வணக்கம் வாசகர்களே!
சங்கிலி தனக்காக செலவு செய்த பணத்தை மொத்தமாக திருப்பி கொடுக்கும் பல்லவி. வாங்கி கொண்டானா சங்கிலி.
குலுங்கி குலுங்கி அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் அவளை அணைத்து கொண்டவர்.
“நீ இந்த அளவு அழும் அளவு என்ன நடந்தது கண்ணா?. சங்கிலி எதுவும் பேசிட்டானா?. அவன் அப்படி பேசமாட்டானே . இதை பற்றி உனட்ட எதுவும் சொல்ல கூடாதுணு சத்தியம் வாங்குனவனே அவன் தானே. அவன் அப்படி என்ன சொல்லி இருக்க முடியும்.”
“அவன் எதுவும் சொல்ல மாமா. அறிஞ்சதும் என்னால தான் தாங்க முடியல. நான் யாருக்கும் கடன்காரியா இருக்க விரும்பல மாமா. அதான்அந்த சொத்தை வித்து பணத்தை சங்கிலிக்கு கொடுக்க முடிவு பண்ணிட்டேன்.”
” அதுக்கு எதுக்குடா சொத்த விக்கணும்.. உனக்கு தான் மாசம் மாசம் பணம் வருமே கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்திடலாம். நானே இதுபற்றி உனட்ட பேசணம்ணு தான் இருந்தேன். ”
” இல்ல மாமா அவள் காசு இதுக்க மேல என் கையில இருக்கிறதை நான் விரும்பல. கொடுத்து தான் ஆகணும். அதுவும் எவ்வளவு முடியுதோ அவ்வளவு சிக்கிரத்துல. மாமா அதை வித்தா அவன்ட்ட நான்பட்ட கடன் தீர்ந்திடும் தானே மாமா .”
“தெரியலடா அந்த சொத்தோட மதிப்பு எவ்வளவுணு எனக்கு தெரியல . ஊருக்கு போய் விசாரிச்சி பாத்தா தான் தெரியும்.”
என்றவர் எழுந்து உள்ளே சென்று,.
ஒரு பழைய நோட்டை எடுத்து கொண்டு வந்து,
“இதுல இருக்கு பாரு. இது தான் சங்கிலிட்ட உன் படிப்பு செலவுக்காக நான் பெற்ற மொத்த ரூபாய் . ஒத்த காசு விடாம எல்லாம் எழுதி வச்சிருக்கேன். உனட்ட சொல்லாம உனக்கு பணம் வந்ததும் உன் பணத்தையும், என் பணத்தையும் வச்சி கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடணம்ணு தான் நினைச்சேன் கண்ணா.”
என்றதும் அவர் கையில் இருந்த நோட்டை வாங்கி பார்த்தவள் அதிர்ந்தாள். அவள் நினைத்தது போல அந்த ஒரு நாளும் அவன் கொடுக்கவில்லை, ரவி சொன்னது போல இவளின் தேவை பலவற்றை மாமா சங்கிலியின் பணம் கொண்டு தான் சரிகட்டியுள்ளார். மொத்தமாக கூட்டி பார்த்தவள்.
“மாமா முடிஞ்சா இன்றே கிளம்புங்க.. எல்லாம் சேர்த்து வட்டியோட நாம சங்கிலிக்கு இருபது லட்சமாவது கொடுக்க வேண்டி வரும். நான் கடன்காரியா இருக்க கூடாதுணு தான் பாட்டி, இறந்தும் அவள் சொத்து எனக்கு கிடைக்கும் படி செய்துள்ளாள்ணு நினைக்கிறேன். கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும். இல்லணா மனசு இப்போ மொத்தமா உடைஞ்சி போயிருக்கும்.”
சொன்னவள் எழுந்து கொள்ள….
“நான் கிளம்புறேன் மாமா. வித்து பணம் கைக்கு வந்ததும் என்னை கூப்பிடுங்க. நான் தான் என் கையால பணத்தை அவன் கையில் கொடுத்து என் கணக்கை சரி பண்ணணும். கூட ரவியும் இருக்கணும். எல்லாம் சரியா நடந்தா ரெம்ப சந்தோஷப்படுவேன்.”
“சரிம்மா. அது தான் உனக்கு சந்தோஷம்ணா மாமா இன்றே ஊருக்கு போறேன்.”
“நல்லது மாமா நான் கிளம்புறேன். எனக்கு ஹாஸ்பிட்டல் போக நேரமாச்சு.” …
“சரி டா பாத்து போ…”
என அவளை வழி அனுப்பி வைத்தவர். மனைவியிடம் …விசயத்தை சொல்லி விட்டு அன்றே கிளம்பி விட்டார். அங்கு சென்ற பிறகு தான் சொத்தின் மதிப்பு ஒரு பதினைந்து பதினாறு லட்சம் போகும் என தெரிந்தது. அது அந்த இடத்திற்கு அதிக பணம் தான் என உறவினர்கள் சொல்ல…அடுத்து வந்து ஒரே மாதத்தில் இடம் கைக்கு மாறி பணம் வந்து விட…
மீதி பணத்திற்கு விக்கி, புனிதா, சுமதி, என கொடுக்க… இருபது லட்சத்தோடு கண்ணில் தீப்பொறியோடு சங்கிலியின் சைக்கிள் கடையை நோக்கி நடந்தாள். பாண்டி வருகிறேன் என்ற போது கூட வேணாம் என தடுத்து விட்டாள்.
விக்கி வருகிறேன் என்ற போதும் அழைத்து கொண்டு வரவில்லை. தனியாக… தன்னந்தனியாக தான் அவன் கடையை நோக்கி வந்தாள்.
அங்கிருந்து கிளம்பும் போதே ரவியிடம் சங்கிலி வீட்டிற்கு வந்து விட சொல்லி விட்டாள்.
அன்று பேசி விட்டு வந்த பின் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராததும், சங்கிலியின் கோபமும் ரவியை ரெம்பவே கஷ்டப்படுத்தி கொண்டு தான் இருந்தது. அப்படி இருந்த சூழலில் அவளிடமிருந்து அழைப்பு வந்ததும் மனது நிம்மதியாக தான் இருந்தது. அன்று கோபத்தில் கொதித்து விட்டு வந்த பிறகு சங்கிலி ஏனோ பெரிதாக அவனிடம் பேசவே இல்லை .அது வேறு வலித்து கொண்டிருந்தது.
“எப்படியாவது வந்து சமாதானம் ஆனால் சரி…”
என அவன் எண்ண அவளோ மொத்தமாக …அவன் கடனை முடிக்கிறேன். என் மொத்தமாய் சங்கிலியை உடைக்க வருகிறாள் என தெரியாமல்,குதூகலத்தோடு சங்கிலியின் கடைக்கு வந்தான்.
அவன் வருகையை உணர்ந்தும் சங்கிலி நிமிரவே இல்லை.
“இருடா… இன்றே உன் வலி மாறிடும். இன்னும் கொஞ்ச நேரம் தான். ”
என பக்கத்தில் இருந்த ஸ்டூலில் அமர, அடுத்த அரைமணி நேரத்தில் புயலாக உள்ளே நுழைந்தாள் பல்லவி.
பல்லவியின் திடீர் வருகையை பார்த்ததும்…புரியாமல் குழப்பத்தோடு செய்த வேலையை போட்டு,கொண்டு அவன் எழும்ப… ரவியும் எழுந்து நின்றான். பல்லவியை பார்த்த, சங்கிலி திரும்பி ரவியை பார்க்க..
அவன் தலை கவிழ்ந்து கொண்டு நிற்க…
“இவன் தான் போய் கூட்டிட்டு வந்திருப்பானோ?…”
எண்ணியவாறே, திரும்பி அவளை பார்க்க..
“அவளோ அவனையே பார்த்து நிமிர்ந்து அப்படியே நின்றாள். அந்த முகத்தில் வலியோ, சந்தோவுமோ, திமிரோ ,எதுவுமில்லை. உணர்ச்சியை மொத்தமாய் துடைத்து எடுத்தது போல இருந்தது அவள் முகம். ஏக்கமாக அவள் முகத்தை பார்த்தவன்.பேச வார்த்தையற்று மரணித்து போய் நிற்க..
“ரவி… இங்க வா? …”
என அழைக்க ஒடி அருகில் வந்தவனிடம்.
“இந்தா… இதுல இருபது லட்சம் இருக்கு.. உன் தோழன் இதுவரை எனக்காக செலவு பண்ணுன பணம் மொத்தமும் வட்டியோட…”
என்றதும் நம்ப முடியாமல் நடுங்கும் கையால் வாங்கியவன் விழி உயர்த்தி அவளை பார்க்க…
“சரியாணு எண்ணி பாத்துக்க…”
என்றதும் சங்கிலி … ரவியை முறைத்து கொண்டு…
“என்னடா பண்ணுறா? அவா கொடுத்தா நீ….வாங்கிடுவியா?..”
என அடி குரலில் உறும…
“நான் என்னடா பண்ண…”
” தந்தா உடனே கை நீட்டிடுவியா. அவங்க திருப்பி தரணம்ணு நான் கொடுக்கல…”
வலியோடு வந்தது வார்த்தை..ரவி என்ன பண்ண என திணறி நிற்க…
” நானும் யாருக்கும் கடன்பட்டவளா இருக்க விரும்பலணு சொல்லு ரவி…”
“கடன்… “சொன்னவன் தொண்டை அடைய …
“நானும் யாருக்கும் கடன் கொடுக்கல ரவி. உதவி செய்தேன். அவ்வளவு தான். அதை வட்டி முதலா திருப்பி கொடுக்கிறது என் உதவியை அசிங்கப்படுத்துறதுணு தெரியாதா ரவி.”
“வாங்கின உதவியை வசதி வந்த பிறகு திருப்பி கொடுக்கிறது அசிங்கபடுத்துறது. இல்லணு சொல்லு ரவி…”
“அது நீயா மனமுவந்து தந்திருக்கணும். இது இந்த மடையனால வந்த பிரச்சினை. இதுல என் தப்பு எதுவுமில்ல. நீ என்னை தண்டிக்கிறது தப்பு.”
“தண்டிக்கிறதா?. உனக்கான பணத்தை உனட்ட கொடுக்கிறது தண்டனையா?”
“இல்லயா பின்ன?. ஒரே மாசத்துல வட்டிகாரனுக்கு பைசல் பண்ணுறது போல பொட்டியோட வந்து நிக்குறா..”
“இதுவே பிந்திடுச்சிணு நினைக்கிறேன். எனட்ட வசதியிருந்தா நீங்க பேசிட்டு வந்த அன்றே திரும்ப கொண்டு வந்த கொடுத்திருப்பேன்.”
“பாத்தியா இவள் வார்த்தையால எப்படி காயபட்டிருக்காணு பாத்தியா?…”
“ஆமா காயப்பட்டு தான் போனேன்.. ஆனா இப்பவாவது உண்மை தெரிஞ்சேணு சந்தோஷப்படுறேன். பேசாம பணத்தை எடுத்திடுங்க..”
“இல்ல. அவன் தானே கேட்டான். அவனுட்டயே கொடு. அதுல ஒத்த பைசா நான் தொடமாட்டேன்.”
என்றதும் சட்டென நிமிர்ந்தவள். அடுத்து கண நேரத்தில் முகத்தை மாற்றி கொண்டு.
“ஏன்? அடுத்தும் என்னால தான் உன் கனவு, ஆசை எல்லாத்தையும் இழந்தாணு ஊர் பேசணம்ணா.”
“பல்லவி…”
” எனக்கு தெரியும். இந்த பணத்தால நீ சவுடால் விட்ட எதையும் செய்ய முடியாதுணு. ஒரு வேளை நிலத்தை வாங்கிடலாம். அதை தவிர வேற என்ன பண்ணிட முடியும். முடியாது என்கிறதால என் தலையில் பழியை போட்டு தப்பிச்சிக்கலாம்ணு நினைக்காத. நீ சரியான ஆம்பிள்ளைணா, இதோ இந்த ரவி சொன்னது போல ரோசகாரன்ணா இன்னும் ஒரு வருஷத்துல சாதிச்சி காட்டு பார்ப்போம் .அப்ப நம்புறேன். அப்போ உன்னையும் வீரமான ஆம்பிள்ளைணு நம்புறேன். அதுவரை நான் நம்ப மாட்டேன். உன்னால ஜெயிக்க முடியாது. இந்த பணத்தை வச்சிட்டு உன் ஆசையை நிறைவேற்ற முடியாது. முடியவே முடியாது. நீ மண்ணை கவ்விட்டு நிக்குறதை நான் பார்க்க தான் போறேன்.”
“…..!……!……”
“அப்ப வந்த பேசுவேன். உன் முன்னால வந்து பேசுவேன். இந்த ரவி என் முன்னால பேசுன எல்லாத்துக்கும் நான் பதில் சொல்வேன். அதுவரை உன் பக்கத்துல வர மாட்டேன் நீயும் வராத.”
சொன்னவள். ரவி பக்கம் திரும்பி…
“என்னடா இந்த பணம் மட்டும் எனக்கு தராம அவன் கையில் இருந்தா எதுவோ சாதிச்சி கிழிச்சிருப்பாண்ணு சொன்னா இல்லியா. நாலு வருஷம் தானே முடிஞ்சி போச்சு. இந்த நாலு வருஷத்துல பெரிசா என்ன பண்ணி இருப்பான். பேங்கில்ல எனக்கு தந்த பணத்தை போட்டு வைச்சிருப்பான். வட்டியா கொஞ்சம் பணம் வந்திருக்கும் அவ்வளவு தானே. அந்த வட்டியை சேர்த்து தான் கொண்டு வந்திருக்கேன். .உன் நண்பன் கொம்பன்னா முன்னேறி காட்ட சொல்லுடா. திடமான ஆம்பிள்ளைணா இந்த ஊருக்கு பஸ்ஸை வர வைக்க சொல்லுடா. அவனோட தைரியத்தை நானும் பாக்குறேன்.”
“வீடு வைப்பானாம் ,நிலம் வாங்குவானாம் ,ஊருக்குள்ள மூணு வண்டியை ஒட விடுவானாம்,இது என்னால் நடக்கலியாம். இனி பண்ணுங்க பார்ப்போம். உங்க சமர்த்தியத்தை நானும் பாக்குறேன்.”
சொன்னவள் திரும்பி வெறுப்பாக ஒரு பார்வையை சங்கிலி மேல் வீசி விட்டு கிளம்பி செல்ல … மொத்தமாய் அடி சாய்ந்து அப்படியே அமர்ந்து விட்டான் சங்கிலி.
“ரவி கூட இந்த புள்ளை இப்படி பேசிவிட்டு மொத்த பணத்தையும் அவன் மூஞ்சியில் எறிவது போல் எறிந்து செல்லும் என நினைக்கவே இல்லை. சிலையாக பணத்தோடு அப்படியே நின்றிருந்தான்.”
இருவருக்கு அடுத்து யோசிக்க கூட தோன்றவில்லை. சங்கிலியின் மனது பலமாக அடி வாங்கியிருந்தது. அவனால் நார்மல் ஆக முடியவே இல்லை. கடைசியில் தண்டபாணி கடைக்கு வந்த பிறகு தான் நடந்தவற்றை ஜெகன் சொல்லியதும் …
சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தவர்…
“ரவி நீ போய் டிரஸ் மாத்திட்டு உடனே கிளம்பி வா…”
“முதலாளி…”
“நான் சொல்றேன்ல்ல. புறப்பட்டு வா… டேய் ஜெகன் இவனையும் கூட்டிட்டு போய் டிரஸ் மாற்றி கூட்டிட்டு வா.”
என்றதும் வண்டியை எடுத்து கொண்டு விரைந்து சென்ற ரவி, பத்தே நிமிடத்தில் திரும்பி வர… அதற்குள் வண்டியை வரவழைத்திருந்த தண்டபாணி, இருவரையும் அழைத்து கொண்டு டவுணுக்கு வந்தார். அவர் அழைத்து வந்து ஆட்டோவை நிறுத்திய இடத்தை பார்த்ததும் ரவியும் சங்கிலியும் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்தவாறு …
“நாம இப்போ வண்டி வாங்க போறோமா முதலாளி.”
ரவி தான் ஆர்வமாக கேட்டான்.
“என்ன சொன்னா?…இந்த பணத்தை வைத்து என் சங்கிலியால உயர முடியாதா? பாத்துட்டே இருக்கட்டும். அவனை உயர வைத்து அவளோட முகத்துல கறியை பூசல நான் தண்டபாணி இல்ல. எவ்வளவு திமிர். உதவி செய்தவன் நெஞ்சில மிதிச்சிட்டு போயிருக்கா. அவளை சும்மா விட முடியுமா?”
“……………….”
“இறங்குங்கடா… இப்ப தான் சங்கிலியோட வாழ்வுல வசந்தம் வந்திருக்கு. எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிட்டிருக்கீங்க. மூதேவி போய் ஸ்ரீதேவி வந்திருக்கா. இதை விட நல்ல வாய்ப்பு எப்போ வரும்.. அதான் வந்த ஸ்ரீதேவியை வீட்டுல வைக்காம அதை பெருக்கி சவால் விட்டவா முன்னால என் சங்கிலி ஜெயிச்சி நிக்கணம்ணா இன்று இந்த நொடியே அவனோட முதல் கனவு நிறைவேறணும். அதான் இங்க கூட்டிட்டு வந்தேன். முதல்ல சங்கிலியோட மினி பஸ் ஊர்ல்ல ஒடுறதை அவா கண்ணால பாக்கட்டும். வாங்கடா..”
சொன்னவர் மலர்ந்த முகத்தோடு சோரூம் உள் நுழைய… சங்கிலியும் ரவியும் கூட பின் தொடர்ந்தனர். ரவிக்கு சந்தோஷமாக தான் இருந்தது. ஆனால் சங்கிலி முகத்தில் தன் முதல் ஆசை நிறைவேற போகுது என்ற மகிழ்வு ஒரு சதவீதம் கூட இல்லை.
ஆனாலும் தண்டபாணி சொன்னதை எல்லாம் தட்டாமல் செய்தான். தண்டபாணி செக்குருட்டி சைன் போட அன்றைய நாளே மிக மிக ஆரவாரத்தோடு அந்த மினிபஸ் தாமரைகுளத்திற்கு வந்தது.
மறுநாளில் இருந்தே அது தாமரைகுளம் to நாகர்கோவில் என ஒடுவதற்கான அனுமதியை தண்டபாணி வாங்கி வந்து விட, மறுநாளே சங்கிலியின் வண்டி அந்த கிராமத்தில் ஒடத் தொடங்கியது. தன் முதல் ஆசை நிறைவேறி விட சங்கிலியும் தன் மனதை சந்தோஷமாக வைத்து கொள்ள ஆரம்பித்தான். ரவி பெருமிதத்தோடு பல்லவிக்கு அடித்து சொன்னான். அவளால் பதில் பேச முடியவில்லை. இவனோ நெஞ்சம் கொள்ளா மகிழ்வில் சொல்லி கொண்டிருக்க…
இந்த ஒரு வண்டி வாங்குனதற்கே இப்படி துள்ளுறியே. அது நான் பணம் கொண்டு வந்து கொடுத்ததால வாங்குனது. இதை வாங்கிட்டு ஜொயிச்சிட்டோம்னு மார்தட்டி கொள்ளாதுங்க. இதுக்க மேல வாங்குனா… அதுதான் வெற்றி. நிச்சயம் உங்களால அது இந்த ஜென்மத்துல நடக்காது…”
என பல்லவி எகத்தாளமாக சிரிக்க…
“பாத்துட்டே இரு. என் சங்கிலி கூடிய சீக்கிரத்துல உன் முகத்துல கறியை பூசல . என் பெயர் ரவி இல்ல.”
சொல்லி கொண்டு அவன் வைத்து விட, சிறிது நேரம் செல்லையே முறைத்து பார்த்தவள் பின் அதை விட்டு விட்டு தன் பணியை பார்க்க சென்றாள்.
அடுத்த வாரம் மூன்று நாள் லீவு கிடைக்க விக்கி உட்பட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட, வேறு வழியின்றி பல்லவியும் கிராமத்துக்கு செல்ல கிளம்பினாள்.
“என்னம்மா புறப்பட்டாச்சா. நீங்க கிளம்பிட்டா வீட்டை பூட்டி சாவியை கொடுத்துட்டு கிளம்புவேன்.”
என வாட்ச்மேன் வந்து நிற்க…
“ஆச்சுண்ணே…”
என தன் பேக்கை எடுத்து கொண்டு வெளிவர, வாசலில் வந்து நின்றது ஒரு ஆட்டோ . ஆட்டோகாரனும் இவளையே பார்க்க…
“நான் கூப்பிடலியேண்ணே.. எல்லாரும் கிளம்பியாச்சு. நீங்க யாருக்காக வெயிட் பண்ணுறீங்க.”
” உங்களுக்காக தாம்மா…”
“எனக்காகவா?… நான் சொல்லலியேண்ணே…”
“நீங்க சொல்லல அம்மா. விக்கி தம்பி தான் போன் பண்ணி வர சொல்லுச்சு. உங்களை கூட்டிட்டு போய் கிராமத்துல விட்டுட்டு எனக்கு போன் பண்ண வேணும் என்கிறது உத்தரவு.”
“இது எல்லாம் அவனோட வேலையா?”
“சாரிண்ணே எனக்கு டவுண்ல்ல கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு தான் வீட்டுக்கு கிளம்பணும்.”
“அதுக்கென்னம்மா நீங்க எங்க போகணம்னு சொல்லுங்க. அங்கெல்லாம் போயிட்டே போகலாம்.”
“இல்லண்ணே நேரம் நிறைய ஆகும். உங்களால வெயிட் பண்ண முடியாது.”
“எனக்கு இப்போ பெரிசா எந்த வேலையும் இல்லம்மா. நேரமானா கூட வெயிட் பண்ணி கூட்டிட்டு போறேன். நீங்க தனியா போகிறது சேப் இல்லம்மா.”
” நான் வெளியூர் இல்ல. எனக்கு சொந்த ஊரே தாமரைகுளம் தான். இந்த இடம் எல்லாம் அத்துபடி நான் பாத்துக்கிறேன். நீங்க கிளம்புங்க…”
“அப்ப சரிம்மா. நான் கிளம்புறேன்.”
என்றவன் ஆட்டோவை எடுத்து விட்டு கிளம்பி விட, லக்கேஜை தூக்கி கொண்டே பொடி நடையாய் நடந்து பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்து சேர்ந்தவுடனே பஸ் ஸ்டேன்ட்க்கு வண்டி வர ,அதிலும் மிக சிரமப்பட்டு ஏறிக் கொண்டாள். பத்து நிமிடத்தில் பஸ் ஸ்டேன்ட்டும் வந்து சேர அதில் இறங்கியவள் ஒரு முறை சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்..
அவள் தேடிய வண்டி அங்கு இல்லை.
“சரியா செழியன்ட்ட எத்தனை மணிக்கு வரும்னு கேட்டிருக்கணும். இப்ப தான் கிளம்பி போச்சோ என்னவோ?…” யோசித்தவாறே பராக்கு பார்க்க தொடங்கினாள். ஒரு அரை மணி நேரம் அப்படியே சென்ற பின். அந்த தாமரை பூ ஓவியத்தை சுமந்து வந்து நின்றது மினி பஸ். அந்த மினி பஸ்ஸை கண்டதும்.
“அப்படா வந்து தொலைஞ்சிது.”
எண்ணியவள் பேக்கோடு அந்த பஸ்ஸில் ஏற… டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனும் டிக்கெட் கொடுக்க நின்றவனும் உள்ளே ஏறியவளை அதிர்வோடு பார்த்து நின்றனர். ஆனால் யாரையும் பார்க்காமல் தனக்கு பிடித்தமான நடு சீட்டில் அதிலும் ஜன்னல் பக்கம் அமர்ந்து கொள்ள…
டிக்கெட்டோடு டிரைவர் சீட்டின் பக்கம் வந்த ரவி…
“என்னடா பல்லவி நம்ம பஸ்ல்ல ஏறியிருக்கா?…”
“தெரியலியேடா…”
” எனக்கென்னவோ வம்பிழுக்க தான் வாலண்டரியா வந்து ஏறி இருக்காணு தோணுது.”
” சரி. அவா எதுக்கு வேணா வரட்டும். ஆனா நீ தேவையில்லாம ஒத்த வார்த்தை பேச கூடாது.”
“சரிப்பா நான் எதுவும் பேசல…”
“அவா என்ன பேசினாலும் நீ வாயை கொடுக்க கூடாது. நம்மளை மட்டமா நினைச்சிட்டால… பாத்து புழுங்கட்டும். இதுக்க பிறகு நாம அவளுட்ட பேசுறது சரியில்ல. நாம நம்ம செயல்ல தான் காட்டணும். சரியா. சொதப்பிடாத. எதுவும் பேசி கோபத்துல இறங்கி போயிடுறது மாதிரி மட்டும் வச்சிக்காத….”
“ம்… வாயை திறந்து ஒற்றை வார்த்தை பேசல… போதுமா?….”
“நல்லது. இறங்கு. வண்டி எடுக்க பத்து நிமிஷம் இருக்குதுல போய் ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்.”
என செல்லியவாறு சங்கிலி டிரைவர் சீட்டிலிருந்து இறங்க, ரவியும் பல்லவியை ஒரக்கண்ணால் பார்த்தவாறே இறங்கினான். ஆனால் . இவர்கள் யாரையும் சட்டை செய்யாதவன் போல வெளியில் பார்த்து கொண்டே இருந்தாள் பல்லவி.
ரவி சங்கிலி காதில் ஏதோ முணுமுணுத்தவாறு சிரித்து கொண்டே டீ கடையை நோக்கி போனதை பார்த்தவள் வெளிப்புறம் பதித்திருந்த தன் பார்வையை திருப்பி வண்டியினுள் ஒட விட்டாள்.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது
கண் முன்னால் மின்னிக் கொண்டிருந்த வைரவரியை நெஞ்சுக்குள் நிரப்பியவாறு முன்னால் வந்தாள். டிரைவர் சீட்டை தொட்டு பார்த்தாள். முன்னால் இருந்த முருகனின் படத்தையும் அவர் வள்ளி தேவானையோடு குதூகலமாய் இருப்பதை பார்த்ததும்…
“ஒண்ணுக்கே வக்கில்ல. இதுல இரண்டு பொண்டாட்டியோட படம். ஆனாலும் முருகர் அழகா தான் இருக்காரு தொட்டு வணங்கியவள்…”
“சரியான கஞ்சன். ஒரு பத்து ரூபாய்க்கு பூவாங்கி போட்டிருக்கானா பாரு. தினமும் வாங்க வேண்டி வரும்னு ஒரு பிளாஸ்டிக் பூவை வாங்கி வச்சிருக்கான். இவன் எல்லாம் கட்டுன பொண்டாட்டிக்கு எப்படி பூ வாங்கி கொடுப்பான். தேற மாட்டான். இவன் தேற மாட்டான். நான் நினைக்கிறது தான் சரி போல மாறாம அப்படியே இருக்கான்.”
எண்ணியவள் முன் சீட்டில் இருந்து ஒவ்வொரு சீற்றாக தொட்டு கொண்டே வந்தவள் கடைசியில் உரிமை என்ற இடத்தில் சங்கிலியின் பெயரை பார்த்ததும் அப்படியே நின்றாள்.
“செமயா தான் இருக்கு வண்டி. கருங்காக்கா எப்படி பணத்தை செலவு பண்ண போகுதோணு நினைச்சேன். சும்மா சொல்ல கூடாது. வண்டியை நல்லா தான் பாத்து வாங்கியிருக்கான். நல்ல வேளை அந்த கரி துணியை மாத்தி காக்கி சட்டை போட்டுட்டான். அது ஒண்ணையும் தான் உருப்படியா மாத்தியிருக்கான்.”
“இனி என் கூட இருக்குற பிசாசுகள் நம்ம முன்னால மட்டமா பேசாது. அது போதும். விக்கி முன்னால குனிஞ்சி நெளிய மாட்டான். நம்ம முன்னால வந்து வந்து நிக்க மாட்டான். அவன் வேலையை பார்க்கவே நேரம் சரியா இருக்கும். இப்போதைக்கு இது போதும்.”
“ஒரு வண்டி வாங்கிட்டான். செக்கென்டா வாங்காம புதுசா வாங்கிட்டான். இதுக்க மேல அவனுட்ட எதிர்பார்க்கிறதே அதிகம். இனி பொழச்சிப்பான் என்ற மனதிருப்தி உண்டானதும் வெளியே எட்டி பார்த்தாள். தூரத்தில் டீ குடித்து முடித்து இருவரும் வருவது தெரிந்தது.
“இரண்டுக்க முகத்துலயும் பரவசத்தை பாரு. பெரிசா சாதிச்சிடாங்க. நான் பணத்தை திருப்பிக் கொடுத்ததால இதை வாங்கிட்டான். அப்புறமா வரிசை கட்டி சொல்லி வச்சிருக்கானே அதை எப்படி செய்றானு பார்ப்போம்.”
எண்ணி கொண்ட நேரம் படியில் ஏறிய ரவி நேரே பல்லவி அருகில் வர…
அதுவரை செல்லில் நோண்டி கொண்டிருப்பது போல பாவ்தா பண்ணிய பல்லவி என்ன என்பது போல் நிமிர்ந்து பார்க்க…
தான் பண்ணிய கூத்தில் தான் பல்லவி வேறுவிதமாய் ரியாக்ட் பண்ணி மொத்த பணத்தையும் சங்கிலி முகத்தில் விட்டெறிந்தாள் என்ற அதிர்வு இன்னும் மாறாதவன் போல… பேச வார்த்தைகள் தேடி மென்று விழுங்கியவனிடம் …
” என்ன?…. எதுக்கு பக்கத்துல வந்து விழுங்குறது போல பாக்குறா?… எதுவும் பேசணுமா?”
” ம்கூம்… இல்ல…”
“அப்ப ஏன் என் பக்கத்துல வந்து நிக்குறா?”
“உனக்கு உளுந்தம் வடை புடிக்குமே… அதான்…”
அவன் இழுக்க…
“அதுக்கு…”
அவளும் அவனை பார்க்க…
“இரண்டணம் வாங்கிட்டு வந்திருக்கேன். “
அவன் தூக்கி நீட்ட…
“எதுக்கு?…”
“உனக்கு தான்…”
“நான் உனட்ட கேட்டேனா?…”
“இல்ல நம்ம வூட்டு புள்ளையை பார்க்க வச்சிட்டு சாப்பிடுறது சரியில்லை… அதான்…”
“ம்.. உங்க வூட்டு புள்ள…”
” இல்லயா பின்ன…”
“அதான் அத்தனை பேர் கூட்டத்துல வந்து அசிங்கப்படுத்துனியா?…”
என்றதும் பேச முடியாம அவன் தலை குனிய…
“பரவாயில்ல. எனக்கு நல்லது தான் செய்திருக்கா… அதுனால தான் நான் கடன்காரியா இருந்த விசயமே எனக்கு தெரிஞ்சிது. இல்ல காலத்துக்கும் தெரியாம ஏமாளியாவே இருந்திருப்பேன். இப்பதான் மனசுல எந்த பாரமும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”
“இனி மும்பை போனாலும் எந்த குற்றவுணர்வும் இல்லாம சந்தோஷமா இருப்பேன். கொண்டா சாப்பிடுறேன். என் மாமன் மகன் வாங்கி தந்திருக்கான். சாப்பிட மாட்டேனு சொல்லுவேனா? வேற யாராவது வாங்கி தந்தா கன்னத்துலயே ஒண்ணு கொடுத்திருப்பேன். உன்னை அப்படி செய்ய முடியுமா?”
என அவன் கையில் இருந்த வடையை வாங்கி கொள்ள… கொடுத்த கையோடு ரவி தன் இரு கன்னத்தையும் பொத்திக் கொண்டான். அதை பார்த்து சிரித்தவள், பிரித்து வடையை பிய்த்து எடுத்து கொண்டு நிமிர்ந்து சங்கிலியை பார்க்க…
இருவரும் பார்வையால் பேசி கொள்வதை கண்டதும்,
“அட கூட்டு களவாணிங்களா? இருக்கட்டும். வடையை சாப்பிடலனா ரவியோட முகமே வாடி போயிடும். சாப்பிட்டிடுவோம். இன்னும் ஒரு மாசத்துல மும்பை போயிடுவோம். அப்புறம் எப்போ திரும்பி வர முடியுதோ என்னவோ. நம்ம பண்ணுற ஆராய்ச்சி வேற பெயிலியராப் போச்ச்சு. அது சக்ஸஸ் ஆகிறது வரை இங்கே வர முடியாமலே போயிடும்…”
“அதுக்குள்ள இவனுங்ககிட்ட எதுக்கு சண்டை…”
என நினைத்தவள் கையிலிருந்த பீஸை வாயில் வைக்க… ரவியின் முகம் மட்டுமல்ல… சங்கிலியின் முகமும் விரிவதை பார்த்தாள். ஆனால் பக்கத்தில் இருந்தும் ஒற்றை வார்த்தை பேசாமல் ஒதுங்கி நின்றதை கண்டதும்
“இதுதான் சரி. நீ என்னை விட்டு தூரமா நிக்குறது தான் உனக்கு நல்லது.” எண்ணிய நேரம் சங்கிலி உள்ளே வந்து டிரைவர் சீட்டில் அமர… வண்டியில் வந்து டிரைவர் ஏறியதும் கூட்டம் குடுகுடுவென உள்நுழைய தொடங்க… இரண்டு நிமிடத்திலே வண்டி நிரம்பி விட்டது. கூட்ட நெரிசலில் முண்டி கொண்டு வந்து ரவி டிக்கெட்டை கிழித்து ஒவ்வொருவருக்காக கொடுக்க… பணத்தை வாங்கி கொண்டே வந்தவன் பல்லவி அருகில் வந்து தயங்கியவாறு நிற்க…
இருபது ரூபாயை எடுத்து நீட்டியவள்,
” தாமரை குளம் ஒண்ணு…” என சொல்ல..
அதை வாங்கலாமா?… வேணாமா?… என பெரிய பட்டிமன்றத்தையே மனதில் ஒட விட்டவன்.
கடைசியில் அவள் கையில் இருந்த பணத்தை வாங்காமலே கடந்து செல்ல…
“என்ன டிக்கெட் கேட்டா கொடுக்கம போறா?..”
“ம்… எங்க வூட்டு புள்ளைட்ட எல்லாம் காசு வாங்க முடியாது.”
அவள் தயங்கியவாறு மிக மென்மையாக சொல்ல…
“உங்க வூட்டு புள்ள எல்லாம் வீட்டுல . பஸ்ல வந்தா டிக்கெட் கொடுக்கிறது தான் உன் வேலை. உரிய பணத்தை எடுத்துட்டு டிக்கெட் கொடு. இல்ல இப்படியே இறங்கிடுவேன்.”
என்றவள் எழ முயல….
“சத்தம் போடாத பல்லவி. உட்காரு. எல்லாரும் பாக்கிறாங்க…”
“பார்த்தா எனக்கென்ன ? டிக்கெட்டை கொடுங்க. இல்ல இறங்க விடுங்க. இல்லனா பத்து வருஷம் கழிச்சி ஏதாவது கூட்டத்துல வச்சி உன்னை ஒஸியில கூட்டிட்டு வந்தேணு கூட சொல்லி மானத்தை வாங்குவீங்க.”
“என்ன புள்ள இப்படி எல்லாம் பேசுதா…”
“அனுபவம். அனுபவம் என்னோட மாமன் மவனே. பேசம டிக்கெட் கொடு.”
என்றதும் திரும்பி சங்கிலியை ரவி பார்க்க,. அவன் வாங்கு என்பது போல கண் ஜாடை காட்ட, ரவியும் டிக்கெட்டை கிழித்து கொடுத்து காசை பெற்றுக் கொண்டான்.
“சம்பாதிக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள இனாம் கொடுத்தா விளங்கிடும். நான் கூட ஜெயிச்சிடுவானோனு ஒரு நிமிஷம் தப்பு கணக்கு போட்டுட்டேன். நான் மரமண்டை தான். நான் இப்படியே தான் இருப்போம்னு நிரூபிச்சிட்டீங்க. எனக்கு நல்லா தெரிஞ்சி போச்சு. நீங்க மாறப் போறதே இல்ல.”
பல்லவி முணுமுணுக்க .
“என்ன நீ!… எப்பவும் எங்களை அசிங்கப்படுத்திட்டே இருக்கா. பாரு. உன் முன்னால தானே சங்கிலி ஜெயிச்சி நிக்குறான். பாரு வண்டியை பாரு. சொந்தமா வாங்கியிருக்கான். தெரியும் தானே. அப்படியும் அவனை பழைய சங்கிலி போல பேசுறா?…”
“என்ன மாறிட்டான். என்ன பெரிசா மாறிட்டான்னு தூக்கி புடிச்சிட்டு வாரா?… நான் கொடுத்ததை வச்சி ஒரு வண்டி வாங்கிட்டான். அவ்வளவு தானே. அது பெரிசா சாதனையா? இப்பவும் உன் நண்பன் சாதாரண டிரைவர் தான். டிரைவர் வேலையில அமர்ந்துட்டு எதுக்கு இந்த வீராப்பு. அந்தா பாரு. அவனும் உன் பிரண்ட்டும் ஒண்ணு தான்.”
என வேறு ஒரு வண்டி டிரைவரை காட்ட ,கொதித்து போன ரவியோ…
“வாய் இருக்குதுணு பேசாத பல்லவி. அவனுங்க வண்டியை சொந்தமா வச்சிட்டு டிரைவரா வேலை பார்க்கல. அவனுங்க அந்த வண்டியோட ஒனர் இல்ல. டிரைவர் மட்டும் தான். ஆனா நம்ம சங்கிலி அப்படியா? “
“பெரிய பெருமை தான். ஏண்ணா உன் நண்பன் மூணு நாலு வண்டியை ஒட விட்டு கை நிறைய காசு பார்த்துட்டான் பாரு.”
“ஏன் பார்க்க மாட்டோமோ.?.. பாத்துட்டே இரு. எதுவும் இல்லாம தன்னோட உழைப்பால சொந்தமா வண்டி வாங்குன என நண்பனால அதையும் செய்ய முடியும்.”
“ரொம்ப பெருமைப்பட்டுக்காத. இது என்னவோ என்னால தப்பிச்ச பணம். இனி வருகிற பணத்தை என்ன சாதிச்சி கிழிக்கிறானு நானும் பாக்குறேன். வேணா பாரு. இதுக்க மேல அவன் ஒரு பஸ்ஸை கூட வாங்க போறது இல்ல. வீடு வைக்க போறது இல்ல. பாத்துட்டே இரு. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்க முன்னால வந்து சொடக்கு போட்டுட்டு நிப்பேன். அப்போ உங்க மூஞ்சியை எங்க கொண்டு வச்சிருக்கீங்கணு நானும் பாக்குறேன்.”
அதையே தான் நானும் சொல்றேன் பல்லவி..நீ… நீ… கூட நினைச்சி பார்க்க முடியாத உயரத்துல போய் சங்கிலி அமர தான் போறான். அதை நீ பார்க்க தான் போறா?… அப்படி அவன் உட்காருக்கிற போது நீ உன் மூஞ்சியை கொண்டு எங்க வச்சிப்பாணு நானும் பாக்குறேன்.”
ரவியும் அதே டோனில் பேச…
“பார்த்திடுவோம்டா. நீ சொல்லுறது நடக்குதா? இல்ல நான் சொல்லுறது நடக்குதானு?” .
“அடுத்த மாதம் மும்பைக்கு திரும்பி போறேணு சொன்னால புள்ள. நீ போயிட்டு திரும்பி வருகிறதுக்குள்ள என் சங்கிலி எப்படி மாறி போயிருக்காணு பாரு. அவனை சீண்டி விட்டுட்டால புள்ள. அந்த சிங்கத்தோட சீற்றத்தை நீ திரும்பி வருகிறப்ப பார்க்க தான் போறா?. அப்போ பேச முடியாம நிற்க தான் போறா?…”
“அதையும் பாக்குறேண்டா. நிச்சயம் நான் திரும்பி வரும் போது ஊரே புகழ கூடிய நிலையில தான் திரும்பி வருவேன். அப்போ உன் தோழன் என்னை எதிர் கொள்ளுற அளவாவது வரானாணு பார்ப்போம்..”
“பாரு பல்லவி பாரு… அவனும் உனக்கு குறைஞ்சவன் இல்லணு காட்டுறானா இல்லயாணு பாரு.”
” எனக்கு ஈக்குவலா? சான்ஸே இல்ல. என்னை நிமிர்ந்து பார்த்து பேசுற தைரியம் அவனுக்கு இருக்கிற அளவு உசந்து நிக்குறானாணு பாரு.”
பல்லவியும் எகத்தாளமாக சொல்ல…
“பார்க்க தானே போறா?… நீ அவன் முகத்துல விழிக்க முடியாம தவிக்கிறியா? இல்ல அவன் தவிக்கிறானானு .. ”
ரவி உட்சபட்ச வெறியோடு சொல்ல…
அதே நேரம் வேறு ஒரு ஸ்டாப் வந்து விட, கூட்டம் கொஞ்சமாக இறங்க ஏறி வந்த கூட்டத்துக்குள் டிக்கெட்டோடு போனவனை பார்த்து பெருமூச்சு விட்ட பல்லவி.
“நம்பிக்கை தேவை தான். இது ஒவரால இருக்கு. என்னை விட உயர்ந்து நிப்பானாமே. நிக்கட்டும். அதையும் நான் பாக்குறேன்.”
பல்லவி கர்வி கொண்டு வேறு பக்கம் திரும்ப… சங்கிலியோ இது எதுவும் தெரியாமல் வண்டியை முன்னோக்கி செலுத்தி கொண்டே இருந்தான். ஆனால் அவன் மனதில் இதற்கு மேல் கீழ் இறங்கி அவள் பின்னால் செல்லவே கூடாது என்ற தீர்மானத்தில் தான் இருந்தான்.
என்னை குப்பையாக பேசி விட்ட அவள் முன் உயர்ந்து காட்டாமல் போய் நிற்கவே கூடாது என்ற வீர ஆவேசத்திலே தான் இருந்தான். அதனாலோ என்னவோ அதன் பின் பல இடங்களில் அவளை சந்தித்த போதும் நிமிர்ந்து கூட அவன் பார்க்கவே இல்லை. பல்லவி ஒர கண்ணால் அவனை கடந்து சென்றாலும் அவளும் அவன் அருகில் வரவே இல்லை. ரவி இடை இடையில் அவன் முன் போய் மல்லு கட்டி கொண்டு நின்றாலும் கடைசியில் மொக்கை வாங்கி கொண்டே திரும்ப…
பல்லவி சொன்ன ஒவ்வொரு வரியையும் சங்கிலியிடம் சொல்ல சொல்ல… அவனுள் எரிந்து கொண்டிருந்த தீ குபுகுபுவென எரியத் தொடங்கியது. அது எரிந்த வேகத்தில் சங்கிலியின் வேகமும் இருந்தது. பல்லவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை ஆட்டி படைக்க படைக்க வீறு கொண்ட புலி போல உணர்வின் தாக்கத்திற்கு ஆட்பட்டு முன்னேறி சென்றான்.
அவன் முன்னேற்றத்திற்கு தண்டபாணியும் ரவியும் உறுதுணையாக இருந்தனர். சங்கிலி ரொம்ப கஷ்டப்பட்டு பணம் சேர்க்க பத்து லட்சம் சேர்த்த போது தண்டபாணி தன் சொந்த கடையை மொத்தமாக விற்று பணம் கொடுக்க தாமரை வண்டி கொட்டாரம் to கன்னியாகுமரி என ஒடி அதிக வசூலை அவனுக்கு பெற்று தந்தது. நாட்கள் செல்ல செல்ல தாமரை மினி பஸ் மட்டுமின்றி தாமரை லாரி சர்வீஸ் என இரு வண்டி நாகர்கோவில் to மும்பை என ஒடத் தொடங்கியது. அந்த வண்டி பயணத்தின் பின் சங்கிலியின் வளர்ச்சி அசுர வளர்ச்சி கண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
மினி பஸ் சர்வீஸால் மனநிம்மதியை சங்கிலி அடைந்தாலும் அவனால் கைக்கு கொள்ளாத அளவு சம்பாதிக்க முடியவில்லை தான். ஆனால் லாரி சர்வீஸ்க்கு பின் சங்கிலி காட்டில் பண மழை பெய்ய ஆரம்பித்தது. அதிலும் இங்குள்ள பொருள்களை மும்பைக்கு அனுப்ப எல்லா தொழில் அதிபர்களும். இவனிடமே வரும் அளவு தொழிற்சங்க தலைவராகவும் அவன் உயர்ந்தது அவனை உயர்வின் உச்சத்தில் அமர்த்தியிருந்தது. இந்த உயர்வே அவனின் சிறு வயது ஆசை அத்தனையும் நிறைவேற்றிக் கொடுத்தது. ஊரில் மூன்று மாடியில் பெரிய வீடு ஒன்று வேலை நடந்து கொண்டிருக்கிறது என்றால் நாகர்கோவில் டவுணில் இவனின் ஆபீஸ் மிக மிக பிரமாண்டமாய் இருந்தது.
இப்படி பல்லவியின் மூக்கை உடைக்கும் அளவு சங்கிலியின் வளர்ச்சி போய் கொண்டிருந்த நேரம் பல்லவி விக்கியோடு அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்த்த கொண்டிருந்தாள். முன்பை விட இருவரின் நட்பும் இப்போது ரொம்பவே நெருங்கி போயிருந்தது.
அத்தியாயம் தொடரும்.
Best Romantic Novel