வணக்கம் வாசகர்களே!
முதல் முறை சங்கிலியை மோதி கொண்ட பல்லவி. அவள் கண்ணில் தெரிந்தது அருவெறுப்பா? அல்லது நாணமா?
பத்து நிமிடம்… பத்து நிமிடம் அந்த வலி அவளுள் இருந்தது. அதன் பின் விக்கியோட விளையாட்டிலும், செழியனோட அரட்டையிலும் அது மறைந்து விட்டது. பல்லவி அந்த விழாவில் என்ஜாய் பண்ண ஆரம்பித்து விட்டாள்.
பாண்டி வாங்கி கொடுத்த ஐஸ்கிரீமை மாறி மாறி குடித்தவர்கள் கடைசியாக எல்லாரும் குடித்து முடித்திருக்க பல்லவி கையில் மட்டும் மீதம் இருக்க கண்டதும் ,
விக்கியின் கண்கள் பல்லவியின் மீதம் இருக்கும் ஐஸ்கிரீம் மீது போக, அதை கவனித்து விட்ட பல்லவி, மீதம் இருந்த ஐஸ்கிரீமை அவன் முகம் முழுவதும் பீச்சி அடிக்க, திடீர் தாக்குதலால் விக்கி தடுமாறிய நேரம், அவன் கையில் மாட்டி விட கூடாது என பதறி அடித்து கொண்டுஅவள் ஒட,
“ஓடவா செய்றா? உன்னை?…”
என அடிக்க கை ஓங்கி கொண்டு அவனும் துரத்தினான். அவன் கையில் மாட்டி விட கூடாது என பின்னால் அவனை பார்த்து பார்த்து கண்கள் சிமிட்டி கொண்டு பல்லவியும் முன்னோக்கி ஒட இவர்கள் இருவரின் பின்னால் ஐஸ்சுவும் செழியனும் ஓடி வந்தார்கள்.
இருவரும் ஒடிய ஓட்டத்தையும் போக்கு காட்டி போக்கு காட்டி அவர்கள் விளையாடும் கூத்தையும் ரசித்தவாறே அமர்ந்திருந்தனர் கமலமும் பாண்டியும். கடைசியாக பல்லவி ராட்டினத்தில் ஏறி அமர, அவளை தொடர்ந்து வந்து விக்கியும் அவன் அருகில் வந்து நெருங்கி அமர்ந்தான். மறுபக்கம் ஐஸ்சுவும் செழியனும் அமர, ராட்டினம் சுற்ற ஆரம்பித்தது. ஆள் ஆளுக்கு கூச்சல் போட ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் அடித்து விளையாடும் அழகை பார்த்து கொண்டிருந்த கமலம் பாண்டி பக்கம் திரும்பி,
“என்னங்க. பல்லவிட்ட பேச வேணும்னு சொன்னீங்களே. பேசிட்டீங்களா?”
என்றதும் , விக்கி, பல்லவி மேல் இருந்த தன் பார்வையை விலக்கியவர். சிரிப்பு சிறிதும் மாறாமல்,
“இல்ல கமலம். ஆனா இன்று பேசிடணும் என்று தான் நினைக்கிறேன். அவா என்ன சொல்லிடப் போறா. சம்மதம் தான் சொல்லுவா?”
“அது எனக்கும் தெரியுதுங்க. ஆனா விக்கி வீட்டுல சம்மதிப்பாங்களா?”
“அந்த புள்ளைட்ட நான் நேற்று பேசிட்டேன் கமலம். அது எந்த தேதியில முகூர்த்தம் வைக்கிறதுணு சொல்லுங்க. என் பேமிலி ரெடியா தான் இருக்குதுணு சொல்லுது.”
“அப்படினா பல்லவிட்ட பேசிட்டு சேர்த்து வச்சிட வேண்டியது தானேங்க. ஊர்ல்ல இப்பவே கண்ணு காது மூக்கு வச்சி பேச ஆரம்பிச்சாச்சு. பல்லவிக்கு விக்கிதானு நாம முடிவு பண்ணிட்டாலும் கல்யாணத்துக்கு முன்னால இது என்ன கூத்துணு என் காதுபடவே பேசுறாங்க.”
“டவுணுல எல்லாம் இது பெரிய விசயம் இல்ல தான். ஆனா நம்ம ஊர் அப்படி இல்லயே. எல்லாருக்கும் விளக்கம் சொல்லிட்டிருக்கிறதுக்கு ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டா பிரச்சினை இல்லை தானே.”
“சரிதான் கமலம். பல்லவி கூட இதுல பெரிசா எதிர்ப்பு சொல்ல போறதில்ல. விக்கி வீட்டுலயும் எந்த எதிர்ப்பும் இல்ல. சேர்த்து வச்சிடலாம் தான். ஆனா கட்டி கொடுக்கிறதுனா காசு வேணாமா?.. நான் முதல்ல பல்லவியோட சொத்தை வச்சி எப்படியாவது கரையேத்திடலாம்ணு நினைச்சேன். அந்த புள்ளை சங்கிலியோட கடனை அடைச்சிடுச்சி. இப்போ பெரிசா கையில எந்த காசும் இல்ல. அதான் ஒரே யோசனையா இருக்கு.”
“நம்ம நிலமை தெரிஞ்சி தான் விக்கி தம்பியோட குடும்பம் கல்யாணத்துக்கே சம்மதிச்சிருக்கு. எப்படியும் நம்ம பக்கம் இருந்து பெரிசா எதுவும் வராதுணு அவங்களுக்கும் தெரிஞ்சி தான் இருக்கும்.”
“பெரிசா செய்யாட்டாலும் நம்மால முடிஞ்சதா ஏதாவது செய்யணுமே கமலம். இப்போ அதுக்கு கூட நமட்ட வழி இல்லயே.”
” அதுக்கு தான் சங்கிலி இருக்கானே. அந்த புள்ளைக்குணு போய் நின்னா. அவன் முடியாதுனா சொல்ல போறான்.”
“சொல்ல மாட்டான் தான். ஆனாலும் சும்மா சும்மா எப்படி அவனுட்ட போய் நிக்குறது. பல்லவிக்கு தெரிஞ்சா கோபப்பட மாட்டாளா?”
“அது ஒண்ணும் கோபப்பட மாட்டா. நீங்க பல்லவிட்ட பேசுங்க. எல்லாம் நல்லவிதமா நடக்கும்.”
“சரிடி. நீ சொன்னா சரியா தான் இருக்கும். நான் இன்றே பேசிடுறேன்.”
என்றதும் மறுபடியும் இருவர் பார்வையும் அவர்கள் பக்கம் திரும்ப, அதே நேரம் ராட்டினத்தில் இருந்து இறங்கி பல்லவி விக்கியின் காதில் எதையோ சொல்லி கொண்டு ஒட்டம் பிடிக்க… இப்போதும் விக்கி சத்தம் போட்டு கொண்டே சின்ன குழந்தை போல் அவளை துரத்தி கொண்டு ஓடினான்.
பின்னால் ஒடி வந்தவனை ஆட்காட்டு விரலை மடக்கி பழிப்பு காட்டி சிரித்தவளை பார்த்து,
“அடி…”
என கை ஓங்கியவனாக அவளை நோக்கி ஓடினான் விக்கி. அவனிடம் மாட்டி கொள்ள கூடாதே என்ற அவசரத்தில் தன் ஸ்பீடை அதிகப்படுத்தி பின்னால் விக்கியை பார்த்து பழிப்பு காட்டி அவனை கொலைகாண்டாக்கி கொண்டே ஓடியவள் யார் மேலோ மோதி நிற்க…
ஒரு கணம் உடலே குலுங்கி சரிய போக,தன்னை எதுவோ ஒரு கரம் தாங்கி கொண்ட உணர்வு ஏற்பட பல்லவி தன் படபட விழியோடு சட்டென திரும்பி பார்க்க, ஒரு நொடி இமைக்க மறந்து சிலையாக அப்படியே நின்று விட்டாள்
ஒரு நொடி சூழல் மறந்து அவனையே பார்த்தவாறு அவள் கண்கள் இரண்டும் இருக்க, அவனிலிருந்து விடுபட முடியாமல் அவனிலே புதைந்து நின்றது அவள் உடம்பு. அவ்வளவு நெருக்கத்தில் தன் மார்பிலும் கைவளைவிலும் கொடி முல்லை போல படர்ந்து நின்ற பல்லவியை காந்த பார்வையால் துளைத்து கொண்டு அவளை தன் இரு கைவளைவுக்குள்ளும் தாங்கி கொண்டான் சங்கிலி,
இரண்டு நிமிடம் அப்படி ஒரு மௌனநிலை. சித்தம் கலையா அமைதி நிலை. அவர்களின் . மோன நிலையை கலைத்தது என்னவோ விக்கி தான்.
“மாட்டிகிட்டியா?”
சொன்னவாறு பின்னால் வந்து காதை பிடித்து திருக…
“ஆ…”
என குரல் கொடுத்தவள்.
“விடுடா. வலிக்குது…”
என அவனிடமிருந்து நீங்க முயல…
“வலிக்குதா… என்னை பார்த்து என்ன சொல்லிட்டு ஓடுனா. சொல்லு… சொல்லு…” அவன் அவள் காதில் இருந்த கையை எடுக்காமலே கேட்க,
“போடா… பொறுக்கினு சொன்னேன். “
அவளும் உதட்டை பிதுக்கியவாறு சொல்ல…
” ம்… பொறுக்கி. நான் பொறுக்கி. இந்த பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?”
என மறுபடியும் காதில் இருந்த தன் கையை அழுத்தி பிடிக்க…
“ஆ… பிசாசு. வலிக்குதுடா.”
என அவள் சிணுங்க ஆரம்பிக்க,
“வலிக்கட்டும். அப்ப தான் எப்படி பேசணும். எப்படி பேச கூடாதுணு தெரியும்.”
சங்கிலியின் முன்னாலே அவர்களின் செல்ல சண்டை நடக்க, அதை அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று பார்த்தவன்.
சிறிது நேரத்திலே கிளம்பி வேறு பக்கம் செல்ல, விக்கியிடம் போட்ட சண்டையை நிறுத்தியவள் சட்டென திரும்பி சங்கிலியை பார்த்தாள். அவனோ கவிழ்ந்த தலை நிமிராமல் சென்று கொண்டிருந்தான். இரண்டு நிமிடம் உறுத்து பார்த்தவள்.
சட்டென தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவளாக, விக்கி பக்கம் திரும்பி,
“என்னடா போலாமா?”
என்றதும் விக்கியும்,
“பல்லவி சங்கிலி ஏன் எதுவும் பேசாம போறான். உனட்ட கூட எப்படி இருக்காணு கேட்கல.”
என்றதும் மறுபடியும் சங்கிலியின் பின் முதுகை துளைத்தவாறே…
” நமட்ட பேச என்ன இருக்கு. அவர் எல்லாம் இறங்கி வந்து பேச நாம என்ன வி.ஐ.பியா? நீ பழைய சங்கிலியா நினைச்சிட்டு பேசுறா. அவர் நீ பார்த்த சைக்கிள் கடை சங்கிலி இல்ல. தொழிற்சங்க தலைவர். அவர் எல்லாம் நம்மளை போல சாதாரண ஆட்களுட்ட எல்லாம் நின்று பேசுவாரா? அப்படி பேசினா தான் தலையில இருக்கிற கிரீடம் இறங்கிடாது.”
பல்லவி கிண்டலோடு சொல்ல..
“என்ன இருந்தாலும் சங்கிலிக்கு இம்புட்டு திமிர் ஆகாது. நாம எல்லாருமே இங்க இருக்கோம். ஏன் பாண்டி அங்கிள் கூட இருக்காங்க. அப்படியும் தெரியாதவங்களை கடந்து போறது போல போறது நல்லாவா இருக்கு.”
” நல்லா இருக்குதா இல்லயாணு விவாதிக்க என்ன இருக்கு. ஆமா அவன் பேச வேணும்ணு நீ ஏன் இவ்வளவு எதிர்பார்க்கிறா?”
“இல்ல…ஒரு நாளாவது நம்மளோட பழகியவர் ஆச்சே…”
“அந்த எண்ணம் உனக்கு இருக்கு. அவங்களுக்கும் இருக்க வேணும்னு அவசியம் இல்ல தானே. அப்படி இருக்கிறவங்க இப்படி போக மாட்டாங்கல. அதை எல்லாம் நாம எதிர்பார்த்தா. நாம தான் முட்டாள்கள். பேசாம நம்ம விளையாட்டை தொடங்கு. நாம வேணாம்ணு ஒதுங்குறவங்களை பற்றி பேசி நாம நம்ம சந்தோஷத்தை கெடுக்க வேணாம்.”
சொன்னவள் பொங்கும் சிரிப்போடு அவன் தலையை தட்டிக் கொண்டு ஒட, அவளின் கலகலப்புக்குள் தன்னை தொலைத்தவனாக அவனும் ஒடினான். அன்று இரவு இரண்டு மணி வரை கோவிலிலே தான் எல்லாரும் இருந்தனர். சங்கிலி உட்பட,
ஆனால் அதற்கு பின் பல்லவியின் எதிரில் அவன் செல்லவே இல்லை. அது போல அவளை தாண்டியும் செல்லவில்லை. அவர்கள் போகும் இடமாக அவர்கள் பின்னே சென்றாலும் அவர்கள் யாரின் பார்வையிலும் அவன் விழவே இல்லை.
அன்று முழுவதும் அனைவரும் கோவிலில் இருந்ததால் பாண்டி கேட்க வேண்டும் என்று நினைத்த எதையும் கேட்கவில்லை.
மறுநாள் காலை வீட்டிற்கு வந்திருந்தான் ரவி. வந்தவுடனே தாயின் அருகில் வந்தவன் கொண்டு வந்த பணத்தை கொடுத்து விட்டு கிளம்ப எத்தனித்த போது ,
“என்னடா வந்தவுடனே கிளம்புறா ?”
“நிறைய வேலை இருக்கும்மா.”
“அப்படினா உன் பணத்துக்காக தான் இங்க நாங்க காத்திருக்கோமா? வந்தா ஒரு நாள் தங்குறியாடா. என் கையால வாங்கி ஒரு வாய் சாப்பிடுறியா?”
“என்ன அத்தை இப்படி கேட்கிறீங்க. அவங்க எல்லாம் பெரிய ஆளாகிட்டாங்க. இனி இந்த குடிசை வீட்டு சாப்பாடு எல்லாம் தொண்டையில இறங்குமா என்ன?”
கிண்டலோடு வந்த பல்லவி அருகில் அமர,
“என்ன?… அம்மாவை ஏத்தி விடுறியோ?”
“நான் எதுக்கு ஏத்தி விடனும். உண்மையை தானே சொல்றேன். பணம் காசு வந்தா எப்பவும் பம்பரமா தான் நிப்பியா?”
“…………”
“பேசாம உட்காருடா. அம்மா கொடுக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு போ. அவனுக்கு தான் யாருமில்ல. விதினு வாழுறான். உனக்கு தான் எல்லாருமே இருக்கோமே. அப்புறம் ஏண்டா வீட்டுக்கே வராம எங்கேயோ தங்குறா?”
பிளைட்டை எடுத்து அவன் முன் வைத்தவாறு கேட்ட பல்லவியை நிமிர்ந்து பார்த்தவன்.
“அதையும் நீயே சொல்லிட்டியே. அவனுக்கு வேற யாருமில்லணு.”
ரவி தன்னை ஊடுருவி பார்த்து அப்படி சொன்னதும் விழியை தாழ்த்தி பாத்திரத்தில் தன் பார்வையை ஒட விட்டவள் சாதத்தை எடுத்து வைத்தவாறே அவனை கவனிக்க ஆரம்பிக்க,
அவள் மேல் அழுத்தமான பார்வையை வைத்திருந்த ரவி,
“பாவம் பல்லவி சங்கிலி. தண்டபாணி அண்ணனும் இப்போ அவன் கூட இல்ல. ஜெகனும் இல்ல. நான் மட்டும் தான் கூட இருக்கேன். ஒரு முறை கோபத்துல ஒத்த வார்த்தை பேசிபுட்டாணு ஜெகன் கோவிச்சிட்டு போயிட்டான். அதுலயிருந்து சங்கிலி ரொம்ப மனசு உடைஞ்சி இருக்கான்.”
” …………………”
“நானும் வந்துட்டேனா தாங்க மாட்டான்.”
“அப்புறம் வசதி வந்ததும் மாறி போய் நின்னா?… எல்லாரும் விட்டுட்டு தான் போவாங்க. வேணும்னு இருக்கிறவங்களை உதாசீனப்படுத்துனா முகத்துல விழிக்காதவன் போல காட்டான் போல சுத்துனா எல்லாரும் ஒதுங்க தான் செய்வாங்க.ம்கூம்… எது மாறினாலும் அந்த முரட்டு குணம் மட்டும் மாறவே இல்ல.”
“அது எப்படி மாறும். அது பிறப்புலயே கூட இருக்கு. அவ்வளவு சீக்கிரத்துல மாறாது.”
“மாறலனா இப்படி தனியா இருந்து தான் ஆகணும்.”
பல்லவி கடுப்பில் மூச்சை பிசுபிசுவென விட்டவாறு சொல்ல..
அவளை ஒர கண்ணால் பார்த்தவன்.
“ஆனா சங்கிலி ஒரே ஒரு ஆளுட்ட மட்டும் தான் இதுவரை தன் முரட்டு குணத்தை காட்டியதே இல்லை. அந்த ஆளுக்காக மட்டும் தான் அவன் மனசு இளகி ஒடுறதை நான் பல இடத்துல பாத்திருக்கேன்.”
என்றதும் ஆர்வமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள். கண்ணை சுருக்கி குழப்பமான பார்வையை அவன் மேல் வீசியவாறு,
“நீ யாரை சொல்லுறா?”
“என்ன புள்ள தெரியாதா உனக்கு. நீ தான் புள்ள அந்த ஆள். உனக்கிட்ட மட்டும் தான் சங்கிலியோட முரட்டு குணம் பெட்டி பாம்பா அடங்கிடும்.”
“ஆமா… நல்லா அடங்கிச்சி. அதை தான் கோவில் திருவிழாவுல பார்த்தேனே. என்னா… அடக்கம். ம்… பார்த்தும் பார்க்காதது போல போறதும், ஒத்த வார்த்தை பேசாம போறதும் தான் உங்களோட அடக்கமா?”
என அவள் அடக்கப்பட்ட சிரிப்பில் கேட்க, அவள் எகத்தாள பேச்சில் அடிப்பட்டவன்.
“என்ன புள்ள சொல்லுறா? நீ… நீ திருவிழா கூட்டத்துல சங்கிலியை பாத்தியா?”
“ஏன் அந்த முரடன் உனட்ட வந்து சொல்லலியா?”
“இப்போ எல்லாம் அவன் உன்னை பற்றி பேசுறதே இல்ல. எனட்ட கூட என்னை பற்றி அவளுட்ட போய் எதுவும் சொல்ல கூடாதுணு சொல்லியிருக்கான்.”
“ஓ!… அந்த அளவு நான் வேண்டாதவள் ஆகிட்டேன் இல்ல.”
சொல்லும் போதே குரல் கம்ம,
“அப்படி இல்ல புள்ள. நீ சந்தோஷமா இருக்கணும் அவ்வளவு தான் அவனுக்கு வேணும். பக்கத்துல வந்தாலே நீ இரிட்டேட் ஆகிடுறியாம். எதுக்கு வம்புணு தான் ஒதுங்குறானாம்.”
“ஆமா இவங்க எதுவும் பேசாம தான் நான் இரிட்டேட் ஆகிறேனாக்கும். எதையும் செய்து சொதப்பி வைக்கிறது. அப்புறம் பார்த்தா கோபம் தான் வரும்.”
“அந்த கோபத்தை கூட அவன் உனக்கு தர கூடாதுணு நினைக்கிறான்.”
“அப்படியே இருக்க சொல்லு. ஒரு இஞ்ச் கூட அதுல இருந்து மாறிட கூடாதுணு நான் சொன்னதா போய் சொல்லு. இன்னும் பத்து நாளுல கிளம்பிடுவேன். அப்புறம் எப்படி வருவேனோ தெரியல. அதுவரை ஊர் பக்கம் வந்திட வேணாம்ணு சொல்லு.”
என்றவள் கடும் கோபத்தோடு,
“இந்தா கொட்டிட்டு கிளம்பு.”
என சொல்லியவாறு விறுவிறுவென அங்கிருந்து எழுந்து செல்ல,
போகும் அவளையே சிரிப்பு மாறாமல் பார்த்தவாறு உண்ணத் தொடங்கினான் ரவி.
நேரே தன் அறைக்கு வந்தவள் தாங்க மாட்டாதவள் போல அந்த மூலையிலே கொடி முல்லை போல சுருண்டு கொண்டாள். ஏனோ கண்ணீர் மட்டும் அவளையும் மீறி முட்டிக் கொண்டு வந்தது.
” பெரிய இவன். இறங்கி வர மாட்டான். எனக்கு என்ன?… வந்தா என்ன?…. வராட்டா என்ன? இவன் பேசலனா நமக்கு என்ன நேரம் இருட்டாதா? இல்ல விடியாதா?. எப்பவோ ஒரு முறை உதவியவன் ஆயிற்றே…. அவனுக்கும் யாரும் இல்லையே. அப்படினு நினைச்சி போய் பேச போனா அவன் பெரிய இவனாட்டம் பிகு பண்ணுனா? போய் தொலையட்டும். நம்ம கண்ணு முன்னால வராம இருந்தா சரி…”
மனதிடம் பேசுவதாக நினைத்து கொண்டு பல்லவி வாய் விட்டே புலம்பி தள்ள… வார்த்தைகள் ஒவ்வொன்றும் சங்கிலியை கடித்து துப்ப,
கடைசியில் ஒரு வழியாக மனது சமாதானமாகி பேச ஆரம்பித்த போது, உண்டு முடித்து ஹாலுக்குள் நுழைய போன ரவியின் காதில் இவளின் அங்கலாய்ப்பு தெளிவாக விழுந்தது. மெல்ல குரல் வராமல் அந்த அறை வாசல் பக்கம் பதுங்கி வந்தவன் உள்ளே எட்டி பார்க்க…
குழந்தை பருவத்தில் பயத்தில் சுருண்டு கிடந்தது போலவே இந்த முறையும் படுத்திருந்தாள். ஆனாலும் அவளின் முனங்கல் நிற்கவில்லை. அவளின் அங்கலாய்ப்பு அத்தனையும் கேட்ட பின் உதடு மெல்ல விரிந்தது.
“இதை, நான் கேட்க கூடாது. சங்கிலி தான் கேட்கணும்.”
நினைத்தவன் உடனே போனை ஆண் செய்ய… எதிர்முனைக்கு வந்த சங்கிலி போனில் பல்லவியின் குரல் கேட்டு அப்படியே செல்போனோடு அமர்ந்து விட்டான்.
“இவன் பெரிய இவன். சின்ன வயசுல ஆசைப்பட்டது போல… எல்லாம் செய்யட்டும்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினா. பெரிய இவனாட்டம் பேசாம போறான். போகட்டும். போய் தொலையட்டும். இவன் பேசணும்ணு எவன் அழுதான். பெரிய தொழில் சங்க தலைவர் ஆகிட்டா. சார் என்ன பெரிய இவர்ணு நினைப்பாக்கும். எனக்கு அவன் சங்கிலி தான் சாதாரண சங்கிலியே தான்.”
“பதவி, பணம் வந்தா பழகினவங்களையே மறந்திடுவாங்களா? முகத்தை பாரு. கருங்குரங்கு. உர்ணு வச்சிட்டு. இம்புட்டு நமக்காக செய்திருக்காளே அவளை கூட்டிட்டு போய் தன்னோட ஆபீஸ், வீடு, வாகனம் எல்லாத்தையும் காட்டணம்ணு தோணுதா பாரு. என் கூட பேச மாட்டாராம். எதுக்கு ஒதுங்கணும். இவரை யார் ஒதுங்க சொன்னா?”
“கம்பீரமா ஒத்தையா சுத்தட்டும். யார் வேணாம்ணு சொன்னது. என்ன செய்யுறதா இருந்தாலும் எனட்ட பேச கூடாதுணு இருக்கா. அவன் வீட்டை சுற்றி காட்ட கூடாதுணு இருக்கா. ஒரு நாள் பழகுன பழக்கம் நியாபகம் இருக்காதா? தப்பா தான் பேசினேன். அதுக்கு?… இவனை உயர வச்சதே அந்த தப்பான பேச்சு தானே. அப்புறம் என்ன?”
“ஒரு வேளை நாம ஆசையா வச்ச வீட்டை இவளுட்ட எதுக்கு காட்டணம்னு நினைக்கிறானோ? இருக்கும். இருக்கும். திமிர் பிடிச்சவன். நினைக்கவும் செய்வான். நான் வீடு வச்சிட்டாணு தெரிஞ்சதும் எப்படியும் கூட்டிட்டு போய் காட்டுவானு எவ்வளவு ஆசைப்பட்டேன். இன்று வந்து கூட்டிட்டு போவான். நாளைக்கு வந்திடுவாணு காவல் இருந்தா… துரை பேச கூட மாட்டாராமே. பேசாமலே போ. எனக்கு என்ன வந்துச்சு. . நான் கிளம்பி மும்பை போறேன். நீ இப்படியே ஹெத்தை தூக்கிட்டு அலை.”
பல்லவி புலம்பி கொண்டே எழுந்த நேரம், அவள் செல் குரல் கொடுத்தது.
தன் புலம்பலை நிறுத்தி விட்டு பல்லவி செல்லை எடுக்க, இதுவரை கையில் வைத்திருந்த செல்லை எடுத்து காதுக்கு கொடுத்த ரவி,
“கேட்டியாடா? அந்த புள்ளையோட மனசை. உன்னோட செயல் எவ்வளவு காயப்படுத்தி இருக்குனு பாரு . நான் சொன்னா நம்ப மாட்டால. கேட்டியா? அதோட ஆசையை கேட்டியா? இதுக்க மேலயும் வீம்பை பிடிச்சிட்டு சுத்த தான் போறியா? “
எதிர்முனை நிசப்தத்தில் இருக்க…
“அது இன்னும் பத்து நாளோ பதினைந்து நாளோ நிற்க போகுது. அதை ஏண்டா கஷ்டப்படுத்தி அனுப்பி வைக்கணம்ணு நினைக்கிறா? அதுல வேற இந்த ஒரு முறையும் தான் நம்ம பல்லவியா வரும். அப்புறம் அப்பா எப்படியும் அந்த விக்கியோட சேர்த்து வச்சிடுவாரு. இந்த புள்ளையும் ஒரேயடியா மும்பையில செட்டில் ஆகிடும். இதுக்கு எதுக்கு வீம்பை தூக்கிட்டு அலையுறா?.”
” ……………”
“ஒரு இரண்டு வார்த்தை அந்த புள்ளைட்ட பேசுடா. அது சமாதானமா மும்பை திரும்பட்டும்.”
என்றதும் சற்று குரல் உயர்த்தி,
“போனை வைடா. எனக்கு எல்லாம் தெரியும். பணத்தை அம்மாட்ட கொடுத்துட்டு வரேன்னு தானே இங்க இருந்து கிளம்புனா. கொடுத்தாச்சுல. கிளம்புறத விட்டுட்டு இது என்னடா வேண்டாத வேலை பாக்குறா?…”
” உனக்கு போய் நல்லதுணு நினைச்சி செய்தேன் பாரு. எனக்கு தேவை தான். பல்லவி சொல்லுறது சரிதான். உனக்கு திமிர் பிடிச்சி ஆட்ட தான் செய்யுது.”
“ஆமாடா. ஆட்ட தான் செய்யுது. இப்ப என்ன பண்ணணும் என்கிறா? இப்போ கிளம்பி வர போறியா?… இல்ல அங்கேயே இருக்க போறியா?”
சங்கிலியின் வார்த்தை சூடாக வர,
“வந்து தொலைகிறேன். போணை வை.”
கடுப்பானவன் போனை ஆப் செய்து கட்டிலில் எரிய,
அதே நேரம் வெளியே போனில் பேசி முடித்த பல்லவியோ சந்தோஷத்தில் தன்னை அறியாமல் குதித்து கொண்டு ஒடி பாண்டியின் முன் வந்து நின்றாள். பக்கத்தில் நின்ற ஐஸ்வரியாவை சந்தோஷம் மிகுதியால் பிடித்து சுற்ற, புரியாமல் எல்லாரும் அவளையே பார்த்து நின்றனர்.
பல்லவி அவர்களிடம் எதுவோ சொல்ல குடும்பத்தினர் ஒவ்வொருவரின் முகமும் பிரகாசமாய் எரிய கண்டதும் சங்கிலி மேல் உள்ள கோபம் நீங்கியவனாய் பல்லவியை ஆழமாக பார்த்தான். இதுவரை பல்லவியை இவ்வளவு சந்தோஷத்தில் பார்த்ததே இல்லை. ஆதலால் யோசனையோடும் குழப்பத்தோடும் பல்லவி அருகில் வந்தான் ரவி. அவனை கண்ட ஐஸ்சு ஒடி அவன் அருகில் வந்து,
“அண்ணா பல்லவி அக்கா இதுவரை செய்து வந்த ஆராய்ச்சி சக்சஸ் ஆகிடுச்சி. மும்பையில இருந்து இப்பதான் போண் வந்துச்சி.”
என சந்தோஷம் மிகுதியில் அவனை கட்டிக் கொள்ள…
தங்கை சொல்வது பெரிதாக புரியா விட்டாலும், அந்த புள்ளை எதையோ சாதித்து விட்டது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. அதனால் அவன் முகமும் விரிய, அவளின் அருகில் வந்து கை குலுக்கி வாழ்த்து சொன்னான்.
அவன் வாழ்த்தை முகம் மலர ஏற்றவள்.
“தேங்க்ஸ் ரவி. ரொம்ப தேங்க்ஸ். இந்த ஆராய்ச்சி ஆறு வருஷமா போயிட்டிருக்கு. மூணு முறை பெயிலியரை சந்திச்சிருக்கேன். அதான் ஆய்வகத்தை விட்டே வெளிவராம பல நாள் முயற்சி செய்து இந்த மருந்தை கண்டுபிடிச்சிருக்கேன். என் முயற்சி வீண் போகல “….
என எதையோ பெரிதாக சாதித்து விட்டது போல குதூகலப்பட , அவளின் கண்டுபிடிப்பின் மகத்துவம் தெரியாவிட்டாலும் எதுவோ பல்லவி பெரிதாக செய்திருக்கிறாள் என்று அந்த குடும்பமே சந்தோசப்பட்டது.
அவள் பேச பேச புரியாமல் அவளையே பார்த்து நின்றது. பல்லவி முகம் எல்லாம் சாதித்து விட்ட சந்தோசத்தில்…
“இனி இந்தியாவுல புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யாருமே சாக மாட்டாங்க. இது வரை வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் கிடைச்சி வந்த சிகிட்சை இனி நம்மை போல சாதாரண குடும்பத்துல உள்ளவங்களுக்கும் கிடைக்க போகுது. அது மட்டுமல்ல குறைஞ்ச செலவுலயே நாம அவங்களை காப்பாத்திடலாம்.”
“என்ன?…என்ன சொல்லுறா பல்லவி!. அப்படினா நீ.!.. நீ!… அதுக்கான மருந்தையா கண்டுபிடிச்சிருக்கா.”
நம்ப முடியா அதிர்வில் கேட்டவனை நிமிர்ந்து பார்த்த பல்லவி.
“ஆமா ரவி. புற்றுநோய் இப்போ இந்தியாவுல வேகமா பரவிட்டு வருது. வருஷத்துல பல பேர் இந்த நோயால இறந்து போறாங்க. அதுக்கு காரணம் நம்ம நாட்டுல நடைமுறையில இருக்கிற மருத்துவத்தை தங்களோட வசதியால வாங்கிக்க முடியாம தான்.”
.”……………”
“இப்போ வரை வெள்ளி நேனோ துகள்களை புற்று நோய் பாதித்த செல்லுல செலுத்தி அதை அழிக்கிறது தான் நடைமுறை. நான் டாக்டர் படிக்கும் போதே நம்ம ஊர்ல்ல உள்ள செங்காந்தர்வ பூவுல இந்த துகளை பிரித்தெடுக்கலாம் என்கிறதை கண்டுபிடிச்சேன், அதை பலவிதமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தினேன்.”
“………………”
“ஆனா நான் நினைத்தது போல என்னால அவ்வளவு ஈஸியா அந்த பூவுல இருந்து அந்த துகளை பிரித்தெடுத்து ஆராய்ச்சி பண்ண முடியல. பல போராட்டங்களுக்கு அப்புறமா நாலு வருஷம் கழிச்சி தான் என்னால அந்த பூவுல இருந்து நேனோ துகள்களை தனியா பிரிச்செடுக்க முடிஞ்சிது. அதை ரொம்ப சந்தோஷத்தோடு மும்பையில உள்ள ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வச்சிட்டு தான் ஒன் இயர் கேம்புக்கு இங்க நாகர்கோவில் வந்தேன்.”
“……………..”
“ஆனா ஆறே மாசத்துல என் கண்டுபிடிப்பு சரியில்லனு சொல்லிட்டு தான் தகவல் வந்துச்சு. மனசு ரொம்ப சோர்ந்து போச்சு. அப்போ விக்கி தான் நம்பிக்கை கொடுத்தான். இங்கேயே சின்னதா ஒரு ஆராய்ச்சி தொடங்க வழி ஏற்படுத்தி தந்தான். அப்புறமா அது சம்மந்தமா நிறைய பேரை சந்திக்க வச்சான். தேடி தேடி போய் அந்த பூவை கொண்டு வந்து சேர்த்தாள். கடைசியா ஒரு வருட டிரைனிங் முடிஞ்சி நாங்க மும்பை கிளம்புறப்ப புது விதமான பார்மலாவோட தான் கிளம்பி போனேன்.”
.”…………..”
“அப்படியும் வெள்ளி நேனோ துகள்களை அந்த பூவுல இருந்து பிரித்தெடுத்து புற்றுநோய் பாதித்த விலங்குகளுக்கு செலுத்தி சரிபடுத்தவே இரண்டு வருஷமாச்சு. கடைசியா ஒரு வழியா திருப்தியானதும் என் கண்டுபிடிப்பை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வச்சிட்டு ரெசல்ட்டுக்காக காத்திருக்கிற இடைவெளியில உங்க எல்லாரையும் பாத்துட்டு போயிடலாம் என கேட்டுகிட்டதால தான் விக்கி என்னை கூட்டிட்டு இங்க வந்தான்.”
” …………”
“இரண்டு வருஷமா வெளிவுலகமே பார்க்காம இருட்டறையே கதினு கிடந்து இந்த உலகத்துக்கு நான் கொடுத்த ஆபூர்வ கண்டுபிடிப்பு மாமா.”
பல்லவி மிகவும் சந்தோஷமா ரொம்ப ரொம்ப பெருமையாய் சொல்ல…
மொத்த குடும்பமும் அவளை ஆச்சரியமாக பார்த்தது. தேம்பி கொண்டு என் விரல் பிடித்து வந்த அந்த சின்ன பெண்ணா நாட்டிற்காக இப்படி ஒரு ஆபூர்வ கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பது.
விழிவிரிய பார்த்து நின்ற பாண்டியிடம்…
“நீங்க சொன்னது போல ஒரு உயர்ந்த இடத்துல போய் அமர்ந்துட்டேன் மாமா. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே…”
என்றதும்,அவளை நெஞ்சோடு அணைத்து கொண்ட பாண்டி,
“ரொம்ப… ரொம்ப… பெருமையா இருக்கும்மா. குடிசை வீட்டுல வாழ்ந்தாலும் பல பேர் புகழ கூடிய ஒரு இடத்துக்கு போயிடலாம்னு நீ நிரூபிச்சிட்டா . அதை விட, வாழ்றது ஒரு வாழ்வா இருந்தாலும் அதுல நாலு பேருக்கு நல்லது செய்து வாழணும்னு பெரியவங்க சொல்லுவாங்க. நீ நாலு பேர்க்கு இல்ல. இந்த… இந்த நாட்டிற்க்கே நல்லது செய்திருக்கா. உன்னால எங்களுக்கு மட்டும் பெருமை இல்ல. இந்த ஊருக்கே பெருமை.”
பாண்டி மட்டுமல்ல. அன்று அந்த குடும்பமே சந்தோஷப்பட்டது. போதா குறைக்கு விக்கி எது எதுவெல்லாமோ வாங்கி வந்து வீட்டில் பெரிய பார்ட்டியே வைத்து விட்டாள். ரவியும் கிளம்பி உடனே டவுனுக்கு செல்லவில்லை. பல்லவியின் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவன் அவர்களோடவே தங்கிவிட்டான்.
அதன் பிறகு பல்லவியின் போன் ஓய்வில்லாமல் அடித்து கொண்டே இருந்தது. விக்கியின் போணும் தான். பேசி பேசியே இருவரும் சளைத்து விட்டார்கள்.
அப்போதுதான் ரவிக்கு ஒரு உண்மை புரிந்தது. சங்கிலி எவ்வளவுக்கு எவ்வளவு உயர பறந்தாலும் பல்லவியின் பக்கத்தில் கூட நெருங்க முடியாது என்று. நம்ம பக்கத்துல குழந்தைதனமா பார்த்த இந்த பெண்ணின் அருமை நமக்கு தெரியல. ஆனா சங்கிலிக்கு தெரிஞ்சிருக்கு. அதான் அவளை விட்டு மொத்தமா விலகுறது தான் சரினு சொல்லியிருக்கான். என்ன இருந்தாலும் ஆசைப்பட்ட மனசு சும்மா இருக்காது. அலைபாய தொடங்கும்ணு அவனுக்கு தெரிஞ்சிருக்கு.
“இப்ப இதை மட்டும் போய் அவனுட்ட சொன்னோம். குதியா குதிப்பான். என் குடும்பம்படுற சந்தோஷத்தை விட ஆயிரம் மடங்கு சந்தோஷப்படுவான். ஆனா காட்டிக்க மாட்டான். ஆனாலும் நாம சொல்லியே ஆகணும்.”
என எண்ணியவன் அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பினான்.
மறுநாள் பல்லவிக்கு அரசு ஆரம்ப பள்ளியில் வைத்து பள்ளி ஆசிரியர்களால் பாராட்டு விழா ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அந்த பங்ஷனில் கலந்து கொண்டு நாகர்கோவில் அரசு ஹாஸ்பிட்டலில் அவள் வேலை செய்த போது பணியில் இருந்த டாக்டர்ஸ் எல்லாம் சேர்த்து பார்ட்டி கொடுக்க, அங்கும் விக்கியோடு போய் கலந்து கொண்டாள். இன்னும் ஒரு வாரத்தில் இந்திய அளவில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு மும்பைக்கு அவள் சென்றே ஆக வேண்டும்.
இந்த சூழலில் பாண்டி எப்படியும் ஒரு நாள் கல்பனாவின் ஊருக்கு அவளை அழைத்து சென்று விட வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் போது சரியாக கல்பனாவுக்கு அக்கா முறை வரும் ஒரு பெண்மணி தன் மகளின் திருமணம் என பத்திரிகை கொண்டு வர,
அந்த திருமண நாளும் இன்னும் இரண்டு நாளில் இருக்க, வேண்டும் என்றே பல்லவி விக்கி தன் குடும்பம் என அனைவரோடும் அந்த பங்ஷனுக்கு சென்றார் பாண்டி.
பல்லவியின் அழகும், உயர்ந்த நிலையும் கண்ட உறவுகள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
அன்று அழுது கொண்டு தனிமரமா நின்ற பிள்ளையா என ஆள் ஆளுக்கு முனங்க தான் செய்தனர். அதிலும் அவளின் வருகையை அறிந்த அவள் ஏழாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் இருந்து அழைப்பும் வந்தது. விசயம் மொத்தமும் டி.வியிலும் பேப்பரிலும் நிறைத்து நிற்க விசயம் பள்ளிக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரிந்து தான் இருந்தது.
அதிலும் திடீர் என அவள் வந்து இருந்ததும் எல்லா உறவுகளும் தெரிந்தவர்களும் கலகலக்க தொடங்கி விட்டனர். இதுவரை அவள் பார்த்திராத சொந்தம் எல்லாம் கூட உறவு முறை பாராட்ட தொடங்கி விட , பல்லவிக்கு அது புதுவிதமான அனுபவமாக இருந்தது.
பங்ஷன் எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் அவர் அவர் வீடுகளுக்கு அழைத்து சென்று உபசரிக்க மறுக்காமல் சென்றாள். விக்கிக்கும் ஒரே நாளில் நல்ல அறிமுகம் கிடைத்தது. பல்லவியோடு பார்த்தவுடனே பாண்டி சொல்லாமலே அனைவருக்கும் புரிந்து போக மாப்பிள்ளை ஸ்தானத்தை கொடுத்து அவனையும் உபசரித்தனர்.
மாலையில் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பல்லவி விக்கியை புகழ்ந்து தள்ளி விட்டாள்.
வாழ்வில் தான் இந்த இடத்துக்கு வர நிறைய பேர் எனக்கு உதவியிருக்காங்க. ஆனா இப்படி ஒரு உயர்ந்த கண்டுபிடிப்பை கண்டுபிடிச்சி நாட்டுக்கு அர்ப்பணிக்க எனக்கு உதவியதில் மிக முக்கியமான பங்கு டாக்டர். விக்னேஷ்வரனுக்கு உண்டு. எங்க பிரண்ட்ஸ் எல்லாருமே அவரை விக்கி என்று தான் அழைப்போம். என்னுடைய இந்த வெற்றிக்கு காரணமே இவர் தான்.
என்னிடம் இருந்த திறமையை எனக்கே காட்டியவர் என்று சொல்லலாம். தோற்கின்ற போதெல்லாம் நான் சோர்ந்து போகாமல் எனக்கு நம்பிக்கையூட்டி என்னை மறுபடியும் ஓட வைத்தது அவரோட தனிச்சிறப்பு.
என்றது மட்டுமல்லாது விக்கியை மேடைக்கு அழைத்து எல்லாருக்கும் அறிமுகம் செய்தும் வைத்தாள். அன்றைய நாள் அனைவரின் பாராட்டோடும் அன்போடும் கழிய, வீடு வந்து சேர்ந்த ஐஸ்சு முதன்முறையாக ஊரில் நடந்த எல்லாவற்றையும் ரவிக்கு தான் அழைத்து சொன்னாள். இங்கே கோபத்தின் உச்சத்தில் இருந்த ரவி ஐஸ்வரியாவின் பேச்சை கேட்டதும் சூடேறியவனாய் சங்கிலியின் அருகில் வந்தான்.
“என்னடா நினைச்சிட்டிருக்கா மனசுல?…”
என சாடிக் கொண்டு வர, அவனை நிதானமாக எதிர் கொண்ட சங்கிலி,
“என்ன நினைச்சிட்டிருக்கேன்…”
பேப்பரை புரட்டி கொண்டிருந்தவன் பார்வையை திருப்பாமலே கேட்க…
“ஊரே… உறவே… அவளை பாராட்டி தள்ளுது. ஆனா நீ இதுவரை ஒத்த வார்த்தை பேசல.”
“நான் இப்போ என்ன பேசணம்னு எதிர்பார்க்கிறா?”
“ஒரு வாழ்த்து சொன்னா குறைஞ்சா போவா… அப்ப எல்லாம் அந்த புள்ளை எது பண்ணுனாலும் ஊருக்கே இனிப்பு கொடுத்து கொண்டாடி தீர்ப்பா. இப்போ உலகம் புகழ கூடிய ஒரு நல்ல கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை பண்ணிட்டு வந்து நிக்குது. நீ என்ன கமுக்கமா ஒதுங்குறா… என்னாலயே சந்தோஷத்தை அடக்க முடியல. நீ என்னடா கல்லு போல இருக்கா.”
“அதான் சொல்லிட்டியே கல்லுணு . கல்லு எப்படி இருக்கும். அப்படி தானே இருக்கேன்.”
முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் சொன்ன சங்கிலியை பார்த்து முறைத்தவன் வெடிக்கும் குரலில்.
“சரிதாண்டா. அந்த புள்ள சொல்லுற அம்புட்டும் சரி தான். உன்னை பேர், புகழ், பணம் எல்லாம் புடிச்சி தான் ஆட்டுது. நீ மாறிட்டாடா. நீ எங்களோட சங்கிலியே இல்ல.”
“முடிச்சிட்டியா? சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி முடிச்சிட்டியா?”
இவன் சொல்வது எதுவுமே பாதிக்காதவன் போல சங்கிலி எழும்ப, கடுப்பானவன்.
“ஒரு நாள் நானும் போயிடுவேன். தனிமரமா நிப்பா பாரு… அப்போ தெரியும். உறவோட அருமை. அது சரி அம்புட்டு நேசிச்ச புள்ளையே கொஞ்சம் கசகசணு பணத்தை கண்டதும் குப்பை போல போட்டுட்டா. நாங்க எல்லாம் எம்மாத்திரம்.”
என்றதும் அனல் கக்கும் பார்வையை அவன் மேல் சங்கிலி செலுத்த…
“இந்த முறைப்பை எல்லாம் வேற எவன்ட்டயும் வச்சிக்க. எனட்ட வேணாம்.”
என்றவன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்து உள் அறையில் வந்து கோபத்தோடு சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்து விட…
பத்து நிமிடம் தனிமையில் இருந்த சங்கிலி நெற்றியை நீவிக் கொண்டே எழுந்தான். மூச்சை இழுத்து விட்டவாறு மெல்ல ரவியை நோக்கி நகர்ந்தான். அவன் நகர்வை ஒரக்கண்ணால் பார்த்தாலும் காட்டி கொள்ளாதவன் தகதகத்த முகத்தை காட்டியவாறு அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்று அமர்ந்தான் சங்கிலி.
“எழும்புடா…”
என்றான்.
“எங்க?..”
அவன் முகம் பார்க்காமல் எங்கோ வெறித்தவாறு ரவி கேட்க.
“பத்திரிகை அடிக்க தான்.”
என்றான் முகத்தில் சிறிது கூட சிரிப்பை படரவிடாமல்.
“பத்திரிகையா ?”
என்ற ரவியின் முகம் நொடியில் பல பல உணர்வை காட்ட…
“ம்… பத்திரிகை தான். அந்த புள்ள கிளம்பி போகிறதுக்கு முன்னால நீ சொன்னது போல ஒரு நல்ல நாளுல பால் காய்ச்சிடலாம்.”
என்றதும் தான் தாமதம். துள்ளி எழுந்து விட்டான் ரவி.
“என்னடா . நீ… நீ… உண்மை தானே சொல்லுறா.?”
“இதை என் வாயில இருந்து கேட்க வேண்டி தானே. இவ்வளவு ரகளை பண்ணுறா?. நீ சொன்னபடியே செய்திடலாம். அந்த புள்ளையும் ஆசைபட்ட படி கிளம்புறதுக்கு முன்னால ஒரு முறை என் வீட்டுக்கு வந்துட்டும் போகட்டும். நீயும் சதா தொண தொணக்காம இருப்பா. “
“சங்கிலினா சங்கிலி தான். என்ன இருந்தாலும் என் சங்கிலி எல்லாம் கல்லு இல்லப்பா. கொஞ்சம் இரக்கமும் இருக்குது.”
சொன்னவன் அவன் கன்னத்தை கிள்ளிக் கொண்டு ஒட்டம் பிடிக்க, முகம் எல்லாம் மலர்ந்து திரும்பி பார்த்து கொண்டே ஒடும் அவனை சிறு புன்னகையோடு பார்த்து நின்றான் சங்கிலி.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel

