வணக்கம் வாசகர்களே!
சங்கிலியை ரத்தம் கொடுக்க அழைக்கும் பல்லவி. வந்தவனின் கோலம் கண்டு கிண்டல் செய்யும் அவள் தோழிகள்.
“வாங்க சங்கிலி… மீன் கொண்டு வந்துட்டீங்களா? “
என்றவாறே வெளியில் வந்தவனிடம் கையில் இருந்த மீன்பார்சலை தந்தவன்.
“அப்போ கிளம்புறோம். “
“என்ன அவசரம் உள்ளால வந்துட்டு போங்க…”
“இல்லங்க. கடையில் வேலை நிறைய இருக்கு மீன் கேட்டீங்க. கொடுத்தாச்சுல கிளம்புறோம்.”
என உடனே கிளம்பி விட… மீனோடு உள்ளே வந்தவனிடம் ஓடி வந்த பல்லவி.
“எதுக்குடா அவனை உள்ளால கூப்பிடா .”
“ஐயோ அதை ஏன் கேட்கிறா. ஒரு பேச்சுக்கு தான் கூப்பிட்டேன். உள்ள வந்திடுவானோனு பக்கு பக்குணு தான் இருந்துச்சு. அவனும் அவன் முஞ்சும் டிரஸ்சும். பாரு ஊர்ல்ல தான் அப்படி இருக்கானா வெளியில் வரும் போதாவது டீசன்ட்டா வரலாமல்ல…நான் பார்த்தேன். ஓ.கே நம்ம பிரண்ட்ஸ் பாத்தாங்க. வாரி எடுத்திடுவாங்க.”
” ……………..”
“இந்தா முனியம்மாட்ட கொடுத்து சமைக்க சொல்லு.”
என்றதும் மீனை வாங்கியவள் நேரே முனியம்மாவிடம் வர, அடுத்த அரை மணி நேரத்தில் மீன் பொறிப்பாகவும் குழம்பாகவும் டைனிங் டேபிளில் வந்தது.. அனைவரும் உண்ண உட்கார்ந்தனர்.
“நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு கார் வந்திடும். எல்லாரும் அதுக்கு முன்னால ரெடியாகிடணும்”
சத்யா சொல்ல…
“நாளைக்கே கிளாஸ் தொடங்கிடுமா சத்யா.”
“நாளைக்கு பெரிசா நடக்காது. அரசு மருத்துவமனை முழுசும் சுற்றி காட்டுவாங்க. நோயாளியை விசிட் பண்ண சொல்லுவாங்க. அப்புறம் விட்டுடுவாங்க ஆனா மறுநாளுல இருந்து பயிற்சி ஆரம்பமாகிடும். ஒரு மாதத்துலயே கிராமப்புறத்துக்கு கேம்பு போட்டுடுவாங்க.”
“பல்லவி உன் கிராமத்துக்கு போக சொல்லுவோமா?”
“எதுக்கு?…”
“புனிதா இவ்வளவு ஆர்வமாகிறது பார்த்தா விக்கி சொன்ன சங்கிலியை ரூட் விடவா இருக்கும்.”
வாணி சொல்ல…
“ஓ!… என்றும் இந்த மீன் குழம்பு கிடைக்கும் என்கிறதாலயா.?..”
சரண் கிண்டல் செய்ய…
“பேசாம சாப்பிட போறிங்களா இல்லயா ?….”
பல்லவி வெடித்தாள்…
“வெளியில் வந்து பார்த்தா இப்படி பேச மாட்டா.. அவன் முஞ்சியும் டிரஸ்சும்… பார்க்க சகிக்கல…”
விக்கி சொல்லி முகம் சுழிக்க…
“புனிதாவுக்கு மீன் போதும் ஆள் எப்படியிருந்தா என்ன அப்படி தானே…”
ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல… அங்கே நக்கலும் நையாண்டியுமாக அன்றைய பொழுது சென்று விட…
மறுநாளிலிருந்து எல்லாரும் ஒருவர் முகத்தை பார்க்க கூட முடியாத அளவு பம்பரமாக ஓடினர். காலையிலே அரக்க பறக்க நின்று கூட பேச முடியவில்லை. அதிலும் மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே டீன் வசந்தகுமாரி நெருங்கி வர, அதன் பின் ஒவ்வொரு நொடியையும் நோயாளிகளுடனே கழிக்க வேண்டியதாகிப் போனது. அன்று மட்டுமல்ல அதன் பிறகு வந்த ஒரு வாரமும் அவர்களின் பயணம் அப்படி தான் இருந்தது. சங்கிலி வருவது பற்றி அவர்களுக்கு தெரியவே இல்லை. அதனால் அவன் பேச்சு வரவுமில்லை.
ஆனால் இரவு உணவு உண்ணும் போது. மீன் உண்டாலும் ஏனோ அவனை மறந்து விட்டார்கள். அது ஏனோ பல்லவிக்கு நிறைவாக இருந்தது. இல்லை என்றால் அவனை பற்றியே இவர்கள் பேசி கொண்டிருப்பது கோபமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அந்த பேச்சு வரவே இல்லை.
வாரம் இரண்டு சென்றிருக்கும். கேம்புக்காக மருத்துவமனை நிர்வாகம் தேர்ந்து கொண்ட இடம், தாமரை குளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தான் இருக்கும் இந்த கொட்டாரத்திற்கு. அங்கு ரிட்டையர்ட் மில்ட்றி மேன் முருகன் வீட்டில் தான் தங்கினர் அனைவரும். கொட்டாரம் கிராமம் கலந்த நகர்புற மாதிரியான ஒரு ஊர். அதாவது வளர்ச்சி கண்ட ஊர். அங்கு நகர்புறம் போல எல்லா வசதியும் இருந்தது.
அதனால் கேம்பிற்கு வந்த யாரும் ரெம்ப சிரமப்படவில்லை. ஆனால் வந்த நாள் முதலாய் மழை பெய்த்து கொண்டே இருந்தது. பல நாள் நோயாளிகளை பார்க்க முடியாமல் திரும்ப வேண்டியிருந்தது. கடைசியில் ஊரில் உள்ள ஆரம்ப பள்ளியில் டாக்டரை வந்து பார்க்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
ஒரு வாரம் சென்றிருக்கும்.
அன்று பல்லவி ஒரு வயதான தாத்தாவுக்கு பி.பி.செக் பண்ணி கொண்டிருக்கும். போது ரத்த வெள்ளத்தில் மிதந்த ஒரு இளைஞனை தூக்கி கொண்டு வந்தார்கள்.
டாக்டர் குழுவே அவனை சூழ்ந்து கொண்டது. அவனுக்கு நிறைய ரத்தம் போய்விட்டது. உயிருக்கு போராடி கொண்டிருந்தான். பல்லவி முதல் கொண்டு எல்லாரும் பரபரப்பின் உச்சத்தில் தான் இருந்தனர். ஒரு பதினெட்டு இருபது வயதிருக்கும் முன்னால் வந்த பஸ் மோதி விட இளைஞன் தூக்கி வீசப்பட்டு நடு மண்டையில் பயங்கர அடி…
உள்ளே டிரீட்மென்ட் போய் கொண்டிருக்க,
“ரத்தம் தேவைபடுது. உடனே கிடைச்சா பிழைக்க வச்சிடலாம்…”
என பெரிய டாக்டர்கள் சொல்லி விட, ஊரில் அந்த வகை ரத்தம் யாருக்கு இருக்கிறது. என ஆள் ஆளுக்கு பேச ஆரம்பிக்க ,
ஊரில் யாருக்கு அந்த வகை ரத்தம் இருக்கிறது என தெரியாமல் குழப்பி கொண்டிருந்த போது அந்த பையனை தூக்கி கொண்டு வந்த பையன்களில் ஒருவன்.
“டே!… நம்ம சங்கிலிக்கு அந்த வகை ரத்தம் தான். ஆனா நாம கேட்டா வர மாட்டானே?…”
“போன வாரம் வேற அவனுட்ட மல்லு கட்டிட்டு நின்னோம். இப்ப போய் எந்த முகத்தை வச்சிட்டு கூப்பிடுறது.”
“அதை பார்த்தா முடியாதுடா. போய் பேசி பார்ப்போம்.”
என ஒருவன் சொல்ல…
“இல்லடா. அவனுட்ட போனா வேலைக்கு ஆகாது. வினித் போன வாரம் அவனை அடிச்சி வேற போட்டான். அங்க போய் நேரத்தை வேஸ்ட் ஆக்கிறதுக்கு வேற எங்காவது தேடுவோம்.”
என சொல்லி விட்டு அக்கூட்டம் பிரிய, இதை மொத்தமாக கேட்டு கொண்டிருந்த பல்லவி…
“இல்ல காப்பாத்தியே ஆகணும். அவனை எப்படியும் பாக்கனும் பேசணும். ரத்தம் கொடுக்க சம்மதிக்க வைக்கணும்.”
எண்ணியவள்… தன் செல்லை எடுத்து செழியனை தொடர்பு கொள்ள, அவன் வெளியூரில் இருப்பதாக ஐஸ்வரியா சொல்ல… வேறு வழியின்றி ரவிக்கு அடித்தாள்.
முதல் முதலாக பல்லவி நம்பரில் இருந்து தன் செல்லுக்கு ஹால் வர…
ஆச்சரியமாக எடுத்தவன்
“ஹலோ…” என்றான்.
எதிர்முனையில் நிசப்தம். பல்லவி இதுவரை பேசியில்லாத ரவியிடம் பேச ஒரு மாதிரியாக தான் இருந்தது.. என்றாலும் வேறு வழியின்றி,
“சங்கிலிட்ட பேசணும்.”
பல்லவியின் வாயிலிருந்து முதல் முதலாக தன்னிடம் பேச மொழி வருகிறதே அதிசயம் என்றால் சங்கிலியின் பெயர் அவள் வாயிலிருந்து வருவது இன்னும் அதிசயம்.
தன் உள்ள அதிர்வை வெளிகாட்டி கொள்ளாமல்…
“எதுக்கு.?.. இப்ப அவனுட்ட என்ன பேசணும்.”
“பேசணும்… போனை கொடுக்க முடியுமா இல்லையா?…”
“பக்கத்துல இருந்தா கொடுத்துப்பேன். நான் இப்ப வெளியில நிக்குறேன். அவன் கடையில நிப்பான்.”
“நான் இப்ப கொட்டாரம் அரசு நடுநிலை பள்ளியில் இருக்கேன். அவனை அங்க வர சொல்லு.”
“எதுக்கு?…”
“எதுக்குணு சொன்னா தான் வர சொல்லுவியா…”
“நான் சொன்னேனு சொன்னா போதும். அவன் கண்டிப்பா வருவான்.”
என்றவாறு அவள் செல்லை வைத்து விட,
“பெரிய இவா… இவா சொன்னா உடனே அவன் ஒடி போயிடுவான்.”
ரவி பொறுக்க மாட்டாமல் முணுமுணுத்தாலும் அவள் சொன்னது போல தான் சங்கிலி இருந்தான். அவன் சொன்ன அடுத்த நொடியே கிளம்ப ரெடியாகி வெளி வர….
“உனக்கு வெட்கமா இல்லியாடா. அவா கூப்பிட்டா மட்டும் ஏண்டா இப்படி ஒடுறா. அவா உன்னை மதிச்சா கூட பரவாயில்ல. வேற யார்ட்டயும் இப்படி இறங்கி போக மாட்டேங்குறா அவானா மட்டும் ஏன்டா?…
“தெரியாதா உனக்கு… மறுபடியும் விளக்கி சொல்லணுமா?”
“வேணாம் .சொல்ல வேணாம். ஆனா வேணாம் சங்கிலி.”
“இல்லடா ஒரு நாளும் இல்லாம் வெளியூரில்ல இருந்துட்டு கூப்பிடுறானா. நாம செய்வோம்ணு தானே கூப்பிடுறா . அப்புறம் எப்படிடா போகாம இருக்க முடியும். நீ வறியணா வா. நான் போக தான் போறேன்.”
என சட்டையை எடுத்து அணிந்தவாறு அவன் கிளம்ப… அவனை முறைத்து கொண்டே ரவியும் வந்து அவன் வண்டியின் பின்னால் ஏறினாள்.
பத்து நிமிடத்தில் பல்லவி இருந்த பள்ளிக்கு சங்கிலி வந்து விட… அவள் வந்த வேகத்திலே ஒற்றை வார்த்தை கூட பேசாமல் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு உள் செல்ல…
சங்கிலியும், ரவியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டனர். அந்த பார்வையில் குழப்பமே இருந்தது. என்றாலும், ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் அவளுடளே சென்றான்.
சங்கிலியோடு உள்ளே வந்தவள்.
“நர்ஸ்… இவனோட பிளட் குருப் அது தான் .அந்த நோயாளிக்கு தேவைப்படுற ரத்தத்தை இவனுட்ட இருந்து எடுத்துங்க…”
என உரிமையுள்ளவள் போல, அவனிடம் எந்த அனுமதியும் கேட்காமல் சொல்ல,
சங்கிலி விக்கித்து தான் நின்றான். உள்ளத்து அதிர்வு அப்படியே முகத்தில் தெரிந்தது. என்றாலும் ஒற்றை வார்த்தை பேசாமல் அவள் செய்ய சொன்னதை அப்படியே செய்தான்.
வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அவளே அவனை படுக்க வைத்து அவன் கரம் பற்றி தேவையான எல்லாம் செய்ய… முதல் முதலாக டாக்டராக மாறி தன் முன்னால் நிற்கும் பல்லவியை விழி நிறைய வியப்பாக பார்த்தான். வெள்ளை கோட்டில், தெதஸ்கோப் மாட்டி கொண்டு நின்ற அவள் அழகில் உள்ளத்தை தொலைத்தவன் அப்படியே சிலையாக கிடந்தான்.
உண்மையில் அவள் அவனை கீறி கிட்னியை எடுத்தால் கூட அவனுக்கு தெரிய போவதில்லை. அப்படி உறைத்து போய் அவள் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் அப்படி அவளிலே புதைந்து போய் கிடந்தான்.
ஆனால் பல்லவியோ அவன் முகத்தை கூட பார்க்கவில்லை. எதற்காக அவனை அழைத்தானோ அதற்கு அவனை பயன்படுத்தி விட்டு அவனை விட்டு சென்று விட… கட்டிலில் உறைந்து போய் கிடந்தவனை வந்து உலுக்கி எழுப்பி கொண்டு வந்து கடையில் சேர்த்தவன் ரவி தான். வழி நெடுக்கிலும் ரவி என்னவெல்லாமோ கேட்டும் எதற்கும் பதில் சொல்லாமல் அப்படியே உறைந்து போய் தான் அமர்ந்திருந்தான். .
கடைசியில் அவன் நார்மல் ஆகவே இரண்டு மணி நேரம் சென்று விட, அதன் பின் உண்மையை அறிந்த ரவி கொதித்து போனான். பல்லவியை வாய்க்கு வந்தபடி திட்ட… கொஞ்சம் கூட உறைக்காதவள் போல் சிரித்து கொண்டே அமர்ந்திருந்தான் சங்கிலி. அவன் கண்ணுக்கு முன்னால் ரவியோ ,கடையோ இப்போதும் இல்லை. தன் கையை அழுந்த பிடித்து நரம்புகளை தேடி எடுத்து ஊசியை அதில் ஏற்றி தன் சூடேறிய ரத்தத்தை பாட்டிலில் நிரப்ப பல்லவி செய்து முடித்த செயலே மறுபடியும் மறுபடியும் நினைவலையில் வந்து சிலிர்படைய செய்ய ரவியின் எந்த திட்டும் அவனை பாதிக்கவே இல்லை.
கடைசியில் வாளியிலிருந்த நீரை கோபத்தில் அவன் தலையில் ஊற்ற, சிலிர்த்து எழுந்த சங்கிலி திருதிருவெள விழிக்க…
“இப்பவாவது நார்மர் ஆனியா?”
என்றதும்…
“நான் நார்மலா தான் இருக்கேன்.”
“ஆமா… அந்தா திட்டு திட்டுறேன் .சந்திரமுகி படத்துல பேய் பங்களாவுக்கு போயிட்டு வந்து வடிவேலு சிரிச்சது போல ஒரு போஸ் கொடுத்துட்டு இருப்பாரே அப்படியே இருக்கா…”
“நானா?…”
“அப்புறம் நானா?… நீ அவளுட்ட போனா மட்டும் என்னமோ ஆகிடுறாடா. அப்படி உள்ளால கூட்டிட்டு போய் என்னடா பண்ணுனா.”
“வைத்தியம் பாத்தாடா!…”
“வைத்தியமா?…}
“ம்… என் கையை புடிச்சி படுக்க வச்சி ஃபேனை போட்டு பி. பி எல்லாம் செக் பண்ணி அப்புறமா ஊசி எடுத்து.”
சங்கிலி நடந்தவற்றை மனதில் ஒடவிட்டவாறு விவரித்து சொல்ல…
“ஊசியா ஊசி போடுற அளவு உனக்கு என்ன வியாதி.”
“வியாதி இல்லடா… என் ரத்தம் யாருக்கோ அவசரமா தேவை போல…”
“ரத்தம் தேவையா? நினைச்சேன்… எலி ஏன் அம்மணமா ஒடுதுணு. இப்ப தானே தெரியுது. இப்பவும் காரியம் சாதிக்க தான் கூப்பிட்டாளா? நானும் என்னவோ மனசு கொஞ்சம் இளகிடுச்சோணு நினைச்சேன். நாம தான் தப்பு கணக்கு போடுறது. படிச்ச புத்திய காட்டிட்டால… நீயும் எதுவும் சொல்லாம ஏண்டா ரத்தத்தை எடுக்க விட்டா…”
“அந்த புள்ள கேட்டா உசுரையே கொடுப்பேன். ரத்தத்தை கொடுக்க மாட்டேனா?..”
சங்கிலி சிரித்து கொண்டு சொல்ல…
” உனக்கு பைத்தியம்தாண்டா புடிச்சிருக்கு அவா செருப்பை கழற்றி அடிச்சாலும் நீ இப்படி வெட்கமே இல்லாம சிரிக்கிட்டே வாங்கிட்டு தான் வந்து நிப்பா.”
“இல்லடா அவளை அப்படி ஒரு உடையில டாக்டர் ஹெட்டப்புல பாத்தப்ப என் மனசுக்கு எப்படி இருந்துச்சிணு தெரியுமா? முதன் முதலா உன் வீட்டுக்கு முன்னால முற்றத்துல அழுதுட்டு நின்ன பல்லவியா இதுணு நினைக்கிற அளவு அவ்வளவு பிரமிப்பா இருந்துச்சு. அதுலயும் கூட வேலைப் பாக்குறவங்ககிட்ட தஸ்புஸ்ணு இங்கிலிஷ்ல்ல பேசுச்சுப் பாரு. நான் மொத்தமா விழுந்துட்டேன். அதோட முகத்தையே பாத்துட்டிருந்தேன். அது ஊசி குத்துனது கூட எனக்கு தெரியலணா பாத்துக்கயேன்.”
“அது என்னடா …அது நெஞ்சுல, குத்தியிருந்தாலும் உனக்கு தெரிஞ்சிருக்காது தான்.”
ரவி கிண்டலோடு சொல்ல…
“அது என்னவோ உண்மை தான். அந்த புள்ளையை பாத்தா மட்டும் கோபத்துக்கு பதில் பாசம் தான் வருது. நினைவு வச்சிக்கடா பாசம் தான்… காதல் இல்ல.”
சங்கிலி அழுத்தி சொல்ல…
“நம்பிட்டேன். உன் நிலைய பக்கத்துல இருந்து பாக்குறேன்ல . இது காதல் இல்ல தான். பாசம் தான். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் சங்கிலி. வீணா அவா பக்கம் நெருங்கி போகாத. அப்புறம் குப்புற புடிச்சி தள்ளி ஒரு நாள் அழவச்சிட்டு போயிடுவா?”
“போனவா தானேடா. அப்படி பண்ணுனாலும் வலிக்காது. தெரிஞ்சே தான் விடுறேன். அதுனால சங்கிலி உடைஞ்சி போயிடுவானோணு பயப்படாத.. எல்லாரும் அனாதையா விட்டுட்டு போனாங்க. வாழலியா. அது போல தான் இதுவும்.. என்ன வலிக்க தான் செய்யும். ஆனாலும் அவள் முன்னால மட்டும் நான் தோத்து போயிடுறேன்.”
“சனியன் புடிச்சது மெட்ராஸ்க்கு போச்சுல அப்படியே போய் தொலைய வேண்டியது. தானே அது திரும்ப எதுக்கு வந்துச்சி.”
“அப்படி சொல்லாதடா. யாருமே இல்லாத அனாதைக்கு முதல் முதலா கிடைச்ச உறவு அவா. யாருக்காகவும் இளகாத என் மனது அவளுக்காக மட்டும் இளகுச்சு. யாருக்கும் அடிபணியாத இந்த சங்கிலி அவா முன்னால மட்டும் தான் மண்டியிட்டு கிடக்குறான். அவா எனக்கு கிடைக்க மாட்டாணு தெரியும். ஆனா என்னோட முதல் உறவும் அவா தான். கடைசி உறவும் அவா தான்.”
சங்கிலி கண் கலங்க…
“வேணாம் சங்கிலி. அவளை மறக்கிறதும் அவளை விட்டு விலகி நிற்கிறதும் தான் உனக்கு நல்லது. நிச்சயம் இந்த ஜென்மத்துவ அவா உனக்கு கிடைக்க மாட்டா. அது எங்க வீட்டுல நடந்த கூத்துலயே தெரிஞ்சிகிட்டேன். அதுல வேற என் வீட்டுல இருக்கிற பெரிசுங்க இரண்டும் அவா இப்ப சொன்னா போதும்… அந்த கொரில்லா குரங்கு வீட்டுக்கு சம்மந்தம் பேச போயிடுவாங்க. அந்த அளவு ஸ்பீடா அதுங்க இரண்டும் இருக்கு.”
“அது எனக்கும் தெரியும் மச்சான். அப்படி நடக்கிறது தான் நியாயமும் கூட் அது தான் முறையும் கூட ரெம்ப ஆடம்பரமா சந்தோஷமா அது நடக்கட்டும்.”
” என்னடா சொல்லுறா…”
“பல்லவி மனசுல நான் காதலனா இல்லணு தெரியும். ஆனா சுத்தமா அவா மனசுல நான் இல்லணு சொல்ல மாட்டேன். அவள் மனசுலயும் என்ன உறவா தான் நினைக்கிறா அதனால் தான் உரிமையோட என் கை பிடிச்சி இழுத்து உள்ளால கூட்டி போனா.”
“அவள் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டேணு தான் என் அனுமதி கூட கேட்காம எனட்ட இருந்து தேவைப்பட்ட ரத்தத்தை எடுத்தா. இது இந்த ஜென்மத்துக்கு போதும். அவளால என்ன கணவனா ஏத்துக்க முடியல. ஆனா உறவா ஏத்துக்க முடியுது. உன் அம்மா மட்டும் இடையில வரலணா என் மனசுல கூட அவளை கட்டிக்கணும் என்கிற எண்ணம் வந்திருக்காது.”
“உன் அம்மா ஏத்திவிட்டதால தான் அனாதைக்கு அனாதை ஆறுதலா இருப்போம்னு அந்த எண்ணத்தை மனசுல வளர விட்டேன். முதல்ல என் மனசை சொன்ன போது அவா நிராகரிச்சப்ப வலிக்க தான் செய்யுது. ஆனா போக போக அவளுக்கு நான் தகுதியில்லாதவணு எனக்கே தோண ஆரம்பிச்சு. அதுனால தான் சொல்றேன். பல்லவி அந்த விக்கியோட சந்தோஷமா வாழட்டும். நான் மனபூர்வமா வாழ்த்துறேன். அவளோட சந்தோஷம் தான் எனக்கு வேணும்.”
உணர்வின் பிடியில் சிக்கியவனாக அவன் பேசி கொண்டு போக வாயடைத்து போய் நின்றிருந்தான் ரவி.
ஆனால் உதடு அப்படி பேசினாலும் உள்ளம் அழுதது என்னவோ அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
அத்தியாயம் தொடரும்….
Best Romantic Novel