jesus kavithai (3)
காரிருள் நடுவே பேரொளி உதித்தது
மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது
மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது
பாருலகே மகிழ்ச்சியில் மிதந்தது.
காக்கும் கடவுளே உருக்கொண்டு வந்தது
கலங்கரை விளக்காய் பூமியில் மிளிர்ந்தது
காவல் இடையனுக்கு காட்சிகள் கிடைத்தது
காலமெல்லாம் அவர் புகழ் விரிந்தது.
மாரியும் பனியும் மாறி மாறி பொழிந்தது
மலரின் மணமோ மாட்டு தொழுவில் கலந்தது
வானின் விடிவெள்ளி பூமியில் புலர்ந்தது
பாரில் அவர் புகழ் பாரெல்லாம் பறந்தது.
பெத்லேகேம் உலகினில் சிறந்தது
இறைமகன் வரவால் உவகை கொண்டது
வைக்கோல் மெத்தையில் பூவொன்று பூத்தது
வாழ்க்கையில் விடியல் தர இறைவனே வந்தது
ஞானியர் முன் விண்ணொளி பிறந்தது
வழி துணையாய் நட்சத்திரம் நடந்தது
மூவரின் கனவிலும் எச்சரிக்கை கிடைத்தது
ஏரோதின் சூழ்ச்சியுமிங்கு புரிந்து போனது.
பொன்னும் தூபமும் வெள்ளை போளமும்
ஆதவனுக்கு பரிசாய் அங்கே வந்தது
அகிலத்தில் அவர் புகழ் பரவ
அதுவே வழியுமானது.
காரிருள் நடுவே பேரொளி உதித்தது
மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது
மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது
பாருலகே மகிழ்ச்சியில் மிதந்தது.


Christmas kavithai in Tamil, Christmas kavithaigal, God Kavithai, god kavithai in tamil, jesus kavithai, jesus kavithai in tamil, Jesus Kavithai tamil, Jesus Kavithaigal in tamil. Jesus birth Kavithai in Tamil, kavithai about jesus in tamil, kiristhu pirapu kavithai, Kiristhu prappu Kavithai in Tamil, tamil kavithai, இயேசு கிறிஸ்து பிறப்பு கவிதை, இயேசு பற்றிய கவிதை, இயேசுவின் அன்பு கவிதை, ஒளிவிழா கவிதைகள், கிறிஸ்து பிறப்பு கவிதை, கிறிஸ்து பிறப்பு கவிதைகள், கிறிஸ்மஸ் கவிதை தமிழில், பாலன் பிறப்பு கவிதை, விடியல் தந்த கிறிஸ்து பிறப்பு கவிதை

