A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil

பிறந்தார் பிறந்தார்

மாட்டு தொழுவத்தில்

மரி மகன் பிறந்தார்

மானிடர் வாழ்வில் ஒளியேற்ற

மண்ணில் வந்து பிறந்தார்

கடவுளின் மகனே உரு கொண்டு

நம்மில் இங்கு கலந்தார்

அமைதியை உலகில் விதைத்திட

அன்பும் கருணையும் நம்மில் மிளிந்திட

எளியோருக்கும் நற்செய்தி கிடைத்திட

தீமைகள் மண்ணோரில் குறைந்திட

மாசற்ற வாழ்வு நம்மில் பிறந்திட

மரிமகனாய் மண்ணில் வந்துதித்தார்

மலரென தேவனின் திருமகன்…

மகிழ்ச்சி உலகில் நிறைந்திட

பாவம் நம்மில் குறைந்திட

ஏற்றதாழ்வு இனி இல்லையென உணர்ந்திட

ஏக்கம் கொண்டோம் கடவுளை கண்டிட

எளிய வாழ்வு நம்மில் பிறந்திட

ஏழையின் நாயகனாய் வந்துதித்தார்

ஏசு என்னும் பெரு மகன்…

பூமியில் புனிதம் மலர்ந்திட

புண்ணிய பூமியாய் பிறந்திட

எளியோரின் வாழ்வு சிறந்திட

இயலாமை இனி இல்லை என்றாகிட

இறை உணர்வு எம்மில் கலந்திட

காவிய நாயகனாய் வந்துதித்தார்

கடவுளின் ஒரே மகன்…

Subscribe to Gnana Selvam Kavithaigal
Subscribe Gnana Selvam Kavithaigal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!