முன்னுரை
சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் பெருமை மட்டுமல்ல,அது ஒவ்வொரு மனிதனின் உரிமையும் ஆகும் 🇮🇳 ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கையில்,அந்த சுதந்திரம் உண்மையிலேயே இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.இந்த சமூக கவிதை தமிழ், நாட்டில் நிலவும் அநீதி,
பாகுபாடு மற்றும் மனிதநேயத்தின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.இந்த Freedom Kavithai Tamil, சிந்திக்க வைக்கும் ஒரு உண்மை குரல்.
✊ சமூக கவிதை தமிழ்
காந்தி தந்த சுதந்திரம்
காற்றோடு போயாச்சு…
காசுவுள்ளவன் கையில்
காலமெல்லாம் காவலாச்சு…
வெள்ளைகாரன் கையிலிருந்து
கொள்ளைகாரன் புடுங்கியாச்சு…
பாரதியாரின் கூக்குரலும்
பாழாய் போயாச்சு…
மன்னராட்சி காலத்தில் கூட
மனசாட்சியோட ஆண்டாச்சு…
மக்களாட்சி என்ற பெயரில்
மனித நேயம் மாண்டாச்சு…
பெண்ணை தெய்வமாய் பேசி
தலைப்பு செய்தி அலங்கோலமாச்சு…
ஐந்து வயது பிஞ்சு கற்பையும்
நஞ்சகர்கள் சூரையாட விட்டாச்சு…
வாங்கிய சுதந்திரம்
வசதியுள்ளவனிடம் போயாச்சு…
காந்தி நோட்டின் காவலிலே
அதுவும் கூட பதுங்கியாச்சு…
இரவில் பெற்ற சுதந்திரம்
இருட்டுக்குள்ளே கிடக்குது…
இன்றுவரை தேடுறோம்
இயலாமையில் வாடுறோம்…
🔍 கவிதையின் அர்த்தம்
இந்த சமூக கவிதை தமிழ், நம் நாட்டின் தற்போதைய நிலையை மிகவும் நேர்மையாக சுட்டிக்காட்டுகிறது.
சுதந்திரம் பெற்ற பிறகும்:
- பணக்காரர்களுக்கு மட்டும் அதிகாரம் சேர்கிறது 💰
- மனித நேயம் குறைந்து வருகிறது 😔
- பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது ⚠️
இந்த கவிதை, நாம் பெற்ற சுதந்திரம் அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த Freedom Kavithai Tamil, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு வலிமையான குரல்.
மேலும் அழகான காதல் கவிதைகள் படிக்க 👇
காந்தி தந்த சுதந்திரம் எங்கே? 🇮🇳 சமூக கவிதை தமிழ் | Freedom Kavithai Tamil 2026
முன்னுரை சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் பெருமை மட்டுமல்ல,அது ஒவ்வொரு மனிதனின் உரிமையும் ஆகும் 🇮🇳 ஆனால் இன்று நாம்…
அன்னையர் தின கவிதை 💖 amma kavithai tamil | Mother Love Kavithai Tamil 2026
💖 INTRO (SEO OPTIMIZED) அம்மா… இந்த உலகில் நம்மை உயிரோடு உருவாக்கி,அன்பால் வளர்த்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் ஒரே மனிதர்…
National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை
தேசிய கொடி வானில் வசந்தமாய் பறக்குது அழகு கொடி,வாசனை மலர்களை தூவும் அன்பு கொடி… வேற்றுமை மனிதர்கள் கலந்த நாட்டில்,ஒற்றுமை…
மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam
உயிர் காக்கும் கடவுள்களுக்கு சமர்ப்பணம் நேரம் காலம் பார்க்காம,ஓய்வு உறக்கமில்லாம,உழைச்சி எங்களோடஉயிர் காத்தோனே! அன்பு நேசம் பாராட்டிபண்பு பாசம் ஊட்டிபழகி…
Birthday Kavithai /பிறந்த நாள் கவிதை
பிறந்த நாள் கவிதை என் வாழ்வில் வந்த தேவதையே என் தாய்மையின் தாரகையே… நின் பிஞ்சு பாதம் பரிசித்த நொடி…