jesus kavithai (5)
குடிலில் பிறந்த தேவனே
இதய குடிலில் மலர்வாயோ
மடியில் தவழ்ந்த மரிமகனே
மனதுள் குடி வருவாயோ!…
தாவீது குலத்தை அலங்கரிக்க
தரணி வந்த மன்னவனே
நன்றியோடு நினைக்கிறோம்
நாதா என்னில் மலர்வாயோ!…
குழந்தை வடிவம் கொண்ட
இறைமகன் நீரன்றோ
இதயம் திறந்து அழைக்கிறேன்
இதய தோட்டத்தில் பூக்க வருவாயோ!…
பாவ இருளை போக்கிடவே
பரம்பொருள் மண்ணில் வந்து பிறந்தாயோ
பாவி என்னை இரட்சித்து
பாலகனாயென் நெஞ்சில் பிறப்பாயோ!…
என்றும் ஏங்கி நிற்கும்
ஏழை நான் அன்றோ
காத்திருக்கும் என்னில்
வாழ்வது அவரன்றோ!…


depressed sad quotes in tamil, feeling kavithai in tamil, life sad kavithai in tamil, sad kavithai about life, sad kavithai for woman, sad kavithai quotes, Sad woman kavithai in tamil, Soga Kavithai, soga kavithai in tamil, சோக கவிதை வரிகள், சோக கவிதைகள், சோக கவிதைகள் சோக கவிதைகள், சோக கவிதைகள் ஸ்டேட்டஸ், தமிழ் வரிகள்,jesus kavithai,Christmas kavithai

