வணக்கம் வாசகர்களே!
சங்கிலியின் வளர்ச்சி பார்த்து ஆச்சரியப்படும் பல்லவி. உள்ளுக்குள் பொசுங்கி போகும் விக்கி
“என்னடா சொல்லுற சைக்கிள் கடையை மொத்தமா தண்டபாணி அண்ணாச்சி வித்துட்டாரா?…”
“ஆமாக்கா… அவருக்கு உடம்பு சரியில்லணு வித்துட்டதா பேசிகிட்டாங்க…”
“அப்போ தண்டபாணி அண்ணாச்சி .”
“அவர் அவங்க புள்ளைங்க கூட போயிட்டதா பேசிகிட்டாங்க.”
என சொன்னவாறு வந்தவன் சென்று விட…
பல்லவி திரும்பி திரும்பி அந்த இடத்தை பார்த்தவாறே முன்னோக்கி நகர்ந்தாள். மனது பல பல கேள்விகளை கேட்க தான் செய்தது. ஆனாலும் எதுவும் போசாமல் அமைதியாகவே முன்னோக்கி நடக்க,
தூரத்தில் சிவன் கோவில் தெரிந்தது. இருவரும் கோவிலுக்கு சென்றனர் . பல்லவி நினைத்தது போல சாமி பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு நன்றியை சொல்லி விட்டு திரும்ப,
தூரமாய் அந்த பகுதில் ஒரு புதிய வீடு உருப்பெற்றிருப்பதை கண்டதும்.
“யாரு விக்கி இந்த ஊர்ல்ல இவ்வளவு பெரிய வீடு வச்சிருக்கிறது. வீடு ரெம்ப அழகா இருக்குதுல.”
“ம்… ம்… டிசைன் சூப்பரா வடிவமைச்சிருக்காங்க …இது முன்னால நாம வரும் போது இல்லல. இப்ப யார் இல்வளவு பெரிய வீடு போடுறது.”
“எல்லாம் பண்ணையார் மகனா இருக்கும் .அவர்களை தவிர வேற யார் இந்த கிராமத்துல இவ்வளவு பெரிய வீடு போட முடியும். அவங்க பேமிலில தான் யாராவது இருக்கும்.”
சொன்னவாறு வெளியே வர,
அதேநேரம் அவளை தாண்டி தாமரை மினி பஸ் செல்ல ….
அவளையும் மீறி அவள் கண்கள் டிரைவர் சீற்றுக்கு தாவ, சங்கிலி இல்லாததை கண்டதும் முகம். சுருங்கியவள். கண்டெக்டரை பார்க்க… அந்த உருவமும் ரவி இல்லை என்பதை கண்டதும்.
“என்னாச்சு இவனுங்களுக்கு.. வண்டியை விட்டு விட்டு எங்க போயிருப்பானுங்க.. சைக்கிள் கடையும் இருந்த இடம் தெரியாம காணாம போயிருக்கு .வண்டியிலயும் இரண்டு பேரும் இல்ல. எங்க போய் தொலைஞ்சானுங்க.
எண்ணியவாறு கிழே விக்கியோடு இறங்கி வர… கீழே இருவர் பேசி கொண்டிருப்பது தெளிவாக கேட்டது.
“தொழிற்சங்க தலைவர் எத்தனை மணிக்கு வரார் முருகா…”
“அண்ணன் அங்க இருந்து கிளம்பிட்டதா பேச்சு.”
“இங்க எல்லாம் ரெடி பண்ணியாச்சுல…”
“பண்ணிட்டாங்க. அண்ணாச்சி வர வேண்டியது. புது ஹாஸ்பிட்டலை திறக்க வேண்டியது அவ்வளவு தான்.”
“சரி நாமளும் கிளம்புவோம்… அப்புறம் தொடங்கிடுவானுங்க.”
என பேசி கொண்ட இருவரும் அவசரமாக நடக்க தொடங்க…
பல்லவி ஆச்சரியமாக விக்கியை பார்த்தாள்.
“என்ன விக்கி, இந்த கிராமத்துல ஹாஸ்பிட்டலா ? என்ன இது!!! அதிசயமா இருக்கு. அதுல வேற இன்று திறப்பு விழாவாம். நாம ஊர்ல்ல நுழைஞ்சதுமே நல்ல விசயமா அறிகிறோம். வா. நாமளும் போய் பார்ப்போம்.”
என்றதும் விக்கியும் ஆர்வமாக…
“எங்க இருக்குது.”
என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவள்.
“பங்ஷன் பந்தடி களத்துலணு தான் பேசிகிட்டாங்களே… அப்படிணா அதுக்க பக்கத்துல தான் இருக்கும். பந்தடி களம் அத்தை வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி தான் இருக்கு..”
சொன்னவள் விரைவாக நடக்க,
பத்து நிமிடத்தில் அந்த பந்தடி களம் போகும் தெரு வந்து விட, தொழிற்சங்க தலைவரே வருக வருக…
என பேனர்களும் அலங்கார வளைவுகளுமாக அந்த இடம் ஜொலித்து நிற்க… அதை தாண்டி உள்ளே வந்தவள் பந்தடி களத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட மேடையை பார்த்தாள். யாரோ பெரிய ஆட்கள் தான் திறந்து வைக்க வராங்க போல…
என எண்ணியவள் அந்த மேடையை தாண்டிய இடத்தில் பார்வையை விட ,அந்த கட்டிடம் கண்ணில் பட்டது. அதில் தாமரை மருந்தகம் என்றும் அதை தாண்டிய பெரிய கட்டிடத்தில் தாமரை மருத்துவமனை எனவும் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து வியந்து நின்ற போது, அங்கே யாரோ வருவது போல பரபரப்பு தொற்றி கொள்ள… எங்கெங்கோ மேய்ந்த அவள் கண்கள் பரபரப்பு மிகுந்த இடத்தை நோக்கி திருப்பியது.
அந்த இடத்தில் சர்சரென பல கார்கள் அணிவகுத்து வந்து நின்றன. முதல் காரில் இருந்து இறங்கும் முன் கூட்டம் அந்த காரை சூழ்ந்து கொள்ள, அவரை பார்க்க முடியாமல் வியப்பு மேலிட நின்ற பல்லவி, விக்கி பக்கம் திரும்பி…
“ரொம்ப சந்தோஷமா இருக்கு விக்கி. இந்த ஊருக்கு எல்லாம் இவ்வளவு சீக்கிரத்துல ஹாஸ்பிட்டல் வரும்ணு நான் நினைக்கவே இல்லை விக்கி. சின்ன வயசுலயிருந்தே பார்க்கிறேன். இங்க ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தான் உண்டு. சின்ன சின்ன உடல்நல குறைவுக்கு அங்க போவாங்க மக்கள். ஆனா பிரசவம், தீராத பெரிய வியாதி , ஆக்ஸிடென்ட், எதிர்பாராத அசம்பாவிதம் எது நடந்தாலும் டவுனுக்கு தான் தூக்கிட்டு ஒடியாகணும். போய் சேர்கிறதுக்குள்ளாலயே எத்தனையோ மரணம் நடந்திருக்கு.. இனிமேல் எங்க கிராமத்துல அப்படி எந்த மரணமும் ஏற்படாதுல . எங்க ஊருக்கும் புதுசா ஹாஸ்பிட்டல் வந்திடுச்சி.. இப்படி ஒரு ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ண ஆசைபட்டு தான் டாக்டர் படிப்பையே படிச்சேன்.”
“ஆனா என் பாதை மாறிப் போச்சு. எப்போ ஆராய்ச்சி நிறுவனத்தோட ஒப்பந்தத்துல கையெழுத்து இட்டனோ என் ஆசை நிறைவேறாத ஆசையாகி போச்சு. எனிவே ரெம்ப சந்தோஷமாயிருக்கு.”
அவள் விக்கியிடம் தன் சந்தோஷத்தை பேசி கொண்டு திரும்பிய போது தான் மேடையில் கம்பீரமாய் ஏறிக் கொண்டிருந்த அந்த மனிதனை பார்த்தாள் பல்லவி. தொழிற்சங்க
தலைவர் என முத்திரையிடப்பட்ட அந்த மனிதர் படியில் பலர் புடை சூழ ஏறி நின்று திரும்பி கும்பிட்ட போது,பல்லவியின் பார்வை சரியாக அந்த மனிதரின் முகத்தில் விழ திடுக்கிட்டு சிலிர்த்தவள்.
” சங்கிலி! … “
அவளை அறியாமல் அவள் உதடு உச்சரிக்க… பல்லவியின் வாயில் இருந்து சங்கிலி பெயர் கேட்டதும் திரும்பி பார்த்த விக்கியும் அதிர்வோடு பார்க்க… தன் கண்கள் பார்ப்பது சரி தானா? என்பது போல கண்ணை கசக்கி கொண்டு பார்க்க…மறுபடியும் அவன் உருவே தெரிய,.
நம்ப முடியா அதிர்வில் நின்றனர் இருவரும். அதே நேரம், அவனை நெருங்கி வந்த ரவி அவன் காதில் எதுவோ சொல்ல,
மெல்ல போய் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த செயரில் அமர்ந்தான். அவனின் கம்பீரமும் வெள்ளை வேஷ்டி சட்டையில் அவன் ஆளுமையும் கண்டு அதிசயித்தவள்,
“எப்படி இப்படி ஒரு மாற்றம்?.”
என நம்ப முடியா அதிர்வில் நின்ற போது, சங்கிலி எழுந்து பேச ஆரம்பிக்க… பல்லவி வாயடைத்து போனாள்.
“இது சங்கிலியா? கரி படிந்த கையோடு சைக்கிள் கடையில் நான் பார்த்த சங்கிலியா?”
என வாய் பிளந்து நின்றிருக்க…
அதே வியப்போடு, அருகில் சென்று கொண்டிருந்தவரை அழைக்க..
” டாக்டர் எப்படியிருக்கீங்க?… எப்ப வந்தீங்க?
“இப்ப தாம்மா… ஆமா சங்கிலி!… சங்கிலி!.”
வார்த்தையை முடிக்க முடியாமல் திணற … வந்தவள் குழப்பத்தோடு பல்லவியை பார்த்தாள். அவள் குழப்பத்தை புரிந்தவள். சங்கிலியை சுட்டி காட்டி,
“எப்படி????” என கேட்க…
“எப்படிணா?…”
“சைக்கிள் கடை!!!!!”
என நிறுத்த…
“அது எல்லாம் பழைய சங்கிலி. இப்ப அவன் தொழிற்சங்க தலைவர்.”
என்றவளிடம் இருந்து பார்வையை விலக்கி சங்கிலி மேல் ஆழமாக பதித்து கொண்டு , நம்ப முடியா அதிர்வில்.
“அது தான் எப்படிம்மா?…”
என்றதும் அவளை சிரிப்போடு எதிர் கொண்டவள்.
“ஆச்சரியப்பட என்ன இருக்கு. சின்ன வயசுல இருந்தே சொன்னான். ஒரு நாள் நீங்க வியக்குற அளவு வருவேணு. வந்துட்டான். அவ்வளவு தான் சொல்லமுடியும். அப்போ யாரும் அவன் பேச்சை நம்பல. இப்போ தலையில தூக்கி வச்சி கொண்டாடுறானுங்க. இப்போ நம்ம ஊர்ல்ல பெரிய மனுஷனே சங்கிலி தான்.”
சொன்னவரை வியப்போடு பார்த்தவள்.
“இந்த குறுகிய காலத்துல எப்படி இவ்வளவு வளர்ச்சி…”
தாளமாட்டாமல் அவள் கேட்க..
“சின்ன வயசுல இருந்தே எது எல்லாம் முடியுமோ? அதை எல்லாம் செஞ்சி துட்டு சேர்த்தான். அப்போ சொன்ன போது விளையாட்டு புத்தியில் சொல்லுறாணு தான் நினைச்சோம். ஆனா கம்பீரமா ஊருக்குள்ள வண்டியை கொண்டு வந்தான் பாரு அப்பவே எல்லார் பார்வையும் அவன் மேல விழுந்துச்சு. மக்கள் கண் மட்டுமல்ல… பெரிய பைனான்ஸ்காரங்க பார்வையும் தான்.”
“???????”
“அவனுக்கு லோண் கொடுக்க சில பைனான்ஸ்காரங்க முன் வந்தாங்க. சங்கிலி யார்ட்டயும் கடன் வாங்கல. ரெம்ப கஷ்டப்பட்டு உழைச்ச பணத்துலயே மறுபடியும் பத்து லட்சம் சேர்த்துட்டான். கூடவே தண்டபாணி அண்ணன் அவரோடசொத்தை வித்து பணம் கொடுக்க அடுத்த வண்டி கொட்டாரத்துக்கு ஒடத் தொடங்குச்சு.அப்படியே இருந்தப்ப தண்டபாணி அண்ணன் மூலமா தொழில் சங்கத்துல உறுப்பினர் ஆனான். தண்டபாணி அண்ணனுக்கு பெரியசெல்வாக்கு இருந்தால சங்கிலியும் வெகு ஈஸியா அதுக்குள்ள நுழைஞ்சிட்டான். அவன் நுழைஞ்ச நேரம் அதுவரை தலைவரா இருந்தவர் மேல அங்க உள்ள உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்பட அடுத்து நடந்த எலக்ஷன்ல சங்கிலியை எல்லா உறுப்பினர்களும் தேர்ந்தெடுத்தாங்க. அதோட சங்கிலியோட தகுதியே மாறி போச்சு. “
” ………………….”
“பல வங்கிகளே குறைஞ்ச வட்டியில லோண் கொடுக்க தயாராச்சு.அந்த பணத்தை வாங்கி, இரண்டு லாரியை மும்பைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில ஒட விட்டான். அவன் நினைச்சி பார்க்கவே செய்யாத அளவு பணம் கிடைச்சிது..அதுல வேற செல்வாக்கும் கூடுச்சி. ஊருக்குள்ள நுழையும் போது சிவன் கோவில் பக்கத்துல ஒரு பெரிய வீடு முழு வேலையும் முடியும் நிலையில இருக்குதே, அது கூட சங்கிலி வீடு தான்.”
” !!!!!!!!!”
“சொன்னது போல எல்லாம் செய்துட்டான்.. ஊர்ல்ல பெரிய வீடு, மூணு காரு, என எல்லாமே எல்லாமே செய்துட்டான். இனி அவனோட வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.”
சொல்லி கொண்டு அப்பெண்மணி சென்றுவிட , நம்ப முடியா அதிர்விலே அவனை பார்த்து கொண்டே நின்று கொண்டிருந்தாள். அவனின் பேச்சையும் அவனை புகழ்ந்து தள்ளிய பெரியமனிதர்களின் பேச்சையும் கேட்டு வாயடைத்துபோனாள் பல்லவி. பல்லவி எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு குறுகிய நாளில் சங்கிலி மொத்தமாய் மாறி தன்னை நிலை குலைய வைப்பான் என்று.
ஆனால் இன்று மொத்தமாய் மாறி நிற்கிறான். அதுவும் நம்ப முடியா உயரத்தில் நிற்கிறான். விழி விரிய அவளை பார்த்தாள்.
அதே நேரம் கூட்டத்தை முடித்து கொண்டு அனைவரிடமும் விடை பெற்று சங்கிலி கீழே வர, அவனை சூழ்ந்து கொண்ட கூட்டம் அவனை வழியனுப்ப முண்டியடிக்க, ரவி அவர்களை விலக்கி கொண்டு சங்கிலியோடு செல்ல,
அதே நேரம் ரவியின் கண்களில் சரியாக விழுந்தாள் பல்லவி . அவளின் விழி விரிவையும், ஆனந்த அதிர்வையும் கண்டவன் மெல்ல சங்கிலியின் காதில் குனிந்து.
” சங்கிலி பல்லவி…”
என கூற, திரும்பி அவனை பார்த்தவன்
“பல்லவியா ????”
“ஆமா உன் இடது புறம் திரும்பி பாரு. அதிர்ச்சில உறைந்து போய் நிக்குறா?.”
என்றதும் ரவியை தடுத்தவன்
“வேணாம் ரவி இந்த நேரம் அவளை பார்க்கிறது சரியில்ல வா கிளம்பலாம். “.
என அவனையும் அழைத்து கொண்டு அவன் கிளம்பி விட..விக்கி தான் பல்லவியை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அதன் பின் ஊரில் உள்ள பலபேரின் வாயிலிருந்து தினமும் சங்கிலியை பற்றி நிறைய கேட்டாள். அதிலும் ஐஸ்வரியா வண்டி வண்டியாய் அவனை புகழ்ந்து தள்ளினாள்.
ஒரு வாரம் அந்த ஊருக்கு வந்து ஆன பிறகும் ரவியையோ சங்கிலியையோ அவளால சந்திக்க முடியவே இல்லை. முதல் நாள் பார்த்ததோடு சரி. அவள் வந்திருப்பது நிச்சயமாய் அவர்களுக்கு தெரிந்திருக்கும். ஏன்?… அன்று நிச்சயமா ரவி என்னை பார்த்தான். எனக்கு நல்லா தெரியும். அவனுட்டயும் சொன்னான். ஆனா அவன் திரும்பி கூட பார்க்கல. அப்புறமும் பார்க்க வரல…
அவன் வராட்டா என்ன?. அவன் தான் பழைய சங்கிலி இல்லையே. பெரிய தலைவர். இனி நாம எல்லாம் அவன் நியாபகத்துல இருப்போமா?
என ஆதங்கப்பட்டு கொண்டிருந்த ஓருநாள் ரவியை சிவன் கோவில் அருகில் பார்த்தாள் பல்லவி. ஆனால் கோபத்தில் அவன் அருகில் செல்லவில்லை. திரும்பி வீட்டை நோக்கி நடந்த போது ரவி ஓடி அருகில் வந்தான்.
“பல்லவி’ எப்படியிருக்கா?… எப்போ வந்தா…”
ரவி தெரியாதது போல கேட்க… சட்டென திரும்பியவள் அவனை ஊடுருவி பார்த்து.
“நான் வந்தது உனக்கு தெரியாது…”
” அது…அது…”
அவன் தடுமாற,
“நான் ஊருக்குள்ள வந்த அன்றே நீ பாத்துட்டா. நீ அவன் காதுலயும் ஒதிட்டா . இப்ப என்ன தெரியாதவன் போல வேஷம் போடுறா ?”
“அது.. அது இல்ல பல்லவி.”
“ஆமா இல்ல தான். சங்கிலியும் நான் நினைச்ச அளவு இல்ல தான். நீயும் நான் நினைச்ச அளவு இல்ல தான். அவனுக்கு தான் என் உறவு வேணாம்ணு ஆகி போச்சு. மூச்சுக்கு முன்னூறு முறை
எங்க வூட்டு புள்ள, எங்க வூட்டு புள்ளைணு, சொல்லுவியே உனக்கும் வேணாம்ணு ஆகிப்போச்சுல…”
அவள் குரல் உடைய..
“அப்படியெல்லாம் இல்ல புள்ள . அன்று பார்த்தது நிஜம் தான். ஆனா அந்த ஆட் கூட்டத்துல வேணாம்ணு தான் கிளம்பி போனோம்.”
“ஆமா ?…. உடனே மறுநாளே என்னை பார்க்க வந்துட்டா பாரு. வேணாம்ணு முடிவெடுத்துட்டாணு உண்மையை சொல்லு…”
“அப்படி எல்லாம் இல்ல புள்ள…”
“அப்படி தான். அதான் சாதிச்சிட்டீங்களே! இதுக்கு மேல நமட்ட பேச என்ன இருக்கு. அப்படி தானே?.”
“என்ன புள்ள எப்படி எல்லாமோ பேசுறா ?”
“அது தான் என்னை அசிங்கப்படுத்த ஆயிரம் வரியை மனசுல ஒட்டி வச்சிருப்பியே – சொல்லிடு. கரியை முகத்தல பூசுவேணு சொன்னா . சொன்னது போல ஜெயிச்சீட்டீங்க, சொல்லி காட்டி என் மனசை சாகடிச்ச தானே ஓடி வந்தா .பேசிடு, என்னவெல்லாம் பேசணுமோ. அத்தனையும் பேசி முடிச்சிடு.”
” அப்படி எல்லாம் இல்ல புள்ள…”
“ஏன் உன் நண்பன் பக்கத்துல இருந்தா தான் அசிங்கப்படுத்தவே வாய் வருமா? வேணா போய் சொல்லு இன்னும் இரண்டு வாரம் ஊர்ல்ல தான் இருப்பேன். என்ன அசிங்கப்படுத்தணுமோ பேசிட்டு போக சொல்லு.”
“என்ன புள்ள நீ.. அன்று அவனுட்ட நீ வந்திருக்காணு சொன்ன போது கூட நாம, பக்கத்துல போனா அந்த புள்ள மனசு கஷ்டப்படும். அவள் போட்ட சவால்ல நாம சாதிச்ச மெப்புல பேசுறதா தப்பு கணக்கு போட்டு அது வருத்தப்படும். எதுக்கு வேணும் .அதோட பாதை மாறியாச்சு. நம்மளோட பாதையும் மாறியாச்சு. பழையதை பேசி, எதுக்கு வலியை அதோட மனசுல ஏத்தணும். நாம பேசாட்டா கூட அதே பேசி அழவும் செய்யும்.. நம்மளால அந்த வலி கூட அந்த புள்ளைக்கு வேணாம்.”
” !!!!!!!!!!!!”
“ஒரு வாரமோ இரண்டு வாரமோ நிக்க போகுது. அதோட கண்ணுலபடாம இருந்தாலே அது சந்தோஷமா இருந்துட்டு போகும். தயவு செய்து வீட்டுக்கு போறேணு போயிடாத.. அப்புறம் எனக்கு நல்லது செய்கிறதா நினைச்சிட்டு, எதாவது பேசி அதை அழ வச்சிடுவா . வேணாம். அது சந்தோஷமா இருக்கணம்னு தான் அப்பவும் நினைச்சேன். இப்பவும் நினைக்கிறேன். நான் முழுசா அவளை விட்டு ஓதுங்குறது தான் அவளுக்கு சந்தோஷம். அதுனால போயிடுவோம்.”
அப்படினு தான் சொன்னான். ரவி. சொல்ல சொல்ல அவனை விழி உயர்த்தி பார்த்தவள்.
“என் மனசு ஆறுதலுக்காக தானே அப்படி சொல்லுறா ?”
“இல்ல புள்ள.. சங்கிலியை பற்றி உனக்கு தெரியாதா?. அவன் மனசு எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கணம்ணு தான் நினைக்கும். ஆனா நீ தான் எப்பவும் அவனை தப்பாவே பாக்குறா. நீ அவனை பாக்கணம்ணா சொல்லு கண்டிப்பா அழைச்சிட்டு வரேன்.”
ரவி சொன்னதும்…
” வேணாம்… அவனுக்கு விருப்பம்ணா வரட்டும். நீயா சொல்ல வேணாம்.”
“அது இல்ல புள்ள…”
” நீ சொல்ல வேணாம்ணு சொல்லிட்டேன்ல்ல.”
” சரி… சொல்லல. எப்படியிருக்கா?”
“ம்…ம்… இருக்கேன்ல்ல…”
“இரண்டு வாரத்துல போயிடுவியா?.”
“ம்…. போய் தான் ஆகணும்.”
“தனியாவா வந்தா?.”
“இல்ல விக்கி கூட தான் வந்தேன். இந்த இரண்டு வருவுமும் அவன் வீட்டுல தான் இருக்கேன். இப்பவும் அங்க தான் இருக்கேன். அவன் ஹாஸ்பிட்டல்ல தான் இனி ஒர்க் பண்ண போறேன்.”
“நல்லது. சந்தோஷமா தானே இருக்கா. அது போதும் .அப்ப கிளம்பவா?”
“ம்…”
என்றதும் ரவி திரும்பியதும்…
“அவன் நல்லா இருக்கான் தானே…”
என்றதும் சட்டென திரும்பி அவளை பார்த்தவன்
சிரித்து கொண்டே…
” மேடையில பார்த்தா தானே…”
“ம்.. பார்த்தேன். ரெம்ப பிரமிச்சு போயிட்டேன். இது சங்கிலியாணு ஒரு நிமிஷம். அசந்து போய் அப்படியே நின்னுட்டேன். இப்ப சொல்லுறேன். சுத்தமான ஆம்பிள்ளைணு சங்கிலி நிரூபிச்சிட்டான். என் வார்த்தையை பொய்யாக்கிட்டு அவன் சாதிச்சிட்டான். ரெம்ப ரெம்ப சந்தோஷமா இருக்கு. தினமும் கரி படிஞ்ச துணியில பார்த்த அவனை வெள்ளை வேஷ்டி சட்டையில பார்த்த போது ரெம்ப ரெம்ப சந்தோஷமா இருந்துச்சு.”
” !!!!!!!!!!!!!!!”
“என்னவோ நானே சாதிச்சது போல ரெம்ப பெருமையா இருந்துச்சு. அதுயும் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அவனை புகழ்ந்து பேசிறப்ப என்னை மேடையில் விட்டு பலபேர் புகழ்ந்தது போல என் உடலும் உள்ளமுமே சிலிர்த்து போச்சு. போய் சொல்லு. பல்லவியை நீ தோக்கடிச்சிட்டா . அதை அவளே வெட்கபடாம, வேதனைபடாம, துக்கபடாம, துவண்டு போகாம, சந்தோஷமா ? ரெம்ப ரெம்ப சந்தோஷமா ? சொன்னாணு போய் சொல்லு.”
” ……………”
அவளே சாதிச்சது போல அனுபவிச்சி சந்தோஷப்பட்டாணு போய் சொல்லு.இன்னும்… இன்னும் அவன் மேன்மேலும் உயரணும். அதையும் பார்க்க நான் ஆசைபடுறேணு போய் சொல்லு. மறுபடியும் திரும்பி வரும் போது நானே வியக்குற அளவு மாறிப் போயிருக்கணம்ணு சொல்லு. நான் சொன்னேன்னே சொல்லு.”
நெஞ்சு நிறைய மகிழ்வோடு சொல்லி கொண்டு நின்றிருந்த பல்லவியை வியப்போடு பார்த்த ரவி நம்ப முடியாமல் நிற்க…
“என்ன அப்படி பாக்குறா ?.”.
“இத்தனை வருட வாழ்க்கையில இப்படி ஒரு பல்லவியை பார்த்தது இல்லையா? அதான் நம்ப முடியாம பாக்குறேன். எப்பவுமே உன் வாய்ல்ல இருந்து திட்டும், அசிங்கமான பேச்சையுமே கேட்டிருக்கேனா? அதான் நம்ப முடியாம பாக்குறேன். எப்பவுமே உனக்கு சங்கிலியையும் என்னையும் பிடிக்காது. நாங்க எது செய்தாலும் திட்டிட்டே தான் இருப்பா. அப்ப எல்லாம் சங்கிலி ரெம்ப உடைஞ்சி போவான். யார் என்ன சொன்னாலும் தொடைச்சி எறிஞ்சிட்டு போறவன் உன் பேச்சால மட்டும் தான் காயப்பட்டான். கஷ்டப்பட்டான்.”
என ரவி சொன்னதும் அடுத்த வரியாக,
“அதுக்காக தான்… அதுக்காகவே தான் … நான் அப்படி பேசினேன்.”
பல்லவி கணீர் என சொல்ல ,சட்டென திரும்பி அவளை பார்த்தான். பல்லவி கண்ணில் நீர் கோர்க்க நின்றிருந்தாள்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel

