வணக்கம் வாசகர்களே!
ஓவியாவை வெறுப்பேற்ற சங்கீதாவுடன் கலக்கும் முகுந்தன். முகுந்தனை வெறுப்பேற்ற மகேந்திரனோடு கடலை போடும் ஓவியா. அடுத்து என்ன?
ஓவியாவை வெறுப்பேற்ற சங்கீதாவுடன் கலக்கும் முகுந்தன்.
ஓவியாவை அனல் கக்கும் பார்வை பார்த்த சக்கரவர்த்தி, சுந்தரம் பக்கம் திரும்பி,
“இது நம்மை விட்டு போகாத தலைவலியா இருக்குடா. அகிம்சை வழியில அப்புறப்படுத்திடலாம்ணு நானும் எவ்வளவு கீழ் இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பார்த்துட்டேன். ஆனா இது ஒட்டுண்ணி போல அவனையே ஒட்டிட்டு இருக்கு. இதுக்கு சரியான மருந்து அடிக்கலனா என்னோட கெளரவம் நாசமா போயிடும். இந்த நேரம் சிங்கப்பூருக்கு வேற அவசரமா போக வேண்டி இருக்கு. கூடவே தீனதயாளனையும் சமாதானப்படுத்த வேண்டி இருக்கு. இரண்டு பேரும் சேர்ந்து தான் கிளம்புறோம். ஒரு வாரத்துல திரும்பி வந்திடுவேன். நான் வந்து இறங்கியதும் முதல் நியூஸா இந்த தொல்லையை கிளியர் பண்ணிட்டேன் என்ற செய்தி தான் சொல்லணும்.”
“கண்டிப்பாய்யா. மனசை போட்டு குழப்பாம கிளம்புங்க. அந்த பொண்ணை உருத் தெரியாம அழிச்சிடுறேன்.”
என்றதும் அவளை வெறித்து பார்த்த சக்கரவர்த்தி.
“எவனோடவாவது சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும்ணு நினைச்சேன். நல்லவிதமா தானே மாப்பிள்ளை பார்த்து செற் பண்ணுனேன். என்ன மாப்பிள்ளை ஒருத்தியோட திருப்தி அடைகிற ஆள் இல்ல. அதை தவிர வேற என்ன குறை இருக்கு அந்த மாப்பிள்ளைக்கு. நிச்சயம் முடிஞ்சும் இங்கு வந்து சுத்துறணா… அற்ப ஆயுசுல போகணும்னு விதி இருக்கும் போல… அவங்க தலையில ஆண்டவன் அப்படி ஒரு எழுத்து எழுதி வச்சிருந்தானா யார் என்ன பண்ண முடியும். நானும் எவ்வளவோ நல்லவனா இருக்கணும்ணு தான் பாக்குறேன். விட மாட்டேங்குறாங்களேப்பா…” சொன்னவர் எகத்தாளமாக வாய் விட்டு சிரிக்க…
தன் உயிர் மேல் ஒரு கும்பல் விலை வைத்திருக்கிறது என தெரியாமல் சுந்தரியிடம் வெட்கத்தோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் ஒவியா.
“மாப்பிள்ளை போட்டோவை காட்டுனா நாங்களும் பார்ப்போம்ல. நிச்சயத்துக்கு கூப்பிட்டா செலவு வந்திடும்ணு அப்பாவுக்கு வியாதினு சொல்லிட்டு கிளம்பிட்டா. இப்போ உன் ஆளையாவது காட்டலாம்ல.”
சுந்தரியும் கேட்க,
“ம்… டியரஸ்ட் பிரண்ட். எனட்டயே காட்ட மாட்டாங்களாம் மேடம். மேரேஜ்க்கு போய் பார்த்து தெரிஞ்சிக்கணுமாம். அப்புறம் உங்களுட்ட எப்படி?”
“அப்படியா ஓவியா…”
என்ற சுந்தரியிடம் என்ன மறுமொழி சொல்லுவது என தெரியாமல் நெளிந்தவள்.
“இல்லக்கா. அவா விளையாடுறா?”
சமாளிக்க முயல,
“அப்போ ஆளை காட்டு…”
என்றாள் சுந்தரி விடாமல்,
“அப்படி சொல்லுங்கக்கா…”
என திலகா எடுத்து கொடுக்க,
“அடிவாங்காத எனட்ட இருந்து,”
அவள் கை ஓங்கினாள்.
“திசை திருப்புறாக்கா விடாதுங்க.”
இவளும் மல்லுகட்டி வர,
“இப்போ நீ மாப்பிள்ளை போட்டோவை காட்டாம உள்ளால விடுறதா இல்லை.”
என சுந்தரி இடைமறித்து நின்றாள். அவளின் பின்னால் நின்ற தரணி ஓடி வந்து கையில் இருந்த செல்லை புடுங்கியவாறு,
“இதுக்கு ஏன் கெஞ்சிட்டிருக்கீங்க. மேடத்தோட செல்லை திறந்தா படமா கொட்ட போகுது. அதுல ஆளுக்கு பிடிச்சதா ஒண்ணை எடுத்து கண்ணுக்குள்ள நிரப்பிடுங்க. சரி தானே மேடம்.”
என செல்லை ஆண் செய்து விட, ஓவியாவின் மூச்சே நின்று விட்டது. எப்படியும் அதில் ஒரு படமும் இல்லாமல் தான் திரும்ப தர போகிறார்கள். ஆனாலும் ஒரு படமும் இல்லை என்று வாரி எடுக்க போகிறார்கள். நல்ல வேளை தப்பித்தேன். நேற்று முகுந்தன் சார் படத்தை டெலிட் பண்ணிட்டேன். அதுவரை பிழைச்சேன். இப்போ இந்த மூணு பிசாசுகளையும் எப்படி சமாளிக்கிறது. இதோட நிற்க போறது இல்ல. இங்க வேலை பாக்குற எல்லாரும் கேட்டாங்க. முதல்ல அந்த மகேந்திரன்ட்ட ஒரு போட்டோ அனுப்ப சொல்லணும்.
எண்ணி முடிக்கவில்லை. அதற்குள் உள் வரை சென்றும் எந்த புகைபடமும் இல்லாமல் கேள்விகுறியோடு நிமிர்ந்து பார்த்த மூவரும்.
“என்ன இது?”
என அதிர்வோடு கேட்க, அவர்களின் விரிந்த விழியை பார்த்தவள் குழப்பமாகி,
“என்ன?”
என தயக்கத்தோடு கேட்க,
“நிச்சயம் வரை முடிச்சிட்டு வந்திருக்கா உன் ஆளோட போட்டோ ஒண்ணு கூட இல்ல.”
“அது… அது… வந்து…”
அவள் மொத்தமாய் தடுமாற,
“அது வந்து போயி. எதுக்கு மேடம் தயங்குறீங்க. எங்களுட்ட சொன்னது போல பட்டுணு சொல்லிட வேண்டியது தானே.”
பின்னால் இருந்து நளன் குரல் கேட்க, நான்கு பேரும் ஒரே நேரம் திரும்பினார்கள்.
“பிடிச்சவரோட போட்டோவை அவங்க ஹார்ட்டுல தான் வச்சிருப்பாங்களாம். போன்ல எல்லாம் வச்சிக்க மாட்டாங்களாம். இல்ல மேடம்…”
அவன் இழுவையாக நிறுத்த.
“அட கடவுளே! இவரும் இந்த கூட்டத்துல சேர்ந்தாச்சா. இதுக்க மேல நின்னா சரியாகாது.”
எண்ணியவள்,
“எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்.”
என ஒடப் பார்க்க, அவள் கரம் பற்றி தடுத்த சுந்தரி,
“எங்க போறா? அவ்வளவு சீக்கிரமா விட்டு விடுவேணா நினைச்சா. மச்சானுக்கு போன் பண்ணி உடனே போட்டோ அனுப்ப சொல்லு.”
என கையை விடாமல் நின்று விட,
“திலகா காப்பாத்துடி .”
என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஓவியா சொல்ல, திலகாவின் பின்புறம் நின்ற நளன் செவியில் இது விழுந்ததும்,
“நான் காப்பாத்துறேன்.”
என முன்னால் வந்தவன்,
“மேடம். சின்ன முதலாளி உங்களை உடனே பார்க்கணும்னு சொல்லுறாங்க. கொஞ்சம் வறீங்களா?”
என அழைத்ததும் அங்கிருந்து நகர்ந்தால் போதும் என அவசரமாக நளனுடன் முகுந்தன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
உள் நுழைந்த வரை இருந்த தெம்பும் தைரியமும் அவனை பார்த்த அடுத்த நொடியே விடை பெற,
“புலிக்கு பயந்து சிங்கத்துட்ட வந்து மாட்டிகிட்டேனே…”
மனதுக்குள் முணுமுணுத்து கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்க்காமலே.
“சொல்லுங்க சார்…”
என்றாள் மென்குரலில்,
“இல்ல… வந்துட்டீங்களானு பார்க்க வரச் சொன்னேன்.”
என்றதும் அடக்கப்பட்ட கோபத்தோடு நிமிர்ந்தவள், சிறிது நேரத்திலே தன்னை நார்மலாக்கி கொண்டு,
“முக்கியமான வேலைக்காக ஒரு ஸ்டாப்ஸ்க்க வீடு வரை தேடி வந்து முதலாளியே கூப்பிட்டதும் இல்லாம, கையோட அவர் கார்லயே அழைச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் எப்படி சார் வராம இருக்க முடியும்.”
என்று எகத்தாளத்தோடு சொன்னவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்.
“மேடத்துக்கு இங்கு வந்ததுல பயங்கர கோபம் போல தெரியுது.”
என்றான் அவள் முகத்தில் பார்வையை ஓடவிட்டவாறு,
“கோபப்படாம. இப்போ எதுக்கு சார் இங்கு கூட்டிட்டு வந்தீங்க.”
“அதான் உன் வீட்டுல வச்சே சொன்னேன்ல.”
“சொன்னீங்க. இப்போ நான் அதை கேட்கல. உண்மையை கேட்கிறேன்.”
“அப்போ அது பொய்யா? அப்படி ஒரு ரூல்ஸ்ல நீங்க சைன் பண்ணலியா?
“இருபது இருபத்தைந்து பேப்பஸை நீட்டி சைன் பண்ண சொன்னீங்க. பண்ணுனேன்.”
“பண்ணுனீங்கல. அப்போ படிச்சி பாத்திருக்கணும். படிச்சி பார்க்காதது உங்க தப்பு. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.”
“தப்பு தான் சார். தப்பு தான். படிச்சி பாத்து போட்டிருக்கணும். சரி. அந்த தப்புக்கு இப்போ சார் என்ன தண்டனை கொடுக்க போறீங்க.”
உச்சபட்ச கோபத்தில் பல்லை கடித்தவாறே அவள் பேச,
“அதுவும் தான் உன் வீட்டுல வைத்து பேசிட்டோமே.”
என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு, அவன் சிரிப்பை பார்த்து கடுப்பானவள்,
“எது? புது ஸ்டாப்ஸ்க்கு பயிற்சி கொடுக்கிறதா?”
“ஆமா…”
“சரி. அவ்வளவு தானே. யாருணு சொல்லுங்க. சொல்லி கொடுத்துட்டு கிளம்புறேன்.”
“நில்லும்மா. இன்று தானே ஆபீஸ் வந்திருக்கேன். நல்ல ஒரு ஆளா தேர்ந்தெடுத்து சொல்றேன். சொல்லி கொடுத்துட்டு கிளம்பு.”
என்றதும் வெடுக்கென்று திரும்பியவள், நளனை ஒரு பார்வை பார்த்து கொண்டே சட்டென வெளியேற, சூடாக வெளியேறிய அவளின் பின் முதுகை பயத்தோடு பார்த்த நளன் திரும்பி, தோழனை பார்த்தவாறே செயரை இழுத்து போட்டு அமர்ந்தான்.
“என்னடா. பட்டாசு போல பட்டு பட்டுணு வெடிச்சிட்டு போறாங்க. பார்த்தா நீ சொல்லுறது போல கொஞ்சம் கூட தெரியலியேடா. தொடக்கத்துல உன்கிட்ட எப்படி முட்டிகிட்டு நின்னாங்களோ அப்படியே தான் இருக்காங்க. இதுல என்ன மாற்றத்தை பார்த்து அவங்க உன்னை விரும்புறாங்கணு சொல்லுறா?”
“உனக்கு அந்த நாள் எல்லாம் நியாபகம் இருக்குதா நளன்.”
“அந்த நாட்களை எப்படிடா மறக்க முடியும். உங்க மோதல்ல தானே எங்க காதல் உருவாச்சு.”
“நான் மறந்துட்டேன்டா. அந்த மலை சரிவுக்கு முன்னால அவளுடன் மோதுன மோதல் ஒவ்வொன்றிலும் என் உள்ளத்துக்குள்ள நான் அடைந்த சந்தோஷத்தை நான் மறந்துட்டேன்டா. அதன் பிறகு அந்த இடிபாடுகளுக்குள்ள நாங்க இரண்டு பேரும் வாழ்ந்த இருட்டு நொடிகளை நான் மறந்துட்டேன்டா. அந்த நேரம் என் மனது அனுபவித்த நிம்மதியும் சந்தோஷத்தையும் நான் மறந்துட்டேன்டா. எனக்கு சுயநினைவு வந்த அடுத்த இரண்டு மணி நேரத்திலே அப்பா மெட்ராஸ்க்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. வந்த என் வாழ்வு ஹாஸ்பிட்டல்ல ஒரு மாதம் போச்சு. வெளி வந்து பார்த்தா கம்பெனியில பல பல பிரச்சினைகள். அன்று கேரளாவுல தீனதயாளன் சார் வழியா நமக்கு கிடைக்க இருந்த கொட்டேஷனை மிஸ் பண்ணுனதால கம்பெனிக்குள்ள பல பல பிரச்சினைகள். பல பேருக்கு வேலை கொடுக்க முடியாம அப்பா திணறிட்டிருந்தாங்க.
அந்த சூழல்ல அதை தவிர வேற எது பக்கமும் என் மனசால போக முடியல. இடை இடையே அவள் நியாபகம் வந்துச்சு. இல்லணு பொய் சொல்லல. ஆனா அவா நம்முடைய எந்த வெகுமதியும் வாங்காம, என் பக்கம் வர கூட விரும்பாம தள்ளி போக நினைச்சதால பெரிசா என்னால என் மனசை காட்ட முடியல. அப்புறமா அவா வந்த போது கூட எனட்ட எல்லா இடத்துலயும் முட்டி கிட்டே தான் நின்னா. அதனால் என்னால் அவளோட உணர்வை புரிஞ்சி பேச முடியல.
முதல் முதல் ஓவியா என் மனசுல இருக்காணு என்னை உணர வச்சது என் பாட்டி தான். அவங்க கேட்ட கேள்வி தான். ஓவியா மேல எனக்கிருந்த ஒரு ஈர்ப்பை எனக்கு சொல்லுச்சு. அப்புறமா தான் அவளை பார்க்க ஆரம்பிச்சேன். அந்த இடங்களில் எல்லாம் அவளுக்குள்ளும் எனகிட்ட சொல்ல எதுவோ இருக்கிறது போல தான் தோணுச்சு. அதை முழுசா நான் உணருகிறதுக்கு முன்னால அவா கிளம்பி போயிட்டா.
அவா போன நொடியில இருந்து என் மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும் மச்சான். எப்போ வருவானு மனசு ஏங்குச்சு. வந்ததும் பேசணும்னு ஆசையா காத்திருந்தா திலகா இப்படி சொல்லுறா? அந்த நொடி எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? தூக்கி போட்டு எல்லாத்தையும் உடைச்சிடுவோமாணு இருந்துச்சு. ஆனா உங்க முன்னால காட்ட முடியாம தான் கிளம்பி போனேன். அப்புறம் எனக்குள்ள ஒரு வலி வந்துச்சு பாரேன். அது சொல்லிச்சு. அவா இல்லாம நீ இல்லணு. அதான் நீ சொன்னதுக்கு அப்புறமும் கேட்காம கிளம்பி போனேன்.
போன இடத்துல எப்போ என் டாலர் அவளோட அறையில சாமி படத்துக்கு முன்னால பாத்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவா இல்லாம திரும்பி போகப் போறதே இல்லணு. நான் பல நாளா தொலைச்சிட்டதா நினைச்சிட்டிருந்த டாலரும். அன்று நான் அவள் காயம்பட்ட இடத்துல கட்டி விட்ட என் கிழிந்த சட்டையும் இன்னும் பத்திரமா வச்சிருக்கானா. அவா மனசுல இன்னும் நான் இருக்கேன்னு தானே அர்த்தம்.
“என்னவோடா எனக்கு அவங்களை பார்த்தா பெரிய மாற்றமா தெரியல. உன் வாழ்வுல அவங்க வந்தா எனக்கும் ரொம்ப ஹேப்பி தான். ஆனா அப்படி இல்லாத பட்சத்துல நீ இப்படி நடந்துக்குறது ஓவரா தோணுது. அவங்களுக்கு என்னவோ உன் செயல் எரிச்சலை தருகிறது போல தான் எனக்கு தெரியுது. இங்க அவங்க விருப்பமே இல்லாம தான் தங்கிட்டு இருக்கிறது போல தான் நினைக்க தோணுது.”
“ம்.. தோணும். அவளோட செயல்ல அப்படி தான் தெரியுது. நீ… நீ அவளோட கண்ணை பாரு. நான் சொல்லுறது நிஜம்னு உனக்கு தெரியும். வேணா உனக்கு அதை நான் இன்றே நிரூபிக்கிறேன்.”
“நீ நிரூபிக்கிறியா? டேய்… நிரூபிக்கிறேன்னு எதையாவது செய்து செருப்படி வாங்கிடாதடா?”
“செருப்படியா? நானா? பொறுத்திருந்து பாரு. அவளோட மனசு முழுசும் நான் தான் இருக்கேன்னு உனக்கு இன்றே நிரூபிக்கிறேன்.”
சொன்னவன் செல்லை எடுத்து எண்ணை அழுத்த எதிர் முனை உயிர் பெற்றது,
“சங்கீதா. ஆபீஸ்க்கு வந்துட்டு போறியா?”
“சுவர்டா…”
என்றதும் போனை சிரிப்போடு வைத்தவன் நிமிர்ந்து நளனை பார்க்க,
“இப்போ அவளை எதுக்கு இங்க வர சொல்லுறா?”
“வரட்டும். அப்போ ஓவியாவை பாரு. செலஸ்ல அப்படியே உருகி போய் நிற்ப்பா.”
“செலஸ்லயா ?… அவங்களா? ஒவரா கற்பனை பண்ணுறாடா?…”
“கற்பனையா? நிஜமா? இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு தெரிஞ்சிடும். அப்படி அவளோட மனசுல நான் இருக்கேன்னு நிரூபிச்சிட்டா… அப்புறம் அவா நிச்சயமான பொண்ணு, அவளுட்ட போய் இப்படி எல்லாம் பேசுறது தப்புனு எல்லாம் வசனம் பேச கூடாது. எனக்காக நீ நிற்கணும். ஒ.கேயா?”
“என்னமோ சொல்லுறா? ஆனா எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அவங்களை பார்த்தா நீ சொல்லுறது போல துளி கூட தெரியல.”
“ ம்… கொஞ்சம் பொறுடா. சங்கீதா என் அறைக்குள்ள நுழையுற நொடியில இருந்து அவளை பாரு. சந்திரமுகியா மாறி நிற்கிற ஓவியாவை அப்போ நீ பார்ப்பா. அப்ப தெரியும் உன் நண்பன் சொல்லுறது உண்மைனு .”
“ம்… பார்க்கிறேன். இப்போ சைட்டை பார்க்க கிளம்பலாமா?”
“இல்ல. இப்போ என்னை பார்க்க சங்கீதா வரப் போறா? நான் சூப்பரா மேக்கப் பண்ணனும்.”
முகுந்தன் போன் செய்த பத்தாவது நிமிடமே குட்டை பாவாடையோடு வந்தாள் சங்கீதா. உள் நுழையும் மாத்திரத்திலே ஓவியாவின் பார்வையிலும் விழுந்து விட்டாள். ஒரு நொடி கோபமாக முறைத்தாலும், மறுநொடி இனி கோபப்படவோ பொறாமை படவோ என்ன இருக்கு என்பது போல தலையை தாழ்த்தி கொண்டாள் ஓவியா. ஆனாலும் மனது கலங்கி தவித்தது.
சீக்கிரம் இங்க இருந்து போயிடனும்.
இப்படி நினைத்து கொண்டு வலியோடு தன் பணியை ஆரம்பித்து விட்டாள். ஓவியாவின் அலட்சியம் முகுந்தனை எரிச்சல்படுத்த அவள் முன்பே சங்கீதாவோடு குழைந்து பேச ஆரம்பித்தான். அவள் தோள் மேல் கை போட்டவாறு அவள் முன்பே சிரித்து சிரித்து பேசினான்.
அவள் எங்கு போனாலும் முன்னால் அவளோடு முளைத்தான். என்றும் இல்லாமல் இன்று அந்த கம்பெனி முழுதும் அவளோடு சுற்றினான். அவர்கள் சுற்றினால் பரவாயில்லை. மனதை அடக்கி கொண்டு அமர்ந்து விடலாம். ஆனால் அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் இவளையும் அழைத்து வெறுப்பேற்றினால்,
பொறுத்து பொறுத்து பார்த்தவள்,
என்னையா வெறுபேத்துறா?
என மனதுக்குள் கர்வி கொண்டு வராத போனை எடுத்து வைத்து கொண்டு மகேந்திரனோடு உருகி உருகி பேச ஆரம்பித்தாள்.
“சொல்லுங்க… மகி…”
அவளின் குழைந்த குரலும், அந்த குரலில் எவனோ ஒருவனின் பெயரும் வர கண்டதும், ஒரு நொடி சிரிப்பை நிறுத்தியவன் கண்கள் சிவக்க, அவளை திரும்பி பார்த்தான். ஒவியா அவன் அருகில் நிற்பதை உணராதவள் போல பேசி கொண்டே இருந்தாள்.
மகியா?… சுருக்கி கூப்பிடுறியா?
உள்ளுக்குள் மருகியவன்,சங்கீதாவை அணைத்திருந்த கையை விடுவித்து கொண்டே, ஒவியாவை முறைத்தான். அவன் முறைப்பையும் ஆத்திரத்தில் துடித்த அவன் கன்னத்தையும் பார்த்தவள்,
“ஒரு டூ டேஸ் பொறுத்திடுங்க மகி. நான் ஒடி வந்திடுவேன். நானும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா உங்களுட்ட வந்து சேரணும்ணு தான் நினைக்கிறேன்ப்பா. ஆனா சில பேர் நம்ம உணர்வோட விளையாடுறாங்களே. நான் என்ன செய்ய… ஐ மிஸ் யூடா…”
என கொஞ்சிதலோடு சொன்னவளை கொலைவெறியோடு பார்த்தான் அவன். பராக்கு பார்ப்பது போல அவன் மேல் ஒவியா பார்வையை விட, அவன் கண்களோ கோவை பழம் போல் சிவந்து இருப்பதை ஒருவித அலட்டலோடு பார்த்தாள். அவனின் கோலத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள்,
என் முன்னாலயே அவளுக்கு ஊட்டியா விடுறா? மவனே உனக்கு இருக்குடா.
உதட்டுக்குள் பேசியவள். சட்டென முகத்தை மாற்றி கெஞ்சும் குரலுக்கு மாறி,
“ எதுனாலும் ஒரு வாரம் தான் மகி. வந்ததும் நீங்க ஆசைப்பட்ட படி எல்லா இடத்துக்கும் உங்க கூட வாரேன். ஒரு போட்டோ என்ன ஒன்பது போட்டோ எடுத்துக்கலாம். பிளீஸ் மகி. எனக்காக வெயிட் பண்ணு.
கெஞ்சிதலோடு சொன்னவள் மெல்லமாய் விழி உயர்த்தி முகுந்தனை பார்க்க, சங்கீதா முன் பிணம் போல் நின்றிருந்தான்.
நொந்து சாகு. என்னையா வெறுப்பேத்துறா?
எண்ணியவள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ள, அவன் தன்னை பார்க்கிறானா? என ஒரு முறை அரை கண்ணால் பார்த்து, பார்க்கிறான் என்றதும்.
உதட்டை குவித்து செல்போனில் முத்தம் ஒன்று வைத்தாள்.
முகுந்தன் முகம் கறுத்து இருண்டு போனது.
அப்படியே சங்கீதாவை தனியே விட்டு விட்டு அறைக்கு வந்தவன் தான் அதன் பின் வெளியே செல்லவே இல்லை.
தோளை குலுங்கி கண்சிமிட்டி சிரித்தவள் துள்ளலோடு தன் அறைக்குள் வந்தாள்.
மனசு பூவாய் விரிந்தது. என்னவோ முகுந்தன் தன்னை நெருங்கி வருவது போல மனசு சொன்னது. அதுவே அவனிடம் விளையாட வைத்தது. தன் செயலால் அவன் பொசுங்குவது பிடித்தும் இருந்தது. அதுவே அவளை எல்லை மீறவும் வைத்தது. அவனை வெறுப்பேத்துவதே அவளின் வேலையும் ஆனது.
இப்படியே இரண்டு மூன்று நாட்கள் இவர்களின் மெளன யுத்தம் தொடர, நளன் தான் தலையை பிச்சி கொண்டான். அவனால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை. நண்பன் முன்பே வந்து சரண்டர் ஆனான். முகுந்தனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் செலஸில் அவள் சரணடைவாள் என நினைத்து செய்தால், இவள் அல்லவா அவனுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறாள்.
அவள் வந்து மூன்று நாள் முழுதாய் முடிந்து விட்டது. ஆனாலும் அவளை தன்னை நோக்கி வர வைக்க முடியவில்லையே என்ற கொதிப்பில் இருந்தான் முகுந்தன். அவனின் கொதிப்பு தெரியாமல் அன்று நளனும் சீண்ட, வெளியில் வந்தால் ஓவியாவும் சீண்ட கொதிப்பின் உச்சத்திற்கு சென்றவன்.
தன் முன்னால் விடாமல் அடித்து கொண்டிருந்த போனை எடுத்து காதுக்கு கொடுத்தான். எதிர் முனை என்ன சொன்னதோ ஆத்திரத்தோடு எழுந்தவன் கர்ச்சிக்கும் குரலில்…
இப்போ என்னம்மா உங்களுக்கு? நான் பொண்ணு பார்க்க வரணும். அவ்வளவு தானே. நாளைக்கு போலாம். சொந்தங்களுட்டயும், குறிப்பா அப்பாட்டயும் சொல்லிடுங்க. அன்று வராம தப்பு செய்துட்டேன். இனி அப்படி இருக்க மாட்டேன். நாளைக்கே போலாம். எல்லாத்துக்கும் ரெடிப் பண்ணுங்க.
மகன் இப்படி சொன்னதும் நீலவேணிக்கு உச்சி குளிர்ந்திருக்க வேண்டும். உடனே போனை வைத்து விட்டாள். எப்படியும் வீட்டில் வானுக்கும் பூமிக்கும் குதிப்பாள் என்று தெரியும். ஆனால் ஆத்திரம் மொத்தத்தையும் யாரிடமோ கொட்டி விட்ட பிறகு மனசு லேசான நொடி தான் தன் கூற்றின் உண்மை தன்மை விளங்கியது முகுந்தனுக்கு.
ஒரு முறை காதில் இருந்து போனை எடுத்தவன் ஒரு நொடி அதை அதிர்ந்து பார்த்து விட்டு, பின் முன்னால் பார்த்தான். நளனும், ஒவியாவும் அவனையே அதிர்ந்து பார்த்திருந்தனர்.
“என்னடா அப்படி பாக்குறா? நீயும் தான் விடாம நச்சரிக்கிறியே… இப்போ ஒ.கே சொல்லிட்டேன். போதும் தானே.”
என அவன் கர்ச்சிக்க,
எதுவும் புரியாமல் நளன் ஒவியாவை திரும்பி பார்த்தான். அவள் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. முகுந்தனின் கண்ணும் அவளில் தான் இந்த நொடி படிந்திருந்தது. அவளில் எந்த மாற்றமும் இன்றி சிலையாக இருப்பவளை பார்க்க பார்க்க இன்னுமே ஆத்திரம் வந்தது.
இப்ப எதுக்கு என் முன்னால இருக்கீங்க. போய் தொலைங்க…
சூழ்நிலையை ஜீரணிக்க முடியாமல் அவன் கத்த,
சரி சார்… நான் கிளம்புறேன்.
என அவள் வெளியேறி விட்டாள். நளன் பாவமாக தோழனை பார்த்தான். அவன் தலையை பிடித்தவாறு அமர்ந்து விட்டான்.
அவனும் எவ்வளவு நாள் கோமாளி வேஷம் போட முடியும். சங்கீதாவோடு வழிவது எல்லாம் அவன் கேரட்டிற்கு சூட்டாகாத விசயம். அப்படியும் இவளுக்காக கீழ் இறங்கி போனால்… இவள் என்ன மலையேறுகிறார். என்ற ஆத்திரம், ஆவேசம். தன் ஆத்திரமும் ஆவேசமும் எத்தகைய பின் விளைவை ஏற்படுத்த போகிறது என தெரியாமல் அவசரப்பட்டு விட்டான்.
அந்த அவசரம் ஓவியாவையுமே அவசரப்பட வைத்து விட்டது. அவன் அறையில் இருந்து எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெளியேறியவளுக்கு, வெளியில் வந்த பின் உணர்வை அடக்க முடியவில்லை. அவசரமாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டவள் பேய் என மூண்டு வந்த அழுகையை இரு கை கொண்டு வாய் பொத்தி அடக்கியவாறு குலுங்கினாள்.
ஏதோ ஒரு சிறு நம்பிக்கை. அவன் மனதில் தான் இருக்கிறோமோ என்ற ஒரு சிறு நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான், தான் நிச்சயமான பொண்ணு என்பதையும் மறக்க வைத்து அவனோடு விளையாடவே வைத்தது. தன் வீடு வரை தேடி வந்து பெரிதுபடுத்த வேண்டாத ஒரு காரணத்தை பெரிதாக பேசி தன் காரிலே அழைத்து வந்து, உள் வந்ததும் ஏதோ ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வெறுப்பேத்தி என அவன் செய்த சேட்டைக்கெல்லாம் காரணம் காதலாய் இருக்குமோ என்ற ஒரு சிறு சந்தேகம் தான் அவளும் அவனுடன் இந்த மூன்று நாளும் விளையாட வைத்தது.
ஆனால் அது இல்லை என்று தெரிந்ததும் நிஜமாகவே நொருங்கி விட்டாள். இவன் தன் உயிரோடும் உணர்வோடும் விளையாடும் அரக்கன் என்றே முடிவு செய்து விட்டாள். இவனை கடந்து செல்லவில்லை என்றால் தனக்கு பைத்தியமே பிடித்துவிடும் என நம்ப ஆரம்பித்து விட்டாள். அப்போது மட்டும் அல்ல இரவு முழுதும் யோசித்தாள். அவளுக்கு இங்கிருந்து கிளம்புவது தான் சரியாக இருக்கும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.
மறுநாள் காலை எழுந்தவுடனே அதே எண்ணத்தோடே தான் மனதை இன்னுமே இறுக்கி கொண்டு அலுவலகம் நோக்கி நடந்தாள்.
இன்றே முகுந்தனிடம் பேசி விட வேண்டும். தான் ஊருக்கு கிளம்ப வேண்டும் என சொல்லி விட வேண்டும். இதற்கு மேல் இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிக்க முடியாது.
என்றெல்லாம் எண்ணியவள் மனதில் சட்டென வந்து போனான் மகேந்திரன்.
அவன் படுத்துற பாடு பெரிதென்றாலும் அதை விட முகுந்தன் கொடுக்கும் அவஸ்தை அவளுக்கு தாங்க முடியாததாய் இருந்தது. இதற்கு கிளம்பி விடுவது தான் சரி என முடிவெடுத்து தான் அலுவலகம் நோக்கி நடந்தாள்.
அதே நேரம்
முகுந்தனோடு வாக்குவாதத்தில் இருந்தான் நளன். நேற்றே கேட்டு விட தான் நினைத்தான். ஆனால் உடன் சங்கீதா இருந்ததால் பெரிதாக பேச முடியாமல் வீட்டிற்கு போய் விட்டான். ஆனால் இரவு நிம்மதியாக அவனால் தூங்க முடியவில்லை. இன்று முகுந்தன் செய்தது கொஞ்சம் அதிகபடி என அவனுக்குமே தோன்றியது. அந்த நொடி விட்டு கொடுக்க முடியாமல் அமைதியானாலும் இப்போது விடும் நிலையில் அவன் இல்லை. அதனால் கேட்டு விட்டான்.
முகுந்தன் வாய் விட்டு சிரித்தான்.
சிரிக்காதடா. நான் பயங்கர கோபத்துல இருக்கேன். நான் அப்போ இருந்தே உனட்ட சொல்லிட்டு இருக்கேன். அவங்க மனசுல அப்படி எந்த எண்ணமும் இல்லணு. நீ தான் ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இந்த அளவு கீழ் இறங்கி போறா? அன்று என்னடானா, வெளியில கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து கைகோர்த்து போனாலே திட்டுவா? அப்படிப்பட்டவன் அந்த சங்கீதாவோட அவ்வளவு நெருக்கமா நிக்குறா? நேற்று என்னணா அவங்களை பக்கத்துல வச்சிட்டு அம்மாட்ட பொண்ணு பார்க்க வரேணு சொல்லுறா? நீ… நீ என்ன தாண்டா மனசுல நினைச்சிட்டிருக்கா?
கடும் கோபத்தோடு சாடியவனை சாந்தமான பார்வையால் நோக்கியவன். நமட்டு சிரிப்பை உதட்டில் மறைத்தவாறு,
கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேனோ?
என்றான் கிண்டலாய்…
கொஞ்சம் எங்க… ரொம்ப… ரொம்ப ஓவரா போனா?
என கடுகடுத்தவனை நிதானமாக பார்த்தவன்,
பின்ன என்னடா. சங்கீதா மட்டுமல்ல. வேற எந்த பொண்ணோட நான் பேசினாலும் ஒவியா முகம் மாறுகிறதை நான் நிறைய இடத்துல நோட் பண்ணியிருக்கேன். ஆனா இப்போ என்னடானா சங்கீதா எனக்கு ஊட்டி விடுறா? இவா பல்லை காட்டிட்டு நிக்குறா? கடுப்பாகாது. கடுப்பாச்சி. அதான் அப்படி எல்லாம் செய்தேன். வெறுப்பாவாள்ணு பார்த்தா கல்லு போல இருக்குறா? அதுல வேற என் முன்னாலயே அந்த மகேந்திரன்ட்ட வழிஞ்சி வழிஞ்சி பேசுறா? போதாகுறைக்கு மகியாம். செல்ல பெயர் பெயரெல்லாம் வச்சி என் முன்னாலயே கூப்பிடுறா? வெறுப்பாகாது. ஆச்சு.
அதுதான் என்னவெல்லாமோ செய்ய வச்சிது. இப்போ மனசுக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு.
பாவம்டா அவங்க. அவங்க முகத்தை பாத்தியா?
பாத்தேன். பாத்தேன். கல்லு போல தானே இருந்தா.
இல்லடா. உன் செயல் அவங்களுக்கு வலிக்கிது.
வலிக்குது தானே. ஆனாலும் நான் எவளை தொட்டாலும் எனக்கு எதுவுமில்லணு நின்னா பாரு அதை என்னால மன்னிக்க முடியல. மனசுக்குள்ள அம்புட்டு வலியையும் அடக்கிட்டு நார்மலா அவளால நடிக்க முடியும்ணா அதை வெளி கொண்டு வர நானும் எந்த எல்லைக்கும் போகணும்ல. அதான் கொஞ்சம் விளையாடுனேன். அதான் இப்போ மாட்டிகிட்டால.
“மாட்டிகிட்டாளா?”
“பாரு. நான் கொடுத்த டோசோட வீரியம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்.”
சொன்னவன் ஒவியாவோட அடுத்த ரியாக்ஷனுக்காக காத்திருந்தான். ஆனால் இப்படி ஒரு அவதாரத்தை அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
நளனை அனுப்பி விட்டு மூன்று நாள் நாடக உலகில் வலம் வந்ததால் பெண்டிங் ஆன வேலையில் அவன் மும்முரமாக இருந்த போது,
அவளின்றி குரல் அவனை அழைத்தது.
“என்ன ? நாம கூப்பிடாமலே வந்திருக்கா? என்ன விசயமா இருக்கும்.”
எண்ணியவன் மனதில் நேற்றைய ஓவியாவின் முகம் வந்து போக,
“ம்… பார்ப்போம். நேற்றைய என்னோட அதிரடியில எவ்வளவு மாற்றம் தெரியுதுணு .”
எண்ணியவன் குரல் கேட்டும் நிமிராமல் வேலையில் மும்முரமாக இருப்பது போல் நடிக்க,
எரிச்சல் உற்றவள், கொஞ்ச நேர அமைதிக்கு பின்,
“கொஞ்சம் பேசணும்.”
என்றாள்.
“பேசுங்க…”
என்றவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஒவியாவுக்கு எரிச்சல் முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் காட்ட முடியவில்லை. சிறிது நேரம் அவளை அல்லாட விட்ட பின்னரே,
“சொல்லுங்க ஓவியா.”
என்றான் மறுபடியும். இப்போதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“எப்போ சார் புது ஸ்டாப்ஸ் எடுப்பீங்க. எனக்கு சொல்லி கொடுத்துட்டு கிளம்பணும்.”
என்றாள் தயக்கமாக…
“ஒ… அந்த அளவு ஆகிடுச்சா…”
மனதுக்குள் கர்வியவன்,
“என்ன மேடத்துக்கு அவசரமோ…”
என கிண்டல் தொனியில் கேட்க, அதற்கெல்லாம் அசர மாட்டேன் என்பது போல,
“ஆமா சார் அவசரம் தான். வீட்டுல எப்போ கிளம்பி வராணு கேட்கிறாங்க.”
என்றாள் அவளும் அதே தோனியில்,
“ஒ… நேற்று நான் கொடுத்த சூட்டோட உஷ்ணம் போல, இருக்கட்டும். இருக்கட்டும்.” என மனதில் நினைத்து கொண்டவன்,
“என்ன மேடத்துக்கு கட்டிக்க போறவனை பார்க்க அவ்வளவு அவசரமா?”
என்றதும் சட்டென ஏறிட்டு பார்த்தவள் அவன் விழிகளில் தன் விழியை செலுத்த, நிஜமாகவே தடுமாறி தான் போனான் முகுந்தன். அவனின் தடுமாற்றத்தை கண்ணுக்குள் நிரப்பியவாறே,
“கல்யாண வேலை நிறைய இருக்கு சார். எப்போ கிளம்பி வராணு வீட்டுல கேட்கிறாங்க.”
என்றாள் கோபத்தை பெரும்பாடுபட்டு அடக்கி கொண்டு,
“ஆக… அவனை கட்டிக்க நீ ரெடியாகிட்டா.”
என்றதும் புரியாமல் விழித்தவள்,
“இது என்ன கேள்வி. நிச்சயம் முடிஞ்சிருக்குணா ரெடியாகிட்டதா தானே அர்த்தம்.”
“ஆக… அவனை கட்டிக்க உனக்கு முழு சம்மதம்.”
“ஏன் சம்மதம் இல்லணு சொன்னா கல்யாணத்தை நிறுத்திட போறீங்களா? இப்போ எதுக்கு சம்மந்தம் சம்மந்தம் இல்லாம கேள்வியா கேட்கிறீங்க. முதல்ல என்னை வீட்டுக்கு அனுப்பி வைக்கிற வழியை பாருங்க. நான் வந்து ஒரு வாரம் ஆக போகுது. வீட்டுல விடாம போன் அடிச்சி தொந்தரவு பண்ணுறாங்க. நீங்க எப்போ தான் ஆளை தேர்வு செய்வீங்க.”
கடுகடுப்போடு சொன்னவளை ஆழமாக பார்த்தவன் சிறிது நேரத்திற்கு பின் மேஜை மீதிருந்த பெல்லை தட்ட நளன் உள்ளே வந்தான்.
அவனை பார்த்து முகுந்தன்,
“மேடத்துக்கு அந்த வழுக்கை தலையனை பார்க்க ஆசை வந்திடுச்சி போல… கிளம்ப பிடிவாதம் புடிக்கிறாங்க. என்ன நளன் இன்டர்வியூக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்களா?”
என்றான் கிண்டலோடு,
“வழுக்கை தலையனா?”
என முணுமுணுத்தவள் அவனை முறைக்க, புன்சிரிப்போடு தலையை திருப்பியவன் நளனை பார்க்க,
“நீ எங்கடா சொன்னா? நான் ரெடி பண்ண?”
மனதுக்குள் சொன்னவன் அவனை குழப்பமாக பார்த்து,
“அது… அது…”
என தடுமாற,
“சுத்தம். அதுவே ரெடி பண்ணலியா? என்னை எப்போ தான் ஊருக்கு அனுப்புற எண்ணத்துல இருக்கீங்க.”
என்றாள் சற்று கோபத்தோடு,
“அனுப்பிடலாம். அனுப்பிடலாம். இன்று மட்டும் என்னோட ஒரு கிளைன்டை பார்க்க வாருங்க. அது ஒ.கே ஆகி அக்ரிமென்ட்ல சையின் போட்ட மறுநொடி உங்களை அனுப்பி வச்சிடுறேன்.”
“என்னது… புது கிளைன்டா.”
சட்டென நேற்றைய நினைவு வந்து போக, அவள் முக மாறுதலை பார்த்ததும்,
“நேற்று போல அலக்கழிக்க மாட்டேன். இன்று நம்பி வரலாம்.”
என்றதும் ஒரு நொடி நிதானமாக யோசித்தவள்,
“அக்கிரிமென்ட்டுல சைன் பண்ணுனதும் விட்டு விடுவீங்களா?”
மறுபடியும் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.
“நீ கிளம்ப ரெடியா இருந்தா நிச்சயம் நான் அனுப்பி வச்சிடுவேன்.”
என்றதும் அரைகுறை மனதோடு சம்மதம் சொன்னவள் அடுத்த நொடியே ரெடியாகவும் செய்தாள். அவளுக்கு இந்த அவஸ்தையில் இருந்து விடிவு கிடைத்தால் போதும் என்றிருந்தது. ஆனால் முகுந்தன் வெளி வந்து அவளை மட்டும் அழைத்ததும், திரும்பி பார்த்தாள் யாரும் இல்லை.
“நாம… நாம மட்டுமா சார் போறோம்.”
என்றாள் இமையை படபடவென அடித்தவாறு,
“ஆமா… ஏன் கேட்கிறீங்க…”
என தெரியாதவன் போல கேட்டவன் அவளை ஆழ்ந்து பார்க்க,
“இல்ல… நளன்… திலகா…”
என அவள் இழுவையாக நிறுத்த
“அவங்களுக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு.”
என்றதும்,
“அடி ஆத்தி. இவரோட தனியாவா போக போறோம். சுத்தம். இன்று விளங்குனமாதிரி தான்.”
எண்ணியதுமே அவள் இமைகள் படபடக்க, அவளை கூர்ந்து பார்த்தவன்,
“என்ன? என் கூட வருகிறதுல பயமா?”
என்றதும்,
“ஆமா?” என படபடவென தலையசைத்தவள் அவன் விழிக்குள் தன் பார்வையை கலரவிட்ட பின், ‘இல்லை’ என மறுப்பாய் தலையசைத்தாள்.
“வண்டியில் வந்து ஏறு.”
என ஒருமைக்கு அவன் தாவ, அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் தயக்கத்தோடு வண்டியில் வந்து ஏறினாள்.
பின் டோரை திறக்க போனவளிடம்,
முன்டோரை திறந்து வழிவிட்டவாறு,
“இங்க வந்து ஏறு,”
என கட்டளையிட, அவனை பயத்தோடு பார்த்தவள்,
“நானா?”
என இயலாமையோடு கேட்டாள்.
“உன்னை தான். நீ மட்டும் தானே இங்க இருக்கிறா? வா… வந்து முன்னால ஏறு.”
“இல்ல சார். நான் பின்னாலயே இருக்கேன்.”
“என்ன?… எது சொன்னாலும் கேட்க கூடாது என்கிற முடிவுல இருக்கிறியா?”
“ஐயோ சார்… அப்படியெல்லாம் இல்லை.”
என்றவள் ஒரு நொடி அவன் விழியை பார்த்து விட்டு கோபத்தில் சிவந்திருந்த அவன் முகத்திற்கான காரணம் தெரியாமல் தயங்கியவாறே முன்பகுதியில் வந்து ஏறி அமர்ந்தாள். அமர்ந்தவளை ஒரு நொடி பார்த்தவன், பின் எதுவும் பேசாமல் வந்து டிரைவர் சீற்றில் அமர்ந்து ஸ்டாட் செய்தான். வண்டி மெல்ல நகர்ந்து பின் வேகம் எடுத்தது. ஆனால் வண்டி நகரத் தொடங்கிய பின் அவன் ஒற்றை வார்த்தை பேசவில்லை. இறுக்கத்தோடே இருந்தான்.
பெண்ணவளும் அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறே தான் இருந்தாள். முகத்தில் சிறு சிரிப்பு இல்லை. மருந்துக்கு கூட அவன் வாய் திறக்கப்படவில்லை. கொஞ்ச நேரம் அவனையே ஒர கண்ணால் பார்த்தவாறு இருந்தவள் பின் திரும்பி வெளிவுலகை வெறிக்க தொடங்கினாள்.
அதே நேரம் முகுந்த் அறையில் கைகள் இரண்டும் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தான் நளன். என்னவோ முகுந்தன் செய்வது சரியில்லை என்பது மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவன் பேச போற விசயம் கேட்டு நிச்சயம் ஒரு பூகம்பம் தன் வாழ்விலும் நடக்கும் என்பது யாரும் சொல்லாமல் அவனுக்கே தெரிந்தது.
அதற்குள் தன் மனம் கவர்ந்தவளிடம் பேசி தெளிவுப்படுத்தி விட வேண்டும் என்று மனசு உந்தி தள்ள, கண்ணாடி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். ஆபீஸே சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. ஆனால் இவன் மனம் மட்டும் தான் குழம்பி கொண்டிருந்தது. சொல்ல சொல்ல கேட்காமல் முகுந்தன் ஓவியாவோடு கிளம்பிய நொடியே அவனுள் இந்த குழப்பம் வந்து விட்டது. கூடவே பயமும் வந்தது. அவன் செய்ய கூடிய கோமாளி தனத்தால் தன் காதலில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் தான் அவனை குழம்ப வைத்திருந்தது.
அந்த குழப்பத்தோடே திலகா அறைக்கு வந்தான். கள்ள முழி முழித்து கொண்டு முன்னால் நின்றவனை யோசனையோடு பார்த்தாள் திலகா.
“என்னாச்சு. ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு.”
என்றதும் முகத்தை ஒரு முறை கையால் துடைத்து தன்னை நார்மலாக்கும் முயற்சியில் ஈடுபட,
“எதுக்கு இப்போ பதட்டம். என்ன நடந்துச்சு.”
என்றவளை தயக்கத்தோடு ஏறிட்டவன்.
“முகுந்தன் ஓவியாவை அழைச்சிட்டு வெளியில போயிருக்கான்.”
“தெரியும். அதுக்கென்ன?”
“அது இல்ல… நேற்று போல…”
என்றதும் அந்த ஹோட்டலில் சங்கீதாவோடு முகுந்தன் அடித்த லூட்டியை ஒரு நொடி நினைத்து பார்த்தவள்,
“நேற்று போல…”
என்றாள் அவன் மீது வைத்த பார்வையை எடுக்காமல்,
“ இல்ல உன் பிரண்ட் அப்செட்…”
என இரண்டு நாளாய் முகுந்த் அடித்த குரங்குதனத்தால் ஒவியா நடந்து கொண்ட முறையை நினைத்து தயங்க, அவன் உள்ள கிடக்கையை அறிந்து கொண்டவள் போல,
“அது எல்லாம் ஆக மாட்டா. ரொம்ப ரொம்ப தெளிவா தான் போயிருக்கா. திரும்பி வந்ததும் ஊருக்கு கிளம்பிடுவா?”
“அதுக்கில்ல திலகா…”
“ உனக்கு என்னாச்சு. எதுக்கு நீயும் குழம்பி என்னையும் குழப்புறா? அவங்க பிரச்சினையை அவங்க சமாளிச்சிப்பாங்க. உன் பிரச்சினை ஏதாவது இருந்தா போய் பாரு.”
“என் பிரச்சினை. ஆமா அதை தீர்க்க தான் உன்னை தேடி வந்தேன்.”
“ நான் என்ன பண்ணணும்.”
“நீ எதுவும் பண்ண வேணாம். எல்லாம் அம்மா பாத்துப்பாங்க. நீ சம்மதம் மட்டும் சொல்லு.”
“எதுக்கு சம்மதம்…”
“நம்ம கல்யாணத்துக்கு…”
“விளையாடுறியா?”
“இல்லடி. அம்மா தான் பேச சொன்னாங்க. ஒரு நல்ல நாள் பார்த்து உன் அம்மாட்ட வந்து பேசட்டுமாணு கேட்க சொன்னாங்க.”
“என்ன நினைச்சிட்டு இப்படி பேசுறா? நான் உன்னை கட்டிப்பேணு கனவுல கூட நினைக்காத. அதுக்கு இந்த ஜென்மத்துல வாய்ப்பே இல்லை.”
“என்னடி விளையாடுறியா? எப்படியோ இருந்த மனசை இளக வச்சி குளிர வச்சி ஒரு தினுசாய் ரொம்ப கஷ்டப்பட்டு மாற்றி கொண்டு வந்தா மறுபடியும் பழையபடி பேசுறா?”
“மாற்றி கொண்டு வந்தியா? நான் மாறிட்டேனு நினைக்கிறது உன் முட்டாள்தனம். அப்ப சொன்னது தான் இப்பவும். எப்பவும்.”
“திலகா நீ நிஜமா தான் சொல்லுறியா?”
“ம்… என்னால என்னை மாத்திக்க முடியாது…”
“பிளீஸ் திலகா அப்படி பேசாத…”
“பேசல. நீயும் இனி இது பற்றி பேசாத…”
“எப்படி டீ பேசாம இருக்க முடியும். நான் காதலிச்சிருக்கேன்டி.”
“அது இந்த திலகாவை இல்லை. இரண்டு காலோட அழகு சுந்தரியா இருந்த திலகாவை. அந்த திலகா தான் மலை சரிவுல செத்து போயிட்டாளே. அப்படியும் அவளை தேடி அலைஞ்சா எப்படி? இனி அவா உங்களுக்கு கிடைக்க மாட்டா. தயவு செய்து மனசை மாத்திட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோங்க. இந்த நிலமையில என் மனசு மாறவே செய்யாது.”
“கால் இல்லனா என்னடி. உன் மனசு போதுடி.”
“அறிவு இருக்கா நளன் உங்களுக்கு. இரண்டு கால் இல்லாதவளை காலம் முழுக்க சுமக்க எதுக்கு ஆசைப்படுறீங்க. நான் உங்களுக்கு வேணாம்.”
என்றவள் குரல் கரகரக்க,
“ஒரு நாள்… ஒரு நாள் சந்தோஷமா ஜாலியா உங்களோட வெளிவர முடியுமா? போகிற இடத்துக்கு என்னோடு உங்களால கம்பீரமா நடக்க முடியுமா? வாழ தான் கல்யாணம் பண்ணிக்கிறோம். என் சுமையை உங்க தலையில சுமத்த இல்ல. என் கனவு கலைஞ்சி போச்சு நளன். என் கற்பனை உடைஞ்சி போச்சு. இப்படி உருகுலைஞ்சி கிடக்கிற எனட்ட இருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது.”
“ஏண்டி இப்படி எல்லாம் பேசுறா? உன் மனசுலயும் வசந்தம் வீசும்டி. உன் மன குகையில இருந்து வெளியில வா. நாம சேர்ந்து சந்தோஷமா வாழலாம்.”
“அதுக்கு வாய்ப்பில்லை நளன். நீங்க போலாம். இது போல தான் இனியும் பேசுறதுனா என் முன்னால வராதுங்க.”
“என்னடியாச்சு உனக்கு. இரண்டு நாள் முன்னால வரை ஓ.கே.வா தானே இருந்தா? இப்போ என்னாச்சி.”
“எனக்கு என்ன? நான் நல்லா தான் இருக்கேன். இரண்டு நாள் முன்னால இருந்தது போல தான் இப்பவும் இருக்கிறேன். ஆனா நீங்க தான் நான் சிரிச்சி பேசினதும் தப்பா புரிஞ்சிட்டீங்க. என் தகுதி எனக்கு தெரியும். உங்க தகுதியும் எனக்கு தெரியும். நீங்க கிளம்பலாம்…”
“திலகா…”
“பிளீஸ் நளன். என்னை கஷ்டப்படுத்தாதுங்க. போயிடுங்க… பிளீஸ்…”
“எப்படிடீ…”
“ இப்படியே பேசிட்டிருந்தீங்க. ஓவியாவோடவே நானும் கிளம்பிடுவேன். இங்கு வந்த பிறகு வாழணும்னு ஆசை வந்திருக்கு. அதையும் நீங்களே அழிச்சிடுறதா இருந்தா மறுபடியும் என் முன்னால வந்து இப்படி பேசுங்க.”
கண்ணீர் மல்க சொன்னவளை வலியோடு பார்த்தவன் பின் தளர்ந்து போய் திரும்பி நடந்தான். அவன் பின் முதுகை வெறித்த திலகாவின் கண்களும் நீரை கன்னத்தில் வடிய விட்டது
“சாரி நளன். நீயும் டாக்டரும் பேசுனதை நான் கேட்டுட்டேன். சாரி. வெரி வெரி சாரி. உனக்கு வாரிசை கொடுக்க முடியாதுணு டாக்டர் சொன்னதுக்கு அப்புறமும் நீ வேணா மனம் உவந்து என்னை ஏத்துக்க ரெடியா இருக்கலாம். ஆனா என்னால முடியாது. நான் காதலிச்சவனோட எதிர்காலத்தை என்னால அழிக்க முடியாது. நீ சந்தோஷமா இருக்கணும். பிள்ளை குட்டிகளோட சந்தோஷமா வாழணும். அதை நான் பார்க்கணும்.”
நினைத்தவள் உதடு அவளை அறியாமல் துடிக்கத் தொடங்கியது.
மூன்று நாளில் திலகாவின் செயலில் தெரிந்த மாற்றத்திற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தோடு வெளி வந்தவன் நேரே வாசலுக்கு வந்து முன்னால் பார்க்கிங்கில் நிப்பாட்டி இருந்த காரை எடுத்து கொண்டு இலக்கு இல்லா பயணமாக அதை ஓடவிட்டான்.
நளனை வேதனைப்படுத்தி விட்டு அந்த வலியை பொறுக்க முடியாமல் குலுங்கி அழுத திலகாவின் கவனத்தை வெளியில் இருந்து வந்த குரல் கலைத்தது. அவசரம் அவசரமாக கண்ணீரை துடைத்தவள்,
வெளியில் இருந்து உள் நுழைந்த சுந்தரியை கண்டதும்,
“சொல்லுங்க மேடம்…”
என அவளை ஆர்வமாக பார்க்க,
“ஓவியாவை தேடுனேன். காணல. ஒருவேளை இங்கு வந்திருப்பாளோணு பார்க்க வந்தேன்.”
“அவளை எதுக்கு தேடுறீங்க.”
“வேணி மேடம் தான் கேட்டாங்க. குடகுமலை குடோன்ல்ல ஸ்டாக் கிளியர் பண்ண அவங்களை அனுப்ப சொன்னாங்க.”
“ஒ… அப்படியா? அவா இங்க இல்ல. முகுந்த் சாரோட ஒரு கிளைன்ட்டை பார்க்க போயிருக்கா. வர எப்படியும் நேரமாகும். அப்படியே வந்தாலும் உடனே ஊருக்கு போக தான் ரெடியாவா? நானே போறேன். வண்டிக்கு ரெடி பண்ணுங்க.”
“ஓ.கே. திலகா.”
என சுந்தரி விடை பெற, திலகா தன்னை நோக்கி வரும் ஆபத்து தெரியாமல் குடோனுக்கு கிளம்ப ரெடியானாள். ஓவியாவுக்கு விரித்த வலையில் காலில்லா கன்னி பெண் மாட்ட போகிறாள் என தெரியாமல் அந்த குடோனில் வலையை அழகாய் விரித்திருந்தான் ராஜேந்திரன்.
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel