வணக்கம் வாசகர்களே!
மனைவியை நெருக துடிக்கும் கணவன். கணவனாக நினைக்க முடியாமல் தவிக்கும் பெண்ணவள். அடுத்து என்ன நடக்கும்,
இரவு தந்த ஏமாற்றம், இலக்கியாவின் ஒதுங்கல், ஆசையாக வந்து அவஸ்தையாக இரவின் பல நொடிகளை கழித்த ராகவ்,,,
சூரியன் எழுந்த பிறகும் கட்டிலை விட்டு எழும்பவில்லை. இரவு பயந்து நடுங்கி கட்டிலின் காலில் சுருண்டிருந்த அதே நிலையில் தான் இன்றும் இருந்தாள் இலக்கியா.
வெளியில் யாரோ கதவை தட்ட விழித்துக் கொண்ட இலக்கியா மெதுவாக சென்று கதவைத் திறந்தாள். வெளியே காப்பியோடு அவள் அத்தை நின்று கொண்டிருந்தாள்.
“என்னம்மா நல்லா தூங்குனியா?அவன் எழும்பிட்டானா?”
என உள்ளே எட்டிப் பார்த்தவள்,
“எழும்பலியா… நீ அவனை எழுப்பி குளிக்க வை. நான் காலை டிபனை ரெடி பண்ணிடுறேன். இரண்டு பேரும் பிரஸாகி கீழே வாருங்க.”
என சொல்லிவிட்டு கீழே அத்தை செல்ல வேதனையோடு உள்ளே வந்தாள்.
காப்பியை மேஜை மீது வைத்தவள் அடுத்து என்ன செய்ய என தெரியாமல் குழம்பி நின்றாள். நல்லவேளையாக ராகவ்க்கு விழிப்பு வர, அவன் அவசரமாக எழுந்து கொண்டான். மிரண்ட விழியோடு நின்ற அவளை ஒரு முறை பார்த்தவன் எதுவும் பேசாமல் பாத்ரூமுக்குள் சென்றான். பத்து நிமிடம் பிரஸாகி வெளிவந்ததும் முன்னால் நின்ற அவளிடம் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேற,
இதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை மெதுவாக வெளியே விட்டாள் இலக்கியா. அவசரமாக காலை வேலைகளை முடித்துவிட்டு அவளும் குளித்து உடை மாற்றி கீழே வந்தாள். அவள் கீழே வரும்போது ராகவ் அங்கே இல்லை. கண்களை நாலாபுறமும் சுழல விட்டாள். அவன் அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இரவு எத்தனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் நெருங்கி வந்தார். ஆனால் நான் ஏன் அப்படி செய்தேன். எனக்கு என்னவாகி விட்டது. தான் சரியாக இல்லை என்பது தெரிகிறது. ஆனால் நான் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறேன் என்று தான் தெரியவில்லை.
என இலக்கிய குழம்பிக் கொண்டிருக்கும் அதே நேரம் சிக்ரெட்டை பற்ற வைத்து ஊதித் தள்ளி கொண்டிருந்தான் ராகவ். மனது ஆறவில்லை. காலையில் அவள் கழுத்தில் தாலி கட்டிய நொடியிலிருந்து எவ்வளவு ஆசையாக காத்திருந்த நொடி… எவ்வளவு எதிர்பார்ப்போடு உள்ளே சென்றேன். எதுவும் நடக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. முகம் கொடுத்துக் கூட பேசவில்லையே. பக்கத்தில் சென்றால் அன்னியன் போல பிடித்துக் தள்ளுகிறாள்.
ஒருவேளை நம்மை திருமணம் செய்ய அவளுக்கு விருப்பம் இல்லையோ. வீட்டில் கம்பெல் செய்து என்னை அவள் தலையில் கட்டிவிட்டார்களோ…அதனால்தான் இப்படி இருந்ததோ அவளோட ரியாக்ஷன்.
குழம்பியவன் கையில் நீர்த்துபோன சிக்ரெட் துண்டை கீழே போட்டுவிட்டு தன் காலால் நசுக்கிக் கொண்டான். திரும்பத் திரும்ப இரவு நிகழ்ச்சி நெஞ்சில் வர மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து மிக வேகமாக புகையை உள் இழுத்தவன் மெதுவாக வெளிவிட்ட நேரம் அவனருகில் நெருங்கியிருந்தாள் இலக்கியா.
அவ்விடத்தில் இலக்கியாவை கண்டதும் இதுவரை இருந்த கோபம் பனிபோல பொழிய, குளித்து முடித்து ஈரத்தலையோடு பனி ரோஜாவாக காட்சி தந்த மனைவியை பார்த்து ரசித்தான். அவனை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் இலக்கியா அவன் முகத்தைப் பார்க்காமல் தலை குனிந்திருந்தாள்.
அவளின் மௌனமும், அவள் நின்ற தோரணையும், ராகவை ஏதேதோ செய்ய இரவு நிகழ்ச்சி விடை பெற்றுக் கொள்ள அன்றைய காலைப் பொழுதை அழகாக்க அவளை நெருங்கி வந்தான் .
அவன் முன்னால் இரண்டு அடி வைக்க அவள் பின்னால் மூன்று அடி வைக்க தொடங்க… எரிச்சல் உற்றவன்,
“இப்படி பின்னோக்கி போக தான் என்னைத் தேடி வந்தியா“என்று கேட்டான்.
அந்த வார்த்தையில் தெரிந்த கோபம் அவன் மனது எவ்வளவு தூரம் ஏமாற்றம் அடைந்திருப்பது என காட்ட,
இலக்கியாவின் விழிகள் கலங்க துடித்தன.
அவள் கண்களில் நீரை கண்டதும் மொத்த கோபமும் வடிய,
“இப்ப என்ன நடந்துச்சுணு கலங்குறா. நான் இப்போ உன் பக்கத்துல வரக்கூடாது அப்படித்தானே. வரல.இப்ப சொல்லு எதுக்காக வந்தா…”
“அத்த… அத்த…சாப்பிட கூப்பிடாங்க.”
விக்கி விக்கி அவள் சொல்ல,கோபத்தை அடக்கிக் கொண்டு,
“நீ போ… நான் வரேன்.”
என்றதும் அவள் திரும்பி பார்க்காமலே விறுவிறுவென அவ்விடத்தை விட்டு நடந்தாள்.
“ஒருவேளை தன்னைக் கண்டு பயப்படுகிறாளோ? என்னுடைய அணுகுமுறை தவறோ? அவள் பயப்படும் அளவு என் நடத்தை இருக்கிறதோ? கொஞ்சம் நம்மை மாற்றி பார்ப்போம்.” யோசித்தவன் தன் மனதுள் காதலை தேக்கி வைத்து ரொம்ப ரொமான்ஸோடு உள்ளே சென்றான்.
“என்னடா… உன் கண்ணு யாரைத் தேடுதோ அவா சமையல் கட்டுல தான் இருக்கா. நீ எந்த வேலையும் செய்ய வேணாம் ராகவோட இருணு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கல. அதான் நான் காய்கறியை வெட்டித் தாரேணு வெளியில எடுத்துட்டு வந்திட்டேன்.”
தாய் தன்னிலை விளக்கம் கொடுக்க.
“வீடு நிறைய வேலைக்காரங்க இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் சமைக்கிறதுணா தெண்டமா அவங்களுக்கு எதுக்கு சம்பளம் கொடுக்கணும். பேசாம அவங்களை வேலையை விட்டு நிறுத்திடுங்க.”
“ஆமாடா வேலைக்காரங்க கையால சாப்பிட தானே இப்படி ஒரு பொண்ணை பாத்து கட்டி வைக்கிறது. ஒவ்வொரு புருஷனும் பொண்டாட்டி கையால சாப்பிட தான் விரும்புவான். நீ என்னடா இப்படி இருக்கிறா?
உன் அப்பா என் கையால சமைச்சதை மட்டும் தான் சாப்பிடுவாரு. அதான் எந்த வேலைக்காரங்க இருந்தாலும் சப்போட்டுக்கு வச்சிட்டு சமையலை என் கையால வைச்சிடுறது. எங்களுக்காக வெளியில போய் ஓடி ஓடி களைச்சி உள்ளால வறீங்க. உங்களுக்காக நாங்க இதை பண்ணுறதா நினைச்சிக்குவோம்.”
அப்படி தான் என் மருமகளும் அவள் புருஷனுக்கு ஆசையா சமைச்சிப் போட விரும்புறா. இதை புரிஞ்சிக்காம நீ என்னடா புருஷன்.”
தாய் சொல்லச் சொல்ல,
“ஓ!. அப்படிணா நேற்று என்னை கோபப்படுத்திட்டு இன்று சமாதானப்படுத்த சமைச்சி அசத்தலாம்ணு நினைக்கிறாளோ?”
என மனது நினைக்க, பூரித்துப்போன உணர்வோடு கிச்சனை நோக்கி மெதுவாக நகர்ந்தான்.
காட்டன் சாரியில் குளித்து முடிந்த ஈரத்தலையோடு கழுத்தில் ஈரம் சொட்டச்சொட்ட நின்றுகொண்டிருந்த இலக்கியாவின் பின் முதுகு பக்கம் மெதுவாக வந்து ஆசையாக அணைத்தான் ராகவ்.
காலை டிபனுக்கு தேவையான சட்னியை அரைத்த இலக்கியா அந்த நொடி எதிர்பாரா அணைப்பில் திடுக்கிட்டு சட்டென அவனை உதறி தள்ளி விட்டாள். ஒரு நொடி ஒரே நொடியில் நடந்துவிட்ட நிகழ்வு இருவருக்குள்ளும் பலப்பல உணர்வை உண்டு பண்ணியது. ராகவ் முகம் கோபத்தில் சிவந்து கண்கள் கொடூரமாய் மாற துடித்த நொடி. இலக்கியா பயந்து நடுங்கி சுவரோடு ஒடுங்கி போய், அந்த மான் விழியை படபடவென அடித்துக் கொண்டு அவனை பயத்தோடு பார்த்ததை கண்டதும் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு,
“நான் தான் பயந்திட்டியா? சாரி… சாரி. நான் சஸ்பிரைஸா இருக்கட்டும்ணு குரல் கொடுக்காம வந்தேன்.”
என ராகவ் விளக்கம் கொடுக்க இலக்கியா கூனி குறுகிப் போனாள். ஏன் நான் இப்படி நடந்து கொள்கிறேன் என்று கூட அவளுக்கு தெரியாதது தான் கொடுமை.
ஆசையோடு வந்து அணைத்த கணவரின் பிடியிலிருந்து திமிரி வேறு பக்கம் வந்து ஏன் நான் நடுங்கிக்கொண்டு நிற்கிறேன். என் மனது அவரை ஏற்றுக் கொள்ளவில்லையா? திருமணமான புதிதில் இது எல்லாம் எல்லாருக்கும் நடப்பது தானே? ஆனால் இது தவறு என்று என் உள் மனது மட்டும் ஏன் எச்சரிக்கிறது.
“என்னடா… கிச்சன்ல்ல உனக்கென்ன வேலை. மேல போ… நான் அவளுட்ட காப்பி கொடுத்து அனுப்புறேன்.”
என்றவாறு வேதவள்ளி உள்ளே வர, இலக்கியாவை ஊடுருவிப் பார்த்து நின்ற ராகவ் மெதுவாக அவள் புறம் இருந்து திரும்பி,
“வேணாம் எனக்கு இப்ப எதுவும் வேணாம். கொஞ்சம் வெளியில வேலை இருக்கு. போயிட்டு வந்து சாப்பிடுறேன்.”
என்றவாறு இலக்கியாவை திரும்பி திரும்பி பார்த்தவாறு வெளியேறினான் ராகவ்.
அதன்பின் அவன் வந்த பிறகும் அவன் பார்வையிலிருந்து விலக ஆரம்பித்தாள். அருகில் இருந்தாலும் அவன் பார்வையை சந்திப்பதை தவிர்த்து கொண்டாள். பல நேரங்கள் அத்தையின் அருகாமையிலோ அல்லது உள்ளே கட்டிலில் படுத்திருக்கும் பெரிய அத்தை பக்கத்திலோ சென்று அமர்ந்து கொள்வாள்.
ஒருவேளை அறையில் இருந்தால் கூட தனிமையில் இல்லாமல் மலரை பக்கத்தில் உட்கார வைத்து எதை எதையோ பேசிக்கொண்டிருக்க, அவளைத் தேடி உள்ளே வந்த ஒவ்வொரு நொடியும் எதுவும் பேசாமலே ராகவ் வெளியே செல்ல வேண்டியதானது.
அழகான மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆசையாக பேசக்கூட முடியாது போக, ராகவ்க்கு எரிச்சல் வந்தது. ஒவ்வொரு நொடியும் ஆசையாக வந்து ஏமாற்றமாக திரும்பத் திரும்ப அவன் ரொம்பவே அப்சட்டாகிப் போனான். கோபமாக வெளியேறினாலும் சிறிது நேரத்தில் புது இடம் புது உறவு அவள் பழக சிறிது காலம் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
காலைப் பொழுதுகளில் எதை எதையோ செய்து சமாளித்த இலக்கியா இரவு நெருங்க நெருங்க வேதனையிலும் வலியிலும் பொசுங்க ஆரம்பித்தாள். காரணம் அவள் மனது இன்னும் ராகவ்வை புருஷனாக ஏற்றுக்கொள்ள மறுத்தது. தாலி கட்டி விட்டால் ஒரு பெண்ணின் மனதை ஜெயிக்க முடியுமா?அதற்கு பழக வேண்டாமா?அப்படி பழக கூட அவள் அவனுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறாளே… எல்லாம் தெரிந்தும் குற்ற உணர்வில் இலக்கியா இருக்க,
“இப்ப யாரை கூட்டி பக்கத்துல வச்சி என்னை போக்கு காட்ட போறா பார்ப்போம்.”
என நக்கல் சிரிப்போடு ராகவ் உள்ளே வந்து கதவை தாளிட்டான். வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு கட்டிலுக்கு வந்தவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த இலக்கியாவை பார்த்ததும் மொத்த சந்தோஷமும் வடிய கட்டிலின் ஒரு பகுதியில் பொத்தென விழுந்தான்.
அழகான பஞ்சு பொம்மை ஒன்று கட்டிலில் படுத்திருப்பது போல அவ்வளவு நளினமாக படுத்திருந்தாள் இலக்கியா. தூக்கத்தில் கூட அவள் முகத்தில் தெரிந்த புன்சிரிப்பு, அவளை தூக்கி கட்டிக் கொள்ள துடித்தது. காலை ஒரு பக்கம் லேசாக மடக்கிக்கொண்டு ஒரு பக்கம் அவள் லேசாக சரிந்து அதே வேளை தலையை அவள் நிமிர்த்தி படுத்திருந்த அந்த அழகில் மெய்மறந்து அவளைப் பார்த்து நின்றான். பார்க்கும்போது என் மனது அவ்வளவு குதூகலிக்குதே, உனக்கு என்னை பாத்தா அப்படி எதுவும் தோணலியா இலக்கியா. எதுக்காக என்ன பார்த்து இப்படி பயப்படுறா?நான் என்ன முரடனாவா இருக்கேன். எவ்வளவு சாப்ட்டா இருக்கேன். நீ என்ன பார்த்து பயப்படுவது தான் ஆச்சரியம்.”
எண்ணியவன் அவள் அருகில் நெருங்கி வந்தான். ஆசையாக மனைவியின் முகத்தைப் பார்த்தான். தூக்கத்திலும் அவன் மனதை கொள்ளை கொண்டு இழுத்தது அவள் அழகு. மெதுவாக குனிந்தவன் அவள் முகத்தில் வந்து விழுந்த ஒற்றை முடியை தன் விரலால் எடுத்து நீக்கி விட்டு சட்டென அவள் நெற்றியில் இதழ் பதிக்க சென்றவன் சட்டென எழுந்து கொண்டான்.
அடுத்த நொடி இனி தன்னால் தன் மனதை அடக்க முடியாது அது தவறான வழியில் சென்று விடும் என அவன் உள்ளுணர்வு உறுத்த மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்தான்.
நிலா மகள் நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவில் புகுந்து விளையாடி கண் சிமிட்டி சிரிக்க, அந்த நிலவில் கூட ராகவ்க்கு இலக்கியாவின் வட்டமான முகம் தான் தெரிந்தது. என்ன ஒரு வசீகரிக்கும் அழகு. பிஸ்னஸ் பக்கமே தன் மனதையும் பார்வையையும் இதுவரை செலுத்தியிருந்த ராகவ் முதன்முறையாக ஒரு பெண்ணின் அழகால் இயற்கையை கூட ரசிக்கும் அளவு மாற்றப்பட்டிருந்தான். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து விட்டு தன் பெட்ரூமில் ஒருக்களித்து படுத்து விட்டு எட்ட நின்றால் என்ன செய்வது.
” தூங்கிக் கிடந்த உணர்வுகளை தட்டி எழுப்பி எதுவுமே நடவாதது போல இருக்கும் அவளை என்னவென்று சொல்வது. மனதை கொள்ளை கொண்டு கவர்ந்திழுத்து மனிதனை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்து விட்டு பொம்மை போல படுத்து விட்டாளே!”
ஒருபுறம் கோபமாகவும், மறுபுறம் காதலால் நிலைகுலைந்தும் போயிருந்தான் ராகவ். பால்கனியில் ராகவின் கால்கள் அடியெடுத்து வைக்கவும் இலக்கியாவின் கண்கள் லேசாக திறக்க தொடங்கியது. இதுவரை தூங்குவது போல நடித்த இலக்கியா மெதுவாக தலை உயர்த்தி வெளியே எட்டிப் பார்த்தாள்.
ராகவ் எதையோ தீவிரமாக யோசித்த வண்ணம் கைகள் இரண்டையும் பின்னுக்கு கட்டிவிட்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பது அவளுக்கு தெளிவாக தெரிந்தது. அவனின் நடையிலேயே அவனோட ஆதங்கம் புரிய தான் செய்தது
“ஏன் இலக்கியா இப்படி செய்றா? அவர் உன்னோட புருசன். உனட்ட அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ தானே அந்த உரிமையை அவருக்கு கொடுத்தா. அப்புறம் எதுக்காக அவரை ஒதுக்க பாக்குறா? எதற்க்காக அவர் பார்வையை சந்திக்க மறுக்குறா?”
அவள் இவ்வளவு வெறுக்கும் அளவு ராகவ் அத்தனை அசிங்கமானவர் அல்ல. பார்த்தவுடனே கொள்ளை கொள்ளும் முரட்டு ஆண் முகம் தான். மென்மையான குரல். அலட்டிக்காத ஸ்டைல். சட்டென எந்தப் பெண்ணையும் கவர்ந்திருக்கும் உடலமைப்பு.அவளுக்கு மிக மிகப் பொருத்தமான ஆள் தான். அப்படி இருக்க அவள் மனது ஏன் இத்தனை குழம்புகிறது என்று அவளுக்கே தெரியாதது தான் கொடுமை.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel

