வணக்கம் வாசகர்களே!
சங்கிலி முதன்முறை தன் காசில் பல்லவிக்கு செலவு செய்கிறான். இதை தெரிந்து கொள்வாளா பல்லவி ?
வீட்டின் வெளியில் ஒரு ஆடவரின் குரல் கேட்க ஐஸ்வர்யாவோடு இருந்த பல்லவி எழ முயல…
“இருக்கா… அப்புறம் நான் கள்ளாட்டு ஆடிட்டேன்னு சொல்லுவா? ” முன்னால இருந்த சின்ன குண்டில் புளியமுத்தை போட்டவாறு ஐஸ்வர்யா சொல்ல… எழ முயன்ற பல்லவி மறுபடியும் அமர்ந்த போது,
“வந்துட்டேன்டா!…”
என்றவாறு பரபரப்போடு பாண்டி வெளியே செல்ல, அங்கே சங்கிலி நின்று கொண்டிருந்தான். அவனையும் அவன் கையில் இருந்த பார்சலையும் பார்த்தவர் முகம் மலர…
. “வாங்கிட்டு வந்துட்டியா சங்கிலி. ரொம்ப சந்தோசம். நீ மட்டும் தக்க சமயத்தில் உதவலணா நாளைக்கு பல்லவியால ஸ்கூலுக்கே போக முடியாது. ரொம்ப நன்றிடா. ஆமா பிரேக் டவுன் ஆனா மினி பஸ் சரி ஆயிடுச்சா.”
“எங்க அண்ணே இன்னும் நாலு நாள் நம்ம ஊர் ஆளுங்களுக்கு வெளியூர் போகணும்னா சிரமம் தான். வழியில டிரைவரை பார்த்தேன். எப்படியும் ஒரு நாலு நாளாவது ஆகும்னு சொல்றான்.” .
. “நல்ல நேரம் நேற்று நீ மட்டும் வரலனா நான் திரும்பி வாங்காம தான் வந்திருப்பேன்.”
பாண்டி பேசிக் கொண்டிருக்கும்போதே பார்சலை பிரித்த சங்கிலி…
“எல்லாம் சரியா இருக்குதான்னு ஒரு முறை செக் பண்ணிக்கோங்க.”
. “என்னடா நீ!… சரியா தான் இருக்கும்”
“அதுக்கு இல்லனே. நமக்கே எழுத படிக்கத் தெரியாது. இதுல வேற இந்த புள்ள இங்கிலீஷ்ல எழுதி இருக்கு. கடைக்காரன் சரியா போட்டானானு எனக்கென்ன தெரியும்..எதுக்கும் ஒரு முறை சரியா பாருங்க. எதுவும் மிஸ் ஆயிடுச்சுனா சொல்லுங்க. நாளைக்கும் டவுன்ல ஒரு வேலை இருக்கு. போகும் போது வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்.” என்றதும்…
. சங்கிலி நீட்டிய பேப்பரை வாங்கியவர் சரிபார்க்கத் தொடங்க…
“இது அதுல எழுதி இருக்காதுனே.ஆனா தேவைப்படும் இல்ல. அதான் பார்த்ததும் வாங்கிட்டேன்.”
ஜாம்டிறிபாக்ஸை அவன் காட்ட…, சிரித்துக்கொண்ட பாண்டி அடுத்து பேக்கை கையில் எடுக்க,
.”இதுவும் அதுல இருக்காது. இம்புட்டு நோட்டை அந்த புள்ள கைலயா கொண்டு போகும். அதனாலதான்….”
சொல்லிக் கொண்டு அவன் தலையைச் சொறிய…
“விவரம் இல்லாதவனா நீ!… புள்ளையை பெத்த அப்பன் கூட இவ்வளவு யோசிச்சு யோசிச்சு பண்ண மாட்டான்டா”
. என்றவர் நோட்டை சரிபார்க்க, எல்லாம் சரியாக இருந்தது.
“எல்லாம் சரியா இருக்குடா சங்கிலி.”
“சரியாதான் இருக்கணும். பேப்பரில் போட்டு இருக்கிற எண்ணிக்கையை எண்ணி சரியா இருக்குதான்னு பார்த்து தான் கொண்டு வந்தேன்.”
“இது எதுக்குடா…”கர்ச்சிப்பை அவர் தூக்கிக்காட்ட..
“பொம்பள புள்ளைங்க கையில் எல்லாம் இது இருக்குமே. ஒரு வேளை இல்லாம போயிடக் கூடாதுல அதான் வாங்கினேன்.”
அப்பாவித்தனமாக சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவர் ,
“உனக்கு நல்ல மனசுடா.”
“அது இருந்துட்டு போகட்டும். கொண்டு அந்த புள்ளைட்ட கொடுங்க. நாளைக்கு சந்தோஷமா ஸ்கூலுக்கு போகட்டும்.”
. சொன்னவன் விடைபெற்று வெளியேறி இருக்க, பாண்டி மொத்த பொருளோடு உள்ளே வந்தார்.. அதை பார்த்த கமலம் உள்ளுக்குள் புகைய, பாண்டியோ… பல்லவியின் அருகில் வந்தார். அவரையும் அவர் கையில் இருந்த பொருட்களையும் பார்த்தவள் முகம் மலர, அவர் அருகில் வர,
“இந்தா… நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போகக்கூடிய மொத்த பொருளும் வாங்கியாச்சு. இனி எல்லாம் உன் வேலை தான். ஒழுங்கா படிக்கணும் ஓகேவா” .. “ம்…ம்…ம்…”
என்றாள் முகம் எல்லாம் பூரிப்போடு… .
பாண்டி தன் கையில் கொடுத்த புத்தகங்களை அந்த மரபெஞ்சின் மேல் அடுக்கியவள் ஒவ்வொன்றாக பிரித்துப் பார்க்கத் தொடங்கினாள். அதே நேரம் ஒரு நோட்டின் ஓரத்தில் கரி படிந்திருக்க அதை பார்த்த பல்லவி,
“புது நோட்டுல என்ன அழுக்கு”.
சலித்துக் கொண்டு துடைக்க… முடியல, அது போவேனா? என்பது போல அடம் பிடிக்க, ஒரு வருடம் கையில் வைத்திருந்தால் கூட நோட்டை அழகாக வைத்திருக்கும் அவளுக்கு முதல் நாளே கறையோடு காண பொறுக்க முடியவில்லை. தன் பாவாடையை வைத்து அழுத்தி எடுத்து பார்த்தாள்.
அவளுக்கு தெரியாது. அந்த கறி படிந்த வாழ்வில் தன்னை தொலைத்துக்கொண்டு உழைத்து வந்த காசில்தான் இன்று தன் கையில் புத்தகம் வளர்ந்துள்ளது என்று.அழுக்கையே வெறுக்கும் நிலையில் பல்லவி. அழுக்கோடே வாழும் இடத்தில் சங்கிலி. வாழ்க்கை இவர்களை புரிய வைக்குமா?. .
காத்திருப்போம்…
காலையில் சுறுசுறுப்பாக புறப்பட தொடங்கினாள் பல்லவி. யூனிபாம் இல்லாததால் கலர் டிரஸ் தான் அணிந்திருந்தாள். பாண்டி அவளைக் கொண்டு விட்டு காட்டுக்கு செல்வதாக தான் இருந்தது. ஆனால் வழியிலே லாரி ஒன்று போக தயாராய் இருக்க,
“நீங்க கிளம்புங்க. ஸ்கூலுக்கு தானே நான் ரெடி பண்ணி விடுறேன்.
செழியன் கூட போவான்.” .
என கமலம் சொல்ல செழியனிடமும் பல்லவிடமும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு தான் கிளம்பினார் பாண்டி. அவர் கிளம்பியதுமே பல்லவி புறப்பட தொடங்கினாள். குழந்தைகளை அதட்டி, உருட்டி புறப்பட வைத்ததை பார்த்தே…
“அத்தை…மாமா சென்றதும் சரி இல்லை” என்பதை புரிந்து கொண்டு எதற்கும் அவர்கள் உதவியை நாடாமல் புறப்பட்டு ரெடியானாள் பல்லவி. உணவு தட்டு பறந்து தான் வந்தது. எதுவும் பேசாமல் உண்ண தொடங்கினாள். கடைசியில் செழியன் வந்து அழைக்க அவனுடன் பயணமானாள். .
. மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு. புது ஸ்கூல், புது தோழர்கள், தோழிகள் எப்படி இருக்குமோ?…என்ற பதபதைப்பு வேறு. வழியில் செழியன் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான்.. முட்டாய் கடை வந்துவிட “மாமா சொன்ன முட்டாய் கடை வந்துடுச்சு. அடுத்து கொஞ்ச தூரத்தில் சைக்கிள் கடை அப்புறமா சிவன் கோயில். கொஞ்சம் போனா ஒரு ஒத்தையடி பாதை. அது வழியா போகணும்னு தானே மாமா முதல்நாள் சொன்னாங்க.”
பல்லவி மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் கடை வந்து விட எதேச்சையாக அவள் கண்கள் கடையின் முன் பகுதிக்கு செல்ல, அங்கு அழுக்கு துணியோடு சைக்கிள் டயரோடும் போராடிக் கொண்டிருந்தான் சங்கிலி. .
அவனின் அழுக்கான தோற்றமும், அன்று அவன் தோற்றத்தில் சாமியாரின் ஞாபகமும் வர பயந்து போனவள் சட்டென மறுபக்கம் ஒதுங்கி செழியன் கையை பிடித்துக் கொண்டு மறைந்து மறைந்து செல்ல…
அதே நேரம் அவளை பார்த்துவிட்டு சங்கிலி வியப்பில் எழுந்து தன் கறி படிந்த கையை தன் அழுக்கு பனியனில் துடைக்க, அதை பார்த்து அவளுக்கோ ஒமட்டல் வர… பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு செழியனை இழுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தில் இருந்து ஓடி மறைந்தாள்.
. புன்சிரிப்போடு அமர்ந்தவனுக்கு அதன்பின் வேலை ஓடவில்லை. ஜெகனிடம் கடையை பார்க்கச் சொல்லி விட்டு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் வந்தான்.
. “ஐ!…சங்கிலி……”
“வந்த நாளே பத்ரகாளியா ஆடுனா புள்ள பின்ன பயப்படாம என்ன செய்யும்…”
சொன்னவாறே வந்த கணவரை திரும்பி பார்த்தவள். வராத புன்சிரிப்பை கஷ்டபட்டு வர வைத்து விட்டு பின் திரும்பி அவள் புறம் நீட்ட…
“வாங்கிக்கம்மா… இல்ல வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிடும்…”
பாண்டி சிரித்து கொண்டே சொல்ல… பல்லவியும் தயங்கியவாறே வாங்கி கொண்டாள்.
ஆனாலும் விழி உயர கமலத்தை பார்த்தவாறே வாங்கியவள் சட்டென பாண்டி பக்கம் திரும்ப…
“குடி” என்பது போல பாண்டி சைகை காட்ட மெல்ல வாயில் வைத்து உறுஞ்சத் தொடங்கினாள்.
“சரி நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் இட்லி சமைச்சு வைக்கிறேன்.நீயும் தான் பொண்ணே…”
சொல்லியவாறு கமலம் வெளியேற பிரமிப்போடு தான் பார்த்து நின்றான் பாண்டி. உண்மையிலே அன்றைய நாள் முழுவதும் புதுப்புது ஷாக்காக தான் கொடுத்துக் கொண்டிருந்தாள் கமலம். அதை உண்மை என நம்பிய பாண்டியும் மனதுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அதிலும் கமலம் பல்லவியை தங்கள் குடும்பத்தோடு உட்கார வைத்து பரிமாறியதும் பாண்டி.
“போதும்… இது போதும்… என்னோட மனசுல இருந்த பெரும் கவலை நீங்கிடுச்சி கமலம்…”
என்றதற்கும் வார்த்தையை கொடுக்காமல் புன்சிரிப்பையே பரிசாக்கியவள் அன்று முழுவதும் பாண்டியை குளிரவே வைத்தாள். அதில் உட்சகட்டமாக இரவு நிலவு மகளை வான் சிலையில் ரசித்துக்கொண்டிருந்த வேளை அருகில் வந்த கமலமோ…
“ஏன்ய்யா படுக்கலியா?”
என்றாள் காதோரம் கிசுகிசுப்பாக…
“படுக்கணும் புள்ள” ..’
“அப்போ வா“
“இல்ல நீ போய் படு. நான் கொஞ்சம் நேரம் கழிச்சி“
அவன் சொல்லி முடிக்கவில்லை. அவன் சட்டையை பிடித்து இழுத்தவள்….
“உன்னை இப்படியே விட்டா சரியில்ல.”
என இழுத்துக் கொண்டு போக… மனைவியின் கோபத்தை உள்ளுக்குள் ரசித்தவன் அவள் பின்னே போக.… “
“ஏய்…ஏய்…ஏய்… என் இடம் அங்க…”
தினமும் படுக்கும் இடத்தை அவன் சுட்டி காட்ட…
“ம்… அங்க ஒரு இடம் இரண்டு வாரமா ஏங்கிட்டு இருக்கு. பேசாம அங்க வந்து படுய்யா….”
“பல்லவி பாவம்..”
“நானும் பாவம் தான்ய்யா…”
அவளும் கிறக்கமாக சொல்ல..
“இல்ல புள்ள அது..வந்து… ”
“வந்து போயி…… உன்னை இன்று எங்கேயும் விடுறதா இல்ல. சரியா தூங்கி இரண்டு வாரமாச்சு. உன் அருகாமை இல்லாம தூக்கம் கூட வரல.பேசாம வந்து படு…”
“நாங்களும் குறட்டை விட்டா தூங்குனோம். புரண்டு புரண்டு தான் படுத்தோம்.”
. “அந்த அவஸ்தை இனி வேணாம். வாய்யா…”
என இழுத்தவள் அறைக்குள் சென்றதும் அவனை பிடித்து தன் மார்புக்குள் பொதிய பாண்டியும் அவளுள் புதைய தொடங்கினான்.
. மறுநாள் காலை என்றும் இல்லாமல் இன்று கமலம் சுறுசுறுப்பாக நின்றாள். பல்லவியையும் வஞ்சகம் இல்லாமல் கவனித்தாள். ஆனால் பல்லவியால் தான் அவர்களோடு இணைய முடியவில்லை ஒதுங்கி ஒதுங்கி போய் அமர்ந்து விட…
. பாண்டி தான் பல வேளை அவளை அழைத்து வந்து எல்லாரிடமும் பழக விட்டான். இப்போது குழந்தைகளும் பேச ஆரம்பித்திருந்தாலும் அவர்களிடம் கூட பல்லவியால் நெருங்கி வர முடியவில்லை. எப்போதுமே ஒரு பதற்றம் படபடப்பு இருந்து கொண்டு தான் இருந்தது .
. அன்றே மனைவி நல்ல மூடில் இருக்கும் போது பேசிவிட வேண்டும் என்றே பல்லவியின் படிப்பை பற்றியும் பாண்டி பேசி விட ஆரம்பத்தில் வேண்டாம் கூடவே இருந்து என் வேலையில் ஒத்தாசை பண்ணட்டும் என்பதை கேட்க கணவர் தயார் இல்லை என்பதை உணர்ந்ததும் பின்வாங்கிக் கொள்ள பாண்டி அந்த விஷயத்திலும் ஜெயித்துவிட்டார் .
. உடனே சுறுசுறுப்பானவர் அன்றே அவளை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பி விட ஸ்கூலில் கேட்ட அத்தனை கேள்விக்கும் பல்லவி சரியாக பதில் சொல்ல அவளை பாராட்டிய பள்ளி நிர்வாகம் அவளை சேர்த்துக்கொண்டது .
. திரும்பி வரும்போது பாண்டி
“இனி பல்லவிக்கு நிறைய பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. மூலையிலே அடைஞ்சி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை சரிதானே கண்ணு.” .
. “ம்…ம்…ம்…”
என்றாள் சிரித்துக் கொண்டு…
. “அப்பா…புள்ளைக்கு ஸ்கூலுக்கு வந்த பிறகு தான் சிரிப்பே வருதுல. அது சரி.நீ தான் ஸ்கூல் டாப்புணு சொல்லியிருக்கால. டாக்டர் ஆகிறது தான் தன்னோட ஆசைணு வேற சொன்னியே…”
. என்றதும் பல்லவி ஆமா என்பது போல தலையசைக்க…
“அது உன் கையில தான் இருக்கு பல்லவி. மாமாவால அவ்வளவு பெரிய படிப்பெல்லாம் கொடுக்க முடியாது. ஆனால் நீ நினைச்சா முடியும். உன் மார்க் உன்னை அப்படி ஒரு உயர்ந்த இடத்துல கொண்டு போய் உட்கார வைக்கும். அதுக்கு நீ படிக்கணும். ஒரு மார்க்கை கூட நான் இழந்துட கூடாதுனு நினைச்சி படிக்கணும்.”
. “உன் அத்தைகாரி இவ்வளவு இறங்கி வந்ததே உலக அதிசயம். இதுக்கு மேல நம்மளால அவளுட்ட எதையும் எதிர்பார்க்க முடியாது. பாண்டி கூட்டிட்டு போனான். பல்லவியோட வாழ்க்கை சீரழிஞ்சி போச்சுணு ஒருத்தன் பேசிட கூடாது. நீ பேச வச்சிடக்கூடாது மாமா உனக்கு நல்லது தான் செஞ்சேணு நம்ம உறவுகள் எல்லாரும் பேசுறது போல செய்யணும்… செய்றியா பல்லவி?…” .
. “நிச்சயமா… நிச்சயமா மாமா. இனி எனக்கு அது ஒண்ணும் தான் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்ணு தெரியும் மாமா. உங்க பெயருக்கு களங்கம் வருகிறது போலவும் நடக்க மாட்டேன். நீங்க வருத்தப்படுவது போலவும் செய்ய மாட்டேன். உங்க பெயருக்கு மதிப்பை கொடுக்கிறது மாதிரி நிச்சயம் உயர்ந்து நிற்ப்பேன்.”
. “போதும்மா. உன் மாமனுக்கு இது ஒண்ணும் போதும்.” .
மன நிறைவோடு வீட்டுக்கு அழைத்து வந்து உள்ளே விட்டவர் நண்பன் சோமுவை பார்க்க விரைந்தார்.
. அதே நேரம்…
துள்ளலோடு வெளிவந்த சங்கிலியை இடைமறித்தார் தண்டபாணி. .
. “இந்த நேரம் தினமும் கடையில தானேடா இருப்பா. இப்ப என்ன அவசரமா கிளம்புறா?…”
. “தெரியுதுல.அவசரமா கிளம்புறேணு. அப்புறம் இப்படி வழி மறைச்சிட்டு நின்னா எப்படி?…”
. “எங்க போறாணு சொல்லிட்டு போறது….”
. “வடிவேலு வீட்டுக்கு போறேன் போதுமா…”
. “வடிவேல் வீட்டுக்கு இப்ப எதுக்கு?…”.
. “தேங்கா ஒரு லோடு வந்திருக்காம். உரிச்சு கொடுத்தா உடனே பணம் தரேணு சொன்னார். அதான் உரிச்சு கொடுத்து என் 8000 ரூபாயை 10 ஆயிரமாகிடலாம்ணு விரைவா கிளம்புறேன்.”
. “அப்போ கடையை பாக்குறது யார்டா….”
. “அதான் நீங்க இருக்கீங்களே முதலாளி”
. “எனக்கு காலெக்ஷனுக்கு போக வேண்டாமா?….”
. ஒரு அரை மணி நேரம் இருந்தா ஜெகன் வந்துடுவான். நீங்க அவனை இருத்திட்டு கிளம்புங்க. நான் அஞ்சு மணியானா வந்துடுவேன். அதுக்கு அப்புறம் தானே சைக்கிள் கொண்டு போனவனுக்கு எல்லாம் திரும்ப வருவாங்க நான் அதுக்குள்ள வந்துடுறேன்.
. “அப்படின்னா இன்றே பத்தாயிரம் ரூபாய் சேர்த்திடுவா போல…”
. “ஆமா பாஸ் இன்று சேர்த்திடலாம்.”
. சொன்னவன் தன் டிவியஸை உசுப்ப அதுவும் வெறி கொண்டது போல ஓடத் தொடங்கியது. ஒரு கையால் வண்டியை பிடித்தவன் மறுக்கையால் தலையை கோதியவாறு விசில் அடித்து ஜாலியாக வந்தான்.
. எதிர்கொண்டு வந்த பாண்டியை பார்த்ததும் மெல்ல வண்டியை ஸ்லோவாக்கி நிறுத்தியவன் அவர் வாடிப்போன முகத்தைப் பார்த்து விசாரிக்க…
. “இல்ல சங்கிலி. அந்த புள்ளையை இன்று ஸ்கூல்ல கொண்டு சேர்த்துவிட்டு வந்ததுல இருந்து சிரிக்கவே செய்யாத புள்ள முகத்துல இன்று தான் சிரிப்பை பார்த்தேன். அப்படிப்பட்ட புள்ளையை நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்பிடலாம்னு பார்த்தா.இப்ப பார்த்து பர்ஸ் காலியாயிருக்குதப்பா.”
“………….” .
. “ரெண்டு வாரம் கமலத்துக்க மேல உள்ள கோபத்தால காட்டுக்குப் போகலையா?… சல்லி காசு இல்லாம போச்சு. கமலத்திட்ட கேட்கலா்ம்னா அவ இந்த புள்ளனா தந்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பா. அதான் யோசனையோட சோமுவ பார்க்க போனேன். எத்தனை நாள் கைமாத்தா என்கிட்ட இருந்து பணம் வாங்கி இருப்பான். இல்லன்னு கையை விரிச்சிட்டான். அப்புறம் முத்து வீட்டுக்கு போலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் அவனே கஞ்ச பையன். அவன் எங்க தருவான்னு திரும்பி வந்துட்டேன்.”
“………….”
“அதான் யார்கிட்ட கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன். நாளைக்கு போக வேண்டாம் ரெண்டு நாள் கழிச்சு போகலாம்னு சொன்னா அந்த புள்ள முகத்துல இருக்குற சந்தோஷம் மொத்தமா தொலைஞ்சு போயிடுமோன்னு கவலையா இருக்கு.”
. பாண்டி வேதனையோடு சொல்ல வண்டியை விட்டு இறங்கியவன்.
. “எவ்வளவு பணம் வேணும்?”
. “ஒரு 2000 ரூபா வேணும்பா”
. “சரி நான் கொடுக்கிறேன்.அந்த பிள்ளைக்கு தேவையானதை வாங்கி கொடுங்க.”
. “சங்கிலி!…!…!…”
. “படிப்பு விஷயமா சொல்றீங்க அதுல வேற இன்று தான் சிரிச்சிதுன்னு வேற சொல்றீங்க. மறுபடியும் நாம அழ வைக்க வேணாம். வண்டியில ஏறுங்க… கடையில சேர்த்து வைத்த பணம் இருக்கு. எடுத்து தரேன்.”
. என்றவனை வெளிறிய முகத்தோடு தான் பார்த்தார் பாண்டி. காரணம் சங்கிலி கையில் இருந்து பணம் வாங்குவது என்றால் அதுதான் உலக அதிசயம். யாருக்கும் அவன் இதுவரை கொடுத்ததில்லை. இந்த அளவு இறங்கி நின்று பேசியதும் இல்லை. முதல் முதலாக தனக்கும் இதயம் இருக்கிறது, அந்த இதயத்திலும் இரக்கம் இருக்கிறது, அந்த இரக்கத்திலும் கனிவு இருக்கிறது என காட்டி நின்ற சங்கிலியை கட்டி அணைத்துக் கொண்டார் பாண்டி. .
. அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel
மௌனம் பேசியதே|EP-15|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! தோழிகள் முன்பு சங்கிலியை அசிங்கப்படுத்தும் பல்லவி. பல்லவியின் செயலால் நொறுக்கி போன சங்கிலி. பல…
மௌனம் பேசியதே|EP-14|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! சங்கிலியை ரத்தம் கொடுக்க அழைக்கும் பல்லவி. வந்தவனின் கோலம் கண்டு கிண்டல் செய்யும் அவள் தோழிகள். …
மௌனம் பேசியதே|EP-13|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! பல்லவி தங்கியிருக்கும் வீட்டிற்கு மீன் கொண்டு வரும் சங்கிலி. தோழிகள் முன் வைத்து அவனை திட்டும் பல்லவி….
மௌனம் பேசியதே|EP-12|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! சங்கிலியின் கடைக்கே விக்கியோடு வரும் பல்லவி? இணைந்து வரும் அவர்களால் மனம் நொந்து போகும் சங்கிலி. …
மௌனம் பேசியதே|EP-11|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! சங்கிலியிடம் மீன் கேட்கும் பல்லவி. அவனை மீன் காரன் போல நடத்தும் அவள் நடவடிக்கையால் கொதித்து போகும்…
மௌனம் பேசியதே|EP-10|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! டாக்டர் படிப்பு முடிந்து ஊருக்கு வரும் பல்லவி. அவள் தோளோடு தோள் உரிசி வரும் அந்த இளைஞன்…