வணக்கம் வாசகர்களே!
பிரிந்து போன ஒவியா முகுந்தன் ஜோடி.
தாயின் சூழ்ச்சி தெரியாமல் ஊருக்கு வரும் ஒவியா . தாயின் சூழ்ச்சியில் மாட்டி வேறு ஒரு திருமண வாழ்வுக்கு ரெடியாகும் அவலம். அடுத்து நடந்தது என்ன?
தன் பின்னால் நடக்கும் எந்த வேலையும் தெரியாமல் மாத்திரை கொடுத்த மயக்கத்தில் நல்ல நித்திரையில் இருந்தான் முகுந்தன். சரியான மருந்து உள் சென்றிருக்க வேண்டும். உடல் எல்லாம் வியர்வையில் குளிக்க காய்ச்சல் காணாமல் போய் இருந்தது.
உடலை மெல்லமாய் ஆட்டிப் பார்த்தான். உடல் வலியும் குறைந்திருந்தது.
மெல்ல எழுந்து அமர்ந்தவன் மனதில்,
“அவளும் தான் நம்மளோட நனைந்தாள். அப்படினா அவளுக்கும் காய்ச்சல் வந்திருக்குமோ…”
“கேட்டா என்ன?”
மனசு சொன்னதும் கை செல்லை எடுக்க, அறிவோ…
“வேணாம். அன்று கூட வரவாணு கேட்டப்பவே ஒரு மாதிரி பார்த்தா. இப்போ வீடு போய் சேர்ந்திப்பாளோ என்னவோ இப்போ உடல் நலம் பற்றி விசாரிச்சா என்ன நினைப்பா?”
எண்ணியவன் செல்லை கீழே வைத்த நேரம்,
ஓவியா செல்லையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் எதையும் கிளிக் செய்யவில்லை. வெறுமனே திரையை வெறித்திருந்தாள்.
“ஒருவேளை அவள் மனதும் அவன் போனுக்காய் தவமிருக்கிறதோ?”
அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவள் கண் அடிக்கடி செல்லின் திரையை வெறித்தது. வீட்டில் எல்லாருடன் சிரித்து பேசி கலகலப்பாய் இருந்தாலும் எதையோ மனம் தேடுவது போல அவள் கண் செல்லின் திரையையே தாவி ஓடியது. முழுதாய் அவள் வந்து ஒரு வாரமாகியும் மெட்ராஸில் இருந்து எந்த அழைப்புமே வராதது. மனதிற்கு எரிச்சலை கூட்டியது.
போய் தொலையட்டும்ணு விட்டுட்டான் போல…
அது சரி. அவன் எப்போ எனக்காக காத்திருந்தான். பக்கத்துல இருக்கும் போது, மனசை தவிக்க வைக்கிறது. தூரமா போனதும் விட்டு விலகுறது. இது தானே அவனோட வாடிக்கை. இந்த லட்சணத்துல அவன் என் காதல்ல விழுந்துட்டானாம்.
இப்போ மட்டும் திலகா என் கையில கிடைச்சா…
கடிச்சி முறிச்சி சாப்பிட்டு விடுவேன்.
பல்லை நரநரவென கடித்தவள்,
அவா மேல கோபப்பட்டு எதுக்கு? ஒரு முறை பட்ட பிறகும் நாம கூட அவன் மாய வலையில விழுந்து ஏங்கி நின்னோம் தானே.
எண்ணியவள்,
இதுக்கு மேல நெருங்கி வந்தான். பிடிச்சி தள்ளி விட்டு விடணும்.
முகுந்தன் மேல் செம கடுப்பில் ஒவியா இருந்த அதே நேரம் முகுந்தனும் ஆத்திரத்தின் உச்சத்தில் தான் இருந்தான். இரண்டு மூன்று நாளில் வந்து விடுவேன் என இவள் கிளம்பி சென்றிருக்க, இன்று வந்து விடுவாள், நாளை வந்து விடுவாள் என காத்து இருந்து ஏமாந்தவன், கடுப்பின் உச்சத்திற்கு சென்று விட்டான். இவள் இருக்கும் வரை தெரியாத பல உண்மைகள் அவளின் பிரிவு இவனுக்கு சொல்லி விட, அவள் வந்ததும் தன் மனதை வெளிப்படுத்தி விட வேண்டும் என காத்திருந்தவனுக்கு ஒரு வாரமாய் வராதது எரிச்சலை தந்தது.
அதே எரிச்சலில் தான் அங்கு அவளும் இருந்தாள். மூன்று நாளில் திரும்பி வந்து விடுவேன் என சொல்லி கொண்டு ஊருக்கு வந்தவளுக்கு ஊருக்கு வந்து முழுசாய் நான்கு நாள் முடிந்தும் கிளம்ப முடியவில்லை. அதற்கு காரணம் தந்தையின் உடல்நிலை இல்லை. இவள் வரும் போதே அவள் நினைத்து வந்தது போல் தந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்டாள். கட்டில்லயே கிடந்தாலும் பெரிதாக பாதித்தது போல் தெரியவில்லை.
என்றாலும் தாய் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லியே அவளை போக விடாமல் தடுத்தாள். நான்கு நாள் முடிந்து ஐந்தாம் நாள் தொடங்கியதுமே ஓவியாவின் கோபம் எல்லையை தாண்டியது.
“என்னம்மா நீ. விளையாடவா செய்யுறீங்க?. அங்க முகுந்தன் சார். என்னை நம்பி அவ்வளவு பெரிய தொகையை முதலீடா போட்டிருக்காரு. வளர்ந்து வருகிற நேரம் கூப்பிட்டு கழுத்தறுக்குறீங்க. இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்சினை.”
என்றவளின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறே,
“எங்களுக்கு என்ன பிரச்சினை. அம்மா அப்பாவோட கூட ஒரு வாரம் இருந்துட்டு போணு சொல்லுறது தப்பா?”
என்றாள் தடுமாற்றமாய்…
“என்ன இன்னும் ஒரு வாரமா? வாய்ப்பே இல்ல. என்னம்மா பழையதை மறந்துட்டியா என்ன? இந்த வேலை கிடைக்கிறதுக்கு முன்னால அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுனீங்க. இப்ப பணம் வந்ததும் காலை கீழ ஊன்றாம ஆடுறீங்க. அப்படி தானே. ரொம்ப பண்ணாதம்மா. நான் இன்றே கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க.”
என்று கோபத்தோடு சொன்ன மகளை பார்த்து சாந்தமாக…
“கூட ஒரு வாரம் கண்ணு.”
என கெஞ்ச,
“இப்போ நீங்க டிக்கெட் புக் பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ணிட்டு கிளம்பட்டுமா?”
என்றாள் சற்றே குரல் உயர்த்தி,
மகளின் பிடிவாதம் ஆத்திரத்தை தர,
“என்ன சம்பாதிக்கிறேன் என்கிற திமிரா?”
என்றாள் தாய் சற்று சூடாக, அவளை அனல் கக்கும் பார்வை பார்த்தவள்,
“அப்படியே வச்சிக்கோங்க. நான் போகணும்.”
என்றாள் பிடிவாதமாக,
“வேணாம். நீ போக வேணாம்.”
என்ற தாயை முறைத்து பார்த்தவள், தாயின் அழுத்தமான பேச்சை கேட்டதும்,
“போக வேணாம்ணா. இன்று போக வேணாமா? இனிமேல் போக வேணாமா?”
என்றாள் சற்று கோபத்தோடு, மகளின் கோபத்தில் அடிபட்டவள்,
“இனிமேல் தான் போக வேணாம்.”
என்றாள் தாழ்ந்த குரலில்…
“என்னம்மா விளையாடுறியா? போகாம எப்படி சாப்பிடுறதாம்.”
என்ற மகளை இளக்காரமாக பார்த்தவள்,
“அதை நாங்க பாத்துக்கிறோம். நீ மெட்ராஸ் போக வேணாம். இங்க ஏதாவது வேலை பாரு போதும்.”
அவ்வளவு தீர்க்கமாக சொன்ன தாயை கூர்ந்து பார்த்த ஒவியா?
“இங்க வேலை பாக்குறதா? என்னம்மா தெரிஞ்சி தான் பேசுறியா?”
என புரியாமல் கேட்க,
“எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறேன். பொட்ட புள்ளையை கண்காணா தேசத்துக்கு அனுப்பிட்டு நிம்மதியா இருக்க முடியல. அதான் இந்த முடிவு.”
என்றவளை புருவ முடிச்சோடு பார்த்தவள்,
“ஏழு மாசமா இருந்தியேம்மா…”
என கேட்க.
“இருந்தேன் தான். ஆனா என் ஈரகுலை வெடிச்சது எனக்கு தான் தெரியும். போக வேணாம்ணு சொல்றேன்ல உள்ளால போ. என்ன செய்யணுமோ அதை நாங்க செய்றோம்.”
என அறை பக்கம் கை காட்ட,
“ஆமா இத்தனை நாள் அந்த நாங்க எங்க போனீங்க. மெட்ராஸ் போகலணு சொன்னவளை அடிச்சி விரட்டாத குறையா அனுப்பி வச்சது நீங்க தானே. இப்ப என்ன?”
“தெரியாம அனுப்பி வச்சிட்டோம் தாயீ. இப்ப முடியல. என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கலாம்னு ஆசையா இருக்கு. அதனால இனி நீ தூர இடங்களுக்கு எல்லாம் போக வேணாம். பக்கத்துலயே வேலை ரெடியாகி இருக்கு. மாசம் நீ வாங்குற சம்பளம் தான். அந்த பணம் பக்கத்துலயே கிடைக்கும் போது அவ்வளவு தூரமா ஏன் போகணும்.”
என்றதும் வெறி ஆனவள்,
“கல்யாணமா?”
என அனல் கக்கும் பார்வையை தாயின் மேல் வீசியவள் தாயின் அலைந்தாடும் விழியை பார்த்தவாறு,
“ஆமா பக்கத்துல இவ்வளவு பெரிய தொகையை தர கூடிய இளிச்சவாயன் யாரு?”
என்றாள் சீற்றத்தோடு,
“யாரு. மாப்பிள்ளை தான்.”
என்றாள் எழில் அரசி கூலாக…
“மாப்பிள்ளையா?”
என்றாள் அதிர்ந்து,
“மாப்பிள்ளைணா? மாப்பிள்ளை இல்லை. அவரோட ஆபீஸ்ல .”
“பொண்ணுக்கு வேலை எடுத்து கொடுத்து கட்டிக்கிற மாப்பிள்ளையா? அவரை எங்க இருந்து புடிச்சா.”
“நான் எங்கடி புடிச்சேன். அவங்களா தான் விரும்பி வந்து உங்க பொண்ணை கொடுங்கணு கேட்டாங்க.”
“கேட்டதும் நீ ஓக்கே சொல்லிட்டா.”
“அப்புறம் இப்படி ஒரு வரன் எல்லாருக்கும் அமையுமா? நாம செய்த புண்ணியம் தான் வீடு தேடி வந்திருக்கு.”
“வந்திருக்கு சரி. நான் போயிட்டா ஊவாவுக்கு என்ன பண்ணுவீங்க.”
“அதுக்கு மாப்பிள்ளை பாதி சம்பளத்தை தரேன்னு சொல்லி இருக்காரே.”
“அட… இது வேறயா? அவர் என்ன என் குடும்பத்துக்கு பிச்சை போடுறாரா?”
“தப்பா பேசாதடி அந்த புள்ளையை . இந்த காலத்துல எந்த பசங்களாவது இப்படி இருப்பாங்களா? மாமியார் குடும்பமும் வாடிட கூடாதுணு பாதி சம்பளத்தையே தர முடிவு பண்ணியிருக்காரு. அவரை போல ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்.”
“அதான் என்னை கொடுத்து வச்சிக்கலாம்ணு முடிவு பண்ணிட்டியா? இந்தா பாரும்மா. நீ என்ன முடிவுனாலும் எடுத்துக்க. ஆனா இப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு நிறைய ஆசை லட்சியம் இருக்கு. அது எல்லாம் நிறைவேறுகிறதுக்கு முன்னால குடும்ப வாழ்க்கைக்குள்ள போக முடியாது. பேசி பேசி மாத்திடலாம்னு தப்பு கணக்கு போடாத. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.”
என்றவளை கோபமாக முறைத்தவள்,
“அப்படினா நீ இதையும் கேட்டுக்க. இதுக்க மேல நீ மெட்ராஸ்க்கு போக கூடாது. இங்க எங்களோட தான் இருக்கணும்.”
என்றாள் அதிகாரமாக,
“அது எப்படி முடியும். அவர் என்னை நம்பி பல கோடி ரூபாய் இன்வெஸ்மென்ட் பண்ணியிருக்காரு. அப்படி எல்லாம் அம்போணு விட்டுட்டு வர முடியாது.”
“ கம்பெனியை விட்டுட்டு வர முடியாதுணு சொல்லுறியா? கம்பெனியை நடத்துறவரை விட்டுட்டு வர முடியாதுணு சொல்லுறியா?”
என்றதும் அதிர்ந்து போய்
“அம்மா…”
என கத்தி விட,
“கத்தாதடி. போக வேணாம்ணு சொன்னா விட வேண்டியது தானே. போவேணு அடம்பிடிக்கிறா?”
“அதுக்காக இப்படியா பேசுவா?”
“இப்படி இல்ல. இதுக்க மேலயும் பேசுவேன். பேசாம நாங்க சொல்லுறதை கேட்டு அந்த பையனை கட்டிக்க ரெடியாகு. கூடவே அந்த வேலைக்கு போ. போதும்.”
சொல்லி விட்டு எழிலரசி கிச்சனுக்குள் போக, ஒவியா பாவமாக தந்தையை பார்த்தாள். அவர் எதுவும் பேச என்னிடம் இல்லை என்பது போல பேசாமல் நகர்ந்து விட, பின்னாலேயே தங்கைகளும் நழுவினர். ஓவியாவுக்கு என்ன செய்ய என புரியவில்லை. மெட்ராஸில் இருந்து கிளம்பி வரும் போது இப்படி ஒரு வலையில் மாட்ட வைப்பார்கள் என தெரிந்தால் அவள் வந்திருக்கமாட்டாள்.
அவளால் எப்படி முடியும். முகுந்தன் இருந்த இடத்தை இன்னொருவனுக்கு கொடுக்க, அவன் தனக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்க போறது இல்லை என்று தெரியும் தான். அதற்காக இவளால் அவன் இடத்தை நிச்சயமாக வேறு ஒருவனுக்கு கொடுக்க முடியாது. இதை எப்படி சொல்லி புரிய வைப்பாள்.
சோர்ந்து தளர்ந்து போய் கட்டிலில் விழுந்த அதே நேரம், முகுந்தன் அறையில் நளன் மற்றும் திலகாவோடு பேசிக் கொண்டிருந்தான் முகுந்தன். பேசி கொண்டிருந்தான் என்பதை விட ஆத்திரத்தில் சாடிக் கொண்டிருந்தான் என்பதே சரியாக இருக்கும். ஒவியா போய் மூன்றே நாளில் திரும்பி விடுவேன் என்று சொல்லி சென்றவள் வாரம் ஒன்று ஆகியும் திரும்பி வராத கோபத்தில் திலகாவிடம் சாடி கொண்டிருந்தான் முகுந்தன்.
கம்பெனியில் இப்போது ஓவியாவின் தேவை அதிகம் என தெரிந்ததால் அவன் கோபத்திற்கு மறுமொழி கொடுக்காமல் அமைதியாக இருந்தாள் திலகா. அவளுக்கு தெரியும். ஓவியா இனி மேல் இங்கு வர போவது இல்லை என்று. எழிலரசி எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விட்டிருந்தாள். ஆனாலும் அந்த உண்மையை இவரிடம் சொல்ல திலகாவுக்கு பயமாக இருந்தது. மூன்று நாள் பிந்தியதற்கே இவர் இந்த குதி குதிக்கிறார். இந்த நேரம் வரவே மாட்டாள் என சொன்னால்… அவளை விட்டு விட்டு என்னை வாங்கு வாங்கு என வாங்கி விடுவார். அதனால் பேசாமல் இருப்பதே சிறப்பு.
என அமைதியாக நின்றவளை கோபத்தோடு முறைத்தவன்.
“இப்ப என்ன தாங்க உங்க பிரண்ட் சொல்லுறாங்க. இன்னும் எத்தனை நாள் லீவு எடுக்கிறதா உத்தேசம். கிளம்பி போகிற வரை கம்பெனியில அக்கறை உள்ளவங்க போல அப்படி பேசுனாங்க. இப்ப என்ன எல்லா அக்கறையையும் திருடிட்டா போயிட்டாங்க.”
முகுந்தன் வெடித்து விட, நளன் பாவமாக திலகாவை பார்த்தான். அவள் அழுகைக்கு மாற தயாராய் இருப்பதை உணர்ந்து,
“டேய்…”
என கெஞ்சுதலோடு அழைக்க,
“அப்புறம் என்னடா? வேலையில ஒரு சின்சியர் வேணாமா? லீவு எடுத்தா இப்படி ஒரேயடியாவா போவாங்க. இதுக்கு மொத்தமா போறேனு சொல்லிட்டு கிளம்பி இருக்க வேண்டியது தானே.”
ஆத்திரத்தில் தான் அவன் அப்படி சொன்னான். ஆனால் அது தான் உண்மை என திலகா திக்கி திணறி சொன்ன போது ஆடி போய் விட்டான்.
“அவா உங்களுட்ட சொல்லலியே தவிர மொத்தமா போயிட்டானு தான் எனக்கு தெரியுது சார்.
என்றதும் புரியாமல் விழி முடிச்சோடு அவளை பார்க்க, அவன் விழியை பார்க்காமல் சற்றே தலையை தாழ்த்தியவாறு,
“அவா இதுக்க மேல இங்க திரும்பி வர மாட்டாணு நினைக்கிறேன் சார். நீங்க அவள் இடத்துக்கு வேற ஆளை பார்க்கிறது தான் சரினு தோணுது.”
என்றதும் அவள் மேல் அனல் கக்கும் பார்வையை வீசியவன்.
“என்னங்க சொல்லுறீங்க.”
என வெடிக்க, அவன் கேட்ட தோனியிலும் உடல் மொழியிலும் பயந்து போன திலகா,
“ம்… அப்பாவுக்கு முடியாம தான் அவளை ஊருக்கு அழைச்சாங்க. ஆனா போன இடத்துல அவளை ஒரு குடும்பம் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. வந்தவங்களுக்கு பொண்ணை புடிச்சிப் போச்சாம். அதான் அவளோட பேரன்ஸ் மேரேஜை முடிச்சிடலாம்ணு முடிவு பண்ணியிருக்காங்க.”
“மேரேஜா?”
நிஜமாகவே அதிர்ந்து போய் செயரில் இருந்தே எழுந்து விட்டான். அவனின் அதிர்வை பார்த்த நளன் குழப்பத்தோடே அவனை ஏற இறங்க பார்த்தவாறு அவன் இந்த அளவு அதிர்ச்சியாகும் காரணம் புரியாமல் குழப்பத்தோடே திலகா பக்கம் திரும்பி,
“அப்படினா இந்த விசயம் உனக்கு முன்பே தெரியுமா திலகா?”
என்றான். ஆனால் அவள் வார்த்தையில் நொந்து போனவன் என்னவோ முகுந்தன் தான்.
“தெரியும். எனக்கும் அவங்க அம்மா சொன்னது நியாயமா தெரிஞ்சிது. அதான் நானும் உண்மையை சொல்லல.”
என்றதும் சட்டென சூடான முகுந்தன்,
“என்னங்க நியாயமா தெரிஞ்சி, அவங்களுட்ட உண்மையை சொல்லாம மறைச்சி அனுப்புனதா?”
வெடித்து கொண்டு தான் கேட்டான் முகுந்தன். ஆனால் அவனின் கோபத்தை பார்த்து இருவருமே அரண்டு தான் போனார்கள். ஆனாலும் வாய் மூடி திலகாவால் இருக்க முடியவில்லை.
“எதுக்கு சார் இப்போ இவ்வளவு கோபப்படுறீங்க. அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைச்சிருக்கு. அதை அமைச்சிக்க அனுப்பி வைக்கிறது தப்பா?”
என்றாள் வெடுக்கென்று,
“தப்பு தாங்க. தப்பே தான். அவங்க மனசுல என்ன இருக்குணு தெரியாம அனுப்பி வச்சது தப்பு தான்.”
“அவளோட மனசுல என்ன இருக்குணு எனக்கு தெரியாதா?”
“தெரியாதுங்க. தெரிஞ்சிருந்தா அனுப்பி வச்சிருக்க மாட்டீங்க. கடைசியில நீங்க போய் அவளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சிட்டீங்களே.”
சாடி கொண்டு எழுந்தவன் அதன் பின் அவர்கள் முன் நிற்கவில்லை. நளனுக்கும் புரியவில்லை. திலகாவுக்கும் புரியவில்லை.ஏன் இவன் இவ்வளவு கோபப்படுகிறான் என்று. ஏன்? அவனுக்குமே புரியவில்லை. ஆனால் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கையில் கிடைப்பதை எல்லாம் அடித்து நொறுக்கும் அளவு ஆத்திரம் வந்தது. கட்டுபடுத்த முடியாமல் வண்டியை எடுத்து கொண்டு முழு வேகத்தில் அங்கிருந்து பறந்தான்.
திலகா குழப்பமாக நளனை பார்த்தாள். நளனும் குழப்பத்தோடு இருப்பது போல் தான் தெரிந்தது. ஆனால் அவளுள் எதுவோ பிடிபடுவது போல் உறுத்த ஆரம்பித்தது.
நாம நினைச்சது சரியோ… முகுந்த் சார் ஒருவேளை ஒவியாவை விரும்புறாரோ…
மனதுக்குள் கேள்வி ஏறி அமர்ந்ததும் குழப்பம் மண்டையை குடைய ஆரம்பித்தது.
அதே நேரம், வேறு ஒரு கார் அந்த காம்பவுண்ட்டுக்குள் நுழைந்தது. அதிலிருந்து சக்கரவர்த்தியும் அசோகனும் இறங்கினார்கள். நேரே மகன் அறைக்கு வந்தவர்கள் அவன் இல்லாதிருக்க கண்டதும் உள்ளே சென்று ஆளுக்கொரு செயரில் அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினர். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல. முழுதாய் மூன்றுமணி நேரம் பேசி முடித்து சிறு புன்னகையோடு அங்கிருந்து கிளம்பினர். வழியில் எதிர்ப்பட்டு நளன் வர,
“முகுந்தன் எங்கப்பா…”
சக்கரவர்த்தி தான் கேட்டார்.
“ஒரு கிளைன்ட்டை பார்க்க போயிருக்காங்க சார்.”
என்று பொய் தான் சொன்னான்.
“கிளைன்ட்டை பார்க்க போயிருக்கானா? நீ போகல.”
நம்பாதவர் போல புருவ முடிச்சோடு அவர் கேட்க, ஒரு நொடி தடுமாறி தான் போனான். ஆனாலும் உண்மையை சொல்லாமல்,
“வர வேண்டாம்ணு சொல்லிட்டு போனாங்க.”
“சரி. நீ கொஞ்சம் அவன் எங்க இருக்கான்னு பார்த்து சாயங்காலம் 6 மணிக்குள்ள வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுப்பா.”
“ஆறு மணிக்கா?
என்றவன் சற்று நிறுத்தி.
“என்ன விசயம் சார்…”
என கேட்க, முகம் எல்லாம் சிரிப்போடு,
“எல்லாம் நல்ல விசயம் தான். உன் பிரண்ட்டுக்கு பொண்ணு பாக்க ரெடி பண்ணியிருக்கேன். சொன்னா வரமாட்டான். நீ ஏதாவது ஒரு பொய்யை சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு வந்திடு. மற்றதை நான் பாத்துக்கிறேன்.. பொண்ணு என் பிரண்ட் கதிரவேலோட பொண்ணு தான். நேற்று தான் அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா. எல்லாம் நானும் அவனும் பேசி முடிச்சிட்டோம். ஒரு முறை இவனை பொண்ணுட்ட பேச வச்சிட்டா அப்புறம் எல்லாம் சுபமா முடிஞ்சிடும். அதனால நீ எப்படியாவது அவனை கூட்டிட்டு வந்திடு.’
என்றதும் நளன் முகத்திலும் பூரிப்பு. திலகா முகத்தில் திகைப்பு, என்ன இது? இவர் திருமணத்துக்கு சம்மதிக்காமலா பொண்ணு பார்க்க அவர் அப்பா ஏற்பாடு பண்ணி இருப்பாரு. நாம தான் முகுந்த் சாரை தப்பா ஜட்ஜ் பண்ணிட்டோமோ? நல்ல வேளை அது பற்றி ஒவியாவிடம் பேசல…
பாஸ்க்கு திருமணமா?
கண்டிப்பாப்பா. கண்டிப்பா கூட்டிட்டு வாரேன்.
ரொம்ப உற்சாகமாக சக்கரவர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்த நளனை ஒரு முறை பார்த்து விட்டு உள் அறையை நோக்கி வண்டியை உருள விட்டாள். இப்போதும் நளன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு தெரிந்தது.
அப்படி அவன் குதூகலமாய் சொல்ல ஒரே காரணம் அவனுக்கு நண்பனை பற்றி தெரிந்தது தான். நிச்சயம் அவன் உண்மையை சொன்னால் வரமாட்டான் என்பது அவனுக்கு தெரியும். அதனாலே என்ன காரணம் சொல்லி அழைத்து செல்லலாம் என யோசிக்க தொடங்கினான்.
ஆனால் மாலை வரை எந்த காரணமும் கிடைக்காமல் தான் நண்பனை தேடி அலைந்தான். ஆனால் போகும் இடம் எல்லாம் அவன் இல்லாதிருப்பதை கண்டதும் கலக்கமுற்றான்.
பல முறை போன் அடித்தான். அவன் எடுக்கவே இல்லை.
“இவனுக்கு என்னாச்சு?”
குழம்பியவன் மனதில் மூன்று மணி நேரத்திற்கு முன் முகுந்தன் அறையில் முகுந்தன் நடந்து கொண்ட வினோதமான செய்கையில் நிலைப் பெற்றது.
“ஆமா ஓவியா வேலையை விட்டு நின்னா இவன் ஏன் இவ்வளவு கோபப்படுறான். திலகாளுட்ட அப்படி பேசுறான். கொஞ்சம் விட்டா அவா அழுதிருப்பா. இந்த அளவு மூடு கெட என்ன காரணம்.”
ஒவியா போனதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அதுதான் காரணமா? வேறு ஏதாவது பிரச்சினையா?
யோசிக்க யோசிக்க, நளனுக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆனால் நண்பனின் இன்றைய செயல் வினோதமாக தான் இருந்தது. ஒவியா போனது கம்பெனிக்கு ஒரு சின்ன இழப்பு தான். ஆனால் சரிபடுத்த முடியாத இழப்பு இல்லை. அவள் இல்லை என்றால் இன்னொருத்தி. அதற்கு எதற்கு இவன் ஆத்திரப்பட வேண்டும்,
ஒருவேளை அவளை நம்பி கம்பெனியை கொடுத்தேனே விட்டு விட்டு போய் விட்டாளே என்று ஆத்திரப்படுகிறானா? இல்லை தன்னிடம் பொய் சொல்லி விட்டு கிளம்பியதால் ஆத்திரப்படுகிறானா?
குழப்பம். ஒரே குழப்பமாக இருந்தது. தன் குழப்பத்தை தீர்த்து கொள்ள அவன் வேண்டும். ஆனால் இவன் எங்கு தொலைந்து போனான்.
யோசித்தவாறே அலுவலகத்துக்குள் நுழைந்தான். நேரே முகுந்தன் அறைக்கு தான் வந்தான். ஒருவேளை வந்திருப்பானோ என்ற சந்தேகத்தில் தான் வந்தான். வெறிச்சோடி தான் கிடந்தது. அடுத்து திலகா அறைக்குள் தான் நுழைந்தான். திலகா பிஸியாக இருந்தாள். ஓவியா இல்லாதது அவளை இரட்டிப்பு வேலை பார்க்க வைத்தது. அதுவே அவளை நிமிர விடாமல் செய்ய, திரையை வெறித்தவாறே,
“சொல்லு…”
என்றாள்.
“முகுந்தன் எங்க போனான்னு தெரியுமா?”
என்றதும் சட்டென நிமிர்ந்தவள் அவன் கண்ணை பார்த்து பொங்கும் சிரிப்போடு,
“இந்த கேள்வியை நாங்க உங்களுட்ட கேட்க வேண்டியது சார். என்ன நீங்க எனட்ட கேட்கிறீங்க.”
என்றாள். யோசனையோடு நின்றவன்.
“எங்க போனான்னு தெரியல. பல வருஷ பழக்கம் எனக்கு அவனுட்ட. ஆனா இப்படி மாயமா மறைஞ்சி நான் பார்த்தது இல்லை. எங்கெல்லாமோ தேடிட்டேன். ஆனா எங்கேயும் இல்ல.”
“என்னாச்சு உங்க பிரண்ட்டுக்கு,”
“தெரியல…”
“ஒருவேளை ஓவியா வேலையை இடைநிறுத்தம் செய்தது பிடிக்கலியோ…”
“இருக்கலாம். ஆனாலும் அவங்களும் அப்படி செய்திருக்க கூடாது.”
“எப்படி செய்திருக்க கூடாது.”
“இவங்க தானே அவனை உசுப்பேத்தி இத்தனை பிராடெக்டை அறிமுகப்படுத்துனது. இப்போ அம்போணு எல்லாத்தையும் போட்டுட்டு போனா எப்படி?”
“என்னங்க பேசுறீங்க. ஊர்ல்ல அவளோட பேரன்ஸ் அவளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை பார்த்து வச்சிருக்காங்க. உங்க கம்பெனி வளர்ச்சிக்காக அவளோட எதிர்காலத்தை அழிக்க முடியுமா?”
“அழிக்க சொல்லல. கட்டிட்டும் வேலை பார்க்கலாம் தானே.”
“எப்படி? அவர் அங்கேயும். இவள் இங்கேயுமா?”
“அப்படி யாரும் பார்க்கலியா?”
“பார்க்கிறாங்க தான். வாய்ப்பு இல்லனா பார்த்து தான் ஆகணும். ஆனா வாய்ப்பு இருக்கும் போது அவங்க ஏங்க பிரியணும்.”
“வாய்ப்பு இருக்கா?…”
“ஆமா. மாப்பிள்ளை வேலை பார்க்கிற கம்பெனியிலே இவளுக்கும் வேலை பார்த்திருக்காரு. இரண்டு பேரும் ஒரே ஆபீஸ்லணா கஷ்டம் இல்ல தானே.”
“சரிதான். ஆனாலும் அவங்களை நம்பி பல கோடி ரூபாய் இன்வெஸ்மென்ட் பண்ணுனவனையும் நினைக்கணும் இல்லயா?”
“நினைக்கணும் தான். ஆனா சூழல் மாறி போன பிறகு அவளால என்ன செய்ய முடியும். ஆமா அவா இல்லனா என்ன? அவள் இடத்துல அடுத்த ஆளை போட வேண்டியது தானே? அதுக்காக எதுக்கு இவ்வளவு வாதாடுறீங்க. ஏன் இதுக்கு முன்னால யாரும் இந்த ஆபீஸ்ல இருந்து மாறி போகலயா? இல்ல அந்த இடத்துல நீங்க வேற ஆளை போடலயா? எதுக்கு இப்ப இந்த கோபம். ஓவியா போல பல திறமையான பொண்ணங்க இருக்காங்க. உங்க பிரண்ட் தான் ஆட்களை தேர்வு செய்கிறதுல கெட்டிகாரர் ஆச்சே. அப்புறம் எதுக்கு இந்த வீண் பிடிவாதம்.”
“நானும் அதை தான் யோசிச்சேன். மச்சான் இதுவரை இப்படி ரியாக்ட் பண்ணுனது இல்ல. ஏன் இந்த சின்ன விசயத்துக்கு இப்படி ரியாக்ட் பண்ணுறானு தான் தெரியல… சரி. நம்ம ஓவியா வாழ்க்கையில நல்லது நடந்தா சந்தோஷம் தான்.”
“நடக்கும். நிச்சயம் நடக்கும். அதுவும் கூடிய சீக்கிரத்துல நடக்கும்.”
“அப்படினா தேதி எல்லாம் குறிச்சாச்சா…”
“இன்னும் இல்ல. ஆனா பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டு போயாச்சு. தேதி முடிவாகல. ஆனா ஒரு மாசத்துக்குள்ள இருக்கும்ணு சொல்றாங்க.”
“யாரு? ஓவியாவா சொன்னாங்க.”
“அவா எங்க? போனதுல இருந்து என்கிட்ட பேசவே இல்ல. போன் அடிச்சா கூட புது பொண்ணு பிஸியா இருக்காங்க. அவங்க அம்மா தான் சொன்னாங்க. எப்படியோ என் தோழி வாழ்வோட அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துட்டா.”
சொன்னவாறு வேலையில் மும்முரமாக,
“என்னமோ நல்லது நடந்தா சரி. ஆனா நம்ம ஆபீஸ்ல இது மேரேஜ் வாரம் போல…”
என்றவனை திலகா நிமிர்ந்து பார்க்க,
“இங்க வேலை செய்ற ஒவ்வொருத்தருக்கா திருமணம் முடிவாகுது.”
வியப்போடு சொன்னான்.
“நம்ம ஆபீஸ்லயா? அப்படி யாருக்கு முடிவாகி இருக்கு.”
“என் பிரண்ட் முகுந்தனுக்கு முடிவாக போகுது. இன்று பொண்ணு பார்க்க போறாங்க. அவங்க அப்பா தான் சொன்னாரு.”
நல்ல வேளை அதுக்கு முன்னால இவா கிளம்பி போனா? என்ன இருந்தாலும் இவன் நமக்கு கிடைக்க மாட்டான் என ஒதுங்குனாலும் தோழியின் மனதில் இவன் இருப்பது நிஜம் தானே. அவள் இங்கு இருந்திருந்தால் இந்த விசயம் அவளை எவ்வளவு காயப்படுத்தும். யோசித்தவள்.
போங்க சார். போய் தேடி கண்டுபிடிங்க. அப்புறம் பொண்ணு பார்க்க போகிற விசயத்தையே மறந்துட்டு மொட்டை வெயில்ல காஞ்சிட்டு நிப்பாரு.
அவள் விரட்டுவதிலே குறியாய் இருக்க, அவளில் காதலோடு நெருங்கியவன், அவள் முன் குனிந்து விழி உயர்த்தி புன்சிரிப்போடு…
சரி… எல்லாரும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துட்டாங்க. நாம எப்போ நகர போறோம்.
என்றதும் ஒடி நொடி முறைத்தவள், பின் தன் முகத்தை மாற்றி கொண்டு, மர்மமான சிரிப்பு ஒன்றை உதட்டில் மறைத்து வைத்தவாறு,
“வீட்டுல ஒ.கே சொன்னீங்கணா . அடுத்த முகூர்த்தத்துலயே உங்க அம்மா பொண்ணை ரெடிப் பண்ணிடுவாங்க. உங்க பிரண்ட்டுக்கு என்ன அதுக்கு முன்னாலயே உங்க வீட்டுல கெட்டிமேள சத்தம் ஒலிக்க செய்யலாம். எப்படி? இன்றே போய் பொண்ணு பார்க்க சொல்லுறீங்களா?”
அவளும் கண் சிமிட்டி சிரித்து கொண்டே சொல்ல, மொத்தமாய் முகம் சுருங்கியவன்,
“உனக்கு என்னதாண்டி பிரச்சினை. அதான் என் வீட்டுல கூட ஏத்துகிட்டாங்கலியா? அப்புறம் எதுக்கு இந்த பிடிவாதம்.”
“பிடிவாதம் பிடிக்கிறேனு தெரியுதுல. விட்டுட்டு போக வேண்டியது தானே. எதுக்கு என்னையே தொங்கிட்டு நிக்குறீங்க.”
“ம்… பச்சையாவே சொல்லுறேன்.”
என்றவன் மென்குரலுக்கு மாறி,
“முடியலடி. என்னை ஏத்துக்கையேன்.”
“ஐயே… இது என்ன இப்படி இறங்கிட்டீங்க. முதல்ல உங்க பாஸை போய் தேடுங்க சார். அப்புறம் பொண்ணு பார்க்க போகிற நேரம் வரை இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணியிருக்கிறதே தெரியாம எங்காவது இருந்திடப் போறாரு.”
என பேச்சை மாற்ற, ஒரு நொடி அவளை ஆழமாக பார்த்தவன்.
“எத்தனை நாள் இப்படியே என்னை அலைய வைக்கிறானு நானும் பாக்குறேன். இப்போ போறேன். பாஸ் எங்க போனாருணு பார்க்க வேண்டி இருக்கு. மாலையில அவரை கூட்டிட்டு பொண்ணு பார்க்க போக வேண்டியிருக்கு. நான் கிளம்புறேன்.”
என எழுந்தவன்,
“ஆமா…உனக்கு ஏதாவது செய்ய வேணும்ணா சொல்லு. செய்துட்டு கிளம்புறேன்.”
“இல்ல. நான் என்னை பாத்துக்கிறேன். நீங்க சாயுங்காலமா வந்து கூட்டிட்டு போய் வீட்டுல மட்டும் இறக்கி விட்டு விடுங்க. போதும்.”
“ம்… சரி. ஆமா? நீ சாப்பிட்டியா?”
“ம்… சாப்பிட்டேன்.”
“மதியானத்துக்கு…”
கொண்டு வந்துட்டேன்.
“அப்படினா நான் கிளம்புறேன். அவனை தேடி கண்டுபிடிக்கணும். மாலையில சரியா வந்து கூட்டிட்டு போறேன். இடையில என் தேவை வந்துச்சினா என் செல்லுக்கு கூப்பிடு.”
“ம்…” என்றதும் நிறைவோடு வெளியேறியவன் கண்ணில், கண்ணாடி அறைக்குள் தலையை தொங்கப் போட்டவாறு இருந்த முகுந்தன் தான் விழுந்தான். முகுந்தனை கண்டதும் சட்டென அவன் முகம் ஒளி வீசியது. ஆனால் கண்ணாடி கூண்டினுள் இருந்த முகுந்தன் முகமோ இருள் பரவியிருக்க கண்டு குழப்பமாக அவன் அறையை நோக்கி நடந்தான்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel