏனோ அந்த சிலிர்ப்பில் இருந்து வெளிவர விரும்பவில்லை. கண்மூடியே கிடந்தாள்.
நேரம் ஆக ஆக மனதின் அடி ஆழத்தில் ஒரு சந்தேகம். ஒரு கலக்கம். காரணம் தெரியாத ஒரு குழப்பம். அந்த குழப்பத்தோடே மறுபடியும் ஒரு முறை அந்த கார்டை பார்த்தாள்.
“எதற்கு இந்த கார்டை எனக்கு கொடுக்க சொல்லணும்.”
சட்டென உதிர்த்த எண்ணங்களின் வலிமையை தாங்க முடியாமல் மறுபடியும் அந்த கார்ட்டை எடுத்து பார்த்தாள்.
முகுந்தன் M.B.A சக்கரவர்த்தி எண்டர்பிரைஸ்ஸஸ், சென்னை Phone No.9932645800 என இருந்தது.
“அவர் அட்ரஸையும் போன் நம்பரையும் மாறி மாறி பார்த்தவள்.
எதற்காக கொடுத்தார். அவர் அட்ரஸையும் போன் நம்பரையும் எதற்காக தனக்கு தர சொன்னார். அன்று முழுதும் அந்த குழப்பமே மேலோங்கி நின்றது. ஆனாலும் யாரிடமும் இது பற்றி பேசவில்லை. அதை ஒரு பொக்கிஷம் போல உள்ளத்தில் பாதுகாத்தாள். நினைவு முழுதும் அவனிலே நின்றது. தன் எண்ணம் அதிகபடி என்றாலும் மனது ஏனோ அதை ஏற்று கொள்ள மறுத்தது.
அன்று மட்டுமல்ல ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து வீடு வந்தும் அந்த பசுமையான எண்ணம் அவளிலே தான் இருந்தது. அது யாரிடமும் பகிர்ந்தளிக்கப்படாததால் என்னவோ இன்று வரை உயிர்ப்போடவே இருந்தது.
கனவு காண்பதும் கற்பனை வடிப்பதுமாக இருந்தாலும் ஏனோ அந்த போனை இன்னுமே பயன்படுத்தி அவனை நெருங்க அவள் நினைக்கவில்லை. மனம் முழுவதும் ஆசையும் தாபமுமாய் இருந்தாலும் கூடவே தயக்கமும், தடுமாற்றமும் அவளுள் இருந்தது. இதற்கு மேல் அவனிடம் பேசாமல் தன்னால் இருக்க முடியாது என்று தோன்றவே மனதை திலகாவிடம் திறந்து விடும் முடிவில் அவள் வீட்டிற்கு வந்திருந்தாள்.
பல நாளுக்கு பின் தன் முன் முகம் மலர வந்து அமர்ந்திருந்த தோழியை வினோதமாக பார்த்தாள் திலகா. அவள் தன்னை கண்டு கொள்ள கூடாது என்ற நிலையில் பெட்ஷீட்டால் தன்னை மூடி மொத்தமாய் தன் முகத்தை மாற்றி கொண்டு கலகலப்போடு அவளை பார்த்தாள். சற்று முன் ஒருவனால் உண்டாகி இருந்த குழப்பமும் வலியையும் கூட நொடியில் அழித்து விட்டு புது பொலிவோடு அவளை பார்த்தாள்.
ஏதோ ஒரு உலகில் பவனி வருவதாலோ என்னவோ ஓவியா இவள் நிலையை இன்னுமே அறிந்து கொள்ளவில்லை.
கைவிரலால் கட்டிலில் கோலம் போட்டவாறு புன்சிரிப்போடு தலை கவிழ்ந்தே அமர்ந்திருந்தாள் ஓவியா. அவளை ஒரு நொடி பார்த்தவள் சிரித்த முகத்தோடு,
“என்னம்மா… முகம் பூவா சிவந்து கிடக்குது. அப்படி யார் கொண்டு வந்து உன் முகத்துல இப்படி குங்குமத்தை கொட்டியது.”
என தன்னை காட்டி கொள்ள கூடாது என்றே பேச்சை கலகலப்பாக தொடங்க,
சும்மா இருடி…
என மென்குரலில் சொல்லி விட்டு வெட்கத்தில் நெளிந்தாள் ஓவியா. இப்போது அவள் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை.
“ஐயோடா… என்னோட ஓவியா புள்ளைக்கு வெட்கப்பட கூட தெரியுமா? ஏய்… யார்டி அது?…”
கண்சிமிட்டி கேட்டவளின் கன்னத்தில் செல்ல அடி வைத்தவள் எழுந்து கட்டிலின் பின் வந்து அவள் கழுத்து வளைவில் தொங்கியவாறு, மென் நகைப்போடு,
“உதைப்பட போறா? சந்தோஷமா இருந்தா இப்படி நகைக்க தான் செய்வாங்க.”
என்றாள் தன்னை காட்டிக் கொள்ளாமல்,
“இல்லயே… ஒவியா முகத்துல புது வெள்ளம் தெரியுதே. உண்மையை சொல்லுடி. அந்த இருட்டு தேசத்துல எதுவும் இனாமா கொடுத்துட்டாரா என்ன?”
“அடி கழுதை. என்ன பேச்சு பேசுறா . உனக்கு வெட்கமாவே இல்லயா?”
“அதை தான் முகம் முழுசும் நீ… தேக்கி வச்சிருக்கிறியே. அது போதாது. உண்மையை சொல்லு. அந்த போக்கிரி தானே.”
என கண்ணடித்து சிரிக்க,
“எந்த போக்கிரி,
“ம்… வந்த முதல் நாளே முட்டிட்டு நின்னானே அவன் தானே.”
“சீ… கழுதை. அவரை போய் போக்கிரினு சொல்லுறா?”
“ஓ… அவராமே? உங்களின் நெடுமரம் எப்போ அவர் ஆனாரு. அந்த இடிபாடுக்குள்ளாலயா? இல்ல அதுக்கு முன்னாலயா?
என்றவள் அவள் முகம் பார்த்து விழி அசைக்க, இவள் பொங்கும் சிரிப்போடு தலையை குனிந்து கொண்டாள்.
“எனக்கு தெரியும். உங்க மோதல் அப்போவே நினைச்சேன். இதுல தான் முடியும்னு. ஆமா என்ன கொடுத்து உன்னை மயக்குனாரு…”
தோழி வாரிக் கொண்டே போக, முகம் சிவந்தவள்,
“கொஞ்சம் வாயை முடுறியா? உன் கற்பனை ஒட்டத்தை கொஞ்சம் ஸ்டாப் பண்ணி வை. அப்படி அந்த சிடுமூஞ்சி எதுவும் தரல. விடாம அந்த இடிபாடுக்குள்ளாலயும் சிடுசிடுத்துட்டே தான் இருந்துச்சு.”
“அங்கேயுமா?”
“நாயை குளிப்பாடி கொண்டு நடுவீட்டுல விட்டாலும் அதோட குணம் குப்பைமேட்டை தேடி ஒடுறது தான். இதை கொண்டு தேவலோகத்துல வச்சால இதோட குணம் சிடுமூஞ்சி சித்தப்பா தான். மூஞ்சியை பார்க்கணுமே உர்ணு. நானா? நானா அதை கட்டிசி இழுத்துட்டு மேஜைக்கு அடியில போய் பதுங்க சொன்னேன்.”
என்றவளை விழி உயர்த்தி பார்த்த திலகா, நம்ப முடியாமல் குறுகுறுப்போடு அவளை நோக்கி,
“என்னடி சொல்லுறா? கட்டி புடிச்சானா?”
அவள் கேட்ட தோனியில் நாவை கடித்தவள்,
“கட்டி புடிச்சாண்னா… கட்டி பிடிக்கிறது இல்லை. என் கையை கட்டி புடிக்கிறது.”
சட்டென மாற்றி பேசி, அவளின் படபட விழி அசைவை பார்த்தவன்,
“என்னடி சப்புணு இப்படி சொல்லி போட்டா.”
“ ஏய்… சும்மா… இரு. கதையை சொன்னா அதை கேளு.”
“சொல்லு சொல்லு…”
“அந்த சின்ன மேஜைக்குள்ள நானும் அவனும்…”
மறுபடியும் அவள் தொடங்க,
திலகாவின் ஆர்வமான அதிர்ச்சியான முகபாவத்தை பார்த்தவள் ஒரு நொடி நிறுத்தி, இது சரியில்ல…
என முனங்கி கொண்டு,
“உசுரை புடிச்சிட்டு அந்த இருட்டுல தப்பிக்க வழியில்லாம அல்லாடிட்டிருக்கோம். அங்க கூட நிம்மதியா இருக்க விடாம எரிஞ்சி எரிஞ்சி விழுது.”
சொல்ல நினைத்ததை அனைத்தும் தன் நெஞ்சில் அமுக்கி கொண்டு எதையோ சொல்ல…
“இல்லயே… முகத்தை பார்த்தா அப்படி தெரியலியே…”
“எப்படி தெரியல…”
என்றவள் அவள் கன்னத்தை கிள்ளியவாறு அவள் கால்மேல் கிடந்த பெட்ஷீட்டை உருவிக் கொண்டோட , அதிர்ந்து விழித்தாள் திலகா.
எப்படியும் தன் முதுகில் சாத்த எழுந்து ஓடி வருவாள் என நினைத்தவள், அப்படி எதுவும் செய்யாமல் கட்டிலில் அப்படியே அதிர்ந்து இருக்க கண்டதும் நின்று திரும்பிய அவளின் விழி, அப்படி விரிந்து பின் அதிர்ந்து கடைசியில் உடைந்து போய் அதிலே அவளை உட்கார வைத்து விட்டது.
உடைந்து உட்கார்ந்து விட்டவளை தேற்ற வார்த்தையற்று திலகா பாவமாக அவளை பார்த்தாள். திலகாவின் முகத்திலே நிலைகுத்தி நின்ற ஓவியாவின் விழியில் இருந்து கங்கையாறு ஒன்று பெருக்கெடுத்து ஒடி வந்தது. குலுங்கி குலுங்கி அழுதவளை பார்க்க திராணியின்றி,
“ஏய்… ஏய்…அழாதடி…”
குரல் கம்ம திலகா சொல்லியும், அழுகையை அடக்க முடியாமல் குரல் எடுத்து அழுதாள்.
“யேய்… மனசுக்கு கஷ்டமா இருக்கு அழாதடி.”
“பாவி. பாவி, எவ்வளவு பெரிய விசயத்தை எனட்ட இருந்து மறைச்சிருக்கா. ஐயோ… கடவுளே… இது என்ன சோதனை. உனக்கு இரக்கமே இல்லையா? இப்படி தான் அவள் வாழ்க்கையை அடிப்பாயா? தலையில் அடித்து கொண்டு அழுதவளை அருகில் சென்று சமாதானப்படுத்த முடியாமல் தடுமாறி நின்றாள் திலகா. இதுவரை அந்த இடத்தை நிரப்பி இருந்த கிண்டலும் கேலி சிரிப்பும் மொத்தமாக போய் விட, ஒரு கனமான நொடிகளாக ஒவ்வொரு நொடியும் மாறத் தொடங்கியது..
துடித்து அழுதவள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ஒடி வந்து அவளை கட்டிக் கொண்டு குலுங்கினாள். தோளில் கிடந்த சின்ன குழந்தை போல் அழுதவளின் பின் முதுகை வருடியவள்,
“ஏய்… விடுடி… பிளீஸ் அழாத. ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இப்படி உடைஞ்சி போவானு தான் நானே இத்தனை நாள் சொல்லல…”
“எப்படி டீ எப்படி தாங்கிட்டா. என்னால முடியல. உயிர் வலி எடுக்குது… நீ… நீ… எப்படி? இவ்வளவு துக்கத்தை வச்சிட்டா, எனட்ட சிரிச்சி பேசுனா?”
“போதும். போதும் என்கிற அளவு நான் அழுது முடிச்சிட்டேன்டி.”
துக்கத்தை தன்னுள் அடக்கி கொண்டு அவள் அவளை சமாதானப்படுத்த, உன் எந்த சமாதானத்தையும் நான் ஏற்க மாட்டேன் என்பது போல அழுகையிலே கரைந்தாள் ஒவியா. அவளால் இதை ஏற்க முடியவில்லை. எப்படியான இழப்பு.
ஒடி போய் அறுத்து எறிந்த அவள் காலை தொட்டு பார்த்து கலங்கினாள். தாங்க முடியவில்லை. முகத்தில் அறைந்து கொண்டு அழுதவன் பின் அவள் மடியிலே முகம் புதைத்து விம்மினாள். திலகா எவ்வளவோ சொல்லி பார்த்தாள். அவள் இவளின் மடியில் இருந்து எழும்பவே இல்லை.
அழுது அழுது ஓய்ந்தவள் இதற்கு மேல் அழ கூட திராணியற்று போக, அவள் அருகிலே சுருண்டு கொண்டாள். எதற்காக அவளை தேடி வந்தாளோ அது இப்போது அவள் சிந்தனையிலே இல்லை. ஏன் பூரிப்பும் குதூகலமாய் அவனை சுமந்த நெஞ்சில் கூட அவன் நியாபகங்கள் இல்லை. அவன் வாழ்ந்த அத்தனை இடத்திலும் பாரம் ஒன்று ஏறி அமர்ந்து கொள்ள, அன்று வீட்டிற்கே செல்லவில்லை.
திலகா, ஓவியாவின் நட்பு தெரிந்ததாலும் வீட்டிலும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அன்று இரவு முழுதும் அவள் தூங்கவில்லை. இவள் அருகில் தான் கிடந்தாள். ஆனாலும் ஒற்றை வார்த்தை பேசவில்லை. திலகா அடிக்கடி தலையை தூக்கி தூக்கி பார்த்தாள். அவள் விழிகள் உருண்டு கொண்டிருந்ததே அவள் நிலையை சொல்லிற்று. ஆனாலும் அவளை இவள் தொந்தரவு செய்யவே இல்லை. இவளுக்கு ஒன்று என்றால் அவள் உடைந்து விடுவாள் என்பது அவளுக்கும் தெரியும் தானே.
அதனால் ஆறுதலாக அணைத்து கொண்டாளே தவிர, எதுவும் பேசவில்லை. இரவு போய் மறுநாள் விடியலும் வந்தது. அழுதழுது வீங்கிய முகத்தோடு தான் எழுந்தாள். எழுந்த நேரத்தில் இருந்து எந்த அழுகையும் இல்லை. பேச்சும் இல்லை. ஆனால் திலகாவுக்கான பணிவிடை எதையும் கோசலையை அவள் செய்ய விடவில்லை. எல்லாவற்றையும் அவளே செய்தாள். அவள் காலை கடன்களை முடிக்கும் தொட்டு, அவளை சாப்பிட வைத்து, குளிக்க வைத்து வேறு உடை மாற்ற வைத்து என எல்லாவற்றையும் அவளே செய்தாள்.
யாரும் இடையில் வரவில்லை. திலகாவும் மறுக்கவில்லை. அவள் உள்ளம் படும் பாடு தெரிந்ததால் அவளை அமைதியாகவே செய்யவிட்டாள். அவள் ஊட்டி விட்ட சாதத்தை கண்ணில் நீர் கோர்க்க வாங்கி கொண்டாள். கடைசியில் இரவு நெருங்கிய போது தான் கிளம்ப ரெடியானாள்.
ரெடியானவள் கண்ணில் தோழி ஆசையாக விளையாடும் வாலிபால் பந்து இருக்க கண்டதும், கண்ணில் நீர் கோர்க்க அதை கையில் எடுத்தாள். எடுத்தவள் கண் நடுங்கிற்று. வாலிபால் யூனிபாமில் காலில் சூ போட்டு கொண்டு அவள் அடித்து விளையாடும் அழகையும், இவளின் ஒவ்வொரு அசைவுக்கும் கிரவுண்டே ஆர்ட்பரிக்கும் தோரணையும் ஒரு முறை நினைத்து பார்த்த போது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அந்த பாளையும் அவளையும் மாறி மாறி பார்த்தாள். இப்போது திலகாவின் உதடுமே விம்மி துடித்தது. தோழியின் வலியை கண்ணுக்குள் நிரப்பியவள், கையில் இருந்த பாளை (ball) தூக்கி வீசி வெளியில் எறிந்து விட்டு தாங்க முடியாமல் அந்த வீட்டை விட்டு ஒடினாள்.
இப்போது திலகாவின் கண்கள் நீரை வழியவிட்டது. தாங்க முடியாமல் ஓடிய அவளே கண்ணுக்குள் நின்றாள். திலகா வீட்டில் இருந்து கிளம்பிய ஓவியா நேரே வீட்டுக்கு தான் வந்தாள். போகும் போது இருந்த நெகிழ்வோ சந்தோஷமோ துளி கூட அவளில் இல்லை.
உடைந்து வரும் மகளை பார்த்ததுமே அரிசந்திரனுக்கு விசயம் விளங்கிற்று. மெல்ல எழுந்து கட்டிலில் அமர்ந்தார். சோர்ந்து போன உடலை தூக்கி நிலை நிறுத்தவே முடியவில்லை அவரால். ஆனாலும் மெல்லமாய் எழுந்து கட்டிலில் அமர்ந்தார். நொறுங்கி வரும் அவளை ஆறுதல்ப்படுத்த அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. அதனால் தான் மெல்லமாய் எழுந்து அமர்ந்து அவளை எதிர்கொண்டார்.
தந்தையை கண்டதும் ஓடி வந்து அவர் மார்பில் புதைந்து கொண்டு சின்ன குழந்தை போல விம்ம ஆரம்பித்து விட்டாள் ஓவியா. அவளுக்கு வலியில் ஆறுதலே தந்தை தான். அவள் முக குறிப்பை பார்த்தே அவள் உள்ளத்தை படித்து விடும் மனிதர் அல்லவா அவர். சின்ன வயது முதல் தொட்டு அவளின் முதல் ஹீரோ இவர் தானே. இந்த பாழாய் போன நோய் வந்து அவரை ஆட்கொள்ளும் முன் அவளுக்கு அரிசந்திரன் தான் எல்லாமுமாய் இருந்தார். அப்போது ஓவியா வாழ்ந்த வாழ்க்கையும் வேறு அல்லவா. பட்டாம்பூச்சாய் இந்த குடும்பத்தில் வளைய வந்த நாட்களை தான் தந்தையின் முகம் அவளை நியாபகப்படுத்தி கொண்டே இருக்கும். வலிக்கு வாழ்க்கையில் எல்லாம் அவர் மார்பில் இப்படி தான் வந்து விழுவாள். அவர் முடிகோரி தடவி ஆசுவாசப்படுத்தி அனுப்பியே இவளை கம்பீரமாய் நடக்க வைப்பார். இன்றும் அப்படி ஒரு ஆறுதலை தேடி தான் தந்தையின் மார்பில் புதைந்து விம்மினாள்.
அவள் அழுகையை பார்த்ததுமே…
திலகாவை பாத்தியா?
என்றார் அவள் கேசத்தை தடவியவாறு,
ம்… என அழுகையோடே தலை அசைந்தாள் அவர் மகள். கூடவே,
ஏன்ப்பா… ஏன்ப்பா அவளுக்கு இப்படி ஆச்சு. அவளோட ஆசை கனவு எல்லாமே பேச்சேப்பா. எவ்வளவு ஆசையோட இருந்தா, இந்த முறை அவளுக்கு எப்படியும் சாம்பியன் ஷிப்ல கோப்பையில விளையாட சான்ஸ் கிடைக்கும்ப்பா. எவ்வளவு ஆசையோட இருந்தா. எவ்வளவு கடினமா உழைச்சா. ஏன்ப்பா… ஏன் அந்த ஆண்டவன் அவளோட கனவுல அடிச்சான்.
தாங்க முடியவில்லை. கதறி துடித்து விட்டாள்.
மகளின் வேதனையை பார்த்தவர், மென்மையாய் புன்னகைத்தவாறே,
அந்த ஆண்டவன் என்ன கணக்கை எழுதி வச்சிருக்கான்னு தெரியலியே செல்லம். எதுனாலும் நாம அதை ஏத்துக்கிறதை தவிர வேற என்ன செய்திட முடியும். காலம் தான் அவளோட இந்த அடிக்கான காரணத்தை சொல்லணும். அதுக்கு நீ தான் அவளுக்கு பக்கபலமா இருக்கணும். அவள் உடைஞ்சி போகாம நீ தான் அவளை பாத்துக்கணும். கோசலையம்மா ரொம்ப உடைஞ்சி போயிட்டாங்க. அவங்களும் எத்தனை அடியை தான் தாங்கிப்பாங்க. அன்று வந்து உடைஞ்சி அழுதப்ப என்னால ஆறுதல் படுத்த கூட முடியல.
தந்தை சொல்ல சொல்ல, அவளுக்கும் வேதனை முட்டிக் கொண்டு வந்தது. எல்லாம் முடிந்தது போலவே வலித்தது. தந்தை அவள் அம்மாவை விட்டு வேறு ஒரு பெண்ணேடு போன நொடியில் இருந்து அவளுள் உற்பத்தியான எண்ணம்தான் விளையாட்டு துறையை தேர்ந்தெடுக்க வைத்தது. இந்த இடத்திற்கு வர அவள் அவள் வாழ்வில் இழந்தது அதிகம் தான். அவள் எடுத்த முயற்சிகள் நிறைய தான். அப்படியும் அந்த ஆண்டவன் ஏன் அவளை முடக்கினார்.
இந்த கேள்வி தான் அடுத்தடுத்து வந்த நாட்களும் அவளுள் முறைத்து வந்தது. அதனாலே வேறு எந்த சிந்தனையும் அவளுள் இல்லாமல் போனது. முகுந்தன் கொடுத்த விசிட்டிங் கார்டை கூட திலகாவை பற்றி அறிந்து வந்த நாள் சாமிபடத்தின் முன் வைத்தது. அதன் பின் அதை எடுக்கவே தோன்றவில்லை.
மகளின் இந்த உடைந்து போன நிலை எழிலரசியை ரொம்பவே காயப்படுத்தியது. இவளை இப்படியே முடங்க விட கூடாது என்றே குடும்பத்தோடு அவளையும் கோவிலுக்கு அழைத்து சென்றாள்.
கோவிலை சுற்றி வந்து சாமி கும்பிட்ட பின் பூசாரி வேப்பலையில் நீர் தெளித்து அவளுக்கு சிறு சடங்குகள் செய்து அனுப்ப, ஒரு மணி நேரம் குடும்பமாக அந்த கோவில்லயே இருந்தனர். இளையவர்கள் இரண்டும் மரத்தடியில் விளையாட சென்று விட, கணவன் மனைவி இருவரும் கதை பேச ஆரம்பித்து விட்டனர். ஒவியா பழையபடியே எதையோ வெறித்து பார்த்தவாறே இருந்தாள்.
அதே நேரம் கோவிலுக்குள் நுழைந்த கோபாலை கண்டதும்,
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
என்ற அவனின் வாக்கு சட்டென நினைவுக்கு வர, கூடவே அதை தொடர்ந்து அன்று அவள் வாழ்வில் நடந்த எல்லாம் நொடி பொழுதில் நியாபகம் வந்தது. திலகாவின் நிலையால் எல்லாம் மறந்து இருந்தவளுக்கு கோபாலை பார்த்ததால் அன்றைய நாள் நியாபகங்கள் சட்டென வந்து விட, அவளை மீறி கொல்லென சிரித்து விட்டாள். மகளின் சிரிப்பை பார்த்து கணவரிடம் கண் ஜாடை காட்டிய எழில்,
“பாத்தீங்களா? புள்ளையை மந்திரிச்ச பிறகு தான் அவளோட முகத்துல சிரிப்பே வந்திருக்கு. இனி எல்லாம் சரியாகிடும்.”
என நிறைவோடு சொன்னவரை ஆழ்ந்து பார்த்தாள் ஓவியா. தன் மன கலக்கம் அவர்களுக்குள் அதிகமான வலியை கூட்டுவதை உணர்ந்து தன்னை மாற்றி கொள்ளும் முடிவோடு தான் வீட்டிற்கு வந்தாள். இப்படி இருப்பதில் யாருக்கும் எந்த லாபமும் இல்லை என்பதை அந்த அமைதியான இடம் அவளுக்கு அழுத்தி சொன்னது. கோவில் மனதில் ஒரு வித அமைதியை கொடுத்ததாலோ என்னவோ அல்லது கோபால் நினைக்க வைத்த நியாபகங்களாலோ என்னவோ வழி நெடுக்கிலும் அவனின் நியாபகங்களும் வந்து போனது.
வீடு வந்து சேர்ந்தவள் கோவில் பிரசாதத்தை எடுத்து கொண்டு நேரே திலகா வீட்டிற்கு தான் போனாள். போகும் வழி எல்லாம் இனி தான் செய்ய வேண்டியவையே பட்டியலாக விரிந்து கொண்டு வந்தது.
அதே நேரம் பின்னால் இருந்து யாரோ அழைக்க, நின்று திரும்பினாள். சிரித்த முகத்தோடு சரசு அக்கா அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளை கண்ட பின் தான் விசிட்டிங் கார்டு நியாபகத்தில் வந்தது.
என்ன ஓவியா… போன் செய்தியா?
என ஆர்வமாக அவள் முகம் பார்க்க, வாடிய முகத்தோடு
இல்லக்கா…
என்றவளை புருவ முடிச்சோடு பார்த்தாள்.
ஏன்?
என அதிர்ந்து கேட்டவளின் விழியை சந்திக்காமல்,
அவருட்ட போன் செய்து பேச என்ன இருக்கு அக்கா.
என்றாள் நைந்து போன குரலில்,
என்ன இல்ல. நிறைய இருக்கு. இப்போ உன் வீடு இருக்கிற நிலைமையில எது கேட்க கூடாது. நீ கேட்டா நிச்சயம் இல்லணு சொல்ல மாட்டாரு.
என்றதும் புரியாமல் அவளை ஏறிட்டவள்,
என்ன கேட்க சொல்லுறீங்க.
வேற என்ன அவர்ட்ட கேட்க முடியும். பணத்தை தான். அவர் போகும் போது எல்லாருக்கும் காசு கொடுத்தாரு. அவருக்கு உதவி செய்த எல்லாருக்கும். நீயும் அவருக்கு அந்த இடிபாடுக்குள்ள உதவி செய்தியாமே, அதுக்கு தான் இந்த விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு போனாரு. உனக்கு கேட்க கஷ்டமா இருந்தா உன் அம்மாட்ட பேச சொல்லு. எனக்கு தெரிஞ்சி நீ எவ்வளவு கேட்டாலும் கொடுப்பாரு. அவ்வளவு உயர்வா உன்னை பேசினாரு. உன்னால தான் உயிரோட இருக்கிறதா அவரோட பிரண்ட்டுட்ட பேசிகிட்டாரு. அதனால எதையும் யோசிக்காம உன் அம்மாவை பேச சொல்லு. இப்ப வேற வேலையை இழந்துட்டு நிக்குறா? உன் அப்பாவோட மருத்துவ செலவுக்கே உன் அம்மா அல்லாடுவாங்க. அதனால தான் ஆண்டவன் இப்படி ஒரு வழியை காட்டியிருக்காரு. யோசிக்காம பேசு என்ன?
சொல்லி விட்டு அவர்கள் சென்று விட்டார்கள். பெண்ணவளோ மொத்தமாக உடைந்து விட்டாள்.
என்ன சொல்கிறார் இவர்.
பணத்திற்காகவா முகுந்தன் அவன் போன் நம்பரையும் அட்ரஸையும் கொடுத்து விட்டு போனது. முகுந்தன்.அவள் செய்த உதவியையா விலை பேச நினைத்து விட்டார். உள்ளம் கசந்து போனது அவளுக்கு. என்னவோ வாழ்வே சூனியம் ஆனது போல உணர்ந்தாள். இது தெரியாமல் அந்த கார்டு கையில் வந்த நொடி என்னவெல்லாமோ நினைத்து விட்டாள். ஒரு கணம் தன்னை போல் அவர் மனதிலும் தான் ஏறி அமர்ந்து விட்டோமோ என்று கூட நினைத்து மனதுக்குள் சிலிர்த்து விட்டாள். அப்படி நினைத்து தானே திலகா வீட்டிற்கு அவனை பற்றி சொல்லி விடும் முனைப்பில் அன்று ஓடினாள். திலகாவின் கால் விசயம் தெரியாமல் இருந்தால் அன்றே சொல்லி இருக்கவும் செய்வாளே.
அப்படி சொல்லி இருந்தால்…
அவள் நிச்சயம் போன் செய்ய வற்புறுத்தி இருப்பாள். நானும் ஆர்வத்தில் பேசி இருப்பேன். அவர் பணம் என்ற சாட்டையால் அடித்து என்னை சின்னாபின்னமாய் சிதைத்திருப்பார். நினைவே அவளுள் சிறு அதிர்வை கொடுக்க, திலகா வீட்டிற்கு போக இருந்த காலை திருப்பி கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். உள் வந்தவள் நேரே வந்தது சாமி படத்தின் முன் தான். அதுவரை அவர் காவலில் இருந்து அந்த கார்டை எடுத்தவள். அது கிடைத்த நாளில் தன் மனம் அடைந்த சந்தோஷத்தை நினைத்து கலங்கியவளாய் அதை சுக்கு நூறாக கிளித்து வீசி எறிந்தாள்.
எறிந்தவள் பாரம் தாங்காமல், கட்டிலில் போய் பொத்தென விழுந்தாள். அவனுக்காக ஆசை ஆசையாய் அவள் கட்டிய மாளிகை சுக்கு நூறாக உள்ளத்துக்குள்ளே பொடிந்து போக, வலி தாங்க முடியாமல் கண்கள் கண்ணீரை சுமந்து வெளியேற்றியது.
அத்தியாயம் தொடரும்….
Best Romantic Novel